Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முக ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் போட்டியிடுவேன்- சீமான் அதிரடி அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முக ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் போட்டியிடுவேன்- சீமான் அதிரடி அறிவிப்பு

முக ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் போட்டியிடுவேன்- சீமான் அதிரடி அறிவிப்பு

 

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாள்வார் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சீமான் அளித்த பேட்டி வருமாறு:-

நஞ்சில்லா உணவு அதுவே நம் உணவு என்று போராடியவர் நம்மாள்வார். எங்களை போன்றவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

அவர் மறைந்து இருந்தாலும் எங்களுக்குள் விதைக்கப்பட்டுள்ளார். அவர் மூலமாக பலர் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார்கள்.

ரஜினிகாந்தின் முடிவை நான் வரவேற்கிறேன். இதனை எனது டுவிட்டரிலும் பதிவு செய்து இருந்தேன். அவரும், அவரது குடும்பத்தினரும் கருதுவது போல அவரது உடல் நலம் மிகவும் முதன்மையானது.

இதனை நான் தொடர்ந்து கூறி வந்துள்ளேன். கடந்த காலங்களில் ரஜினி ரசிகனாக இருந்துள்ளேன். அரசியல் பயணத்தில் கடும் சொற்களை பயன்படுத்தி உள்ளேன். அது அவரையும், குடும்பத்தினரையும், ரசிகர்களையும் காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.

இனி எப்போதும் எங்களின் புகழ்ச்சிக்குரியவர் ரஜினிகாந்த்.

ரஜினி மிகச்சிறந்த திரை ஆளுமை கொண்டவர். அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆசிய கண்டம் முழுவது அவரது புகழ் வெளிச்சம் பரவி கிடக்கிறது.

தமிழ் மக்கள் அவரை பெரிதும் கொண்டாடுகிறார்கள். நாம் தமிழர் பிள்ளைகளும் அவரை கொண்டாடுவார்கள். அரசியல் அவருக்கு அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். அவர் எடுத்த முடிவை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன்.

நாங்கள் கடுமையாக எதிர்த்ததால்தான் ரஜினி இந்த முடிவை எடுத்தாக கருத முடியாது. தலைவன் என்பவன் தண்ணீரில் தன்னையே கரைத்துக் கொள்பவனாகவும், மெழு குவர்த்தியாக தன்னையே உருக்கி வெளிச்சம் தருபவனாகவும் இருக்க வேண்டும்.

அதற்கு சினிமா புகழ் வெளிச்சம் மட்டும் போதாது.

ரஜினி அரசியலுக்கு வராததற்கு அவரது பிள்ளைகள் இருவரும், ‘‘வேண்டாம் பா’’ என்று சொன்னதே காரணம் என்று எனக்கு கூறினார்கள்.

இளம் வயதிலேயே அமைதி, நிம்மதியை தேடி சென்றவர். இப்போது அவருக்கு கூடுதலாக நிம்மதியும் அமைதியும் தேவைப்படும். அரசியலில் உள் கட்சி பிரச்சினையையே சமாளிக்க முடியாது.

என்னை மாதிரி காட்டானாலேயே சமாளிக்க முடியவில்லை. ரஜினியால் நிச்சயமாக சமாளிக்க முடியாது. அரசியலில் இறக்கி விட்டு விட்டு எல்லோரும் திட்டுவார்கள், அதனை அவரால் தாங்க முடியாது. அதனால்தான் அரசியல் வேண்டாம் என்று கூறினேன்.

நடிகர்களை எதிர்ப்பது, நாம் தமிழர் கட்சியின் கொள்கை இல்லை.

முக ஸ்டாலின்

வருகிற தேர்தலில் முக ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவேன். எந்த தொகுதியில் அவர் களம் இறங்கினாலும் அங்கு நான் போட்டியிடுவது உறுதி. இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மாற்று அ.தி.மு.க. இல்லை. நாம் தமிழர் கட்சிக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி. அ.தி.மு.க. எதிர்க்க வேண்டிய கட்சியே இல்லை.

ரஜினிகாந்த் வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பார் என்று நான் நினைக்கவில்லை.

இவ்வாறு சீமான் கூறினார்.

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/12/30160427/2212564/tamil-news-seeman-announcement-I-will-compete-in-mk.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் தொகுதியில் சீமான் அவசர ஆலோசனையில் திமுக...

 

  • கருத்துக்கள உறவுகள்

கொடுக்கின்ற கூலிக்கு வேலை செய்ய வேண்டும், இல்லாவிடடால் எஜமான் தூக்கி உள்ளே போட்டுவிடுவார்

எப்படியும் தோற்பது தானே ஸ்ராலினை எதிர்தது தோற்றால் அதை வைத்தே தம்பிகளிடம் காமடி சொல்லி விசிலடிக்க வைத்து சீவிக்கலாம் என்று சீமான் நினைத்திருக்கலாம். 

