Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார்.

1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி,

நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதரின் தாயார் மகேஸ்வரி மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்.

"எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளில் விளக்கேற்றுவேன்.

இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதனை தடை செய்யக் கூடாது என்றே நீதிமன்றை நாடினேன். நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.

எனவே நான் வீட்டில் மனக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவேன். அதனை யாரும் தடை செய்ய கூடாது என மன்றாட்டமாக கேட்டுகொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/154728?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை பார்ரா எங்கடை சும்மை வாரே வா

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

இஞ்சை பார்ரா எங்கடை சும்மை வாரே வா

அரசியல்  சாணக்கியம்???

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அரசியல்  சாணக்கியம்???

பிறகு மக்களை ஏமாற்ற வேண்டாமா 

ஆனால் புலிகளை குற்றம் சொல்வார் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தோத்து, யுத்தம் முடிந்த பின்னர் தான் தன்னால் நிம்மதியாய்  ஏ 9 றோட்டால் போய் வர முடிகிறது என்று சொன்னவர் இன்று மாவீரர்களுக்கு விளக்கேத்துகிறாராம்.[உண்மையில் மாறியிருந்தால் நல்லது]... இதை எல்லாம் இங்கேயுள்ளவர்கள் பொறுத்துக் கொள்வார்கள் .

7 hours ago, விசுகு said:

அரசியல்  சாணக்கியம்???

சந்தர்ப்பவாத அரசியல் (Political opportunism) என்று பெயர். இவர் விளக்கேத்துறார்  இன்னொருத்தர் தன்னுடைய தாய் மொழி தமிழ் என்கிறார். இனி ஒருவர் மாவீரர் தின உரை ஆற்றினாலும் நீங்கள் ஆச்சரியப்படாதையுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, விசுகு said:

அரசியல்  சாணக்கியம்???

இல்லை ஐயா!
அரசியல் சாணக்கியம் என்பதெல்லாம் ஒரு காலம். அது இன்றில்லை.
இன்று நேருக்கு நேர். இல்லயேல் இடத்தை விட்டு மாறு.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

புலிகள் தோத்து, யுத்தம் முடிந்த பின்னர் தான் தன்னால் நிம்மதியாய்  ஏ 9 றோட்டால் போய் வர முடிகிறது என்று சொன்னவர் இன்று மாவீரர்களுக்கு விளக்கேத்துகிறாராம்.[உண்மையில் மாறியிருந்தால் நல்லது]... இதை எல்லாம் இங்கேயுள்ளவர்கள் பொறுத்துக் கொள்வார்கள் .

புலிகள் தோத்திட்டார்கள் என்று யார் சொன்னது..?? ஆக்கிரமிப்பு எதிரிக்கு எதிராக.. தம் மக்கள் மண்ணை காக்க.. புலிகள் விடுதலைக்காக நடத்திய தற்காப்பு யுத்தம் தான் மெளனிக்கப்பட்டுள்ளதே தவிர.. புலிகளும் மக்களும் சுமந்த இலட்சியக் கனவு இன்னும் அப்படியே தான் இருக்கிறது. அது நனவாக வேண்டிய தேவை முன்னரை விட இன்று பலமடங்காக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் எப்படி புலிகள் தோற்றார்கள் என்கிறீர்கள்.

சுமந்திரன் செய்வது சுத்துமாத்து அரசியல் என்றால்.. அதை விட மோசமாக இருக்குது உங்க சுத்துமாத்து எழுத்துகள். போராட்டத்தின் வலிகூடவா உங்களால் உணர முடியவில்லை..???! 

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nedukkalapoovan said:

எப்ப போறீங்கள் ஊருக்கு போராட?...போகும் போது தயவு செய்து விசுகு அண்ணாவையும் கூட்டிட்டு போகவும்....உங்கட கருத்துக்களில் இருந்து  நீங்கள் உண்மையில் எவ்வளவு பின் தங்கி இருக்கிறீர்கள் என்று தெரியுது   ...பாவம் நீங்கள் கணனியில் இருந்து இப்படி தட்டத் தான் முடியும் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ரதி said:

புலிகள் தோத்து, யுத்தம் முடிந்த பின்னர் தான் தன்னால் நிம்மதியாய்  ஏ 9 றோட்டால் போய் வர முடிகிறது என்று சொன்னவர் இன்று மாவீரர்களுக்கு விளக்கேத்துகிறாராம்.[உண்மையில் மாறியிருந்தால் நல்லது]... இதை எல்லாம் இங்கேயுள்ளவர்கள் பொறுத்துக் கொள்வார்கள் .

