Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி யாழ்.நகரில் களமிறக்கப்பட்டுள்ளது

Featured Replies

18 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் கூறுபவை அனைத்துமே உண்மையென்று இங்கே கருத்தெழுதும் நியாயத்தைப் பேசுவோம், விளங்கநினைப்பவன் ******, துல்பேனுக்கும் தெரியாதது அல்ல. அவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். ஆனால், அதனை அவர்கள் வேண்டுமென்றே மறுத்து எழுதுகிறார்கள். அவர்களைப்பொறுத்தவரை சிங்கள அரசாங்கங்களை நியாயப்படுத்துவதும், அவர்கள் செய்த, செய்துவருகிற இனவழிப்பை சிறிது சிறிதாக மறைப்பதும், இறுதியாக அதனை இல்லையென்று நிறுவுவதுமே  நோக்கம். இல்லாவிட்டால், ராணுவத்தில் தமிழர்கள் இணைவது நாட்டில் சுமூகத்தன்மையினை உருவாக்கும் என்று அவர்களால் இலகுவாக சொல்லிவிட்டுச் செல்லமுடியாது.

இவர்களை விட இன்னும் இருவர் இருக்கிறார்கள். அவர்களைப்பொறுத்தவரையில் தமிழர்கள் ராணுவத்தில் இணைவதை எப்படியாது நியாயப்படுத்திவிடவேண்டும் என்கிற தேவை இருக்கிறது. சாதாரண தமிழர்களும் ராணுவத்தில் இணையும்போது தாம் இன்று புதிதாக ஏற்றுக்கொண்ட தலைவர்கள் தமிழினத்திற்கு எதிராகச் செய்த துரோகம் மெல்ல மெல்ல மறைந்துவிடும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். "எமது புதிய தலைவர்கள் மட்டுமா ராணுவத்துடன் இணைந்தார்கள்? இன்று சாதாரண தமிழர்களும் தானே இணைகிறார்கள்? ஆகவே எமது தலைவர்கள் செய்ததை எப்படி துரோகம் என்று சொல்வீர்கள்?" என்பதுதான் அவர்களது வாதம். ஆகவே, சாதாரண  தமிழர்களில் சிலர் ராணுவத்தில் இணைவதை பெரிய விடயமாகக் காட்டி, அல்லது தமது புதிய தலைவர்களின் துரோகக் கோட்டிற்கு அருகில் சாதாரண தமிழர்களின் இணைவை இன்னும் பெரிய கோடாகக் கீறிக் காட்டுவதன்மூலம், "பார்தீர்களா? எமது தலைவர்கள் செய்தது துரோகமே இல்லையென்று இப்போதாவது தெரிகிறதா?" என்பது அவர்களின் கூப்பாடு.  அபிவிருத்தி, வேலைவாய்ப்பென்று அவர்கள் கூறும் காரணங்கள் எல்லாம் இந்தத் துரோகத்தை மறைக்க அவர்கள் பாவிக்கும் வேஷங்கள், அவ்வளவுதான். 

இந்த இரு குழுக்களுக்கும் இருக்கும் ஒற்றுமை, இனவழிப்புச் செய்த சிங்கள அரசையும், அதற்கு இணையாக நின்று துரோகமிழைத்து, தம்மினனத்தையே நேரடியாகவும், சிங்களத்துடன் கூடிநின்றும் கருவறுத்த இனத்துரோகிகளையும் காப்பாற்றுவது, அவர்களை நியாயப்படுத்துவது. இதனை அவர்கள் கிடைக்கும் அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பாவித்துச் செவ்வணே செய்கிறார்கள். 

ரஞ்சித், நீங்களோ நானோ இங்கு தெரிவிக்கும் கருத்துக்களை பார்த்து தாயகத்தில் வாழும் மக்கள் தமது நடைமுறை முடிவுகளை எடுப்பதில்லை. அங்குள்ள நிலைமைகளை அனுசரித்து த‍த்தமது பொருளாதார தேவைக்கேற்ப அங்கு வாழும் மக்கள் தமது வாழ்க்கை முறையை தீர்மானிக்கிறார்கள். அது இயல்பானது. மகிந்த கோட்டபாய அரசின் இனவெறி அரசியலையோ அங்கு மக்கள் மீது புரியும் இன ஒடுக்குமுறையையோ இங்கு யாரும் ஆதரித்து எழுதவில்லை. அப்படி எழுதியது போல் பொய்யுரைத்து  முத்திரை குத்தி அடுத்தவர் மீது துரோகி என்று வசைமாரி பொழிவதே தமிழ் தேசிய அரசியல் என்று நீங்கள் புரிந்து கொண்டிருப்பதால் அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றீர்கள். இங்கு கருத்து தெரிவிக்கும் ஒவ்வொருவரும் சாதாரண மக்களே. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தமது அரசியல் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை உண்டு.  

எமது அரசியல் தலைமைகளின் அரசியல் பேதைத்தனத்தனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, எம்மை தோற்கடித்து வெற்றி பெற்று விட்ட வெற்றி திமிரில் மகிந்த - கோட்டா கும்பல் சிறிது காலம் ஆட்டம் போட்டாலும் அந்த ஆட்டத்திற்கு ஒரு எல்லை உண்டு. எமக்கு அடுத்த வாய்ப்புகள் கிடைக்க சற்று காலமெடுக்கலாம். அநேகமாக அடுத்த தலைமுறைக்கே அடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதே எனது கணிப்பு.  ஏற்கனவே பழைய தவறுகளால் கிடைத்த பட்டறிவின் அடிப்படையில் யோசித்து அடுத்த தலைமுறை கெளரவமான ஒரு அரசியல் தீர்வை பெறும் வகையில் தமது அரசியலை கொண்டு செல்வர்  என்றே நம்புகிறேன். அதுவரை எமது மக்கள் சமூக, கல்வி, பொருளாதார ரீதியில் தமது இருப்பை பேண வேண்டிய கட்டாயம் உண்டு. அங்குள்ள நிலைமைகளை புரிந்து அதை அங்கு வாழும் மக்கள் செய்வார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள்.  அதுவே இயல்பானது.  

Edited by tulpen

  • Replies 82
  • Views 7.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 29/5/2021 at 18:08, valavan said:

லட்சங்களில் தமிழர்கள் ராணுவத்தில் சேர்ந்தாலும், இலங்கைதீவில் 

முழுக்க முழுக்க ஆயுதமேந்திய தமிழ் ராணுவத்தினர் மட்டும் உள்ள ஒரு பாதுகாப்பு படைபிரிவின் பாதுகாப்பு வளையத்துள்    இலங்கையின் ஜனாதிபதி,பிரதமர் உட்பட்ட அமைச்சர்கள் நடமாடும் நிலை ஒருபோதும் வராது.

