Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்.... திருகுவலையால், கணவனை... அடித்துக் கொன்ற மனைவி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கணவனை... அடித்து கொலை செய்த, மனைவி- யாழில் சம்பவம்

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார்.

யாழ்ப்பாணம்- அரியாலை, பூம்புகார் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், துரைராசா செல்வக்குமார்  (வயது-32) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த அவர், ஏழாலை மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் முடித்து பூம்புகாரில் வசித்து வருகிறார்.

மேசன் தொழிலில் ஈடுபடும் குடும்பத்தலைருக்கு மனைவியுடன் சில நாட்களாக நீடித்த குடும்ப முரண்பாடு முற்றிய நிலையில், நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய குடும்பப்பெண் கைது செய்யப்பட்டார்.

மேலும், திருவலைக் கட்டையால் கடுமையாகத் தாக்கப்பட்ட குடும்பத்தலைவரின் உடலில், 5இற்கு மேற்பட்ட காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2021/1239958

  • Replies 58
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜானு on Twitter: "கேரளாப் பக்கம் தேங்காய் துருவ செரவா use பண்ணுவாங்க.  சென்னைக்கு வந்தும் இதே tradition தான். தினமும் அரைமூடித் தேங்காயாவது ...

இந்தச்  செய்தியை... பார்த்த பின், 
சம்பல், சொதி...சாப்பிடாட்டிலும் காரியமில்லை, உயிர் முக்கியம் என்று...
இதை , கொண்டு போய் எறிந்து விட்டு வந்தாச்சு. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சினையாலதான் நான் இதை வாங்கி வைத்திருக்கிறன்.....கழட்டி எடுக்கிறதுக்குள்ள ஓடித் தப்பிடலாம்.......!  😂

தேங்காய்துருவி - தமிழ் விக்சனரி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, suvy said:

இந்தப் பிரச்சினையாலதான் நான் இதை வாங்கி வைத்திருக்கிறன்.....கழட்டி எடுக்கிறதுக்குள்ள ஓடித் தப்பிடலாம்.......!  😂

தேங்காய்துருவி - தமிழ் விக்சனரி

அம்மி, ஆட்டுக்கல்லில் மட்டுமே இருக்குது இது ! | 27-04-2017 | Malaimurasu Tv  - YouTube

வழக்கமாக... மனைவிமார், தமது ஆயுதமாக... அம்மிக் குழவியைத்தான் பாவிப்பார்கள்.
அந்த வீட்டில்... "கிரைண்டர்" இருந்த படியால், திருகுவலைக்கு  வேலை வந்திட்டுது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஜானு on Twitter: "கேரளாப் பக்கம் தேங்காய் துருவ செரவா use பண்ணுவாங்க.  சென்னைக்கு வந்தும் இதே tradition தான். தினமும் அரைமூடித் தேங்காயாவது ...

1 hour ago, தமிழ் சிறி said:

அம்மி, ஆட்டுக்கல்லில் மட்டுமே இருக்குது இது ! | 27-04-2017 | Malaimurasu Tv  - YouTube

இந்த செய்தியை வாசித்தபின்.. எங்கட ஊட்ல இது👆 ரெண்டும் இல்லை என்பதால் சந்தோசமாக இருந்தாலும்.. வீட்டுக்கு பின்னாடி தோட்டத்துல இது👇அதிகமாக இருப்பதால்… யோசனையாக இருக்கின்றது..🙆‍♂️

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த செய்தியை வாசித்தபின்.. எங்கட ஊட்ல இது👆 ரெண்டும் இல்லை என்பதால் சந்தோசமாக இருந்தாலும்.. வீட்டுக்கு பின்னாடி தோட்டத்துல இது👇அதிகமாக இருப்பதால்… யோசனையாக இருக்கின்றது..🙆‍♂️

spacer.png

எப்போதும் பூரண சரணாகதி நீண்ட ஆயுளைக் கொடுக்கும்!
எப்பவும் நியூட்டன் விதி தானே, நீங்க ஒரண்டை இழுக்காம இருந்தா பாயாசம் போடாமல் இருப்பாங்க.😜

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த செய்தியை வாசித்தபின்.. எங்கட ஊட்ல இது👆 ரெண்டும் இல்லை என்பதால் சந்தோசமாக இருந்தாலும்.. வீட்டுக்கு பின்னாடி தோட்டத்துல இது👇அதிகமாக இருப்பதால்… யோசனையாக இருக்கின்றது..🙆‍♂️

spacer.png

இதில் ஒன்றுமே தூக்க முடியாத அளவுக்கு பாரமாக இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட தேவையில்லை.😂😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

இதில் ஒன்றுமே தூக்க முடியாத அளவுக்கு பாரமாக இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட தேவையில்லை.😂😂

அவரையே தூக்கி போடுறவங்களுக்கு இதெல்லாம் உசுப்பி?😂

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுவேலி, மயிலங்காட்டுப்பக்கம், தலை வைச்சே படுக்கப்படாது....🤨

இப்படியான ஆபத்துகளை தடுப்பதற்குத் தான் வேலையில் எவ்வளவு busy என்றாலும் தேங்காய் திருவிக் கொடுத்து சரணடைவது...

