Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

90 வெற்றிடத்துக்கு தமிழரை வரச்சொல்லி இந்த காட்டுக்கத்து கத்துறாங்கள்.கக்கூஸ் கழுவவா?

ஏன் கக்கூஸ் கழுவுவது கேவலம் என நினைக்கிறீர்களா??  கிழக்கில் சேர்ந்தவர்கள் படம்  நான் முன்னொரு திரியில் இணைத்திருந்தேன் பெண்களும் சென்று இருக்கிறார்கள் எனவும் கூறியிருந்தேன் .  தற்போது தங்கள் குடும்பத்தையும் அதன் வறுமையையும் போக்க தொழில் வேண்டும் நான் கூட 2010 ல் பொலிசுக்கு சென்றேன் கொஞ்சம் உயரம் போதாது என்ற காரணத்தினால் என்னை வெயிட்டிங் லிஸ்டில் வைத்தார்கள் .  பின்னர் செல்ல வில்லை  கல்யாணம் கட்டவாவது ஓர் தொழில் வேண்டும் அது கவர்மென்டில் கக்கூஸ் கழுவினாலும் பரவாயில்லையென முன்னோர்கள் வைத்த தீ இப்ப தொழிலில் வந்து நிற்கிறது.

தற்போது ஆர்மியில் உள்ள உள்ளக வேலையில் அதிகம் இடம் காலியாக உள்ளதாக சொல்லி இணைந்திருக்கிரார்கள் 
நேற்று பொலிஸ் சேர்ந்தவர்களின் குடும்ப விசாரணை முடித்து சென்றது  நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டவர்கள் படம் இருக்கிறது தேவைப்பட்டால் இணைக்கலாம் என நினைக்கிறன் 

மட் / அம்பாறையில் ஆயிரத்துக்குமேல் என நினைக்கிறன் 

  • Replies 70
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அடைவார்கள்.  இது நான் இலங்கைப் படைகளுக்குக் கொடுத்த ஐடியா அல்ல மீரா! 😎

நன்றி ஜஸ்ரின்,

சில காலத்திற்கு முன்னர் திருநெல்வேலி சந்தையில் மரக்கறிகளை மலிவாக கொடுப்பதால் உள்ளூர் விவசாயிகள் பாதிப்படைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை இராணுவம் இராணுவமாக இருப்பதே நல்லது.

1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் கக்கூஸ் கழுவுவது கேவலம் என நினைக்கிறீர்களா??  கிழக்கில் சேர்ந்தவர்கள் படம்  நான் முன்னொரு திரியில் இணைத்திருந்தேன் பெண்களும் சென்று இருக்கிறார்கள் எனவும் கூறியிருந்தேன் .  தற்போது தங்கள் குடும்பத்தையும் அதன் வறுமையையும் போக்க தொழில் வேண்டும் நான் கூட 2010 ல் பொலிசுக்கு சென்றேன் கொஞ்சம் உயரம் போதாது என்ற காரணத்தினால் என்னை வெயிட்டிங் லிஸ்டில் வைத்தார்கள் .  பின்னர் செல்ல வில்லை  கல்யாணம் கட்டவாவது ஓர் தொழில் வேண்டும் அது கவர்மென்டில் கக்கூஸ் கழுவினாலும் பரவாயில்லையென முன்னோர்கள் வைத்த தீ இப்ப தொழிலில் வந்து நிற்கிறது.

தற்போது ஆர்மியில் உள்ள உள்ளக வேலையில் அதிகம் இடம் காலியாக உள்ளதாக சொல்லி இணைந்திருக்கிரார்கள் 
நேற்று பொலிஸ் சேர்ந்தவர்களின் குடும்ப விசாரணை முடித்து சென்றது  நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டவர்கள் படம் இருக்கிறது தேவைப்பட்டால் இணைக்கலாம் என நினைக்கிறன் 

மட் / அம்பாறையில் ஆயிரத்துக்குமேல் என நினைக்கிறன் 

தனி, சில காலத்திற்கு முன்னர் பொலிசில் இருந்தவர்கள் ஏதோ காரணங்களால் விலகுகிறார்கள் என்று எழுதிய ஞாபகம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

நன்றி ஜஸ்ரின்,

சில காலத்திற்கு முன்னர் திருநெல்வேலி சந்தையில் மரக்கறிகளை மலிவாக கொடுப்பதால் உள்ளூர் விவசாயிகள் பாதிப்படைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை இராணுவம் இராணுவமாக இருப்பதே நல்லது.