அதேபோல் வட கிழக்கில் தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவத்தின் தமிழர்களை மட்டுமே கொண்ட படைபிரிவின் கட்டுப்பாட்டில் இருக்க  எந்த காலமும் இலங்கை அரசினால் அனுமதிக்கப்பட மாட்டாது. 

ஆயிரமாயிரம் தமிழர்கள் ராணுவத்தில் சேர்ந்தாலும் அவர்களை இலங்கையின் ஒரு போரிடும் படையணியாக பொறுப்பு தந்து உயரத்தில் வைக்கமாட்டார்கள், இயற்கை பேரிடருக்கும் சிரமதான பணிகளுக்கும் அவர்களை அமர்த்திவிட்டு சிங்கள உயரதிகாரிகள் சிகரெட் பிடித்தபடி அவர்களை ஏவல் செய்வார்கள்.

இலங்கை ராணுவம் என்பது முழுக்க முழுக்க சிங்கள அரச  படைதான், அப்படியிருந்தும் தமிழர்களை மட்டுமே கொண்ட பெரும் படையணி உருவாகும் நிலை வந்தால் தன்னோட ராணுவத்தையே சிங்களவன் நம்பமாட்டான்,

அங்கேதான் நிற்கிறது இனவாதம்.

 தமிழர்கள் ராணுவத்தில் சேர்வதன்மூலம் இனவாதம் என்பது தணியாது.

ஏனென்றால் நாம் பிறக்குமுன்னே  இனவாதத்தை உருவாக்கி அதை இன்று வரை காவி திரிந்து நாளை நாம் இறந்த பின்னரும் காவி திரியபோவது தமிழர்களல்ல.

என்றைக்கு சிங்களவர்கள் தமிழர்களையும் சந்தேகத்திற்கு இடமின்றி  சக மனிதர்களாக , தமிழர்கள் தாம் வாழும்பிரதேசத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் உரித்துடையவர்களாக  நாட்டின்மீது  பார்க்கும்போது மட்டுமே இனவாதம் மெல்ல மெல்ல மறையும், ஆனால் அது எந்த காலத்தில் சாத்தியபடும்?

தமிழர் பிரதேசங்களில் சிங்களவர்களே வாழாத பகுதிகளில் சிங்கள ஆதிக்க சக்திகள் நினத்தை இடத்தில் எங்கு வேண்டுமானாலும் ஒரு விகாரையை எழுப்ப முடியும் /எழுப்பியிருக்கிறார்கள்/இனியும் பல நூறு கட்டி எழுப்புவார்கள்.

சிங்கள பிரதேசத்தில் சிங்களவர்கள் அனுமதியின்றி இரவோடு இரவாக ஒரு கோவிலை தமிழர்கள் கட்டி எழுப்பினால் அடுத்தநாள் காலையில் கலவரம் வரும், இல்லையென்றால் சுக்குநூறாக உடைத்தெறியப்படும்.

அதன் பெயர்தான் இனவாதம் அந்த இனவாதத்தை காவி திரிவது தமிழர்களல்ல, ராணுவத்தில் தமிழர்கள் சேர்வதால் அதனை போக்கிவிட முடியாது.

ஆன்மீகத்திலேயே இனவாதம் பார்க்கும் சிங்களவன் ஆட்சியில் பார்க்கமாட்டான் என்ற நம்பிக்கையில் வாழ்கிறீர்கள்.

தமிழர்கள் இலங்கையில் பிற தொழில்களில் பணியாற்றுவதால் அவர்கள் உரிமையை பெற்று வாழ்கிறார்கள் என்று அர்த்தமல்ல, அவர்கள் வகிக்கும் தொழில்களிலிருந்து ஒரே இரவில் அவர்களை அடித்து விரட்டி துரத்திவிட முடியும்.

அதுதான் 1958/1977/1983 வரை நடந்தது, அதன் பெயர்தான் இனவாதம் .

கலவரங்கள் நின்று போய்விட்டதென்று அர்த்தம் கொள்ளவேண்டாம்,தமிழர்களை அடித்து தூக்கவேண்டுமென்ற  அவர்கள் மனநிலை இன்றும் அப்படியேதானிருக்கிறது.

அப்போதும் இனவாதம் எங்கள் பக்கமிருக்காது.

இரெண்டு எதிர் எதிர் கோணங்களில் இருந்து வந்தாலும் இரெண்டு கருத்தும் உண்மையின் அரை, அரை பாதிகளாக இருக்கின்றன.

இவை இரெண்டு இங்கே விவாதிக்க பட்ட பொருளுக்கு together they are giving a complete answer. 
 
2 hours ago, tulpen said:

ரஞ்சித், நீங்களோ நானோ இங்கு தெரிவிக்கும் கருத்துக்களை பார்த்து தாயகத்தில் வாழும் மக்கள் தமது நடைமுறை முடிவுகளை எடுப்பதில்லை. அங்குள்ள நிலைமைகளை அனுசரித்து த‍த்தமது பொருளாதார தேவைக்கேற்ப அங்கு வாழும் மக்கள் தமது வாழ்க்கை முறையை தீர்மானிக்கிறார்கள். அது இயல்பானது. மகிந்த கோட்டபாய அரசின் இனவெறி அரசியலையோ அங்கு மக்கள் மீது புரியும் இன ஒடுக்குமுறையையோ இங்கு யாரும் ஆதரித்து எழுதவில்லை. அப்படி எழுதியது போல் பொய்யுரைத்து  முத்திரை குத்தி அடுத்தவர் மீது துரோகி என்று வசைமாரி பொழிவதே தமிழ் தேசிய அரசியல் என்று நீங்கள் புரிந்து கொண்டிருப்பதால் அதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றீர்கள். இங்கு கருத்து தெரிவிக்கும் ஒவ்வொருவரும் சாதாரண மக்களே. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தமது அரசியல் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை உண்டு.  

