Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கடலினுள் பேரூந்துகள் - கடல் வளத்தை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வளங்களை அதிகரிப்பதற்கு சாத்தியமான அனைத்து வழிவகைகளும் பயன்டுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டுள்ளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

No description available.

மேலும்,  குறித்த வளங்களின் அதிகரிப்பானது மக்களின் வாழ்வாதாரம் வலுப்படுத்தப்படுவதை நோக்கமாகக் கொண்டது எனவும் தெரிவித்துள்ளார்.

செயற்கையான முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழலை உருவாக்கும் வகையில், வடக்கு கடலில் பேரூந்துகள் இறக்கி விடப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

No description available.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் அடிப்படையில், வடக்கு கடலில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான கடல் பிரதேசங்களை அடையாளங்கண்டு, பயன்படுத்த முடியாது கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் மற்றும் புகையிரதப் பெட்டிகளை இறக்கி விடுவதன் மூலம் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு  ஏதுவான கடல் நீரடிப் பாறைக்கு இணையான  சூழலை உருவாக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

No description available.

அந்தவகையில்,  கடற்படையின் ஒத்துழைப்புடன் கடற்றொழில் திணைக்களத்தினால் வடக்கு கடலில் இன்று(11.06.2021) ஆரம்பிக்கப்பட்ட, குறித்த செயற்திட்டத்தின் முதற் கட்டத்தில் சுமார் 30 பேரூந்துகளை கடலில் இறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No description available.

இந்நிலையில், முதலாவது தொகுதி பேரூந்துகளை காங்கேசன் துறை, துறைமுகத்தில் இருந்து ஏற்றிச் சென்ற சயுரு எனும்  கப்பல், அடையாளப்படுத்தப்பட்ட கடல் பகுதியில் குறித்த பேரூந்துகளை கடலின் அடியில் இறக்கியுள்ளது.

No description available.

இதேபோன்று எஞ்சிய பேரூந்துகளும் எதிர்வரும் நாட்களில் கடலில் இறக்கி விடப்படும் என்று கடற்படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா போன்ற அபிவிருத்தியடைந்த நாடுளில் மேற்கொள்ளப்படுவது போன்று, செயற்கை முறையில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கு  ஏதுவான சூழலை உருவாக்குவதன் மூலம் எமது கடல் வளத்தினை  கணிசமானளவு அதிகரித்துக் கொள்ள முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ள, கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெ.சுதாகரன் தலைமையிலான அணியினருக்கு தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துள்ளதுடன் கடற்படையினயருக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு கடலினுள் பேரூந்துகள் - கடல் வளத்தை அதிகரிக்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு பைத்தியம் முற்றிவிட்டது. இப்படி பிற உலோக மற்றும் இரசாயனக் கலப்பு இரும்பை மற்றும் இரசாயனக் குப்பைகளை கடலுக்குள் கொட்டுவது எப்படி கடல்வாழ் உயிரினங்களுக்கு உதவும்...??! இவை எப்படி அழிக்கப்படும் இயற்கையான உயிரின முருகைக்கற்பாறைகளுக்கு ஈடாகும். 

இந்த இரும்புகளும்.. அவற்றி உள்ள இதர இரசாயனங்களும் கடல் நீரில் தாக்கமடைவதால்.. இன்னும் இன்னும் கடல் உயிரினங்களுக்கு பாதகாமன சூழல் உருவாகுமே தவிர.. அவற்றிற்கு சாதகமான சூழல் உருவாக உடனடிச் சாத்தியம் குறைவே ஆகும்.

Although the ocean covers two-thirds of the surface of the Earth, it is surprisingly vulnerable to human influences such as our noise, overfishing, pollution, and waste dumping from human activities.

https://www.marinebio.org/conservation/ocean-dumping/

---------------

இந்த தாடியன் தனது அறியாமையால் சொந்த ஆதாயத்திற்காக சொந்த இனத்தை காட்டிக்கொடுத்து அழிந்து வாழ்ந்தது மட்டுமல்ல.. இன்று அந்த இனத்தின் இயற்கை வளங்களையும்... அதன் எதிர்கால சந்ததியையும் அழித்து அதில் தனது ஆதாயத்தை அடைய நினைக்கிறார். இந்த முட்டாள்களை இவர்களின் அறியாமைகளையும் தமிழினம் தான் இன்னும் காத்து வருகின்றமை எமது இனத்தில் இருக்கும் இன்னொரு பக்க.. சாபக் கேடு.  என்ன செய்வது...????!