ஆனால் இதை விட தனக்கு வாய்பபுள்ள தொகுதியில் நின்று மயிரிளையிலாவது  வெற்றி பெற்றால் அடுத்த சட்டமன்றத்தில் காமடியனாக திகழலாம். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு ஊழல் செய்பவர்களையும் முள்ளிவாய்க்கால் அழிவுகள் நடக்கும் போது சோனியாவுடன் கொஞ்சி குலாவியவர்களையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இதை விட தனக்கு வாய்பபுள்ள தொகுதியில் நின்று மயிரிளையிலாவது  வெற்றி பெற்றால் அடுத்த சட்டமன்றத்தில் காமடியனாக திகழலாம். 

அவரின் பிரச்சனையே அங்கே தானே இருக்கிறது அதனால் தான் தோற்பதில் ஸ்ராலினை எதிர்த்து தோற்பதை பெருமையாக நினைக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சீமான்.. திமுகவை அடிக்கிர அளவுக்கு அதிமுக அடிக்காமல் அதிமுகவை குறைவாக அடிப்பதற்கான காரணம் புரிந்து கொள்ளமுடிகிரது.. கையில் அதிகாரம் இல்லாமல் அதிகாரத்தில் உள்ளவர்களை வளர்ந்துவரும் ஒருவர் மூர்க்கமாக எதிர்ப்பது என்பது கத்திமுனையில் நடப்பதற்கு ஒப்பானது.. பத்துவருடம் பொய்க்கேசில் உள்ளபோடுவார்களே ஆனால் ஒரு வளர்ந்து வரும் கட்சி இருந்த இடமே தெரியாமல் ஆகிவிடும்.. ஆக தேவையான இடத்தில் நெளிவுசுழிவுகளுடந்தான் ஓடனும்.. எப்படியாவது இலக்கை நோக்கி ஓடி சேர்ந்துவிடனும்.. வாழ்த்துக்கள் உங்கள் கொள்கையில் உள்ள நல்ல திட்டங்கள் நடைமுறையாக்க அதிகாரம் கிடைக்க..

  • கருத்துக்கள உறவுகள்

போகிற கட்டுப்பணம் யாரிடம் தோற்றுப் போனால் என்ன? கட்சிப் பெயர், கொடி, கொள்கைகள் என எல்லாமே வேறு வேறு இடங்களில் இருந்து பெற்றுக் கொண்டது தானே? கட்டுப்பணத்தையும் யாராவது கொடுத்துக் காப்பாற்றுவர்!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

எப்படியும் தோற்பது தானே ஸ்ராலினை எதிர்தது தோற்றால் அதை வைத்தே தம்பிகளிடம் காமடி சொல்லி விசிலடிக்க வைத்து சீவிக்கலாம் என்று சீமான் நினைத்திருக்கலாம். 

ஆனால் இதை விட தனக்கு வாய்பபுள்ள தொகுதியில் நின்று மயிரிளையிலாவது  வெற்றி பெற்றால் அடுத்த சட்டமன்றத்தில் காமடியனாக திகழலாம். 

ஆக தோற்றாலும் குறை, வென்றாலும் குறை... 🤥

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

ஆக தோற்றாலும் குறை, வென்றாலும் குறை... 🤥

சீமான் போன்ற ஒருவர் தமிழ் நாட்டில் வென்றால் அது தமிழக தமிழர்கள் ட்ரம்ப் போன்ற ஒருவரின் bombastic பேச்சில் மயங்கி விட்டார்கள் என்பதாக அர்த்தப் பட்டு விடும். தமிழக தமிழர்கள் புத்தி சாலிகள். 

பி.கு: நீங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் சீமானின் சூழல் சார்பு கொள்கைகள், விவசாய நேசக் கொள்கைகள் எல்லாம் ஒரு  நச்சுக் குளிசையை இனிப்பூட்டப் பாவிக்கும் சாயங்கள். அந்த சாயங்களை அரசு சாரா அமைப்புகளே நடைமுறைப்படுத்த முடியும் போது அரசியல் வாதிகள் அவற்றைக் கையிலெடுப்பது தங்கள் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்காக மட்டுமே! 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

1) சீமான் போன்ற ஒருவர் தமிழ் நாட்டில் வென்றால் அது தமிழக தமிழர்கள் ட்ரம்ப் போன்ற ஒருவரின் bombastic பேச்சில் மயங்கி விட்டார்கள் என்பதாக அர்த்தப் பட்டு விடும்.  தமிழக தமிழர்கள் புத்தி சாலிகள். 