எமது அரசியல் தலைமைகளின் அரசியல் பேதைத்தனத்தனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி, எம்மை தோற்கடித்து வெற்றி பெற்று விட்ட வெற்றி திமிரில் மகிந்த - கோட்டா கும்பல் சிறிது காலம் ஆட்டம் போட்டாலும் அந்த ஆட்டத்திற்கு ஒரு எல்லை உண்டு. எமக்கு அடுத்த வாய்ப்புகள் கிடைக்க சற்று காலமெடுக்கலாம். அநேகமாக அடுத்த தலைமுறைக்கே அடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதே எனது கணிப்பு.  ஏற்கனவே பழைய தவறுகளால் கிடைத்த பட்டறிவின் அடிப்படையில் யோசித்து அடுத்த தலைமுறை கெளரவமான ஒரு அரசியல் தீர்வை பெறும் வகையில் தமது அரசியலை கொண்டு செல்வர்  என்றே நம்புகிறேன். அதுவரை எமது மக்கள் சமூக, கல்வி, பொருளாதார ரீதியில் தமது இருப்பை பேண வேண்டிய கட்டாயம் உண்டு. அங்குள்ள நிலைமைகளை புரிந்து அதை அங்கு வாழும் மக்கள் செய்வார்கள், செய்து கொண்டிருக்கிறார்கள்.  அதுவே இயல்பானது.  

  • கருத்துக்கள உறவுகள்
On 28/5/2021 at 13:56, putthan said:

குத்தி முறிந்ததன் பலன் அது ....உயிர்தியாகத்தின் பலன் அது ....

பழைய பல்லவியை பாடி இருந்தால் பலர் மதம் கூட மாறுவார்கள் புத்தன் இவர்கள் ஓர் அரச சேவையில் இணைந்துள்ளார்கள் அவர்கள் குடும்ப நிலை காரணமாக அடுத்த படையணி பயிற்ச்சியில் இருக்கிறார்கள் அனைவரும் ஆண்கள் , பெண்கள் குறிப்பு அனவரும் தமிழர்கள் 

On 28/5/2021 at 18:44, Kandiah57 said:

நீங்கள் என்ன ராஜா...?தனிக்காட்டுராஜா.  சொல்லவருகிறிர்கள்...அந்தப்பெண்களை. உங்களுக்குப்பிடிததுள்ளதா?😜😜😜. சா...சா...அவர்கள் பேசும் தமிழ் நன்றாகவுள்ளதா?😎

பல முன்னாள் போராளிகள் அரசுடன் சேர்ந்து இயங்குறார்கள் சிலர் சிசில் பாதுகாப்பு படையாக சிலர் இராணுவமாக ஆனால் இங்கு முன்னாள் போராளிகளை கணக்கில் எடுப்பதில்லை அப்படி இருக்க அவர்களும் என்ன செய்வார்கள் அவர்களுக்கும் குடும்ம் சொந்தங்களும் உண்டு அவனவன் பிரச்சினை அவனவனுக்கு தெரியும் இங்கே எழுதுவதைப்போல் அல்ல கந்தையா அண்ணை

On 29/5/2021 at 01:50, விளங்க நினைப்பவன் said:

இவர்கள் இங்கே குத்தி முறிவது இலங்கையில் வாழ்கின்ற தமிழிச்சிகளை இராணுவ உடையில் கண்டால் இவர்களுக்கு அலர்ஜி.

இருக்கலாம் ஆனால் வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்களின் பிள்ளைகள் ராணுவத்தில் சேர்ந்தால் பெருமைப்படுவார்கள் அவ்வளவுதான் 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நன்றாக தெரியும். ஒரு பார்ட்டியும் வைப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பல முன்னாள் போராளிகள் அரசுடன் சேர்ந்து இயங்குறார்கள் சிலர் சிசில் பாதுகாப்பு படையாக சிலர் இராணுவமாக ஆனால் இங்கு முன்னாள் போராளிகளை கணக்கில் எடுப்பதில்லை அப்படி இருக்க அவர்களும் என்ன செய்வார்கள் அவர்களுக்கும் குடும்ம் சொந்தங்களும் உண்டு அவனவன் பிரச்சினை அவனவனுக்கு தெரியும் இங்கே எழுதுவதைப்போல் அல்ல கந்தையா அண்ணை

அட முழுக்க  தமிழ்பெண்பிள்ளைகள்  என்கிறீர்கள்...அப்ப.   ஏன்.  தமிழில்  கதைக்கிறார்களென்று  செய்தி போட்டார்கள்?. நான் எல்லாம்  சிங்கப்பெண்களென்று  எண்ணிவிட்டேன். எத்தசமூகத்துக்காகப் போராடினார்களோ  அந்த சமூகம்  அவர்களை  மதிக்கவில்லையென்பது. மிகக்கவலையான செய்தி. அவர்களின் நிலை எனக்கு நன்கு புரிகிறது. உங்கள்  விளக்கத்துக்கு நன்றி பல. மேலும் எனது தவறான  புரிதலுக்கு மனம் வருத்துகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2021 at 16:13, தனிக்காட்டு ராஜா said:

பழைய பல்லவியை பாடி இருந்தால் பலர் மதம் கூட மாறுவார்கள் புத்தன் இவர்கள் ஓர் அரச சேவையில் இணைந்துள்ளார்கள் அவர்கள் குடும்ப நிலை காரணமாக அடுத்த படையணி பயிற்ச்சியில் இருக்கிறார்கள் அனைவரும் ஆண்கள் , பெண்கள் குறிப்பு அனவரும் தமிழர்கள் 

இருக்கலாம் ஆனால் வெளிநாட்டில் வாழ்கின்ற தமிழர்களின் பிள்ளைகள் ராணுவத்தில் சேர்ந்தால் பெருமைப்படுவார்கள் அவ்வளவுதான் 

அவர்கள் இராணுவத்தில் இணைவதில் தப்பே இல்லை ...பிரித்தானியா ஆட்சியாளர்கள் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சி செய்யும் பொழுது அந்த நாட்டு மக்களை வைத்து தான் அடக்கி ஆட்சி செய்தார்கள். உயர் பதவிகளில் ஆட்சியாளர்கள் இருந்து கொண்டு ஏனைய பதவிக்கு பிராந்திய மக்களை உள்வாங்குவார்கள் ....இது நடைமுறை ..சுதந்திர்ம் கிடைத்த கையோடு செய்திருந்தால் நீங்கள் ,நான்  ஈழம் என்ற கருத்தையோ ,தமிழ் பிராந்தியம் என்ற சொல்லையோ ,ஏன் தமிழ் தேசியம் என்ற சொல்லையோ இன்று உச்சரிக்க வேண்டி வந்திருக்காது...
இன்று அமெரிக்கா ,மேற்குலகு ,சீனா போன்ற நாடுகள் தமிழர்,சிறுபான்மையினர் மனித உரிமை மீறல் என்று சிறிலங்காவில் மூக்கு நுழைக்க வேண்டிய தேவையும் வந்திருக்காது..

