Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் பேரணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் பேரணி

January 30, 2022

spacer.png

 

ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பமாகி கிட்டுப்பூங்காவில் நிறைவடைந்தது.
தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றப்பட்டு பேரணி ஆரம்பமானது

இந்த பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

spacer.png

spacer.png

spacer.png

https://globaltamilnews.net/2022/172475

  • Replies 59
  • Views 3.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்பவெல்லாம் எங்கும் போட்டி, எதிலும் போட்டி என்கிற நிலை வந்துவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, satan said:

இப்பவெல்லாம் எங்கும் போட்டி, எதிலும் போட்டி என்கிற நிலை வந்துவிட்டது. 

இல்லை இது சரியான நேரத்தில் நடைபெறும் விடயமே. 

இதனை நான் வேறு மாதிரி பார்க்கிறேன்.

இதனை செய்வதனூடாக 13வது சரியாக கிடைக்க வழி பிறக்கலாம்???

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முகநூல் பதிவு: யாழில் இருந்து ....

https://www.facebook.com/564189140/posts/10158905564659141/

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்களை விலைக்கு வாங்கலாம் ஆனால் தமிழ்மக்களை விலைக்கு வாங்க முடியாது. தமிழ்மக்களுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பதை மீண்டும் தமிழ்மக்கள் உவகுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

https://fb.watch/aS8spulH07/

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புலவர் said:

டெல்லிக்கும் சேர்த்தே செய்தி சொல்லப்படுகிறது .

  • கருத்துக்கள உறவுகள்

அடே பச்சோந்திகளா.. இப்போது 13 வேண்டாம் என்று சொல்லும் நீங்கள்தான் வடமாகாண சபை தேர்தலில் முன் நிர்ப்பீர்கள்… சுகாஸ் தான் வடமாகாண முதலமைச்சர்.. உங்கள் போராட்டம் எல்லாம் எதுக்காக என்று இந்த முப்பது வருடத்தில் எங்களுக்கு தெரியாதா.. எதையும் எதிர்பாராமல் களத்தில் போராடி செத்த புலிவீரன் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபட்டை காட்டிவிட்டு சென்றுவிட்டார்கள்.. நாலுகால் கதிரைக்கு நீங்கள் செய்யும் குரங்குவித்தைகள் இருக்கே…அப்பப்பா.. இன்னமும் உங்களை எல்லாம் நம்பி கொடிபுடிக்கும் அப்பாவி மக்கள்தான் பாவம்..

2009க்கு முன் கொஞ்சபேர் செத்துட்டார்கள்.. கொஞ்ச பேர் நாட்ட விட்டு ஓடி வந்துட்டம்… மிச்சம் மீதி இருக்கிற அந்த மக்கள் என்ன பாவம் செய்தார்களோ.. இப்படி அனுபவிக்கிறார்கள்..😢😢

முஸ்லிம் மதவாதிகளுக்கு அப்புறம் புடிக்காத ஜந்துக்களாக இந்த சுயநல சைக்கிள் அரசியல்வாதிகள் மாறிக்கொண்டு வருகின்றனர்..😡😡

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் கைக்குள்ளேயும் சிங்கள தலைவர்களின் வழிநடத்தலிலும் இங்குள்ள தமிழ் கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறன-கஜேந்திரகுமார்

 

 