தனி, சில காலத்திற்கு முன்னர் பொலிசில் இருந்தவர்கள் ஏதோ காரணங்களால் விலகுகிறார்கள் என்று எழுதிய ஞாபகம்.

தகுதிகளுக்கேற்ப வேற வேலை கிடைக்குமாயின் அதிகார பூர்வமாக விலகலாம் ஆர்மியில் 20 வருடங்கள் பூர்த்தியாகினால் தாமாகவே விலகி வேற தொழில் செய்யவும் வாய்ப்புண்டு 
01. டெய்லர்
02. பிளம்பர் (நீர் குழாய் பொருத்துனர்)
03. காபென்டர் ( ஓடாவி)
04. சாரதி 
 இன்னும் பல துறையில் அழைப்பு விடுத்திருந்தார்கள் விமான படையிலும் சேர்ந்து விட்டார்கள் இதே போல பல துறைகளுக்கும் மட்டக்களப்பில் அதிகமானவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

உங்களுக்கு ஒப்பிடுவதில் கடுமையான பிரச்சனை உள்ளது என ஆழமாக நம்புகிறேன்.

உங்களுடைய பிரச்சனை என்ன என்பது எனக்கு தெளிவாகவே விளங்குகின்றது

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் கக்கூஸ் கழுவுவது கேவலம் என நினைக்கிறீர்களா??  கிழக்கில் சேர்ந்தவர்கள் படம்  நான் முன்னொரு திரியில் இணைத்திருந்தேன் பெண்களும் சென்று இருக்கிறார்கள் எனவும் கூறியிருந்தேன் .  

வெளிநாட்டில் கக்கூஸ் கழுவி வேலை செய்கிறார்கள் பின் ஏனாம் இலங்கையில் கக்கூஸ் கழுவி வேலை செய்வதை கேவலமாக நினைக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் கக்கூஸ் கழுவுவது கேவலம் என நினைக்கிறீர்களா??  

24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாட்டில் கக்கூஸ் கழுவி வேலை செய்கிறார்கள் பின் ஏனாம் இலங்கையில் கக்கூஸ் கழுவி வேலை செய்வதை கேவலமாக நினைக்கிறார்கள்?

கக்கூஸ் கழுவுவதில்  கூடுதலான புலம்பெயர் தமிழர்கள் ஒரே நேர் கோட்டில்தான் இருக்கின்றார்கள்.(பெரியபிரித்தானியா,கனடா மேட்டுக்குடிகளை தவிர்த்து) இப்போது அதே நேர்கோட்டில் உங்களைப்போன்ற சீமான்களும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.👌🏽

நான் என்றுமே தொழிலை தொழிலாக பார்க்கின்றவன்.தொழிலை கேவலமாக பார்ப்பவன் அல்ல.  இருந்தாலும் சிங்களத்தின் நடவடிக்கையில் சந்தேகம் வைத்திருப்பதில் தவறில்லைத்தானே ஐயாமாரே.....⁉️

கெக்...கெக்...கெக்....கெக்  சிரிக்கிறனாம்.:cool:

நான் ஒரு முறை இங்கே தொழில் கோப்பை கழுவுதல் என எழுதியதற்கு ஒரு கள உறவு நக்கல் அடித்தார் பாருங்கோ சொல்லி வேலையில்லை. அவர் இன்று யாழ்கள நன்னடத்தை ஆலோசகராக இருப்பது வேறை லெவல்.😜

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் சிலர் என் மகன் வெளிநாட்டு இராணுவத்தில் பயிற்சி எடுக்கிறான் என்று பெருமை அடித்து படங்களுடன் வலைதளங்களே வெளியிட்டனர். இலங்கை ராணுவத்தில் இலங்கையர் இணைவதில் எத்தனை கேள்விகள்

வெளிநாட்டு இராணுவம் இராணுவத்துக்குரிய கடமைகளைச் செய்கிறது. இலங்கையில் இராணுவம் பெண்ணைக் கொன்றுவிட்டு அவளைப் பிணமாக்கியபின்பு அந்தப் பிணத்தையே புணர்கிறதே.... படமாகவும். வீடியோவாகவும் போட்டுக் காட்டினார்களே பார்த்ததில்லையா.??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

உங்களுடைய பிரச்சனை என்ன என்பது எனக்கு தெளிவாகவே விளங்குகின்றது

நல்லது. உங்களின் பிரச்சனையை விளங்க பாருங்கள்.