Screenshot_20210919-084608_Facebook.jpg

10 minutes ago, நிழலி said:

இப்படியான ஆபத்துகளை தடுப்பதற்குத் தான் வேலையில் எவ்வளவு busy என்றாலும் தேங்காய் திருவிக் கொடுத்து சரணடைவது...

Screenshot_20210919-084608_Facebook.jpg

திருவி முடிந்த பின்னர் திருகுவலையை வைக்க Tresor வாங்க வேண்டும். 

செய்தியை வாசித்த பின்னர் மனதில் பயத்துடன் தோன்றிய ஐடியா. 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

குடும்பத்தில் ஏற்பட்ட முரண்பாடு முற்றியதால் கணவனை திருவலைக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்துள்ளார்.

லூசு பயல் கால் என்னத்துக்கு  இருக்கு ?  32 வயது தலைமுடி வாகா மாட்டுப்பட்டு போட்டுது போல் உள்ளது பாவம் கண்ணீர் அஞ்சலிகள் .

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

இப்படியான ஆபத்துகளை தடுப்பதற்குத் தான் வேலையில் எவ்வளவு busy என்றாலும் தேங்காய் திருவிக் கொடுத்து சரணடைவது...

Screenshot_20210919-084608_Facebook.jpg

ரெண்டு மூனு வருசத்துக்கு முன்னாடி நல்லா கும்முனு இருந்த மாப்ள தேங்கா துருவி நல்லா இழைச்சுபோனமாதிரி இருக்கு.. கன்னம்தான் லைட்டா உப்பிபோயிருக்கு.. அதுக்கும் ஒரு ஜடியா சொல்லுறன்.. இந்த சமைப்பது, பாத்திரம் கழுவுறது.. வீடு பெருக்குறது.. துவைச்ச துணிய துணிய அயன்பண்ணி அடுக்கி வைக்குறது எல்லாம் நல்ல உடற்பயிற்சியாம்லே..😁 

2 hours ago, ஏராளன் said:

எப்போதும் பூரண சரணாகதி நீண்ட ஆயுளைக் கொடுக்கும்!
எப்பவும் நியூட்டன் விதி தானே, நீங்க ஒரண்டை இழுக்காம இருந்தா பாயாசம் போடாமல் இருப்பாங்க.😜

நான் அடக்க ஒடுக்கமான நல்ல பையந்தான்.. நான் மட்டும் நல்ல பையனா இருந்து என்ன பண்ண.. வெள்ளிக்கிழமை சாயந்தரம் வயித்துக்குள்ள போறவன் சொல் பேச்சு கேக்க மாட்டேங்குரான்பா.. 😀 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரெண்டு மூனு வருசத்துக்கு முன்னாடி நல்லா கும்முனு இருந்த மாப்ள தேங்கா துருவி நல்லா இழைச்சுபோனமாதிரி இருக்கு.. கன்னம்தான் லைட்டா உப்பிபோயிருக்கு.. அதுக்கும் ஒரு ஜடியா சொல்லுறன்.. இந்த சமைப்பது, பாத்திரம் கழுவுறது.. வீடு பெருக்குறது.. துவைச்ச துணிய துணிய அயன்பண்ணி அடுக்கி வைக்குறது எல்லாம் நல்ல உடற்பயிற்சியாம்லே..😁 

நான் அடக்க ஒடுக்கமான நல்ல பையந்தான்.. நான் மட்டும் நல்ல பையனா இருந்து என்ன பண்ண.. வெள்ளிக்கிழமை சாயந்தரம் வயித்துக்குள்ள போறவன் சொல் பேச்சு கேக்க மாட்டேங்குரான்பா.. 😀 

உள்ள போனால் வாறது உசார் இல்ல! தகிரியமா(நடுக்கத்தோடு) இருப்பது போல் காட்டிக்கொள்வது.

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஊரில, தகப்பன் தண்ணிய போட்டு வந்து.... தாயை அடித்ததால், பொறுக்க முடியாமல், சின்னப்பொடியள் இருவர், 11, 12 வயதுக்காரரர்..... தகப்பனை தள்ள, அவர் எதிர்பாராமல், கல் உரல் மீது விழ....தலை அடிபட்டு இறக்க..... விபத்து என்று போலீசார் கேசை முடித்தாலும்..... இன்றுவரை..... தேப்பனை கொண்ட பெடியள் என்றே குறிப்பிடப்படுகின்றனர்....