புலி எதிர்ப்பையே தனது அரசியல் பிழைப்பிற்கான ஆயுதமாக்கி பெருபான்மை வாக்குகளால் வெல்லுவார் என சொம்புகள் சொம்பு தூக்க கள்ள வாக்கால் வந்தவருக்கு இந்த வருடத்திற்கான சிறந்த நடிகருக்கான விருதை வழங்கலாம் எல்லோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்

மிகச்சிறிய காலத்துக்குள் இந்த ஆளில் அபரிமிதமான மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கிறது. சோளியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். நல்லதுக்கில்லை.

இன்னும் ஆச்சரியம் இவர் அஞ்சலி செலுத்தும் இடத்தில் சைவக் கடவுள்களின் படங்களும் இருக்கிறது. இவரின் சமயத்தவருக்கு மற்றைய சமயத்தவரின் கடவுள் முன் நின்றால் அலர்ஜி என்றுதான் நான் கேள்விப்பட்டேன்.

பி.கு: நான் பிழையாக சொல்லியிருந்தால் போட்டு தாக்காமல் கண்ணியமான முறையில் விளக்கம் தந்து திருத்த முயற்சிக்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, vanangaamudi said:

😂😂😂

யாழ்க் களத்தை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்.

😂😂

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அங்காலை,இவர் இங்காலை சொல்லி வேலை இல்லை.  இவர்களின் பேச்சை தேர்த்தலின் முன்னர் கேட்டு விட்டு மீண்டும் கேட்கும் போது மீண்டும் பிறந்துள்ளார்கள் போல உள்ளது. மீண்டும் " அப்பன் குதிருக்குள் " போகா விட்டால் சரி. 
(நாய் வால் என்று ஒரு அசரீதி பிடரி பக்கமாக கேட்கிறது😜

ஏதோ ஒரு தேர்த்தல் கிட்டடியில் வருகிறது இல்லையா?? 

1 hour ago, vanangaamudi said:

மிகச்சிறிய காலத்துக்குள் இந்த ஆளில் அபரிமிதமான மாற்றங்களை காணக்கூடியதாக இருக்கிறது. சோளியன் குடுமி சும்மா ஆடாது என்பார்கள். நல்லதுக்கில்லை

அங்கே தமிழரசுக்கட்சிக்குள் ஒரு பனிப்போர் நடக்கிறது. ஒரு சாரார் மாவையின் கீழும் இன்னொரு சாரார் சுந்திரன்+சிறீதரன் கீழும் தமது தரப்பு அரசியல் இமேஜ்ஜை கட்டியிழுப்புவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். மாவை, ஆரம்பகால தமிழ் தேசிய அரசியலில் இருந்து இன்றுவரை ஒரு வரலாற்றை கொண்டவர் என்பதை தனக்கு சார்பாக பயன்படுத்தி பல காரியங்களில் இறங்கியுள்ளார். அதே சமயம் தமிழ் தேசிய அரசியலை அவபோட்து தனது கருத்தாக்களாலும் செய்கைகளாலும் விமர்சித்தவர் இன்று மாவையை வெல்ல அது மிகவும் தேவை என கண்டுபிடித்து இயங்குகிறார். இதில் சோகம் என்னவென்றால் தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பின்னர் அதிமுகவும் திமுகவும் எப்பட்டி தமிழருடைய போராட்டத்தை வாக்குவங்கியின் மீது கண்வைத்து தமது தேவைக்கு பயன்படுத்தினார்களோ அதே நிலைமை இன்று போராடடம் நடந்த புனித பூமியிலும் நடக்கிறது என்பது. ஆனால்  ஒரே கட்சிக்குள் நடக்கிறது அவ்வளவே. இந்த நிலையில் தான் கஜேந்திரர்கள் நாங்கள் புனிதவாதிகள் என்ற கோட்ப்பாட்டில் தனித்து நிற்க முயல்கிறார்கள். என்ன நடந்தாலும் அனுபவிக்க போகிறவர்கள் எமது மக்களே. 

Edited by puthalvan

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nunavilan said:

ஏதோ ஒரு தேர்த்தல் கிட்டடியில் வருகிறது இல்லையா?? 

எந்த நாட்டில், என்ன தேர்தல் வருகிறது?

19 minutes ago, puthalvan said:

இன்னொரு சாரார் சுந்திரன்+சிறீதரன் கீழும்

ஆரப்பா இந்த சுந்தரன்? நாம் தமிழரா அல்லது சோனியா காங்கிரசா? 😄

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் தான். வேறெங்கு??

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

சிறிலங்காவில் தான். வேறெங்கு??

என்ன தேர்தல் வருகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபை தேர்தல் என நினைக்கிறேன்.

