Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடைகளை தகர்த்து ஆரம்பம் ஆகியது பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை மாபெரும் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரணிக்குள்ளேயே சில புல்லுருவிகள் ஊடுருவி வேண்டாத வேலைகளை செய்து பேரணிமீது பழியைப்போட்டு பேரணியை தடுக்கவும், அவப்பெயர் உருவாக்கவும் முயலலாம்.

  • Replies 107
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

#P3P போராட்டம் -எமது உணர்வு எமது உரிமை – எல்லோரும் ஒன்றிணைவோம் – படங்களின் தொகுப்பு

1-5-1-696x341.jpg
 24 Views

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் 3ம் நாள்

May be an image of one or more people, people standing, car and roadஆயிரமாயிரமாய் அணிதிரண்டால் அடக்குமுறைகளின் தடைகள் உடைபடும்.

May be an image of 3 people, people standing, people sitting and outdoors

இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லைத்தீவை வந்தடைந்தது பேரணி

இராணுவம் , காவல்துறையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் முல்லை நகரில்  பேரணி

1-4-1.jpg

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் இன்று முதல் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை நடத்த பொலிஸார் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.

இதன் அடிப்படையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள பொலிகண்டிப் பகுதிக்குள் பேரணில் செல்வதில் நெருக்கடி நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

May be an image of motorcycle and outdoors

இந்நிலையில், சிறுபான்மை மக்கள், தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பேரணியேயன்றி, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பேரணியல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

https://www.ilakku.org/?p=41459

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் பேரணியாக சென்று அஞ்சலி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் பேரணி முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அடைந்துள்ளது.

அங்கு இறுதிப் போரில் உயிரிழந்த மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் பேரணியாக சென்று அஞ்சலி! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு ஆதரவாக ஏன் புலம்பெயர் தேசத்தில் ஒன்றும் நடைபெறவில்லை..??

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்ட சதிச் செயல்களை முறியடித்து முல்லை நகரை வந்தடைந்தது பேரணி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் மூன்றாம் நாள் பேரணி திருகோணமலை நகரில் இன்று (5) காலை ஆரம்பித்த நிலையில் பல்வேறு திட்மிட்ட சதி மற்றும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் சற்றுமுன் முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளது.IMG_20210205_152723-300x200.jpgIMG_20210205_152720-300x200.jpgIMG_20210205_152718-300x200.jpgIMG_20210205_152716-300x200.jpg

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் மூன்றாம் நாள் பேரணி திருகோணமலை நகரில் இன்று (5) காலை ஆரம்பித்த நிலையில் பல்வேறு திட்மிட்ட சதி மற்றும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் சற்றுமுன் முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளது.

பேரணி தற்போது முல்லைத்தீவு நகரத்தில் பயணித்து, மாவட்டச் செயலகம் வரை சென்றது. அங்கிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வரை வாகனக் பேரணி பயணிக்க ஆரம்பித்துள்ளது.

முல்லைத்தீவிற்குள் பேரலையாக பேரணி நுழைந்துள்ளதுடன் முல்லைத்தீவு மக்கள் எதிர்பாராத அளவில் திரண்டு பேரணியில் இணைந்தனர்.

அத்துடன் முல்லைத்தீவிலிருந்து இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் பேரணியும் போராட்டத்துடன் இணைந்துள்ளது.

நீராவியடியில் தரிசனம்,

முன்னதாக முல்லைத்தீவு எல்லையில் பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைக் காண்பிக்க முற்பட்டபோதும் அதனை மீறி குறித்த பேரணி முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தரிசித்ததைத் தொடர்ந்து பேரணி முல்லைத்தீவு நகரை நோக்கிச் சென்றிருந்தது.P-to-P-Rally-in-Mullaitivu-1-300x176.jpgP-to-P-Rally-in-Mullaitivu-4-720x444-1-3P-to-P-Rally-in-Mullaitivu-3-720x435-1-3P-to-P-Rally-in-Mullaitivu-2-720x437-1-3wikky-720x445-1-300x185.jpg

திட்டமிட்ட சதிச் செயல்களை முறியடித்து முல்லை நகரை வந்தடைந்தது பேரணி! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

8 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இவர்களுக்கு ஆதரவாக ஏன் புலம்பெயர் தேசத்தில் ஒன்றும் நடைபெறவில்லை..??

