Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் இடம்பெற்ற இந்து சமய முறையிலான தன்பால் ஈர்ப்புடைய ( lesbian) பெண்களின் திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் பிள்ளை ஒரு வேளை இப்படி செய்தால் என் ரியாக்சன் அதன் பின்னான என் எண்ணங்கள் எப்படி இருக்கும் எண்டு சொல்லதெரியவில்லை.. அநேகமாக இதனால் சந்ததி பெருக்கம் மற்றும் சவால்களை எடுத்து சொல்லி புரியவைத்து பார்ப்பேன் இல்லை என்றால் மெளனமாக ஏற்றுக்கொள்வேன்..

  • Replies 386
  • Views 27.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் கூட  ஓரினச்சேர்க்கையாளர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொஞ்சமாவது வந்துவிட்டது என்றே நினைக்கிறன். நான் அறிய கொழும்பு / கண்டி பகுதிகளில் ஆண்கள் இப்படி விமர்சையாக திருமணம் செய்து வாழ்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

கவலைப்படாதே சகோதரா 😂😂🤣…. பெண்களில் பெரும்பாலானோருக்கு எம்மீதுதான் ஈர்ப்பு. 

ஒப்பீட்டளவில் ஒத்த பாலினைஈர்ப்பு உள்ளவர்கள் மிக சொற்ப அளவினரே.

ஆண்கள் ஆண்களை விரும்புவதும் உண்டு, இதனால் பெண்களுக்கு ஆண் துணை இல்லாமல் போகும் ஒரு நிலை வராதுதானே?

வர நாம் விடுவோமா😂.

பிகு

ஒத்த பாலின கவர்ச்சி என்பது ஒரு ஆளை பார்த்து இன்னொரு ஆள் செய்வதல்ல. அதே போல் இது fashion trend போல ஒரு டிரெண்டும் அல்ல. 

உள்ளார்ந்த உந்தல். இது உள்ளவர்கள் sexual minority ஆகவே ஆண்களுக்கு பெண்கள் இல்லாமல் போய்விடுமோ என்ற பயம் முகாந்திரம் இல்லாதது.

Edited by goshan_che

5 minutes ago, Sasi_varnam said:

இலங்கையிலும் கூட  ஓரினச்சேர்க்கையாளர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கொஞ்சமாவது வந்துவிட்டது என்றே நினைக்கிறன். நான் அறிய கொழும்பு / கண்டி பகுதிகளில் ஆண்கள் இப்படி விமர்சையாக திருமணம் செய்து வாழ்கிறார்கள். 

இவர்களுக்கு என்று சிங்கள சஞ்சிகை ஒன்றும் உள்ளது. அத்துடன் ஒரு அமைப்பும் உள்ளது. பெயர்கள் தான் உடனடியாக நினைவுக்கு வருகுது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சந்ததியின் பெருக்கம் / பாலியல் இச்சை இவை தானே ஆண், பெண் இணைவதற்கான முதல் காரணங்கள்.
உலக சனத்தொகை 6.9 பில்லியனை எட்டுகிறது, சனப்பெருக்கம் கொஞ்சம் குறைவதால் உலகத்துக்கு கேடு எதுவும் இல்லை. பாலியல் இச்சை அது அவனவன் / அவளவள் உணர்வு.
இது சரியா தவறா என்ற சமூக விவாதத்தை ஒதுக்கி விட்டு தனி மனித உரிமை விடயமாய் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

மற்றவர்களின் எம்மைப் பற்றிய அபிப்பிராயம் என்பது என்னைப் பொறுத்தவரைக்கும் நாய் குலைப்பது போன்றது. திருப்பி உறுதியாக நின்றால் குலைக்கும் நாய் வாலைச் சுருட்டிக் கொண்டு ஓடிவிடும்.

100% உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இனிய திருமண நல் வாழ்த்துக்கள் .........இவர்களின் சொத்துக்கள் இவர்களுக்கு பின் யாருக்கு போகும் 😂

பெண்கள் திருமணம் செய்யும் போது விரும்பினால் பிள்ளை பெறலாம்.

