Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - வைத்தியர் சந்திரகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு   வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே. சந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

 

http://cdn.virakesari.lk/uploads/medium/file/139739/snapshot_011.png

 

இன்று வவுனியா வைத்தியாசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் நினைவுகூறப்படுகிறது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் உலக எய்ட்ஸ் தினத்தை நினைவு கூறவிருக்கிறோம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட 4000 நோயாளிகள் எய்ட்ஸ் உடன் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 2003 இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.

அதில் 17 நோயாளிகள் இறந்திருக்கிறார்கள். 11 நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் ஆறு ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குகிறார்கள்.

பொதுபாக எய்ட்ஸ் 3 முறைகளில் தொற்றுகிறது. ஒரு நோய்த் தொற்றுள்ளவருடன் பாலியல் ரீதியாக உறவு கொள்கின்ற போது தொற்றுகிறது.

அதேபோல நோய்த் தொற்றுள்ள ஒருவர் தனது உடலுறுப்பு தானம், இரத்த தானம் என்பவற்றை மேற்கொள்ளும் போது கடத்தப்படுகிறது. மூன்றாவது தொற்றுள்ள ஒரு கர்ப்பிணி தாயிலிருந்து பிள்ளைக்கு பரவுகிறது.

வவுனியா மாவட்டத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்த நோய் தொற்று அதிகரித்துள்ளது. அதாவது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துள்ளனர்.

அதுவே இளைஞர் மத்தியில் இந்த நோய் பரவ அதிக காரணமாக இருக்கின்றது. ஆகவே இளைஞர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் தமக்கு தெரியவர்களுடன் இருக்கும் போது பாலியல் தொடர்பான தொடர்பை வைத்திருக்க கூடாது.

வவுனியாவில் இருக்கக்கூடி 36 பெண் பாலியல் தொழிலாளிகள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்றாலும் அவர்கள் தொடர்ச்சியாக வருகை தருவதில்லை. என்றாலும் அர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் தாயில் இருந்து பிள்ளைக்கு தொற்று கடத்தப்படுவதைத் வெற்றிகரமாக நாங்கள் தடுத்திருக்கிறோம். இதற்காக உலக சுகாதார நிறுவனத்திடம்  இருந்தும் நற்சான்றிதழ் பெற்றிருக்கிறோம். 

ஆகவே முற்றுமுழுதாக இலங்கையில் இருந்து எயிட்ஸ் தொற்றுனை இல்லாமற் செய்வதற்கு இலங்கையில் உள்ள அனைவருமே ஒரு தடவை எச்.ஐ.வி பரிசோதனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனையாக இருக்கிறது.

இந்த கொவிட் காலத்தில் விழிப்புணர்வுகளைச் செய்வதில் சிரமம் இருப்பதால் ஊடகங்கள் ஊடகா இதனைச் செய்ய விரும்புகிறோம்.

2025 ஆம் ஆண்டிற்குள் முற்றுமுழுதாக எச்.ஐ.வி தொற்றை இல்லாமற் செய்வதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

இந்த ஆண்டிற்றாக தொனிப்பொருள் 'எச்.ஐ.வி தடுப்பு இளைஞர்களின் பொறுப்பு' என்பதாக இருக்கிறது காரணம் இந்த வருடத்தைப் பொறுத்தவரைக்கும் இளைஞர் மத்திதில் தான் இந்த தொற்று அதிகமாக காணப்படுகிறது. என மேலும் தெரிவித்திருந்தார்.

வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - வைத்தியர் சந்திரகுமார் | Virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருக்கும் கொடுமைகள் காணது என்று இந்தக்கொடுமையள் வேறை....

கொரோனா, டெங்கு, எலிக்காய்ச்சல், எய்ட்ஸ்  etc etc . போற போக்கு சரி இல்லை. இந்த ஹோமோ காரர்களை சீர்திருத்தும் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். இருந்தாலும் அங்கும் கவனமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம நினைப்பது போல இல்லை ,ஏகப்பட்ட 'பொடியன்' கூட்டம் திரியுது
மட்டக்களப்பில் உ.த படிக்கும்போது ஒரு தறுதலை 'பொடியனிடம்'   சிக்கி நான் பட்ட பாடு ,கடைசியாக 'அந்த' இடத்தில் உதைத்து விட்டுத்தான் தப்பி ஓடி வந்தேன், பிறகு விசாரித்து பார்த்தால் அது ஒரு gang , மட்டுநகரில் கடும் பிரசித்தி பெட்ற   'பொடியன்' gang,   

  • கருத்துக்கள உறவுகள்

டிச-1 இன்று உலக எய்ட்ஸ் தினம்

  • கருத்துக்கள உறவுகள்

 

24 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நாம நினைப்பது போல இல்லை ,ஏகப்பட்ட 'பொடியன்' கூட்டம் திரியுது
மட்டக்களப்பில் உ.த படிக்கும்போது ஒரு தறுதலை 'பொடியனிடம்'   சிக்கி நான் பட்ட பாடு ,கடைசியாக 'அந்த' இடத்தில் உதைத்து விட்டுத்தான் தப்பி ஓடி வந்தேன், பிறகு விசாரித்து பார்த்தால் அது ஒரு gang , மட்டுநகரில் கடும் பிரசித்தி பெட்ற   'பொடியன்' gang,   

இங்கும் அதே.. அதே..

