Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாணக்கியன் மற்றும் சுமந்திரனுக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Justin said:

உங்களுக்கு ஒரு கருத்தின் "பின்னணி" என்பதை விளக்குவது கஷ்டம் தான்! தமிழர் யாரும் எந்தக் காலப் பகுதியையும் பற்றிக் கதைக்கலாம் - ஆனால் போராளியாக இருந்து தப்பி வந்தவனை போராடப் போகாமல் வெளியேறி வந்தவன் துரோகி எனும் போது எல்லாத் துவாரங்களாலும் சிரிக்க வேண்டியிருக்கிறது!

(விளங்கியுருக்காதே?😎 - பரவாயில்லை - நகருங்கள்!)

எல்லோருக்கும் எல்லாம் விளங்கி இருக்கும், தெரிந்திருக்கும் என நீங்கள் நினைப்பது தான் தப்பு.  ஜேர்மன் தாதி ஒருவர் உப்பு நீரோ எதோ வைசருக்கு பதிலாக செலுத்தி விட்டார் என்பது தான் செய்தி. உடனே நீங்கள் வந்து எள்ளி நகையாடியதை அனைவரும் பார்த்தோம். பின்னர் உண்மை நிலை அது தான் என்பதை சில இணைப்புக்கள் உறுதிப்படுத்தின. அப்போ எல்லா துவாரங்களாலும் சிரிக்க வேண்டி  ஏற்பட்டது. விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். தலைய சொறிய கூடாது.

  • Replies 469
  • Views 32.2k
  • Created
  • Last Reply
6 hours ago, ரஞ்சித் said:

வெற்றிச்செல்வன் போட்டுக் கிழி கிழியெண்டு கிழிக்கிறார் உமாவை, ஒருக்கால் உந்த புத்திசீவிகளைப் போய்ப் பாக்கச் சொல்லுங்கோ), டக்கிளஸ்  எண்டு தொடங்கி , கருணா பிள்ளையா

ஆயுத இயக்கங்கள் அனைத்துமே பல அட்டூழியங்களை செய்தது என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியும். தாம் விசுவாசம் வைத்த இயக்கங்களின் கொலைகளையும் அட்டூழியங்களையும் மூடிமறைத்து அல்லது அதற்கு ஏதும் பொய்க்காரணம் கண்டுபிடித்து வக்காலத்து வாங்கி தமது இயக்க விசுவாசத்தை காட்டும் மனச்சாட்சியற்ற மனிதர்கள் வாழும் இவ்வுலகில் வெற்றிச்செல்வன் புளொட் இயக்கத்தின் அட்டூழியங்களை வெளிப்படையாக மக்களுக்கு கூறியது பாராட்டுக்குரியது. அதே போல் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியும் போராட்டத்துடன் இறுதிவரை வாழ்ந்து தனது சொந்த மகனைக் கூட போராட்டத்தில்  இழந்த தமிழ்கவி அம்மாவும் வெளிப்படையாக போரின் இறுதியில்    நடந்த அட்டூழியங்கள் அனைத்தையும் சாட்சியாக பதிவு செய்ததும் பாராட்டுக்குரியது. ஆயுதப் போரில் ஈடுபடும் எல்லோருமே தமது ஆயுத அதிகாரத்தில் தான் கண்ணாக இருப்பார்கள்.  மக்கள் அழிவை பற்றி கிஞ்சித்தும் கவலைப்பட மாட்டார்கள் என்பதற்கு ஈழப் போராட்டம் ஒரு பாடம்.  

கற்பனை கலந்து விசுவாச வரலாறு எழுதுபவர்கள் மத்தியில் மக்களுக்காக உண்மையாக போரிட்ட வெற்றிச்செல்வன், தமிழினி,  அலெக்ஸ் பரந்தாமன் 
ஆகியோரின் அனுபவ வரலாறு மிகவும் பெறுமதி மிக்கது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

இப்ப என்ன? புலிகளும் மக்களைக் கொன்று குவித்தார்கள், ராணுவத்திற்குக் காட்டிக் கொடுத்தார்கள், தலையாட்டினார்கள், தேசியவாதிகளைச் சிங்கள அதிகாரத்தின் விருப்பிற்கேற்ப கொன்று குவித்தார்கள், சிறுமிகளை விபச்சாரத்திற்காகக் கடத்திச் சென்றார்கள் என்று கூறவேண்டும், அப்படித்தானே? கூறி விட்டால் போச்சு, உங்கள் ஆசை நிறைவேறக் கடவது!

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

ஒரு கீறல் காயமும் படாமல் வானூர்தியில் ஏறி வந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தலைவரில் தான் பிழை என்று சொல்ல மனச்சாட்சி உள்ள எவராலும் சொல்ல முடியாது.
 
ஆ நுணா எப்படி சுகம்... என்னோடு தான் நீங்கள் வந்த . நான் லண்டனில் நீங்கள் அமெரிக்கா போயிட்டிங்கள் .குடும்பத்தில் எல்லோரும் சுகமா ?.

ஊரில் எவன் செத்தான் எனக்கென்ன ?, எவன் அங்கவீனர்களாக அலைந்தால் என்ன , போராளிகளின் குடும்பங்கள் பிச்சை எடுத்தால் எனக்கென்ன ...மாதம் பத்தோ , இருபதோ அனுப்பினோமா ,யாழில் வந்து தலைவர் வாழ்க என்று வாழ்த்துப் போட்டால் நீங்கள் தேசியலாதி தான் நுணா .

