Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்கு இரண்டு பக்கள் உள்ளன .. தேவை என்றால் மறுபக்கத்தையும் காட்டத் தயார் !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

137502429_3690938184325820_387920749886751382_o.jpg?_nc_cat=104&ccb=2&_nc_sid=110474&efg=eyJpIjoidCJ9&_nc_ohc=Tt_7S2UYrhoAX_O_0QL&_nc_oc=AQkiD2OhRCcdGB_1BjjYTjP7O-hS7I5xd17XIos52HdFbwdCFn651hGYZTlRDNmemCQ&_nc_ht=scontent-lax3-1.xx&tp=14&oh=0004b7136c3a921b52eb4126330f1753&oe=601E1109

 

அரசியலை முன்னிறுத்தி தான் செயற்பட தயாரில்லை எனவும் அவ்வாறு செய்வதை எதிர்கட்சிகள் விளங்க எடுத்துக்கொள்ளாமல் செயற்படுவதாக  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ கூறினார்.

 

தனக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதாகவும் தேவை என்றால் அந்த இரண்டாவது பக்கத்தையும் காட்டத்தயார் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

அரசாங்கத்தின் கிராமத்துடனான கலந்துரையாடல் திட்டத்தின் ஐந்தாவது கட்டம், அம்பாறை உஹன பகுதியில் இன்று இடம்பெற்றது.இந்த நிகழ்வில், கலந்து கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

 

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

 

கடந்த நல்லாட்சி காலத்தில் எதிர்கட்சியினர் மீது மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கள்களை நாம் கண்கூடாக பார்த்தோம்.திட்டமிட்ட குழுக்கள் மூலம் எதிர்க்கட்சிகளை பழி தீர்க்கும் விடயங்கள் அரங்கேற்றப்பட்டன.அரசியலை முன்னிறுத்தி நாம் செயற்பட தயாரில்லை.அவ்வாறு செய்வதை எதிர்கட்சிகளும் விளங்க எடுத்துக்கொள்வதில்லை.

 

நான் நந்தசேன கோதாபய .. நந்தசேன கோத்தாபயவுக்கு  இரண்டு பக்கங்கள் உள்ளன.

 

எமக்கு தேவை ஜனாதிபதி கோத்தாபய அல்ல முன்னர் இருந்த பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய எனவும் கொஞ்சம் கடினமாக இருக்க வேண்டும் என  எமது பௌத்த தேரர்கள் என்னிடம் சில வேளைகளில் கூறுகிறார்கள்.அதனையும் என்னால் செய்ய முடியும்.அந்த முறையில் வந்தால் அதே முறையில் பதில் கொடுக்கவும் என்னால் முடியும்.

 

 

நான் பாதுகாப்பு செயளாலராக இருந்த போது பித்தளை சந்தியில் குண்டு வைத்து பிரபாகரன் வேலையை தொடங்கினார்.ஆனால் பிரபாகனை  நாம் நாயை போல நான்கு காலில் தவளவிட்டு முல்லிவாய்க்காளில் இருந்து பிணமாக கொண்டுவந்தோம்.தேவை என்றால் அந்த பக்கத்தையும் காட்ட தயார். ஆனால் மக்களுக்கு சேவையாற்றுவற்கே எனக்கு தேவை என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ கூறினார்.

 

தவறிழைத்தவர்களை தண்டிக்கவேண்டியது நீதித்துறையே என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி முன்னைய அரசாங்கம் போல நான் நீதித்துறையின் செயற்பாடுகளில் ஈடுபடவும் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவும் தயாரில்லை என குறிப்பிட்டுள்ளார்.

https://www.madawalaenews.com/2021/01/blog-post_951.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான செய்தியை போட்டு கொட்டை எழுத்தில் கோடிட்டு காட்டி எதை நிலைநாட்ட முடியும் கொழும்பான். 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை கொல்ல இவருக்கு 21 நாடுகளின் பக்க துணையும் சூட்டாயுதங்களும் தடை செய்யப்பட்ட ஆயுதங்களும் ஒரு இனப்படுகொலையும் தேவைப்பட்டிருக்குது. ஆனால்.. இவரைத் தூக்க பிரபாகரன் மட்டும் போதும். 

தமிழர்களிடமும் இரண்டு பக்கம் உள்ளது.. மிஸ்டர் இனப்படுகொலை போர்க்குற்றவாளியே. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, colomban said:

எமக்கு தேவை ஜனாதிபதி கோத்தாபய அல்ல முன்னர் இருந்த பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய எனவும் கொஞ்சம் கடினமாக இருக்க வேண்டும் என  எமது பௌத்த தேரர்கள் என்னிடம் சில வேளைகளில் கூறுகிறார்கள்.அதனையும் என்னால் செய்ய முடியும்.அந்த முறையில் வந்தால் அதே முறையில் பதில் கொடுக்கவும் என்னால் முடியும்.

