Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க இங்க இருட்டுக்க இருந்து எழுதுறீங்க. வேணுமாண்டா இங்க கருத்து எழுதும் ஒரு 25 பேர் சிவாஜி பார்க்க போகாமல் புறக்கணித்திருக்கலாம். மற்றும்படி எல்லாம் தலைகீழ்,

எங்கட ஜ.பி.சி வானொலி கூட படுகச்சிதமாக விளம்பரம் நடக்குது.

எப்படி எண்டா லண்டனில் ஒரே நாளில் 30,000 பேர் சென்று பார்த்த திரைப்படம் நீங்களும் தவற விடாதீர்கள் என்று வெளுத்து. வாங்குகினம்

ஒரு ஊர்வலம் எண்டா 30 பேரை காணக்கிடைக்காத லண்டனில் 30000 பேர் பார்த்தது சாதனை தான்

தமிழரே வாழ்க.

இருட்டுக்க இருந்து எழுதியும் ஒரு சொல்லுகூட பிழை விடாமல் எழுதி இருக்கிறாங்கள் :lol::D:D

இது ஆரம்பம் மட்டுமே எடுத்தோம் கவிழ்தோம் என்று செய்யமுடியாது. மாற்று வழியை கொடுத்துதான் வழிக்கு கொண்டு வரலாம். :rolleyes::rolleyes::lol:

  • Replies 217
  • Views 23.4k
  • Created
  • Last Reply

நீங்க இங்க இருட்டுக்க இருந்து எழுதுறீங்க.............

அருமையான கருத்து...... அதைத்தான் நானும் சொல்கிறேன் தோழா........ :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு

நீங்கள் திரைப்படத்தை புறக்கணித்தால் ரஜனி இனிமேல் தான் நடிப்பதில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டாராம். :rolleyes::rolleyes:

ரஜனி நடிக்கிராரோ இல்லையோ நான் இந்திரைப்படத்தைப் புறக்கணிப்பது நிச்சயம். இப்படம் 100 நாட்கள் புலத்தில் ஓடினாலும் நான் கவலைப்பட மாட்டேன். மற்றவர்கள் புறக்கணிக்காது விட்டாலும் நான் கவலைப் படமாட்டேன். ஆனால் நான் புறக்கணிப்பேன். நான் மட்டும் புறக்கணிப்பதினால் பெரிய மாற்றம் வராது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் நான் புறக்கணிப்பேன்.

சிறிலங்கன் எயர்லைன்சில் பயணம் செய்வதையும் புறக்கணிக்கத் துடங்கிவிட்டேன். கடைசியாக 1991ல் தான் இதில் பிரயாணம் செய்தேன்.

ரஜனி நடிக்கிராரோ இல்லையோ நான் இந்திரைப்படத்தைப் புறக்கணிப்பது நிச்சயம். இப்படம் 100 நாட்கள் புலத்தில் ஓடினாலும் நான் கவலைப்பட மாட்டேன். மற்றவர்கள் புறக்கணிக்காது விட்டாலும் நான் கவலைப் படமாட்டேன். ஆனால் நான் புறக்கணிப்பேன். நான் மட்டும் புறக்கணிப்பதினால் பெரிய மாற்றம் வராது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் நான் புறக்கணிப்பேன்.

சிறிலங்கன் எயர்லைன்சில் பயணம் செய்வதையும் புறக்கணிக்கத் துடங்கிவிட்டேன். கடைசியாக 1991ல் தான் இதில் பிரயாணம் செய்தேன்.

உம்மை போல் தான் நானும் எனது மாமன் மச்சான் எல்லாம் போய் பாத்துட்டு வந்திட்டாங்கள். நான் போகவில்லை. அது போல் நானும் தேவையற்ற சிரிலங்கன் பொருட்களை வாங்குவதில்லை.