போராட ஆட்கள் இல்லை என்று கூப்பிடேக்குள்ள தலைவராவது ,மண்ணாவது ....வெளிநாட்டில் அந்த செட்டிலான பிறகு தலைவர் வாழ்க 
என்னாலை எல்லாம் உங்களை மாதிரி இரட்டை  வேசம் போடா முடியாது ...அப்ப நான் வரட்டா 

17 hours ago, விசுகு said:

இங்கே எழுதும்  அத்தனை வாய்களும் வெற்றியை   மட்டும் எதிர்பார்த்து காத்திருந்திருந்தவைகளே...
தோற்றவுடன் முந்திக்கொண்டு ஒருவரில் பழி போட்டுவிட்டு ஒப்பாரி வைக்கும்  கூட்டம் எதுக்கும்  உதவாது
நாம  தான்  இனியாவது புரிந்து  விலகி  நடந்து  கொள்ளணுமே  தவிர
இவர்களிடம் மனம்?  சாட்சி??  உண்மை??? தர்மம்??????? என்று????

பணத்தை கொடுத்தால்  போராட்டத்தை விலைக்கு வாங்கலாம் என்று நினைக்கின்ற ஆட்களாச்சே நீங்கள் எல்லாம் உங்களிடம் மன சாட்சி  இருக்குதா ஜயா ...எனது  ,என் குடும்ப உசிரு தான் உசிரு மற்றவர்கள் எல்லாம் ம .. என்ற கொள்கை உடையவர்கள் தானே உங்களை போன்றோர் 
 
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

ஒரு விஷயம் சொல்லவேணும். உந்த மாற்றியக்கத்தார் தமிழரின்ர நலனில அக்கறை கொண்டுதான் போராட்டத்தைக் கைவிட்டு அரசாங்கத்தோட சேர்ந்து தீர்வுக்கு வேலை செய்யினம் எண்டு நான் சொல்லுறதுக்கும் ஒரு காரணம் இருக்கண்ணை. அப்படிப் பொதுவாச் சொன்னாத்தானே சைக்கிள் காப்பில என்ர அண்ணைமாரையும் நான் நியாயப்படுத்தலாம், என்ன நான் சொல்லுறது? 

இல்லை, நுணா. இதற்கொரு காரணம் இருக்கிறது. அதாவது, போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து அழிக்கத் துணை நின்றவர்களைச் சரியானவர்கள் என்று நியாயப்படுத்த இருக்கும் ஒரே வழி, தலைவரையும் , போராட்டத்தையும் தவறென்று வாதிட்டு நிறுவுவதுதான். இதன் பின்னாலுள்ள சூட்சுமமும் இதுதான்.

ஓமோம் எப்படியண்ணை சரியா கண்டு பிடிச்சனியனியல் நீங்கள் எங்கேயோ இருக்க வேண்டியவர் 
நான் இங்க கதைப்பது தலைவரோடு சேர்ந்து போரட்டத்தை தொடங்கிய மாற்று இயக்கங்களை பற்றி ...புலிகளின் உள்  வீட்டு  பிரச்சனைகளை இன்னொரு திரி திறந்து கதைப்பம் .
எப்ப பார்த்தாலும் ஆட்டுக்குள்ள மாட்டை கொண்டு செருகுவதே உங்கள் வேலை அண்ணேய் ...தமிழ் வாசிக்க தெரியுமோ 
மற்ற இயக்கங்கள் இப்பவாவது தங்களுக்கு நடந்ததை வெளிப்படையாய் எழுதுகிறார்கள் ...அதை ரசித்து படிக்கும் நீங்கள்  புலிகளில் நடந்த உள்  வீட்டுக் கதைகளை  எழுதினால் நாண்டுக்கிட்டு சாகோணும் .
இப்ப தான் புளொட்டின் கதை வந்திருக்கு ...புலியின் கதையும் வரும் ...பொறுத்திருப்போம் 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

ஆ நுணா எப்படி சுகம்... என்னோடு தான் நீங்கள் வந்த . நான் லண்டனில் நீங்கள் அமெரிக்கா போயிட்டிங்கள் .குடும்பத்தில் எல்லோரும் சுகமா ?.

ஊரில் எவன் செத்தான் எனக்கென்ன ?, எவன் அங்கவீனர்களாக அலைந்தால் என்ன , போராளிகளின் குடும்பங்கள் பிச்சை எடுத்தால் எனக்கென்ன ...மாதம் பத்தோ , இருபதோ அனுப்பினோமா ,யாழில் வந்து தலைவர் வாழ்க என்று வாழ்த்துப் போட்டால் நீங்கள் தேசியலாதி தான் நுணா .

போராட ஆட்கள் இல்லை என்று கூப்பிடேக்குள்ள தலைவராவது ,மண்ணாவது ....வெளிநாட்டில் அந்த செட்டிலான பிறகு தலைவர் வாழ்க 
என்னாலை எல்லாம் உங்களை மாதிரி இரட்டை  வேசம் போடா முடியாது ...அப்ப நான் வரட்டா 

பணத்தை கொடுத்தால்  போராட்டத்தை விலைக்கு வாங்கலாம் என்று நினைக்கின்ற ஆட்களாச்சே நீங்கள் எல்லாம் உங்களிடம் மன சாட்சி  இருக்குதா ஜயா ...எனது  ,என் குடும்ப உசிரு தான் உசிரு மற்றவர்கள் எல்லாம் ம .. என்ற கொள்கை உடையவர்கள் தானே உங்களை போன்றோர் 
 
நான் தேசியவாதி இல்லை. நான் அப்படி சொல்லவும் இல்லை. என்னால் செய்யக்கூடிய பங்களிப்பை செய்து கொண்டிருக்கிறேன். 
ஆனால் உயிரை மண்ணில் கொடுத்து போராடியவர்களை எக்காரணம் கொண்டும் எள்ளி நகையாட போவதில்லை.
தலைவர் வீழ்க என்று சொல்லி நீங்கள் சாதித்தது என்ன.?

