Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘வானமேறி வைகுண்டம் போகும் நினைப்பு’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

அப்படித் தான்: ரூட்டை மாத்துங்க! 🤣

செய்தி இணைத்தவரைத் திட்டியது ஒட்டவில்லை, இனி எழுதியவரைத் திட்ட முயற்சி செய்யலாம் (எனக்குத் தெரிந்த இளவல் தான், இந்தத் தகவல் எவ்வளவு மீநிலங்கோவுக்கு உதவுமோ தெரியாது!😎)

பிளான் "சி": இப்பவே தெரியுது, ஆய்வு மாணவியைத் திட்டல்!😅

 மன்னிக்கவும் ஜஸ்டின்...
எனது மனநிலை, எனது எண்ண ஓட்டங்கள், என்னுடைய பிளான் A, பிளான் B பற்றியெல்லாம் நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. :131_cop: அதற்கான தேவையும் உங்களுக்கில்லை. 🛑
அவற்றையெல்லாம் அறிந்து கொள்ளும் ஞான  சீலராக நான் உங்களை கருதவும் இல்லை. 😂 

  • Replies 254
  • Views 19.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

யாரவர்கள்? அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு சொல்லுங்கள்.

👇🏾
 
22 minutes ago, கிருபன் said:

1980களில் புலம்பெயர்ந்த விசுகு ஐயா, கு.சா. ஐயா போன்ற பழுத்த யாழ் உறுப்பினர்களுக்கு என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, கிருபன் said:

1980களில் புலம்பெயர்ந்த விசுகு ஐயா, கு.சா. ஐயா போன்ற பழுத்த யாழ் உறுப்பினர்களுக்கு என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்😎

🖕🏽

அந்த இருவருக்காக மட்டும் இவ்வளவு அலப்பறை செய்கின்றீர்களா?சாதுர்ய எழுத்துக்களால் மட்டுமே உங்களைப்போன்றவர்கள் வெற்றி கொள்ளமுடியும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

இது யாருக்காக எழுதப்பட்டது?

கட்டுரையின் சாரம்சம் வேறு ஒருவர் எழுதியது. அது அவர் கருத்து சுதந்திரம்.

குமாரசாமியண்ணை அந்த  மாணவி  உங்கள். மகளாகவிருந்து...இதே  கட்டுரையை. எழுதியிருத்தால். உங்கள். பதிலென்ன? கோடுயிட்டது. கருத்து திணிப்பயென்றால்...கோடுயிடாதேயென்பது  கருத்து திணிப்பு  இல்லையா? கோடிடாத  பகுதிகள். பற்றி. உங்கள் கருத்தென்ன?உங்களுக்குத்தான் அந்தப்பகுதி கோடுயிட்டுயிருத்தால். ...அதிலென்ன தவறுயுண்டு? 

  • கருத்துக்கள உறவுகள்

சரி பஸ் 5 பக்கம் ஓடி முறிகண்டிக்கு வந்திட்டு.

எல்லாரும் இறங்கி ஒரு தேத்தண்ணிய குடியுங்கோ. லற்க்கு போறவையும் போகலாம்.

தேத்தண்ணி கடை எபெக்டில இந்த சிச்சுவேசன் சோங்கையும் கேளுங்கோ.

விதி செய்த சதியோ அத்தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 13/6/2021 at 21:20, விசுகு said:

மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

அந்த பதிவின் கருத்து சம்பந்தமாக நான் எதுவும் இதுவரை எழுதவில்லை.

