Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயேசு அழைக்கிறார்- நிறுவனத்தில் வருமான வரி சோதனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இயேசு அழைக்கிறார்- நிறுவனத்தில் வருமான வரி சோதனை!

spacer.png

இயேசு அழைக்கிறார் கிறிஸ்துவ மதப் பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று (ஜனவரி 20) வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.

மறைந்த டி.ஜி.எஸ் தினகரனால் நிறுவப்பட்ட உலகளாவிய கிறிஸ்தவ பிரச்சார அமைப்பான, ‘ ஜீசஸ் கால்ஸ்’ நிறுவனத்தை இப்போது அவரது மகன் பால் தினகரன் நடத்தி வருகிறார். இதன் மூலம் கிறிஸ்துவ மதப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இ ‘இயேசு அழைக்கிறார்’நிறுவனத்தின் சக நிறுவனங்களாக காருண்யா கிறிஸ்டியன் பள்ளி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள கருண்யா பல்கலைக்கழகம் ஆகியவை இயங்கி வருகின்றன.

இந்நிலையில்... வரி ஏய்ப்பு தவிர, ‘ஜீசஸ் கால்ஸ்’ தனக்கு கிடைத்த அனைத்து வெளிநாட்டு நிதிகளையும் வெளியிடவில்லை என்றும் முதலீடுகளை மறைத்து வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

"இப்போது இயேசு அழைக்கிறார் நிறுவனத்தின் தொடர்புடைய 28 வளாகங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனைகளை முடித்தவுடன் எவ்வளவு ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் வரி ஏய்ப்பு பற்றி முழுமையான தகவல்கள் தெரியவரும்” என்று வருமான வரி அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வருகின்றன.

https://minnambalam.com/public/2021/01/20/23/jesus-calls-chirstian-organaisation-it-raid

  • கருத்துக்கள உறவுகள்

Image

நல்லாத்தானே போய் கொண்டு இருந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

இன்றிலிருந்து யேசு ஓடுகிறார் என இந்த நிறுவனம் அழைக்கப்படும்..😜

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இயேசு அழைக்கிறார் கிறிஸ்துவ மதப் பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான 28 இடங்களில் இன்று (ஜனவரி 20) வருமானவரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.

இயேசுவே வருமானவரித்துறையை அழைத்திருக்கலாம். யார் கண்டது?

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தமாக.... விமானம் எல்லாம் வைத்திருந்தால்,

வருமான வரித்துறைக்கு... மூக்கில், வேர்க்கும் தானே... 😁

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அவலங்களையும், துன்பங்களையும், வியாதிகளையும் வைத்து காசு உழைக்கும் 
இப்படிப்பட்ட அயோக்கியர்களை பொது வெளியில் வைத்து சிலுவையில் அறைய வேண்டும் 

இவர் இலங்கையிலும் பிரபலியம் ஆனவர், எனக்கு தெரிந்த பலர் இவருடைய தீவிர பக்தர்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, zuma said:

மக்களின் அவலங்களையும், துன்பங்களையும், வியாதிகளையும் வைத்து காசு உழைக்கும் 
இப்படிப்பட்ட அயோக்கியர்களை பொது வெளியில் வைத்து சிலுவையில் அறைய வேண்டும் 

இவர் இலங்கையிலும் பிரபலியம் ஆனவர், எனக்கு தெரிந்த பலர் இவருடைய தீவிர பக்தர்கள்.
 
சமயத்திற்கு அதற்குரிய இடத்தை மட்டும் வழங்கினால் ஒரு பிரச்சனையும் வராது. ஆனால் நாம்தான் அப்படி அல்லவே. குற்றவாளிக்கு விடுதலை வழங்கும்படி கேட்கும் அளவுக்கு சமய நம்பிக்கையில் ஊறின ஆட்களெல்லோ நாம்.

பிறகு யாரை நொந்து என்ன பயன்.. 🤥

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் அவலங்களையும் துன்பங்களையும் வியாதிகளையும் வைத்து காசு உழைக்கும்  அயோக்கியர்கள் இவர்கள் என்று  Zuma சொன்னது 💯  உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சொந்தமாக.... விமானம் எல்லாம் வைத்திருந்தால்,

வருமான வரித்துறைக்கு... மூக்கில், வேர்க்கும் தானே... 😁

உண்மை தான். சுவிஸ் வருமான வரித்துறைக்கு ஏன் மூக்கில் வேர்க்கவில்லை போதகர் தனது மத வியாபார தலைமையகம் இருப்பிடம் உள்ள நாட்டில் வரி எல்லாம் ஒழுங்காக கட்டியிருப்பார்.😂

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயத்தை வருமானவரித்துறை செய்திருக்கின்றது. இனியாவது பால் தினகரன் கம்பனியினர், மோகன் சி லாசரஸ், சுந்தர் செல்வராஜ் போன்றோர் ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புவார்களா? 