இவ்வாறு இணையும் தமிழ் இளைஞர்களை பயிற்றுவித்து விட்டு, முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பணி புரிய அனுப்பி அதன் மூலம் மேலும் பிளவுகளை சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். 
எல்லைப் பிரச்சனை, காணிப் பிரச்சனை என்று தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் இருந்த சிவில் பிரச்சனைகளை தீவிரப்படுத்த ஈ.பி.ஆர்.எல்.எப் இனை இந்திய ஏவல் படைகளின் மூலம் தூண்டி விட்டு தமிழ் - முஸ்லிம் மோதலை முதன் முதலில் இராணுவ ரீதியாக / ஆயுத ரீதியாக மாற்றியது இந்தியாவும் இலங்கை அரசும். அதே போன்று அந்த கணங்கை மீண்டும் அணைய விடாமல் பார்த்துக் கொள்ள இலங்கை அரசு முயலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Paanch said:

வெளிநாட்டு இராணுவம் இராணுவத்துக்குரிய கடமைகளைச் செய்கிறது. இலங்கையில் இராணுவம் பெண்ணைக் கொன்றுவிட்டு அவளைப் பிணமாக்கியபின்பு அந்தப் பிணத்தையே புணர்கிறதே.... படமாகவும். வீடியோவாகவும் போட்டுக் காட்டினார்களே பார்த்ததில்லையா.??

விடுங்கள் ஐயா! வர வர சிறுமைத்தனமாக இங்கே கருத்தெழுத  ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு பதிலளித்தால் நிழலி வந்து அகற்றுகின்றார். ஆனால் கேள்வி மட்டும் அப்படியே இருக்கும். பதில்கள் அகற்றப்பட்டு விடும். கேட்டால் தனிமனித தாக்குதல் அல்லது    கள விதிகளுக்கு உட்படவில்லை என்பர். இங்கே தனிமனித தாக்குதலை விட தனி மனித செல்வாக்குதான் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் சிலர் என் மகன் வெளிநாட்டு இராணுவத்தில் பயிற்சி எடுக்கிறான் என்று பெருமை அடித்து படங்களுடன் வலைதளங்களே வெளியிட்டனர். இலங்கை ராணுவத்தில் இலங்கையர் இணைவதில் எத்தனை கேள்விகள்

இலங்கை அரசும், இராணுவமும் தமிழரை சமமாக மனிதர்களாக மதித்திருந்தால் அவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தார்கள்? அந்த நாட்டு இராணுவத்தில் சேர்ந்தார்கள்? நாம் இலங்கை இராணுவம் என்று பெருமை பேசத் தயங்கி இருப்பார்கள்? சர்வதேச இராணுவத்துக்கு போயே இந்த இராணுவத்தைப்பற்றி பல  முறைப்பாடுகள் வெளிவந்தன. அவர்களை இணைப்பதில் குறித்த அமைப்புகள் தயக்கம் காட்டுகின்றன.  இதில் நம் இராணுவம் ஒழுக்கமானது என சான்றிதழ் வேறை. வேறு நாடுகளை உதாரணம் காட்ட வேண்டாம். நாம் இந்த ராணுவத்தாலும், அரசாலும் அழிவுகளை சந்தித்தவர்கள் மட்டுமல்ல இன்றுவரை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அவர்களை பாராட்ட எம்மால் முடியாது. வேலையில் இணைபவர்களை யாரும்  தடுக்கவில்லை தடுக்கவும் முடியாது. அது அவரவர் அனுபவம், வசதி. ஆனால் நாம் இவர்களால் இன்றும் நம் பூமியில் சுதந்திரமாக நடமாட முடியாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம்.  இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாதவரால் கொடுக்கப்படும் வாதம்  பொருத்தமானது அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

வெளிநாட்டு இராணுவம் இராணுவத்துக்குரிய கடமைகளைச் செய்கிறது. இலங்கையில் இராணுவம் பெண்ணைக் கொன்றுவிட்டு அவளைப் பிணமாக்கியபின்பு அந்தப் பிணத்தையே புணர்கிறதே.... படமாகவும். வீடியோவாகவும் போட்டுக் காட்டினார்களே பார்த்ததில்லையா.??