புலம் பெயர் பிரதேசத்தில் இன்று வாழும் இனகுழுமங்களில் (தமிழ்ர்கள் சிங்களவர்கள்,லெபனான்,சிரியா ..பல இனகுழுமங்களிலிருந்து)பொலிஸ் ,மற்றும் ஏனைய படைகளுக்கு ஆட்களை உள்வாங்குவதற்கு காரணம் அந்த இனக்குழுக்களின் மீது கொண்ட காதல் (அன்பு பாசம்) அல்ல மாறாக அவர்கள் செய்யும் குற்ற செயல்களையும்,அவர்கள் நாட்டு விரோதமாக செயல் படுவதை இலகுவாக கண்டறிவதற்கும்......

நிற‌வெறி பிடித்த மக்கள் வாழும் நாடுகளிலயே தவிர்க்க முடியாத காரணத்தால் இராணுவத்தில் கறுப்பர்களை இணைத்துள்ளார்கள் ...ஆகவே இனவெறி பிடித்த இராணுவத்தில் தமிழர்களை இணைக்க வேண்டிய காரணம் இன்று தவிர்க்க முடியாதது.. என்பது என்கருத்து ...
வறுமை வறுமை என்று சொல்கின்றீர்கள் அன்று தமிழன் செல்வசெழிப்புடன் வாழ்ந்தானா அதுதான் தமிழர்கள் முப்படைக்கும் பொலிஸுக்கும் விண்ணபிக்கவில்லையா? அன்று தமிழ் என்ற ஒரே காரண்த்துக்காக எடுக்கவில்லை இன்று தமிழன் என்ற காரணத்துக்காக எடுக்க வேண்டிய கட்டாயம் ....இருக்கின்றது ....

எதற்கு எடுத்தாலும் வறுமையும் ,புலம்பெயர் தமிழர்களையும் குற்றம் சாட்டுவதும் பழைய பல்லவிதான்...😀

இதுவும் கடந்து போகும்😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

அருமை அண்ணா. இதைவிட எவராலும் தெளிவாக விளக்கியிருக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

அன்று தமிழன் செல்வசெழிப்புடன் வாழ்ந்தானா அதுதான் தமிழர்கள் முப்படைக்கும் பொலிஸுக்கும் விண்ணபிக்கவில்லையா? அன்று தமிழ் என்ற ஒரே காரண்த்துக்காக எடுக்கவில்லை இன்று தமிழன் என்ற காரணத்துக்காக எடுக்க வேண்டிய கட்டாயம் ....இருக்கின்றது ....

இதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. 1960களுக்கு முதல் இராணுவத்தில் உயர்பதவிகளில் பல தமிழர்கள் இருந்தார்கள். சிறிமாவோ பதவிக்கு  வந்தவுடன் ஒரு இராணுவ புரட்சி முயற்சி இடம்பெற்றது. இந்த புரட்சிக்கு இராணுவத்தில் இருந்த கத்தோலிக்க சிங்களவரும் தமிழருமே தலைமை வகித்தார்கள். புரட்சி முறியடிக்கப்பட்ட பின்னர் கத்தோலிக்கரும் தமிழரும் புறக்கணிக்கப்பட்டு சிங்கள பௌத்தர்களுக்கு முதலிடம் வழங்கப்பட்டது. பண்டாரநாயக்க கொல்லப்பட்டதை அடுத்து சிறிமாவோ சிங்கள பௌத்தத்துக்கு முதலிடம் வழங்கிய காரணத்தால் அவர்களே அனைத்துக்கும் தெரிவானார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

உண்மை.. அந்த புரட்சியில் தமிழ் கத்தோலிக்கர்களும் தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டார்கள்...ஆனால் சிங்கள கிறிஸ்தவர்கள் புறக்கணிக்கப்படவில்லை ....பறங்கியர்கள் என்ற அடையாளத்துடன் சிங்கள கிறிஸ்தவர்கள்  உள்வாங்கப்பட்டார்கள் இன்று அவர்களின் வாரிசுகள் சில்வா,டிமெல் ,ஃபெர்னாடோ ,என்ற பெயர்களுடன் தாங்கள் பெளத்தர்கள் என அடையாளப்படுத்தி உயர் பதவிகளில் இருக்கின்றனர் ...
சிறிமாவின் மொட்டுதனமான முடிவு மதர் லங்காவை இந்த நிலைக்கு இட்டு சென்றுள்ளது..
இந்திராகாந்தியை கொலை செய்தமைக்காக சீக்கியர்களை இராணுவத்தில் சேர்க்காமல் விடவில்லை இந்திய அரசாங்கம்....இன்றும் இந்தியாவில் சீக்கியர்கள் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

44 minutes ago, putthan said:

நீங்கள் இருவரும் சொன்ன வரலாறு மிக சரியானது. ஆயினும் இலங்கை அரச சேவையில் தமிழர் புறக்கணிப்பு என்பதை இந்த குறுகிய பார்வையில் மட்டும் பார்க்க முடியாது.

48க்கு முன் எமது எண்ணிக்கை க்கும் அதிகமாக அரச, தனியார் துறைகளில் மேல் மட்டத்தை, இடை மட்டத்தை நாம் நிரப்பினோம். We were punching above our weight.

பன்னெடுங்காலமாக ஊறிப்போன பெளத்த சிங்கள மஹாவம்ச சிந்தனை இதையொட்டி 150 வருடங்களாக கடும் சினம் கொண்டிருந்தது.

அநகாரிக தர்மபால போன்றோர் வெளிபடையாகவே பேசியுள்ளனர்.

48 இல் அவர்கள் கைக்கு அதிகாரம் மாறியதுமே - இந்த ஒழுங்கை மாற்றி தமிழர்களை, பறங்கியரை புறம்தள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பமாகி விட்டது.

இதன் முக்கிய அம்சம்தான் “தனி சிங்கள சட்டம்”.

நீங்கள் சொல்லும் புரட்சி முயற்சிக்கு முன்பே தமிழர்களையும், பறங்கியரையும் ஆப்படிக்கும் திட்டம் ஆரம்பமாகிவிட்டது.

இந்த ஆபத்தை உணர்ந்த தமிழ், பறங்கி, கத்தோலிக்க உயர் அதிகாரிகளின் அதிகாரத்தை தக்கவைக்கும் கடைசி முயற்சியே அந்த சதிப்புரட்சி முயற்சி.

எண்ணிக்கையில் குறைந்த பறங்கியர் white Australia பாலிசியை பயன்படுத்தி இடம்பெயர்ந்தனர். முடியாதவர்கள் பெளத்த சிங்களவராக மாறினர்.