அடுத்தது சத்தியம் தொலைக்காட்சி நிறுவனத்தில் ரெய்டு நடத்த வருமானவரித்துறைக்கு முன்மொழிகின்றேன்😜

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நல்லதொரு விடயத்தை வருமானவரித்துறை செய்திருக்கின்றது. இனியாவது பால் தினகரன் கம்பனியினர், மோகன் சி லாசரஸ், சுந்தர் செல்வராஜ் போன்றோர் ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புவார்களா? 

அவர்கள் ரெடியாம். ஆனால் கொஞ்சம் செலவாகுமாம். எப்படி வசதி 🤣.

90களின் முடிவில், அப்போதான் திறந்த பொருளாதாரத்துக்கு இந்தியா வந்திருந்த காலம், ஐரோபிய கார்களே அரிது, அப்பவே இவர்களின் குடும்பம் லேட்டஸ்ட் மாடல் எஸ் கிளாஸ் வைத்திருந்தார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

சொந்தமாக.... விமானம் எல்லாம் வைத்திருந்தால்,

வருமான வரித்துறைக்கு... மூக்கில், வேர்க்கும் தானே... 😁

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.

வெள்ளிக்கிழமைகளில் சிறித்தம்பிக்கு வேறு வேலை இருக்குமே?

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lankan government allocates Rs. 5 million for flood relief in Northern  Province – GTN English

தனித் தீவு வேண்டும் என்றாலும் கணக்க சும்மா கிடக்குது. ஏதாவது ஒன்டை ஆட்டையைப் போடலாம்......!  😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, Kavi arunasalam said:

வெள்ளிக்கிழமைகளில் சிறித்தம்பிக்கு வேறு வேலை இருக்குமே?

அந்த வேலையை பின் பக்க கதவாலை வெட்டியாடலாம். 😎
இல்லாட்டி இருக்கவே இருக்கு கார் டிக்கி 💝

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

நானும் வரட்டே.. 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, Kapithan said:

நானும் வரட்டே.. 🙏

இல்லை..No...No..😎

பேனை, பென்சிலுக்கை கமரா வைச்சு எதையும் செய்யக்கூடிய ஆக்களை கிட்டவும் எடுக்க மாட்டம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

8 hours ago, Kavi arunasalam said:

வெள்ளிக்கிழமைகளில் சிறித்தம்பிக்கு வேறு வேலை இருக்குமே?

Bori´s und Smitti´s Bier Stube (Seite 45) - Allmystery

கப்பல், விமானம், காணி... எல்லாம் சொந்தமாக வரும் என்றால்....
சிலவற்றை.. தியாகம் செய்யத்தான் வேணும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

90களின் முடிவில், அப்போதான் திறந்த பொருளாதாரத்துக்கு இந்தியா வந்திருந்த காலம், ஐரோபிய கார்களே அரிது, அப்பவே இவர்களின் குடும்பம் லேட்டஸ்ட் மாடல் எஸ் கிளாஸ் வைத்திருந்தார்கள். 

அதுமட்டுமல்ல தினகரன் மகள் ஒரு தடவை போட்ட உடுப்பை திரும்பவும் போடமாட்டாராம் , காருண்யா என்று பெயரை வைத்துக்கொண்டு காருண்யமே இல்லாமல் கோடீஸ்வரர்கள் பிள்ளைகளுக்கு மட்டும் படிக்க  சீட்டு கொடுத்த மகான், டிஸ்கொத்தே லயிட் போட்டு குத்தாட்டம் போடும் நவீன  பாஸ்டர்களுக்கு ஐயா தான்  குருநாதர்.   அண்ணருடைய பிரைவேட் ஜெட்டை பார்த்து மூலைக்குமூலை  மூத்திரச்சந்து பாஸ்டர்கள் பிசினஸில் குதித்துவிட்டார்கள்,  

14 hours ago, வாலி said:

நல்லதொரு விடயத்தை வருமானவரித்துறை செய்திருக்கின்றது. இனியாவது பால் தினகரன் கம்பனியினர், மோகன் சி லாசரஸ், சுந்தர் செல்வராஜ் போன்றோர் ஆண்டவரிடம் மன்னிப்புக்கேட்டு மனம் திரும்புவார்களா? 

சாதுவை  யேசுவுடன் கான்பிரன்ஸ் ரூமில் கதைத்தேன் என்று உதார் விட்டபோதே காலுக்கு நடுவில் கோழியை வைப்பது போல் வைத்து குத்து குத்தென்று குத்தியிருக்க வேண்டும் ,லாசரஸ் அடுத்த கேஸ் ப்ரொபசி (prophecy)  என்ற பெயரில் அடிக்கும் கூத்தை பார்க்க செமையாக இருக்கும் ,ஒன்றை உளறிவிட்டு அதை பூசி மெழுகுவார் பாருங்கோ செருப்பால் திரத்தி திரத்தி வெளுக்க வேண்டும் போல இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

maxresdefault.jpg

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

அதுமட்டுமல்ல தினகரன் மகள் ஒரு தடவை போட்ட உடுப்பை திரும்பவும் போடமாட்டாராம் , காருண்யா என்று பெயரை வைத்துக்கொண்டு காருண்யமே இல்லாமல் கோடீஸ்வரர்கள் பிள்ளைகளுக்கு மட்டும் படிக்க  சீட்டு கொடுத்த மகான், டிஸ்கொத்தே லயிட் போட்டு குத்தாட்டம் போடும் நவீன  பாஸ்டர்களுக்கு ஐயா தான்  குருநாதர்.   அண்ணருடைய பிரைவேட் ஜெட்டை பார்த்து மூலைக்குமூலை  மூத்திரச்சந்து பாஸ்டர்கள் பிசினஸில் குதித்துவிட்டார்கள்,  