விசுகர் இதுதான் எனது கருத்தும். ஆனால்  இவர்களோ  தாங்களே பாதையும் போட்டு அதன் மேலே ஒற்றை மாட்டு வண்டில் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 minutes ago, Kandiah57 said:

குமாரசாமியண்ணை அந்த  மாணவி  உங்கள். மகளாகவிருந்து...இதே  கட்டுரையை. எழுதியிருத்தால். உங்கள். பதிலென்ன? கோடுயிட்டது. கருத்து திணிப்பயென்றால்...கோடுயிடாதேயென்பது  கருத்து திணிப்பு  இல்லையா? கோடிடாத  பகுதிகள். பற்றி. உங்கள் கருத்தென்ன?உங்களுக்குத்தான் அந்தப்பகுதி கோடுயிட்டுயிருத்தால். ...அதிலென்ன தவறுயுண்டு? 

ஈழத்தமிழரின் வரலாற்றை  அக்குவேறு ஆணி வேறாக மீண்டும் மீண்டும் சொல்லி புரிய வைத்திருப்பேன். சிங்கள இனவாதத்தின் உண்மையை ஆதாரத்துடன் காட்டியிருப்பேன். மகளே நீ எப்படி இங்கே வாழ்கின்றாயோ அங்கு நீ வாழ முடியாது என ஆதாரங்களுடன் நிரூபித்திருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையை முழுமையாக வாசித்தபின்பு மனதில் தோன்றிய கருத்துக்களை கீழே எழுதிய கருத்துக்களை வாசிக்காமல் எழுதுகிறேன்.. கீழே எழுதியவற்றை வாசித்தால் என் மனதில் தோன்றியது மறந்துவிடும்..

இந்த்தகட்டுரையாளர் சொல்லியதுபோல் உண்மை எனினும் மூன்றாம் தலைமுறபிள்ளை எம்மிடையே நிலவும் சமூக சாதிப்பிளவுகளும் எமது போராட்டவீழ்ச்சிக்கு காரணம் என எழுத சான்ஸ் இல்லை.. இது ஒரு மூன்றாம் தலைமுறை வெளிநாட்டு பிள்ளை சிந்திக்க சான்ஸ் இல்லை.. யாரோ நம்ம தலைமுறை சொல்லிகொடுத்து ஆராய்ச்சி நடந்திருக்கு.. 

அந்த மூன்றாம் தலைமுறை பெண் சொன்ன விடயங்கள் முற்றிலும் உண்மை எனினும் இந்த தலைமுறை சொன்னால் எடுபடாது எண்டு மூன்றாம் தலைமுறையை இழுத்திருக்கினம் தமது கருத்து திணிப்புக்கு.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த கட்டுரையை முழுமையாக வாசித்தபின்பு மனதில் தோன்றிய கருத்துக்களை கீழே எழுதிய கருத்துக்களை வாசிக்காமல் எழுதுகிறேன்.. கீழே எழுதியவற்றை வாசித்தால் என் மனதில் தோன்றியது மறந்துவிடும்..

இந்த்தகட்டுரையாளர் சொல்லியதுபோல் உண்மை எனினும் மூன்றாம் தலைமுறபிள்ளை எம்மிடையே நிலவும் சமூக சாதிப்பிளவுகளும் எமது போராட்டவீழ்ச்சிக்கு காரணம் என எழுத சான்ஸ் இல்லை.. இது ஒரு மூன்றாம் தலைமுறை வெளிநாட்டு பிள்ளை சிந்திக்க சான்ஸ் இல்லை.. யாரோ நம்ம தலைமுறை சொல்லிகொடுத்து ஆராய்ச்சி நடந்திருக்கு.. 

அவர் ஆராய்ச்சி செய்தார் என்றால் - இது சம்பந்தமாக பலவகை உசாத்துணை நூல்களை, நேரடி நேர்முகங்களை, வினா விடை கொத்துக்களை கொடுத்திருப்பார் என நம்புகிறேன்.

இளமானி பட்டமே - ஆகவே இது ஒரு பட்ட படிப்பின் ஒரு module ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

முதுமாணி போல் தனியே இதை மட்டும் எடுத்து ஆராய்ந்திருக்காவிடிலும், குறைந்த பட்ச உசாத்துணை ஆதரவு இல்லாமல் இந்த முடிவுக்கு வந்திருக்க முடியுமா?