 
இந்தியாவின் கைக்குள்ளேயும் சிங்கள தலைவர்களின் வழிநடத்தலிலும் இங்குள்ள தமிழ் கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
272660337_1536740210028888_2135287629060 272739454_1536740173362225_2855879117737 272812950_1536740116695564_7214308239991 272740518_1536740073362235_2634988135104 272757508_1536740040028905_4862241687114 272441023_1536739996695576_8414002231539 272825272_1536739963362246_7645584423014 272745142_1536739936695582_6328397392564 272769067_1536739900028919_2203987994883 272257290_1536739873362255_7893283803253 272903291_1536739830028926_3669455722356 272660433_1536739786695597_4056007716387 272146199_1536739750028934_4093930699746 272831512_1536739706695605_6940078130143 272805001_324507716259489_17119642005848 272895720_324507692926158_83350139071513 272965034_324507686259492_19257052203574 272968814_324507722926155_70086452071123 272798227_324507769592817_77551136021890 272810889_324507746259486_32186299385736 272684611_324507752926152_13619252393126
13ஆவது திருத்த சட்டத்துக்கு எதிராக யாழில் இன்று இடம்பெற்ற பேரணியின் பின்னர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
34 வருடங்களுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட ஒற்றை ஆட்சியை இப்போதும் தூக்கி பிடிக்கும் 11 பேர் பற்றி நாம் இங்கு குறிப்பிட வேண்டும்.என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கைக்குள்ளே நின்று கொண்டு சிங்கள தலைவர்களின் நிகழ்ச்சி நிரலிலே மக்களின் ஆணையை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்.என அவர் தெரிவித்துள்ளார்.
சீனாவை நாம் இங்கே விட மாட்டோம் அதற்கு நாம் உதவுவோம் நீங்கள் இந்த ஒற்றை ஆட்சிக்கு ஆதரவு கொடுங்கள் என தமிழ் கட்சிகள் இப்போது கையேந்தி நிற்கின்றனர்.என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் பேரம் பேசியுள்ளனர். மக்களே அடுத்த தேர்தலில் நீங்கள் எமக்கு வாக்களிக்க வேண்டாம்.என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் 13 ஆம் திருத்தத்துக்கு எதிராக செயற்படுங்கள் 13ஐ ஆதரிப்பவர்களை நீங்கள் விரட்டி அடிக்க வேண்டும்.என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த 11 பேர் இப்போது என்ன செய்கிறார்கள். மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்று தருவோம் என தெரிவித்து பாராளுமன்றம் சென்றவர்கள் இன்று என்ன செய்கிறார்கள்.என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருவோம் என தெரிவித்துள்ள தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இவர்கள் நன்றாக முண்டு கொடுக்கிறார்கள்.என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் நாம் விட மாட்டோம். அனைத்து தமிழ் பிரதேசங்களிலும் இந்த போராட்டம் தொடரும். – என்றார்

https://thinakkural.lk/article/163487

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் ( இந்தியாவோ, இலங்கையோ) இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதாக சொல்லவில்லை... 13 ஆவது திருத்த சட்டம் தருவதாக கூட சொல்லவில்லை. ஒரு கிராமிய சபை அதிகாரம் தருவதாக கூட சொல்லவில்லை… எதற்கு இவர்கள் மக்கள் நாளாந்த வாழ்வை குழப்புகிறார்கள்...? உடனடியாக மந்திகை வையித்திய சாலையின் மன நோயியல் பிரிவில் அனுமதிக்க வேண்டும் இவர்களை…

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அடே பச்சோந்திகளா.. இப்போது 13 வேண்டாம் என்று சொல்லும் நீங்கள்தான் வடமாகாண சபை தேர்தலில் முன் நிர்ப்பீர்கள்… சுகாஸ் தான் வடமாகாண முதலமைச்சர்.. உங்கள் போராட்டம் எல்லாம் எதுக்காக என்று இந்த முப்பது வருடத்தில் எங்களுக்கு தெரியாதா.. எதையும் எதிர்பாராமல் களத்தில் போராடி செத்த புலிவீரன் உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள வேற்பாட்டை காட்டிவிட்டு சென்றுவிட்டார்கள்.. நாலுகால் கதிரைக்கு நீங்கள் செய்யும் குரங்குவித்தைகள் இருக்கே…அப்பப்பா.. இன்பமும் உங்களை எல்லாம் நம்பி கொடிபுடிக்கும் அப்பாவி மக்கள்தான் பாவம்.. முஸ்லிம் மதவாதிகளுக்கு அப்புறம் புடிக்காத ஜந்துக்களாக இந்த சுயநல சைக்கிள் அரசியல்வாதிகள் மாறிக்கொண்டு வருகின்றனர்..😡😡

கீழே உள்ள படங்களில் இருக்கும் மக்கள் கூட்டம் அந்த மண்ணில் இருப்பவர்கள் தானே?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பேரணியில்…  திரளாக கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தைப் பார்க்க,
வாற தேர்தலில்…..  சம்பந்தன், சுமந்திரன் கோஸ்டிக்கு….
கட்டுக்காசு கூட கிடைக்குமோ தெரியவில்லை. 😜