ஆண்கள் தான் இதிலிருந்து விதிவிலக்காக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Sasi_varnam said:

சந்ததியின் பெருக்கம் / பாலியல் இச்சை இவை தானே ஆண், பெண் இணைவதற்கான முதல் காரணங்கள்.
உலக சனத்தொகை 6.9 பில்லியனை எட்டுகிறது, சனப்பெருக்கம் கொஞ்சம் குறைவதால் உலகத்துக்கு கேடு எதுவும் இல்லை. பாலியல் இச்சை அது அவனவன் / அவளவள் உணர்வு.
இது சரியா தவறா என்ற சமூக விவாதத்தை ஒதுக்கி விட்டு தனி மனித உரிமை விடயமாய் பாருங்கள்.

அது சரி.. இச்சை எப்படி போக்குவினம். அடல்ட் சொப் போயா..?!

--------------------------------------

கறுமம் கண்றாவித்தனமெல்லாத்துக்கும்.. ஒரு விளக்கம் கொடுத்தே பழகிட்டு வாறம்.

அறிவியல் ரீதியாக.. கூட இந்த உறவுகளை அர்த்தப்படுத்துவது சிரமம். எதிக் பேசி... ஏதோ சமாளிச்சிக்கிட்டு இருக்கு உலகம்.

அண்மையில் ஒரு பெண் சிகிச்சைக்கு வந்திருக்காங்க.. அவான்ர நோயே விசித்திரமாக இருந்தது. 

இப்ப விளங்குது.. எப்படி பெண் நோயியல் எல்லாம்.. அதுகளின்ர வாய்க்குள்ள வருகுதுண்ணு. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

ஒப்பீட்டளவில் ஒத்த பாலினைஈர்ப்பு உள்ளவர்கள் மிக சொற்ப அளவினரே.

அது சரிதான்,

ஒருபாலின ஈர்ப்பு ஹார்மோன்கள் மாறுபாட்டில் வருகிறதென்றும் சொல்கிறார்கள், காமவெறியில் வருகுது என்றும் சொல்கிறார்கள்,  கல்லூரி ஆண்கள் பெண்கள் விடுதியில் எல்லாம் ஓர் பாலின சேர்க்கை அமோகமாக எம் நாடுகளிலேயே நடந்திருக்கிறது என்று அறிந்திருக்கிறோம். 

இலங்கையில்கூட தன்னினசேர்க்கையாளர் ஊர்வலம் போகும் அளவில் எல்லாம் இப்போ நிலமை இருக்கு.

இன்று ஓரின சேர்க்கையை விவாத பொருளாக்கியிருக்கும் நாம் . உலகத்துக்கே தன்பாலி சேர்க்கையை அறிமுகம் செய்தது இந்து மதம் என்பதை சத்தமின்றி கடந்துவிடுகிறோம், விஷ்ணுவும் சிவனும் ஓரின சேர்க்கையாகிதான் ஐயப்பன் சாமியே பிறந்தார் என்று கூறுகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவெண்றால் ஓரின சேர்க்கையை அடியோடு வெறுக்கும் எம்மில் பலர் ஐயப்பன் பக்தர்களாக இருக்கிறார்கள்.

இதுபோல்தான் வெள்ளைக்கார பெண்கள் புகைப்பதையே பெரும் வியப்பாக  பார்க்கும் எம் சமூகம், வெள்ளைக்காரிகளுக்கு முன்னமே அந்தக்காலத்து நம் கிழவிகள் சிகரெட்டிலும் பார்க்க மிகவும் கெடுதலான சுருட்டை இழு இழு எண்டு இழுத்து  பொக்கு பொக்கு எண்டு புகைவிட்டதை அடியோடு மறந்துவிடுகிறோம்.

எல்லாம் இப்படியே தாறுமாறா ஓடுது பங்கு என்ன பண்ண?