ஒவ்வொருவரும் தன்னுக்குள் தானே சபதம் எடுப்போம்

இருட்டுக்க இருந்து எழுதியும் ஒரு சொல்லுகூட பிழை விடாமல் எழுதி இருக்கிறாங்கள் :lol::D:D

இது ஆரம்பம் மட்டுமே எடுத்தோம் கவிழ்தோம் என்று செய்யமுடியாது. மாற்று வழியை கொடுத்துதான் வழிக்கு கொண்டு வரலாம். :rolleyes::rolleyes::lol:

நான் இருட்டு எண்டு சொன்னது இந்த இணைய வலையில் மட்டும் எங்கள் கருத்துக்கள் உலாவருகின்றன. ஆனால் வெளியே மக்களோடு பழகும் ஊடகங்கள் மக்களின் மன மாற்றத்திற்கான ஒரு சிறு பொறியை கூட தட்ட முன்வரவில்லை என்றுதான் கவலை படுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா டங்குவார்

மேலே உங்களுக்கு நான் எழுதிய பதிலில் எல்லாவற்றையும் இணைத்துத் தானே எழுதியுள்ளேன். அதனை நீங்கள் கவனிக்கவில்லையா?? நீங்கள் எழுதியது போல் ஒண்டடி மண்டடியாகவா இருக்கின்றது. ஒருவேளை உங்களுக்கு அப்படிச் சேர்ந்து வந்திருந்தால் உங்கள் கருத்தை நீக்கிய பின் பதிவிட்டிருக்கலாமே?? அவசரக்காறனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அது உங்களுக்கு நன்கு பொருந்துகின்றது.

எனிமேலாவது பதிலளிப்பதற்கு முன்னர் மேலேயுள்ளவற்றை நன்றாக அவதானித்து பின் பதிலெழுதப் பாருங்கள். :rolleyes::rolleyes:

இப்போது புரிந்ததா யார் நலம் பெற வேண்டுமென்று?? :lol::lol:

நீங்கள் செய்த தவறை என்னைத் திருத்தச் சொல்கிறீர்கள். நீங்கள் எப்படி இணைத்தீர்கள் என்பதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. அது உங்கள் பிரச்சினை. என்னால் கோட் செய்து பதிலளிக்கத்தான் முடியும். இதில் ஏதாவது உங்களுக்குப் பிரச்சினையென்றால் மோகன் அண்ணாவிடம் குறைபட்டுக்கொள்ளுங்கள்.

இங்கே யாரும் நான் ஆத்திரப்படவில்லை, தங்களைப்போல். பைத்தியக்காரன், விட்டில் பூச்சி என்றெல்லாம் வசைபாடியது நீங்களே. யாருக்குப் புத்தி மட்டு, யாருக்கு வைத்தியம் தேவை என்பதெல்லாம் இனிமேலும் யாரும் சொல்லி அறிய வேண்டியதில்லை.

சிவாஜி பார்க்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. உங்களது மாற்றுக்கருத்து. அதை மதிக்கிறேன். இதற்கு மேல் என்னிடம் பதில்பெறும் பக்குவம் தங்களுக்கில்லை என்பதால், இத்துடன் முடிக்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்

விசு, ரஜனிகாந்த், எஸ்.வி.சேகர் போன்றவர்களை புலம் பெயர்ந்த நாடுகளில் வரும் போது அன்நிகழ்ச்சிகளுக்கு செல்வதைப் புறக்கணித்தவர்கள் எம்மவர்கள். நான் சிவாஜி படத்தைப் புறக்கணிப்பேன். இயக்குனர் சீமான், தங்கப்பச்சான் போன்றவர்களின் படங்கள் நன்றாக இல்லாவிடினும் திரைஅரங்கில் சென்று பார்ப்பேன். ஆதரவு தருவேன்.

துடுப்பாட்டப் போட்டி சிட்னியில் நடைபெறும் போது இலங்கை அணி விளையாடும் போது சென்று பார்க்கமாட்டேன். அப்படி பார்க்க விரும்பினால் அவுஸ்திரெலியா தேசியக் கொடியுடன் சென்று அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தெரிவிப்பேன். முன்பு இலங்கை அணிக்கு துடுப்பாட்டப்போட்டியில் ஆதரவாக இருந்தனான் என்பதை நினைத்து வெக்கப்படுகிறேன்.

