Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழமோ தனி நாடோ எமக்கு இப்போது வேண்டாம் – சுமந்திரன் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாட்டில் நாங்கள் ஒருபோதும் தனி நாடு கோரவில்லை என்றும் தமிழீழம் அல்லது தமிழ் நாடு உருவாக வேண்டுமென்ற கோரிக்கை தற்போது கிடையாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பிரிவினைவாதம் நிலவுகின்றதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கனேடிய தமிழ் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட காணொளி தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நாட்டில் ஐக்கிய இலங்கைக்குள் நாங்கள் ஒற்றுமையாக செயற்பட கூடிய சூழல் காணப்படுகின்றது. நாங்கள் ஒருபோதும் இரண்டாம், மூன்றாம் தர பிரஜையாக வாழமாட்டோம் என்பதில் உறுதியாகவுள்ளளோம். அத்தோடு தனிநாடு கோரும் போது தான் பிரிவினை ஏற்படும்.ஆனால் தற்போது நாங்கள் தனிநாடு கோராமலே எங்களை தனித்தனியாக வைத்து எங்களை பேரினவாதம் எம்மை தாக்குகின்றது.அதற்கு சிறுபான்மை ஆன நாம் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும். அத்தோடு மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட ஆணைக்குழுவினால் ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் சர்வதேச விவகாரங்கள் இயக்குநர் ஏ.எம்.பாயிஸ்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

https://tamiltv.lk/?p=12629

  • கருத்துக்கள உறவுகள்

இதை வேறு யாரும் அரசியல் வாதி சொன்னால் எப்படி இருந்திருக்கும் 
உதாரணம் கர்ணா ( அவர் எப்போதே சொல்லிவிட்டார் , பிள்ளையான் , அமல் , டக்ளஸ், அங்கசன் )

பெரிய சீனா இருந்திருக்கும் இந்த திரி 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் அல்லது தனிநாடு கேட்கவில்லை என்று இப்படி ஒன்றிரண்டு சிங்கள எஜமான விசுவாச.. ஹிந்திய வால்பிடி ஆட்கள் சொல்லிக் கொள்ளலாம்.. இப்போது. 

ஆனால்.. தமிழ் மக்கள் சொல்லவில்லையே. 

தமிழீழம் குறித்து காத்திரமாக பேசவோ.. உச்சரிக்கவோ.. திராணி இல்லாதவர்கள் தான் இன்று தமிழினத்தை வழிநடத்தும் பேர்வழிகள் என்று சொல்லிக் கொண்டு தங்கள் சொந்தச் சோலியை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 

தேசிய தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவம் வழங்கிய அந்த உறுதியான கொள்கைப்பிடிப்புடன் கூடிய தமிழீழக் கோரிக்கையை முன்னெடுக்க அதற்காக செயற்பட இன்று யாரும் இல்லை என்பதற்காக.. தமிழ் மக்கள்.. தங்களின் பூர்வீக நிலத்தில் தங்களுக்கான நாடு அமைவதை கோரவில்லை.. அல்லது விரும்பவில்லை என்பது மோசடியான கருத்து.

அப்படி என்றால்.. சுமந்திரன்.. இதே சிங்கள அரசின் துணையோடு.. பிரித்தானியாவில்.. ஸ்கொட்லாந்தில் நடத்தப்பட்டது போல.. கனடாவில்.. கியூபெக்கில்.. நடத்தப்பட்டது போல.. தமிழ் மக்களிடம்.. தனிநாடு தேவையா.. இல்லையா என்பதையும்... தமிழ் மக்கள் ஆம் என்றால்.. அதனை அமைதியான வழியில் ஐநா மன்ற மேற்பார்வையின் கீழ் உருவாக்கவும் வழி சமைக்கும்.. சனநாயகத் தேர்தலை வைக்கட்டும்/நடாத்தட்டும்.. பார்க்கலாம்..??!