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

!

நெடுக்கர்...

காமசூத்திரா போல, ஆயகலைகள் போல புதுசா ஒரு "மேயக் கலை" கண்டுபிடிப்பதென்ன அவ்வளவு கஷ்டமா? 
இது வயர்லெஸ் , வை (f )வய் காலம் 'ஆண்'டெனா இல்லாமலேயே ட்யூனப் செய்யலாம், குழாய் இல்லாமலே குளிர்பாணம் அருந்தலாம்.. 😃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

ஆனால் ஒரே ஒரு கவலை இப்படியே பெண்கள் தன்னின சேர்க்கையாளர்களாக  போனால் ஆண்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது? 

ஆண்களும் இப்போ பல இடங்களில் தன்னின சேர்க்கையாளர்களாக வாழ்கிறார்கள் ஜேர்மனியின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சர் அப்படி வாழ்தவர் அவர் 50....60. வயதிற்குள் இறந்துவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

பேசப்பட வேண்டிய விடயம். அதனால் தான் கேள்வியை வைத்தேன். 

10 minutes ago, nedukkalapoovan said:

அது சரி.. இச்சை எப்படி போக்குவினம். அடல்ட் சொப் போயா..?!

--------------------------------------

கறுமம் கண்றாவித்தனமெல்லாத்துக்கும்.. ஒரு விளக்கம் கொடுத்தே பழகிட்டு வாறம்.

அறிவியல் ரீதியாக.. கூட இந்த உறவுகளை அர்த்தப்படுத்துவது சிரமம். எதிக் பேசி... ஏதோ சமாளிச்சிக்கிட்டு இருக்கு உலகம்.

அண்மையில் ஒரு பெண் சிகிச்சைக்கு வந்திருக்காங்க.. அவான்ர நோயே விசித்திரமாக இருந்தது. 

இப்ப விளங்குது.. எப்படி பெண் நோயியல் எல்லாம்.. அதுகளின்ர வாய்க்குள்ள வருகுதுண்ணு. 

அது தான் ஆரம்பத்திலேயே இயற்கைக்கு மாறான விடயத்தை வாழ்த்துவதில்லை பாராட்டுவதில்லை என்றேன் 

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பதற்கு வரைவிலக்கணம் வகுக்கப்படவேண்டும்  இப்போது இருக்கே தெரியாது  ஒரு ஆணும் ஒரு பெணும் இணைவது தான் திருமணம் ஆகும் ஒரே இனம் இணைவது திருமணம் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

திருமணம் என்பதற்கு வரைவிலக்கணம் வகுக்கப்படவேண்டும்  இப்போது இருக்கே தெரியாது  ஒரு ஆணும் ஒரு பெணும் இணைவது தான் திருமணம் ஆகும் ஒரே இனம் இணைவது திருமணம் இல்லை 

சில வரைவிலக்கணங்களை மாற்றமுடியாது மாற்றக் கூடாது.

பொது நோக்கோடு தூர நோக்கோடு நாம் செய்யணும். 

வாழ்த்தி பாராட்டி பேசுவது ஊக்கப்படுத்துவாத மாறிவிடும்.

ஆனால் உண்மையில் இங்கே வாழ்த்துக்கூறி பாராட்டியவர்கள் எவரும் தம் பிள்ளைகளுக்கு இதை ஊக்கப்பட்படுத்த மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்கால இதைக் கடந்து இப்ப என்னென்னமோ எல்லாம் நடக்குது.. எங்கட ஆக்கள் இன்னும் பப்பிளிக்கிக்கு கொண்டு வரேல்ல.

Are humans naturally monogamous or polygamous? | by mikrobiologia | Medium

Polygamy or Monogamy - Which side of the Fence you are on? - Blued India

Monogamy Vs. Polygamy | A Deep Analysis of Monogamy and Polygamy

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nedukkalapoovan said:

அங்கால இதைக் கடந்து இப்ப என்னென்னமோ எல்லாம் நடக்குது.. எங்கட ஆக்கள் இன்னும் பப்பிளிக்கிக்கு கொண்டு வரேல்ல.