பெண்ணைக் கொன்று  பிணமாக்கி பின்பு பிணத்தையே.. விடியோக்கள் படங்கள்  நான் பார்ப்பதில்லை.
+ வெளிநாட்டு இராணுவம் இராணுவத்துக்குரிய கடமைகளைச் செய்கிறது.???
அமெரிக்கா பிரிட்டன்  வெளிநாட்டு இராணுவமும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் குற்றங்கள் செய்துள்ளன

1 hour ago, satan said:

வேலையில் இணைபவர்களை யாரும்  தடுக்கவில்லை தடுக்கவும் முடியாது. அது அவரவர் அனுபவம், வசதி.

இது சரியானது  சேருவதா இல்லையா என்பது அவர்களது முடிவு.

1 hour ago, நிழலி said:

 தமிழ் - முஸ்லிம்

அவர்கள் முஸ்லிம் மதம் தான் எல்லாம் என்று இருக்கும்வரை அவர்களுடன் சேர முடியாது தங்களது தேவைகளுக்கு தமிழர்களை  தாராளமாக பயன்படுத்தி கொள்வார்கள்

15 minutes ago, goshan_che said:

அதே சமயம் “எந்த வேலையும் செய்யலாம். ஒரு வேலையும் இழுக்குகில்லை” எனசொல்லும் அதே வாயால், “அது, அது அங்க, அங்கதான் இருக்கணும், என்று எம் முன்னோர் சொன்னது சரிதான்” என்று, சாதியத்துக்கு ஒரு மறைமுக இழுப்பும், இழுப்பார்கள்

மறுக்கவே முடியாது நேரிலேயே இப்படி சொல்லுவதை  பார்த்திருக்கிறேன்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

யாழ். இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதால் வேலைவாய்ப்பு பிரச்சினை தீரும்: யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இரா
ணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

jaffna-ga-1-300x225.jpg

அண்ணைக்கு ஒரு துரோகிப்பட்டம் பார்சல் ப்ரம் ஃபாரின் நெட்வீரதமிழன் ப்ளிஸ்... 😂😂

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவத்தில் எம்மக்கள் பெருவாரியா இணைவது பற்றி.

1. 2009 வரை சேராதோர் இப்போ ஏன் சேருகிறார்கள்?

2. 2010-2019 இல் கூட அவ்வளவாக இல்லையே? இப்போ ஏன்?

3. பிள்ளையான், அங்கஜன், திலீபன், டக்லசுக்கு வாக்கு போட்டவர் யார்?

4. இதுவரை சேர்ந்தவர்கள் மோசமாக நடத்தபட்டால், மேலும் ஏன் சேருகிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு விடையை ஏலவே எடுத்த முடிவுகள் (preconceptions) அடிப்படையில் அல்லாமல், பக்கம்சாராமல் யோசித்தால் ஊரில் எம் மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள அதி அடிப்படையான மாற்றம் paradigm shift விளங்கும்.

1. இந்த மாற்றத்தை வெறுக்கலாம் தப்பில்லை

2. இந்த மாற்றத்தை மாற்ற முயற்சிக்கலாம், தப்பில்லை

3. ஆனால் மாற்றத்தை ஏற்க மறுப்பதோ, மாறும் மக்களை திட்டுவதோ, மாறுகிறது என செய்தி சொல்லும் தனி போன்றவர்களை திட்டுவதோ ஒன்றுக்கும் பயனில்லாத வேலை.