எனக்கு இங்கே ஒரே ஒரு விமர்சனம்தான் - அந்த ஆராய்சியின் இறுதி அறிக்கையை ஒரு லிங்கில் கொடுத்திருந்தால். அதை படித்து விட்டு - பின்னர் ஆராய்சியின் முடிவுகள் தக்கதா அல்லவா என நாம் கருதாட முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

அந்த ஆராய்சியின் இறுதி அறிக்கையை ஒரு லிங்கில் கொடுத்திருந்தால்

 தவிர இந்த நிகழ்ச்சி வெறும் பார்வையாளராக  தனது கருத்தையும் / உள்ளக்கிடக்கையும்தெளித்த "மீநிலங்கோ" போன்றவர்களின் எஸ்ட்ரா பிட்டிங்கையும் தவிர்த்து அந்த ஆய்வை பற்றி பரந்த மனதோடு கருத்தாடல் செய்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

அவர் ஆராய்ச்சி செய்தார் என்றால் - இது சம்பந்தமாக பலவகை உசாத்துணை நூல்களை, நேரடி நேர்முகங்களை, வினா விடை கொத்துக்களை கொடுத்திருப்பார் என நம்புகிறேன்.

இளமானி பட்டமே - ஆகவே இது ஒரு பட்ட படிப்பின் ஒரு module ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம்.

முதுமாணி போல் தனியே இதை மட்டும் எடுத்து ஆராய்ந்திருக்காவிடிலும், குறைந்த பட்ச உசாத்துணை ஆதரவு இல்லாமல் இந்த முடிவுக்கு வந்திருக்க முடியுமா?

எனக்கு இங்கே ஒரே ஒரு விமர்சனம்தான் - அந்த ஆராய்சியின் இறுதி அறிக்கையை ஒரு லிங்கில் கொடுத்திருந்தால். அதை படித்து விட்டு - பின்னர் ஆராய்சியின் முடிவுகள் தக்கதா அல்லவா என நாம் கருதாட முடியும்.

உண்மை தான்! அத்தோடு சேர்த்து ஆராய்ச்சியாளரின் குடும்பப் பின்னணியையும் யாராவது கொடுத்திருந்தால் பிளான் "டி" க்கு உதவும்: ஆராய்ச்சியாளரின் பின்னணி சரியில்லை, அது அப்படியே : எல்லா ஆராய்ச்சியும் "கக்கா" என்ற இறுதி நிலையில் வந்து நிற்கும்!🤣

 இது ஆராய்ச்சி பற்றிய பகிர்வில் நடந்த , கேட்ட விடயங்களின் செய்திக் கட்டுரை! இதைப் பற்றி மட்டும் ஆராயாமல் சும்மா அஸ்வர் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் செய்வது மாதிரி "ஒழுங்குப் பிரச்சினை" எழுப்பி அமுக்கப் பார்த்த பின்னர், பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது! இனி இது  பக்கம் பக்கமாக ஓடும், அல்லது நியானி வந்து பூட்டும்!😇

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும் கிருபன் அண்ணா, நீங்கள் இந்த கட்டுரையில் வந்த கருத்துகளில் தடித்த எழுத்துகளானவை, உங்களது தனிப்பட்ட எண்ணங்களுடன் ஒத்துபோகிறது என கட்டுரையின் அடியில் ஒரு பின்குறிப்பை போட்டிருந்தால் இன்று இந்த கருத்துரையாடல் வேறுவழியில் போயிருக்கும்.. 

ஆனால் இங்கே, இப்பொழுது கட்டுரையில்
கூறப்பட்ட விடயத்தை தவிர்த்து விதாண்டவாதங்களிலேயே பக்கங்கள் அதிகரிக்கிறது..

