Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எச்சரிக்கை!!! பயந்த சுபாவம் உள்ளவர்கள்,  தயவு செய்து... இதை படிக்க வேண்டாம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of nature, sky and palm trees
 
எச்சரிக்கை!!!  பயந்த சுபாவம் உள்ளவர்கள்,  தயவு செய்து... இதை படிக்க வேண்டாம்.
 
கிளிநொச்சி நகரில் உள்ள ஒரு கிராமம்...
தென்னந்தோப்புகளும்
பாக்கு தோட்டங்களும்,
மாமர தோட்டங்களும்
நிறைந்தபகுதி அது!
 
நிலத்தை ஒட்டிய பகுதியில்
வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம்
வாழ்ந்துகொண்டு இருந்தது!
நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி,
அவர்களுக்கு பத்து வயதில்
ஒரு பெண் குழந்தை!
 
ஒரு நாள் அந்த வீட்டை சேர்ந்த
பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடு களுக்கு புல் அறுப்பதற்காக
தென்னந்தோப்புக்கு செல்கிறாள்!
அவள் புல் அறுத்துக்கொண்டு
இருக்கும்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கொஞ்சம்
கொஞ்சமாக கேட்கிறது!
 
அவள் பதட்டத்துடன் எங்கிருந்து வருகிறது என்று தேட..
கொஞ்ச நேரத்தில் அந்த குழந்தையின் அழுகுரல் நின்று விடுகிறது!
திரும்பவும் மீண்டும் ஒரு முறை
அதே அழுகுரல் கேட்கிறது!
பயத்துடன் அந்த அழுகுரல் வரும் திசையை நோக்கி நடக்கிறாள்!
 
ஒரு தென்னை மரத்தில் இருந்து அந்த அழுகுரல் வருவதை கவனிக்கிறாள்!
தென்னை மரத்தில் ஏதாவது
குழந்தை இருக்கிறதா என்று மேலே பார்த்தபடி தேடுகிறாள்!
எந்த குழந்தையும் அவள் கண்ணுக்கு தெரியவில்லை!
 
ஒரு நாளைக்கு நாலைந்து முறையாவது அந்த அழுகுரல்
கேட்டுக்கொண்டே இருக்கும்!
பயந்து போய் தன்னுடைய
கணவனுக்கு சொல்கிறாள்!
அவன் முதலில் ஏதாவது
உன்னுடைய பிரம்மையாக இருக்கும்என்று பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்
இருக்கிறான்!
 
அன்று இரவு எல்லோரும் சாப்பிட்டு படுக்கும்போது,
இரவு பத்து மணிக்கு மேல் மீண்டும் ஒரு முறை அந்த குழந்தையின் அழுகுரல்
கேட்கிறது!
அவன் இப்போது தான் மனைவி சொன்னதை நம்புகிறான்!
கையில் பெரிய டார்ச் லைட்டை... எடுத்துக்கொண்டு அந்த தென்னந்தோப்புக்குள்
நுழைகிறான்!
அவனுடைய மனைவி வேண்டாம் என்று மறுக்கிறாள்!
 
ஆனாலும் அவன் தைரியமானவன் என்பதாலும்,
அதே கிராமத்தில் சிறுவயதில் இருந்து வாழ்ந்து பழக்கப்பட்ட வன் என்பதாலும்.
தைரிய மாக தோப்புக்குள் செல்கிறான்!
அவளும் கணவனுக்கு ஏதாவது
ஆகிடுமோ என்று பயந்து
பின்னாலேயே போகிறாள்!
 
அவளுக்கு கேட்ட அதே அழு குரல்அதே தென்னை மரத்தி லிருந்து கேட்கிறது!
அவன் கீழிருந்தபடி உயரமான
அந்த தென்னை மரத்தில்
டார்ச் அடித்து பார்க்கிறான்!
அந்த மரத்தில் இருந்து
ஏதோ ஒரு பறவை மட்டுமே
பறந்து செல்கிறது!
 
அருகில் வரும் வரை கேட்டுக் கொண்டிருந்த அந்தஅழுகை குரல் இப்போது கேட்க வில்லை!
போலாம் வாங்க என்று மனைவி அழைத்ததால் இருவரும் வீடு திரும்புகிறார் கள்!
அடுத்த நாள் அவளுடைய
அண்ணனுக்கு இந்த தகவலை
சொல்கிறாள்!
 
மீண்டும் அழுகுரல் வந்தால்..
எனக்கு போன் செய்யுங்கள்.
நான் ஆட்களோடு, வந்து பார்க்கிறேன் என்று சொல்கிறான்!
 