நாம் எதிர்த்து போராடினோம்.

இப்போதும் இந்த ஒதுக்கல் தொடர்கிறது - சிப்பாய்கள் தரத்தில்தான் தமிழர்களுக்கு வேலை. மிக சொற்பமானவர்களே அதிகாரிகள். அவர்கள் கூட களஞ்சிய, அல்லது விளையாட்டு துறைக்குத்தான் பொறுப்பாக இருப்பார்கள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

முழு சிறிலங்காவையும் ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, putthan said:

முழு சிறிலங்காவையும் ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்....

உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உண்மைதான்.

சிறிலங்கா  மீண்டும் ஒர் கந்தக பூமியாக மாறாமல் இருக்க வேண்டும் அது முழுக்க முழுக்க சிங்கள ஆட்சியாளர்கள் கையில் உண்டு ...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

சிறிலங்கா  மீண்டும் ஒர் கந்தக பூமியாக மாறாமல் இருக்க வேண்டும் அது முழுக்க முழுக்க சிங்கள ஆட்சியாளர்கள் கையில் உண்டு ...

இல்லை

அது இனி 

முழுக்க முழுக்க சீன ஆட்சியாளர்கள் கையில் உண்டு ...

4 hours ago, goshan_che said:

நீங்கள் இருவரும் சொன்ன வரலாறு மிக சரியானது. ஆயினும் இலங்கை அரச சேவையில் தமிழர் புறக்கணிப்பு என்பதை இந்த குறுகிய பார்வையில் மட்டும் பார்க்க முடியாது.

48க்கு முன் எமது எண்ணிக்கை க்கும் அதிகமாக அரச, தனியார் துறைகளில் மேல் மட்டத்தை, இடை மட்டத்தை நாம் நிரப்பினோம். We were punching above our weight.

பன்னெடுங்காலமாக ஊறிப்போன பெளத்த சிங்கள மஹாவம்ச சிந்தனை இதையொட்டி 150 வருடங்களாக கடும் சினம் கொண்டிருந்தது.

அநகாரிக தர்மபால போன்றோர் வெளிபடையாகவே பேசியுள்ளனர்.

48 இல் அவர்கள் கைக்கு அதிகாரம் மாறியதுமே - இந்த ஒழுங்கை மாற்றி தமிழர்களை, பறங்கியரை புறம்தள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பமாகி விட்டது.

இதன் முக்கிய அம்சம்தான் “தனி சிங்கள சட்டம்”.

நீங்கள் சொல்லும் புரட்சி முயற்சிக்கு முன்பே தமிழர்களையும், பறங்கியரையும் ஆப்படிக்கும் திட்டம் ஆரம்பமாகிவிட்டது.

இந்த ஆபத்தை உணர்ந்த தமிழ், பறங்கி, கத்தோலிக்க உயர் அதிகாரிகளின் அதிகாரத்தை தக்கவைக்கும் கடைசி முயற்சியே அந்த சதிப்புரட்சி முயற்சி.

எண்ணிக்கையில் குறைந்த பறங்கியர் white Australia பாலிசியை பயன்படுத்தி இடம்பெயர்ந்தனர். முடியாதவர்கள் பெளத்த சிங்களவராக மாறினர்.

நாம் எதிர்த்து போராடினோம்.

இப்போதும் இந்த ஒதுக்கல் தொடர்கிறது - சிப்பாய்கள் தரத்தில்தான் தமிழர்களுக்கு வேலை. மிக சொற்பமானவர்களே அதிகாரிகள். அவர்கள் கூட களஞ்சிய, அல்லது விளையாட்டு துறைக்குத்தான் பொறுப்பாக இருப்பார்கள்.

நன்றி

சகோ

கருத்துப்பரிமாற்றங்களின் வடிவிலும்

தாம் சொல்வது  சரியென  நிறுவும் அவசரத்திலும்

வரலாறுகளை  மாற்றி

எல்லாமே தமிழர் தவறுகள் என  வரலாறு மாற்றி எழுதப்படும்  சந்தர்ப்பங்கள்  இங்குண்டு

அதன்  போதெல்லாம் உங்களின் குரல் ஒலிப்பதை காண்கின்றேன்

ஆகக்குறைந்தது இந்த கரிசனையாவது  எமக்கு தேவை  இன்று.

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் பெண்கள் மோட்டார் சைக்கிள் படையணி யாழ்.நகரில் களமிறக்கப்பட்டுள்ளது

"தமிழ்ப் பெண்கள் மோட்டார் சயிக்கிளில் யாழ்நகரில் சுகாதார அறிவுறுத்தலை வழங்குகின்றனர்." என்று செய்தியிருந்திருந்தால்  யாரும் கருத்துச் சொல்லப்போவதில்லை. தலையங்கமே மக்களை சிந்திக்க வைக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

உண்மைதான்..

ஆனால் பாதிக்குமேற்பட்ட தலையங்கங்கள் விதாண்டவாததைமட்டுமே வழிவகுக்கிறது.. 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/6/2021 at 03:16, Kandiah57 said:

அட முழுக்க  தமிழ்பெண்பிள்ளைகள்  என்கிறீர்கள்...அப்ப.   ஏன்.  தமிழில்  கதைக்கிறார்களென்று  செய்தி போட்டார்கள்?. நான் எல்லாம்  சிங்கப்பெண்களென்று  எண்ணிவிட்டேன். எத்தசமூகத்துக்காகப் போராடினார்களோ  அந்த சமூகம்  அவர்களை  மதிக்கவில்லையென்பது. மிகக்கவலையான செய்தி. அவர்களின் நிலை எனக்கு நன்கு புரிகிறது. உங்கள்  விளக்கத்துக்கு நன்றி பல. மேலும் எனது தவறான  புரிதலுக்கு மனம் வருத்துகிறேன். 