சும்மா அரசியல்வாதிகள்.. தமது அரைகுறை சிந்தனைகளை.. தமது சுயநல ஆதாயச் சிந்தனைகளை மக்களது என்று காண்பிப்பது சனநாயமே அல்ல. அது பாசிசப் போக்காகும். சுமந்திரன் தனது விருப்பங்களை மக்களது என்று திணிப்பது பாசிசமாகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாக்காளப் பெருமக்களே

முதலில் இந்த செய்தி சரியானதுதானா என்று பாருங்கப்பூ. எங்கேயாவது வெட்டி ஒட்டி இருக்கப் போறாங்கள்.. 

இப்படிக்கு 

டவுட்டுக் கந்தசாமி 🤘

இலங்கைத்தீவில் தமிழீழம் என்ற கோசமே அரசியல்வாதிகளால் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று தான். தமது கையாலாகத்தனத்தை மறைக்கவும் மக்களை உணர்சிவசப்படுத்தி தேர்தல் வெற்றிக்காக அரசியல்வாதிகள் மக்கள் மீது திணித்த சுமை தான் இந்த கோசம்.

உரிமைகளை பெறும் தந்திரோமாக பாவித்திருக்க வேண்டிய இந்த கோசத்தை மக்களை நம்பவைத்து ஒரு தலைமுறையையே அழித்தது தான் இந்த  வெற்றுக்கோசம்.  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

அதாவது 1977 இல் வாக்களித்த அனைத்து தமிழ் மக்களும் உங்கள் அளவுக்கு அறிவற்ற முட்டாள்கள்???

11 minutes ago, விசுகு said:

அதாவது 1977 இல் வாக்களித்த அனைத்து தமிழ் மக்களும் உங்கள் அளவுக்கு அறிவற்ற முட்டாள்கள்???

சரியாக சொன்னீர்கள் விசுகு. அநேகமாக அப்படித்தான் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

சரியாக சொன்னீர்கள் விசுகு. அநேகமாக அப்படித்தான் இருக்கும். 

உங்கள் அளவுக்கு  மக்களை முட்டாள்கள் என்பவரை நான் இது வரை கண்டதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

அதாவது 1977 இல் வாக்களித்த அனைத்து தமிழ் மக்களும் உங்கள் அளவுக்கு அறிவற்ற முட்டாள்கள்???

ம் ... பெரும்பாலான தமிழ் மக்கள் அறிவாளிகளாக இருந்திருந்தால், தமக்கு அறிவாற்றலும் செயற்றிறனும் உள்ள தலைவர்களை தேர்ந்தெடுத்து இன்று சிங்கம்பூர் போல முன்னேறி இருப்பார்கள். ஈழத்தமிழர் இதுவரை தேர்ந்து கொண்ட தலைவர்களோ ஏமாற்றுக்காரரும் ஏமாளிகளும் தான். தமிழீழம் எடுத்து தருகிறோம் என்று ஏமாற்றியவர்களும், மாத்தையா, கருணா, பிள்ளையான், வை.கோ. போன்றவர்களிடம் ஏமாந்தவர்களுமே எங்கள் தலைவர்கள். லீ. குவான். யூ. போன்ற ஆற்றலும் அறிவும் நேர்மையும் உள்ள தலைவர்களை எங்கள் மக்கள் ஆதரிக்கவும் இல்லை, உருவாக்கவும் இல்லை. சிங்களவரிலும் பார்க்க குரூரமான இனத்துவேசிகளான மலேசியரிடம் இருந்து லீ. குவான். யூ. சிங்கப்பூரை 1972ல் இரத்தம் சிந்தாமல் சுயாட்சிக்கு கொண்டுவந்தார். எங்கள் மக்கள் தேர்ந்து கொண்ட தலைவர்களோ, 1977ல் தமிழீழம் கேட்டு 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் மக்கள் அழிந்து போக  வழி செய்தார்கள்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கற்பகதரு said:

 மலேசியரிடம் இருந்து லீ. குவான். யூ. சிங்கப்பூரை 1972ல் இரத்தம் சிந்தாமல் சுயாட்சிக்கு கொண்டுவந்தார். 

இந்த உதாரணம் சிங்களத்தலைவர்களுக்கே பொருந்தும்??