ரஜனி நடிக்கிராரோ இல்லையோ நான் இந்திரைப்படத்தைப் புறக்கணிப்பது நிச்சயம். இப்படம் 100 நாட்கள் புலத்தில் ஓடினாலும் நான் கவலைப்பட மாட்டேன். மற்றவர்கள் புறக்கணிக்காது விட்டாலும் நான் கவலைப் படமாட்டேன். ஆனால் நான் புறக்கணிப்பேன். நான் மட்டும் புறக்கணிப்பதினால் பெரிய மாற்றம் வராது என்பது எனக்குத் தெரியும். என்றாலும் நான் புறக்கணிப்பேன்.

சிறிலங்கன் எயர்லைன்சில் பயணம் செய்வதையும் புறக்கணிக்கத் துடங்கிவிட்டேன். கடைசியாக 1991ல் தான் இதில் பிரயாணம் செய்தேன்.

உன்னை திருத்திக்கொள் உலகம் தானாக திருந்தும் என்று சொல்வார்கள்

உங்களைப்போலவே ஒவ்வொருவரும் நிச்சயம் மாறும்காலம் வரும்

இங்கே எதிர் கருத்து எழுதியவர்களும் உண்;மையை உணர்ந்து திருந்துவார்கள் என நம்புவோம்

இங்கு சயந்தனும், ரவி எனும் வலைபதிவாளரும் உரையாடியது, சிவாஜி புறக்கணிப்பு பற்றிய உரையாடல். சயந்தன் இங்கும் உறுப்பினர். அவர் வேலை பழுவால் இங்கு இணைக்கமால் இருக்கலாம்.

ஒலிப்பதிவையும், கருத்தையும் அங்கே போய் வாசியுங்க.

http://sayanthan.blogspot.com/2007/06/blog-post_18.html

சிவாஜி திரைப்படத்தின் காட்சிகளைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யுங்கள்

Edited by Minor Kunju

"தமிழ் நாட்டுக்கு தண்ணிக்குதான் பஞ்சம் பாலுக்கு பஞ்சமில்லை. இழிச்சவாய்கள் இருக்கும் வரை நான் தான் சுப்பர் ஸ்டார்" சிவாஜி படத்தின் ரஜனியின் பஞ் டயலக்

rajini-fans_f1.jpg

rajini_fan_poja.jpg

சிவாஜி : இதெல்லாம் ரொம்ப ஓவர் !!

சிவாஜி திரைப்படத்தை , பார்க்கலாம், வியக்கலாம், ரசிக்கலாம். தப்பில்லை ! ஆனால் இதெல்லாம் ரொம்ப ஓவருங்க !

சிவாஜி படம் நன்றாக ஓட வேண்டுமென்று பெண்கள் ஒன்று திரண்டிருப்பதைப் பாருங்கள் ! இத்தனை பெண்களை ஒற்றுமையாய் வேறெங்கேனும் சந்திக்க முடியுமா ? சந்தேகமே !

r1.jpg

கோயிலுக்குள் படப்பெட்டியை யானையில் வைத்துக் கொண்டு போயி வழிபாடாம் !

படப்பெட்டி போலாமாம் ! மனுஷன் போகக் கூடாதாம் !!

r3.jpg

மேலே போஸ்டரில் இளைய மகாத்மா !

கீழே பகிரங்கப் ப(லி)டுகொலை !

நல்ல பொருத்தம்

-----

மக்களுக்கு அறிவு வரணும்னு சிவாஜி நினைக்கிறார்.

உண்மை தான்.. !!! இவரையும் அந்த காலேஜ்ல சேத்துடுங்க !

r4.jpg

வீட்ல அப்பன் சாப்பாட்டுக்கு சேத்து வெச்சிருந்த பணம் சிவாஜி வாயிலே ஜிலேபி !!

r5.jpg

-----

பாலூட்ட வழியற்ற தாய்மார்கள்

தேசத்தில்

பாலூற்றத் திரண்டிருக்கும்

நம்பிக்கை விடிவெள்ளிகள்.

r6.jpg

அலசல் வலைப்பதிவு

:rolleyes: இப்படியும் ஆட்கள் இருக்கீனமா :lol:
  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்கள் எப்படியாவது தொலைஞ்சு போகட்டும்.. அப்பாவி ஆட்டுக்குட்டியைப் பலியிட இவங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. கடவுள் மறுப்பை வலியுறுத்த கறுப்புடை தரித்திருக்கும் கூட்டம்.. இப்படியான சினிமாத் துதிபாடலை எதிர்த்து குரல் கொடுக்குமா... இல்லவே இல்லை..! அதுதான் தமிழ்நாடு..! :rolleyes:

ஒரு நாள் கூத்தோடு அது முடிந்துவிட்டது. இப்போது சகஜமாகிவிட்டது தமிழ் நாட்டில், ஆன அதை விடாமல் துரத்திக்கொண்டு கருத்து எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

ரஜனியின் எஜமான் படம் வெளியான போது இரண்டு இளைஞர்கள் முதல் காட்சியாக படத்தை பார்க்கவில்லை என்ற வருத்தத்தில் ரெயில்லில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். நடிகை மோனால் இறந்த போது துக்கம் தாங்காமல் இரண்டு இளைஞர்கள் விசம் அருந்தி தற்கொலை செய்தனார். தவிர நிறையப் பேர் தற்கொலை செய்திருக்கின்றார்கள். கட்டவுட்களில் ஏறி முறிந்து விழுந்து செத்திருக்கின்றார்கள். நடிகர்களுக்கு கோயில் கட்டுவதற்கான முயற்சிகள் பல நடந்துள்ளன. இப்படியான நிகழ்வு ஏராளமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றது. பாலபிசேகம் காவடி பாற்குடம் எடுத்தல் கிட வெட்டுதல் என்று கடவுளை அவர்கள் திரை அரங்குகளில் கண்டுவிட்டனர். எங்கயோ அவர்கள் காணமறுக்கப்பட்டனர் என்பதில் இருந்து தெடங்கும் பிரச்சனையின் மூலத்தைப்பற்றி கதைக்க நிறைய தடைகள் இருக்கின்றது இங்கேயும்.

காட்டுமிராண்டிகள். இதை தூண்டும் நடிகர்களை சில ஆண்டுகள் சிறையில் தூக்கிப் போட வேண்டும். ஆனால் பூனைக்கு மணி கட்டுவது யார்? நிச்சயமாக பெருச்சாளிகள் கட்டாது

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மூலத்தைப் பற்றிக் கதைக்க உங்களுக்குத் தடை நண்பரே?

வழமை போல பார்ப்பானிப்பழி போட்டு முடித்து வைப்பீர்கள். அதைத் தானே வழமையாக இங்கே செய்வார்கள். ஆனால் பலித் தடைச் சட்டத்தைச் செயலலிதா அரசு கொண்டு வந்தபோது அதைத் தடுத்தவர்கள் திமுகவும், திகவும் தான்.

அப்போது அவர்கள் சொன்ன காரணமும் பார்ப்பானத் திட்டுத் தான். பார்ப்பான சிந்தனைகளுக்கு மதிப்புக் கொடுத்து, ஆதிமக்களின் வழிபாட்டு முறையில் செயலலிதா தலையிடுகின்றார் என்று.

பலி கொடுத்து வழிபடுவது தமிழர்களின் வழிபாட்டு முறை......

ஏழைத்தமிழர்கள் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது திருவிழாக்களிலோ ஒன்றுகூடி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு அந்த இறைச்சியை சொந்த பந்தங்களோடு உட்கொள்கின்றனர்.... இதில் என்ன தவறு ... ஏன் அதை எதிர்க்க வேண்டும்???

கல்வியறிவு வளர வளர இந்த பழக்கங்கள் தானே நின்றுவிடும் ..... சட்டம் போட்டு நிறுத்த தேவையில்லை...... முன்பு பலிகொடுக்கும் பழக்கம் இருந்த பல கோயில்களில் இன்று அந்த பழக்கங்கள் ஒழிந்து விட்டன....

நீங்கள் பலியிடுவதை தடைசெய்வற்கு எதிராக குரல் கொடுத்ததாக அர்த்தம் கொள்கின்றீர்கள். அதை காட்டுமிராண்டித்தனமாக சொல்கின்றீர்கள். ஆனால் அவர்கள் இதனடிப்படையில் பசுவதைத்தடுப்புச்சட்டம் கொண்டுவர முயற்ச்சித்ததை அறிவீர்கள்.