தேசியவாதிக்கும் மனச்சாட்சிக்கும் பாரிய வித்தியாசம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஓமோம் எப்படியண்ணை சரியா கண்டு பிடிச்சனியனியல் நீங்கள் எங்கேயோ இருக்க வேண்டியவர் 
நான் இங்க கதைப்பது தலைவரோடு சேர்ந்து போரட்டத்தை தொடங்கிய மாற்று இயக்கங்களை பற்றி ...புலிகளின் உள்  வீட்டு  பிரச்சனைகளை இன்னொரு திரி திறந்து கதைப்பம் .
எப்ப பார்த்தாலும் ஆட்டுக்குள்ள மாட்டை கொண்டு செருகுவதே உங்கள் வேலை அண்ணேய் ...தமிழ் வாசிக்க தெரியுமோ 
மற்ற இயக்கங்கள் இப்பவாவது தங்களுக்கு நடந்ததை வெளிப்படையாய் எழுதுகிறார்கள் ...அதை ரசித்து படிக்கும் நீங்கள்  புலிகளில் நடந்த உள்  வீட்டுக் கதைகளை  எழுதினால் நாண்டுக்கிட்டு சாகோணும் .
இப்ப தான் புளொட்டின் கதை வந்திருக்கு ...புலியின் கதையும் வரும் ...பொறுத்திருப்போம் 

அக்காச்சி

முதலில் உங்கொண்ணர் கதைய சொல்லுங்கோ. பிறகு புலியளட கதையக் கேப்போம்..

என்ன செய்யிறது. பண்டாரவன்னியன்ர கதைய சொல்லுறத விட , காக்ககை வன்னியனின்ர கதைதானே அதிகம் கதைக்கிறது.

☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

பணத்தை கொடுத்தால்  போராட்டத்தை விலைக்கு வாங்கலாம் என்று நினைக்கின்ற ஆட்களாச்சே நீங்கள் எல்லாம் உங்களிடம் மன சாட்சி  இருக்குதா ஜயா ...எனது  ,என் குடும்ப உசிரு தான் உசிரு மற்றவர்கள் எல்லாம் ம .. என்ற கொள்கை உடையவர்கள் தானே உங்களை போன்றோர் 
 
வழமை போலவே

கருத்தை  வாசிக்காமலம

கருவை  உள்  வாங்காமல் எழுதுகிறீர்கள்

இங்கே எழுதும்  அத்தனை வாய்களும் வெற்றியை   மட்டும் எதிர்பார்த்து காத்திருந்திருந்தவைகளே...
தோற்றவுடன் முந்திக்கொண்டு ஒருவரில் பழி போட்டுவிட்டு ஒப்பாரி வைக்கும்  கூட்டம் எதுக்கும்  உதவாது

நாம  தான்  இனியாவது புரிந்து  விலகி  நடந்து  கொள்ளணுமே  தவிர
இவர்களிடம் மனம்?  சாட்சி??  உண்மை??? தர்மம்??????? என்று????

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, tulpen said:

ஆயுத இயக்கங்கள் அனைத்துமே பல அட்டூழியங்களை செய்தது என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியும். தாம் விசுவாசம் வைத்த இயக்கங்களின் கொலைகளையும் அட்டூழியங்களையும் மூடிமறைத்து அல்லது அதற்கு ஏதும் பொய்க்காரணம் கண்டுபிடித்து வக்காலத்து வாங்கி தமது இயக்க விசுவாசத்தை காட்டும் மனச்சாட்சியற்ற மனிதர்கள் வாழும் இவ்வுலகில் வெற்றிச்செல்வன் புளொட் இயக்கத்தின் அட்டூழியங்களை வெளிப்படையாக மக்களுக்கு கூறியது பாராட்டுக்குரியது. அதே போல் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியும் போராட்டத்துடன் இறுதிவரை வாழ்ந்து தனது சொந்த மகனைக் கூட போராட்டத்தில்  இழந்த தமிழ்கவி அம்மாவும் வெளிப்படையாக போரின் இறுதியில்    நடந்த அட்டூழியங்கள் அனைத்தையும் சாட்சியாக பதிவு செய்ததும் பாராட்டுக்குரியது. ஆயுதப் போரில் ஈடுபடும் எல்லோருமே தமது ஆயுத அதிகாரத்தில் தான் கண்ணாக இருப்பார்கள்.  மக்கள் அழிவை பற்றி கிஞ்சித்தும் கவலைப்பட மாட்டார்கள் என்பதற்கு ஈழப் போராட்டம் ஒரு பாடம்.  

கற்பனை கலந்து விசுவாச வரலாறு எழுதுபவர்கள் மத்தியில் மக்களுக்காக உண்மையாக போரிட்ட வெற்றிச்செல்வன், தமிழினி,  அலெக்ஸ் பரந்தாமன் 
ஆகியோரின் அனுபவ வரலாறு மிகவும் பெறுமதி மிக்கது. 