  • கருத்துக்கள உறவுகள்

வேறு நாடுகளில் இப்படி செய்கின்றார்களா? சூழலியல் நிபுணர்கள்தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். நம்ம  ஐங்கரநேசன் ஐயா இதுபற்றி என்ன கூறுகின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

வேறு நாடுகளில் இப்படி செய்கின்றார்களா? சூழலியல் நிபுணர்கள்தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். நம்ம  ஐங்கரநேசன் ஐயா இதுபற்றி என்ன கூறுகின்றார்?

The gray list includes water highly contaminated with arsenic, copper, lead, zinc, organosilicon compounds, any type of cyanide, flouride, pesticides, pesticide by-products, acids and bases, beryllium, chromium, nickel and nickel compounds, vanadium, scrap metal, containers, bulky wastes, lower level radioactive material and any material that will affect the ecosystem due to the amount in which it is dumped.

இன்னும் ஐங்கரநேசனும்.. சுமந்திரனும்.. தான் சொல்லனுமா.

சுயமாக தேடுங்கள்.. உலகப் பரப்பெங்கும்.. இதுவே இன்றைய பேசு பொருள்.

ஆனால்.. டக்கிளஸ் தேவானந்த போன்ற முட்டாள்கள்.. மக்களையும்.. வளங்களையும் தவறாகப் பயன்படுத்தி.. தமது ஆதாயத்தை பார்க்க விளைகிறார்களே தவிர.. சொறீலங்கா சிங்கள ஆட்சியாளர்களின் வழியை பின்பற்றி.. வேறு உருப்படியாக எதையும் சிந்திப்பவர்களாக இல்லை.

ஆனால்... மக்கள் இது குறித்து சிந்திக்கவும் அறிவூட்டவும் படனும். இளைய தலைமுறை இணைய உலாவிகள்.. இதில் அதிகம் பங்களிக்கலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இது? புது சிந்தனையாய் கிடக்கு!!!!! 😲

No description available.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

என்னப்பா இது? புது சிந்தனையாய் கிடக்கு!!!!! 😲

No description available.

உலகில்..  குப்பைகளை கையாள்வது இன்று பல பில்லியன்கள் புரளும் வியாபாரம். 

சொறீலங்கா... உட்பட 3ம்  உலக நாடுகளின் அதிகார வர்க்கங்கள்.. இதன் மூலம் அதிக கொமிசன் இலாபம் பெறுகிறார்கள்.  சொறீலங்கா உலகெங்கும் இருந்து..மருத்துவக் கழவுகள்.. பிளாஸ்ரிக்.. மற்றும் இரும்புக் கழிவுகளை வா வா என்று அழைத்து.. அழகான இலங்கைத் தீவை நாசமாக்கி வருவதுடன்.. மகிந்த கும்பல்.. இதை ஒரு மாபியா வர்த்தகமாகவே செய்து வருகிறது. அந்த கும்பலின் அங்குத்துவனான டக்கிளஸ் இதில் இறங்கி இருப்பது புதிய விடயமல்ல.

ஏலவே வடக்கில்..பிரித்தானிய மருத்துவக் கழிவுகளை புதைத்த விவகாரத்தில்.. சிக்கலில் மாட்டியவர்கள்.. இவர்களே. இப்போ கடலுக்குள் இரும்பக் கொட்டி.. இந்த வியாபாரத்தை உள்ளூரிலும் அறிமுகப்படுத்துகிறாகள்.

இந்த இரும்பை.. உலோகங்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்தலாம். ஆனால்.. அதற்கான முதலீடுகளுக்கு வாய்ப்பளிக்காமல்.. இப்படி குறுகிய வழியில்.. சூழலை இயற்கை வளங்களை அழித்து இலாபமீட்ட முனைகிறார்கள்.