இதில் மனம் வருந்த ஒன்றும் இல்லை பலர் முன்னாள் போராளிகள் என சொல்லி சொல்லி  சிலர் தயவில் வாழ்கிறார்கள் வாழ்கிறார்கள்.
 பலர் முன்னாள் போராளிகள் யாரிலும் தங்கியிராமல் சுயமாக வாழவும் நினைக்கிறார்கள் எனக்கு தெரிந்த ஒருவர் தனது 8 பிள்ளைகள் அனைவரும் போராளிகள் வன்னியில் தலைவரே கூப்பிட்டு போராளி குடும்பம் என கெளரவிக்கப்பட்டவர்கள்  இன்று உடைஞ்ச மோட்டார் , சிதைந்த பகுதிகளை சீர்செய்து வர்ணம்  பூசி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் இத்தனைக்கு ஒரு கால் இல்லை .
 பல் முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுக்க தயக்கம் காட்டுகிறார்கள்  நேர்பட வேலை இல்லையெனவும் சொல்ல அவர்களும் என்ன செய்வார்கள் அண்ணை  
எனக்கு தெரிந்த சில தமிழ் இளைஞர்கள் வேலை இல்லை கூலிக்கு முஸ்லீம்களிடம் , வேலை செய்பவர்கள் பொலிசுக்கும் , இராணுவத்தும் சேர ஒரு வழியைக்காட்டினேன் தற்போது அவர்களை பார்த்து பார்த்து பல் ஆயிரம் பேர் சேர்ந்துள்ளார்கள் தற்போது அவர்களுக்கு வங்கி கடன் , கிடைக்க அக்கா , தங்கை  கல்யாணம் நடந்தேறுகிறது காலம் மாறுகிறது  . இல்லையென்றால் அவர்கள் இப்பவ்ரைக்கும் சும்மா கூலி வேலையாகத்தான் இருப்பார்கள் விமான படை கடற்படையிலும் சேர்ந்துள்ளார்கள்  சம்பளம் கிடைக்கும் , தொழில் என்ற ஒன்றுக்கும் .
 
  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2021 at 04:33, putthan said:

அவர்கள் இராணுவத்தில் இணைவதில் தப்பே இல்லை ...பிரித்தானியா ஆட்சியாளர்கள் இந்தியா,இலங்கை போன்ற நாடுகளை அடிமைப்படுத்தி ஆட்சி செய்யும் பொழுது அந்த நாட்டு மக்களை வைத்து தான் அடக்கி ஆட்சி செய்தார்கள். உயர் பதவிகளில் ஆட்சியாளர்கள் இருந்து கொண்டு ஏனைய பதவிக்கு பிராந்திய மக்களை உள்வாங்குவார்கள் ....இது நடைமுறை ..சுதந்திர்ம் கிடைத்த கையோடு செய்திருந்தால் நீங்கள் ,நான்  ஈழம் என்ற கருத்தையோ ,தமிழ் பிராந்தியம் என்ற சொல்லையோ ,ஏன் தமிழ் தேசியம் என்ற சொல்லையோ இன்று உச்சரிக்க வேண்டி வந்திருக்காது...
இன்று அமெரிக்கா ,மேற்குலகு ,சீனா போன்ற நாடுகள் தமிழர்,சிறுபான்மையினர் மனித உரிமை மீறல் என்று சிறிலங்காவில் மூக்கு நுழைக்க வேண்டிய தேவையும் வந்திருக்காது..

புலம் பெயர் பிரதேசத்தில் இன்று வாழும் இனகுழுமங்களில் (தமிழ்ர்கள் சிங்களவர்கள்,லெபனான்,சிரியா ..பல இனகுழுமங்களிலிருந்து)பொலிஸ் ,மற்றும் ஏனைய படைகளுக்கு ஆட்களை உள்வாங்குவதற்கு காரணம் அந்த இனக்குழுக்களின் மீது கொண்ட காதல் (அன்பு பாசம்) அல்ல மாறாக அவர்கள் செய்யும் குற்ற செயல்களையும்,அவர்கள் நாட்டு விரோதமாக செயல் படுவதை இலகுவாக கண்டறிவதற்கும்......

நிற‌வெறி பிடித்த மக்கள் வாழும் நாடுகளிலயே தவிர்க்க முடியாத காரணத்தால் இராணுவத்தில் கறுப்பர்களை இணைத்துள்ளார்கள் ...ஆகவே இனவெறி பிடித்த இராணுவத்தில் தமிழர்களை இணைக்க வேண்டிய காரணம் இன்று தவிர்க்க முடியாதது.. என்பது என்கருத்து ...
வறுமை வறுமை என்று சொல்கின்றீர்கள் அன்று தமிழன் செல்வசெழிப்புடன் வாழ்ந்தானா அதுதான் தமிழர்கள் முப்படைக்கும் பொலிஸுக்கும் விண்ணபிக்கவில்லையா? அன்று தமிழ் என்ற ஒரே காரண்த்துக்காக எடுக்கவில்லை இன்று தமிழன் என்ற காரணத்துக்காக எடுக்க வேண்டிய கட்டாயம் ....இருக்கின்றது ....

எதற்கு எடுத்தாலும் வறுமையும் ,புலம்பெயர் தமிழர்களையும் குற்றம் சாட்டுவதும் பழைய பல்லவிதான்...😀

இதுவும் கடந்து போகும்😀

நான் யாரையும் குற்ற சொல்லவில்லை இங்குள்ள நிலை ஒரு சிறு துளியேனும் விளங்க வேண்டும் என்றே சொல்கிறேன் இனியும் ஈழம் , தேசியம் என சொல்லி கொண்டு திரிவோமாக இருந்தால் வார்த்தை அளவில் சொல்லிக்கொண்டு திரிய வேண்டியதுதான் ஆனால் நடக்க போவது ஒன்றும் இல்லை 
தமிழர்கள் உயராதிரிகளாக விரும்புவதில்லை அதாவது அரச தொழிலில் இருப்பவர்கள் றிஸ்க் எடுக்க விரும்புவதில்லை புத்தன் எனது துறையில் 20 வருடங்களாக ஆசிரியராக இருப்பவர் ஆசிரியராகவே இருக்க நினைக்கிறார் பதவி உயர்வு சென்றால் அலைச்சல் கூடவாம் ஆனால் அவர்களுக்கு பிறகு சேர்ந்தவர்கள் அவர்களை நிற்கவச்சி கேள்வி கேட்பான் . அண்மையில் எங்களது வளவில் அத்திவாரம் தோண்டும் போது வந்த கைக்குண்டு கொழும்புக்கு அறிவித்தோம் அங்கு வந்த உயரதிகாரி ஒரு தமிழர் மூன்று பக்க அறிக்கை எழுதி அறிக்கையை இப்படி எழுதுங்கள் இதனால் அங்கு நின்ற எனது சகோதரர்களுக்கு பிரச்சினை வராதமாதிரியும்  வழி  சொன்னார் தற்போது அவர்களும் அந்த துறையில் வேலை செய்கின்றனர் அவர்கள் வேலை எடுக்கும் முன்னர் நடந்த சம்பவம் .