Are humans naturally monogamous or polygamous? | by mikrobiologia | Medium

Polygamy or Monogamy - Which side of the Fence you are on? - Blued India

Monogamy Vs. Polygamy | A Deep Analysis of Monogamy and Polygamy

நன்றி நெடுக்ஸ் தம்பி

நான் கொஞ்சம் இதை சொல்ல தயங்கினேன். 

  • கருத்துக்கள உறவுகள்

அப்பப்பா, நீ அப்பன்தானடா என்று ஒரு சுவீடன் நாட்டு நிஜகதை எழுதி  இருந்தேன்.

இப்படி இரு பெண்கள், அவர்களது தோழி, தோழியின் கணவர்..... இடேயை நிகழும் சம்பவம்.....

ம்..... எவனா... /எவளா இருந்தாலும், ஒரு பொம்பிள / ஆம்பிளை உடன் வா என்று சொல்லும் நிலையில் பல பெற்றோர்.....

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, valavan said:

அது சரிதான்,

ஒருபாலின ஈர்ப்பு ஹார்மோன்கள் மாறுபாட்டில் வருகிறதென்றும் சொல்கிறார்கள், காமவெறியில் வருகுது என்றும் சொல்கிறார்கள்,  கல்லூரி ஆண்கள் பெண்கள் விடுதியில் எல்லாம் ஓர் பாலின சேர்க்கை அமோகமாக எம் நாடுகளிலேயே நடந்திருக்கிறது என்று அறிந்திருக்கிறோம். 

இலங்கையில்கூட தன்னினசேர்க்கையாளர் ஊர்வலம் போகும் அளவில் எல்லாம் இப்போ நிலமை இருக்கு.

இன்று ஓரின சேர்க்கையை விவாத பொருளாக்கியிருக்கும் நாம் . உலகத்துக்கே தன்பாலி சேர்க்கையை அறிமுகம் செய்தது இந்து மதம் என்பதை சத்தமின்றி கடந்துவிடுகிறோம், விஷ்ணுவும் சிவனும் ஓரின சேர்க்கையாகிதான் ஐயப்பன் சாமியே பிறந்தார் என்று கூறுகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவெண்றால் ஓரின சேர்க்கையை அடியோடு வெறுக்கும் எம்மில் பலர் ஐயப்பன் பக்தர்களாக இருக்கிறார்கள்.

இதுபோல்தான் வெள்ளைக்கார பெண்கள் புகைப்பதையே பெரும் வியப்பாக  பார்க்கும் எம் சமூகம், வெள்ளைக்காரிகளுக்கு முன்னமே அந்தக்காலத்து நம் கிழவிகள் சிகரெட்டிலும் பார்க்க மிகவும் கெடுதலான சுருட்டை இழு இழு எண்டு இழுத்து  பொக்கு பொக்கு எண்டு புகைவிட்டதை அடியோடு மறந்துவிடுகிறோம்.

எல்லாம் இப்படியே தாறுமாறா ஓடுது பங்கு என்ன பண்ண?

Free யா விடுங்க பங்கு 😀. வரலாறு என்பது காட்டாறு, அதை தடுக்க முடியாது. 

23 minutes ago, Kandiah57 said:

திருமணம் என்பதற்கு வரைவிலக்கணம் வகுக்கப்படவேண்டும்  இப்போது இருக்கே தெரியாது  ஒரு ஆணும் ஒரு பெணும் இணைவது தான் திருமணம் ஆகும் ஒரே இனம் இணைவது திருமணம் இல்லை 

இந்த வரைவிலக்கணம் நாட்டுக்கு நாடு வேறுபடும். யூகேயில் ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும் சிவில் திருமணம் செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

வாழ்த்தி பாராட்டி பேசுவது ஊக்கப்படுத்துவாத மாறிவிடும்.

