Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 179
  • Views 14.4k
  • Created
  • Last Reply

மேடையில் தலைவர் பட நீக்கம்....

அரசியல் பரிணாம வளர்ச்சிக்காக இன்னும் பல உண்டு....

  • கருத்துக்கள உறவுகள்

234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

234 தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகம்

seeman-introduces-234-candidates  
 
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்களும் சென்னையில் இன்று ஒரேமேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திவைத்தார். 234 வேட்பாளர்களின் பெயரை அழைத்து, அவர்களின் கல்வித்தகுதியையும் குறிப்பிட்டு சீமான் அறிமுகப்படுத்தினார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சிஏ.திடலில் நடந்த நிகழ்ச்சியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு தேர்தலிலும் பெண்களுக்கு சரிசமமாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் சீமான், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். வழக்கம்போல இத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

16151302272027.jpg

2010ல் ஆரம்பித்த பயணம்

நாம் தமிழர் கட்சி 2010-ல் தொடங்கப்பட்டது. அப்போதிருந்தே மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. 2016-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டது. ஆணும், பெண்ணும் சமம் என்ற முழங்கி வரும் இக்கட்சி, 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் பெண்களையும், 20 தொகுதிகளில் ஆண்களையும் களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய சீமான், "அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது" எனக் கூறினார்.

வேட்பாளர்கள் பட்டியல்:

16151306092027.jpg

16151306692027.png

16151307122027.png

16151307622027.png

16151308252027.png

16151308762027.png

16151309392027.png

16151309882027.png

16151310322027.png

16151310922027.png

16151311342027.png

16151311722027.png

16151312122027.png

16151312682027.png

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பராபரன் said:

மேடையில் தலைவர் பட நீக்கம்....

அரசியல் பரிணாம வளர்ச்சிக்காக இன்னும் பல உண்டு....

2 hours ago, zuma said:

ஸ்டாலினை எதிர்த்து தான் போட்டி போடுவேன்என்று கைய மேல தூக்கி முறுக்கி சொல்லிட்டு திரிஞ்ச சீமானுக்கு ... இப்ப என்ன ஆச்சி?? 😂😂

முழு வீடியோவையும் பார்த்தால் விடைகிடைக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி தோல்விக்கப்பால் இத்தனை ஆயிரம் மக்களை ஒழுங்கமைத்ததற்காகவே பாராட்டணும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட கொள்கையை காப்பி அடிக்கிறாங்க கேரளா : கிண்டலடித்த சீமான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான், எடுத்துள்ள வியூகத்தைப் பார்க்க...

அ.தி.மு.க.வும், தி.மு.க.வும்.... திண்டாடப் போகுது போலை கிடக்கு. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அண்ணன் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடவில்லையே 😁 என்பது பலருக்கும் பிரச்சினையாக உள்ளது 😳 அவர் தான் அங்கு போட்டியடுவதாக சொல்லவில்லை. ஊடகங்களின் கேள்விக்கு மட்டுமே பதில் சொன்னார். ஒரு தமிழராக எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

சீமான் அண்ணன் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடவில்லையே 😁 என்பது பலருக்கும் பிரச்சினையாக உள்ளது 😳 அவர் தான் அங்கு போட்டியடுவதாக சொல்லவில்லை. ஊடகங்களின் கேள்விக்கு மட்டுமே பதில் சொன்னார். ஒரு தமிழராக எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. 

சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது.
தமிழ் தமிழ் பேசுவார் , ஆனா சம்ஸ்கிருத மந்திரம் ஓதும்போது மண்டைய நீட்டி ஆசிர்வாதம் வாங்குவார்  
பெரியார் எங்கள் வழிகாட்டி சொல்லுவார்  அப்புறம் பெரியார் வந்தேறி என்று சொல்லுவார் .
திமுக ஊழல் கட்சி என்பார், ஆனால்  ஊழல் செய்து சிறை சென்ற சசிகலாவை சந்தித்து வாழ்த்துவார்.
திருமணம் முடித்தால் ஈழ பெண்ணை தான் என்பார், பின்னர் தலைவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவரின் மகளை திருமணம் முடிப்பார்.
Btw, எந்த இந்திய குடிமகனுக்கும்  எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. நாம்தமிழர் கட்சியின் தமிழர் என்ற வரைவிலக்கணத்தை படி தமிழ் நாட்டில் உள்ள அரைவவாசி பேர் தமிழர் அல்ல.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, zuma said:

இத் திரியில் இரண்டு விடயங்கள் மட்டுமே இடம்பெறுகிறது.

1) சேறடித்தல்

2) அதனைத் தடுத்தல்

உங்கள் கருத்துக்கள் முதலாவது வகைக்குள் வருகின்றன. அது உங்களுக்கு பேரானந்தத்தைத் தருகிறது போலும்... 🤥

உங்கள் கருத்துக்கள் டக்கி அங்கிளின் முன்னாள் அமைப்பிலுள்ள பலரின் எழுத்துக்களை நினைவூட்டுகின்றன.