வறுமை இருப்பதாலே சுட்டுக்காட்டுகிறேன் இதுவரை புலபெயர்நாட்டில் வறுமையில் வாழ்ந்தவர்கள் ஒரு தரம் மட்டும் சாப்பாடு சாப்பிட்ட வந்தவர்கள் என எங்கும் கேள்விப்பட்டதில்லை அதற்க்காகவே சொன்னது

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தாயக தமிழ் மக்கள் ஈழ்ம் ,தேசியம் பேசா விட்டால் ....அது வேறு சக்திகளின் நன்மை கருதி வேறு சக்திகள் பேசும் அந்த நிலைக்கு அதி உத்தமர்கள் நாட்டை கொன்டு வைத்துள்ளார்கள் ....வறுமையை தாயகத்தில் எந்த அரசு ஒழித்துகட்டாது

  • கருத்துக்கள உறவுகள்

தனியொருவன்,

உங்கள் கருத்துக்கள் யதார்த்தமானவை. ஆனால், எங்களுக்கு எங்கள் மன அழுத்தங்களை குறைக்கும் வகையில் உங்கள் கருத்துக்கள் அமையவில்லை. இதனால், உங்கள் கருத்துக்களுக்கு பச்சை குத்தி அழகுபடுத்த முடியவில்லை. 

பெயருக்கு ஏற்றபடி தனியொருவனாக கருத்துக்களை இடுகை செய்வதற்கு பாராட்டுக்கள். 🤟

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

இன்று தாயக தமிழ் மக்கள் ஈழ்ம் ,தேசியம் பேசா விட்டால் ....அது வேறு சக்திகளின் நன்மை கருதி வேறு சக்திகள் பேசும் அந்த நிலைக்கு அதி உத்தமர்கள் நாட்டை கொன்டு வைத்துள்ளார்கள் ....வறுமையை தாயகத்தில் எந்த அரசு ஒழித்துகட்டாது

அதைத்தானே நானும் சொல்கிறேன் வறுமையை அரசு ஒழித்துக்கட்டாது ஆனால் நாம் தற்போதுள்ள காலத்தில் வறுமை வறுமை என யார் தயவிலும் வாழாமல் சொந்தக்காலில் நிற்க ஊன்றுகோலை ஒன்றை தேடச்சொல்கிறேன்  அவ்வளவுதான் அது பெரிய குற்றமாக எனக்கு படவில்லை . தற்போது முடக்கம் 10 நாட் களுக்கும் மேலாகிறது அரசு கொடுத்த 5000 ரூபா பணத்தை கூட எம்மவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள் சமுர்த்தி ஊழியர்கள் அதுமட்டும் அல்லாமல் இரு வர் வாழ்ந்தால் அவர்களின் உணவுமுத்திரைக்கமைவாக  (அந்த தொகைக்கு ) அதில் ஒரு பங்கை கழித்து வழங்கினார்கள் அதாவது 5000 ரூபாவில் 1500ஐ கழித்து இதற்குள் இருவர் வாழமுடியுமா என்ன ??    ஒரு சிலருக்கு வழங்கவும் இல்லை

தற்போது அரசு மொத்த தொகையையும் கொடுக்க சொல்லியுள்ளது  .

இலங்கையில் கட்சிகள் தான் ஈழம் , தேசியம் என பேசுகிறது ஆனால் மக்கள் வாழ்ந்தால் போதுமென நினைக்கிறார்கள் இதுவரைக்கும் இந்த முடக்கத்தில் எந்த அரசியல்  வாதியாவது மக்களுக்கு உலர் உணவுகளை வழங்கி படம் போட்டிருக்கான பொது வெளியில் அல்லாவிட்டாலும் சொந்த வீடுகளுக்கு சென்றாவது ? இல்லை மக்களை மக்கள்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் அது அவர்கள் சொந்தக்காலில் நிற்க வேண்டும்  என்பதே எனது அவாவும் 

2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

தனியொருவன்,

உங்கள் கருத்துக்கள் யதார்த்தமானவை. ஆனால், எங்களுக்கு எங்கள் மன அழுத்தங்களை குறைக்கும் வகையில் உங்கள் கருத்துக்கள் அமையவில்லை. இதனால், உங்கள் கருத்துக்களுக்கு பச்சை குத்தி அழகுபடுத்த முடியவில்லை. 

பெயருக்கு ஏற்றபடி தனியொருவனாக கருத்துக்களை இடுகை செய்வதற்கு பாராட்டுக்கள். 🤟

யார் பச்சையும் எனக்கு தேவையில்லை நண்பரே எனது சொந்த மூளைக்கு எது சரியெனப்படுகிறதோ அதை எழுதுகிறேன் எல்லோருக்கும் பிடித்த மாதிரி எனக்கு எழுது வராது இதனால்தான் பலருக்கு என்னையும் பிடிக்காது  கருத்துக்களையும் பிடிக்காது இங்குள்ள நிலை மேலே எழுதியுள்ளேன் எல்லோரும் 5000 ரூபா வறிய மக்களுக்கு கிடைக்கிறது என நினைக்கிறார்கள் அதன் உண்மை நிலையை சொல்லியுள்ளேன் இதைதான் வெளிநாட்டிலுள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

தனியொருவனின் தாயக மக்களின் பொருளாதார சிக்கல் வறுமை பற்றிய கருத்துக்கள் காத்திரமானவை மறுக்கமுடியாதவை.

அதேநேரம் வறுமையென்பதை மட்டும் வைத்துக்கொண்டு எமது இனத்தின் எதிர்கால இருப்புபற்றி புலத்திலிருப்பவர் கவலைபடாமல் இருக்க முடியுமா?

அன்றாட போராட்டத்தின் ஒரு பக்கத்தை வைத்துக்கொண்டு  இனிவரும் பல தலைமுறைகள் சம்பந்தப்பட்ட எம் மக்களின் அரசியல் இருப்பைபற்றி பேசாதுவிட்டால் எதிர்கால சந்ததி நிச்சயமாக தன்னோட அடையாளத்தை இலங்கை தீவில் இழந்துவிடும். வறுமை என்பது ஒருகாலத்தில் சிலவேளை முற்றாக ஒழியும் வாய்ப்புகள் உண்டு , ஆனால் இன அடையாளம் அழிந்துபோனால் மீண்டுவரும் வாய்ப்பிருக்கா?

அதை யார் பேசவேண்டும் முன்னிலைபடுத்தவேண்டும், சர்வதேச கவனத்திற்கு கொண்டு வேண்டும்??