7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணைக்கு ஒரு துரோகிப்பட்டம் பார்சல் ப்ரம் ஃபாரின் நெட்வீரதமிழன் ப்ளிஸ்... 😂😂

மிஸ்டர் ஓணாண்டி,

எப்படி சுகம். கனகாலம் காணேல்ல. எனக்கு இருந்த ஒரே ஒரு ரசிகரும் அவுட்ட்டோ என்று பெரும் கலவையாய் போச்சுதையா🤣

கண்டது சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இலங்கை இராணுவத்தில் எம்மக்கள் பெருவாரியா இணைவது பற்றி.

1. 2009 வரை சேராதோர் இப்போ ஏன் சேருகிறார்கள்?

2. 2010-2019 இல் கூட அவ்வளவாக இல்லையே? இப்போ ஏன்?

3. பிள்ளையான், அங்கஜன், திலீபன், டக்லசுக்கு வாக்கு போட்டவர் யார்?

4. இதுவரை சேர்ந்தவர்கள் மோசமாக நடத்தபட்டால், மேலும் ஏன் சேருகிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு விடையை ஏலவே எடுத்த முடிவுகள் (preconceptions) அடிப்படையில் அல்லாமல், பக்கம்சாராமல் யோசித்தால் ஊரில் எம் மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள அதி அடிப்படையான மாற்றம் paradigm shift விளங்கும்.

1. இந்த மாற்றத்தை வெறுக்கலாம் தப்பில்லை

2. இந்த மாற்றத்தை மாற்ற முயற்சிக்கலாம், தப்பில்லை

3. ஆனால் மாற்றத்தை ஏற்க மறுப்பதோ, மாறும் மக்களை திட்டுவதோ, மாறுகிறது என செய்தி சொல்லும் தனி போன்றவர்களை திட்டுவதோ ஒன்றுக்கும் பயனில்லாத வேலை.

நீங்கள் வேர.. நானும் என்ர குடும்பமும் சண்டைக்கையே ஆப்பிடக்கூடதெண்டு ஓடி வந்த ஆக்கள் நாங்கள்... எவன் போராடிச்செத்தால் எனக்கென்ன நான் இஞ்ச வந்தது என்ர பிள்ளையளை நல்ல செல்வச்செழிப்போட படிப்பிச்சு வளத்து நல்ல கை நிறைய சம்பளத்தோட அதிகள செட்டில் ஆக்க.. எங்களுக்கு தெரியும் இதிலை வந்து திட்டினாலும் அங்க ஒண்டும் மாறாது எண்டு.. நானும் என்னைப்போல ஆக்களும் வேலையால வந்து திண்டிட்டு சும்மா கிடக்குர ரைம்மில இதில வந்து மாரித்தவக்கை மாரி கத்திட்டு நாட்டுபற்றாளன் எண்டு காட்ட இலங்கை சனத்தையும் ஆர்மியையும் ரெண்டு திட்டி திட்டிபோட்டு போரனாங்கள்.. சரி இருங்கோ வாறன் பிள்ளை என்னவோ ஜெர்மன் மொழில கேக்குராள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

+ வெளிநாட்டு இராணுவம் இராணுவத்துக்குரிய கடமைகளைச் செய்கிறது.???
அமெரிக்கா பிரிட்டன்  வெளிநாட்டு இராணுவமும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் குற்றங்கள் செய்துள்ளன

எனவே சிங்கள இராணுவம் தமிழ் பெண்களுக்கு செய்த அவல அநியாங்கள் எல்லாம் வெள்ளைக்கார இராணுவமும் பெண்களுக்கு செய்துதான் இருக்குது. அதாலை இதெல்லாம் நோர்மல்.....இதை போய் பெரிசு படுத்திக்கொண்டு....

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இலங்கை இராணுவத்தில் எம்மக்கள் பெருவாரியா இணைவது பற்றி.

1. 2009 வரை சேராதோர் இப்போ ஏன் சேருகிறார்கள்?

2. 2010-2019 இல் கூட அவ்வளவாக இல்லையே? இப்போ ஏன்?

3. பிள்ளையான், அங்கஜன், திலீபன், டக்லசுக்கு வாக்கு போட்டவர் யார்?

