Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்பவும் விளையாடிக்கொண்டு இருக்கிறேன் நானும்  உதைபந்தாட்டம் இந்த கொரோனாவால் தடைபட்டு இருக்கிறது ஆனால் மாலை 7 மணிக்கு பிறகு தினமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன் அதனால் தான் என்னமோ இன்னும் இளந்தாரி போலவே இருக்கிறன் 

படத்தை போடுங்க முனிவர் .

  • Replies 130
  • Views 17k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    ஒரு வளியாக இந்த வருடம் பரிசில் நடைபெற்ற மரதன் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது. 3 மாத கடும் பயிற்சியின் பின் சென்ற ஞாயிறு ஓடி முடித்துள்ளேன். கோவிட் காரணமாக இந்தத் தடவை சுமார் 30000 பேர் மட்டுமே

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • இணையவன்
    இணையவன்

    இரவுச் சாப்பாடு மனித வழக்கத்தில் இல்லாததாகச் சொல்லப்படுகிறது. விளக்கு எரிப்பதற்கான எண்ணை, மின்சாரம் வீடுகளுக்கு வந்தபின்னர்தான் இரவுச் சாப்பாடு முக்கியத்துவம் அடைந்தது. பகலில் குறிப்பிட்ட நேரம் கட்டாய

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

படத்தை போடுங்க முனிவர் 

குரக்கன் புட்டுக்கு தேங்காய் பூ தூவினாப்போல அங்கங்கை வெள்ளை முடியை பாக்க ஆசைப்படுறியள் பெருமாள்.🌚

On 19/4/2021 at 02:38, பெருமாள் said:

 44 வயது மட்டும் உதைபந்து விளையாட்டு தெரியாதவர்களை  விளையாடவைத்து பல வெற்றி கேடயங்களை இப்பவும் பெற வைத்த  பயிற்சியாளரிடம் ஓடுவதுக்கு  பயிற்சி என்றதும் விரும்பி நேரம் ஒதுக்கி பயிற்சி தந்தார் பரவாயில்லை களைப்பில் தூங்கி எழும்பி பார்க்க விடிகாலை 1.15 ஆகியிட்டுது இனி ஞாயிறுகளில் ஓட்டம்தான் .

உந்த நண்டனுக்கும் அந்த ஆசானை அறிமுகப்படுத்தி விடுங்கோ.

On 19/4/2021 at 02:38, பெருமாள் said:

 போன இடத்தில் இருந்தது சனம்  கூடவாக  இருந்தபடியால் இந்தியன் கொரனோ பயத்தில் நெருங்கவில்லை 😀

அதுதானே எண்டாலும் கால் அந்தப்பக்கம் போ போவெண்டு சொல்லியிருக்குமே ?😊

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, shanthy said:

உந்த நண்டனுக்கும் அந்த ஆசானை அறிமுகப்படுத்தி விடுங்கோ.

ஆசானுக்கு பாரபட்சம் கிடையாது ஒருமுறை பயிற்சி எடுத்தால் காணும் மறுமுறை தேடி செல்ல செய்யும்.  

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நேரம் கிடைக்குமா எல்லோருக்கும்  என்பதே பெரிய பிரச்சினையாக இருக்குமென நினைக்கிறன் 

என்னைப்போல ஆக்கள் தான் வந்த புதிசிலை இரவுபகல் பாராமல் நாயடி பேயடி அடிச்சு வேலை செய்தது.வீட்டுக்கு காசு அனுப்பவேணும்.அக்கா தங்கச்சி சகோதரங்களுக்கு உதவ வேணும்.சொந்தங்களுக்கு உதவ வேணும் எண்டு ஆயிரம் சோலிகள். இப்ப நிலமை கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டு வருது.எமக்கு அடுத்த சமுதாயம் அனுபவிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 உடலுக்கு மருந்து ம், மாத்திரைகளும் தேவைப்படாது எனக்கு மைதானம் செல்லாவிட்டால் நித்திரை வராது  போய் வந்தால் நித்திரையோ நித்திரை நிம்மதியான நித்திரை மட்டும்  இதைவிட என்ன வேண்டும் 

👍

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நேரம் கிடைக்குமா எல்லோருக்கும்  என்பதே பெரிய பிரச்சினையாக இருக்குமென நினைக்கிறன் 

நேரம் கிடைக்கும் ஆனால் விளையாட்டு பயிற்ச்சிகளுக்கு ஒதுக்க மாட்டார்கள் சொகுசு

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2021 at 00:47, பெருமாள் said:

படத்தை போடுங்க முனிவர் .