2) பி.கு: நீங்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் சீமானின் சூழல் சார்பு கொள்கைகள், விவசாய நேசக் கொள்கைகள் எல்லாம் ஒரு  நச்சுக் குளிசையை இனிப்பூட்டப் பாவிக்கும் சாயங்கள். அந்த சாயங்களை அரசு சாரா அமைப்புகளே நடைமுறைப்படுத்த முடியும் போது அரசியல் வாதிகள் அவற்றைக் கையிலெடுப்பது தங்கள் வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்காக மட்டுமே! 

1) மு. க குடும்பம், ஜெயலலிதா குடும்பம்(?), MGR, பன்னீர்ச்செல்வம்,  எடப்பாடி போன்றோர் Trump போன்றவர்கள் அல்ல என்பது உங்கள் முடிவா அல்லது அவர்கள் எல்லோரும் காமராஜர் என்கிறீர்களா.. புரியவில்லை.. 🤥 

2) இவையெல்லாம் உங்கள் யூகங்கள்தானே.. ? 

உங்களுக்கு நா த க வினரின் கொள்கைகளில் பிடிக்காதது எது.. ?

Edited by Kapithan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

அவரின் பிரச்சனையே அங்கே தானே இருக்கிறது அதனால் தான் தோற்பதில் ஸ்ராலினை எதிர்த்து தோற்பதை பெருமையாக நினைக்கிறார்

தமிழ்நாட்டு இதர கட்சிகளின் பெருமை இதுதான். மக்களின் ஏழ்மையை வாக்குகளாக்கி ஊழல் ஆட்சி செய்பவர்கள்.

 

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்
 
May be an image of one or more people, beard and text that says "திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி திரு. சீமான்"
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, zuma said:
 
May be an image of one or more people, beard and text that says "திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதி திரு. சீமான்"
 
 
 

அரசியல் புரியாதவர்கள் தான், இன்னோரு தலைமையுடன் நேரடியாக போட்டி போடுவார்கள். 

சீமான் அறிவிப்பு, தமிழகத்தில் இருப்போருக்கு.... கனடாவில் இருக்கும் நீங்களும், அதனை நம்பி, கருத்து பதிந்தால், என்ன சொல்வது?

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2020 at 15:11, Kapithan said:

ஆக தோற்றாலும் குறை, வென்றாலும் குறை... 🤥

நாங்க ஊர்வலம் போவம் ஆனால்  தலைவர் படம் தூக்க மாட்டம் என்ற கொள்கை வாதிகள் 😄

On 31/12/2020 at 14:37, Justin said:

போகிற கட்டுப்பணம் யாரிடம் தோற்றுப் போனால் என்ன? கட்சிப் பெயர், கொடி, கொள்கைகள் என எல்லாமே வேறு வேறு இடங்களில் இருந்து பெற்றுக் கொண்டது தானே? கட்டுப்பணத்தையும் யாராவது கொடுத்துக் காப்பாற்றுவர்!

உங்கடை காசு இல்லைதானே ஏன் அழுவுறீங்க ?

On 30/12/2020 at 13:00, zuma said:

கொடுக்கின்ற கூலிக்கு வேலை செய்ய வேண்டும், இல்லாவிடடால் எஜமான் தூக்கி உள்ளே போட்டுவிடுவார்

உங்களின் சொந்தக்கதையை இங்கு சொல்லாதீங்க பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்

லங்காசிறி.கொம்

இன்று நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 234 தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது அதன் படி, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாகவும், நெய்வேலியில், கி.ரமேசு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பொதுக்கூட்டம், சென்னை, இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.திடலில் இன்று சற்று முன் துவங்கியது. இதில் 234 வேட்பாளர்களும் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது

 

நக்கீரன் செய்திப் பிரிவு.

இன்று திமுக தலைவர் Stalin மற்றும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி Stalin ஆகியோர் நேர்காணலில் கலந்துகொண்டனர். திமுக தலைவர் Stalin கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளித்திருந்த நிலையில், அவரிடம் நேர்காணல் நடைபெற்றது. வேறு யாரும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு அளிக்காததால், கொளத்தூர் தொகுதியில் அவர் போட்டியிடுவது உறுதியானது.

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2020 at 09:37, Justin said:

போகிற கட்டுப்பணம் யாரிடம் தோற்றுப் போனால் என்ன? கட்சிப் பெயர், கொடி, கொள்கைகள் என எல்லாமே வேறு வேறு இடங்களில் இருந்து பெற்றுக் கொண்டது தானே? கட்டுப்பணத்தையும் யாராவது கொடுத்துக் காப்பாற்றுவர்!

கொள்கை தோற்காமல் இருப்பது தான் மிக முக்கியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.