இங்கு பேசப்படுவது.. இவ்வளவு தொன் கழிவகற்றலுக்கு இவ்வளவு மில்லியன் என்பது தான். இதில் எவ்வளவு மில்லியனை தாடியன் பொக்கட்டுக்குள் போட்டானோ..??! முன்னர் சொந்த இனத்தை  காட்டிக்கொடுத்து கொலை செய்து பிழைத்தான்... இப்படி அதற்கு வழி குறைஞ்சிட்டு என்றவுடன்.. இப்படி செய்கிறான். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, nedukkalapoovan said:

The gray list includes water highly contaminated with arsenic, copper, lead, zinc, organosilicon compounds, any type of cyanide, flouride, pesticides, pesticide by-products, acids and bases, beryllium, chromium, nickel and nickel compounds, vanadium, scrap metal, containers, bulky wastes, lower level radioactive material and any material that will affect the ecosystem due to the amount in which it is dumped.

இன்னும் ஐங்கரநேசனும்.. சுமந்திரனும்.. தான் சொல்லனுமா.

சுயமாக தேடுங்கள்.. உலகப் பரப்பெங்கும்.. இதுவே இன்றைய பேசு பொருள்.

ஆனால்.. டக்கிளஸ் தேவானந்த போன்ற முட்டாள்கள்.. மக்களையும்.. வளங்களையும் தவறாகப் பயன்படுத்தி.. தமது ஆதாயத்தை பார்க்க விளைகிறார்களே தவிர.. சொறீலங்கா சிங்கள ஆட்சியாளர்களின் வழியை பின்பற்றி.. வேறு உருப்படியாக எதையும் சிந்திப்பவர்களாக இல்லை.

ஆனால்... மக்கள் இது குறித்து சிந்திக்கவும் அறிவூட்டவும் படனும். இளைய தலைமுறை இணைய உலாவிகள்.. இதில் அதிகம் பங்களிக்கலாம். 

மேக்கூரி உணவு சங்கிலியில் செறிவு அடைந்து அதன் உச்சத்தில் உள்ள மீன்கள் உண்ணும் மனிதனை பாதிக்கின்றது ஒரு பிரச்சனை.

இங்கு சீ.றீ.பீ பேருந்து, மற்றும் புகையிரத பெட்டிகளில் உள்ள உலோகங்கள், இரசாயனங்கள் மீன்கள், கடல் வாழ் உயிரிகள் மூலம் உணவுச்சங்கிலியினுள் உள் வாங்கப்பட்டு கடைசியில் மனிதனை சென்றடையுமா என்பதுதான் எனது இப்போதைய வினா.

இந்த பிரச்சனை பற்றி ஏற்கனவே சிந்தித்து அதன் பாதிப்புக்கள் புறக்கணிக்கப்பட கூடியது என்று நினைத்து முடிவு எடுத்தார்களோ என்னமோ... 

கடலுக்குள் இறக்கப்படும் பேருந்துகளின், புகையிரத வண்டிகள் அமைவிடங்களை ஜீ.பி.எஸ் டாக்ஸ் மூலம் இணைக்கப்பட/ குறிக்கப்படவேண்டியது அவசியம் என கருதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

No description available.

எனக்கென்னமோ இந்த கனதியில்லா தகர டப்பாக்கள் கடல் சீற்றம் கொந்தளிப்பின்போது ,

ஒண்டு உருண்டு கரைக்கு வரும் இல்லாட்டில் மேல எழும்பி போற வாற  கப்பல்களில் மோதி சேதப்படுத்தும் என்றுதான் தோணுது.

No description available.

இதெல்லாம் இறுதி போரின் முன்பு வன்னி பக்கம் ஓடி திரிஞ்ச பேரூந்துக்களாயிருக்குமோ என்று ஒரு சந்தேகம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

மேக்கூரி உணவு சங்கிலியில் செறிவு அடைந்து அதன் உச்சத்தில் உள்ள மீன்கள் உண்ணும் மனிதனை பாதிக்கின்றது ஒரு பிரச்சனை.

இங்கு சீ.றீ.பீ பேருந்து, மற்றும் புகையிரத பெட்டிகளில் உள்ள உலோகங்கள், இரசாயனங்கள் மீன்கள், கடல் வாழ் உயிரிகள் மூலம் உணவுச்சங்கிலியினுள் உள் வாங்கப்பட்டு கடைசியில் மனிதனை சென்றடையுமா என்பதுதான் எனது இப்போதைய வினா.