இந்தப் பெயர்தான் கொஞ்சம் இடிக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, tulpen said:

ஆயுத இயக்கங்கள் அனைத்துமே பல அட்டூழியங்களை செய்தது என்பது தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியும். தாம் விசுவாசம் வைத்த இயக்கங்களின் கொலைகளையும் அட்டூழியங்களையும் மூடிமறைத்து அல்லது அதற்கு ஏதும் பொய்க்காரணம் கண்டுபிடித்து வக்காலத்து வாங்கி தமது இயக்க விசுவாசத்தை காட்டும் மனச்சாட்சியற்ற மனிதர்கள் வாழும் இவ்வுலகில் வெற்றிச்செல்வன் புளொட் இயக்கத்தின் அட்டூழியங்களை வெளிப்படையாக மக்களுக்கு கூறியது பாராட்டுக்குரியது.

எல்லா இயக்கமும் என்று சொல்லவேண்டாம் பயிற்சியும் ஆயுதமும் தந்த இந்தியா தமது வெளிவிவாகார கொள்கையை மாற்றும் அளவுக்கு அவர்களிடம் இலவசமாய் வாங்கிய ஆயுதங்களையே இந்தியாவுக்கு எதிரான அப்போதைய இயக்கங்களுக்கு விற்று தங்கக்கட்டிகளாக கொழும்பில் உள்ள வங்கிகளில் சேமித்த புத்தியை என்னவென்று சொல்வது ?

அடைக்கலம் தந்த தென்னிந்தியா கேரளா போன்ற மாநிலம்களில் சிறு ஊர்களில் உள்ள வங்கிகளை கொள்ளையிட்டு அங்குள்ள மக்களுக்கும் அநியாயம் செய்தது ஏன் ? அவர்கள் என்ன பாவம் பண்ணினார்கள் உங்களுக்கு ? கொள்ளையடித்த  அந்த பணத்தை கொழும்புக்கு கொண்டு சென்று வங்கிகளில் பதுங்கியது ஏன் ஆயிரம் ஆயிரம் விடுதலை கனவோடு வந்தவர்களை பசியோடு அலைய வைத்தது மட்டும் அல்லாது எதிர்த்து கேள்வி கேட்டவர்களை  பாரிய கிடங்கெடுத்து சவுக்கம் காடுகளுக்குள் சித்திரவதை பண்ணி அரை உயிருடன் புதைத்து கொன்றார்களே .............அப்போது தென்னிந்தியாவில் எந்த இயக்கம் என்றாலும் புலிதான் புலிகளேதான் வேறு பெயர்கள் அந்த மக்களுக்கு தெரியாது  யாரோ செய்த கொலைகள் கொள்ளைகள் குழப்பங்கள் எல்லாம் புலிகளின் தோளின்  மீது விழுந்து தொலைத்த வரலாறை யாரும் மறக்கவும் கூடாது இவையெல்லாம் இனிவரும் சந்ததிகளுக்கு ஆவணமாக இருக்கனும் எப்படியொரு  நேர்மையான போராட்டத்தை அழித்தார்கள் என்று .

7 hours ago, tulpen said:

கற்பனை கலந்து விசுவாச வரலாறு எழுதுபவர்கள் மத்தியில் மக்களுக்காக உண்மையாக போரிட்ட வெற்றிச்செல்வன், தமிழினி,  அலெக்ஸ் பரந்தாமன் 
ஆகியோரின் அனுபவ வரலாறு மிகவும் பெறுமதி மிக்கது. 

இதுக்குள் தமிழினியை எடுத்துக்கொள்ளமுடியாது ஏனெனில் சிங்கள அரசினால்  சிறைபிடிக்கப்பட்டவர் கண்காணிப்பில் இருக்கும்போது எப்படி உண்மைகள் வரும் திரும்ப திரும்ப பொய்களை சொல்வதால் உண்மையாகாது கண்டிக்கு கடற்கரை வராது என்பது எவ்வளவு உண்மையோ அதுபோல் சிறைபிடிக்கப்பட்டவரால் உண்மைகளை எழுதமுடியாது சரியான தரவுகளாக அவை எடுத்துக்கொள்ளமுடியாது என்பது அரிவரி  பிள்ளைக்கும் தெரிந்த ஒன்று .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, kalyani said:

எல்லோருக்கும் எல்லாம் விளங்கி இருக்கும், தெரிந்திருக்கும் என நீங்கள் நினைப்பது தான் தப்பு.  ஜேர்மன் தாதி ஒருவர் உப்பு நீரோ எதோ வைசருக்கு பதிலாக செலுத்தி விட்டார் என்பது தான் செய்தி. உடனே நீங்கள் வந்து எள்ளி நகையாடியதை அனைவரும் பார்த்தோம். பின்னர் உண்மை நிலை அது தான் என்பதை சில இணைப்புக்கள் உறுதிப்படுத்தின. அப்போ எல்லா துவாரங்களாலும் சிரிக்க வேண்டி  ஏற்பட்டது. விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். தலைய சொறிய கூடாது.

திரும்பவும் உங்கள் கிரகிப்பு பற்றிய சிறந்த விளக்கத்தைத் தரும் ஒரு கருத்து இது😎.

ஜேர்மன் வாழ் யாழ் உறவு இலங்கையில் இராணுவம் உப்பு நீரை ஏற்றுவதாகச் சொன்னார். ஏன் வதந்தி பரப்புகிறீர்கள், ஆதாரம் எங்கே என்று கேட்க ஆதாரமாக ஜேர்மனில் தாதி உப்பு நீரை ஏற்றியதை தந்தார்.