அன்று போர் என்றால் போர்  என்றொரு வசனம் வந்தது..
இன்று மறு வடிவில்.....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

நான் பாதுகாப்பு செயளாலராக இருந்த போது பித்தளை சந்தியில் குண்டு வைத்து பிரபாகரன் வேலையை தொடங்கினார்.ஆனால் பிரபாகனை  நாம் நாயை போல நான்கு காலில் தவளவிட்டு முல்லிவாய்க்காளில் இருந்து பிணமாக கொண்டுவந்தோம்.தேவை என்றால் அந்த பக்கத்தையும் காட்ட தயார். ஆனால் மக்களுக்கு சேவையாற்றுவற்கே எனக்கு தேவை

இரண்டு பக்கமில்லை  பத்து ப்க்கமிருந்தாலும். பிரபாகரனை உயிருடன் கொண்டுவந்திருக்க முடியாது.அது சரி இலங்கையிலும். உலகநாடுகளிலும் மிகப்பெரியதலைவர்கள் பலர் இருக்கும்போது. அனுதினமும் பிரபாகரன் பெயரை ஏன்  உச்சரிக்கிறிர்கள்..? மறக்கமுடியவில்லையா? எங்களுக்கும் உதே நோய்தான். ஒர் நல்ல தூபியாக நிர்மானித்துவிடுங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழர்..சிங்களவர் என்ற வேறுபாடுயில்லாமால் வழிபாடலம்😜😜😜😜😜😎😎😎🤡👍

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் கார்த்திகையில் என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை என்று அதுக்காக இலங்கை முழுவதும் காத்துக் கிடந்த காலமும் எம் கண் முன்னே தான் நடந்தது. தொடருங்கள் வாழ்க்கை ஒரு வட்டம் தான் நண்பரே. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியாய் இருப்பதற்கு தான் தகுதியற்றவன், தான்  கொலை, கொள்ளைகூட்டத்  தலைவன், இந்த வேஷம் தனக்கு பொருந்தவில்லை. பழைய வாழ்க்கைக்கே திரும்பப் போகிறேன் என்கிறார் மாத்தையா.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

ஜனாதிபதியாய் இருப்பதற்கு தான் தகுதியற்றவன், தான்  கொலை, கொள்ளைகூட்டத்  தலைவன், இந்த வேஷம் தனக்கு பொருந்தவில்லை. பழைய வாழ்க்கைக்கே திரும்பப் போகிறேன் என்கிறார் மாத்தையா.

கொலை, கொள்ளை கூட்டத் தலைவர்கள் தானே தேச தலைவர்கள்? இல்லையா? தேச, தேசிய, சுதேசிய வேறுபாடுகள் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கற்பகதரு said:

கொலை, கொள்ளை கூட்டத் தலைவர்கள் தானே தேச தலைவர்கள்? இல்லையா? தேச, தேசிய, சுதேசிய வேறுபாடுகள் உண்டா?

சல்லிக் காசுக்காகவும், பதவிக்காகவும், பெண்ணுக்காகவும், சொந்த வீட்டிலேயே காட்டிக் கொடுக்கவும் கூட்டிக் கொடுக்கவும் சிலர்/பலர் தயாராக இருக்கும்போது நீங்கள் கூறுவது போல நடைபெறுவதற்குச் சாத்தியம் இல்லாமலா போகும்..

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இவரே முன்பு அதே பிரபாகனின்  புலிகளின் தாக்குதலில் சமாளிக்கமுடியாமல் ராணுவத்தை விட்டு  தப்பி ஓடி அமெரிக்காவில் 7லெவினில் இரவுகளில் கண்விழித்து வேலை செய்தவர்  அண்ணனின் செல்வாக்கில் திரும்ப  வந்தவர் .அவரின் பழைய பக்கமும் தெரியும் .