4. இதுவரை சேர்ந்தவர்கள் மோசமாக நடத்தபட்டால், மேலும் ஏன் சேருகிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு விடையை ஏலவே எடுத்த முடிவுகள் (preconceptions) அடிப்படையில் அல்லாமல், பக்கம்சாராமல் யோசித்தால் ஊரில் எம் மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள அதி அடிப்படையான மாற்றம் paradigm shift விளங்கும்.

1. இந்த மாற்றத்தை வெறுக்கலாம் தப்பில்லை

2. இந்த மாற்றத்தை மாற்ற முயற்சிக்கலாம், தப்பில்லை

3. ஆனால் மாற்றத்தை ஏற்க மறுப்பதோ, மாறும் மக்களை திட்டுவதோ, மாறுகிறது என செய்தி சொல்லும் தனி போன்றவர்களை திட்டுவதோ ஒன்றுக்கும் பயனில்லாத வேலை.

மிஸ்டர் ஓணாண்டி,

எப்படி சுகம். கனகாலம் காணேல்ல. எனக்கு இருந்த ஒரே ஒரு ரசிகரும் அவுட்ட்டோ என்று பெரும் கலவையாய் போச்சுதையா🤣

கண்டது சந்தோசம்.

தல உங்களத்தான் தலைவா காணேல்ல கனநாள்.. அப்புறம் உங்கள மறுபடியும் எழுதுறத கண்டு மகிழ்ந்தேன்.. பிக்பொஸ்ல வில்லன் ஆகிரவங்க மாதிரி மனசுல வாறத அப்புடியே நான் நானாக இருந்து மினக்கெட்டு எழுதினாலும் வெட்டிப்போடுவாங்கள்.. உண்மைய பச்ச பச்சையா பேசினா எழுதினா யாருக்கும் புடிக்காதே.. அதான் அதிகம் எழுதுரேல்ல..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தல உங்களத்தான் தலைவா காணேல்ல கனநாள்.. அப்புறம் உங்கள மறுபடியும் எழுதுறத கண்டு மகிழ்ந்தேன்.. பிக்பொஸ்ல வில்லன் ஆகிரவங்க மாதிரி மனசுல வாறத அப்புடியே நான் நானாக இருந்து மினக்கெட்டு எழுதினாலும் வெட்டிப்போடுவாங்கள்.. உண்மைய பச்ச பச்சையா பேசினா எழுதினா யாருக்கும் புடிக்காதே.. அதான் அதிகம் எழுதுரேல்ல..

எல்லாம் நம்ம தல விவேக் சொன்னதுதான்.

”அடிங்க ஆனா கைய கழுவிட்டு அடிங்க”

மனசில் பட்டதை அப்படியே எழுதுங்க ஆனா வார்த்தைகள் மட்டும் கத்தி படதாமாரி பட்டர் பூசி இருக்கணும் 🤣.

தொடர்ந்து எழுதுங்க புலவரே. 

உங்கள் சேவை யாழுக்குத்தேவை.

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் வேர.. நானும் என்ர குடும்பமும் சண்டைக்கையே ஆப்பிடக்கூடதெண்டு ஓடி வந்த ஆக்கள் நாங்கள்... எவன் போராடிச்செத்தால் எனக்கென்ன நான் இஞ்ச வந்தது என்ர பிள்ளையளை நல்ல செல்வச்செழிப்போட படிப்பிச்சு வளத்து நல்ல கை நிறைய சம்பளத்தோட அதிகள செட்டில் ஆக்க.. எங்களுக்கு தெரியும் இதிலை வந்து திட்டினாலும் அங்க ஒண்டும் மாறாது எண்டு.. நானும் என்னைப்போல ஆக்களும் வேலையால வந்து திண்டிட்டு சும்மா கிடக்குர ரைம்மில இதில வந்து மாரித்தவக்கை மாரி கத்திட்டு நாட்டுபற்றாளன் எண்டு காட்ட இலங்கை சனத்தையும் ஆர்மியையும் ரெண்டு திட்டி திட்டிபோட்டு போரனாங்கள்.. சரி இருங்கோ வாறன் பிள்ளை என்னவோ ஜெர்மன் மொழில கேக்குராள்..