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

இந்தப் பேரணியில்…  திரளாக கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தைப் பார்க்க,
வாற தேர்தலில்…..  சம்பந்தன், சுமந்திரன் கோஸ்டிக்கு….
கட்டுக்காசு கூட கிடைக்குமோ தெரியவில்லை. 😜

இத்தனை அடக்குமுறைக்குள்ளும் இத்தனை கண்காணிப்புகளுக்குள்ளும் இத்தனை கொடிய நோயின் தாக்கத்துக்குள்ளும் 

தமது அபிலாஷைகளை தாங்கி வீதியில் நிற்கும் மக்கள் கடவுளுக்கு சமன்.

இதனை ஒரு செயலுக்கான ஆரம்ப புள்ளியாக பார்க்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

கீழே உள்ள படங்களில் இருக்கும் மக்கள் கூட்டம் அந்த மண்ணில் இருப்பவர்கள் தானே?

யார் இல்லை எண்டது.. இண்டைக்கு இலங்கையில் சாப்பிட வழி இல்லாட்டியும் இனவாதத்தை கையில் எடுத்தால் மகிந்தா கோத்தாவுக்குத்தான் கூட்டம் அதிகம் வரும்.. கிட்லர் இருந்தால் அவருக்கும் வரும்.. முசோலினிக்கும் வரும்.. ஏன் டிரம்புக்கு இல்லாத மக்களா.. உலகில் எமக்கு நிகழ்ந்ததுபோல நிகழும் இன அழிப்புக்களை நியாயப்படுத்தும் தலைவர்களின் கூட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் வருவார்கள்.. அப்பொழுதும் மக்கள்தானே என்று கற்றறிந்த சமூகத்தால் சொல்லமுடியுமா..? அப்பாவி மக்களை மூளைசலவை செய்து கூப்பிடும் தலைவர்களின் கதிரையை நோக்கிய உண்மை நோக்கம் தெரிந்தும் பேசாமல் இருப்பது சரியா..?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

யார் இல்லை எண்டது.. இண்டைக்கு இலங்கையில் சாப்பிட வழி இல்லாட்டியும் இனவாதத்தை கையில் எடுத்தால் மகிந்தா கோத்தாவுக்குத்தான் கூட்டம் அதிகம் வரும்.. கிட்லர் இருந்தால் அவருக்கும் வரும்.. முசோலினிக்கும் வரும்.. ஏன் டிரம்புக்கு இல்லாத மக்களா.. உலகில் எமக்கு நிகழ்ந்ததுபோல நிகழும் இன அழிப்புக்களை நியாயப்படுத்தும் தலைவர்களின் கூட்டங்களுக்கு பல்லாயிரக்கணக்கில் மக்கள் வருவார்கள்.. அப்பொழுதும் மக்கள்தானே என்று கற்றறிந்த சமூகத்தால் சொல்லமுடியுமா..? அப்பாவி மக்களை மூளைசலவை செய்து கூப்பிடும் தலைவர்களின் கதிரையை நோக்கிய உண்மை நோக்கம் தெரிந்தும் பேசாமல் இருப்பது சரியா..?

தவறு

எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி வைத்து விட்டு

மக்களின் போராட்டங்களை பார்க்கவேண்டும் 

எந்த கட்சி செய்கிறது என்பதல்ல முக்கியம் எதை மக்கள் முன் வைத்து மக்கள் வீதியில் நிற்கிறார்கள் என்பதே முக்கியம்.

இன்றைய நிலையில் இது கனம் செய்யப்படணும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, விசுகு said:

தவறு

எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை புறந்தள்ளி வைத்து விட்டு

மக்களின் போராட்டங்களை பார்க்கவேண்டும் 

எந்த கட்சி செய்கிறது என்பதல்ல முக்கியம் எதை மக்கள் முன் வைத்து மக்கள் வீதியில் நிற்கிறார்கள் என்பதே முக்கியம்.

இன்றைய நிலையில் இது கனம் செய்யப்படணும்.