நான் மாட்டுப்பட்டது Jaffna கோட்டில்,   Prison Guard டிடம்..

கைதிகளின் நிலைதான் பரிதாபம்.. 😂😂

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

நாம நினைப்பது போல இல்லை ,ஏகப்பட்ட 'பொடியன்' கூட்டம் திரியுது
மட்டக்களப்பில் உ.த படிக்கும்போது ஒரு தறுதலை 'பொடியனிடம்'   சிக்கி நான் பட்ட பாடு ,கடைசியாக 'அந்த' இடத்தில் உதைத்து விட்டுத்தான் தப்பி ஓடி வந்தேன், பிறகு விசாரித்து பார்த்தால் அது ஒரு gang , மட்டுநகரில் கடும் பிரசித்தி பெட்ற   'பொடியன்' gang,   

 

1 hour ago, Kapithan said:

 

இங்கும் அதே.. அதே..

நான் மாட்டுப்பட்டது Jaffna கோட்டில்,   Prison Guard டிடம்..

கைதிகளின் நிலைதான் பரிதாபம்.. 😂😂

இதுவே “பொட்டை” கூட்டமாக இருந்தால், உதைத்துவிட்டு ஓடுவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கற்பகதரு said:

 

இதுவே “பொட்டை” கூட்டமாக இருந்தால், உதைத்துவிட்டு ஓடுவீர்களா?

எந்த கூட்டமென்றாலும் ஓடதான் வேண்டும், இதில் வீரபார்க்கமுடியாது 😂

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கற்பகதரு said:

இதுவே “பொட்டை” கூட்டமாக இருந்தால், உதைத்துவிட்டு ஓடுவீர்களா?

என்ன ஓடியிருப்பேன் ...இழுத்துக்கொண்டு ....😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 2003 இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.

அதாவது வருசத்துக்கு 1.5 ஆளுக்கு என்று சொல்லலாம் ....அது ஏன் இந்த அலப்பறை

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

 

இதுவே “பொட்டை” கூட்டமாக இருந்தால், உதைத்துவிட்டு ஓடுவீர்களா?

நிச்சயமாக இல்லை.

எதிர்ப்பால் ஈர்ப்பு என்பது இயல்பானது, சமூகத்தால் ஏற்றுக் கொள்ளபட்டது. முக்கியமாக அழகானது.

ஆனால், அதற்காக நான் ஸ்திரி லோலன் என்று கற்பனை செய்து விடாதீர்கள்... 😂

 

 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

அதாவது வருசத்துக்கு 1.5 ஆளுக்கு என்று சொல்லலாம் ....அது ஏன் இந்த அலப்பறை

"வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 2003 இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்."

 

இதுவரையிலும் ஓகே 
இப்போ 28 பேர் வவுனியாவில் இருக்கும் போது 
இவர்களுக்கு தெரியாமலே சிலருக்கு தொற்றுவதுக்கு வாய்ப்பு உண்டு 
28ம் வருத்தம் முத்தி மருந்து எடுக்க போனவர்கள் என்றுதான் எண்ணுகிறேன் 
இன்னமும் வருத்தம் அறிகுறி தெரியாத நிலையில் யாரும் இருக்கிறார்களோ தெரியவில்லை 
அதுதான் ஆபத்து ஆனது. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன ஓடியிருப்பேன் ...இழுத்துக்கொண்டு ....😂😂😂

யாரிட்ட????🤣

  • கருத்துக்கள உறவுகள்

இளஞ்சமுதாயம் எமது கலாச்சாரம் என சொல்கிறவர்களுக்கு இது ஒரு பகுதியென நினைவில் கொள்ளவும் , இப்படி ஒரு குறுப் , தண்ணி , பாக்கு , இன்னொன்று கஞ்சா , போதை , இன்னொன்று , களவு கொலை , கொள்ளையென திரிகிறது.

கனபேர் சிக்கி இருப்பது இங்கு வெளிப்படையாக தெரிகிறது கபிதன் , அக்கினி , 😀😎

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையையும் அதற்கான பின்னூட்டங்கள் சிலதையும் படிக்கும் போது முன்னாள் ஈரானிய ஜனாதிபதி அகமதி நஜாப் ஐநாவில் “எமது நாட்டில் ஒரு ஓரினசேர்க்கையாளர் கூட இல்லை” என்று சொல்லி கேலிக்கு இலக்காகியதுதான் நினைவுக்கு வருகிறது.

ஓரினச்சேர்கை உந்துதல் என்பது நோயல்ல சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப. அது ஒரு உளவியல், தனியே உடலுறவு சம்பந்தபட்ட விடயம் கூட இல்லை. ஒருவர் தன்னை எப்படி அடையாளம் காண்கிறார் என்ற identity சம்பந்தமானது. 