சாதுவை  யேசுவுடன் கான்பிரன்ஸ் ரூமில் கதைத்தேன் என்று உதார் விட்டபோதே காலுக்கு நடுவில் கோழியை வைப்பது போல் வைத்து குத்து குத்தென்று குத்தியிருக்க வேண்டும் ,லாசரஸ் அடுத்த கேஸ் ப்ரொபசி (prophecy)  என்ற பெயரில் அடிக்கும் கூத்தை பார்க்க செமையாக இருக்கும் ,ஒன்றை உளறிவிட்டு அதை பூசி மெழுகுவார் பாருங்கோ செருப்பால் திரத்தி திரத்தி வெளுக்க வேண்டும் போல இருக்கும்

உண்மையில் இந்த வகையில் முகமது எனக்கு பின்னால எவன் வந்தாலும் அவன் கள்ளன் என்று சொன்னது நல்லதா போயிட்டு.

ஆனா என்ன அந்த முட்டா பீசுகள் அந்தாள் விட்டுட்டு போனதை விட்டு ஒரு அடி நகர மாட்டாம் எண்டு நிக்குதுகள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! 
நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து கொம்பனி ஆரம்பிக்கிறம். 
சிவனையும் ஜேசுவையும் மிக்ஸ் பண்ணி ஒரு சமயத்தை தொடக்கிறம். 
வெள்ளிக்கு வெள்ளி சனத்தை கூட்டுறம்.
இன்ரநெட் ரீவி தொடக்கிறம்.
பிரச்சாரம் செய்யிறம். 
பொட்டி பொட்டியாய் காசு சேர்க்கிறம்
கப்பல் வாங்கிறம் 
காணி வாங்கிறம்.
நாங்கள் ஆரெண்டு காட்டுறம்.:cool:

காணி வாங்குவதெல்லாம் அந்த காலம் இப்ப தீவு பெரிய நாடுகளுக்கு பக்கத்திலை அமைந்தால் டபுள் பணம் கொட்டும் .😀

  • கருத்துக்கள உறவுகள்
On 20/1/2021 at 12:23, Kavi arunasalam said:

இயேசுவே வருமானவரித்துறையை அழைத்திருக்கலாம். யார் கண்டது?

தெய்வம் நின்று கொல்லும் என்பதன் பொருள் இதுதானோ....??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

காணி வாங்குவதெல்லாம் அந்த காலம் இப்ப தீவு பெரிய நாடுகளுக்கு பக்கத்திலை அமைந்தால் டபுள் பணம் கொட்டும் .😀

சாமிக்குத் தெரியாதா எங்கை வாங்கவேண்டும் என்று....! ஒருக்கா எங்கடை தமிழீழத்தையும் யோசிச்சுப் பாருங்கோ பெருமாளே....!!😭

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

சாமிக்குத் தெரியாதா எங்கை வாங்கவேண்டும் என்று....! ஒருக்கா எங்கடை தமிழீழத்தையும் யோசிச்சுப் பாருங்கோ பெருமாளே....!!😭

யோசிக்காமல் இருப்பமா பாண்ச்  அண்ணெய் முன்பு போல் இல்லை நிறைய கெடுபிடிகள் உதாரணத்துக்கு பெரிய நாடுகளுக்கு பக்கத்தில் இப்படியான தீவுகளை வாங்கி அங்கு அந்த பெரிய நாட்டுக்குள் சிலவகையான பொருள்களை கொண்டுபோனால் மில்லியன்கணக்கில் வருமான வரி வாங்கியதுக்கு  பணவரவு கணக்கு காட்டல் என்று பாரிய தலைவலிகளில்  தப்பிக்க இப்படியான தீவுகளில் அந்த நாட்டின் பணக்காரர்களில் பாதுகாப்பு பெட்டகம் வைத்து சிலவழிப்பது  வழமையான ஒன்று . அப்படியான வேலைகளுடன் கடத்தல் பொருள்கள் இடை தங்குமுகமாகவும் செயற்படுவது கண்டுபிடிக்கப்பட்டு நிறைய கட்டுப்பாடுகள் இப்போதெல்லாம் அதை விட்டு இந்து சமுத்திரத்தில் உள்ள தீவுகளில் ஒரு நாட்டின் அனுசரணை இன்றி நிலைப்பது கடினம் .

https://www.privateislandsonline.com/search?view[map]=0&availability=rent&region=srilanka&q=&price_range=1%3A6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.