ஏன் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு 

On 21/4/2021 at 02:07, shanthy said:

குரக்கன் புட்டுக்கு தேங்காய் பூ தூவினாப்போல அங்கங்கை வெள்ளை முடியை பாக்க ஆசைப்படுறியள் பெருமாள்.

நடிகர் அஜித்குமார் சாயல் அடி க்கும் என்றால் என்ன அவர் வெள்ள நான் கருப்பு அவ்வளவுதான்  வெள்லை முடி வந்து மத்திய கிழக்கு கொடுத்த பரிசு  பெப்பர் சால்ட்

On 21/4/2021 at 03:25, குமாரசாமி said:

என்னைப்போல ஆக்கள் தான் வந்த புதிசிலை இரவுபகல் பாராமல் நாயடி பேயடி அடிச்சு வேலை செய்தது.வீட்டுக்கு காசு அனுப்பவேணும்.அக்கா தங்கச்சி சகோதரங்களுக்கு உதவ வேணும்.சொந்தங்களுக்கு உதவ வேணும் எண்டு ஆயிரம் சோலிகள். இப்ப நிலமை கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டு வருது.எமக்கு அடுத்த சமுதாயம் அனுபவிக்கின்றார்கள்.

ஆனாலும் ஊருக்கு வரும் இளவயதுக்காரர்கள் தொப்பை அப்பனை போலவே வருகிரார்கள்  அநேகமாக அலுவலக வேலை மட்டும் பார்ப்பவர்களாக இருக்கலாம் அல்ல்து படித்துக்கொண்டு  இருப்பவர்களாக கூட இருக்கலாம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு 

நடிகர் அஜித்குமார் சாயல் அடி க்கும் என்றால் என்ன அவர் வெள்ள நான் கருப்பு அவ்வளவுதான்  வெள்லை முடி வந்து மத்திய கிழக்கு கொடுத்த பரிசு  பெப்பர் சால்ட்

ஆனாலும் ஊருக்கு வரும் இளவயதுக்காரர்கள் தொப்பை அப்பனை போலவே வருகிரார்கள்  அநேகமாக அலுவலக வேலை மட்டும் பார்ப்பவர்களாக இருக்கலாம் அல்ல்து படித்துக்கொண்டு  இருப்பவர்களாக கூட இருக்கலாம் 

இல்லையென்று சொல்வதற்கில்லை. அப்படியும் இருக்கின்றார்கள் தான். ஆனாலும் எமது அநேகமான இளம் சமுதாயத்தினர் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனாலும் ஊருக்கு வரும் இளவயதுக்காரர்கள் தொப்பை அப்பனை போலவே வருகிரார்கள்  அநேகமாக அலுவலக வேலை மட்டும் பார்ப்பவர்களாக இருக்கலாம் அல்ல்து படித்துக்கொண்டு  இருப்பவர்களாக கூட இருக்கலாம் 

தம்பி தனி .....ஊரிலே என்னை நேரிலே பார்த்து பழகிய பின்பும் இப்படி நீங்கள் எழுதியது என் மனசைப் பிசைகிறது......!  😢

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, suvy said:

தம்பி தனி .....ஊரிலே என்னை நேரிலே பார்த்து பழகிய பின்பும் இப்படி நீங்கள் எழுதியது என் மனசைப் பிசைகிறது......!  😢

அவர்  கணக்கிலை  கொஞ்சம்  வீக். இதனால்  தவறுதாலாய்  உங்களை  வயோதிபர் என நினைத்துவிட்டார்.😜😜😜

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

அவர்  கணக்கிலை  கொஞ்சம்  வீக். இதனால்  தவறுதாலாய்  உங்களை  வயோதிபர் என நினைத்துவிட்டார்.😜😜😜

