Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ரஜனி தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். இனி வரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரு நடிகரும் மக்கள் மத்தியில் இறங்கி அரசியல் செய்யாமல் தன் போலி கதாநாயக பிம்பத்தை வைத்துக் கொண்டு தேர்தலில் வெல்ல முடியும் என்ற நப்பாசை தகர வேண்டும். இது ரஜனிக்கு மட்டுமல்ல கமலஹாசனுக்கும் பொருந்தும்.

ரஜனி சாருக்கு இப்பிடி ஐடியா இருக்கோ என்னமோ?!

  • Replies 80
  • Views 6.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

D டீமும் இறங்கீட்டா.

பலே பலே அமீத்ஜி. 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் சிறீலங்காவில் சனாதிபதி வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டபோது பலரும் கொதித்தெழுந்தார்கள், கமடியும் பண்ணினார்கள், 

அந்தாள் இப்போ சனாதிபதி.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Paanch said:

இப்படித்தான் சிறீலங்காவில் சனாதிபதி வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டபோது பலரும் கொதித்தெழுந்தார்கள், கமடியும் பண்ணினார்கள், 

அந்தாள் இப்போ சனாதிபதி.

பாஞ்ச்  அண்ணை.... ரஜனி ரசிகர் போல் உள்ளது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

இப்படித்தான் சிறீலங்காவில் சனாதிபதி வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டபோது பலரும் கொதித்தெழுந்தார்கள், கமடியும் பண்ணினார்கள், 

அந்தாள் இப்போ சனாதிபதி.

அநேகமாக யாழில் கருத்து எழுதிய எல்லாருமே கோட்ட அபய வெல்லப் போகிறார் என்றே எழுதினார்கள் என்றே நியாபகம்.

சிலர் வென்றால் தமிழருக்கு (எதிர் மறையாக) நல்லது நடக்கும் என எழுதினார்கள்.

நான் உட்பட சிலர் - வென்றால் மக்கள் மீதான அழுத்தம் கூடும், மாவீரர் தினமும் தடைப்படும். சிங்கள மயமாதல் கூடும்.  சர்வதேச அழுத்தம் ஒன்றும் இராது, எனவே வெல்ல கூடாது என எழுதினோம்.

கோட்ட வென்ற பின் என்ன நடக்கிறது என்பதை எழுத வேண்டிய தேவை இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

எழுதி  வைத்துக்கொள்ளுங்கள்

ரஐனி அனைவரது எதிர்பார்ப்புக்களையும் தாண்டி 

பெரும்  எடுப்பில் முன்னேறுவார்

தமிழகம் இன்னும்  அங்கேதான்  நிற்கிறது

அதை  அவர் பயன்படுத்திக்கொள்வார்

(எனது விருப்பு வேறு)

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்  அண்ணை.... ரஜனி ரசிகர் போல் உள்ளது. :grin:

விசுகு அவர்களையும் என்னோடு இணைத்து ஒரு ஊட்டம் இட்டால் பெரு மகிழ்ச்சியடைவேன். 😂

10 minutes ago, விசுகு said:

எழுதி  வைத்துக்கொள்ளுங்கள்

ரஐனி அனைவரது எதிர்பார்ப்புக்களையும் தாண்டி 

பெரும்  எடுப்பில் முன்னேறுவார்

தமிழகம் இன்னும்  அங்கேதான்  நிற்கிறது

அதை  அவர் பயன்படுத்திக்கொள்வார்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

...

தமிழகம் இன்னும்  அங்கேதான்  நிற்கிறது

அதை  அவர் பயன்படுத்திக்கொள்வார்..

ம்ம் அவ்வளவு நம்பிக்கை..!

இந்த விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்து எடை போடாதீர்கள்.

காலங்காலமாய் திராவிடக் கட்சிகளுக்கு கண்ணை மூடி வாக்களிக்கும் சனம் மிக அதிகம். அவர்களின் வாக்கு வங்கி(கருணாநிதி, எம்ஜிஆர்) அப்படியேதான் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

ம்ம் அவ்வளவு நம்பிக்கை..!

இந்த விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்து எடை போடாதீர்கள்.

காலங்காலமாய் திராவிடக் கட்சிகளுக்கு கண்ணை மூடி வாக்களிக்கும் சனம் மிக அதிகம். அவர்களின் வாக்கு வங்கி(கருணாநிதி, எம்ஜிஆர்) அப்படியேதான் உள்ளது.