உண்மை , உண்மை. ஆனால் இங்கு உண்மையை எழுதினால் சிலருக்கு பொத்துக்கொண்டு வருகுதே. சரி, சரி நடக்கிறதை பார்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2020 at 05:09, nunavilan said:

எனது கேள்வியின் சாராம்சம் 90 வெற்றிடங்களுக்கு இந்த கூவு கூவுபவர்கள்  சில மாதத்துக்கு முன் ப்ல ஆயிரம் வேலை வெற்றிடங்கள்  வந்த போது  ஒரு கூவலும் இல்லை  ஏன் என்பதே.

கடந்த இரு வருடங்களுக்கு முன் ராஜித யாழ் மக்களிடம் ஒன்று கூறினார், சர்வதேச விசாரணை செய்ய வெளிக்கிட்டால் புனர்வாழ்வு பெற்று திரும்பிய போராளிகளையும் விசாரணை செய்ய வேண்டிவரும் ஆகவே கடந்ததை மறந்து நாட்டில் சகஜ வாழ்வை ஏற்படுத்துவோம் என்றார். இதனால் தமிழர் நாம் பயந்து சர்வதேச விசாரணையை கைவிடுவோம் என்று எதிர்பார்க்கிறார்கள். அதேபோல் தமிழரை இராணுவத்தில் சேர்த்து அதை வைத்து ஒரு கதை உருவாக்கி சர்வதேச விசாரணை என்பதை கைவிட வைக்க முனையும் திட்டமாகவும் இருக்கலாம். அன்றி சீனா அண்ணா சொன்னாரோ மூன்றாம் உலகப்போரை தொடங்கப்போறேன் என்று..... சோழியன் குடுமி சும்மா ஆடாது. சேருபவர்கள் ஏன் சேர்ந்தோம் என்று நொந்து கொள்ளாமல் இருந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Robinson cruso said:

உண்மை , உண்மை. ஆனால் இங்கு உண்மையை எழுதினால் சிலருக்கு பொத்துக்கொண்டு வருகுதே. சரி, சரி நடக்கிறதை பார்ப்பம்.

சிங்களவரின் கபடம் தெரியாமல் ரொம்ப அப்பாவிகளாக இங்கு சிலர் இருக்கிறார்கள்.

1 hour ago, nunavilan said:

சிங்களவரின் கபடம் தெரியாமல் ரொம்ப அப்பாவிகளாக இங்கு சிலர் இருக்கிறார்கள்.

அப்படி இருக்கலாம். இருந்தாலும் இங்கு வேறு தெரிவு இருப்பதாக தெரியவில்லை. ஒன்று வலி கடடக்கூடியவர்கள் வழி காடடவேண்டும் அல்லது அவர்களது வாழ்வுக்கு வழி சொல்ல வேண்டும். இராணுவத்தில் சேர்ந்தாலும் சரி, சேராவிடடாலும் சரி என்னதான் நாங்கள் நினைத்தாலும் அவர்கள் நிகழ்ச்சி நிரலின்படியேதான் எல்லாம் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

இவ்வாறு இணையும் தமிழ் இளைஞர்களை பயிற்றுவித்து விட்டு, முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பணி புரிய அனுப்பி அதன் மூலம் மேலும் பிளவுகளை சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். 
எல்லைப் பிரச்சனை, காணிப் பிரச்சனை என்று தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் இருந்த சிவில் பிரச்சனைகளை தீவிரப்படுத்த ஈ.பி.ஆர்.எல்.எப் இனை இந்திய ஏவல் படைகளின் மூலம் தூண்டி விட்டு தமிழ் - முஸ்லிம் மோதலை முதன் முதலில் இராணுவ ரீதியாக / ஆயுத ரீதியாக மாற்றியது இந்தியாவும் இலங்கை அரசும். அதே போன்று அந்த கணங்கை மீண்டும் அணைய விடாமல் பார்த்துக் கொள்ள இலங்கை அரசு முயலும்.