அதிலும் இது ஒரு spectrum போல ஒரு extreme இல் 100% வேரினசேர்க்கை விருப்பு உள்ளோரும், மறு extreme இல் 100% ஓரினசேர்கை விருப்பு உள்ளோரும் இடையில் கலவையாக different shades of sexuality யில் ஆட்கள் இருப்பதாயும், ஒவ்வொரு சனத்தொலையிலும் 3% அளவில் இப்படி இருப்பதாயும் நம்ப படுகிறது.

இதை நம்மால் ( வேரினச்சேர்கையாளர்?) ஒரு போதும் உணர முடியாது. நமக்கு எப்படி ஒரு பெண்ணை/பெண்களை பார்த்து உணர்சிகள் வருகிறதோ, நாம் எப்படி அதை வலிந்து உருவாக்கவில்லையோ, நாம் எப்படி அதை தடுக்க முடியாதோ ( செயல்பாட்டை தடுக்கலாம், ஆனால் பெண்கள் மீதான ஈர்ப்பை தடுக்க முடியாதல்லவா) அப்படித்தான் அவர்களுக்கும்.

இவர்களை உண்மையில் sexual minorities பாலியல் சிறுபான்மை என்பதே பொருத்தமாக இருக்கும்.

இதற்காக, ஆட்கள் “கையை போடுவதை” ஆதரிக்க வேண்டும் என்பதில்லை. பெண்களை உரச என்றே பஸ்சில் போகும் பல ஆண்கள் உள்ள நாடு நம்நாடு. அதை போலதான் இவர்களும்.

வெளிநாட்டில் வசிக்கும் பெற்றார் - இதை ஒருதரம் உங்கள் பராயம் வந்த பிள்ளைகளுடன் ஆலோசித்து பாருங்கள். அவர்களில் பலர் என்னை போன்ற நிலைப்பாட்டிலேயே இருப்பார்கள்.

அப்புறம் எயிட்ஸ் தொற்றை குறைக்க மிக சுலபமான வழி பாதுகாப்பான உடலுறவு. அதைதான் வைத்தியர்கள் முன் வைக்கவேண்டும். ஒருவனுக்கு ஒருத்தியாய் இருங்கள், ஓரினசேர்க்கையில் ஈடுபடாதீர்கள் என்பதெல்லாம் வைத்தியர் சொல்ல கூடாது. அது அவரவர் தனிப்பட்ட விடயம்.

இந்தியாவில் விபச்சாரம் சட்டவிரோதம், ஆயினும் பாலியல் தொழிலாளருக்கு இலவச பாலியல் சிகிச்சை, பாதுகாப்பு சாதனங்களை தொண்டர் நிறுவனங்கள் வழங்கும்.

ஏன்? ஏனென்றால் பாதுகாப்பற்ற உடலுறவே எயிட்ஸ் பரவ காரணம். ஒரே இனமோ, மாற்றுபாலினமோ, ஏலியனோ - பாதுகாப்பாக இருந்தால் எயிட்ஸ் பரவாது.

இதை சொல்லாமல்- வேறு விடயங்களை கதைப்பதால், இவர்கள் மேல் ஒரு சமூக வெறுப்பை பாய்ச்சுவதால், அவர்கள் மேலும் மேலும் underground க்கு போய், மேலும் மேலும் பாதுகாப்பற்ற உறவில் ஈடுபட்டு, எயிட்ஸ் அபாயம் மேலும் மேலும் அதிகரிக்கும்.

இதைதான் ஆங்கிலத்தில் counter productive என்பார்கள். இதை ஒரு அதிகாரியே செய்வதை என்னவென்பது.

அடுத்து நாட்டில் உள்ள அனைவரும் எச் ஐவி பரிசோதனை செய்ய வேண்டுமாம்? பரிசோதனை முடிந்து அடுத்தநாள் வரும் வெளிநாட்டில் இருந்து வருவோரை என்ன செய்வீர்கள்?

ஒவ்வொரு முறை கட்டுநாயக்கவில் இறங்கும் போதும் எச் ஐ வி சோதனை செய்து, நெகடிவ் என்றால்தான் உள்ளே விடுவீர்களா🤦‍♂️.

எச் ஐ வி தொற்ற வவுனியாவில் குறைக்க,

1. இலவச பாதுகாப்பு சாதனங்களை, அடையாளம் காட்டாமல் பெற்றுகொள் வழிமுறைகளை ஏற்படுத்துங்கள்.

2. தேவைபடும் கூட்டத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துங்கள்.

அவரவர் தனியுரிமையை அவர்களிடமும், நாட்டின் சட்டத்திடமும் விட்டு விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இளஞ்சமுதாயம் எமது கலாச்சாரம் என சொல்கிறவர்களுக்கு இது ஒரு பகுதியென நினைவில் கொள்ளவும் , இப்படி ஒரு குறுப் , தண்ணி , பாக்கு , இன்னொன்று கஞ்சா , போதை , இன்னொன்று , களவு கொலை , கொள்ளையென திரிகிறது.

கனபேர் சிக்கி இருப்பது இங்கு வெளிப்படையாக தெரிகிறது கபிதன் , அக்கினி , 😀😎

நான் சிக்கியிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சிபோல... 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.