25 minutes ago, கற்பகதரு said:

இன்னொரு சாரார் சுந்திரன்+சிறீதரன் கீழும்

மன்னிக்கவும் சுமந்திரன் என்று வந்திருக்கவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்

😂😂😂

யாழ்க் களத்தை நன்றாகவே புரிந்து வைத்துள்ளீர்கள்.

😂

நல்ல மாற்றங்கள் சொல்லாலும் செயலாலும் உணர்வாலும் நிஜமாகவே வரும்போது வாழ்த்தவேண்டும்.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 21/11/2020 at 11:20, கிருபன் said:

மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் எம்.ஏ.சுமந்திரன்

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் உயிர்நீத்த பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அஞ்சலி செலுத்தினார்.

1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்த பாண்டியை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்று அவரது தாயாரான கம்பர்மலையில் வசிக்கும் சின்னத்துரை மகேஸ்வரி,

நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த போதும் அது நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் அவரது வீட்டுக்கு இன்று முற்பகல் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பண்டிதரின் உருவப்படத்தக்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினார்.

இதேவேளை, உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதரின் தாயார் மகேஸ்வரி மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்.

"எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன. ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளில் விளக்கேற்றுவேன்.

இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதனை தடை செய்யக் கூடாது என்றே நீதிமன்றை நாடினேன். நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.

எனவே நான் வீட்டில் மனக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவேன். அதனை யாரும் தடை செய்ய கூடாது என மன்றாட்டமாக கேட்டுகொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/154728?ref=home-imp-parsely

இவ்வளவுகாலமும் இவர்களை வைத்து அரசியல் செய்த சுமந்திரன் இப்போது அஞ்சலி செய்ய சென்றுவிட்டார். அந்த தாய்க்கு ஒழுங்கான வீடு கட்டிக்கொடுத்திருக்கலாமே சுமந்திரன்? சண்டைகள் எல்லாம் 2009துடன் முடிந்து விட்டதே. வீட்டை பார்க்கும் போது நேற்று தான் போர் முடிந்தமாதிரியல்லவா இருக்கு. தமிழர்களின் பிரதிநிதி என்று சொல்வதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா சுமந்திரன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

இவ்வளவுகாலமும் இவர்களை வைத்து அரசியல் செய்த சுமந்திரன் இப்போது அஞ்சலி செய்ய சென்றுவிட்டார். அந்த தாய்க்கு ஒழுங்கான வீடு கட்டிக்கொடுத்திருக்கலாமே சுமந்திரன்? சண்டைகள் எல்லாம் 2009துடன் முடிந்து விட்டதே. வீட்டை பார்க்கும் போது நேற்று தான் போர் முடிந்தமாதிரியல்லவா இருக்கு. தமிழர்களின் பிரதிநிதி என்று சொல்வதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா சுமந்திரன்?

ஐயா, 

மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்யக்கூடாது என்று பண்டிதரின் தாயாரின் சார்பில் வழக்குப்போட்டார் சுமந்திரன். ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. வழக்கில் தோற்றதை ஸ்பின் பண்ணி (சுத்தி) வீடுகளில் நினைவேந்தல்களைச் செய்யலாம் என்று ஸ்ரேற்மன்ற் விட்டார் சுமந்திரன் ஐயா. அதைச் செய்துகாட்டத்தான் பண்டிதரின் தாயாரின் வீட்டுக்குச் சென்று விளக்கேற்றினார்.  அவ்வளவுதான்.

வழக்கு நடாத்தி வெல்லமுடியாத சூழல்தான் இருக்கின்றது. கொரோனாவைக் காரணம் காட்டி கோத்தபாய அரசு, மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தவிடாது. இந்த வருடம் நடக்காமல் பண்ணினால், இனி அடுத்தடுத்த வருடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடக்காமல் பார்த்துக்கொள்ளும்.

அவலங்களைச் சந்தித்த மக்களுக்கு உதவ ஏதாவது வழிவகைகள் செய்யலாமே என்று பலவருடங்களுக்கு முன்னர் சுமந்திரன் ஐயா இலண்டனில் ஒரு கூட்டத்திற்கு வந்தபோது கேட்கப்பட்டது. அதற்கு அவர் மக்களுக்கு உதவும் கட்டமைப்பு தமிழரசுக் கட்சியிடம் இல்லை என்றும் இன்னும் சில சாட்டுக்களையும் சொல்லி தட்டிக் கழித்துவிட்டார். அவரிடம்போய் முன்னாள் மாவீரர், அவர்களின் பெற்றோர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று கேட்கலாமா?