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கற்பகதரு said:

சிங்களவரிலும் பார்க்க குரூரமான இனத்துவேசிகளான மலேசியரிடம் இருந்து லீ. குவான். யூ. சிங்கப்பூரை 1972ல் இரத்தம் சிந்தாமல் சுயாட்சிக்கு கொண்டுவந்தார். எங்கள் மக்கள் தேர்ந்து கொண்ட தலைவர்களோ, 1977ல் தமிழீழம் கேட்டு 2009ல் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் மக்கள் அழிந்து போக  வழி செய்தார்கள்.

7 minutes ago, விசுகு said:

இந்த உதாரணம் சிங்களத்தலைவர்களுக்கே பொருந்தும்??

பெரும்பாலான   எங்கள் மக்கள் அறிவாளிகள் அல்ல என்பதற்கு நீங்களே உதாரணமாகி இருக்கிறீர்களே?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கற்பகதரு said:

பெரும்பாலான   எங்கள் மக்கள் அறிவாளிகள் அல்ல என்பதற்கு நீங்களே உதாரணமாகி இருக்கிறீர்களே?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, கற்பகதரு said:

பெரும்பாலான   எங்கள் மக்கள் அறிவாளிகள் அல்ல என்பதற்கு நீங்களே உதாரணமாகி இருக்கிறீர்களே?

37 minutes ago, விசுகு said:

நன்றி

விசுகு,

எங்கள் மக்கள் மீது இரக்கம் கொண்ட நேர்மையான மிகச்சிலருள் நீங்களும் ஒருவர் என்பதை நாமறிவோம். ஆனால் நாங்கள் அனைவருமே   அரசியலை பொறுத்தளவில் அறிவிலிகள். தவறான தலைவர்களை நம்பி அவர்களை மீண்டும் மீண்டும் தேர்ந்து கொண்டவர்கள் நாங்கள். இந்த பிரச்சினை அசாதாரணமான, ஆழமான அறிவியல் ஆய்வு மூலமும் செயற்றிறன் மூலமுமே தீர்க்கப்படக்கூடியது. இந்த விதமான தீர்வை சாத்தியமாக்க கூடியவர்கள் மிகச்சிலரே. இதற்கான பாதை பெரும்பாலான மக்களுக்கு புரியக்கூடிதல்ல. ஆகவே, அந்தப்பதையை காட்டுபவர்களை மக்கள் துரோகிகள் என்று நிராகரிப்பதே இயல்பாக எதிர்பாக்கப்பட வேண்டியது. நீங்கள் இந்த மக்களுள் ஒருவராகலாம், அல்லது மேற்படி அரசியல் அறிவும் செயற்றிறனும் (உங்களிடம் அது உள்ளது என்பதை நாமறிவோம்) இருப்பின் அந்த தீர்வு காணும் மிகச் சில “துரோகிகளுள்” ஒருவராகலாம். முடிவு உங்களது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

தமிழீழமோ தனி நாடோ எமக்கு இப்போது வேண்டாம் – சுமந்திரன் அறிவிப்பு

கெலவி:- தம்பி சுமந்திரா குழல் புட்டு அவிச்சு வைச்சிருக்கிறன் திண்டுட்டு போ ராசா.
சுமந்திரா:- இப்ப வேண்டாமணை பசிக்கேக்கை வாறன் எணை...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

முதலில் இந்த செய்தி சரியானதுதானா என்று பாருங்கப்பூ. எங்கேயாவது வெட்டி ஒட்டி இருக்கப் போறாங்கள்.. 

ஓமோம்! சொன்னவர் சுமந்திரனாச்சே, ஒருவேளை பத்திரிகைக்காரர் பிழை விட்டிருப்பினம். எதுக்கும் ஒரு பத்திரிகை மாநாடு நடத்தி சரிபார்த்துக் கொள்வது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, satan said:

ஓமோம்! சொன்னவர் சுமந்திரனாச்சே, ஒருவேளை பத்திரிகைக்காரர் பிழை விட்டிருப்பினம். எதுக்கும் ஒரு பத்திரிகை மாநாடு நடத்தி சரிபார்த்துக் கொள்வது நல்லது.