அவள் அந்த அழுகுரலுக்கு
பயந்து அந்த தோப்பின் பக்கமே போகாமல் இருக்கிறாள்!
 
அடுத்த நாள் இரவு எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது
எட்டு மணிக்கெல்லாம் அந்த அழுகை குரல் கேட்கிறது!
அவளும் அண்ணனுக்கு போன் செய்கிறாள்!
அவளுடைய அண்ணன் நாலைந்து ஆட்களை அழைத்துக்கொண்டு வருகிறான்!
 
அங்கே இருக்கும் சில மரக் கட்டை களில் துணியை
இறுக்கமாக சுற்றிக்கொண்டு
அவற்றின் மீது மண்ணெண் ணெய் ஊற்றி பற்றவைத்துக் கொண்டு
அந்த தென்னந் தோப்பிற்கு கிளம்புகிறார்கள்!
வீட்டில் இருக்கும்போது, குறை வாக கேட்கின்ற அந்த அழுகை சத்தம்
அருகே செல்லச் செல்ல அதிகமாககேட்கிறது!
 
பின் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் முழுவதும் நின்று விடுகிறது!
அந்த குறிப்பிட்ட மரத்தின்
அருகில் சென்று தீப்பந்தத்தை காட்டிமேலே சுற்றி சுற்றி பார்க்கிறார்கள்!
எதுவுமே தெரியவில்லை!
அழுகுரலும் நின்றுவிட்டது!
 
தீயை பார்த்தால் எந்த பேயாக
இருந்தாலும் பயந்துவிடும் என்றுகூட்டத்தில் இருந்த நாலு பேரில் ஒருவன் உறுதியாக கூறுகிறான்!
 
அவன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே
மீண்டும் அழுகுரல், சத்தமாக கேட்க ஆரம்பிக்கிறது!
எல்லோருமே பயந்து விடுகிறார்கள்!
அந்த இடத்தை விட்டு உடனே ஓடி வந்து விடுகிறார்கள்!
 
அடுத்த நாள்... ஒரு பெரிய சாமியாரை அழைத்து வந்து
அந்த தென்னை மரத்தை சுற்றி..
மஞ்சள் கயிறால் கட்டு கட்டி,
ஒரு தென்னங்கன்றுக்கு
பாலாபிஷேகம் செய்து
நிறைய சடங்குகள் எல்லாம்
செய்து, பூஜைகள் எல்லாம்
செய்துவிட்டு, இனிமேல் நிச்சயம் அந்த அழுகுரல் கேட்காது,
என்று சொல்லி விட்டு போகிறார்!
 
அவர்களும் நிம்மதியாக
தூங்குகிறார்கள்!
 
ஆனால் அடுத்த நாள் விடியற் காலையிலேயே அந்த அழு குரல்கேட்க ஆரம்பிக்கிறது!
இந்த முறை தொடர்ந்து
கேட்டுக்கொண்டே இருக்கிறது!
இடைவெளி இல்லாமல்
திரும்ப திரும்ப கேட்கிறது!
 
தோப்பின் பக்கம் யாரோ
ஆள் நடமாட்டம் இருப்பது போல்அவர்களுக்கு தெரிய
பயமாக இருந்தாலும் யாரென்று பார்ப்பதற்காக,
கொஞ்சம் தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு போகிறார்கள்,
 
அருகில் போகப்போக மரத்தின் மேல் ஏதோ ஒரு உருவம்
இருப்பது போல் தெரிகிறது!
தென்னை ஓலைகளும் மட்டையும்அசைகின்ற சத்தம் கேட்கிறது!
திடீரென்று மரத்திலிருந்து
ஒரு உருவம், சரசரவென.... இறங்கி கீழே வருகிறது!
 
இவர்கள் நடுங்கிப் போய் பார்க்க ....
மரத்திலிருந்து இறங்கிய தேங்காய் பறிக்கும் ஒருவன்,
ஒண்ணும் இல்லம்மா
நாலு நாள் முன்னாடி தேங்காய்
பறிக்க ஏறும்போது போனை
மேலயே விட்டுட்டு வந்துட்டிருக்கேன்,
எங்கடா காணோம் காணோம்னு நாலு நாளா தேடிட்டு இருந்தேன்,
ஒவ்வொரு தோப்பா போயி
ஊரெல்லாம் போன் பண்ணி
போன் பண்ணி தேடிட்டு இருந்தேன்!
கடைசியில உங்க தோப்புலயே
இருந்திருக்கு!
என்று அவன் சந்தோஷப் பட...
 