ஏனெனில் முன்னுக்கு நின்று இதற்காக பாடுபடுபவர்களில் முக்கியமானவர்கள் சுமந்திரன் மற்றும் சாணக்கியன். புலம்பெயர் ரமில்ஸ் இற்கு பிடிக்காதவர்கள்.

தமிழ்வின் தளம் மற்றும் சமூகவலைத்தளங்களில் செயற்படும் புலம்பெயர் பிரபலங்கள் ஆரம்பத்தில் சாணக்கியன் (சிங்களப் பெண்ணை கலியாணம் முடிக்க போகின்றாராம் (நடேசன் அண்ணையின் மனைவி சிங்களம் என்பதை மறந்து விட்டு)) மற்றும் சுமந்திரனுக்கு எதிராகவும் இப் போராட்டத்துக்கு எதிராகவும் எழுதிக் கொண்டு இருந்தார்கள், ஆனால் போராட்டம் பெரும் மக்கள் பங்களிப்புடம் இடம்பெறும் போது சுதியை மாற்றி விட்டார்கள்.

தாயக மக்கள் எழுச்சியுடன் தன்னார்வத்துடனும் செய்யும் அமைதிவழிப் போராட்டத்தினை வெறுப்பவர்கள் சிங்கள பெளத்த பேரினவாதிகள் மட்டுமல்ல சில புலம்பெயர் அமைப்புகளும் தான்.

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பிழம்பு said:

தாயக மக்கள் எழுச்சியுடன் தன்னார்வத்துடனும் செய்யும் அமைதிவழிப் போராட்டத்தினை வெறுப்பவர்கள் சிங்கள பெளத்த பேரினவாதிகள் மட்டுமல்ல சில புலம்பெயர் அமைப்புகளும் தான்.

இந்த மாதிரி நேரங்களில்தானே ஒற்றுமையாக செயல்படவேண்டும்.. அந்த மக்களிற்கு ஒரு moral support கூட கொடுப்பதற்கு கூட எண்ணவில்லை.. 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் பேதங்களை மறந்து பல அரசியல்வாதிகள் முன் நிற்பது  மகிழ்சசியளிக்கின்றது.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
அதுசரி,பல கிறிஸ்தவ பாதிரிமார் முனின்று நடத்துகின்றார்கள், எங்கட சிவசேனை  பரிவாரங்களை காணவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

பலம் கொடடா பாரதி

அன்று காந்தியும் 
விடுதலை வீரரும் 
இந்தியத் தாய்க்காய் 
சத்திய வேள்வி செய்தனர் 
இன்று ஈழத் தாய்க்காய் 
இவளது புதல்வர்கள் 
இன்னும் ஓரு வேள்வி 
ஈழத்தின் வீதியிலே
நல்லதோர் வீணை செய்தே 
அதை நலங்கெட புழுதியில் 
எறிவதுண்டோ
பலம் கொடடா பாரதி 
உன் பாடலை ஒலித்து அங்கு.

பா.உதயன் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

பேரணிக்குள்ளேயே சில புல்லுருவிகள் ஊடுருவி வேண்டாத வேலைகளை செய்து பேரணிமீது பழியைப்போட்டு பேரணியை தடுக்கவும், அவப்பெயர் உருவாக்கவும் முயலலாம்.

அந்த புல்லுருவிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தான் ...சும் பெரிசா , சாணக்கியன் பெரிசா என்று அவர்களுடைய வால்கள் சண்டை பிடிக்கின்றார்கள் 
 
6 hours ago, பிழம்பு said:

திட்டமிட்ட சதிச் செயல்களை முறியடித்து முல்லை நகரை வந்தடைந்தது பேரணி!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் மூன்றாம் நாள் பேரணி திருகோணமலை நகரில் இன்று (5) காலை ஆரம்பித்த நிலையில் பல்வேறு திட்மிட்ட சதி மற்றும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் சற்றுமுன் முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளது.IMG_20210205_152723-300x200.jpgIMG_20210205_152720-300x200.jpgIMG_20210205_152718-300x200.jpgIMG_20210205_152716-300x200.jpg

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் மூன்றாம் நாள் பேரணி திருகோணமலை நகரில் இன்று (5) காலை ஆரம்பித்த நிலையில் பல்வேறு திட்மிட்ட சதி மற்றும் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் சற்றுமுன் முல்லைத்தீவு நகரை வந்தடைந்துள்ளது.