இது இந்த கட்டுரையை வாசிக்கதொடங்கியதிலிருந்து இன்றுவரை நான் கண்டது..
நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Sasi_varnam said:

 தவிர இந்த நிகழ்ச்சி வெறும் பார்வையாளராக  தனது கருத்தையும் / உள்ளக்கிடக்கையும்தெளித்த "மீநிலங்கோ" போன்றவர்களின் எஸ்ட்ரா பிட்டிங்கையும் தவிர்த்து அந்த ஆய்வை பற்றி பரந்த மனதோடு கருத்தாடல் செய்திருக்கலாம்.

மிநிலங்கோ செய்ததில் தவறு ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பத்திரிகைகளில் செய்தி மட்டும் வருவதில்லை. Comments, opinion, sponsored content, advertisement எல்லாம் வரும்.

இது இன்னது என பகுதறிந்து வாசிப்பது வாசகனை சார்ந்தது. இது மிக தெளிவாக செய்தி அல்ல, மிநிலங்கோவின் opinion என்பது தெரிகிறது. அவர் ஒரு மெய்நிகர் கூட்டத்துக்கு போயுள்ளார், அங்கே தான் அவதானித்ததை, தன் பார்வையில் எழுதியுள்ளார். 

மீனிலங்கோ இங்கே இரெண்டு ஒப்பீனியனை முன்வைக்கிறார்.

1. ஆராய்சி பற்றிய தனது ஒப்பீனியன்

2. ஆராய்சிக்கு கூட்டத்தில் ஒரு சாரார் காட்டிய எதிர்வினை பற்றிய தனது ஒப்பீனியன்.

மிநிலங்கோவின் ஒப்பீனியன் எமக்கு கசக்கிறது என்றால் அது எமது நிலைப்பாடு. அவ்வளவுதான்

தவிர மிநிலங்கோவை போட்டு பிராண்டுவதில் ஒரு பயனும் இல்லை.

இல்லை என்றால் கீழே ஜஸ்டின் அண்ணா சொன்னது போல் ஆராய்சி கட்டுரையின் லிங்க்கை தந்தாலும் அதன் தர்க நியா /அநியாயத்தை ஆராயாது -ஆராய்சியாளரின் குணவியல்புகளை நாள் நட்சத்திரத்தைதான் நாம் ஆராய்வோம்.

ஆராய்ச்சியின் லிங்கை தந்திருந்தால் - அது ஆராய்சிதானா அல்லது ஓணாண்டி சொன்னது போல் ஆரோ ஆச்சி சொன்னதை கேட்டு எழுதியுள்ளாரா என்பதை இலகுவில் கண்டு கொள்ளலாம். இதுதான் நான் சொல்ல வந்தது.

18 minutes ago, Justin said:

உண்மை தான்! அத்தோடு சேர்த்து ஆராய்ச்சியாளரின் குடும்பப் பின்னணியையும் யாராவது கொடுத்திருந்தால் பிளான் "டி" க்கு உதவும்: ஆராய்ச்சியாளரின் பின்னணி சரியில்லை, அது அப்படியே : எல்லா ஆராய்ச்சியும் "கக்கா" என்ற இறுதி நிலையில் வந்து நிற்கும்!🤣

 இது ஆராய்ச்சி பற்றிய பகிர்வில் நடந்த , கேட்ட விடயங்களின் செய்திக் கட்டுரை! இதைப் பற்றி மட்டும் ஆராயாமல் சும்மா அஸ்வர் சிறிலங்காப் பாராளுமன்றத்தில் செய்வது மாதிரி "ஒழுங்குப் பிரச்சினை" எழுப்பி அமுக்கப் பார்த்த பின்னர், பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது! இனி இது  பக்கம் பக்கமாக ஓடும், அல்லது நியானி வந்து பூட்டும்!😇

  • கருத்துக்கள உறவுகள்

EVENT_NORWAY_6JUNE_2021.jpg

இந்த அறிவிப்பு கிரிதரனின் பதிவுகள் இணையத் தளத்தில் வந்திருந்தது, பகிர்வது விதி மீறல் இல்லையென நினைக்கிறேன். என்ன வகையான ஆய்வென ஆர்வமுள்ளோர் தேடியறியலாம்!