பகிடியா இருந்தாலும்..... தகப்பன் இல்லை..... தாயும் சிறை போகும் நிலையில் அந்தப் பிள்ளை நிலை பாவம் தான். 🥴

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இதில் ஒன்றுமே தூக்க முடியாத அளவுக்கு பாரமாக இருக்கும் வரை நீங்கள் கவலைப்பட தேவையில்லை.😂😂

பொம்பளைக்கு ஆத்திரம் வந்தா அம்மிக்கல்லும் காத்துல பறக்கும்னு எங்க அப்பத்தா சொல்லும்ணே.. 😁

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, நிழலி said:

இப்படியான ஆபத்துகளை தடுப்பதற்குத் தான் வேலையில் எவ்வளவு busy என்றாலும் தேங்காய் திருவிக் கொடுத்து சரணடைவது...

Screenshot_20210919-084608_Facebook.jpg

இது படத்திற்காக திருவுவது போல இருக்கே!🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரெண்டு மூனு வருசத்துக்கு முன்னாடி நல்லா கும்முனு இருந்த மாப்ள தேங்கா துருவி நல்லா இழைச்சுபோனமாதிரி இருக்கு.. கன்னம்தான் லைட்டா உப்பிபோயிருக்கு.. அதுக்கும் ஒரு ஜடியா சொல்லுறன்.. இந்த சமைப்பது, பாத்திரம் கழுவுறது.. வீடு பெருக்குறது.. துவைச்ச துணிய துணிய அயன்பண்ணி அடுக்கி வைக்குறது எல்லாம் நல்ல உடற்பயிற்சியாம்லே..😁 

நான் அடக்க ஒடுக்கமான நல்ல பையந்தான்.. நான் மட்டும் நல்ல பையனா இருந்து என்ன பண்ண.. வெள்ளிக்கிழமை சாயந்தரம் வயித்துக்குள்ள போறவன் சொல் பேச்சு கேக்க மாட்டேங்குரான்பா.. 😀 

போனை பறிச்சு எறிஞ்சோன்ன.... நாம.... உசாராகிட்டாப் போல....

சம்பவம்.... அது.. இது என்று இஞ்சை விடுற... கதை அங்க தெரியாது எண்ட துணிவு தானே... 😁

2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பொம்பளைக்கு ஆத்திரம் வந்தா அம்மிக்கல்லும் காத்துல பறக்கும்னு எங்க அப்பத்தா சொல்லும்ணே.. 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

பொம்பளைக்கு ஆத்திரம் வந்தா அம்மிக்கல்லும் காத்துல பறக்கும்னு எங்க அப்பத்தா சொல்லும்ணே.. 😁

அப்பத்தா வாக்கு வேத வாக்கு, புரிஞ்சுகினு நடந்தா செரி..👍

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில என்ன நடக்குது.. மகன் தந்தையின் கண்ணை நோண்டி எடுக்கிறான்.. மனைவி கணவனை திருகுவலையால் அடிச்சு கொல்லுறாங்க.. கணவன் சந்தேகம் மனைவி தற்கொலை..  கள்ளன் என்று சொன்னதால்.. சிறுவன் தூக்கிட்டு தற்கொலை.. யாழ் மருத்துவக் கல்லூரி மாணவி.. படிப்புச் சுமையால் தற்கொலை..????!

புரியல்ல.. எமது சமூகம் எங்கு நோக்கிப் பயணிக்கிறது.. இந்தச் சமூகத்தை வழிநடத்த வேண்டிய சமூக ஆர்வலர்களும்.. கல்விச் சமூகமும் என்ன செய்துக்கிட்டு இருக்குது..??!

ஏன் யாழ் வவுனியா கிழக்குப் பல்கலைக்கழகங்கள்.. இந்த சமூக நோய்களைப் பற்றி ஆய்வதில்லை.. அறிவுரைகளை.. செயற்திட்டங்களை வரைவதோ வகுப்பதோ இல்லை...?!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2 பேர் மற்றும் , ’11:37 "கணவனை திருவலையால் தாக்கிக் கொலை செய்த மனைவி யாழில் சம்பவம்".. தம்பி நான் வேணும்னா தேங்காய் திருவ தெரியாத பிள்ளையா பார்க்கட்டா MEMES #PARENTS AMTLTMES 1’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர் மனைவியின் இன்னொரு வருடனான கள்ளத்தொடர்பே கொலைக்கு காரணம் என ஐபிசி சொல்லியுள்ளது. நீங்கள் ஒருவரும் தேவை இல்லாமல் பயம் கொள்ள வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்

