Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமையினால் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பூட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர்  ஆலய நிர்வாக உறுப்பினர்கள் 5 பேருக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டத்தின் கீழ் அதிகளவானோரை ஒன்று கூட்டியமை, முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியினை பேணாமை மற்றும் அறிவுறுத்தல்களை மீறியமை ஆகிய குற்றங்களுக்காக இன்று மாவட்ட சுகாதார பகுதியினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

1628495710374.jpg

இதன்போது  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏசீ.றிஸ்வான்  ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20,000/=ரூபாவை அபராதமாக விதித்தார்.

1628495710455.jpg

அத்தோடு, குறித்த நிர்வாகிகளும் கோயிலும் இன்று முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்தார்.

1628495710533.jpg

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த உற்சவ தீர்த்தோற்சவத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமையினால் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பூட்டு | Virakesari.lk

  • Replies 58
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குதிரை ஓடின பின் லாயத்தை பூட்டின கதை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி, கோவிலையும் அரச உடைமையாக  ஆக்கினால் சிறப்பாக இருக்கும். சிங்கள அரசாங்கம் குதிரை ஓடிய பின்னர் தான் தமிழர் பிரேதேசங்களில் நடவடிக்கை எடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, zuma said:

நல்ல செய்தி, கோவிலையும் அரச உடைமையாக  ஆக்கினால் சிறப்பாக இருக்கும். சிங்கள அரசாங்கம் குதிரை ஓடிய பின்னர் தான் தமிழர் பிரேதேசங்களில் நடவடிக்கை எடுக்கும்.

மண்டூர் , சித்தான்டி முருகன் கோவில்கள் அரச கோவில்களே குடி கோவில்களினால் குடும்ப பிரச்சினைகள் அதிகம் வந்து நீதிமன்றம் சென்று அரசின் கட்டளையில் இயங்குகிறது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

மண்டூர் , சித்தான்டி முருகன் கோவில்கள் அரச கோவில்களே குடி கோவில்களினால் குடும்ப பிரச்சினைகள் அதிகம் வந்து நீதிமன்றம் சென்று அரசின் கட்டளையில் இயங்குகிறது .

சைவ கோவில்களை அரச உடமையாக்கினால் சாதி வேறுபாடுகள் ஒழியுமா சார்?   

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சைவ கோவில்களை அரச உடமையாக்கினால் சாதி வேறுபாடுகள் ஒழியுமா சார்?   

சாதி வேறுபாடுகளுக்கு எதிராக இருந்த காரணத்தாலேயே பௌத்தம் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் வேகமாக பரவியது. பின்னர் அதே காரணத்துக்காகவே சாதி வேறுபாடுகளை உறுதியாக ஆதரிப்பவர்களால் பௌத்தம் இந்தியாவில் அரசர்களின் ஆதரவோடு அழித்தொழிக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, standing, military uniform and outdoors

May be an image of 1 person, standing and outdoors

May be an image of standing, elephant and outdoors

இதெல்லாம் இப்ப வெகு விமரிசையா நடக்குது.. இன்னும் நடக்கப் போகுது.

எங்கட ஆக்களில் சிலர் 2009 பின் நல்லா குனிஞ்சு பழகிட்டினம். அப்படி குனிஞ்சாவது ஏதாவது பொறுக்குவம் என்று நினைச்சிட்டினமோ என்னமோ. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, கற்பகதரு said:

சாதி வேறுபாடுகளுக்கு எதிராக இருந்த காரணத்தாலேயே பௌத்தம் இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் வேகமாக பரவியது. பின்னர் அதே காரணத்துக்காகவே சாதி வேறுபாடுகளை உறுதியாக ஆதரிப்பவர்களால் பௌத்தம் இந்தியாவில் அரசர்களின் ஆதரவோடு அழித்தொழிக்கப்பட்டது.

சிறிலங்காவில் வசிக்கும் பௌத்த மக்களிடையே வேற்றுமைகள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

அத்தோடு, குறித்த நிர்வாகிகளும் கோயிலும் இன்று முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்தார்

8 hours ago, பிழம்பு said:

இதன்போது  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏசீ.றிஸ்வான்  ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20,000/=ரூபாவை அபராதமாக விதித்தார்

நல்ல செயல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தீர்த்தமாடியோரை தேடும்பணி தீவிரம்

மட்டக்களப்பு, மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி, தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்ட அடியார்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதற்காக, சுகாதார தரப்பினர் பொலிஸாரின் உதவியுடன் தேடி வருகின்றனர்.

இதுதொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாரசிங்க, இன்று (09) இடம்பெற்ற மண்முனை வடக்கு பிரதேச கொவிட் செயலணி கூட்டத்தில் தெரிவித்தார். 

ஆலயத்தை 14 நாட்கள் பூட்டுவதாகவும் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்வதாகவும்  நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பிரதமகுருக்கள் ஆகியோரை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும் உற்சவத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன், அந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்றையதினம் சுகாதார சுற்று நிருபத்தை மீறி வருடாந்த தீர்த்தோற்சவத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதையடுத்து தேசிய ரீதியில் பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இருந்தபோதும், இந்த ஆலய உற்சவத்துக்கு கடந்த  கொரோனா செயலணி கூட்டத்தில் 100 பேருக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில் அனுமதியையும் சுகாதார சுற்று நிருபத்தை மீறி சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் இடம்பெற்ற இச் சம்பவமானது பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எஸ். குமார், வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

Tamilmirror Online || தீர்த்தமாடியோரை தேடும்பணி தீவிரம்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

May be an image of 1 person, standing, military uniform and outdoors

May be an image of 1 person, standing and outdoors

May be an image of standing, elephant and outdoors

இதெல்லாம் இப்ப வெகு விமரிசையா நடக்குது.. இன்னும் நடக்கப் போகுது.

எங்கட ஆக்களில் சிலர் 2009 பின் நல்லா குனிஞ்சு பழகிட்டினம். அப்படி குனிஞ்சாவது ஏதாவது பொறுக்குவம் என்று நினைச்சிட்டினமோ என்னமோ. 

என்ன சொல்ல வாறீங்கள்?...சிங்கள பகுதியில் விகாரைகள் திறந்து இருக்குது ... சிங்கள மக்கள் அதிகமாய் இறக்கிறார்கள் ...அதே மாதிரி கோயில்களையும் திறந்து விடுங்கோ ...தமிழரும் செத்து தொலையட்டும் என்று சொல்கிறீர்களா?

இதே அரசு நடவடிக்கை ஒன்றும் எடுக்காமல் சாகிறவன் தமிழன் செத்து தொலையட்டும் என்று விட்டு இருந்தால் மற்ற மாதிரி கதைத்திருப்பினம் ...இந்த பிழைப்புக்கு .....
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கேள்வி அதுவல்ல என்று  நினைக்கின்றேன்

ஒரு  நாடு

இரு  சட்டம்???

இங்கே  பூட்ட முடிகிறது??

அங்கே  பூட்ட முடிவதில்லை???

ஏன்????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

கேள்வி அதுவல்ல என்று  நினைக்கின்றேன்

ஒரு  நாடு

இரு  சட்டம்???

இங்கே  பூட்ட முடிகிறது??

அங்கே  பூட்ட முடிவதில்லை???

ஏன்????

 விசுகர்! இங்கே ஒரு சிலர் தங்களுக்குள் மட்டும் மனிதாபிமானமும் மக்கள் மீதான கரிசனையும் பொங்கி வழிகின்றதென நினைத்துக்கொண்டு திரிகின்றார்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

 விசுகர்! இங்கே ஒரு சிலர் தங்களுக்குள் மட்டும் மனிதாபிமானமும் மக்கள் மீதான கரிசனையும் பொங்கி வழிகின்றதென நினைத்துக்கொண்டு திரிகின்றார்கள்.🤣

பௌத்தத்தை தொட்டுப்பார்

தெரியும்???

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செயல் ,

கிழக்கு மக்கள் வாழ்நாள் முழுவதும் அழிவை தவிர வேறு எதையும் பார்த்ததில்லை.

வடபகுதி மக்களாவது சிலகாலம் சிங்கள அரசிடமிருந்து புலிகளால் விடுவிக்கப்பட்ட பெரும் நிலபரப்பில் சுதந்திரம் என்றால் என்னவென்று அனுபவித்து பார்த்தவர்கள்.

ஆனால் தென் தமிழீழ மக்கள் காலம் முழுவதும் அனுபவித்தது எல்லாம்  சுற்றிவளைப்பு கைது படுகொலை நில ஆக்கிரமிப்பு மட்டுமே . அருகி கொண்டிருக்கும் எம் மக்கள் அங்கே மேலும் அழிவுகளை சந்திக்காது எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.

அவர்கள் பகுதியில் இந்த கட்டுபாடெல்லாம் இல்லை,  எங்கள் பகுதியில் எதற்கு என்று நாம் வேறு விடயங்களில் தர்க்கம் புரியலாம், ஆனால் ஒரு உயிர்கொல்லி நோய் விசயத்தில் நாம் வியாக்கியானம் செய்வது தவறு.