Edited by Justin
note added

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

மிநிலங்கோவின் opinion என்பது தெரிகிறது. அவர் ஒரு மெய்நிகர் கூட்டத்துக்கு போயுள்ளார், அங்கே தான் அவதானித்ததை, தன் பார்வையில் எழுதியுள்ளார். 

மிநிலங்கோ புலம் பெயர்ந்த தமிழர்கள் பார்வையில்  எழுதியிருக்க வேண்டும் என்பதே  இவர்களுடைய எதிர்பார்ப்பு 😂

6 hours ago, குமாரசாமி said:
6 hours ago, Kandiah57 said:

குமாரசாமியண்ணை அந்த  மாணவி  உங்கள். மகளாகவிருந்து...இதே  கட்டுரையை. எழுதியிருத்தால். உங்கள். பதிலென்ன? கோடுயிட்டது. கருத்து திணிப்பயென்றால்...கோடுயிடாதேயென்பது  கருத்து திணிப்பு  இல்லையா? கோடிடாத  பகுதிகள். பற்றி. உங்கள் கருத்தென்ன?உங்களுக்குத்தான் அந்தப்பகுதி கோடுயிட்டுயிருத்தால். ...அதிலென்ன தவறுயுண்டு? 

Expand  

ஈழத்தமிழரின் வரலாற்றை  அக்குவேறு ஆணி வேறாக மீண்டும் மீண்டும் சொல்லி புரிய வைத்திருப்பேன். சிங்கள இனவாதத்தின் உண்மையை ஆதாரத்துடன் காட்டியிருப்பேன். மகளே நீ எப்படி இங்கே வாழ்கின்றாயோ அங்கு நீ வாழ முடியாது என ஆதாரங்களுடன் நிரூபித்திருப்பேன்

அதே மகள் நீங்கள் மீண்டும் மீண்டும்  சொன்னதை மட்டும் அப்படியே நம்பி அதை திரும்ப திரும்ப சொல்லும் அப்பாவிக் கிளிப்பிள்ளை போல் இருக்காமல், தானாக சிந்திக்கும் ஆற்றலும் மேலதிக தேடலும் திறனாய்வும் மேற்கொண்டு, நீங்கள் கூறியதை விட மேலதிக பல  காரணங்களும் உள்ளது, என்ற உண்மையை அறியும் திறமை உள்ள பிள்ளை என்றால் என்ன செய்வீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

பல முதியவர்கள் போரளிகள் அல்லது முதல் வெடி சத்ததிற்கு ஓடி வந்த மக்களின் மனதை படம் பிடித்து காட்டுகின்றது. இன்னும் அவர்கள் 1980களில் இருக்கின்றார்கள். இந்த உறைந்த மனநிலை மாறவேண்டும். 
ஊரில் உள்ள இளயோர்களும் இப்பொழுது நன்கு மாறிவிட்டார்கள்.  

சிறிய விடையத்தை எப்படி தூக்கிப்பிடிக்கின்றார்கள். 

நம் வீட்டிலிருக்கும் வயதுபோன தாத்தமார் / பாட்டிமார்  இப்படித்தன் சண்டை பிடிப்பர்கள்

செய்தியின் சுருக்கத்தை நச் என்று ஹையில‌ட் செய்து காட்டிய கிருபனுக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

மன்னிக்கவேண்டும் கிருபன் அண்ணா, நீங்கள் இந்த கட்டுரையில் வந்த கருத்துகளில் தடித்த எழுத்துகளானவை, உங்களது தனிப்பட்ட எண்ணங்களுடன் ஒத்துபோகிறது என கட்டுரையின் அடியில் ஒரு பின்குறிப்பை போட்டிருந்தால் இன்று இந்த கருத்துரையாடல் வேறுவழியில் போயிருக்கும்.. 