ஆனால் உண்மையில் இங்கே வாழ்த்துக்கூறி பாராட்டியவர்கள் எவரும் தம் பிள்ளைகளுக்கு இதை ஊக்கப்பட்படுத்த மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.

நடந்த நிகழ்ச்சிக்கும் இங்கு வாழ்த்துக்கள் கூறியவர்களுக்கும் எந்த சம்பந்தமில்லை நாங்கள் வாழ்த்தவிட்டாலும். எதிர்காலத்தில் இப்படி நடைபெறும்...இருந்தும் வாழ்த்தியது  ஒரு ஊக்குவிப்பு என்பதை எற்றுக்கொள்கிறேன்.  ஆனாலும் வாழ்த்துவதைவிட வேறு வழி இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

நன்றி நெடுக்ஸ் தம்பி

நான் கொஞ்சம் இதை சொல்ல தயங்கினேன். 

9 minutes ago, nedukkalapoovan said:

அங்கால இதைக் கடந்து இப்ப என்னென்னமோ எல்லாம் நடக்குது.. எங்கட ஆக்கள் இன்னும் பப்பிளிக்கிக்கு கொண்டு வரேல்ல.

Are humans naturally monogamous or polygamous? | by mikrobiologia | Medium

Polygamy or Monogamy - Which side of the Fence you are on? - Blued India

Monogamy Vs. Polygamy | A Deep Analysis of Monogamy and Polygamy

நீங்கள் இருவரும் சொல்வதில் ஒன்றுடன் உடன்படுகிறேன். 

மேற்குலகை பொறுத்தவரை ஹோமோசெக்சுவாலிட்டி இப்போ ஒரு settled matter சட்டரீதியாகவேனும்.

இப்போ இங்கே பேசு பொருள் gender dysphoria, ஆண்/பெண்ணாக மாறுவது, எந்த வயதில் ஆப்பரேசன் செய்யலாம், அது சம்பந்தமான உரிமைகள் பற்றியே.

இப்போ யார் பெண் என்பதே இங்கே பேசுபொருளாக இருக்கிறது. Women v trans women, are trans women, women ? இவைதான் இங்கே பேசப்படுகிறன.

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் "இந்தப்பூனையும் பால் குடிக்குமா" என்று இருக்கும் அந்நிய ஆண்களுடன் கண்டம் விட்டு கண்டம் பறந்து சென்று டேற்ரிங் பண்ணிட்டு வருகுதுகள்.....சில மாதங்களில் வேறுஒருத்தரை மணமுடிக்குதுகள்....!

சகோதரங்களுக்குள்ளேயே விடாப்பிடியாய் நின்று மணமுடிக்குதுகள்....இப்படி நிறைய பார்த்து மனசு மரத்து போய் விட்டது......!

மரத்துக்கும் மரத்துக்கும் கலியாணம், கழுதைக்கும் கழுதைக்கும் கலியாணம்,நாய்க்கும் மனுசனுக்கும் கலியாணம் என்றும் நிறைய பார்த்தாச்சுது.......!

வாழ்த்துவதாய் இருந்தால் அது மனப்பூர்வமாய் இருக்க வேண்டும்...... அது முடியவில்லை....!

இதையெல்லாம் இரண்டு குலை போட்ட வாழை, நாலு கிளையுடன் நிக்கும் பனை என்று செய்தியாக பார்த்து கடந்து போக வேண்டும்......அவ்வளவுதான்.......!

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இனப்பெருக்கத்துக்கான உறவுமுறை தெரிவு கட்டுப்பாடுகளற்று இருந்தது. பின்பு பொது மனித முன்னேற்றம் கருதி நாகரீக வளர்ச்சியின் படியில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு கடைப்பிடிக்கப்பட்ட வருகிறது.  உதாரணமாக நெருங்கிய உறவினரிடையே திருமணம் செய்ய முடியாது. 