அதற்குள் மீண்டும் அந்த
அழுகுரல் ரிங்டோன் ஒலிக்க
அதை அட்டென்டு செய்து
போனு கிடைச்சிடுச்சிம்மா,
கடைசியில நம்ம துர்கா அக்கா
தோட்டத்துல தான் இருந்திருக்கு,
போனை பார்த்த பின்னாடி தான் எனக்கு உயிரே வந்திருக்கு,
என்று அவன் பேசியபடி
நடந்துசெல்ல ..
 
... அடப் பாவிங்களா .
நல்லா வருவீங்க
 
நீதி: *பழைய  "நோக்கியா போன்"  சார்ஜ் நாலு நாள் நிற்கும்*
உங்களைப்  போல தான்... நானும், பயந்து பயந்து படிச்சேன் 😂
  • கருத்துக்கள உறவுகள்

நானும் வேலை மினக்கட்டுக் கடைசி வரை...வாசித்தேன்!😬

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புங்கையூரன் said:

நானும் வேலை மினக்கட்டுக் கடைசி வரை...வாசித்தேன்!😬

புங்கை... நீங்கள் மட்டும், தனிய வாசிக்கவில்லை.
இந்தத் தலைப்பை,  பதிந்த... 20 நிமிடத்தில், 40 ஆட்கள்...  
வாசித்து விட்டு,  "திட்டிக் கொண்டு"   போய் இருக்கிறார்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அருமை.. அருமை..

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம்! அந்தக் கணவனும் மனைவியும் மருண்டு வெருண்டு மந்திரவாதி சாமி பூசாரி என்று போகவில்லை, போயிருந்தால்...! பில்லி சூனியம் கழிப்பு என்று உண்மை வெளிவருமுன்னமே, அவர்களிடம் புடுங்கக் கூடியதைப் புடுங்கியிருப்பார்கள்.😲 

  • கருத்துக்கள உறவுகள்

சிறி, 
 வாசிக்கும் போது  மயிர்க் கூச்செறிந்தது ( நீண்ட நாட்களின் பின்) என்னமோ உண்மை தான் ...
 

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகள் புது போன் வாங்கித்தந்தாலும் உங்களிடம் இருந்த பழைய நோக்கியா போனின் விசுவாசம் இன்னும் போகவில்லை சிறியர்.....அதுக்கு சமர்ப்பணமாக இந்தக் கதையை உலவ விட்டிருக்கிறீர்கள் என்பதை நான் கண்டு பிடித்து விட்டேன்.......ஆனாலும் கதை எழுதும் அவசரத்தில் முன்பு வீடு வீடாக போய் தென்னையில் தேங்காய் பறித்து வீட்டில் புட்டு அவித்து சாப்பிட்டதை உளறிட்டீங்களே பரட்டை.....ஹா.....ஹா.....ஹா.....! 😂 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கதையை ஏற்கனவே வேறு வடிவங்களில் பல வருடங்கள் முன்னர் பலர் எழுதிவிட்டார்கள். சிறியண்ணை நீங்கள் உந்த வயது போனவையளின்ர கதைகளை வாசிக்காமல் இருங்கோ. பிறகு உங்களுக்கும் வயது போயிட்டெண்டு சொல்லீடுவம்.😊

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:
கிளிநொச்சி நகரில் உள்ள ஒரு கிராமம்...
தென்னந்தோப்புகளும்
பாக்கு தோட்டங்களும்,
மாமர தோட்டங்களும்
நிறைந்தபகுதி அது!