அன்றாடம் பச்சமிளகாய் கடித்து பழங்கஞ்சி குடித்து 12 மணி நேரம் மிகக்கடுமையாக உழைக்கும்மில்லியன் கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வாரத்துக்கு ஒரு தடவை உண்ணும் புரதம் என்பதே இந்த இறைச்சியில் தான் இருக்கின்றது. அதில் கைவைப்பதானது மிகவும் மோசமான செயல். பொருளாதாரத்தில் மேன்மையடைந்த மக்கள் போல் வேற்று உணவை உண்பதற்கு அவர்கள் வருமானம் ஏணிவைத்தாலும் எட்டாது.

வினாடிக்கு ஆயிரக்கணக்கான விலங்குகள் உலகளவில் உணவுக்காக கொல்லப்படுகின்றது. நாகரீக வளர்ச்சியானது பிரதானமாக உற்பத்தியில் நேரடித்தொடர்பில்லாமல் வாழும் முறையை சுட்டிக்காட்டி நகர்கின்றது. ஒரு உயிரனத்தை கொல்வதை பலரும் விரும்பவில்லை ஆனால் கொன்று இறைச்சியாக்கியபின்பு அல்லது உணவாக்கிய பின்பு அதை வாங்கி சமைக்கவோ உண்ணவோ பிரச்சனையில்லை. என்னும் கூடுதலாக மக்டொனால்களில் உண்ணுவதை நாகரீகமாகவும் கருது கின்றனர்.

கொல்லும் முறையில் காட்டுமிராண்டித்தனம் கண்டுபிடிக்கப்படுகின்றது. அதை சனங்களுக்கு முன்னால் கொல்வதை குற்றம் என்று சொல்லப்படுகின்றது. இது வேறு விசயம். ஆனால் புதிதாக மக்டொனால்களை அனுமதித்துக்கொண்டு மத வாயிலாக கொல்லவே கூடாதென்பது என்ன நிஜாயம்? மகராஷ்டாவில் மாட்டை உரித்த தலித்துக்களை உயர் இந்துக்கள் அவர்கள் தோலை உரித்து கொன்ற சர்ச்சை இன்னும் புகைந்து கொண்டிருக்கின்றது.

வரலாற்று ஆய்வுகளை பார்த்தால். ஒரு யாகம் செய்வதுக்கு பல நூறு எருதுகள் பலிகொடுக்கப்பட்டது. இது தடுக்கப்பட வேண்டும். இப்படி தொடர்ந்தால் உழவுத்தொழில் பாதிக்கப்பட்டுவிடும் என்று குரல் கொடுத்தவர் புத்தபிரான்.

ஆரியர்களின் நகர்வானது மாட்டை ஆதார உணவாக கொண்டுதான் முற்காலத்தில் காணவாய் கால்வாய் வழியாக நகர்ந்தது தவிர ஒரு இடத்தில் நிரந்தரமாக வசித்து விவசாயம் செய்தவர்கள் இல்லை.

இவ்வாறு வரலாறு ஒரு புறமும் யதார்தத வாழ்வு ஒரு புறமும் இருக்க இந்துத்துவம் என்று கொண்டுவரும் சட்டங்களின் பாதிப்புகள் வறிய மக்களுக்கு அதிகமாக உள்ளது. கொல்லும் முறையை சொல்லிக்கொடுப்பது நாகரீகமாக இருக்கலாம் ஆனால் கொல்வதையே தடுப்பது மக்கள் வயிற்றில் அடிப்பதாகும். எனவே எதிரப்பு குரல்கள் எழுந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

வழமையாகவே பலி கொடுப்பதில் பசுக்கள் இடம்பெறுவதில்லை. ஒன்று ஆடு, அல்லது கோழிகள் தான் முன்னிலை இடம் வகிக்கின்றன. அந்த அடிப்படையில் தான் நான் சொன்ன சட்ட மூலம் என்பது கொண்டு வரப்பட்ட போது, ஆடுகள், மற்றும் கோழிகள் பலியிடுவதைத் தடுப்பதே அதன் மூலமாச் சட்டமாக அப்போது இயற்றப்பட்டதே தவிர, பசுவதை தொடர்பாக ஏதும் இருக்கவில்லை.