அடிச்ச கள்ளு  மப்பு இறங்கமுதல்  ஒரு அறிக்கை இறங்கியபின் ஒரு அறிக்கை அதுதான் சுமத்திரன் அவரின் இந்த கருத்துக்கு மக்களிடமிருந்து  பாரிய எதிர்ப்பு வந்தால் உடனே நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று மறுப்பறிக்கை விட்டு விட்டு போயிடுவார் .

உடனே விசுவாச குன்சுகளும் ஆகா சுமத்திரனின் அறிவும் ஆளுமையும் பாருங்க என்று கதக்களித்து  கொண்டாடுங்கள் அவையளும்  அப்படித்தான் அவைகளின் சிந்தனை அவ்வ்ளவுக்குத்தான் .

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:

ஓமோம்! சொன்னவர் சுமந்திரனாச்சே, ஒருவேளை பத்திரிகைக்காரர் பிழை விட்டிருப்பினம். எதுக்கும் ஒரு பத்திரிகை மாநாடு நடத்தி சரிபார்த்துக் கொள்வது நல்லது.

அனுபவத்தில சொல்லுறன் கேழுங்கோப்பூ 😀

வடிவா விசாரிச்சுப்போட்டு எழுதுங்கோ.. பிறகு விழுந்தாலும் மீசையில மண் படயில்ல எண்டு சொல்லுற நில வரும். ஏனெண்டா சுமந்திரன் சொன்னதெண்டு சொல்லி வெட்டி ஒட்டினத்தத்தான் முன்னம் கனக்க பாத்தனாங்க. 

அதுக்காக, நான் சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கிறனெண்டு நினைக்காதயுங்கோ.

பொறுப்பில்லாத காளான் செய்தி முகவர்களால சும்மா கொதிசதுதான் மிச்சம். சுயமா யோசிக்க ஏலாமப் போச்சு. 

நிண்டு நிதானிச்சு எழுதுங்கோப்பு

நான் சொல்லிப்போட்டன். இனி உங்கட விருப்பம்..

இப்படிக்கு 

டவுட்டுக் கந்தசாமி 🤘

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நான் சுமந்திரனுக்கு வக்காலத்து வாங்கிறனெண்டு நினைக்காதயுங்கோ

இந்த வசனத்தை  பலதடவை உங்கட வாயால கேட்டாச்சு  கந்தசாமியோவ்! 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

இந்த வசனத்தை  பலதடவை உங்கட வாயால கேட்டாச்சு  கந்தசாமியோவ்! 

அன்பார்ந்த வாக்காளப் பெருமகனே,

அதென்னமோ நீங்க சொல்லுறது உண்மதான்.

உன்னாணப் பாருங்கோ, சுமந்திரன் அப்பிடிச்  சொன்னவரெண்டோ சொல்லேல்லயெண்டோ நான் ஒண்டுமே சொல்லேல்ல. 

ஆனா, அந்தச் செய்தி உண்மையா எண்டு வடிவா, கவனமாப் பாருங்கோ. ஏனெண்டா உந்தச் சேதிய நான் வேற எவடமும் பாக்கேல்ல கண்டியளோ. 

சேதி உண்மயெண்டா நீர் ஏசுறது சரிதான். ஆனா, செய்தி பொய்யெண்டா, பிறகு நாங்க தலய தொங்கவல்லோ போடோணும்

வம்புடன்

டவுட்டுக் கந்தர் 🤘

கிடைக்காத ஒன்றுக்காக எழுபது வருடத்துக்கு மேல ஒட்டிபோடடம். ஒருகூடடம் சனத்தையும் பலி கொடுத்தயிட்டுது. இதுக்குமேலயும் தனி தமிழ் ஈழம் கிடைக்குமென்று நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு இருந்தால் அவர்களை போல அஞ்சானிகள் யாருமே இருக்க முடியாது. சுமந்திரன் சொல்லுவது உண்மையாக இருந்தாலும் தனி நாட்டு எதிர்பார்ப்பில் இருக்கும் சிலரது  ஆசையில் மண் அள்ளிப்போடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Robinson cruso said:

இரண்டாம் உலகயுத்ததில்  லட்ஷக்கணக்கில் தங்கள் உறவுகளை இழந்த யூதனுக்கு மட்டும் உங்களுக்கு உள்ள சிந்தனை  போன்று வராதது ஆச்சரியம் .