2 கோடிக்கும் மேற்பட்ட  மக்கள் தொகை கொண்ட அவர்களில் முன்னெச்சரிக்கையின்மையால் பத்து இலட்சம்பேர் உயிரிழந்தாலும் அவர்களுக்கு பாதிப்பு எதுவுமில்லை, எம்மில் பத்து லட்சம்பேர் சடுதியாக இல்லாமல் போனால் பாதி எம் மக்கள் தொகை அழிந்ததுக்கு சமம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

என்ன சொல்ல வாறீங்கள்?...சிங்கள பகுதியில் விகாரைகள் திறந்து இருக்குது ... சிங்கள மக்கள் அதிகமாய் இறக்கிறார்கள் ...அதே மாதிரி கோயில்களையும் திறந்து விடுங்கோ ...தமிழரும் செத்து தொலையட்டும் என்று சொல்கிறீர்களா?

இதே அரசு நடவடிக்கை ஒன்றும் எடுக்காமல் சாகிறவன் தமிழன் செத்து தொலையட்டும் என்று விட்டு இருந்தால் மற்ற மாதிரி கதைத்திருப்பினம் ...இந்த பிழைப்புக்கு .....
 
விழுகுற பக்கத்துக்கு குறிசுடுகுர ஆக்கள்தான…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

சிறிலங்காவில் வசிக்கும் பௌத்த மக்களிடையே வேற்றுமைகள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்கிறீர்களா?

வேற்றுமைகள் ஏற்றத்தாழ்வுகள் எல்லா மக்களிடமும் இருக்கின்றன. 

அப்படி வேற்றுமைகள் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இடம்:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

அப்படி வேற்றுமைகள் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இடம்:

பாட்டுடன் சேர்த்து வீடியோவில் எழுதி இருக்கும் வரிகளும் சம்மட்டியால் அடித்ததுபோல் இருக்கு…

இப்பொழுது எல்லாம் அடிக்கடி இரவில் எழும்பி இருந்து நினைக்கிறேன் நான் என் மரணத்துடன் அழிந்துவிடுவேன் பிள்ளைகள் அம்மா அப்பா யாரையும் இனி வாழ்வில் இன்னொரு தடவை பார்க்கமுடியாதே என்பதை நினைக்கும்போது வெறுமையாக இருக்கு மனசு முழுதும்..

எப்பொழுது கலெக்ஸிகள் நட்சத்திரங்கள் உருவாகி அழிவது பிக்பாங் பூமி தோன்றிய விதம் அணுவின் உள்ளிருக்கும் அப் டவுன் குவாக் போசோன்கள் பீல்ட் கூர்ப்பு etc..எல்லாம் எப்ப தெர்யதொடங்கியதோ கடவுள் இல்லை உயிர் என்பதும் இல்லை மறுபிறப்பும் இல்லை ஏதாவது ஒன்றை கொண்டு நினைவுகளை அழித்துவிட்டால் அந்த உடல் ஓணாண்டியே இல்லை இது எல்லாம் எப்ப புரியத்தொடங்கியதோ அண்டைக்கு புடிச்ச சனி..

இப்ப எல்லாம் நெத்தியில பட்டை அடிச்சுகொண்டு இல்லை பைபிளை தூக்கிகொண்டு மறுபிறப்பையும் உயிர் இருக்கு என்பதையும் நம்பிக்கொண்டு கோயிலுக்கோ சர்ச்சுக்கு நிம்மதியாக  போறவ்ங்களை பார்க்க பொறாமையாக இருக்கு..

ஒண்டுமே தெரியாம ஆடுமாடுகளை போல வாழ்வது எவ்வளவு நிம்மதி.. எதுக்குதான் பாழாய்ப்போன மனித மூளை உண்மைகளை உய்த்தும் பகுத்தும் அறியக்கூடியதாக வளர்ச்சி அடைஞ்சுதோ..😢😢

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதே.....

எவ்வளவோ  மக்கள்

அமைதியாக

ஆர்ப்பாட்டமின்றி

மற்றவர்களுக்கு தொந்தரவின்றி வாழ்ந்துவிட்டுப்போக

இந்த நம்பிக்கை  தான்  காரணமென்றால்

அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே???

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அதே.....

எவ்வளவோ  மக்கள்

அமைதியாக

ஆர்ப்பாட்டமின்றி

மற்றவர்களுக்கு தொந்தரவின்றி வாழ்ந்துவிட்டுப்போக

இந்த நம்பிக்கை  தான்  காரணமென்றால்

அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே???