இந்த பிரச்சனை பற்றி ஏற்கனவே சிந்தித்து அதன் பாதிப்புக்கள் புறக்கணிக்கப்பட கூடியது என்று நினைத்து முடிவு எடுத்தார்களோ என்னமோ... 

கடலுக்குள் இறக்கப்படும் பேருந்துகளின், புகையிரத வண்டிகள் அமைவிடங்களை ஜீ.பி.எஸ் டாக்ஸ் மூலம் இணைக்கப்பட/ குறிக்கப்படவேண்டியது அவசியம் என கருதுகின்றேன்.

மேலுள்ள இணைப்பை படியுங்கள். நீங்கள் இன்னும் சாதாரண தர அறிவுக்கு அப்பால் சிந்திக்க விளைகிறீர்கள் இல்லை. டக்கிளஸ் சாதாரண தரம் தாண்டினாரோ தெரியாது. அவரின் சிந்தனை மக்களையும் மண்ணையும் அழிப்பதோடு அல்ல.. வளங்களையும் சந்ததிகளையும் அழிப்பது வரை தொடர்வது ஆபத்து. 

இந்த வாகனங்கள் கலப்புலோகங்களால் ஆனவை. பாரமான உலோகங்கள் பாதகமான விளைவுகளை உண்டு பண்ணும். 

  • கருத்துக்கள உறவுகள்

யு கே யில்  தெருவோரத்தில் புதிதாக ஒரு சிறு தூணை நாட்ட வேண்டுமென்றாற் கூட அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு அறிவித்து அவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லையென்று முடிவு செய்த பிறகே உள்ளூர் கவுன்சில் அதைச் செய்யும் வழக்கம் உள்ளது.   வடபகுதியில் கடலெங்கும் இவ்வாறு இரும்புக் கழிவுகளை எவ்வித அறிவித்தலுமின்றி அந்தப் பிரதேச மக்களினதும் கரையோர மீன்பிடித் தொழிலாளர்களினதும் கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்காமல்  கொட்டுவது, அதைக் கேட்கப் பார்க்க யாருமில்லையென்பதனாலேயே.  தென்பகுதியிலும் இவ்வாறு செய்யப் போகிறார்களோ தெரியாது.  அப்போது இந்த நடவடிக்கைகளுக் கெதிராகப் பௌத்த பிக்குகளும் பொது மக்களும் கிளர்ந்தெழுவார்கள்.   தமிழன் நாதியற்றுப் போன இனமாதலால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.   இது ஐநா வின் சுற்றுச்சூழல் பிரிவுக்குக் கொண்டு போகப்பட வேண்டிய விடயமாகும்.  தக்க ஆய்வு முடிவுகளின்றி இவ்வாறு புவியின் சுற்றாடலை மனம்போன போக்கில் நாசம் செய்ய முற்படுவது ஒரு சர்வதேச விவகாரமாகும்.  மக்கள் இதற்காகத் திரண்டு தமது எதிர்ப்பை ஐநா வரை கொண்டு செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா அரசு : இந்திய மீனவர்கள் எமது கடலில் வருவதை தடுப்பதற்கு நீர் என்ன நடவடிக்கை எடுத்தீர் இதுவரை?
அமைச்சர் : வடபகுதியில் உள்ள பஸ் வண்டி,ரயில் வண்டிகளை தடுப்பு சுவராக போட்டு உள்ளேன் ,கடற்படையின் உதவியுடன்....அது இந்திய மீனவர்களின் வலைகளை கிழித்து விடும்.
கோத்தாஅரசு : மகிழ்ச்சி ,இரட்டிப்பு மகிழ்ச்சி....தென்பகுதியிலும் அதிக வண்டிகள் இருக்கு அதை இங்கு போட்டால் பிக்குமார் குழப்பியடிப்பாங்கள்....அ
தையும் அங்கு போட முடியுமா?
அமைச்சர் : ஆகட்டும் பிரபு
கோத்தா அரசு :அதனால் உங்கள் மக்களுக்கு எதாவது தீங்கு வராதா?
அமைச்சர் : பிரபு நீங்களே இப்படி பிரித்து பேசலாமா? அவங்கள் கிடந்தாங்கள் .அங்கு மீன் அதிகமாக பிடிபட்டால் எங்கள் நாட்டுமக்களுக்கு தானே நல்லம் (சிங்கள ஜனதாவட்ட)ஜெய வேவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, karu said:

யு கே யில்  தெருவோரத்தில் புதிதாக ஒரு சிறு தூணை நாட்ட வேண்டுமென்றாற் கூட அக்கம் பக்கத்திலுள்ளவர்களுக்கு அறிவித்து அவர்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லையென்று முடிவு செய்த பிறகே உள்ளூர் கவுன்சில் அதைச் செய்யும் வழக்கம் உள்ளது.   வடபகுதியில் கடலெங்கும் இவ்வாறு இரும்புக் கழிவுகளை எவ்வித அறிவித்தலுமின்றி அந்தப் பிரதேச மக்களினதும் கரையோர மீன்பிடித் தொழிலாளர்களினதும் கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்காமல்  கொட்டுவது, அதைக் கேட்கப் பார்க்க யாருமில்லையென்பதனாலேயே.  தென்பகுதியிலும் இவ்வாறு செய்யப் போகிறார்களோ தெரியாது.  அப்போது இந்த நடவடிக்கைகளுக் கெதிராகப் பௌத்த பிக்குகளும் பொது மக்களும் கிளர்ந்தெழுவார்கள்.   தமிழன் நாதியற்றுப் போன இனமாதலால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.   இது ஐநா வின் சுற்றுச்சூழல் பிரிவுக்குக் கொண்டு போகப்பட வேண்டிய விடயமாகும்.  தக்க ஆய்வு முடிவுகளின்றி இவ்வாறு புவியின் சுற்றாடலை மனம்போன போக்கில் நாசம் செய்ய முற்படுவது ஒரு சர்வதேச விவகாரமாகும்.  மக்கள் இதற்காகத் திரண்டு தமது எதிர்ப்பை ஐநா வரை கொண்டு செல்ல வேண்டும்.

ஜேர்மனியில்  மரத்தை வெட்டுவதற்கும் அரச அனுமதி வேண்டும். ஒரு சில இடங்களில் வீட்டுக்கு வர்ணம் பூசுவதென்றாலும் அரசின் அனுமதி வேண்டும்.

ஆசியாவில்......

ஒரு நாடு மாட்டு மூத்திரத்தை குடிக்கும் நாடு.
இன்னொரு நாடு   பழைய பேரூந்துகளை கடலில் இறக்கி மீன் வளர்க்கும் நாடு.

நல்ல சோடிப்பொருத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவுக்கு பெல் அடிச்ச ஜீ குடுத்த ஜடியா போல… 

ஆனால் ஏதோ ஒரு இயற்கை டொக்குமென்ரியில கப்பல் மூழ்கி இருக்கும் இடத்தில் நிறைய மீன்கள் உண்ணும் அல்காக்கள் வளந்துருப்பதையும் அங்கு மீன் இறால் போன்றவை அதிகமாக இருப்பதையும் காட்டி இருந்தார்கள் என்று ஞாபகம்..

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரோலியா  நியுசிலாந்தில் சீமெட்டினால் செய்யபட்ட பெரிய ஓட்டைகள் கொண்ட உருவங்களை மீன் வளர்ச்சிக்கு என்று கடலில் இறக்கபட்டதை டொக்குமென்ரியில் பார்த்த நினைவு உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட செயற்கையான வாழ்விடங்கள் அமைப்பது உலகெங்கும் நடைபெறுவது வழமை தான்.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவுஸ்ரோலியா  நியுசிலாந்தில் சீமெட்டினால் செய்யபட்ட பெரிய ஓட்டைகள் கொண்ட உருவங்களை மீன் வளர்ச்சிக்கு என்று கடலில் இறக்கபட்டதை டொக்குமென்ரியில் பார்த்த நினைவு உள்ளது.