அதே பாதையால் தானே இவரும் வருகிறார்??

அதைத்தான் சொன்னேன் ராசா

10 minutes ago, Paanch said:

விசுகு அவர்களையும் என்னோடு இணைத்து ஒரு ஊட்டம் இட்டால் பெரு மகிழ்ச்சியடைவேன். 😂

வந்திட்டோம்  என்று  சொல்லுங்க

போனது போலவே (சொன்னது போலவே)

60 வருடத்துக்கு பின்னர்  வந்திட்டோம்  என்ற  சொல்லுங்க🤣

29 minutes ago, ராசவன்னியன் said:

ம்ம் அவ்வளவு நம்பிக்கை..!

இந்த விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்து எடை போடாதீர்கள்.

காலங்காலமாய் திராவிடக் கட்சிகளுக்கு கண்ணை மூடி வாக்களிக்கும் சனம் மிக அதிகம். அவர்களின் வாக்கு வங்கி(கருணாநிதி, எம்ஜிஆர்) அப்படியேதான் உள்ளது.

ரஜனியை ரசிக்கும், அவரை சூப்பர் ஸ்ரார் என்று எல்லாம் போற்றும் அவரது தீவிர ரசிகர்கள் எல்லாம் 55 வயதையும் கடந்தவர்கள். அவர்களில் எத்தனை சதவீதம் இவருக்கு வாக்கு போடுவார்கள் என்று தெரியவில்லை. மிஞ்சினால் 3 வீதம் இருப்பார்கள். மிகுதி இருப்பவர்களில் இப்ப இருக்கும் எந்தக் கட்சியையும் நம்பாமல், ரஜனியால் மாற்றம் வரும் என்று நினைப்பவர்கள் ஒரு 2 வீதம் இருப்பார்கள் என நினைக்கின்றேன். ஆகக் குறைந்தது 5 வீதமாகினும் ரஜனி பெறுவார் என நினைக்கின்றேன்.

ரஜனி ஒரு வேளை தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்காமல், பொது வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இதுவரைக்கும் பெரியளவில் அரசியல் கட்சி ஒன்றை சாராத, பிரபலமான ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் இந்த நிலை மாறும். அது எல்லா பிரதானக் கட்சிகளையும் பாதிக்கும். 

எது எப்படியோ, அதிமுக + பா.ஜ.க வெல்வது உறுதி. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

எது எப்படியோ, அதிமுக + பா.ஜ.க வெல்வது உறுதி. 

இந்த கூட்டணியின் வெற்றிக்காக மறைமுகமாக இறக்கபட்டவர்கள்தான்

“கூத்தாடிகள்” ரஜனி, கமலும் “கூத்து கட்டுபவர்” சீமானும்🤣.

ஆனால் சிலவேளை ரஜனியை, A டீமில் சேர்க்கவும் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

...எது எப்படியோ, அதிமுக + பா.ஜ.க வெல்வது உறுதி. 

இந்த கூட்டணி வெற்றியை உறுதி செய்யவே பாஜக. 'பி டீம்' (ரஜினி) இறக்கிவிடப்பட்டுள்ளார்.

இவரின் வேலை திமுக, மற்ற உதிரிக் கட்சிகளின் வாக்குகளை உள்வாங்கி குறைப்பது. 

ரஜினி குறூப்பின் பேச்சுக்களில் அதிமுக எதிர்ப்போ, அல்லது அதிமுக வில் ரஜினி பற்றிய விமர்சனங்களில் காரம் அதிகம் இருக்காது.

திராவிட சித்தாந்தையும், பெரியாரிசத்தையும் தமிழகத்தில் ஒழித்துக் கட்டி, மனு நீதியை புகுத்துவதே இந்த ஆன்மீக அரசியல் முன்னெடுப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

ரஜனி ஒரு வேளை தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்காமல், பொது வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இதுவரைக்கும் பெரியளவில் அரசியல் கட்சி ஒன்றை சாராத, பிரபலமான ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் இந்த நிலை மாறும். அது எல்லா பிரதானக் கட்சிகளையும் பாதிக்கும். 

சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம்.

5 minutes ago, ராசவன்னியன் said:

திராவிட சித்தாந்தையும், பெரியாரிசத்தையும் தமிழகத்தில் ஒழித்துக் கட்டி, மனு நீதியை புகுத்துவதே இந்த ஆன்மீக அரசியல் முன்னெடுப்பு.