இது மக்கள் போராட்டம் இல்லை(இது வடமாகாண சபை தேர்தலை குறிவைத்து ஓட்டுக்காக நடைபெறும் போராட்டம்).. மக்களை பகடை காயாக்கி எலெக்சனில விழும் ஓட்டுக்களை அதிகரிக்க ஒரு அரசியல் கட்சி போடும் நாடகம்.. பொங்குதமிழை பார்த்த சமூகத்துக்கு மக்கள் போராட்டம் என்றால் என்னவென்று தெரியாதா..

இனபிரச்சனை மக்களை மறந்து அரசியல்வாதிகள் பிரச்சனையாக மாறி ஆண்டு பல ஆகிவிட்டது…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் செய்யும் குரங்குவித்தைகள் இருக்கே…

அன்புள்ள பாலபத்ர ஓணாண்டி அவர்களே! நீங்கள் இன்னமும் முதிர்பத்ர ஓணாண்டி நிலைக்கு வளரவில்லையே என்று மிகுந்த கவலை என்னை வாட்டுகிறது. குரங்குகள் என்று அவர்களை மனிதருக்குக் கீழாக மதித்து அவமானம் செய்யாதீர்கள். இது என் தாழ்மையான வேண்டுகோள்.

monkey-10-jpg.pngmonkey-11-jpg.pngmonkey-4-1.pngmonkey-5-jpg.pngmonkey-6-jpg.pngmonkey-7-jpg.pngmonkey-8-jpg.pngmonkey-9-jpg.png