சனம் இருக்க வீடு இல்லை சிறிலங்காவில் பிறகு நாங்கள் எப்படி மீன் குஞ்சுக்கு சீமென்டில் வீடு கட்டுறது

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கைக்கு எதிராக... சிந்திப்பவன், மனிதனே அல்ல.
எமது கடலில்... பழைய, இரும்புகளை புதைக்க வேண்டிய தேவை என்ன?
இதனை...  டக்ளஸ்,   காலி, கொழும்பு  கடல்களில்  புதைப்பாரா.........?

இதற்கு முன்... மீன்கள், இனப் பெருக்கம் செய்ய வில்லையா?
பழைய... இரும்பு, குப்பைகளை.. போட்டால் தான்...
மீன்... குடும்பம், நடத்தும் என்று... 
தாடிக்காரனுக்கு,  யார்... சொல்லிக் கொடுத்தது?

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, putthan said:

சனம் இருக்க வீடு இல்லை சிறிலங்காவில் பிறகு நாங்கள் எப்படி மீன் குஞ்சுக்கு சீமென்டில் வீடு கட்டுறது

அதனால் தான் அங்கே பழைய பஸ்சை கடலில் போடுகிறார்கள். சனம் இருக்க வசதிகள் கொண்ட வீடுகள் நிறைந்த யுஎஸ்சிலேயே பழைய ரெயினை கடலில் போடுகிறார்கள்.

1 hour ago, zuma said:

இப்படிப்பட்ட செயற்கையான வாழ்விடங்கள் அமைப்பது உலகெங்கும் நடைபெறுவது வழமை தான்.

சரியான நேரத்தில் உண்மையை விளங்கபடுத்தினீர்கள். அல்லது ஐநாவே வந்து இறங்கி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதனால் தான் அங்கே பழைய பஸ்சை கடலில் போடுகிறார்கள். சனம் இருக்க வசதிகள் கொண்ட வீடுகள் நிறைந்த யுஎஸ்சிலேயே பழைய ரெயினை கடலில் போடுகிறார்கள்.

அமேரிக்கா காரன்  சொன்னால் சரியாத்தான் இருக்கும் .....
இந்த சீனா சிந்தனையாளர் ஏன் அமேரிக்காவை பின்பற்றுகிறார்...

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, putthan said:

அமேரிக்கா காரன்  சொன்னால் சரியாத்தான் இருக்கும் .....
இந்த சீனா சிந்தனையாளர் ஏன் அமேரிக்காவை பின்பற்றுகிறார்...

இது அமெரிக்கன் சிந்தனை சீன சிந்தனை இல்லை
இப்படிப்பட்ட செயற்கையான வாழ்விடங்கள் அமைப்பது உலகெங்கும் நடைபெறுவது வழமை தான்.- Zuma
நீங்கள் உலக நடை முறைக்கு எதிரான  தனி சிந்தனை  கொண்டவராக இருப்பது கஷ்டமானதே

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை எல்லாவற்றிலும் உலக நடைமுறைகளை பின்பற்றியிருந்தால் இந்த விமர்சனம் எழுந்திருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

193398245_183248753729224_56407136360103

52.jpg

☺️..😊

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

இப்படிப்பட்ட செயற்கையான வாழ்விடங்கள் அமைப்பது உலகெங்கும் நடைபெறுவது வழமை தான்.

இந்த நாடுகள் எல்லாமே கடலுக்குள் கழிவுகளை கொட்டிட்டு தான்.. கடல் மாசாகுது என்றும் அழுகினம். பிறகு மாநாடு போட்டு அதை பற்றி கதைக்கினம். பின் மாசுக் கட்டுப்பாடுன்னு பல பில்லியன் டாலர்களை செலவு செய்யினம்.

ஆனால்.. எமது பூமி.. இயற்கையாகவே அமைந்த படிமப்பாறைகளால் ஆனது. அங்கு இயற்கையாகவே சுண்ணாம்புப்பாறைகளை உருவாக்கத்தக்க உயிரினங்கள் உருவாகி... மீன்கள் உட்பட எல்லா கடல் வாழ் உயிரினங்களுக்கும் தகுந்த வாழ்விடங்களை உருவாக்குகின்றன.. இயற்கைக்கு பாதகமின்றி. அங்கு ஒரு சூழலியல் சமனிலை பேணப்படுகிறது.

