Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியானது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியானது!

2020ம் ஆண்டுக்கான க.பாெ.த உயர்தர (ஏ/எல்) பரீீட்சை முடிவுகள் இன்று (4) சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சுட்டெண்ணை பயன்படுத்தி தற்போது முடிவுகளை பார்க்க முடியும்.

அடையாள அட்டை பயன்படுத்தி பார்ப்பவர்கள் காத்திருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

முடிவை பார்க்க
 

https://newuthayan.com/உயர்தர-பரீட்சை-முடிவுகள்/

 

2020 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்­­ படி 64% மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு

Digital News Team 2021-05-04T17:33:56

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் 64.39 சதவீதமான மாணவர்கள் பல்கலைக் கழகங்களிற்குத் தெரிவாகியுள்ளதாகத் தெரியவந் துள்ளது.

மேலும் பரீட்சை மீள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.

uni-300x161.jpg

இம்முறை பரீட்சைக்காக 362,824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில் அவர்களுள் 194,297 மாணவர்கள் பல்கலைக்கழகங்களிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 

https://thinakkural.lk/article/120218

  • கருத்துக்கள உறவுகள்

Check the result with this details: index: 4139679

Chavakacheri Hindu College Student Island's 1st in Maths

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து யாழ். மாணவன் சாதனை

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்

சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்தவராவர்.

கணித பிரிவின் புதிய பாடத் திட்டத்துக்கமைய மாணவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டன.

இதன்படி, 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக சுகாதார வழிகாட்டல்களுக்கமைய 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்றது.

இதன்படி, 2 ஆயிரத்து 648 பரீட்சை மத்திய நிலையங்களில் மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 824 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilmirror Online || தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து யாழ். மாணவன் சாதனை

  • கருத்துக்கள உறவுகள்

தனராஜ் சுந்தர்பவனுக்கு... பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

https://photos.app.goo.gl/zLffp3ZgeGJcifTA8

யாழ் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தர்பவன் கணித பிரிவில் (Maths stream) அகில இலங்கை ரீதியில் (island wise)  முதலிடம் (1st) பெற்றிருக்கிறார்.!

மனமார்ந்த வாழ்த்துக்கள்! ❤️

  • கருத்துக்கள உறவுகள்

உயர் தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!

அகில இலங்கை ரீதியில் இரு தமிழ் மாணவர்கள் முதலிடம்- ஐந்து துறைகளின் முழு விபரம்!

2020ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், அகில இலங்கை ரீதியில் துறை ரீதியாக முதலிடம் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, கணித மற்றும் விஞ்ஞானப் பிரிவுகளில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவன் தனராஜ் சுந்தரபவன் முதலிடம் பெற்றுள்ளார்.

அதேபோல், விஞ்ஞானப் பிரிவில்.... மட்டக்களப்பு, பட்டிருப்பு தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் மகிழுரைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தினோஜன் முதலிடம் பெற்றுள்ளார்.

வர்த்தகப் பிரிவில், காலி மாவட்டம் சங்கமித்த வித்தியாலய மாணவி அமந்தி இமாசா மதநாயக்க அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

அத்துடன், கலைப்பிரிவில் ப்ரிஸ்படேரியன் மகளிர் கல்லூரி மாணவி சாமல்கா செவ்மினி அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.

இதேவேளை, உயிரியல் தொழில்நுட்பப் பிரிவில் ஹொரன தக்சிலா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் சுசிகா சந்தசர என்பவர் முதலிடம் பெற்றுள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் https://www.doenets.lk/ என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசித்து மாணவர்கள் பரீட்சைப் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.

https://athavannews.com/2021/1214013

###########   ##############  ###############

தம்பிப்பிள்ளை தினோஜனுக்கும்.... பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற்றவர்கள் தொடர்பான அறிவிப்பு!

பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற்றவர்கள் தொடர்பான அறிவிப்பு!