On 12/6/2021 at 12:44, கிருபன் said:

தடித்த எழுத்துக்களில் நான் சில பகுதிகளை காட்டியுள்ளேன்.

யாழ் களத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களும் அதே சிந்தனையில் இருப்பது ஆச்சரியமல்ல😀

நான் சொல்லியிருக்காவிட்டால் பலருக்கு தெரிந்தே இருக்காது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மூன்றாம் தலைமுறபிள்ளை எம்மிடையே நிலவும் சமூக சாதிப்பிளவுகளும் எமது போராட்டவீழ்ச்சிக்கு காரணம் என எழுத சான்ஸ் இல்லை.. இது ஒரு மூன்றாம் தலைமுறை வெளிநாட்டு பிள்ளை சிந்திக்க சான்ஸ் இல்லை..

ஆராய்ச்சி செய்பவருக்கு ஒரு supervisor வழிகாட்டியாக இருப்பார். மிச்சம் thesis ஐக் கண்டுபிடித்த பின்னர் கதைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழரின் வரலாற்றை  அக்குவேறு ஆணி வேறாக மீண்டும் மீண்டும் சொல்லி புரிய வைத்திருப்பேன். சிங்கள இனவாதத்தின் உண்மையை ஆதாரத்துடன் காட்டியிருப்பேன். மகளே நீ எப்படி இங்கே வாழ்கின்றாயோ அங்கு நீ வாழ முடியாது என ஆதாரங்களுடன் நிரூபித்திருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

அந்த மாணவியின்.  ஆய்வு.  தமிழர்களைப் பற்றியது. ஆய்வின். தலைப்பு  பிளவுற்ற  தமிழ்த் தேசத்தின்  விடுதலைப் போராட்டமாகும்.  சிங்களவர் பற்றி. அவள்  ஆய்வு செய்யவில்லை  

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழரின் வரலாற்றை  அக்குவேறு ஆணி வேறாக மீண்டும் மீண்டும் சொல்லி புரிய வைத்திருப்பேன். சிங்கள இனவாதத்தின் உண்மையை ஆதாரத்துடன் காட்டியிருப்பேன். மகளே நீ எப்படி இங்கே வாழ்கின்றாயோ அங்கு நீ வாழ முடியாது என ஆதாரங்களுடன் நிரூபித்திருப்பேன்.

இந்தக் கேள்விக்கு மன்னிக்கவும் குமாரசாமி, 

உங்கள் குழந்தைகள் இந்த நாட்டின் பல்லின சமூகங்களுடன் பழகுகிறார்களா? 

அல்லது தமிழ் இளையோர் அமைப்பின் அங்கத்தவர்களா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, tulpen said:

அதே மகள் நீங்கள் மீண்டும் மீண்டும்  சொன்னதை மட்டும் அப்படியே நம்பி அதை திரும்ப திரும்ப சொல்லும் அப்பாவிக் கிளிப்பிள்ளை போல் இருக்காமல், தானாக சிந்திக்கும் ஆற்றலும் மேலதிக தேடலும் திறனாய்வும் மேற்கொண்டு, நீங்கள் கூறியதை விட மேலதிக பல  காரணங்களும் உள்ளது, என்ற உண்மையை அறியும் திறமை உள்ள பிள்ளை என்றால் என்ன செய்வீர்கள்? 

சாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சாதி ஒழிப்பு முறையினாலும் விடுதலைப்புலிகள் உயர்ந்து நின்றார்கள். இதே சாதி ஒழிப்பு முறையைத்தான் தமிழ்நாட்டிலும் நாம்தமிழர் கட்சி முன்னிலைப்படுத்துகின்றது.