பேரணி தற்போது முல்லைத்தீவு நகரத்தில் பயணித்து, மாவட்டச் செயலகம் வரை சென்றது. அங்கிருந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வரை வாகனக் பேரணி பயணிக்க ஆரம்பித்துள்ளது.

முல்லைத்தீவிற்குள் பேரலையாக பேரணி நுழைந்துள்ளதுடன் முல்லைத்தீவு மக்கள் எதிர்பாராத அளவில் திரண்டு பேரணியில் இணைந்தனர்.

அத்துடன் முல்லைத்தீவிலிருந்து இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் பேரணியும் போராட்டத்துடன் இணைந்துள்ளது.

நீராவியடியில் தரிசனம்,

முன்னதாக முல்லைத்தீவு எல்லையில் பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைக் காண்பிக்க முற்பட்டபோதும் அதனை மீறி குறித்த பேரணி முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் தரிசித்ததைத் தொடர்ந்து பேரணி முல்லைத்தீவு நகரை நோக்கிச் சென்றிருந்தது.P-to-P-Rally-in-Mullaitivu-1-300x176.jpgP-to-P-Rally-in-Mullaitivu-4-720x444-1-3P-to-P-Rally-in-Mullaitivu-3-720x435-1-3P-to-P-Rally-in-Mullaitivu-2-720x437-1-3wikky-720x445-1-300x185.jpg

திட்டமிட்ட சதிச் செயல்களை முறியடித்து முல்லை நகரை வந்தடைந்தது பேரணி! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

ஏனெனில் முன்னுக்கு நின்று இதற்காக பாடுபடுபவர்களில் முக்கியமானவர்கள் சுமந்திரன் மற்றும் சாணக்கியன். புலம்பெயர் ரமில்ஸ் இற்கு பிடிக்காதவர்கள்.

தமிழ்வின் தளம் மற்றும் சமூகவலைத்தளங்களில் செயற்படும் புலம்பெயர் பிரபலங்கள் ஆரம்பத்தில் சாணக்கியன் (சிங்களப் பெண்ணை கலியாணம் முடிக்க போகின்றாராம் (நடேசன் அண்ணையின் மனைவி சிங்களம் என்பதை மறந்து விட்டு)) மற்றும் சுமந்திரனுக்கு எதிராகவும் இப் போராட்டத்துக்கு எதிராகவும் எழுதிக் கொண்டு இருந்தார்கள், ஆனால் போராட்டம் பெரும் மக்கள் பங்களிப்புடம் இடம்பெறும் போது சுதியை மாற்றி விட்டார்கள்.

தாயக மக்கள் எழுச்சியுடன் தன்னார்வத்துடனும் செய்யும் அமைதிவழிப் போராட்டத்தினை வெறுப்பவர்கள் சிங்கள பெளத்த பேரினவாதிகள் மட்டுமல்ல சில புலம்பெயர் அமைப்புகளும் தான்.

இந்த தகவல்  எங்கே இருந்து கிடைத்தது?...இந்த போராட்டத்தை தயார் படுத்தியது சிவில் சேவைகள் அமைப்பும் , காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக போராடும் அமைப்பும் ...அவர்கள் தான் கட்சி சாராமல் எல்லோரையும் பங்கு பற்ற சொல்லி கேட்டு இருந்தார்கள் ...தங்களை முன்னிலைப்படுத்த சும்மும், சாணக்கியனும் அதை சாதகமாய் பயன்படுத்தி கொண்டனர் ...அவர்கள் பேரணியில் முன்னுக்கு போவதால் அவர்கள் கட்சியையையும் , அவர்களையும் முதன்மைப்படுத்துவதாக இருப்பதால் தான் மதகுருமார்களை முன்னுக்கு போகுமாறு கேட்டுக் கொண்டும் இந்த இரு அரசியல்வாதிகளும் கேட்கவில்லை ...அவர்களுடைய தொண்டர்கள் திருகோணமலையில் அடுபட்டும் கொண்டார்கள் ...ஒவ்வொரு இடத்தால் போகும் போதும் மக்கள் விடுப்பு பார்க்க கூடுவார்கள் தான் ....அது கூட்டமைப்பின் எழுச்சியா என்பது தேர்தலின் போது தான் தெரியும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இந்த போராட்டத்தை தயார் படுத்தியது சிவில் சேவைகள் அமைப்பும் , காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக போராடும் அமைப்பும் ...அவர்கள் தான் கட்சி சாராமல் எல்லோரையும் பங்கு பற்ற சொல்லி கேட்டு இருந்தார்கள் ...தங்களை முன்னிலைப்படுத்த சும்மும், சாணக்கியனும் அதை சாதகமாய் பயன்படுத்தி கொண்டனர் .