பா.ஜ.க வின், அமித் ஷாவின் முழு இலக்கும் இது தான். இதற்காகத்தான் இவர்கள் இறக்கி விடப்படுகின்றார்கள்.இவர்களின் வெற்றியடையும் பட்சத்தில் திராவிடம் மட்டுமன்றி தமிழ் தேசியத்தையும் தமிழகத்தில் இருந்து வேரோடு சாய்க்க முயற்சி எடுக்கப்படும்.

6 minutes ago, ஈழப்பிரியன் said:

சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம்.

சகாயம் பிஜேபி போன்ற வகுப்பு வாத மதவாத கட்சிக்கு சார்பான ரஜனியின் கட்சியில் இணைவார் என நினைக்கவில்லை. ஆனால் சகாயம் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அது ஏனைய அனைத்துக் கட்சிகளுக்கும் சவாலாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

சகாயம் பிஜேபி போன்ற வகுப்பு வாத மதவாத கட்சிக்கு சார்பான ரஜனியின் கட்சியில் இணைவார் என நினைக்கவில்லை. ஆனால் சகாயம் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அது ஏனைய அனைத்துக் கட்சிகளுக்கும் சவாலாக அமையும்.

இந்த கருத்தை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்த்திருக்கவில்லை 
சீமான் இனி எவ்வளவு விட்டுக்கொடுப்பு செய்தாலும் ... தலைவர் பிரபாகரனை 
எவ்வாறு ஒரு சர்வாதிகாரியாக சித்தரித்து ஒரு மாய விமபத்தை தோற்றுவித்தார்களோ 
அதே போலதொரு பிரிவினைவாதி என்றொரு மாய தோற்ற்றம் சீமான் மேலே உருவாக்கி 
எந்த வாக்கையும் பெறமுடியாத ஒரு நிலையை உருவாக்கி கொண்டு இருப்பார்கள்.

சீமான் புத்திசாலி என்றால் சகாயம் போன்றவர்களை முதல்வர் வேட்ப்பாளர்கள் ஆக்கி 
யாரும் எதிர்பாராத ஒரு அரசியல் நகர்வை செய்யவேண்டும் இல்லாதுபோனால் 
அரசியல் பலம் என்பது  ரஜனி கமல் போன்றவர்களுக்கு வாக்கு போட தாயராக இருக்கும் 
தமிழக மக்கள் மத்தியில் இருந்து பெறுவது என்பதே முடியாமல் போகும் ஒன்றுதான். 
இதை நான் கடந்த தேர்தலில் கூட எனக்குள் எண்ணி இருந்தேன்.

ஒருவேளை வென்றால் கூட ஒரு அரசை கொண்டு செல்லக்கூடிய திறமை சீமானிடம் 
பெரிதாக இல்லை இனி வரும் முதல்வர் தென்மாநில அரசுகளுடன் ஒரு நெருங்கிய உறவை 
பேணி இந்தியாவின் தென்மாநில அரசுகள் ஒரு கூட்டை உருவாக்க கூடியவராக இருக்கவேண்டும். 
அது தென்மாநிலத்துக்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கே இப்போதைய சூழலில் முக்கியமானது 

  • கருத்துக்கள உறவுகள்

மோடி அரசின் மத்திய அரசின் அதிகாரவர்க்கத்தின் வெளிப்படையான குறிக்கோள்தான்..

தமிழ்நாட்டிற்கான தனித்தன்மையை, மத்திய அரசின் கொள்கைகளை/திட்டங்களை எதற்கெடுத்தாலும் எதிர்க்கும் வலுவை நீர்த்துப்போக செய்வது.

அதில் சீமானின் தமிழ்த்தேசிய கொள்கையும் அடங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்.

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

D டீமும் இறங்கீட்டா.

பலே பலே அமீத்ஜி

C ரீம் சரியான வீக்  வாக்குகளை பிரிக்க போதாது ஆரவாரம் மட்டும் தான். அதனால்  பாஜக இவரையும் D இறக்க போகிறது