போர் வேறை அபிவிருத்தி வேறை இரண்டாம் உலக யுத்தத்தில்  பிரிடிஷ் ஐ வழி  நடத்திய வின்ஸடன் சேர்ச்சிலை  சண்டைக்குத்தான் நீ சரியான ஆள் அபிவிருத்திக்கு அல்ல தேர்தலில் தோல்வியை கொடுத்தவர்கள் பிரிடிஷ் சனம்  . அந்த  சண்டையில் ஏற்பட்ட ஆளணி இழப்பை சரி செய்ய அவசரவசரமாய் பேருக்கு சுதந்திரம் என்று கொடுத்து தள்ளியதன்  பலனை இப்படியான சைக்கோகள்  ஜனாதிபதியாகி  உள்ளனர் கொரனோவில் தோல்வியடைந்த ஜனதிபதி அவர் எதிர்பார்த்த விடயங்கள் நடைபெற வில்லை  எனவே அவரின் நடிப்பு  இல்லாத நிஜ முகத்தை இனி  அனைவரும் காண நேரிடும் .அது அபாயகரமானது வெள்ளை வான் போல் வீதிக்கு  வீதி  விபத்தை உருவாக்கும் படையணிகள்  கொலைகளுக்காக காத்திருக்க கூடும் .

சொறிலங்காவில் சிங்கள இனவாதம் உச்சத்தில் இவர் ஜானதிபதியானார்  அதுக்கான அறுவடையை சிங்களவர்கள் கொடுக்கும் காலம் நெருங்கி விட்டது அப்போ யார் நாயை விட கேவலமாக திரிகிறார்கள் என்று பார்க்கத்தான் போகிறோமே .

 இந்த செய்தி சொல்லப்பட்டது முஸ்லிம்களுக்கு கொத்தவால்  ஆனால் தமிழரை உணர்ச்சி அரசியலில் மடவளவை  கிண்டி விட்டுள்ளது. இப்படியான உணர்ச்சி அரசியல் செய்திகளை ஓடி ஓடி இணைக்கும் கொழும்பான் உங்கள் சேவை வாழ்க. 

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

 வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. பல நாடுகளின் பிச்சையிலும், உதவியிலும், காட்டிக்கொடுப்பானுகளாலும்  வென்ற போரை தன்னுடையது என்று கொண்டாடுகிறார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Sasi_varnam said:

இப்படியான செய்தியை போட்டு கொட்டை எழுத்தில் கோடிட்டு காட்டி எதை நிலைநாட்ட முடியும் கொழும்பான். 

 

உண்மையில் சசி இந்த செய்தியை பார்த்து எனக்கே ஆத்திரமாக வந்தது. மிகவும் இன‌வாதம் மிக்க ஒர் அரசாக மாறிவிட்டது.  இப்படியும் ஜனாதிபதிகள் பகிரங்கமாக கதைப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பக்கமே பார்க்க சகிக்கவில்லை. மற்ற பக்கம் நல்லாவே இருக்கும்..

Screenshot-2021-01-10-12-05-23-042-org-m

யுத்த வெற்றி, ம‍மதை, அதி உச்ச இனவாதம் ஆகிவற்றை வைத்து மட்டும் அரசியல் நடத்த, தமது பதவியைக்  காப்பாற்ற விரும்பும் இனவெறியின் உச்சம். பொதுவாக இப்படியானவர்கள் தமது சொந்த மக்களாலேயே விரட்டியடிக்கப்படுவதே வழமை.

அத்துடன் தமிழரை கோப‍ப்படுத்தி அவர்களை அறிவு பூர்வமான அரசியலை முன்னெடுக்கவிடாமல் உணர்ச்சி அரசியலை மட்டும் முன்னெடுக்க வைத்து, அதைக்காட்டியே மீண்டும்  தமது இனவாத பிரச்சாரங்களை தொடரும் தந்திரமும் இருக்கலாம்.  இதுவே முன்பும் நடந்த‍து. ஆகவே தமிழர் தரப்பு அரசியல் செய்பவர்கள் மிக அவதானமாக நிதானமாக தமது அரசியலை தொடர்வதே இன்றைய தேவை. 

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் கூற்று தொடர்பில் ஹரீன் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

Report us Steephen 4 hours ago

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நேற்றைய தினம் அம்பாறையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்னவிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜனாதிபதியின் நேற்றைய கூற்று தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலானது எனவும், தமக்கு போதுமான அளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபாய நேற்றைய தினம் அம்பாறையில் தம்மை பற்றி வெளியிட்ட கருத்தை தொலைக்காட்சியில் பார்வையிடக் கிட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் ஜனாதிபதியின் முதல் பெயரான நந்தசேன என தாம் விளித்தமை குறித்து அதிருப்தி வெளியிட்டு தமது உயிருக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார் என பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