  • கருத்துக்கள உறவுகள்
2022-01-30
கிட்டுபூங்கா பிரகடனம்
13 ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதிக்கு எதிரான தமிழர் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திய கிட்டுபூங்கா பிரகடனம்
'தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்' என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம்.
சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமானது - தனது அடிப்படையான அரசியல் உரிமைகளான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் இத் தொடர் போராட்டம் வலியுறுத்திக் கூற விரும்புகின்றது.
சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள இன்றைய அரசாங்கத்தால் இலங்கைக்கான நான்காவது அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. அதை இந்த வருடத்துக்குள் நிறைவேற்றவுள்ளதாக இவ்வரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டும் உள்ளது. அது இறுக்கமான ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே அமையும் என்பதையும், அரசாங்கம் உறுதிப்படக் கூறியுள்ளது. இந்த அரசியலமைப்பை ஒரு தலைப்பட்டசமாக நிறைவேற்றுவதற்குரிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இந்த அரசாங்கம் கொண்டுள்ளது. இலங்கையில் கொண்டுவரப்பட்ட மூன்று அரசியலமைப்புக்களும் இதே போன்றதொரு சிங்கள பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டே நிறைவேற்றப்பட்டிருந்தது. அச்சந்தர்பங்களிலெல்லாம் தமிழ்த் தலைமைகள் அந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்களை எதிர்த்திருந்ததுடன், வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி வந்ததன் விளைவாகவே, தமிழர்களுக்கு இனப்பிரச்சினையொன்று உண்டு என்னும் விடயத்தைத் தக்கவைக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, சிங்கள அரசு தமிழருடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, இங்கு பயங்கரவாத பிரச்சினை மட்டுமே உள்ளதாகக் கூறி, போரை முடிவுக்குக் கொண்டு வந்து 13 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், இன்றுவரை தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தொடர்ந்தும் இருக்கிறது என்கின்ற நிலையை நாம் தக்கவைத்திருப்பதற்கான ஒரேயொரு காரணம், இந்த நாட்டின் பிரதான சட்டமாக இருக்கும் மூன்று அரசியலமைப்புக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்திருந்தமையேயாகும்.
இவ்வாறிருக்க, 1980 களில் இலங்கையை மையமாகக் கொண்டிருந்த அமெரிக்க - இந்திய பூகோளப்போட்டி காரணமாகவே இந்தியா தனது நலனை அடைவதற்காக தமிழர்களின் இனப்பிரச்சினையைக் கையிலெடுத்திருந்தது. 1987 இல் இலங்கையானது, இந்திய நலன்சார்ந்து செயற்பட தயாரான நிலையில், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தி, சிங்கள தரப்புடன் உடன்பட்ட பின்னர், எந்த ஒற்றையாட்சிக் கெதிராக தமிழ்த் தரப்பை பயன்படுத்தியதோ, அதே ஒற்றையாட்சிக்குள்ளான 13 ஆம் திருத்தத்தையே தமிழ்க்களுக்கான தீர்வாக இலங்கை அரசு முன்வைத்திருந்த நிலையில், தமிழ்த் தரப்பை இந்தியா கைவிட்டிருந்தது. இந்நிலையில் அப்போதிருந்த தமிழ்த் தரப்புகளாலும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேர்மையான தலைமைத்துவத்தின் காரணமாக ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாடுகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது. 2005 இன் பின்னர், இந்திய சீனா பூகோளப்போட்டி மீண்டும் இலங்கையில் உருவாகியிருந்த பின்னணியிலேயே ஒரு இனப்படுகொலையூடாக போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், இந்தியா மீண்டும் தனது ஆதிக்கத்திலுள்ள தமிழ்த் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழ் அரசியலை ஒரு துருப்புச்சீட்டாகக் கையாண்டு இலங்கை அரசோடு பேரம்பேசி வருகின்றது. இலங்கை, சீனாவின் விவகாரத்தில் இந்திய நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் செயற்படுமானால், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழரின் அரசியலை ஒற்றையாட்சிக்குள்ளான 13ஆம் திருத்தத்திற்குள் முடக்குவதற்கும் இணங்கியுள்ளது.
இந்தப் பின்னணியிலேயே, இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ்த் தரப்புகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்;) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும்; தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி உள்ளிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இணைந்து 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி கூட்டாக கையொப்பமிட்ட கடிதத்தை 18-01-2022 அன்று இந்திய தூதுவரிடம் கையளித்துள்ளனர்.
இதன்மூலம், 13 ம் திருத்தச்சட்டத்திலுள்ள சரத்துக்கள் புதிய அரசியலமைப்பிலும் உள்வாங்கப்படும் பட்சத்தில், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவதனூடாக, தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்ற நிலைமையையே உருவாக்கி, நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்கிவிட்டதாகவும், இனப்பிரச்சினை இதனூடாக தீர்க்கப்பட்டு விட்டதாகவும் உலகுக்கு பறைசாற்றுவதற்கு தயாராகிறார்கள்.
இந்த ஆபத்திலிருந்து தமிழ்த் தேசத்தை மீட்டெடுப்பதற்கு, தமிழ்த் தேச மக்கள் அணிதிரள்வதன் ஊடாகவே தடுத்து நிறுத்த முடியும் என்னும் யாதார்த்தத்தை விளங்கிக் கொண்டு, இந்தத் தொடர் போராட்டம் பின்வருவனவற்றை பிரகடனப்படுத்துகிறது :
• தமிழ்த் தேச மக்கள் தொடர்ச்சியாக ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை 70 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்திருக்கின்ற நிலையிலே, 2009 இல் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரும், ஒற்றையாட்சியை நிராகரித்தும், தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தைக் கோரியும் ஒவ்வொரு தேர்தல்களுடாகவும் தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள்.
• வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் - அதன் இறைமையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகிக்கப்படுகின்ற தீர்வுக்குப் பதிலாக - ஒற்றையாட்சிக்குள் இருக்கக்கூடிய ஒரு கட்டமைப்பாக (13 ஆம் திருத்தச் சட்டமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ) இருக்குமானால் அவ்வகையான செயல், தமிழ் மக்களுடைய ஆணைக்குத் துரோகம் இழைக்கும் வகையிலேயே அமையும் என்ற விடயத்தை இப்போராட்டம் பிரகடனப்படுத்துகிறது.
• தமிழ் மக்கள் - காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தையோ அல்லது வேறு எந்தவொரு திருத்தத்தையோ வலியுறுத்துகின்ற தரப்புக்கள், அம்முயற்சியை கைவிட வேண்டுமென இப்போராட்டமூடாக வலியுறுத்துகிறோம்.
• இந்திய அரசானது இலங்கையோடு நல்லுறவை பலப்படுத்திக்கொள்வதையோ அல்லது தனது பூகோள -அரசியல் நலன்களைப் பேணுவதையோ அல்லது தென் ஆசிய பிராந்திய வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதையோ ஈழத்தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை. இந்தியாவை எமது நட்புசக்தியாகவே கருதுகின்றோம். இந்தியாவின் தேசிய நலன்களைப் பேணுவதில் எமக்கு மிகுந்த விருப்பமும் அக்கறையும் ஈடுபாடும் உண்டு. ஆனால் தமிழ் மக்கள் தமது நட்பு சக்தியாக கருதும் இந்தியா, தனது பூகோள நலன்களைப் பூர்த்திசெய்வதற்காக தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்கி, தமிழ் மக்களின் நலன்களை முற்றாகப் புறக்கணிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு கோருகின்றோம்.
• தமிழ்மக்கள் 70 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில், தமிழ்த் தேச அங்கீகாரத்தையும் - அதனுடைய தனித்துவமான இறைமையையும் - சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக அனுபவிக்கக் கூடிய 'சமஸ்டி' அடிப்படையிலான தீர்வை அடைய இந்திய அரசும் ஏனைய நட்பு நாடுகளும் இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் இப்போராட்டம் கோருகின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்)
தமிழ்த் தேசியப் பேரவை
30.01.2022