கறையான் புத்தெடுக்க கருநாகங்கள் பூந்து விளையாடுது என்று சொல்லுங்கோ. இதுகள் இதுக்கை இருந்தாற்தான், சிங்களவன் இவர்களை அழைத்து கவனிப்பான். இதுகளுக்கும் கொண்டுபோறதுக்கு ஏதாவது பொறுக்க வேண்டுமே.... சிங்களவன் ஜனநாயகப் போராட்டத்தை தடுக்கவில்லை மாறாக மதிப்பளித்து அவர்களின் பாதுகாப்போடு பேரணி வெற்றியாய் நடந்தது என்று பிரச்சாரம் செய்ய, அறிக்கை விட உதவுமெல்லோ?

4 hours ago, ரதி said:

அவர்களுடைய தொண்டர்கள் திருகோணமலையில் அடுபட்டும் கொண்டார்கள்

இவைகள்  இல்லையென்றால் அது அதிசயம். இது தமிழர் போராட்டமாகாது. கடைசியில் போராட்டத்தின் அர்த்தம் மறைக்கப்பட்டு, பிசு பிசுத்து, எதிரி எள்ளி நகையாட வைத்துவிடுவார்கள். "பல எலி கூடினால் புத்தெடுக்காது". என்றொரு பழமொழி.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

அவர்களுடைய தொண்டர்கள் திருகோணமலையில் அடுபட்டும் கொண்டார்கள்

சிங்கக்கொடியை ஏந்திக்கொண்டு போக அடிபட்டார்களோ?

4 hours ago, ரதி said:

ஒவ்வொரு இடத்தால் போகும் போதும் மக்கள் விடுப்பு பார்க்க கூடுவார்கள் தான்

மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள். சேர்ந்து போக முடியாவிட்டால் தள்ளி நின்று வேடிக்கை மட்டும் பாருங்கள்.  

4 hours ago, ரதி said:

தேர்தலின் போது தான் தெரியும்

22 minutes ago, satan said:

இந்த போராட்டத்தை தயார் படுத்தியது சிவில் சேவைகள் அமைப்பும் , காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக போராடும் அமைப்பும்

இதற்கும் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

அந்த புல்லுருவிகள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் தான் ...சும் பெரிசா , சாணக்கியன் பெரிசா என்று அவர்களுடைய வால்கள் சண்டை பிடிக்கின்றார்கள் 
 
இந்த தகவல்  எங்கே இருந்து கிடைத்தது?...இந்த போராட்டத்தை தயார் படுத்தியது சிவில் சேவைகள் அமைப்பும் , காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக போராடும் அமைப்பும் ...அவர்கள் தான் கட்சி சாராமல் எல்லோரையும் பங்கு பற்ற சொல்லி கேட்டு இருந்தார்கள் ...தங்களை முன்னிலைப்படுத்த சும்மும், சாணக்கியனும் அதை சாதகமாய் பயன்படுத்தி கொண்டனர் ...அவர்கள் பேரணியில் முன்னுக்கு போவதால் அவர்கள் கட்சியையையும் , அவர்களையும் முதன்மைப்படுத்துவதாக இருப்பதால் தான் மதகுருமார்களை முன்னுக்கு போகுமாறு கேட்டுக் கொண்டும் இந்த இரு அரசியல்வாதிகளும் கேட்கவில்லை ...அவர்களுடைய தொண்டர்கள் திருகோணமலையில் அடுபட்டும் கொண்டார்கள் ...ஒவ்வொரு இடத்தால் போகும் போதும் மக்கள் விடுப்பு பார்க்க கூடுவார்கள் தான் ....அது கூட்டமைப்பின் எழுச்சியா என்பது தேர்தலின் போது தான் தெரியும் 
 