தனி மனித உரிமை தானே என்று சொல்லி யாரவது நெருங்கிய உறவினரிடையே திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினால் ஏற்றுக்கொள்ளலாமா. 

உதாரணமாக தாய் மகனை மணம் புரிதல்.

 இங்கே நான் சட்டத்தை பற்றி கதைக்கவில்லை.

மாற்றங்களே மனித வரலாற்றில் மாறாதிருப்பவை எனினும் காட்டு வாழ்க்கைக்கு திரும்பிப் போகாமலிருப்பது நலம் எனவே தோன்றுகிறது.

தனிப்பட்ட முறையில் இருக்கும் புறநடைகளை கொண்டாட வேண்டியதில்லை என்பது எனது அபிப்பிராயம் ...

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, சாமானியன் said:

 உதாரணமாக தாய் மகனை மணம் புரிதல்.

இதற்கு காரணம் சில வேளை குறையுள்ள பிள்ளை பிறக்கலாம் என்கிறார்கள்.

நான் உட்பட எனது ஊரில் பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள விடயம் தான் இது. அப்படி யாரையும் நான் கண்டதில்லை.

ஆனால் பிறக்கும் குழந்தைக்கு சிலவேளை குறையிருக்கலாம் என்பதற்காக அதை தடுக்கும் சட்டம் குழந்தையே பிறக்காத விடயத்துக்கு சட்ட சேவைகளை வழங்குகிறது??

கொஞ்சம் உறுத்தலாக இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

எனது சித்தப்பாவுடைய மகன் ஒருவன் அதாவது எனது தம்பி கனடாவில வாழ்கிறான் கனடாவில் அவன் சார்ந்த துறையில் கொஞ்சம் என்ன நல்ல பிரபல்யம் அவன் சார்ந்த துறையைக் குறிப்பிட்டல் கனடாவில வாழும் தமிழர்களில் அனேகர் உடனேயே கண்டுபிடித்துவிடுவினம் அதனால் நான் சொல்லவில்லை தவிர களவிதியும் இடம்கொடாது 

அவனும் இப்போது கே ஆகத்தான் வாழ்கிறான் நிரந்தரமாக சோடி சேர்ந்து இருக்கிறாணோ இல்லை அடிக்கடி இபடியான கோஸ்டியளுடன் உறவாடுகிறாணோ தெரியாது 

ஆனால் அவன் ஊரில இருக்கும்போதே இப்படியான தொடசல்கள் இருந்ததை நான் அறிவேன்.

யாழ்ப்பாணத்தில் பிரபல்யமான கோவில் உரிமையாளர் ஒருவரும் இந்த விடையத்தில் அதிக நாட்டமுள்ளவர்.

எனது நெருங்கிய நண்பன் ஒருவனும் அதேதான் அவனுக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்த்தது ஆனால் சரிப்பட்டு வரவில்லை இப்படியான பிரச்சனை என்றவுடன் மனைவி விட்டுப்பிரிந்து போய்விட்டார்.  திருமணம் நடந்தபின்பும் அவருக்கு ஒரு ஆண் நண்பர் ஒருவருடன் உறவு இருந்தது அவருக்கும் திருமணம் நடந்து அதுவும் சரிவரவில்லை இரண்டு பெண்களது வாழ்க்கையும் அப்படியே போய்விட்டது இறுதியில் எனது நண்பனது ஆண்துணையும் நோய்வாய்ப்பட்டு இளவயதிலேயே இறந்துவிட்டார்.

அண்மையில் யாழ்ப்பாணம் போகும்போதும் எனது நண்பனைச்சந்தித்தேன் அவருக்கு என்ன ராசியோ தெரியவில்லை இப்போதும் ஓரிருவருடன் சகவாசம் வைத்திருக்கிறர் என உணர்ந்தேன்.