சேறடித்தலில் அப்படி என்னதான் பேரானந்தத்தைக் கண்டீர்களோ யான் அறியேன் பராபரமே... ☹️

33 minutes ago, Kapithan said:

இப்படி உண்மையை எழுதக்கூடாது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இத் திரியில் இரண்டு விடயங்கள் மட்டுமே இடம்பெறுகிறது.

1) சேறடித்தல்

2) அதனைத் தடுத்தல்

உங்கள் கருத்துக்கள் முதலாவது வகைக்குள் வருகின்றன. அது உங்களுக்கு பேரானந்தத்தைத் தருகிறது போலும்... 🤥

உங்கள் கருத்துக்கள் டக்கி அங்கிளின் முன்னாள் அமைப்பிலுள்ள பலரின் எழுத்துக்களை நினைவூட்டுகின்றன.

சேறடித்தலில் அப்படி என்னதான் பேரானந்தத்தைக் கண்டீர்களோ யான் அறியேன் பராபரமே... ☹️

ஐயா நீங்கள், நான் எழுதியவற்றில்  எது சேறடிப்பு என்று சுட்டிக்காட்டினால், தகுந்த விளக்கம் அளிக்கப்படும். உண்மைகளை நீங்கள் சேறடிப்பு என்று சொன்னால் அதற்க்கு யாம் பொறுப்பு அல்ல.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, zuma said:

ஐயா நீங்கள், நான் எழுதியவற்றில்  எது சேறடிப்பு என்று சுட்டிக்காட்டினால், தகுந்த விளக்கம் அளிக்கப்படும். உண்மைகளை நீங்கள் சேறடிப்பு என்று சொன்னால் அதற்க்கு யாம் பொறுப்பு அல்ல.

வாசிப்பவர்கள் ஒன்றும் சிறுவர்கள் அல்லவே... 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது.
தமிழ் தமிழ் பேசுவார் , ஆனா சம்ஸ்கிருத மந்திரம் ஓதும்போது மண்டைய நீட்டி ஆசிர்வாதம் வாங்குவார்  
பெரியார் எங்கள் வழிகாட்டி சொல்லுவார்  அப்புறம் பெரியார் வந்தேறி என்று சொல்லுவார் .
திமுக ஊழல் கட்சி என்பார், ஆனால்  ஊழல் செய்து சிறை சென்ற சசிகலாவை சந்தித்து வாழ்த்துவார்.
திருமணம் முடித்தால் ஈழ பெண்ணை தான் என்பார், பின்னர் தலைவருக்கு மரணதண்டனை விதிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியவரின் மகளை திருமணம் முடிப்பார்.
Btw, எந்த இந்திய குடிமகனுக்கும்  எந்த தொகுதியிலும் நிற்கும் உரிமை அவருக்கு உண்டு. நாம்தமிழர் கட்சியின் தமிழர் என்ற வரைவிலக்கணத்தை படி தமிழ் நாட்டில் உள்ள அரைவவாசி பேர் தமிழர் அல்ல.

1) சமஸ்கிருதம்: தமிழக அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில்தான் கோயில்கள் உள்ளன. அங்கே ஒரு ஐயர் சமஸ்கிருத்த்தில் ஓதினால், தலைதெறிக்க வெளியே ஓடுதல் முறையல்ல. 😁

2) பெரியார் வழிகாட்டி. ஏனெனில் தமிழக உரிமைகள் சிலவற்றுக்கு குரல் கொடுத்துள்ளார். ஆனால் அதே சமயம் அவர் ஒரு வந்து ஏறிய பரம்பரையில் வந்தவர்தான். நாளடைவில், நாவற்குழியில் வந்து ஏறிய சிங்களவர் கூட வந்தேறிகள் எனவே அழைக்கப்படுவார்கள். குடிவரவாளர்களுக்கும், வந்தேறிகளுக்கும் வேறுபாடு உண்டு!

3) ச சிகலா அம்மையார் சிறைத்தண்டனை முடித்து வந்துவிட்டார். ஆகையால் அவர் சாதாரணமான ஒரு மனிதரே! அவரை சென்று சந்திப்பதில் தவறில்லை. தவறென நீங்கள் வாதாடும் பட்சத்தில், அது ஒருவகை நவீன தீண்டாமை என கருத இடமுண்டு.

4) திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதைப் பேசுவதே அருவருப்பானது.