இன்று திவயின என்ற சிங்கள பத்திரிகையில் மாகாணசபை முறை நீக்கிய புதிய அரசியலமைப்பு வரையப்பட்டு விட்டதாகவும், அடுத்த மாதம் சனாதிபதிக்கு சமர்பிக்கப்படப் போவதாகவும் பிரசுரித்துள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள இந்த அரசு அதை நிறைவேற்றியே ஆகும்.
குறைந்தபட்ச அதிகாரப்பரவலாக்கமும் இல்லாத, முழு சிங்கள பெளத்த தேசம் ஒன்றை இந்த அரசியலமைப்பு ஊடாக இலங்கையில் நிறுவ போகின்றனர்.
 
இதற்கிடையில் 13 வேண்டும், வேண்டாம் என்று இவர்கள் நடத்தும் கூத்துகளை பார்க்க இன்னும் மக்களை முட்டாள்களாக்கவே முயல்கின்றார்கள் என்று தெரிகின்றது.
 
1 hour ago, விசுகு said:

கீழே உள்ள படங்களில் இருக்கும் மக்கள் கூட்டம் அந்த மண்ணில் இருப்பவர்கள் தானே?

குறைந்தது ஆயிரம் பேராவது இந்த ஊர்வலத்த இருப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு 13அய் தர ஆயத்தமாக இல்லை. கஜே கட்சி 13 வேண்டாம் என்டு சொல்லுது. 

காடை ஒருவன் கனிகையிடம் செல்கின்றான். 

கணிகை:  உனக்கு  என் வீட்டில் இடமில்லை

காடை:  எனக்கு உன் வீடு வேண்டாம்

கருத்தியலின் படி கணிகை சொன்னதும் காடை சொன்னதும் ஒன்றுதான்.

 

இப்ப இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஒற்றையாட்சிக்குட்ட்பட்ட வரைபில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படட்டும். அதில் முதல் கட்சியாக போட்டியிட பதிவு செய்யப்போவது கஜே கட்சிதான். 

கஜே குழுவினர் இலங்கை அரசின்  ஆசீர்வாதத்துடன் இயங்கும் குழுவினர். 

 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நிழலி said:

இன்று திவயின என்ற சிங்கள பத்திரிகையில் மாகாணசபை முறை நீக்கிய புதிய அரசியலமைப்பு வரையப்பட்டு விட்டதாகவும், அடுத்த மாதம் சனாதிபதிக்கு சமர்பிக்கப்படப் போவதாகவும் பிரசுரித்துள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள இந்த அரசு அதை நிறைவேற்றியே ஆகும்.
குறைந்தபட்ச அதிகாரப்பரவலாக்கமும் இல்லாத, முழு சிங்கள பெளத்த தேசம் ஒன்றை இந்த அரசியலமைப்பு ஊடாக இலங்கையில் நிறுவ போகின்றனர்.
 