போராட்டம் தொடங்கவேண்டிய நிலை வரும்போதும் அவநம்பிக்கை பேச்சுக்கள் தொடங்கிய பின் 80 களில்  வெளிநாட்டுக்கு ஓடிவந்துவிட்டு அதே பேச்சு மவுனித்த பின்னும் மாறவில்லை .துரோகியை விட அவநம்பிக்கை பேச்சுக்கள் பேசுவோர் இன்னும் ஆபத்தானவர்கள் .மனிதர்கள் மரம்போல் இருக்கனும் உலகில் எந்தப்பகுதியில்  வேர் விட்டாலும் அதன் இயல்பில் மாற்றம் பெரிதாய் இருக்காது .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Robinson cruso said:

கிடைக்காத ஒன்றுக்காக எழுபது வருடத்துக்கு மேல ஒட்டிபோடடம். ஒருகூடடம் சனத்தையும் பலி கொடுத்தயிட்டுது. இதுக்குமேலயும் தனி தமிழ் ஈழம் கிடைக்குமென்று நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு இருந்தால் அவர்களை போல அஞ்சானிகள் யாருமே இருக்க முடியாது. சுமந்திரன் சொல்லுவது உண்மையாக இருந்தாலும் தனி நாட்டு எதிர்பார்ப்பில் இருக்கும் சிலரது  ஆசையில் மண் அள்ளிப்போடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

கிடைக்காத ஒன்றுக்காகத்தான் போராடலாம். கிடைக்கும் ஒன்றுக்கு ஏன் போராடவேண்டும்.. ?

சுதந்திரத்தின் மகிமை என்ன என்பதை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த /இராணுவக் கட்டுப்பாட்டி இல்லாத பகுதியில் இருந்திருந்தால் உங்களுக்குப் புரியும்.

அந்த உணர்வு மகத்தானது.  வன்னியில் இருந்த காலப் பகுதியைத் தவிர வேறெங்கும் நான் அதனை உணரவில்லை.

அது ஒரு கனாக் காலம்

🌞

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Robinson cruso said:

கிடைக்காத ஒன்றுக்காக எழுபது வருடத்துக்கு மேல ஒட்டிபோடடம். ஒருகூடடம் சனத்தையும் பலி கொடுத்தயிட்டுது. இதுக்குமேலயும் தனி தமிழ் ஈழம் கிடைக்குமென்று நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு இருந்தால் அவர்களை போல அஞ்சானிகள் யாருமே இருக்க முடியாது. சுமந்திரன் சொல்லுவது உண்மையாக இருந்தாலும் தனி நாட்டு எதிர்பார்ப்பில் இருக்கும் சிலரது  ஆசையில் மண் அள்ளிப்போடுவதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இப்போது இலங்கையில் யார் தமிழீழம் கேட்கின்றார்கள்? சம உரிமைகளை தானே கேட்கின்றார்கள்?
எதிர்வரும் காலங்களில் அடிப்படை உரிமைகளும் கிடைக்காத ஒன்று என கூறுவீர்கள்.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு எந்த தீர்வும் வேண்டாம் - சுமத்திரன் .

  • கருத்துக்கள உறவுகள்

212 கோடி(?) பணமோசடி, இனப்படுகொலை நடக்கவில்லை என்று சுமந்திரன் சொன்னது, இதையெல்லாம் வெற்றிகரமாக நிறுவி விட்ட யாழ் அட்வொகேற்ஸ் புதுக் கேசைக் கையிலெடுத்திருக்கீனம்!

நிச்சயம் வெற்றி தான்!:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.