5) தமிழ்நாட்டில் பாதி பேர் தமிழர் இல்லை என்பது எந்தக் கணக்கெடுப்பில் வந்துள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா வாறது வந்து ஒருவரியில சீமான் கெட்டவன் என்று எழுதிப் போட்டு ஓடிர்ரது... ஏதோ அம்பது வருசமா சீமான் கட்சி தமிழ் நாட்ட ஆண்டு நாசமாக்கி ஓய்ஞ்சு போய் கிடக்குற மாதிரி கதை விடுறாங்க.. கேக்குறவன் கேனையன் என்டா எரும மாடு ஏரோப் பிளேன் ஓடுமாம்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சும்மா வானது வந்து ஒருவரியில சீமான் கெட்டவன் என்று ஒரு வரியில எழுதிப் போட்டு ஓடிர்ரது... ஏதோ அம்பது வருசமா சீமான் கட்சி தமிழ் நாட்ட ஆண்டு நாசமாக்கி ஓய்ஞ்சு போய் கிடக்குற மாதிரி கதை விடுறாங்க.. கேக்குறவன் கேனையன் என்டா எரும மாடு ஏரோப் பிளேன் ஓடுமாம்..

ஐம்பது வருஷத்தில தமிழ்நாடு நாசமாகியிருக்கா? வளர்ச்சி அடைஞ்சிருக்கா?

ஒவ்வொரு தசாப்தத்திலும் வந்த ஒவ்வொரு படத்தையாவது பார்த்து சொல்லுங்கையா!

கட்டுக்காசு (அதான்யா டெபாசிட்டு) எடுக்காத கட்சியைப் பற்றி கைவலிக்க டைப் பண்ணுவதே சுத்த வேஸ்டு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, கிருபன் said:

ஐம்பது வருஷத்தில தமிழ்நாடு நாசமாகியிருக்கா? வளர்ச்சி அடைஞ்சிருக்கா?

ஒவ்வொரு தசாப்தத்திலும் வந்த ஒவ்வொரு படத்தையாவது பார்த்து சொல்லுங்கையா!

கட்டுக்காசு (அதான்யா டெபாசிட்டு) எடுக்காத கட்சியைப் பற்றி கைவலிக்க டைப் பண்ணுவதே சுத்த வேஸ்டு!

வளர்ச்சி அடைஞ்சிருக்கு தலைவரே! .ஆனால் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றது  தமிழ் அழிந்து கொண்டிருக்கு......சொந்த மண்ணில் தமிழர்களுக்கு இடமில்லை தலைவா  

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் முன்னைய விட குறைவான வாக்குகளே எடுப்பர். அந்த அளவுக்கு அந்த கட்சியை சிதைச்சாச்சு.

ஆனால் அதையும் மீறி நாம் தமிழர் கட்சி முன்பை விட அதிக வாக்குகள் எடுக்குமாயின் பலரது வாய்கள் மூடப்பட்டு விடும். நாம் தமிழர் கட்சியினர் அதி வேகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்வர் 

தூரம் அதிகமில்லை

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, zuma said:

சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருக்காது.

சீமான் முன்னேற்றிக்கொண்டிருக்கின்றார். இன்னும் ஆட்சியே அமைக்கவில்லை. அதற்குள் இவ்வளவு பதட்டங்கள் ஏன் தங்களுக்கு?

அவர் தவறு செய்தால்  முதலில் தட்டிக்கேட்பவர்கள் நாங்களாகத்தானிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் முன்னைய விட குறைவான வாக்குகளே எடுப்பர்.

spacer.png

16 minutes ago, விசுகு said:

தூரம் அதிகமில்லை

spacer.png

விசுகு ஐயா, யதார்த்தமும் கனவும் ஒன்றாக கலந்த கலவை !

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சொன்னால் கேட்க மாட்டினம். இதோ அரசியல் விற்பன்னர் ரவீந்திரன் துரைசாமி சொல்லக் கேட்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, விசுகு said:

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் முன்னைய விட குறைவான வாக்குகளே எடுப்பர். அந்த அளவுக்கு அந்த கட்சியை சிதைச்சாச்சு.

ஆனால் அதையும் மீறி நாம் தமிழர் கட்சி முன்பை விட அதிக வாக்குகள் எடுக்குமாயின் பலரது வாய்கள் மூடப்பட்டு விடும். நாம் தமிழர் கட்சியினர் அதி வேகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்வர் 

தூரம் அதிகமில்லை

வணக்கம் விசுகர்! தமிழர்கள்  நம்பிக்கை துரோகத்தால் மட்டுமே வீழ்ந்ததாக வரலாறுகள் பறை சாற்றுகின்றன. வீரமின்மையால் அல்ல. எனவே தவறுகளை திருத்தி/அகற்றி எழுவர். எழுவோம்.