இதற்கிடையில் 13 வேண்டும், வேண்டாம் என்று இவர்கள் நடத்தும் கூத்துகளை பார்க்க இன்னும் மக்களை முட்டாள்களாக்கவே முயல்கின்றார்கள் என்று தெரிகின்றது.
 

குறைந்தது ஆயிரம் பேராவது இந்த ஊர்வலத்த இருப்பார்களா?

அதாவது இந்த போராட்டம் சிங்கள அரசின் நிகழ்ச்சி நிரலை மாற்றும் அல்லது நிறுத்தும் வல்லமை கொண்டது என்கிறீர்கள்??

13 மை வேண்டாம் என்பவர்கள் அதற்கு மாறாக இன்னொரு குரலையும் சேர்க்கிறார்கள் 

13னை வேண்டாம் என்பதனைக்கேட்கும் அதே காதுகள்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீர்வு கிடைக்கும் காலப்பகுதியை  சொன்ன TNA இன்று ஒன்றுமில்லாத 13ற்குள்ளால்  போய் தீர்வைப்பெற முடியுமாம். எல்லாம் கதிரை படுத்தும் பாடு........

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இலங்கை அரசு 13அய் தர ஆயத்தமாக இல்லை. கஜே கட்சி 13 வேண்டாம் என்டு சொல்லுது. 

காடை ஒருவன் கனிகையிடம் செல்கின்றான். 

கணிகை:  உனக்கு  என் வீட்டில் இடமில்லை

காடை:  எனக்கு உன் வீடு வேண்டாம்

கருத்தியலின் படி கணிகை சொன்னதும் காடை சொன்னதும் ஒன்றுதான்.

 

இப்ப இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் ஒற்றையாட்சிக்குட்ட்பட்ட வரைபில் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படட்டும். அதில் முதல் கட்சியாக போட்டியிட பதிவு செய்யப்போவது கஜே கட்சிதான். 

கஜே குழுவினர் இலங்கை அரசின்  ஆசீர்வாதத்துடன் இயங்கும் குழுவினர். 

 

B ரீம்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

ஒரு முகநூல் பதிவு: யாழில் இருந்து ....

https://www.facebook.com/564189140/posts/10158905564659141/

 

5 hours ago, புலவர் said:

தலைவர்களை விலைக்கு வாங்கலாம் ஆனால் தமிழ்மக்களை விலைக்கு வாங்க முடியாது. தமிழ்மக்களுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்பதை மீண்டும் தமிழ்மக்கள் உவகுக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

https://fb.watch/aS8spulH07/

வேறு ஒரு திரியில் தமிழ்வின் ஒரேஒரு படத்தைப் போட்டிருந்தது.

அதைப் பார்த்து எங்கை ஆக்களைக் காணோம்?

ஓ தேத்தண்ணி குடிக்க போட்டார்களா?

ஒண்ணுக்கு போட்டார்களா?

என்று நக்கல் நளினம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இந்த கொரோனா நெருக்கடிக்குள்ளும் ஆண் பெண் இளையோர் முதியோர் என்று ஒரேஒரு கட்சியின் இழைப்பின் பேரில் இத்தனை மக்கள் போராடி இருக்கிறார்கள் என்றால் இது மகத்தான வெற்றியே.

போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு பாராட்டுக்கள்.

2 hours ago, நிழலி said:

இதற்கிடையில் 13 வேண்டும், வேண்டாம் என்று இவர்கள் நடத்தும் கூத்துகளை பார்க்க இன்னும் மக்களை முட்டாள்களாக்கவே முயல்கின்றார்கள் என்று தெரிகின்றது.

நிழலி இதுவரை 34 வருடமாக இந்த 13 இருக்கிறது தானே? என்னத்தைக் கண்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு யேர்மானிய மக்கள் 13ஐ ஒரு கூடாத கெட்ட இலக்கமாகப் பார்க்கிறார்கள். ஆகவே இந்த இலக்கத்தைப் 12 அல்லது 14ஆக மாற்றினால் கூத்துக்களும் மாறலாம்.😆 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.