இந்தக் கேள்வி உண்மையில் புலம்பெயர் புலிகளின் கட்டமைப்புக்களாக இரண்டு, மூன்றாகப் பிரிந்து இருக்கும் அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம் மற்றும் புலிகளுக்காக சேர்த்த நிதியைச் சுருட்டி ஆடம்பரமாக வாழ்வோரைக் கேட்டால் நியாயமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

அவரிடம்போய் முன்னாள் மாவீரர், அவர்களின் பெற்றோர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று கேட்கலாமா?

வந்த வீட்டையும் தடுத்தார் மக்கள் இன்னும் கொட்டிலில்தான் இப்ப மழைக்காலம் என்பதால் மக்கள் ஏழை மக்கள் சிரமப்படுகிறார்கள் ஆனால் ஐயாக்கு தெரிய வாய்ப்பில்லை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கிருபன் said:

மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்யக்கூடாது என்று பண்டிதரின் தாயாரின் சார்பில் வழக்குப்போட்டார் சுமந்திரன். ஆனால் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. வழக்கில் தோற்றதை ஸ்பின் பண்ணி (சுத்தி) வீடுகளில் நினைவேந்தல்களைச் செய்யலாம் என்று ஸ்ரேற்மன்ற் விட்டார் சுமந்திரன் ஐயா. அதைச் செய்துகாட்டத்தான் பண்டிதரின் தாயாரின் வீட்டுக்குச் சென்று விளக்கேற்றினார்.  அவ்வளவுதான்.

அப்புக்காத்து வேலை பார்த்தால் அதோடு போயிருக்கலாமே? பிறகேன்  பிடிக்காதவர்களுக்காக நினைவேந்தல் விளக்கேற்றல்?

5 hours ago, கிருபன் said:

அவலங்களைச் சந்தித்த மக்களுக்கு உதவ ஏதாவது வழிவகைகள் செய்யலாமே என்று பலவருடங்களுக்கு முன்னர் சுமந்திரன் ஐயா இலண்டனில் ஒரு கூட்டத்திற்கு வந்தபோது கேட்கப்பட்டது. அதற்கு அவர் மக்களுக்கு உதவும் கட்டமைப்பு தமிழரசுக் கட்சியிடம் இல்லை என்றும் இன்னும் சில சாட்டுக்களையும் சொல்லி தட்டிக் கழித்துவிட்டார். அவரிடம்போய் முன்னாள் மாவீரர், அவர்களின் பெற்றோர்களுக்கு வீடு கட்டிக் கொடுங்கள் என்று கேட்கலாமா?

சுமந்திரன் தமிழ் மக்களுக்கு ஏற்ற அரசியல்வாதி இல்லை என ஏற்றுக்கொள்கின்றீர்கள்?

5 hours ago, கிருபன் said:

இந்தக் கேள்வி உண்மையில் புலம்பெயர் புலிகளின் கட்டமைப்புக்களாக இரண்டு, மூன்றாகப் பிரிந்து இருக்கும் அனைத்துலகச் செயலகம், தலைமைச் செயலகம் மற்றும் புலிகளுக்காக சேர்த்த நிதியைச் சுருட்டி ஆடம்பரமாக வாழ்வோரைக் கேட்டால் நியாயமாக இருக்கும்.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் அதாவது போர் முடிந்த பின்னர்.....பெரும்பாலான உலக நாடுகளால் தமிழர் பகுதி அபிவிருத்திக்கென ஏராளமான நிதியுதவிகளும் கடனுதவிகளும் வழங்கப்பட்டன.  அதில் பெரும்பாலான பணம் வடகிழக்கு அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படவில்லை என ஒரு கதையும் உண்டு. இது பற்றி சிங்கள அரசிடம் நீங்களும் உங்களைப்போன்றவர்களும் கேட்கமாட்டீர்களா?

இல்லையேல் சிங்கள அரசு சரியான பாதையில்தான் பயணிக்கிறது .புலிகளின் பணம்தான் நாட்டு அபிவிருத்திக்கு அவசியமாக தேவைப்படுகின்றது என்கிறீர்களா?

புலிகள் இல்லாவிட்டால் நாம் சுமுகமாக எல்லாவற்றையும் முடிப்போம் என்றார்கள்.அதுதான் உங்களிடம் கேட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வந்த வீட்டையும் தடுத்தார் மக்கள் இன்னும் கொட்டிலில்தான் இப்ப மழைக்காலம் என்பதால் மக்கள் ஏழை மக்கள் சிரமப்படுகிறார்கள் ஆனால் ஐயாக்கு தெரிய வாய்ப்பில்லை 

செய்வன திருந்தச் செய்.....

கட்டிக்கொடுக்கும் வீடுகளை பலமான வீடுகளாக கட்டிக்கொடுக்கும் படிதான் அப்போது சொல்லப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.