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பள்ளிக்கூடமே போகேல்லை பிரின்ஸ்சிபல் ஆக நினைக்குது பரட்டை. நான் சொல்லுறது இண்டு வரைக்கும் ஒரு அரசியல் மேடையே ஏறவில்லை. நினைப்பு முதல்வர்.தமிழ் ஒழுங்காகவே வாயிலை வராது  ஆனால் தமிழ்நாட்டுக்கு முதல்வர் நினைப்பு...சீமானை விஜயலட்சிமியுடன் நக்கலடித்தவர்கள். கூத்தாடி இந்த பரட்டையின் அந்தக்கால காம லீலைகளை யாருக்காவது தெரியுமா? இனி வரும் காலங்களில் எழுத்துருவில் வாசித்து மகிழலாம்.
தமிழ்நாட்டு மக்கள் உண்ணும் உணவை விட கேளிக்கைக்கும் பகட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஆகவே பச்சைத்தமிழன் பரட்டைதான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர்.🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, விளங்க நினைப்பவன் said:

C ரீம் சரியான வீக்  வாக்குகளை பிரிக்க போதாது ஆரவாரம் மட்டும் தான். அதனால்  பாஜக இவரையும் D இறக்க போகிறது

அப்போ நீங்கள் காங்கிரஸ் ஆதரவாளர். 🤓

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

ம்ம் அவ்வளவு நம்பிக்கை..!

இந்த விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்து எடை போடாதீர்கள்.

காலங்காலமாய் திராவிடக் கட்சிகளுக்கு கண்ணை மூடி வாக்களிக்கும் சனம் மிக அதிகம். அவர்களின் வாக்கு வங்கி(கருணாநிதி, எம்ஜிஆர்) அப்படியேதான் உள்ளது.

உங்களைப் போலவேதான் நாங்களும் எண்ணியிருந்தோம்... ஒரு கல்லை வைத்து இதுதான் தமிழ் அரசுக்கட்சி என்று சொன்னாலே போதும், வேறெந்தக் கட்சிகளையும் திரும்பிக்கூடப் பார்க்காமல், கண்ணைத் திறந்துகொண்டே தங்கள் வாக்குகள் அத்தனையும் தமிழ் அரசுக்கட்சிக்கு செலுத்திய மக்கள்தான் இன்று டக்ளசு, அங்கயன், பிள்ளையான், கருணா என்று அவரவர்கள் தங்களுக்கென்று உருவாக்கியுள்ள கட்சிகளுக்கு ஆதரவளித்து ஆனந்தக் கூத்தும் ஆடுகிறார்கள். 😲   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

இந்த கூட்டணி வெற்றியை உறுதி செய்யவே பாஜக. 'பி டீம்' (ரஜினி) இறக்கிவிடப்பட்டுள்ளார்.

இவரின் வேலை திமுக, மற்ற உதிரிக் கட்சிகளின் வாக்குகளை உள்வாங்கி குறைப்பது. 

ரஜினி குறூப்பின் பேச்சுக்களில் அதிமுக எதிர்ப்போ, அல்லது அதிமுக வில் ரஜினி பற்றிய விமர்சனங்களில் காரம் அதிகம் இருக்காது.

திராவிட சித்தாந்தையும், பெரியாரிசத்தையும் தமிழகத்தில் ஒழித்துக் கட்டி, மனு நீதியை புகுத்துவதே இந்த ஆன்மீக அரசியல் முன்னெடுப்பு.

வன்னியரின் கூற்றில் ஒவ்வொன்றிலும் ரஜனி என்பதற்கு பதிலாக, சீமான் என்று போட்டுப்பார்த்தாலும் அப்படியே பொருந்துகிறது 😀.

அமித்சாவை சந்திக்காத போதும் ரஜனியை பாஜக கையாள் என கண்டு கொள்ளும் அதே எடுகோள் நாம் தமிழருக்கும் பொருந்தும். 

சீமான் இரவில் போய் ஏன் எடப்பாடியை சந்தித்தார்?

அவர் மேல் ஏன் தேசிய பாதுகாப்பு சட்டம்/குண்டாஸ் பாயவில்லை?

8 வருடமாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவை விட ஏன் திமுகவை பலமடங்கு விமர்சிக்கிறார்? 

ரஜனி இரு அணி வாக்குகளையும் சமமாக பிரிக்க கூடும். அதனால்தான் ரஜனியை A டீமில் சேர்க்க இன்னும் நேரம் இருப்பதாக நான் கருதுகிறேன்.

ஆனால் சீமான் மிக அதிகளவில் திமுகவுக்கு வரும் வாக்குகளையே பிரிப்பார்.

சீமான் எதிர் (தெலுங்கு வாக்குகளை) தெலுங்கு சமிதி, துரைசாமி வகையறாக்கள், திமுகவிடம் இருந்து நகர்தி பாஜக பக்கம் கொண்டு போய்விடுவார்கள்.