இப்ப உங்களுக்கு மூன்றாம் ஆண்டு தமிழைத் திருப்பியும் போய் படிக்க வேண்டிய முக்கியத்துவம் விளங்கியிருக்குமே? சிரிச்சவருக்கு உங்களுக்கு விளங்கினது கூட வெளிச்சிருக்காது!  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
20 hours ago, Justin said:

உங்களுக்கு ஒரு கருத்தின் "பின்னணி" என்பதை விளக்குவது கஷ்டம் தான்! தமிழர் யாரும் எந்தக் காலப் பகுதியையும் பற்றிக் கதைக்கலாம் - ஆனால் போராளியாக இருந்து தப்பி வந்தவனை போராடப் போகாமல் வெளியேறி வந்தவன் துரோகி எனும் போது எல்லாத் துவாரங்களாலும் சிரிக்க வேண்டியிருக்கிறது!

(விளங்கியுருக்காதே?😎 - பரவாயில்லை - நகருங்கள்!)

சிலோனிலை இப்ப இருக்கிற தமிழ் அரசியல்வாதிகளிலை ஆர் செய்யிற அரசியல் நல்ல அரசியல் எண்டதையாவது நேரடியாக சொல்லுங்கோவன்.   
சும்மா எதுக்கெடுத்தாலும் அவருக்கு ஒண்டும் தெரியாது....இவருக்கு ஒண்டும் தெரியாது....சொல்லுறது விளங்காது எண்டு சும்மா ரீல் விடாமல்...

  • கருத்துக்கள உறவுகள்
On 29/11/2021 at 13:17, ரதி said:

இலங்கையரசினை மீறி உங்களுக்கு தீர்வு  பெற்றுத் தருவார்கள் ....வானம் பாத்துக்க கொண்டு இருங்கோ.

எப்படி இலங்கையில்    இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்  உங்களிடம் எதாவது யோசனைகள்...திட்டம்ங்கள்.....உண்டா?  .....அப்படியானால் அதை அடையும் வழி  ...நடைமுறைபடுத்தும் வழிமுறைகளை குறித்து எழுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சிலோனிலை இப்ப இருக்கிற தமிழ் அரசியல்வாதிகளிலை ஆர் செய்யிற அரசியல் நல்ல அரசியல் எண்டதையாவது நேரடியாக சொல்லுங்கோவன்.   
சும்மா எதுக்கெடுத்தாலும் அவருக்கு ஒண்டும் தெரியாது....இவருக்கு ஒண்டும் தெரியாது....சொல்லுறது விளங்காது எண்டு சும்மா ரீல் விடாமல்...

நீங்கள் கேட்க விரும்புவதைச் சொல்லவா அல்லது உண்மையைச் சொல்லவா? சரி நீங்கள் கேட்க விரும்பும் பெயரைச் சொல்லி நான் சமாதானமாகிறேன்😂: இலங்கையில் தமிழர் மத்தியில்  நல்ல அரசியல் செய்வோர் இப்போதைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், கஜேந்திரனும், விக்கி ஐயாவும்! ஏனென்றும் சொல்லி விடுகிறேன். எம்.பி பதவி சம்பளம், நல்ல பாராளுமன்ற சாப்பாடு, வாகன இறக்குமதி பெர்மிற், விடுதி இதெல்லாம் எடுத்துக் கொண்டு - இடையிடையே அவையில் சிறப்புரிமைப் பாதுகாப்பின் கீழ் ஆக்ரோஷமான பேச்சு. வெளியே வந்து வேறெதுவும் செய்யாமல் ஓய்வு நாட்கள்- இது தானே தமிழர் பழக்கப் பட்ட "நல்ல அரசியல் முயற்சி"?

இவை தவிர மேலதிகமாக செய்வோர் எவரும் "தீய அரசியல்" செய்யும் நறக்க மினிசு!

இப்ப கூலா?😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
22 minutes ago, Justin said:

இப்ப கூலா?😎

நோ....கூல்

உண்மையை சொல்லவும். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நோ....கூல்

உண்மையை சொல்லவும். :cool:

சரி, இந்த வாரம் எனக்குக் காலம் சரியில்லை- முத்த வெளி முனியப்பர் மேல் பாரத்தைப் போட்டு விட்டு நான் சரியென்று நினைப்பதைச் சொல்கிறேன்:

1. தமிழ் பா.உக்கள் உட்பட்ட அரசியல் வாதிகளால் போராட முடியாது - அரசியல் மட்டும் தான் செய்ய முடியும். போராட்டம் என்றால் எதிராளியின் ஒரு பொருளை எடுத்து வைத்துக் கொண்டு பேரம் பேசி ஒன்றைப் பெறலாம். இப்போது எங்களிடம் எதிராளியின் ஒரு உரோமம் கூட இல்லை! - எனவே கெட்ட வார்த்தையான இணக்க😂 அரசியல் மட்டும் தான் செய்ய முடியும்!