நீங்கள் வேற வெந்தபுண்ணிலே வேலைப் பாச்சுறீங்கள் கந்தையா......நான் தொப்பையைப்பற்றித்தான் அவருக்கு எழுதினானான்.....நீங்கள் என்னுடைய வயதையும் எல்லோருக்கும் சொல்லுறீங்கள் போலகிடக்கு.பார்த்து என்ற இமேஜ் கெட்டுடும் கந்தையா.........!  😢

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனாலும் ஊருக்கு வரும் இளவயதுக்காரர்கள் தொப்பை அப்பனை

2 hours ago, suvy said:

தம்பி தனி .....ஊரிலே என்னை நேரிலே பார்த்து பழகிய பின்பும் இப்படி நீங்கள் எழுதியது என் மனசைப் பிசைகிறது......!  😢

தனிகாட்டு ராசா தெளிவாக  எழுதியுள்ளார்.  இளவயதுக்காரர்.........என்று உங்கள் பதில் மேலே உள்ளது. அதற்க்கு நான் எழுதிய பதில் இது

1 hour ago, Kandiah57 said:

அவர்  கணக்கிலை  கொஞ்சம்  வீக். இதனால்  தவறுதாலாய்  உங்களை  வயோதிபர் என நினைத்துவிட்டார்.😜😜😜

இதற்க்கு நீஙகள் கவலைப்படுகீரிர்கள்.  பிழையெனில்  மன்னிக்கவும் 🙏🙏🙏

1 hour ago, suvy said:

நீங்கள் வேற வெந்தபுண்ணிலே வேலைப் பாச்சுறீங்கள் கந்தையா......நான் தொப்பையைப்பற்றித்தான் அவருக்கு எழுதினானான்.....நீங்கள் என்னுடைய வயதையும் எல்லோருக்கும் சொல்லுறீங்கள் போலகிடக்கு.பார்த்து என்ற இமேஜ் கெட்டுடும் கந்தையா.........!  😢

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

தனிகாட்டு ராசா தெளிவாக  எழுதியுள்ளார்.  இளவயதுக்காரர்.........என்று உங்கள் பதில் மேலே உள்ளது. அதற்க்கு நான் எழுதிய பதில் இது

இதற்க்கு நீஙகள் கவலைப்படுகீரிர்கள்.  பிழையெனில்  மன்னிக்கவும் 🙏🙏🙏

கந்தையா டோன்ட் வொரி ......இதெல்லாம் சும்மா கலாய்க்கிறதுக்காக எழுதுவது......மன்னிப்பை திரும்பப் பெற்றுக்கொள்ளவும்.எனது ஒரிஜினல் பிறந்தநாள் இங்கேயே இருக்கு பார்க்கவும்.......!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

கந்தையா டோன்ட் வொரி ......இதெல்லாம் சும்மா கலாய்க்கிறதுக்காக எழுதுவது......மன்னிப்பை திரும்பப் பெற்றுக்கொள்ளவும்.எனது ஒரிஜினல் பிறந்தநாள் இங்கேயே இருக்கு பார்க்கவும்.......!

அட இவ்வளவு  இளைஞனாகயிரிப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை.  சரி இத்தால் மன்னிப்பை திரும்பப்பெற்றுக்கொள்கிறேன்.  😍

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2021 at 13:12, suvy said:

தம்பி தனி .....ஊரிலே என்னை நேரிலே பார்த்து பழகிய பின்பும் இப்படி நீங்கள் எழுதியது என் மனசைப் பிசைகிறது......!  😢

அண்ணாச்சி நான் உங்களை சொல்லவில்லை இளவயதுக்காரர்களையே சொல்ல வந்தேன் . நாமெல்லாம் சிறிய குழந்தைகளுக்குள் அடக்கம் கண்டியளோ 

On 24/4/2021 at 17:37, Kandiah57 said:

அட இவ்வளவு  இளைஞனாகயிரிப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை.  சரி இத்தால் மன்னிப்பை திரும்பப்பெற்றுக்கொள்கிறேன்.  😍

நேரில் பார்த்த நீங்கள் என்றால் இளைஞனில் இருந்தும் வாபஸ் பெற்றுக்கொள்வீர்கள் கந்தையா ஐயா

  • 5 months later...
  • தொடங்கியவர்

ஒரு வளியாக இந்த வருடம் பரிசில் நடைபெற்ற மரதன் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது.