நிச்சயமாக தற்போதுள்ள சூழ்நிலையில் தாயகத்திலிருப்பவர்கள் அரசுக்கெதிராக பேசமுடியாது, புலத்திலிருப்பவர்கள் மட்டுமே அதை பேசமுடியும் செய்யமுடியும், கருத்துக்களை அச்சுறுத்தலுக்கிடமின்றி கூறமுடியும்.

ஓடி போனவர்கள் இலங்கை நிலவரம்பற்றி எம்மக்கள் பற்றி பேசகூடாது, புலத்திலிருந்தபடி  தாயகம்பற்றி கருத்து சொல்லகூடாது என்று இங்கே அடிக்கடி சிலர் ஒரு கருத்தை பகிர பார்த்திருக்கிறோம்,

புலத்திலிருந்து மீண்டும் ஒரு ஆயுதபோராட்டத்தை நாங்கள் தூண்டிவிட்டால்தான் அது தப்பு, அரசியல் இருப்பு பற்றி பேசினால் அதில் என்ன தவறு?  சொந்த மக்களின் எதிர்கால அரசியல் இருப்பைபற்றி தாயகத்திலிருந்துதான் பேசவேண்டும் இல்லை, உலகின் எந்த மூலையிலிருந்தும் அவர்களை நினைக்கலாம் அது எமது தார்மீக உரிமை அதில் தவறேதும் இல்லை.

ஓடிபோனவர்கள் தாயக அரசியல் பற்றி பேசகூடாது என்றால், இந்த ஓடிபோனவர்களின் பலமான ஆதரவில்தான் ஒருகாலத்தில்  உலகத்திலிருந்தே துண்டிக்கப்பட்டு எவர் ஆதரவும் இன்று இருள் சூழ்ந்த நிலையிலிருந்த எமது மக்களையும் விடுதலை இயக்கத்தையும் தோள் கொடுத்து நிமிர்த்தியது.

அப்போதுமட்டும் தாயகம் பற்றி பேச உரிமை இருந்த எமக்கு இப்போது மட்டும் வேண்டாம் என்று சொல்ல எவருக்கும் உரித்தில்லை என்பதே புலத்திலுள்ள பலரின் ஆதங்கம்.

இது தனியொருவனுக்கான கருத்தாக சொல்லவில்லை இதுபோன்று கருத்து பகிரும் அனைவருக்காகவும் சொல்கிறேன்.

இன்னும் சிலகாலம்தான் புலத்திலுள்ளவர்கள் தாயகம்பற்றியும் எம் மக்களின் எதிர்கால அரசியல் வாழ்வுபற்றியும் சர்வதேச அளவில் பேசுவார்கள் கவலைபடுவார்கள் சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்வார்கள். 

இப்போ இருக்கும் பெரிசுகள் எல்லாம் ஒரு 25 வருசத்தின் பின்னர் மண்டையைபோட புலத்திலுள்ள பெரும்பான்மையான இளையோர்கள் எமது பிரச்சனைபற்றி பேசமாட்டார்கள் அவர்களின் தனிப்பட்ட வாழ்வோடு ஒதுங்கி கொள்வார்கள், அப்போது இலங்கைதீவில் வாய்பேச முடியாத நிலையிலிருக்கும் எமது மக்களின் சார்பில் குரல் கொடுக்க எவருமே இன்றி நிரந்தர அரசியல் அடிமைகளாக்கப்பட்டுவிடும் நிலை உருவாகும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

அதேதான். புலம்பெயர்ந்தவர்கள் மட்டும் இல்லாதிருந்திருந்தால், இன்று இலங்கைக்கு உலகம் பெரும் பாராட்டு கொடுத்திருக்கும், இலங்கையும் உலக நாடுகளுக்கு பாடம் எடுத்திருக்கும். நமது நீதி மண்ணோடு மாண்டிருக்கும். அப்படி நடக்கவில்லையே என்பதுதான் சிங்கள அரசினதும், அதன் அடிவருடிகளின் புலம்பலும் புலம்பெயர்ந்தோர் மீதுள்ள வெறுப்பும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2021 at 22:27, விசுகு said:

முழுக்க முழுக்க சீன ஆட்சியாளர்கள் கையில் உண்டு ...

கொஞ்சம் இருங்கோ! சீனாக்காரன் தன்ர நாட்டு, நகர குப்பையெல்லாம் கொண்டுவந்து கொட்டப்போறான் தான் எடுத்த குத்தகை பூமியில். 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதில் மனம் வருந்த ஒன்றும் இல்லை பலர் முன்னாள் போராளிகள் என சொல்லி சொல்லி  சிலர் தயவில் வாழ்கிறார்கள் வாழ்கிறார்கள்.
 பலர் முன்னாள் போராளிகள் யாரிலும் தங்கியிராமல் சுயமாக வாழவும் நினைக்கிறார்கள் எனக்கு தெரிந்த ஒருவர் தனது 8 பிள்ளைகள் அனைவரும் போராளிகள் வன்னியில் தலைவரே கூப்பிட்டு போராளி குடும்பம் என கெளரவிக்கப்பட்டவர்கள்  இன்று உடைஞ்ச மோட்டார் , சிதைந்த பகுதிகளை சீர்செய்து வர்ணம்  பூசி உழைத்துக்கொண்டிருக்கிறார்கள் இத்தனைக்கு ஒரு கால் இல்லை .
 பல் முன்னாள் போராளிகளுக்கு வேலை கொடுக்க தயக்கம் காட்டுகிறார்கள்  நேர்பட வேலை இல்லையெனவும் சொல்ல அவர்களும் என்ன செய்வார்கள் அண்ணை  
எனக்கு தெரிந்த சில தமிழ் இளைஞர்கள் வேலை இல்லை கூலிக்கு முஸ்லீம்களிடம் , வேலை செய்பவர்கள் பொலிசுக்கும் , இராணுவத்தும் சேர ஒரு வழியைக்காட்டினேன் தற்போது அவர்களை பார்த்து பார்த்து பல் ஆயிரம் பேர் சேர்ந்துள்ளார்கள் தற்போது அவர்களுக்கு வங்கி கடன் , கிடைக்க அக்கா , தங்கை  கல்யாணம் நடந்தேறுகிறது காலம் மாறுகிறது  . இல்லையென்றால் அவர்கள் இப்பவ்ரைக்கும் சும்மா கூலி வேலையாகத்தான் இருப்பார்கள் விமான படை கடற்படையிலும் சேர்ந்துள்ளார்கள்  சம்பளம் கிடைக்கும் , தொழில் என்ற ஒன்றுக்கும் .
 
இது ஒண்டுமட்டுமே எங்களுக்குப் போதும் தனியை போட்டுத் தாக்க! 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.