2. இணக்க அரசியல் ரணிலோடு செய்த போது என்ன நிகழ்ந்தது என்று நீங்கள் கேட்பீர்கள். சில நன்மைகள் நிகழ்ந்தன- ஆனால் பயன்கள் தமிழர்களை விட சிங்கள மக்களுக்கே அதிகம் சென்றன என்பது சரி. என்றாலும் வெளிநாடுகளின் செல்லப் பிள்ளையாக இருக்க வேண்டுமென்றும், பொருளாதாரத்தை தன்னைப் போன்றவர்களுக்காக மட்டுமாவது உயர்த்த வேண்டுமென்றும் நினைத்த ரணில் (நரியே தான் ஆனாலும்) தமிழர்களுக்கு பக்சேக்களை விட ஆபத்துக் குறைந்த சிங்களப் பேர்வழி! 

3. மற்றப் பக்கம் ரணிலோடு தனிப்படவும், சிறிது கொள்கை ரீதியாகவும் நட்புக் காட்டிய சுமந்திரன் நீண்ட காலப் போக்கில் ஒரு மாகாணசபை ப்ளஸ் தீர்வை நோக்கி நகர உதவியிருப்பார் என நான் நம்புகிறேன்! (காலம் இழுத்திருக்கும், ஆனால் சமாதானம் பேசுவது என்பது காலமெடுக்கும் வேலை தான்). ஆனால், மைத்திரி, பக்சேக்கள், விக்கி, கஜேந்திரன் அன்ட் அங்கஜன் , ஈஸ்ரர் குண்டு என யார் கட்டுப் பாட்டிலும் இல்லாத காரணிகள் இதை சாத்தியமாக்க உதவவில்லை. 

போனது போகட்டும், இனி என்ன? 

4. பக்சேக்கள் தாமாக தீர்வு தரார்- ஆனால் வெளிநாடுகளின் கைமுறுக்கல் (அதுவும் முற்றாக முறுக்காமல்) மூலம் மட்டும் தான் குறைந்தது மாகாணசபையாவது கிடைக்கும். பிளஸ் கிடைக்காது.

5. இதற்குப் பேச வேண்டும் - சிங்களவனுடனும் பேச வேண்டும், இந்தியாவுடனும் பேச வேண்டும், அமெரிக்காவுடனும் பேச வேணும். இதைச் செய்யக் கூடியதாக யாரையும் என்னால் அடையாளம் காண முடியவில்லை (கஜேந்திரன், விக்கி குழு தான் இறங்கி வராதே தங்கள் நிலையை விட்டு?).

6. அது தான் சுமந்திரன், சாணக்கியன் போன்ற எல்லா கல்லெறியையும் வாங்கிக் கொண்டும் பேசக் கூடிய தமிழ் அரசியல் வாதிகள் இன்று தேவையென நான் நினைக்கிறேன். அவர்களிடம் குறைகள் உண்டு, ஆனால் பாரிய இனத்தைக் கவிழ்க்கும் குறைகள் இருப்பதாகச் சொல்லப் படுவதை நான் நம்பவில்லை. வாய் கூடாது, சில நிலைப்பாடுகள் பிரபலமில்லாதவை. ஆனால் எமக்குத் தேவை ஒரு நிரந்தரத் தீர்வேயொழிய, நூறு வீதம் எங்கள் விருப்பப் படி பேசும், நடக்கும் அரசியல் வாதியல்ல! இது தான் நான் நினைப்பது!  

(சப்பா..கண்ணைக் கட்டுது😅!)

  • கருத்துக்கள உறவுகள்

Zoom Meeting with TNA Spokesperson & MP M.A. Sumanthiran on November 28, 2021, hosted by Canada TNA

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

இலங்கையில் தமிழர் மத்தியில்  நல்ல அரசியல் செய்வோர் இப்போதைக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், கஜேந்திரனும், விக்கி ஐயாவும்! ஏனென்றும் சொல்லி விடுகிறேன். எம்.பி பதவி சம்பளம், நல்ல பாராளுமன்ற சாப்பாடு, வாகன இறக்குமதி பெர்மிற், விடுதி இதெல்லாம் எடுத்துக் கொண்டு - இடையிடையே அவையில் சிறப்புரிமைப் பாதுகாப்பின் கீழ் ஆக்ரோஷமான பேச்சு. வெளியே வந்து வேறெதுவும் செய்யாமல் ஓய்வு நாட்கள்- இது தானே தமிழர் பழக்கப் பட்ட "நல்ல அரசியல் முயற்சி"?

🤣

நூறுவீதம் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/11/2021 at 12:05, ரதி said:

மற்ற இயக்கங்கள் இப்பவாவது தங்களுக்கு நடந்ததை வெளிப்படையாய் எழுதுகிறார்கள் ...அதை ரசித்து படிக்கும் நீங்கள்  புலிகளில் நடந்த உள்  வீட்டுக் கதைகளை  எழுதினால் நாண்டுக்கிட்டு சாகோணும் .

ஓம் ஓம், அதுவும் கருணா அம்மானின் கதையை எழுதினால் நீங்களும் சேர்ந்துதான் நாண்டுக்கிட்டு சாகணும் .

On 30/11/2021 at 11:52, ரதி said:

பணத்தை கொடுத்தால்  போராட்டத்தை விலைக்கு வாங்கலாம் என்று நினைக்கின்ற ஆட்களாச்சே நீங்கள் எல்லாம் உங்களிடம் மன சாட்சி  இருக்குதா ஜயா ...எனது  ,என் குடும்ப உசிரு தான் உசிரு மற்றவர்கள் எல்லாம் ம .. என்ற கொள்கை உடையவர்கள் தானே உங்களை போன்றோர் 
 
பல புலம்பெயர் மக்கள் எவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலும் பணத்தை அள்ளிக்கொடுத்ததால்தான் போராட்டம் இவ்வளவுக்கு வளர்ந்தது என்ற சாதாரண புரிதல் கூட இல்லையா?? ஆட்களை மட்டும் வைத்து என்ன ஈட்டி, அம்பு கொண்டா போரிடுவது!!