பாரிய பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத தலைவருடன் தம்மை ஒப்பீடு செய்துள்ளதாகவும், நாடாளுமன்றில் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதனை முடக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபடவில்லை எனவும், பயங்கரவாதிகளுக்கு லஞ்சம் வழங்கி தமிழ் மக்கள் வாக்களிப்பதனை தாம் ஒரு போதும் தடுத்தது கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் வேறும் ஓர் நாட்டின் பிரஜா உரிமை பெற்றுக்கொண்டதில்லை எனவும் பிறந்தது முதல் இந்த இலங்கை மண்ணின் மைந்தன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியை பிடிக்காத வகையில் பேசினால் நாயைப் போன்று கொன்று விடுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக ஹரீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தமது கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறும் எல்லா சந்தர்ப்பங்களிலும் தாம் அது குறித்து விமர்சனம் செய்ய தயங்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியின் எச்சரிக்கையை குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது எனவும் இதனால் இந்த விடயம் குறித்து பொலிஸ் மா அதிபர் உடனடி கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியை முதல் பெயரில் விளித்தமைக்கு கோபம் கொண்டுள்ளதாகவும் இதற்கு முன்னதாக பதவி வகித்த ஜனாதிபதிகளான ஜே.ஆர்., பிரேமதாச, சந்திரிக்கா, டி.பி மற்றும் சிறிசேன ஆகியோரை அந்தந்த பெயர்களில் விளித்த போதிலும் எவரும் இவ்வாறு கோபித்தது கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்முறையில் ஈடுபடுமாறு பௌத்த தலைவர்கள் கோரியதாக ஜனாதிபதி கூறியது உண்மையா என்பது தமக்கு சந்தேகமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த காலத்தில் அவரை விமர்சனம் செய்த அரசியல்வாதிகள, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் அல்லது காணாமல் போனார்கள் என்ற கசப்பான உண்மையை தாம் நன்கு அறிவதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்த 2.8 மில்லியன் மக்களின் குரலாக தாம் நாடாளுமன்றில் குரல் கொடுத்து வருவதாகவும் இதனால் உடனடியாக போதியளவு பாதுகாப்பு தமக்கு வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் விக்ரமரட்ன இந்த நாட்டின் பொலிஸ் மா அதிபரேயன்றி அரசியல் தலைவர்களின் உதவியாளர் அல்ல என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், எனவே தமக்கு போதியளவு பாதுகாப்பினை வழங்குவது அவரது தலையாய பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போரின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் தற்போதைய பொலிஸ் மா அதிபர் பதவி வகத்த காலத்தில் நடந்ததாக இருக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ரீதியில் அரசியல் கருத்துக்களை வெளியிடும் போது அதனை வன்முறையக் கொண்டு நசுக்குவதாக அரசியல் எதிராளியொருவர் முதல் தடவையாக இவ்வாறு தமக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எனவே தமக்கு உரிய வகையில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தின் பிதிகளை சபாநாயகர், நாட்டின் வெளிநாட்டு தூதரகங்கள், ஐக்கிய நாடுகள் அமைப்பு உள்ளிட்ட தரப்புக்களுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/266081?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கற்பகதரு said:

கொலை, கொள்ளை கூட்டத் தலைவர்கள் தானே தேச தலைவர்கள்? இல்லையா? தேச, தேசிய, சுதேசிய வேறுபாடுகள் உண்டா?

வர வர விசுவாசம் கூடிக்கொண்டே போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஏராளன் said:

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்ச்சை பேச்சு: தமிழர் தலைவர்கள் கண்டனம்

10 ஜனவரி 2021, 12:02 GMT
புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர்
கோட்டாபய

பட மூலாதாரம்,GOTABAYA RAJAPAKSA/FB

 
படக்குறிப்பு,

சர்ச்சைக்குரிய பேச்சைப் பேசிய நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ.

பாதுகாப்பு செயலாளராக தான் இருந்த போது, பித்தளைச் சந்தியில் தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை ஆரம்பித்ததாகவும், பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, தான் அதனை முடித்து வைத்ததாகவும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சனிக்கிழமை காலை அம்பாறை, உஹன பிரதேசத்திலுள்ள லாத்துகல கிராமத்தில் நடந்த "கிராமத்துடன் உரையாடல்" நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும்போது இதனைக் குறிப்பிட்டார் கோட்டாபய.

தான் எதற்கும் தயாரானவர் என்றும், ஆனால் மக்களுக்கு சேவை செய்வதே தனது தேவையாக உள்ளது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறினார்.