நான் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவன் கதையை அரைவாசியோட நிற்பாட்டிப் போட்டன்.வீட்டிலும் ஒருத்தரும் இல்லை மனுசியும் வேலைக்கு போய் விட்டாள்.மகனும் வெளியில் போய் விட்டான்.தனிமையில் இருந்து வாசிக்கவும் பயம்.போகப் போக கதை சஸ்பென்சாக இருந்தது.வில்லங்கம் வேண்டாம் என்று படிக்காமல் இருந்து மனுசி வேலையால வந்த பின் சத்தமாக அவோவுக்கும் வாசிக்க அவோவுக்கும் ஒரு சாதி பயம் வந்து விட்டது.இடைக்க்கு இடை திரும்பி நானும் அவோவின் முகத்தையும் பார்த்தான்.மூச்சை அடக்கியபடி முழுசா படிச்சு முடிக்க கவனம் அப்பா மோபைல் நீங்களும் அடிக்கடி தொலைக்கிறனியள்.அந்த மனிசன் தென்னை மரத்துக்கு மேல விட்டு படியால் கிடைச்சுது.வஸ் றெயின் என்று அதுக்குள்ள தொலைச்சு போடாதேங்கோ என்றாள்.குழந்தை போல் பல பேய் பிசாசுக்கு கதைகள் எடுத்திருக்கிறான்கள் இதனால் ரெம்ப நான் பயந்தாலும் கடைசியிலை நல்ல கதை சிறி.
அப்பாடா நல்ல காலம் இரவு நித்திரையும் இல்லாம இருந்திருப்பன்.
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிரியண்ணா    என்ன இருந்தாலும் இப்படி "கவர்ச்சிகரமாக " தலையங்கம் போடக் கூடாது 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அருமை.. அருமை..

நன்றி.. புரட்சி. :)

9 hours ago, Paanch said:

நல்ல காலம்! அந்தக் கணவனும் மனைவியும் மருண்டு வெருண்டு மந்திரவாதி சாமி பூசாரி என்று போகவில்லை, போயிருந்தால்...! பில்லி சூனியம் கழிப்பு என்று உண்மை வெளிவருமுன்னமே, அவர்களிடம் புடுங்கக் கூடியதைப் புடுங்கியிருப்பார்கள்.😲 

 

11 hours ago, தமிழ் சிறி said:
அடுத்த நாள்... ஒரு பெரிய சாமியாரை அழைத்து வந்து
அந்த தென்னை மரத்தை சுற்றி..
மஞ்சள் கயிறால் கட்டு கட்டி,
ஒரு தென்னங்கன்றுக்கு
பாலாபிஷேகம் செய்து
நிறைய சடங்குகள் எல்லாம்
செய்து, பூஜைகள் எல்லாம்
செய்துவிட்டு, இனிமேல் நிச்சயம் அந்த அழுகுரல் கேட்காது,
என்று சொல்லி விட்டு போகிறார்!

பாஞ்ச்  அண்ணை,  
சாமியார் வந்து.... தென்னை மரத்துக்கு, 
மஞ்சள் கயிறு கட்டிய, பந்தியை நீங்கள் வாசிக்கவில்லையா?  :grin:

9 hours ago, சாமானியன் said:

சிறி, 
 வாசிக்கும் போது  மயிர்க் கூச்செறிந்தது ( நீண்ட நாட்களின் பின்) என்னமோ உண்மை தான் ...
 

சாமானியன்... நீங்கள், வாசித்து ரசித்தது மகிழ்ச்சி. 😂

7 hours ago, suvy said:

பிள்ளைகள் புது போன் வாங்கித்தந்தாலும் உங்களிடம் இருந்த பழைய நோக்கியா போனின் விசுவாசம் இன்னும் போகவில்லை சிறியர்.....அதுக்கு சமர்ப்பணமாக இந்தக் கதையை உலவ விட்டிருக்கிறீர்கள் என்பதை நான் கண்டு பிடித்து விட்டேன்.......ஆனாலும் கதை எழுதும் அவசரத்தில் முன்பு வீடு வீடாக போய் தென்னையில் தேங்காய் பறித்து வீட்டில் புட்டு அவித்து சாப்பிட்டதை உளறிட்டீங்களே பரட்டை.....ஹா.....ஹா.....ஹா.....! 😂 

சுவியர்... கதையை, பதியிற  ஆர்வத்திலை, 
தேங்காய் புடுங்கின கதை, இப்பிடி... திரும்ப எனக்கே வரும் என்று தெரியாமல் போச்சு.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலிலும் இதே படத்துடன் இந்த கதை ஓடுகிறது போல மயூரன் இணைந்திருந்தார் என நினைக்கிறன் சுட்டதா சிறி அண்ண😀

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்  அண்ணை,  
சாமியார் வந்து.... தென்னை மரத்துக்கு, 
மஞ்சள் கயிறு கட்டிய, பந்தியை நீங்கள் வாசிக்கவில்லையா?  :grin:

ஒருமுறை மஞ்சள் கயிறு கட்டி நான்படும் பாடு....😫 அதன்பிறகு மஞ்சள் கயிறு என்ற சொல்லைக் கண்டாலும் நான் பாஞ்சு கடந்துவிடுவேன்.🏃‍♂️ 

8 hours ago, shanthy said:

இந்த கதையை ஏற்கனவே வேறு வடிவங்களில் பல வருடங்கள் முன்னர் பலர் எழுதிவிட்டார்கள். சிறியண்ணை நீங்கள் உந்த வயது போனவையளின்ர கதைகளை வாசிக்காமல் இருங்கோ. பிறகு உங்களுக்கும் வயது போயிட்டெண்டு சொல்லீடுவம்.😊

அப்போ உங்கள் வயது.????🤔😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

முகநூலிலும் இதே படத்துடன் இந்த கதை ஓடுகிறது போல மயூரன் இணைந்திருந்தார் என நினைக்கிறன் சுட்டதா சிறி அண்ண😀

முனிவர் ஜீ...  இது,  முகநூல்  கதை தான்.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

 

அப்போ உங்கள் வயது.????🤔😁

June 16ம் திகதி 47 வயதை எட்டுகிறேன். 🤭 உங்கள் வயதை எட்ட இன்னும் 20 வருடங்கள் இருக்கு 😀

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, shanthy said:

June 16ம் திகதி 47 வயதை எட்டுகிறேன். 🤭 உங்கள் வயதை எட்ட இன்னும் 20 வருடங்கள் இருக்கு 😀

என் வயதை உங்களால் எட்ட முடியாதம்மா. உங்களுக்கு ஒரு வயது கூடினால் எனக்கும் ஒருவயது கூடும். இரண்டுவயது கூடினால் எனக்கும் இரண்டுவயது கூடுமே எப்படி எட்ட முடியும்.. ??🤪

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

என் வயதை உங்களால் எட்ட முடியாதம்மா. உங்களுக்கு ஒரு வயது கூடினால் எனக்கும் ஒருவயது கூடும். இரண்டுவயது கூடினால் எனக்கும் இரண்டுவயது கூடுமே எப்படி எட்ட முடியும்.. ??🤪

 

அதாகப்பட்டது என்னைவிட 20 வயது தூரத்தில் நீங்கள் இருப்பதால் நீங்கள் ஓடிவர முடியாது.😊

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Paanch said:

என் வயதை உங்களால் எட்ட முடியாதம்மா. உங்களுக்கு ஒரு வயது கூடினால் எனக்கும் ஒருவயது கூடும். இரண்டுவயது கூடினால் எனக்கும் இரண்டுவயது கூடுமே எப்படி எட்ட முடியும்.. ??🤪

 

1 hour ago, shanthy said:

அதாகப்பட்டது என்னைவிட 20 வயது தூரத்தில் நீங்கள் இருப்பதால் நீங்கள் ஓடிவர முடியாது.😊

 

சொல்லுறனெண்டு கோபிக்க கூடாது.😎
ஒரு குறிப்பிட்ட வயது மட்டும்தான் வயது வித்தியாசங்கள் தெரியும்.60,70தை தாண்டினாப்பிறகு எல்லாரும் கிழட்டு கட்டையள்தான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, shanthy said:

அதாகப்பட்டது என்னைவிட 20 வயது தூரத்தில் நீங்கள் இருப்பதால் நீங்கள் ஓடிவர முடியாது.😊

அப்படி அல்ல மகளே! துடக்கழியும்னாட் கழிந்து வந்தால், என்வயதும் சாந்தி பெறும்.... ஓம் சாந்தி.!! 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

சொல்லுறனெண்டு கோபிக்க கூடாது.😎
ஒரு குறிப்பிட்ட வயது மட்டும்தான் வயது வித்தியாசங்கள் தெரியும்.60,70தை தாண்டினாப்பிறகு எல்லாரும் கிழட்டு கட்டையள்தான். 🤣

என்ன சாமி ஊர் உலகம் தெரியாமல்....!! இவர் கிழடா....? மாப்பிளையா.....?? பெண்ணுக்கு 20 வயது. மாப்பிளைக்கு 70 வயது. 😂🤣

Quellbild anzeigen

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அப்படி அல்ல மகளே! துடக்கழியும்னாட் கழிந்து வந்தால், என்வயதும் சாந்தி பெறும்.... ஓம் சாந்தி.!! 

சரி சரி தந்தையே அமைதி பெறுக.🤭

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, Paanch said:

என்ன சாமி ஊர் உலகம் தெரியாமல்....!! இவர் கிழடா....? மாப்பிளையா.....?? பெண்ணுக்கு 20 வயது. மாப்பிளைக்கு 70 வயது. 😂🤣

Quellbild anzeigen

அதாகப்பட்டது ஐயனார் அவர்கள்  இவ்வேளையில்   எம்மை போன்றவர்களுக்கு உணர்த்தவருவது என்னவெனில்.........😷

இந்தக்கதை மிகவும் பழைய கதை. பல மாதங்களுக்கு முன்னர் நான் இதை வாசிச்சனான்.