அந்தப்பணத்தை ஏப்பம் விட்டவர்களையும், அதைவைத்து இப்போ சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களையும் இதில் சேர்க்கவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்கவி ,தமிழினி ....இருவரும் 2009 ஆம் ஆண்டு போராட்டம் முடிவுவுக்கு வரும் வரை தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் இருந்தவர்கள்....இன்றுவரை 2021 போராட்டம் நீடித்து இருக்குமாயின் விடுதலைப்புலிகள் அமைப்புடன் இருந்திருப்பார்கள்  ....அவர்களே   இடையில் முரண்பாடுகளோடு விலகிச் செல்லவில்லை...விடுதலைப்புலிகள் அமைப்பு இயங்கதாமையாலும். அரசாங்கத்தினால். விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சரணடையுங்கள் என்ற அறிவிப்புக்கு.  இணக்கவும். சரண் அடைத்தார்கள்.  அல்லது கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.  இவ்வாறு இலங்கை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுதலைப்புலிகளை புகழ்ந்து எழுதவே.  அல்லது இலங்கை அரசாங்கத்தை தாக்கியோ எழுத வே முடியாது  அவர்கள் செய்யக்கூடியது.  இலங்கை அரசாங்கத்தைப் புகழ்தும் விடுதலைப்புலிகளை தாக்கியுமே எழுத முடியும்  அதனையே செய்துள்ளனர் இதனை ஒரு ஆவணம் ஆக ஒருபோதும் எடுக்கமுடியாது எடுக்கக்கூடாது இவர்கள் ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலிய......

போன்ற நாடுகளிலிருந்து எழுதினால் உண்மையை எழுதியிருப்பார்கள் அது நிச்சயம் வேறு மாதிரி தான் இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

தமிழ்கவி ,தமிழினி ....இருவரும் 2009 ஆம் ஆண்டு போராட்டம் முடிவுவுக்கு வரும் வரை தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் இருந்தவர்கள்....இன்றுவரை 2021 போராட்டம் நீடித்து இருக்குமாயின் விடுதலைப்புலிகள் அமைப்புடன் இருந்திருப்பார்கள்  ....அவர்களே   இடையில் முரண்பாடுகளோடு விலகிச் செல்லவில்லை...விடுதலைப்புலிகள் அமைப்பு இயங்கதாமையாலும். அரசாங்கத்தினால். விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சரணடையுங்கள் என்ற அறிவிப்புக்கு.  இணக்கவும். சரண் அடைத்தார்கள்.  அல்லது கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.  இவ்வாறு இலங்கை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுதலைப்புலிகளை புகழ்ந்து எழுதவே.  அல்லது இலங்கை அரசாங்கத்தை தாக்கியோ எழுத வே முடியாது  அவர்கள் செய்யக்கூடியது.  இலங்கை அரசாங்கத்தைப் புகழ்தும் விடுதலைப்புலிகளை தாக்கியுமே எழுத முடியும்  அதனையே செய்துள்ளனர் இதனை ஒரு ஆவணம் ஆக ஒருபோதும் எடுக்கமுடியாது எடுக்கக்கூடாது இவர்கள் ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலிய......போன்ற நாடுகளிலிருந்து எழுதினால் உண்மையை எழுதியிருப்பார்கள் அது நிச்சயம் வேறு மாதிரி தான் இருக்கும் 

அதே.......

  • கருத்துக்கள உறவுகள்
On 30/11/2021 at 12:16, nunavilan said:

நான் தேசியவாதி இல்லை. நான் அப்படி சொல்லவும் இல்லை. என்னால் செய்யக்கூடிய பங்களிப்பை செய்து கொண்டிருக்கிறேன். 
ஆனால் உயிரை மண்ணில் கொடுத்து போராடியவர்களை எக்காரணம் கொண்டும் எள்ளி நகையாட போவதில்லை.
தலைவர் வீழ்க என்று சொல்லி நீங்கள் சாதித்தது என்ன.?

தேசியவாதிக்கும் மனச்சாட்சிக்கும் பாரிய வித்தியாசம் உண்டு.

நீங்கள் நான் எழுதியதை வடிவாய் வாசித்தீர்களா?
எங்கே எந்த கருத்தில் போராளிகளையோ அல்லது தலைவரையோ அவமானப்படுத்தி இருக்கிறேன் என காட்ட முடியுமா ?
தலைவர் விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவர் இல்லை ....தலைவரே என்டாலும் பிழை, பிழை தான். உங்களை போல எல்லாத்துக்கும் தனி நபர் துதி பாட வேண்டிய அவசியம் எனக்கில்லை.
***
 
On 30/11/2021 at 12:52, Kapithan said:

அக்காச்சி

முதலில் உங்கொண்ணர் கதைய சொல்லுங்கோ. பிறகு புலியளட கதையக் கேப்போம்..

என்ன செய்யிறது. பண்டாரவன்னியன்ர கதைய சொல்லுறத விட , காக்ககை வன்னியனின்ர கதைதானே அதிகம் கதைக்கிறது.