2009ம் ஆண்டு நடந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்கடல் பகுதியில் நடந்ததும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உடல் அப்பகுதியில் கிடைத்ததாக இலங்கை அரசு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலை புலிகள் அமை்பபின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தான் அதிகாரத்துக்கு வந்த பின்னர் - அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை என்று இதன்போது தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ, சட்டத்துக்கு முரணாக நடந்திருந்தால், சட்ட ரீதியாகவே அந்த விடயம் அணுகப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த ஆட்சியின்போது பரந்த அளவில் அரசியல் பழிவாங்கல்கள் நடந்தன எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

நந்தசேனவுக்கு இரண்டு பக்கங்கள்...

அண்மையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெனாண்டோ, அரசாங்கத்தை விமர்சித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் குறிப்பிடும் வகையில் 'நந்தசேன' எனக் கூறியதை நினைவுபடுத்திய ஜனாதிபதி, தாம் அதனை எதிர்பார்க்கவில்லை என்றார்.

"நந்தசேன... ஆம், நந்தசேன கோட்டாபய நல்ல பெயர். நந்தசேன கோட்டாபயவுக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. தங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையில்லை என்றும், பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவே தமக்கு வேண்டும் எனவும் சில பௌத்த பிக்குகள் என்னிடம் கூறுகின்றனர், அதனைச் செய்ய முடியும். அவ்வாறு வந்தால், அதே வகையில் செயற்பட முடியும்" என்று, இதன்போது ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தின்போது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் கோட்டாபய. அந்தப் போரில் விடுதலைப் புலிகளை அழித்ததற்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் என்று சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் கோட்டாபய. அத்துடன், அந்தப் போரின்போது கடுமையான அணுகுமுறையைக் கையாண்டதாகவும், மோசமான போர்க்குற்றங்களுக்குக் காரணமாக இருந்ததாகவும் பெரிதும் தமிழ் மக்களால் விமர்சிக்கப்படுகிறவர் அவர்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த உரை தொடர்பில், கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வெளியாகி உள்ளன.

போர்க்குற்றவாளி என்பதை நிரூபித்து விட்டார்: அனந்தி கருத்து

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் பற்றி, கோட்டாபய ராஜபக்ஷ கூறியமை தொடர்பில், தனது கடுமையான கண்டனத்தை வெளியிடுவதாக - வட மாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாளருமான அனந்தி சசிதரன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

அனந்தி

பட மூலாதாரம்,ANANTHI/FB

 
படக்குறிப்பு,

அனந்தி

"எவ்வளவு மன வக்கிரமுடையவராக இருந்திருந்தால், இவ்வாறான ஒரு செய்தியை சிங்கள மக்கள் மத்தியில் - இனவாதத்தைப் பரப்பும் நோக்கில் அவர் கூறியிருப்பார் என்று புரிகிறது".

"உண்மையில் தேசியத் தலைவர் பிரபாகரனை இவர் கொன்றிருந்தால், இந்திய அரசுக்கு ஏன் இவர் மரண சான்றிதழை வழங்கவில்லை என்கிற கேள்வியை நாங்கள் முன்வைக்கின்றோம். பிரபாகரனை இவர்கள் கொன்றிருந்தால், அவரின் டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்ள ஏன் இவர்கள் உடன்படவில்லை என்கிற கேள்வியினையும் முன்வைக்க வேண்டியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

"எனவே தேசியத் தலைவர் பிரபாகரனை 'நாய்போல இழுத்துச் சென்றேன்' எனக் கூறுகின்ற, வக்கிரம் நிறைந்த அவரின் பேச்சை, மேற்சொன்ன விடயங்களினூடாக நிரூபிக்க முடிந்தால் நிரூபிக்கட்டும்" என்று சவால் விட்ட அவர்,

"சிங்கள மக்களை வெறுமனே உசுப்பேற்றவும், தற்போது இழந்து கொண்டிருக்கும் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காகவுமே, இந்த சொற்களை அவர் பயன்படுத்தியதாக நான் கருதுகிறேன்".

"கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவிடம் பத்திரிகையாளர்கள்; 'நீங்கள் போர்க்குற்றம் புரிந்துள்ளீர்களா' எனக் கேட்டபோது, யுத்த காலத்தில் தான் ஓர் அரச அதிகாரியாக மட்டுமே இருந்ததாகத் தெரிவித்திருந்தார். ஆனால், நேற்றைய தினம் அவர் ஆற்றிய உரையின் ஊடாக, தான் ஒரு போர்க்குற்றவாளி என நிரூபித்திருக்கின்றார்" எனவும் அனந்தி சசிதரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

வர வர விசுவாசம் கூடிக்கொண்டே போகுது.

விசுகு + சுவாசம் = விசுவாசம். அது ஏன் குறைய வேண்டும்? 😍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.