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 297 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை மூன்று இலட்சத்து 62 ஆயிரத்து 824 பேர் பரீட்சை எழுதிய நிலையில், அவர்களில் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள் 64.39 வீதமாகும்.

அத்துடன், பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 86 பேருடைய பெறுபேறுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பரீட்சைப் பெறுபேறுகளை மீள் பரீசீலனை செய்வதற்கான விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு பின்னர் வெயிடப்படவுள்ளது.

https://athavannews.com/2021/1214027

  • கருத்துக்கள உறவுகள்

கமலாவின் பெட்டை... A/L எல்லாப் பாடமும், இந்த முறையும் பெயில் மேனே...
என்ன செய்யப் போறாய்... என, கேட்டேன்.   
வெளிநாட்டு மாப்பிளையை கட்டி, அனுப்பப் போறாளாம் :grin:  ஊர்க்  கிழவி. 😜

-முகநூலில் வாசித்தது.-

  • கருத்துக்கள உறவுகள்

தனராஜ் சுந்தர்பவனுக்கும், தம்பிப்பிள்ளை தினோஜனுக்கும் வாழ்த்துக்கள் 👏

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆண்டு 1, 2 வது தரவரிசை ரத்து செய்யப்பட்டுள்ளது : தேர்வு ஆணையாளர் 


சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2020 க.பொ.த. உயர்தர  (ஏ / எல்) தேர்வு முடிவுகளின் போது முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும், தீவு ரீதியான  தரவரிசைகளையும் பெற்ற மாணவர்கள் இந்த ஆண்டு வெளியிடப்பட மாட்டார்கள் என்று தேர்வு ஆணையர் சனத் பி.புஜிதா தெரிவித்தார்.

http://www.dailymirror.lk/breaking_news/Announcement-of-1st-2nd-rank-annulled-this-year-Commissioner-General/108-211310

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

கமலாவின் பெட்டை... A/L எல்லாப் பாடமும், இந்த முறையும் பெயில் மேனே...
என்ன செய்யப் போறாய்... என, கேட்டேன்.   
வெளிநாட்டு மாப்பிளையை கட்டி, அனுப்பப் போறாளாம் :grin:  ஊர்க்  கிழவி. 😜

-முகநூலில் வாசித்தது.-

நான் அறிந்த இரண்டு மாணவிகள் கலைப்பிரிவு ஒருவர் ABC, மற்றவர் BSS. இருவரும் ஆங்கிலம் சித்தி அடையவில்லை. ஆங்கிலம் மாணவர்கள் அதிகம் பேர் சித்தி அடையவில்லை என்றால் இந்த கோளாறு சரி செய்யப்பட வேண்டும். 

க. பொ. த சாதாரணத்தில் ஆங்கிலம் உள்ளது. மீண்டும் உயர்தரத்தில் என்னத்தை கற்பிக்கின்றார்களோ!

பிள்ளைகள் பலர் சாதாரண தரமும் உயர்தரமும் இரண்டிலும் ஆங்கிலம் பெயில் ஆகிவிட்டு சிரித்துக்கொண்டு இருப்பதா?

32 minutes ago, zuma said:

இந்த ஆண்டு 1, 2 வது தரவரிசை ரத்து செய்யப்பட்டுள்ளது : தேர்வு ஆணையாளர் 


சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 2020 க.பொ.த. உயர்தர  (ஏ / எல்) தேர்வு முடிவுகளின் போது முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும், தீவு ரீதியான  தரவரிசைகளையும் பெற்ற மாணவர்கள் இந்த ஆண்டு வெளியிடப்பட மாட்டார்கள் என்று தேர்வு ஆணையர் சனத் பி.புஜிதா தெரிவித்தார்.

http://www.dailymirror.lk/breaking_news/Announcement-of-1st-2nd-rank-annulled-this-year-Commissioner-General/108-211310

 

புரியவில்லையே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட மாட்டாது - பரீட்சை திணைக்களம்

(இராஜதுரை ஹஷான்)

2020ஆம் ஆண்டு இடம்பெற்று முடிந்த கல்வி பொதுதராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை பாடசாலை அதிபர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்கள் பரீட்சை பெறுபேறுகளை இணையவழி முறைமை ஊடாக தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ள தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/113889/education_department.jpg

அத்துடன் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தமது பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ. சனத் பூஜித தெரிவித்தார்.

பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

பரீட்சை பெறுபேகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதல் , இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பெற்றுக் கொண்ட  மாணவர்களின்  விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்காது.

நிலைகள் அறிவிக்கப்படும் போது  பெரும்பாலான மாணவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படுவதால். உளவியல் ஆலோசனை சபையின் பரிந்துரைக்கமைய 2019ஆம் ஆண்டு எடுத்த தீர்மானத்துக்கு அமைய  செயற்படுத்தப்படுகிறது.

அதற்கமைய பரீட்சைகள் சான்று பரீட்சைகளாக மாத்திரமே கருதப்படும் என்பதுடன் இது முதலாவது இரண்டாவது இடங்களைப் பிடித்தவர்களை தெரிவு செய்யும் பரீட்சை இல்லை என்றும் மாவட்டம் மற்றும் அகில இலங்கை ரீதியில் தெரிவுசெய்யப்புடுவதானது பல்கலைக்கழக அனுமதிக்காக மாத்திரம் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

தற்போது ஏற்பட்டுள்ள பாரிய போட்டித்தன்மையானது பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி கிடைக்கும் மாணவர்களைப் போல கிடைக்காத மாணவர்களுக்கும் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைகழகத்துக்கு தெரிவாகாத மாணவர்களின் அடுத்தக்கட்ட கற்றல் நடவடிக்கை குறித்து திறன்விருத்தி அமைச்சு மட்டத்தில்   பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பெறுபேறுகள் மீள் பரிசீலனைக்காக பாடசாலைகள் ஊடாக அனுப்பவும் தனிப்பட்ட பரிட்சார்த்திகள் தனிப்பட்ட ரீதியில்  விண்ணப்பிக்கவும் வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் அது குறித்து எதிர்வரும் நாள்களில் பத்திரிகைகள் வாயிலாக அறிவிக்கப்படும் என்றார்.
 

 

https://www.virakesari.lk/article/104959

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

கமலாவின் பெட்டை... A/L எல்லாப் பாடமும், இந்த முறையும் பெயில் மேனே...
என்ன செய்யப் போறாய்... என, கேட்டேன்.   
வெளிநாட்டு மாப்பிளையை கட்டி, அனுப்பப் போறாளாம் :grin:  ஊர்க்  கிழவி. 😜

-முகநூலில் வாசித்தது.-

கமலாவின் பெட்டை ஏ எல்லில எல்லாப் பாடமும் பெயில் என்றால் அவாவுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தான் சரி. அவர் ஓ எல்லில எல்லாப் பாடமும் பெயில் விட்டிருப்பார். அதால வெளிநாட்டுக்கு வந்திருப்பார். 😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, nedukkalapoovan said:

கமலாவின் பெட்டை ஏ எல்லில எல்லாப் பாடமும் பெயில் என்றால் அவாவுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தான் சரி. அவர் ஓ எல்லில எல்லாப் பாடமும் பெயில் விட்டிருப்பார். அதால வெளிநாட்டுக்கு வந்திருப்பார். 😜

அப்ப வெளிநாட்டுக்கு ஓடி வந்தவனெல்லாம் ஓஎல்லிலை பெயில் விட்டவங்கள் அப்பிடித்தானே? 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2021 at 05:03, குமாரசாமி said:

அப்ப வெளிநாட்டுக்கு ஓடி வந்தவனெல்லாம் ஓஎல்லிலை பெயில் விட்டவங்கள் அப்பிடித்தானே? 😎