மேலும் வருடத்தில் ஓரிரு தடவை நடக்கின்ற பலி கொடுத்தலில் வைத்துக் கிடைக்கின்ற உணவை மட்டும் வைத்து ஒரு மனிதனுக்குப் புரதம் கிடைத்து விடாது. புரத உணவுகள் என்பன வெறுமனே இறைச்சிகளில் மட்டும் தான் இருக்கின்றன என்றில்லை.

நீங்கள் சம்பந்தமில்லாமல் ஊர்க்கதை எல்லாம் சொல்லிவிடடு, இந்துத்துவ என்று முடிப்பது பகுத்தறிவு என்று ஏமாற்ற ஆரம்பித்தில் இருந்து தொடருகின்ற பாணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் நாட்டு மக்கள் இந்தளவுக்கு முட்டாளாய் இருப்பதற்கு காரணம் அங்கு சிறந்த அரசியல் தலைமை இல்லை.

தற்போதைய முதலமைச்சர் முந்தைய முதலமைச்சர் இவர்களே முதல் நாள் படம் பார்க்கும் போது மற்றவர்கள் என்ன செய்வார்கள் :rolleyes:

  • தொடங்கியவர்

பலி கொடுப்பது தவறுதான். அதை தடை செய்யத்தான் வேண்டும்.

ஆனால் ஒரு பக்கம் ஆரிய தெய்வங்களையும் ஆரிய மயப்படுத்தப்பட்ட தெய்வங்களையும் வணங்குகின்ற கோயில்கள் எந்த ஒரு சீர்திருத்தத்தையும் ( அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆதல், தமிழில் வழிபாடு, சிதம்பரத்தில் தமிழில் தேவாரம், திருவாசகம், தமிழில் குடமுழுக்கு போன்ற பல பல விடயங்கள்) செய்ய முன்வராத அரசு தாழ்த்தப்பட்ட மக்கள் வணங்குகின்ற கோயில்களில் மட்டும் சீர்திருத்தம் செய்ய முன்வந்தது சந்தேகத்தை கொடுத்தது.

தூயவன்! நீங்கள் கூட தமிழர்களின் சைவம் பார்ப்பனிய மயப்படுத்தப்பட்டது என்றும், அது தமிழர்களின் குற்றம் என்றும் ஆதங்கப்பட்டிருந்தீர்கள்.

பலித் தடை என்ற பெயரில் மெதுமெதுவாக மிச்சமிருக்கும் தமிழர் வழிபாடுகளும் ஆரிய மயப்படுத்தப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் திராவிட இயக்கங்கள் அதற்கு எதிராக இருந்தன.

மற்றையபடி ஆரிய தெய்வங்கள் வழிபடுகின்ற கோயில்களில் நடக்கின்ற மனிதர்களுக்கு எதிரான குற்றங்களும், சிறு தெய்வ வழிபாடுகளில் நடக்கின்ற மிருகங்களுக்கு எதிரான குற்றங்களும் நிறுத்தப்பட வேண்டும்.

சரி! இது போதும்.

மீண்டும் ரஜனிகாந்தின் சிவாஜி பற்றி பேசுவோம்

பலித்தடை பற்றி தொடர்ந்து பேச வேண்டும் என்றால் தனித் தலைப்பை உருவாக்குவோம்.

சிவாஜி படத்தை விழுந்தடித்து கலைஞர், ஜெயலலிதா, வைகோ என்று பல அரசியல் தலைவர்கள் பார்த்தனர். அதைப் பற்றி தமது ஊடகங்களில் செய்தியும் வெளியிட்டனர்.

இவர்கள் தமிழ்நாட்டின் தலைவர்கள் என்று சொல்வதில் வெட்கப்பட வேண்டி இருக்கிறது.

ரஜனிகாந்த் ஒரு நடிகன் மட்டும் அல்ல என்பதற்கு இது ஒரு நல்ல சான்றாகவும் அமைகிறது.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி படம் உலகத் தமிழினத்தின் ஒரு முன்னேற்றப் பாய்ச்சல்போலத் தென்பட்டதால் நானும் அந்தப் படத்தை இரண்டு தடவை பார்த்துவிட்டேன். அதனால் உண்மையில் நானும் என்னைத் தலைவனெனச் சொல்ல வெட்கப்படுகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.