3 மாத கடும் பயிற்சியின் பின் சென்ற ஞாயிறு ஓடி முடித்துள்ளேன். கோவிட் காரணமாக இந்தத் தடவை சுமார் 30000 பேர் மட்டுமே போட்டியில் பங்குபற்றினர். 3 மணித்தியாலங்களும் 39 நிமிடங்களும் ஓடி 6890 ஆவது இடத்துக்கு வந்துள்ளேன். 

இதோ சில படங்கள் 🙂

classement.png

y-IMG_0904.jpg

y-PMAA6472-original.jpg

y-PMBJ1790-original.jpg

y-PMBP16713-original.jpg

y-PMCE8021-original.jpg

  • கருத்துக்கள உறவுகள்

@இணையவன் அண்ணா, 30,000 பேர் பங்குபற்றிய இடத்தில் நீங்கள் 6890வது ஆளாக வந்தது.. பாராட்டப்படவேண்டிய விடயம்.. 👏👏👏👏

4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

@இணையவன் அண்ணா, 30,000 பேர் பங்குபற்றிய இடத்தில் நீங்கள் 6890வது ஆளாக வந்தது.. பாராட்டப்படவேண்டிய விடயம்.. 👏👏👏👏

நான் மட்டும் இதில் கலந்து கொண்டிருந்தால், 29,999 இடத்தில் வந்து இருப்பேன். 

பாரட்டுகள் இணையவன். நான் நாளொன்றுக்கு 7 கிலோ மீற்றராவது நடக்கின்றேன் (காலநிலை ஒத்துழைத்தால்), ஆனால் என்னால் ஓடுவதை கற்பனை பண்ணக் கூட முடியவில்லை. அத்துடன் ஓடுவதால் கால்களுக்கு பிரச்சனை பின்னாட்களில் வந்துவிடுமோ என்ற பயமும் இருக்கின்றது (46 வயதின் பின் 'பின்னாட்கள்' என்று ஒன்று இருக்குதா என்ற கேள்வியும் உள்ளது)

  • கருத்துக்கள உறவுகள்

Rose Congratulations GIF - Rose Congratulations Red Rose - Discover & Share  GIFs

வாவ்......வாழ்த்துக்கள் இணையவன் .........!  💐  👏  

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இணையவன்! 26 மைல்கள் 3 மணி 39 நிமிடமென்றால் உங்கள் சராசரி pace 8.4 நிமிடங்கள்! - இது சிறப்பான வேகம்!

ஒரு வாரத்தில் 25 மைல்கள் ஓடுகிறேன் - ஆனால் மரதனுக்குப் பயிற்சி எடுக்க முனைந்த ஒவ்வொரு முறையும் ஏதாவது கால் பாதிப்பு வந்து விடுகிறது -இது வரை கனவாக இருக்கிறது என் மரதன். 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இணையவன் அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு இனியவன், பாராட்டுக்கள் !!!
எப்படியோ தவறி இப்பொழுதுதான் கண்ணில் பட்டது. முழுவதுமாக இனிமேல் தான் வாசிக்கவேண்டும்.
நானும் லீக் தரத்தில் சொக்கர், கிரிக்கெட், வொலி பால் என்று 3ம் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறேன்.
 தொடர்ச்சியாக ஓடுவது இன்னமும் சிக்கலை தான் இருக்கிறது. சீக்கிரமே மூச்சு இரைக்கிறது. 
ஸ்டெமினா காணாது என நினைக்கிறன்.

உங்கள் உடல் வாகில் தெரிகிறது; உங்கள் தொடர்ச்சியான பயிற்சி, கட்டுப்படுத்திய உணவு பழக்கவழக்கங்கள். அது சரி... நீங்கள் பியர், கியர் குடிப்பதில்லையா??? 