ஆனால்.. இப்படி.. உருக்குலைந்த வாகனங்களை கொட்டுவது.. பல கடல் சார் சூழலியல் பிரச்சனைகளுக்கு முன்னோடி.. ஆகும். ஏலவே.. கடலுக்குள் மனிதக் கழிவுகளை கொட்டி.. அது வேற பிரச்சனை. ஏலவே.. கடலுக்குள் பிளாஸ்ரிக்கை கொட்டி அது பிரச்சனை. ஏலவே கடலுக்குள் பிளாஸ்ரிக் குறுங்குண்டுகளை கொட்டி அது பிரச்சனை.. ஏலவே கடலுக்குள் வலைகளை அறுத்து அதனால் பிரச்சனை. இதுமட்டுமன்றி கடல் மாசாதல் இன்னும் பல வழிமுறைகளில் மனிதனால் தொடரப்படுகிறது.  எத்தனையோ கடல்வாழ் உயிரினங்கள் அருகிவரும் உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டிருப்பது.

எனவே தகுந்த ஆய்வுகள் இன்றி மேற்கொள்ளப்படும்.. இப்படியான முட்டாள் தனச் செயற்பாடுகளால்.. எமது  தாயக கடல் வாழ்...  உயிரினங்களுக்கு ஆபத்தான காரியங்களை ஆற்றுவதாலே அதிகமாக இருக்கும். அது முழுமையாக உணரப்படும் போது.. பல உயிரினங்களும் இயற்கை சூழலும்.. குறிப்பாக.. Niche.. நுண்சூழல்..  மீளமுடையாத பாதிப்பை எட்டி இருக்கும். .

கடலுக்குள் திட்டமிட்ட வகையில்.. இப்படியான உலோகக் கழிவுகளை கொட்டுவது... உலகின் கண்ணுக்கு இன்னும் சரியாக காட்டப்படாததால்.. இவற்றின் பாதக விளைவுகள் பற்றி பலர் அறியாமல் இருக்கின்றனர். 

This study seeks to examine how sunken automotives are affecting the surrounding environment; “automotives” in this context are defined as any vehicle that moves on a motor (including planes, trains, boats, and cars). Pollution from automotives is a nearly untouched section of marine science with little more than speculation as to how they are affecting benthic environments. Anti-fouling paint, PBDE’s, oil/coal shipments, and other metal contaminations can cause sickness for marine organisms or severe phytoplankton blooms which may result in anoxic conditions lower in the water column. Sediment samples were sent to the University of Washington’s SEFS analysis lab for a total heavy metal contamination count, while other samples were sent through a Coulter Counter to cross examine the grainsize in the environment. Most of the metals studied show no correlation with variables that would normally produce a correlation, such as grainsize. There was a positive correlation between the size of the automotive and the percentage of metal present. Most metals did not show a correlation between grainsize and percentage of pollution, the exceptions being copper and magnesium. There was also little difference between fresh and saltwater environments. The pollution from sunken automotives gives off a decaying value for approximately 80 years, before fading into a negligible amount; given the harmful effects of these pollutants on the environment, the recommended solution would be to pull sunken automotives up shortly after they sink to avoid as much pollution as possible, especially larger sea-going vessels. Automotive pollution requires further study to draw confident correlations and conclusions.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

With many wrecks in the water, their positive impact on the environment has become noticeable. The wrecks off the Hawaiian coast have created opportunities for the islands to grow ecologically, financially, historically and culturally. These wrecks can help the environment because, over time, they can become a viable habitat for many marine plants and animals and improve water quality. They have also developed into popular recreation and eco-tourism destinations.

However, the wrecks do have adverse environmental impacts as well. The impact of vehicle crashes can physically hurt coral reefs and prevent further growth. Researchers believe that the deterioration of wrecks will release harmful metals and chemicals that could potentially hurt future marine communities. Marine archeologists are concerned by the environmental effects of the oil that resides in wrecks. There are an estimated 2.5-20 million tons of oil in wrecks worldwide, which can smother marine life, release harmful toxins, and is expensive and difficult to clean.

Researchers continue to monitor the positive and negative affects that wrecks have on the natural environment in Hawaii and beyond.

https://namepa.net/2019/02/19/how-do-wrecks-impact-the-marine-environment/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.