கேஸ் வேறுமதிரி போகுதே 

3 hours ago, nedukkalapoovan said:

ஊரில என்ன நடக்குது.. மகன் தந்தையின் கண்ணை நோண்டி எடுக்கிறான்.. மனைவி கணவனை திருகுவலையால் அடிச்சு கொல்லுறாங்க.. கணவன் சந்தேகம் மனைவி தற்கொலை..  கள்ளன் என்று சொன்னதால்.. சிறுவன் தூக்கிட்டு தற்கொலை.. யாழ் மருத்துவக் கல்லூரி மாணவி.. படிப்புச் சுமையால் தற்கொலை..????!

புரியல்ல.. எமது சமூகம் எங்கு நோக்கிப் பயணிக்கிறது.. இந்தச் சமூகத்தை வழிநடத்த வேண்டிய சமூக ஆர்வலர்களும்.. கல்விச் சமூகமும் என்ன செய்துக்கிட்டு இருக்குது..??!

ஏன் யாழ் வவுனியா கிழக்குப் பல்கலைக்கழகங்கள்.. இந்த சமூக நோய்களைப் பற்றி ஆய்வதில்லை.. அறிவுரைகளை.. செயற்திட்டங்களை வரைவதோ வகுப்பதோ இல்லை...?!

என்னய்யா நெடுக்கு எப்பவும் சொறிலங்கா என விளிக்கிற நீங்க இப்ப ஊர் என்றும் சமூகம் அது இது என உருட்டுறீங்க.

ஏன்யா நீங்களெல்லாம் ஊருக்கு வந்து உபதேசம் செய்யக்கூடாது.முடிஞ்சா ஊருக்கு வந்து உபதேசம் சொல்லி பாருங்கவன் அடுத்த நொடி வி்மான நிலையம்தான்

அதெல்லாம் ஒரு முடிஞ்ச கதை நெடுக்கர்

  • கருத்துக்கள உறவுகள்

அது திருகுவலை இல்லை துருவுபலகை.

தமிழை அரைகுறை செய்தியாளர் மற்றும் இணையத்தளங்களில் இருந்து ஆண்டவா நீதான் காப்பாற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கேஸ் வேறுமதிரி போகுதே 

என்னய்யா நெடுக்கு எப்பவும் சொறிலங்கா என விளிக்கிற நீங்க இப்ப ஊர் என்றும் சமூகம் அது இது என உருட்டுறீங்க.

ஏன்யா நீங்களெல்லாம் ஊருக்கு வந்து உபதேசம் செய்யக்கூடாது.முடிஞ்சா ஊருக்கு வந்து உபதேசம் சொல்லி பாருங்கவன் அடுத்த நொடி வி்மான நிலையம்தான்

அதெல்லாம் ஒரு முடிஞ்ச கதை நெடுக்கர்

நெடுக்கர் சொன்ன சமூக நல ஆய்வுகள்,சமூக நல திட்டங்கள்,சமூக நல கல்விகள் என புலம்பெயர் நாடுகளில் பிள்ளைகளுக்கு ஒழுங்காக சொல்லி கொடுக்கின்றார்கள். பல்கலைகழக விரிவுரையாளர்கள் சமூக நலன் பற்றி ஆராய்ச்சி செய்கின்றார்கள்.பெறு பேறுகளை அரசுக்கு சமர்ப்பிக்கின்றார்கள். அதை அரசுகளும்  முடிந்தவரை செவிமடுத்து முன்னெடுத்து செல்கின்றது.

இங்கு ஜேர்மனியில் கோரோனா காலங்களில் பல்கலைகழக பேராசிரியர்கள் மற்றும் வைரஸ் சம்பந்தப்பட்ட  பல்கலைகழக ஆராய்சியாளர்களின் அறிக்கைகளை வைத்தே பல முடிவுகள் எடுக்கப்பட்டது.

நிற்க...

பல இடங்களில் உலக நடப்புகளை மட்டுமே இங்கு பகிர்கின்றோம். அதை சொல்ல முனையும் போது.......இல்லை நீ வா.....வந்து செய்து காட்டு என்ற மனப்பான்மையே பல இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.புத்தக படிப்பை விட அனுபவம் மேலானது.போலி வாழ்க்கையை விட சொந்த மண் வாழ்க்கை அமைதியானது.

தப்பியோடி .....தப்பியோடிய இடத்தில் சந்ததிகளை வளர்த்து விட்டோம். அந்த அனுபவத்தில் சொல்கின்றோம்.
சொந்த நாடு. சொந்த மண். சொந்த மொழி. சொர்க்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.