படங்களின் பின்னணியில் ட(f )பால்கர் ஸ்குயார் தெரிகிறது 👌  

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Sasi_varnam said:

சசியர், பரிஸில் மரதன், எப்படி லண்டன் Trafalgar square தெரியும்? இது பரிஸ் நகர மத்தியில் இருக்கும்  ஒரு தங்கப் பெண் சிலை!

(பியர் - ஓட்டம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு பற்றி பின்னர் எழுதுகிறேன்😉)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சசியர், பரிஸில் மரதன், எப்படி லண்டன் Trafalgar square தெரியும்? இது பரிஸ் நகர மத்தியில் இருக்கும்  ஒரு தங்கப் பெண் சிலை!

(பியர் - ஓட்டம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு பற்றி பின்னர் எழுதுகிறேன்😉)

ஓ ... அவசரமாக பார்க்கும் போது அதன் அமைப்பு, நிறம் இவற்றை வைத்து Trafalgar square  என நினைத்துவிட்டேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி. இணையவன் பாரிஸ் என்று அறிந்தும்  கொண்டேன்🙂

வாழ்த்துக்கள் இணையவன். 

  • தொடங்கியவர்

பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள். போட்டியில் ஒவ்வொரு கணங்களும் பல நாட்களுக்கு அசை போடக் கூடியவை. வீதியோரங்களில் பெயர்ப் பலகையுடன் நிற்கும் உறவுகள், ஒருபோதும் கண்டிராத போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் மக்கள், வீதியோரங்களில் பிஞ்சுக் கைகளை நீட்டி தொட்டுக் கொண்டு ஓடுங்களேன் என்று ஏக்கத்துடன் பார்க்கும் சிறுவர்கள், ஆங்காங்கு உற்சாகப்படுத்தும் இசைக் குழுவினர், நடனக் குழுவினர்... எல்லாமே ஒரு இன்ப அனுபவம்.

மறக்க முடியாத இன்னொரு அனுபவம். 3மணி 34 நிமிடங்களில் ஓடி முடித்திருக்க வேண்டியது கடைசி 7 கிமீற்றரில் இதுவரை எதுவுமே சாப்பிடாததால் பசி காரணமாக ஓட முடியாமல் போனது. கடைசியாக இருந்த தண்ணீர்ப் பந்தலில் சாப்பாடுகள் இருந்தும் அவற்றை விழுங்க முடியாமையால் சீனிக் கட்டி இரண்டை வாய்க்குள் போட்டபடி ஓட்டமும் நடையுமாகச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது பின்னால் பார்வையாளராக நின்றிருந்த பெண் ஒருவர் என்னை நோக்கி ஓடி வந்து 'ஓடுங்கள், நீங்கள் கடுமையான பயிற்சி எடுத்தது ஓடி முடிப்பதற்காக. இன்னும் கொஞ்சத் தூரமே உள்ள நிலையில் நிற்பதற்காக அல்ல, ஓடுங்கள்' என்று உரக்கக் கத்தினார். பின்னால் திரும்பிப் பார்க்கச் சக்தியற்று கையை மேலே தூக்கி நன்றி சொல்லிவிட்டு புது உற்சாகத்துடன் மெதுவாக ஓடத் தொடங்கினேன். அவர் யார் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்ய முடியவில்லை. திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையோடு அவருக்கு நன்றி சொல்லியிருக்கலாம் என்று கவலைப்படுகிறேன்.

ஓட்ட முடிவில் வரவேற்க மனைவியும் மகளும் வந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட வலிகளையும் தாண்டிய இன்ப உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

@இணையவன் அண்ணா, 30,000 பேர் பங்குபற்றிய இடத்தில் நீங்கள் 6890வது ஆளாக வந்தது.. பாராட்டப்படவேண்டிய விடயம்.. 👏👏👏👏

நன்றி பிரபா. இத்தனையாவதாக வந்தது என்பது உதிரியான மகிழ்ச்சியே தவிர இங்கு போட்டி மனப்பான்மை கிடையாது. எனக்கு முன் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். 🙂 திரியின் ஆரம்பத்தில் சொன்னதுபோல் எனக்கு நானே போட்டியாளன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.