அந்த கதையை copy  பண்ணி சில வசனங்களை எடிட் பண்ணி இப்ப FB உலவவிட்டிருக்கினம் 😁.

ஒரிஜினல் கதை கீழே உலா லிங்ல இருக்குது. 

https://xn--r1a.website/s/tamilstory?after=59

போஸ்ட் செய்த தேதி 07 May 2019.

கதை இப்படி தொடங்குது

"சிறிய கிராமம் தென்னந்தோப்புகளும் பாக்கு தோட்டங்களும், ரப்பர் தோட்டங்களும் நிறைந்த பகுதி அது! நிலத்தை ஒட்டிய பகுதியில் வீடுகட்டி ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்துகொண்டு இருந்தது!

நடுத்தர வயதை ஒட்டிய ஒரு கணவன் மனைவி, அவர்களுக்கு பத்து வயதில் ஒரு பெண் குழந்தை!

ஒரு நாள் அந்த வீட்டை சேர்ந்த பெண் தன் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, மாடுகளுக்கு புல் அறுப்பதற்காக தென்னந்தோப்புக்கு செல்கிறாள்!

அவள் புல் அறுத்துக்கொண்டு இருக்கும்போது ஒரு குழந்தையின் அழுகுரல் கொஞ்சம் கொஞ்சமாக கேட்கிறது!

..........................."

 

 

மேல உள்ள லிங்க் ல இப்படியான நிறைய கைதிகள் இருக்குது. நேரம் இருந்தால் வாசித்துப்பாருங்கோ.

Edited by Shanthan_S
எழுத்துப்பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2021 at 19:04, Paanch said:

என் வயதை உங்களால் எட்ட முடியாதம்மா. உங்களுக்கு ஒரு வயது கூடினால் எனக்கும் ஒருவயது கூடும். இரண்டுவயது கூடினால் எனக்கும் இரண்டுவயது கூடுமே எப்படி எட்ட முடியும்.. ??🤪

 

உதறல் எடுக்க வைத்த கதையில் கெக்கட்டம் விட்டு சிரிக்க வைச்சது இந்தக் கருத்துத்தான்😂🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்கும் போது அண்மையில்.. லண்டன் heart FM இல் சொன்ன உண்மைக் கதை ஞாபகம் வருகிறது..

இது நடந்தது போலந்தில்.

ஒரு பெரிய வீட்டின் வளவுக்குல்.. ஒரு பெரிய மரத்தில்..

ஒரு பெரிய உருவம்.. வழமையாக காணப்படாத உயிரினம் போன்ற தோற்ற முடையதாக இருந்துள்ளது. 

வீட்டுக்காரர் கண்ணில் பட்டதில் இருந்து அவர்கள் அந்த உருவத்தை நோட்டமிட்டுக் கொண்டே இருந்துள்ளனர்.

ஆனால்.. உருவம் இரவு பகலாக அங்கேயே இருந்து விடுகிறது.

அதைப் பார்த்த சிலர்.. ஏதோ பாலூட்டி என்று நினைத்துள்ளனர். சிலர் பெரிய வண்டினம் என்று சொல்லியுள்ளனர். இன்னும் சிலரோ.. ஏலியனாக இருக்குமோ என்று அச்சமூட்டியுள்ளனர்.

வீட்டுக்காரரும்.. கல்லால்.. தடியால் எறிந்தும் பயனில்லை. உருவம் அசைவதாக இல்லை. தூங்குவது போலவே தெரிந்துள்ளது. ஆனால் கொஞ்சம் அசைந்து திரும்பியது போல.. இருந்திருக்கிறது.

இதைக்கேட்ட அயலவர்கள்.. உது ஏலியன் தான் என்று அடிச்சுச் சொல்ல.. வீட்டுக்காரர் பொலிஸூக்கு தகவல் சொல்லி உள்ளார்.

பொலிஸ் வந்து பார்த்துவிட்டு.. அவர்களுக்கு அச்சம் வர.. உடனடியாக.. தீயணைப்புப் படைக்குச் சொல்லி இருக்கிறார்கள்.

அவர்கள் வந்து அந்த உருவத்தை மீட்டுப் பார்த்தால்..

அந்த ஜந்து இவர் தான்...

Video: Croissant Dough | Martha Stewart

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.