இது அவரது தனிப்பட்ட விடையம்

அதைத்தவிர்த்துவிட்டுப் பார்த்தால் குண இயல்புகளில் சுத்தத் தங்கம். பொய் பொறாமை ஏமாற்று சூது வஞ்சகம் எதுவுமே இல்லாதவர்.  போன இடத்தில் வாரும் ஐசே ஏதாவது சாப்பாட்டுக்கடையில சாப்பிடுவம் என அழைத்தல் வருவார் ஆனால் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்பதற்காக என்னைச் செலவுசெய்ய விடமாட்டார். 
உண்மையாகச் சொல்லப்போனால் சந்டிக்கும்போது எனது கையைப்பர்த்ததாக எனக்கு நினைவே இல்லை.

இப்போதும் அவர் எனக்கு நல்ல நண்பரே. அவருடன் பழகியதாலோ இல்லையோ எனக்கு இப்படியான செய்திகளை வாசிச்சாலோ கேள்விப்பட்டளோ மாறுதலான கருத்துகள் எதுவும் ஏற்படுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தோஷம் நீங்க கழுதைக்கு கலியாணம் கட்டி வைக்க கூடியவர் காசு வாங்கி கொண்டு யார் யாருக்கும் கட்டி வைக்கலாம்.திருமணம் செய்பவர்கள் அது அவரவர் இஷ்டம்.இதுல தூக்கி வைச்சு பாராட்டுற அளவிற்கு  என்ன சாதனை என்னு நானும் யோசிச்சு  யோசிச்சு பார்க்கிறேன் புரியுதில்லை.எதோ Elon musk ன் Spacex project ல் புது rocket design பண்ணினது போல,அல்லது கருந்துளையை கண்டறிந்தது போல, இல்லாவிட்டால் சரிந்திருந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தியது போல என்ன புர்ச்சி என்னு விளங்குதில்லை.கலாச்சாரம் என்றால் காலத்திற்கேற்ப சூழ்நிலைக்கேற்ப ஏற்கும் கருத்தியலுக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும்.திருமணம் செய்பவர்கள் அது அவரவர் தனிப்பட்ட உணர்வு, முடிவு.இதுல சாதனை புர்ச்சி என்ன என்று தான் விளங்குதில்லை.

இதற்கு புரட்சி முற்போக்கு வெங்காயம் என்று யாரும் சாயம் பூச வேண்டாம். யாரோ இருவர் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்கிறார்கள். அதை தங்கள் மத நம்பிக்கைக்கு ஏற்ப செய்வதாக எண்ணிக் கொள்கிறார்கள். 

முன்பு முகநூலில் ஒரு திருமணத்தில் பெண்ணுக்கு ஆணும், ஆணுக்கு பெண்ணும் தாலிகட்டி அதை புரட்சி என்று பீத்தி இருந்தார்கள். அந்த புரட்சியால் ஆதாயம் பெற்றது நகைகடைகாரர் மட்டுமே. ஒரு தாலிக்கு பதில் இரண்டு தாலி விற்றார்கள். 

அவர்கள் திருமணம் செய்வது இல்லை பிரச்சினை விசுகு சொன்னதுபோல் இவ்வாறானவற்றை தூக்கிவைத்து கொண்டாடி இதை ஒரு கலாச்சாரமாக மாற்றுவதுதான் இங்கு சுட்டிகாட்டப்பட்டு கண்டிக்கபட்டவேண்டியது.. சுவி அண்ணை சொன்னதுபோல் இதையெல்லாம் இரண்டு குலை போட்ட வாழை, நாலு கிளையுடன் நிக்கும் பனை என்று செய்தியாக பார்த்து கடந்து போக வேண்டும் அவ்வளவுதான்.. நீங்கள் போற்றவும் வேண்டாம் தூற்றவும் வேண்டாம் அவர்களைஅவர்கள் பாட்டுக்கு வாழவிடுங்கள்.. நம்ம தலைமுறையை நாம காப்பற்றிக்கொள்ளுவம்.. ஏற்கனவே அழிஞ்சு போன இனம்.. இனப்பெருக்கமும் இல்லாட்டி இருந்த தடமும் இல்லாமல் போயிடும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.