இன்றைய இளையவர்களின் சிந்தனை வரவேற்க தக்கது. அதற்காக நடைமுறைக்கு சரிப்பட்டு வராத சிந்தனைகளை சொல்லி விளங்கப்படுத்த வேண்டியது நமது கடமை மட்டுமல்ல. அவசியமானதொன்றாகும்.

ஈழத்தமிழர்கள் ஆரம்பத்திலிருந்தே ஈழம் கேட்கவில்லை.படிப்படியாகத்தான் தனி ஈழம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 2009க்கு பின்னரும் இன்றைய தமிழ் அரசியல்வாதிகள் ஈழம் கேட்கவில்லை என்பதை தெரிந்திருப்பீர்கள்.

இன்றைய சனாதிபதி கோத்தபாய தேர்தலில் வெற்றியீட்டியவுடன் புனித நகரம் அனுராதபுரத்திற்கு வந்து ஆற்றிய உரையை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன். ஈழத்தமிழர்கள் எந்த அணுகுமுறையுடன் அவர்களை அணுகினாலும் சிங்கள பேரினவாதம் நின்ற இடத்திலேயே நிற்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

அதே மகள் நீங்கள் மீண்டும் மீண்டும்  சொன்னதை மட்டும் அப்படியே நம்பி அதை திரும்ப திரும்ப சொல்லும் அப்பாவிக் கிளிப்பிள்ளை போல் இருக்காமல், தானாக சிந்திக்கும் ஆற்றலும் மேலதிக தேடலும் திறனாய்வும் மேற்கொண்டு, நீங்கள் கூறியதை விட மேலதிக பல  காரணங்களும் உள்ளது, என்ற உண்மையை அறியும் திறமை உள்ள பிள்ளை என்றால் என்ன செய்வீர்கள்? 

எனது பிள்ளை. வேறு ஒரு நபர். அவரது மூளை வேறு  சிந்தனையும்  வேறு.  அப்படித்தான் இருக்கும்...இருக்கவேண்டும். நானும் பிள்ளைகளும்  அனைத்து விடயங்களிலும். ஒரே. கருத்து  உடையவர்களில்லை. அவர்களுக்கு. அரசியல் ஈடுபாடு. மிகக்குறைவு.  அவர்களின் எண்ணப்படியே. அனைத்தையும் செய்கிறார்கள்.  நான் தலையீடு  செய்வதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

விசுகர் இதுதான் எனது கருத்தும். ஆனால்  இவர்களோ  தாங்களே பாதையும் போட்டு அதன் மேலே ஒற்றை மாட்டு வண்டில் விட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்த திரி மூலம்  கனக்க  விடயங்களை  புரிந்து  கொண்டேன்

யாழில்  எமக்கு தெரியாத பல  விடயங்கள் திரை  மறைவில் நடக்கின்றன

கேள்வி  ரொம்ப இலகு :

நீங்கள் செய்திகளை இணைப்பவரா??

அல்லது உங்கள்  கருத்தை  கள  உறவுகள்  மீது திணிப்பவரா???

எந்த கள விதிப்படி  செய்திகளில்  உங்களது கருத்துக்களை 

அல்லது  உங்களுக்கு ஈடுபடான  கருத்தை கோடிடுகிறீர்கள்????

இதை என்னிடம்  ஒரு  கள  உறவு  கேட்டிருந்தால்?

சேவை அடிப்படையில் யாழுக்காக  சில  மணித்துளிகளை  ஒதுக்கிசெய்திகளை  மட்டுமே இணைக்கின்றேன்

இணைக்கப்படும் செய்தி அந்தவாறே மக்களிடம் செல்லணும்

எனது  கருத்தை  கருத்துக்களத்தில் பின்னர் நான் வைப்பேன்

இது கள விதிகளை  மீறாத  போதும்

இனி வரும் காலங்களில் விதிகளில் சேர்க்கப்படுவது யாழுக்கு  நல்லது

இவ்வளவு  தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.