அக்காச்சி 

ஏன் கோபப்படுகிறீங்க.. 🤥

கிழக்கில் தமிழர் ஒன்றுசேர்தல் கண்டு மெலிதாகக்  கவலை கொள்கிறீர்களோ..☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அக்காச்சி 

ஏன் கோபப்படுகிறீங்க.. 🤥

கிழக்கில் தமிழர் ஒன்றுசேர்தல் கண்டு மெலிதாகக்  கவலை கொள்கிறீர்களோ..☹️

 இவ்வளவு கஷ்ட்டப்பட்டு மகிந்த மாத்தையாட்ட சில சலுகைகள வேண்டலாம் எண்டு வேலை செய்துவரேக்குள்ள உவை உப்பிடி ஆர்ப்பாட்டம் பேரணி என்று தொடங்கினால் கடுப்பாகுமா ஆகாதா? 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

இந்த தகவல்  எங்கே இருந்து கிடைத்தது?...இந்த போராட்டத்தை தயார் படுத்தியது சிவில் சேவைகள் அமைப்பும் , காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக போராடும் அமைப்பும் ...அவர்கள் தான் கட்சி சாராமல் எல்லோரையும் பங்கு பற்ற சொல்லி கேட்டு இருந்தார்கள்

உங்கள் அமைப்பு எது? பெயரென்ன?? நானும் இதற்குள் சல்லடை போட்டுத் தேடினேன், கண்ணாலும் கண்டுபிடிக்க முடியவில்லையே  சோதரி.... 🧐😭 என் கண்களைக் கண் பரியாரியிடம் காட்டவுள்ளேன்.😩

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரை அடைந்தது…

February 6, 2021

IMG_8607-1024x683.jpg

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் பேரணியின் நடைபவனி, இன்று சனிக்கிழமை ( 06.02.21) காலை 7.45 ம‌ணி‌க்கு வவுனியா புதிய பேருந்து நிலையத்தின் முன் ஆரம்பித்து வவுனியா நகரின் ஊடக மன்னாரை சென்றடைந்துள்ளது.

9.00 ம‌ணி‌க்கு பண்டார வன்னியன் சிலை அருகே வாகன பேரணியாக புறப்பட்டு 9.15 மணிக்கு பட்டாணிச்சூர் முஸ்லிம் மகா வித்யாலயத்தில் முன்பாக சென்ற நடைபேரணி, நெளுக்குளத்தை 9.45 மணிக்கும் 10,30 மணிக்கு புவரசக்குளத்தையும், 11.30 மணிக்கு மன்னார் பரையநாளன் குளம் வீதியையும் சென்றடைந்தது.

IMG_8608-1024x683.jpg

அதனைத் தொடர்ந்து 12 மணியளவில் மடுவீதியை சென்றடைந்த பேரணி மடுவ சந்தியிலிருந்து முருங்கன் ஊடாக மன்னார் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

தமிழ் பேசும் மக்களின் இந்த பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சர்வமதத் தலைவர்கள், உள்ளடங்கலாக இளைஞர்களும் , முஸ்லீம் மக்களும் கைகோர்த்துள்ளனர்.

பலத்த பாதுகாப்புகளையும் சோதனைச் சாவடிகளையும் கடந்து பேரணி மன்னாரை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

IMG_8610-1024x683.jpg

https://globaltamilnews.net/2021/156571/

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் – சில முக்கியத் தகவல்கள்

08-696x464.jpg  
 30 Views

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு நாளை யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியாய் திரள விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

http://athavannews.com/wp-content/uploads/2021/02/Pottuvil-to-Polikandi-Rally-Awareness-In-Jaffna-5.jpg

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் கடந்த மூன்றாம் திகதி பொத்துவிலில் ஆரம்பமாகியதுடன் நான்காம் நாள் பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

http://athavannews.com/wp-content/uploads/2021/02/Pottuvil-to-Polikandi-Rally-Mannar-to-kilinochchi-1.jpgபொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழர் பேரணி மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி ஊடாக கிளிநொச்சி நோக்கிச் செல்கின்றது.