பலர் பெயிலாகி  ஓடி வந்தாலும் இங்க வந்து 10 வருசம் படிச்சு  இஞ்ஞினியராகி பெண்ஸ் கார் என்று ஒடி திரியிராங்கள் கண்டியளோ ....எங்கன்ட பெடியள் சுழியங்கள் மண் அப்படி ..வசதி வாய்ப்பு கிடைச்சால் பிரிச்சு மேய்ந்து போடுவாங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, putthan said:

பலர் பெயிலாகி  ஓடி வந்தாலும் இங்க வந்து 10 வருசம் படிச்சு  இஞ்ஞினியராகி பெண்ஸ் கார் என்று ஒடி திரியிராங்கள் கண்டியளோ ....எங்கன்ட பெடியள் சுழியங்கள் மண் அப்படி ..வசதி வாய்ப்பு கிடைச்சால் பிரிச்சு மேய்ந்து போடுவாங்கள்.

அட நீங்கள் வேற ஓடி வந்தவங்களின்ரை பிள்ளையள் இப்ப பென்ஸ் கொம்பனிக்கே கணக்கு எழுதுறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனராஜ் சுந்தர்பவன்! 

வௌியான 2020 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனராஜ் சுந்தர்பவன் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

யாழ். சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவரான தனராஜ் சுந்தர்பவன், கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9A அதிவிசேட சித்தியினை பெற்றிருந்ததுடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 182 புள்ளிகளை பெற்று சித்தியடைந்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியிலும் தனராஜ் சுந்தர்பவன் பதக்கம் வென்று சாதித்திருந்தார்.

உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடத்தை பெற்ற தனராஜ் சுந்தர்பவன், இணை பாடவிதான செயற்பாடுகளிலும் திறமையை வௌிப்படுத்தியவராவார்.

இதனிடையே அகில இலங்கை ரீதியில் விஞ்ஞானப் பிரிவில் அம்பாறை – கல்முனை ஷாஹிரா தேசிய பாடசாலையின் ஐ.அன்பஸ் அஹமட் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும் தேசிய ரீதியில் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளார்.

இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அதீத ஆர்வம் காட்டிய அன்பாஸ் அஹமட், மாகாண மட்ட சதுரங்கப் போட்டியிலும் சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை காலி சங்கமித்த பாலிகா வித்தியாலயத்தின் அமந்தி மதநாயக்க வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

உயிரியல் பிரிவில், ஹொரணை தக்ஷிலா கல்லூரியின் மாணவி சுசிகா சந்தசர, அகில இலங்கை ரீதியில் முதல் நிலையைப் பெற்றுள்ளார்.

குறித்த பாடசாலையின் அவிஷ்க சானுக்க தகவல் தொழில்நுட்பப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்துள்ளார்.

 

https://ilakkiyainfo.com/அகில-இலங்கை-ரீதியில்-கணி/

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அட நீங்கள் வேற ஓடி வந்தவங்களின்ரை பிள்ளையள் இப்ப பென்ஸ் கொம்பனிக்கே கணக்கு எழுதுறாங்கள்.

உந்த சீனாக்காரன் வந்து அடிமைபடுத்தினால் அந்த சனங்கள் வெளிநாட்டுக்கு போய் இப்படி பிரிச்சு மேய்ய முடியுமோ தெரியவில்லை....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, putthan said:

உந்த சீனாக்காரன் வந்து அடிமைபடுத்தினால் அந்த சனங்கள் வெளிநாட்டுக்கு போய் இப்படி பிரிச்சு மேய்ய முடியுமோ தெரியவில்லை....

கந்தக புகையின் பின்னரும் மிளிர்கின்றார்கள். அவர்கள் தூண்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

கந்தக புகையின் பின்னரும் மிளிர்கின்றார்கள். அவர்கள் தூண்கள்.

உண்மை மாற்றுகருத்துக்கு இடமில்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.