தமிழர்கள்  ஆமியில் அல்லது பொலீசில்  சேர்ந்தால்  முஸ்லீம் இனத்திற்கு எதிராய் தூண்டி விடப்பட்டு பிரச்சனை வரும் சொல்லி முட்டுக்கடடை போடுபவர்கள் முஸ்லீம்கள் இதில் சேர்ந்து தமிழ் இனத்திற்கு எதிராய் நிற்கும் போது வாயை மூடிக் கொண்டு இருப்பார்கள்...ஆனால் முஸ்லீம்கள் தமிழரை ஒதுக்கி எல்லா துறைகளிலும் முன்னேறிக் கொண்டு போகிறார்கள் .
அரசின் எல்லாத்  துறைகளிலும் தமிழாட்கள் உள்ளிட வேண்டும் 

4 minutes ago, ரதி said:

தமிழர்கள்  ஆமியில் அல்லது பொலீசில்  சேர்ந்தால்  முஸ்லீம் இனத்திற்கு எதிராய் தூண்டி விடப்பட்டு பிரச்சனை வரும் சொல்லி முட்டுக்கடடை போடுபவர்கள் முஸ்லீம்கள் இதில் சேர்ந்து தமிழ் இனத்திற்கு எதிராய் நிற்கும் போது வாயை மூடிக் கொண்டு இருப்பார்கள்...

நீங்கள் அந்த நேரத்தில் வாயை மூடிக் கொண்டு இருந்தமைக்காக எல்லாரையும் அப்படி நினைப்பது தவறு. முக்கியமாக முஸ்லிம்களைக் கொண்டு ஊர்காவல்படை பிரிவுகளை அமைக்கும் போது தென்னிலங்கை பத்திரிகைகள், வடக்கு பத்திரிகைகள், மனிதவுரிமை அமைப்புகள் அன்றும் எச்சரித்து இருந்தனர். அத்துடன் முஸ்லிம்கள் பெருவாரியாக இராணுவத்தில் சேரும் பொழுது எம்மைக் காக்கவென விடுதலைப் புலிகள் அன்று இருந்தனர், எனவே தமிழ் தரப்பில் இதற்கு எதிராக அரசிடம் முறையிடும் தேவை இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

நீங்கள் அந்த நேரத்தில் வாயை மூடிக் கொண்டு இருந்தமைக்காக எல்லாரையும் அப்படி நினைப்பது தவறு. முக்கியமாக முஸ்லிம்களைக் கொண்டு ஊர்காவல்படை பிரிவுகளை அமைக்கும் போது தென்னிலங்கை பத்திரிகைகள், வடக்கு பத்திரிகைகள், மனிதவுரிமை அமைப்புகள் அன்றும் எச்சரித்து இருந்தனர். அத்துடன் முஸ்லிம்கள் பெருவாரியாக இராணுவத்தில் சேரும் பொழுது எம்மைக் காக்கவென விடுதலைப் புலிகள் அன்று இருந்தனர், எனவே தமிழ் தரப்பில் இதற்கு எதிராக அரசிடம் முறையிடும் தேவை இருக்கவில்லை.

சரி நம்பிட்டன் நீங்கள் அன்றைக்கு எச்சரித்து இருப்பீர்கள் ...இப்ப நிகழ்காலத்தில் புலிகள் இல்லாத நிலையில் அந்த மக்கள் தமிழர் இதில் இணைவதால் உங்கள் போன்றவர்களுக்கு என்ன பிரச்சனை?

6 minutes ago, ரதி said:

சரி நம்பிட்டன் நீங்கள் அன்றைக்கு எச்சரித்து இருப்பீர்கள் ...இப்ப நிகழ்காலத்தில் புலிகள் இல்லாத நிலையில் அந்த மக்கள் தமிழர் இதில் இணைவதால் உங்கள் போன்றவர்களுக்கு என்ன பிரச்சனை?

வெளிநாட்டுக்கு வந்துவிட்ட எனக்கு தனிப்பட எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இனவாதத்தினையே முழு கொள்கையாக கொண்ட ஒரு தேசத்தின் கொலை இயந்திரத்துக்கு, தமிழர்களை கொன்று குவித்த ஒரு இராணுவத்துக்கு அதே தமிழர்களை சேர்ப்பது நிச்சயம் தாயக மக்களுக்கு சிறிலங்கா அரசு நல்லது செய்வதற்காக என்பதில் தெளிவு இருக்கின்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.