Bild

இந்த படத்திற்கு எழுத்துக்கள் தேவையில்லை என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

spacer.png

spacer.png

இந்த கேலிச்சித்திர விளையாட்டு என்னுடன் வேண்டாம் கிருபன். இதுவே கடைசியும் முதலுமாக இருக்கட்டும் 😡

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, விசுகு said:

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் முன்னைய விட குறைவான வாக்குகளே எடுப்பர். அந்த அளவுக்கு அந்த கட்சியை சிதைச்சாச்சு.

ஆனால் அதையும் மீறி நாம் தமிழர் கட்சி முன்பை விட அதிக வாக்குகள் எடுக்குமாயின் பலரது வாய்கள் மூடப்பட்டு விடும். நாம் தமிழர் கட்சியினர் அதி வேகமாக அடுத்த கட்டத்துக்கு நகர்வர் 

தூரம் அதிகமில்லை

விசுகு ஜ‌யா இது முற்றிலும் த‌ப்பான‌ பார்வை ?

பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் வேண்டின‌ ஓட்டை விட‌ ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு அதிக்க‌ ஓட்டு கிடைக்கும்  , பொறுத்து இருந்து பாருங்கோ 

க‌ல்யாண‌சுந்த‌ர‌மோ ராஜீவ் காந்தி க‌ட்சியை விட்டு வெளி ஏற்றிய‌ போது க‌ட்சிக்குள் சில‌ முர‌ன் பாடுக‌ள் இருந்த‌ன‌ ,

பின்னைய‌ நாட்க‌ளில் அவ‌ர்க‌ள்    நாஞ்சில் சம்பத்த‌ மிஞ்சும் அளவுக்கு அவ‌ர்க‌ளின் செய‌ல் பாடு இருந்திச்சு 

ராஜிவ்காந்தி என்ற‌ அறிவுச்செல்வ‌னிட‌ம் ஆர‌ம்ப‌த்தில் ஒரு திற‌மையும்  இல்லை ஊட‌க‌ விவாத‌த்தில் கூட‌  ப‌ல‌த‌ட‌வை சுத‌ப்பி அடிச்ச‌வ‌ர் , மேடையில்  த‌ன்னை ஏற்ற‌ வேண்டாம் த‌ன‌க்கு பேச‌ வ‌ராது என்று ப‌ல‌ புல‌ம்ப‌ல் பின்னாளில் அண்ண‌ன் சீமான் கூடுத்த‌ ஊக்க‌த்தால் கொஞ்ச‌ம் வ‌ள‌ந்து அண்ண‌ன் சீமானுக்கே பின்னால் குத்த‌ வெளிக்கிட்ட‌வ‌ர் 

இப்போது ப‌ல‌ரும் சொல்லுவ‌து இந்த‌ ம‌க்கா பிராடுக‌ளை அண்ண‌ன் சீமான் க‌ட்சியை விட்டு நீக்கின‌தில் த‌ப்பே இல்லை என்று ?

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் நோகாம‌ல் நொங்கு சாப்பிட‌ கூடிய‌வ‌ர் , இப்போது ஆதிமுக்காவில் சேர்ந்து எவ‌ள‌வோ அவ‌மான‌ங்க‌ளை ச‌ந்திக்கிறார் ?

க‌ட்சியை யாரும் சிதைக்க‌ வில்லை க‌ட்சி முன்பை போல‌ இப்ப‌வும் வீறு ந‌டை  போடுது?

தேர்த‌ல் முடிவோடு க‌ல்யான‌ சுந்த‌ர‌த்தையும் ராஜிவ் காந்தியை எந்த‌ ஊட‌க‌த்திலும் பார்க்க‌ முடியாது , 

திராவிட‌ க‌ட்சிக‌ளே இவ‌ர்க‌ளை ஓர‌ம் க‌ட்டி போடுவின‌ம் ?

பெரும் இளைஞ‌ர் ப‌டை அண்ண‌ன் சீமான் பின்னால் ,

முன்பை விட‌ க‌ட்சி வ‌ள‌ந்திட்டு இது ப‌ல‌ருக்கு வெளிப்ப‌டையாய் தெரிந்த‌ ஒன்று ?

ஆனால் திராவிட‌ம் இப்ப‌வே ப‌ல‌ மிர‌ட்ட‌ல்க‌ள் விட‌ தொட‌ங்கிட்டின‌ம் , 

திராவிட‌ ஊட‌க‌ங்க‌ளில் யாரையாவ‌து கூப்பிட்டு சீமானை ப‌ற்றி புல‌ம்பும் ப‌டியா பேட்டி எடுத்து வெளியிடுன‌ம் ?

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, இசைக்கலைஞன் said:

நாங்கள் சொன்னால் கேட்க மாட்டினம். இதோ அரசியல் விற்பன்னர் ரவீந்திரன் துரைசாமி சொல்லக் கேட்போம்.

https://youtu.be/E3eVWo_0pUk

இவ‌ர் க‌ணிப்பிட்டு சொல்லுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர் ட‌ங்கு 🙏

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.