May be an image of 2 people, people standing, crowd, outdoors and text that says 'M ATM'

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்தில் மனோகணேசன் அவர்களும் இணைந்து கொண்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

உங்கள் அமைப்பு எது? பெயரென்ன?? நானும் இதற்குள் சல்லடை போட்டுத் தேடினேன், கண்ணாலும் கண்டுபிடிக்க முடியவில்லையே  சோதரி.... 🧐😭 என் கண்களைக் கண் பரியாரியிடம் காட்டவுள்ளேன்.😩

உது என்னுடைய அமைப்பு இல்லை ...பொதுவானதொரு அமைப்பு ... பாதிரிமார் ,கல்வியாளரை கொண்டு உருவாக்கப்பட்டது என்று   நான் நினைக்கிறேன்...இந்த பேரணி ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் அந்த அமைப்பால் கட்சி , பேதம் பாராமல் அனைத்து மக்களையும் ஒன்றிணைய சொல்லியும் ,போராட்டத்திற்கு ஆதரவு தர சொல்லியும் கோரப்பட்டது ...அந்த செய்தி யாழிலும் இணைக்கப்பட்டு இருந்தது 
இந்த பேரணியின் முக்கிய  நோக்கம் காணாமல் போனவர்கள் திருப்பி ஒப்படைக்க பட வேண்டும் அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரிய வேண்டும் 
சிறையில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் .
வட ,கிழக்கில் பலவந்தமாய் காணி பிடிப்பதை நிறுத்த வேண்டும்.
முஸ்லீம்களது ஜனாசா விடயத்தில் அரசு விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது தான் ...இந்த 4 வது விடயத்திற்கு ஆகத்  தான் முஸ்லீம்கள் இந்த பேரணிக்கு ஆதரவு கொடுத்தார்கள்..
இலங்கை அரசை பொறுத்த வரை இந்த பேரணியை கணக்கிலும் எடுக்காது ...சர்வதேசம் சில நேரம்  இலங்கை மீது நம்பிக்கையில்லா பிரேனனை கொண்டு வரலாம் ...அதை முறியடித்து இலங்கைக்கு தோள் கொடுக்க சீனா ,இந்தியா ,ரஸ்யா போன்றவை இருக்கின்றது .
என்னுடைய  கருத்து என்ன என்றால் , உந்த சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க இந்த அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்டம் செய்யத் தேவையில்லை ...அவர்கள் வக்கீல்கள் ....ஏன் அவர்கள் கேஸ் போட்டு வாதாடி சிறையில் உள்ளவர்களை விடுவிக்க கூடாது?..
செய்ய மாட்டார்கள் அவர்களுக்கு தேவை இவர்களது உண்மையான விடுதலை இல்லை ....வீழ்ந்து போயிருக்கும் தமது செல்வாக்கை மீளப்பெறுதல்,வாக்கு வங்கியை அதிகரித்தல் ....அது நடக்குமா ,இல்லையா என்பது  மாகாண சபை தேர்தலின் போது தெரிய வரும் 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பிழம்பு said:

ஏனெனில் முன்னுக்கு நின்று இதற்காக பாடுபடுபவர்களில் முக்கியமானவர்கள் சுமந்திரன்

புலப்பெயர்களுக்கு அல்ஸிய்மர்  மறதி நோய்  இன்னும் பிடிக்கவில்லை இதே சுமத்திரன்  கடந்த வருடங்களில் சொறிலங்காவின் சுதந்திர தினத்தை  கரிநாள் என்று சொல்லக்கூடாது என்று தமிழர்களுடன் கொள்ளுப்பட்டடவர்  ஆனால் முந்தாநாள் நடந்த சுதந்திர தினத்தில் தனது  சொறிலங்கா கொடுத்த மெய்ப்பாதுகாவலர்களையும் மழையில்  நனைத்தபடி தானும் நனைந்தவண்ணம் நிண்டவர் .ஆனாலும் லண்டனில் வாகனப்பேரணிப் ப் பி 2பி க்கு  ஆதரவாக நடைபெறுகிறது கட்டாயம் புலிக்கொடி இருக்கும் இன்று இரவு புலிக்கொடியுடன் வாகனப்பேரணி நடந்ததுக்கு  வழக்கமா அழுபவர்கள் வந்து அழத்தான்  போகினம் யாழில் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், நபர்கள் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் , ’சிங்கள அரசுக்கு எதிரான ஊர்வலத்தில் நிற்கும் சுமந்திர னுக்கு சிங்கள அரசின் மெய்பாதுகாவலர்கள் பாதுகாப்பு! 001 On’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