உண்மைதான் ஜயா.. நான் நினைக்கிறேன் கடவுள் இல்லை என்று உணர்ந்தவர்கள் பலர் வயதான காலத்தில் மறுபடியும் கோவிலுக்கு போவது இந்த உண்மைகளை உணர்ந்த பின் வரும் வெறுமையில் இருந்து தப்புவதற்காகவே அன்றி மறுபடியும் கடவுளை நம்பி அல்ல.. அவர்கள் உள் மனதுக்கு தெரியும் கடவுளும் இல்லை உயிரும் இல்லை என்பது.. ஏனெனில் இந்த உண்மைகளை நீங்கள் அறிவியலின் துணையுடன் ஒருமுறை உணர்ந்துவிட்டால் ஒரு போதும் உளமார அதை உங்களால் மறுதலிக்கமுடியாது.. 

நான் இங்கு வந்து சண்டைபுடிப்பது காமெடிபன்னுவது எழுதுவது கூட இந்த சிந்தனைகள் மனதில் தோன்றாமல் இருக்கத்தான்..

  • கருத்துக்கள உறவுகள்

ஹோமோ சேபியன்ஸ் என்ற நவீன மனித இனம் (நாங்கள் தான்!😂) வருவதற்கு முன்னர் இருந்த உடல் வலிமை கூடிய நியண்டதால் மனித இனம் அழிந்து போன கதை தான் நினைவுக்கு வருகிறது இங்கே சில கருத்துக்களைப் பார்க்க.

"அவனைப் பூட்டச் சொல்லு, நாங்கள் பூட்டுறம்!" என்ற தொனியில் டயலாக் விடுகிறார்கள்! இது சிங்களவனோ, யாருமோ சொல்லாமலே செய்ய வேண்டிய வேலை, எங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக!  

  • கருத்துக்கள உறவுகள்

கனநாளைக்கு பிறவு அறிவியல் பூர்வமா எழுதக்கூடிய அறிவியல் ஆசான் யஸ்ற்றினை கண்டது மகிழ்ச்சி..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கனநாளைக்கு பிறவு அறிவியல் பூர்வமா எழுதக்கூடிய அறிவியல் ஆசான் யஸ்ற்றினை கண்டது மகிழ்ச்சி..

வேலை காரணமாக சிறு விலகல் எடுத்திருந்தேன், இலங்கைக் கொரனா நிலை தொடர்பான செய்திகளுக்கு கருத்துரைக்க விலகலில் இருந்து சிறு விடுமுறையெடுத்து வந்திருக்கிறேன். நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மைதான் ஜயா.. நான் நினைக்கிறேன் கடவுள் இல்லை என்று உணர்ந்தவர்கள் பலர் வயதான காலத்தில் மறுபடியும் கோவிலுக்கு போவது இந்த உண்மைகளை உணர்ந்த பின் வரும் வெறுமையில் இருந்து தப்புவதற்காகவே அன்றி மறுபடியும் கடவுளை நம்பி அல்ல.. அவர்கள் உள் மனதுக்கு தெரியும் கடவுளும் இல்லை உயிரும் இல்லை என்பது.. ஏனெனில் இந்த உண்மைகளை நீங்கள் அறிவியலின் துணையுடன் ஒருமுறை உணர்ந்துவிட்டால் ஒரு போதும் உளமார அதை உங்களால் மறுதலிக்கமுடியாது.. 

நான் இங்கு வந்து சண்டைபுடிப்பது காமெடிபன்னுவது எழுதுவது கூட இந்த சிந்தனைகள் மனதில் தோன்றாமல் இருக்கத்தான்..

நீங்கள் எழுதிய கருத்தில்  எனக்கும் 100வீத  உடன்பாடுண்டு

ஆனால் அநேகமான வயதானவர்கள் கடவுளை  நம்பித்தான் போகிறார்கள்

காரணம்  வேறு யாரும்   இல்லை அவர்கள்  சொல்பவற்றை  கேட்க...

அல்லது  

ஆறுதல் தர???😪

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

நீங்கள் எழுதிய கருத்தில்  எனக்கும் 100வீத  உடன்பாடுண்டு

ஆனால் அநேகமான வயதானவர்கள் கடவுளை  நம்பித்தான் போகிறார்கள்

காரணம்  வேறு யாரும்   இல்லை அவர்கள்  சொல்பவற்றை  கேட்க...

அல்லது  

ஆறுதல் தர???😪

விசுகர்! இந்த உலக மக்கள் தொகையில் எத்தனை வீதமானவர்கள் கடவுள் இல்லை என்று சொல்கிறார்கள் என யாரிடமாவது  கேட்டு சொல்ல முடியுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.