ஆக மொத்தத்தில் எல்லா பக்கத்தாலும் திமுகவை வச்சு செய்கிறார் அமித் ஜி.

அப்படியே அழகிரியையும் அவிழ்த்து விட்டால்....

2 hours ago, ராசவன்னியன் said:

மோடி அரசின் மத்திய அரசின் அதிகாரவர்க்கத்தின் வெளிப்படையான குறிக்கோள்தான்..

தமிழ்நாட்டிற்கான தனித்தன்மையை, மத்திய அரசின் கொள்கைகளை/திட்டங்களை எதற்கெடுத்தாலும் எதிர்க்கும் வலுவை நீர்த்துப்போக செய்வது.

அதில் சீமானின் தமிழ்த்தேசிய கொள்கையும் அடங்கும்.

மத்திய அரசின் கொள்கையை அற்புதமாக சொல்லி உள்ளீர்கள்.

ஒரு கொள்கை தமக்கு எதிராக திரும்புமாப்போல் தெரிந்தால் அந்த கொள்கையின் தலைமையில் தமது ஆளையே அமர்த்தி, அந்த கொள்கை ஓரளவுக்கு மேல் வீரியம் ஆகாமல் பார்த்துக்கொள்வது.

கஸ்மீர் பிரச்சனையில் பரூக், ஒமர் அப்துல்லாவை, திராவிட நாட்டு கொள்கையில் அண்ணா, கருணாநிதியை, ஈழப்போராட்டத்தில் பிரபாகரன் தவிர்ந்த ஏனைய போராளிக்குழு தலைவர்களை, தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தில் சீமானை. 

இந்த “தலையில் தடவும்” நடைமுறைக்கு பலியாகாதவர்கள் பெரியாரும், பிரபாகரனும் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

பா.ஜ.க வின், அமித் ஷாவின் முழு இலக்கும் இது தான். இதற்காகத்தான் இவர்கள் இறக்கி விடப்படுகின்றார்கள்.இவர்களின் வெற்றியடையும் பட்சத்தில் திராவிடம் மட்டுமன்றி தமிழ் தேசியத்தையும் தமிழகத்தில் இருந்து வேரோடு சாய்க்க முயற்சி எடுக்கப்படும்.

சகாயம் பிஜேபி போன்ற வகுப்பு வாத மதவாத கட்சிக்கு சார்பான ரஜனியின் கட்சியில் இணைவார் என நினைக்கவில்லை. ஆனால் சகாயம் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அது ஏனைய அனைத்துக் கட்சிகளுக்கும் சவாலாக அமையும்.

சகாயத்தை அறிவித்தால் நானே “மூக்கை பிடித்துகொண்டு” நாதவை ஆதரிப்பேன்.

ஆனால்....

சகாயம் இனத்தூயமை வாதத்தில் நாம்தமிழரிடம் ஒத்து போவார் போல தெரியவில்லை.

சீமான் ஒரு மாற்று அதிகார மையத்தை அனுமதிப்பார் போலவும் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்த் : தமிழ்நாட்டுக்குத் தேவையே இல்லாத ஆணி 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

விசுகு அவர்களையும் என்னோடு இணைத்து ஒரு ஊட்டம் இட்டால் பெரு மகிழ்ச்சியடைவேன். 😂

11 hours ago, விசுகு said:

எழுதி  வைத்துக்கொள்ளுங்கள்

ரஐனி அனைவரது எதிர்பார்ப்புக்களையும் தாண்டி 

பெரும்  எடுப்பில் முன்னேறுவார்

தமிழகம் இன்னும்  அங்கேதான்  நிற்கிறது

அதை  அவர் பயன்படுத்திக்கொள்வார்

பாஞ்ச்  அண்ணே.... நான் கருத்து எழுதிய பின், விசுகர் தனது பதிவை போட்டதால்...
அவரையும் உங்களுடன்  சேர்த்து, எழுத முடியாமல் போய் விட்டது.

"லேற்றா வந்தாலும்.. லேற்றஸ்ராக"  வருவேன்.. என்று, ரசனி  சொல்லியபடி..   
வந்த விசுகருக்கும், வயசு 60 க்கு மேல். :grin:

ரஜனி ரசிகர்கள்... எல்லோரும் "பென்ஷன்" எடுத்த ஆட்கள் என்பதை....
யாழ். களத்தில்,  நீங்கள் இருவரும் நிரூபித்து விட்டீர்கள். 🤣

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.