இவருக்கு யார் எதிரிகள்????

உங்கள் புரிதலுக்கு,

சுமந்திரனுக்கான STF பாதுகாப்பின் பின்னால் நிற்பது US. அல்லது அவருக்கும் ரெண்டு சிரிப்புப் பொலிஸ்தான் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இவருக்கு யார் எதிரிகள்????

1) இந்தியா

2) இந்தியா

3) சிறீ லங்கா

முன்னாள் போராளிகளைப் பயன்படுத்தி, புலிகளின் பெயரால் உயிர் ஆபத்தை உண்டுபண்ணக் கூடிய சூழல். 

அப்படி நடந்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

1) புலிகள் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளனர் 

2) சுமந்திரன் தமிழருக்குத் தலைமை ஏற்பதைத் தடுத்தல். (இந்தியாவால் வழிநடாத்தப்பட்ட இலங்கைத் தமிழ்க் கட்டிகள்😜 அமெரிக்காவின் வழிகாட்டலின் கீழ் செல்வதைத் தடுப்பது)

  • கருத்துக்கள உறவுகள்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி மன்னார் நகருக்கு இன்று -06 சென்றடைந்தது. இதன்போது முஸ்லிம்களிடத்தில் சாணக்கியனுக்கு அமோக ஆதரவு தெரிவிக்கப்பட்டது. செல்பி அடிக்க முண்டியடிப்பு நடந்தது. இது தமக்கு நெகிழ்ச்சியான செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இனவாத இராஜ்ஜியம் உருவாகியுள்ளது - மனோ கணேசன்

கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இனவாத இராஜ்ஜியம் உருவாகியுள்ளது மலையக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

spacer.png

இன்று (06.02.2021) மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்னால் பேரணியில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழரும் முஸ்லிமும் இந்த தேசத்தில் வாழ்வதற்கான உரிமை கொண்டவர்கள். வரலாற்றில் எங்களுக்கும் பங்கு உள்ளது என்பதற்கான குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கின்றது.  

தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு கோட்டாபய அரசாங்கம் இனவாத இராஜ்ஜியத்தை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.இது கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் நடந்துகொண்டு இருக்கின்றது .

இந்த அடக்குமுறைக்கு எதிராக முஸ்லிம்களும் தமிழர்களும் அணிதிரண்டு இருக்கின்றார்கள். என்றும் துணையாக நான் களமிறங்குமிறங்குகின்றேன். 

கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இனவாத இராஜ்ஜியம் உருவாகியுள்ளது - மனோ கணேசன் | Virakesari.lk

2 hours ago, பெருமாள் said:

புலப்பெயர்களுக்கு அல்ஸிய்மர்  மறதி நோய்  இன்னும் பிடிக்கவில்லை 

மண்டையன் குழுத்தலைவர் சுரேஸ் செய்த தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள், சித்தார்த்தனது இயக்கம் செய்த படுகொலைகள் போன்றவற்றை மறக்க செய்த அதே அல்சைமர் நோயைப் பற்றிச் சொல்கின்றிர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

மண்டையன் குழுத்தலைவர் சுரேஸ் செய்த தமிழ் மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள், சித்தார்த்தனது இயக்கம் செய்த படுகொலைகள் போன்றவற்றை மறக்க செய்த அதே அல்சைமர் நோயைப் பற்றிச் சொல்கின்றிர்களா?

சுரேசும் சித்துவும்  படுகொலைகள் செய்த கதை யாரும் மறக்க வில்லை நிகழ்காலத்தில் சுமத்திரன்  விடும் பொய்களை மட்டுமே நினைவு படுத்தினேன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.