☹️

எங்கண்ணன் காக்கை வன்னியன் ஆகவே இருந்திட்டு போகட்டும் .உங்களுக்கு ஏன் குடையுது ...உண்மையை தெரிந்து கொள்ள அவ்வளவு ஆவல் ....முதலில் 70களின் ஆரம்பத்தில் நடந்த கதையை கேட்போம் ....கேட்டுட்டு வரும் போது சூடு ,சொரணை இருந்தால் காக்கை வன்னியன் கதைக்கு வருவோம் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Eppothum Thamizhan said:

ஓம் ஓம், அதுவும் கருணா அம்மானின் கதையை எழுதினால் நீங்களும் சேர்ந்துதான் நாண்டுக்கிட்டு சாகணும் .

நான் ஏன் நாண்டுக்கிட்டு சாகோணும் ..15/16 வயசில் இருந்து 40 வயசுக்கு மேலே வரை என்ட அண்ணர் , தலைவரோடு தான் இருந்தவர் 

9 hours ago, Eppothum Thamizhan said:

பல புலம்பெயர் மக்கள் எவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலும் பணத்தை அள்ளிக்கொடுத்ததால்தான் போராட்டம் இவ்வளவுக்கு வளர்ந்தது என்ற சாதாரண புரிதல் கூட இல்லையா?? ஆட்களை மட்டும் வைத்து என்ன ஈட்டி, அம்பு கொண்டா போரிடுவது!!

அந்தப்பணத்தை ஏப்பம் விட்டவர்களையும், அதைவைத்து இப்போ சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களையும் இதில் சேர்க்கவேண்டாம்.

வழிக்கு வந்திட்டிங்கள் இங்கேயிருந்து  காசை தூக்கி எறிந்தால் அங்கேயிருப்பவர்கள் தங்கள் உயிரை துச்சமாய் மதித்து உங்களுக்கு பேர் சொல்ல ஒரு நாடு எடுத்து தரோணும் ...அந்த நாட்டில் நீங்கள் போய் இருக்க போவதும் இல்லை ...உங்கள் பணத்திற்கு அவர்கள் உயிர் சமன் இல்லையா?
 
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kandiah57 said:

எப்படி இலங்கையில்    இலங்கை தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்  உங்களிடம் எதாவது யோசனைகள்...திட்டம்ங்கள்.....உண்டா?  .....அப்படியானால் அதை அடையும் வழி  ...நடைமுறைபடுத்தும் வழிமுறைகளை குறித்து எழுங்கள். 

இருந்து பாருங்கள் இன்னும் கொஞ்ச காலத்தில் வட,கிழக்கு பூரா சிங்களவர்கள் ஆட்சி செய்வார்கள் ...அவர்கள் தான் அந்த மக்களுக்கான உரிமையை சிறுது ,சிறிதாய் பெற்றுக் கொடுப்பார்கள் 

1 hour ago, Kandiah57 said:

தமிழ்கவி ,தமிழினி ....இருவரும் 2009 ஆம் ஆண்டு போராட்டம் முடிவுவுக்கு வரும் வரை தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் இருந்தவர்கள்....இன்றுவரை 2021 போராட்டம் நீடித்து இருக்குமாயின் விடுதலைப்புலிகள் அமைப்புடன் இருந்திருப்பார்கள்  ....அவர்களே   இடையில் முரண்பாடுகளோடு விலகிச் செல்லவில்லை...விடுதலைப்புலிகள் அமைப்பு இயங்கதாமையாலும். அரசாங்கத்தினால். விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சரணடையுங்கள் என்ற அறிவிப்புக்கு.  இணக்கவும். சரண் அடைத்தார்கள்.  அல்லது கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.  இவ்வாறு இலங்கை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுதலைப்புலிகளை புகழ்ந்து எழுதவே.  அல்லது இலங்கை அரசாங்கத்தை தாக்கியோ எழுத வே முடியாது  அவர்கள் செய்யக்கூடியது.  இலங்கை அரசாங்கத்தைப் புகழ்தும் விடுதலைப்புலிகளை தாக்கியுமே எழுத முடியும்  அதனையே செய்துள்ளனர் இதனை ஒரு ஆவணம் ஆக ஒருபோதும் எடுக்கமுடியாது எடுக்கக்கூடாது இவர்கள் ஐரோப்பா அமெரிக்கா அவுஸ்திரேலிய......

போன்ற நாடுகளிலிருந்து எழுதினால் உண்மையை எழுதியிருப்பார்கள் அது நிச்சயம் வேறு மாதிரி தான் இருக்கும் 

தமிழினியோ ,தமிழ்கவியோ சிங்களவர்களையோ,அரசையோ புகழ்ந்து எழுதி இருக்க கூடும் ...ஆனால் புலிகளை பற்றி எழுதியது உண்மை...அரசு தரப்பில் இருந்து புலிகளை பற்றிய  நல்ல விடயங்களை மட்டும்  எழுத விடாமல் தடுக்கப்பட்டு இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

இருந்து பாருங்கள் இன்னும் கொஞ்ச காலத்தில் வட,கிழக்கு பூரா சிங்களவர்கள் ஆட்சி செய்வார்கள் ...அவர்கள் தான் அந்த மக்களுக்கான உரிமையை சிறுது ,சிறிதாய் பெற்றுக் கொடுப்பார்கள் 

இப்பவும் வடக்கு கிழக்கு சிங்களவன் தான்  ஆட்சி செய்கிறார்கள்  

மேலே நீங்கள் எழுதியது உங்களின் கருத்து   மாறாக யோசனை இல்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.