Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92.

மும்பையை சேர்ந்த ‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்,  கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து  அவர் தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.  மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். அவரது மறைவால் திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

image

இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியாக சுமார் அரை நூற்றாண்டு காலம் வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர். இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான திரைப்படப்பாடல்களை பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர். தமிழில் சத்யா படத்தில் "வளையோசை கலகலவென." என்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார். லதா மங்கேஷ்கருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா கடந்த 2001ஆம் வருடம் வழங்கப்பட்டிருந்தது. திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் 1989ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கர் பெற்றிருந்தார். 1999 நவம்பர் முதல் 2005 நவம்பர் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் லதா மங்கேஷ்கர் பதவி வகித்துள்ளார்

https://www.puthiyathalaimurai.com/newsview/128792/PM-Modi-Inaugurates-216-Feet-Statue-Of-Equality-In-Hyderabad.html

ஆழ்ந்த அஞ்சல்கள்.

ஆழ்ந்த அஞ்சலிகள்.

இன்னும் ஒரு குயில் எம்மை விட்டு பிரிந்துவிட்டது.

தன் குரலை எம்மிடம் கொடுத்து விட்டு தனித்துப் பறந்து விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

லதா மங்கேஷ்கர் மரணம்: பாரத ரத்னம் பெற்ற பின்னணி பாடகி 92 வயதில் காலமானார்

6 பிப்ரவரி 2022, 04:21 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

லதா மங்கேஷ்கர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

பிரபல பின்னணி பாடகி மும்பையில் லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. கோவிட் பாதிக்கப்பட்டிருந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஜனவரி 8ஆம் தேதி முதல் மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார் லதா மங்கேஷ்கர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் பிரதித் சம்தானி, " லதா அவர்கள் கோவிட் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 28 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் உறுப்புகள் பலவும் செயலிழந்ததால் இன்று காலை 8.12 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது", என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் அவர் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரது உடல்நிலை தேறி வருவதாக ஜனவரி 27ஆம் தேதி கூறிய மருத்துவர்கள் வென்டிலேட்டர் மூலம் வழங்கிய சிகிச்சையை நிறுத்தினர்.

1929 ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இவரது இயற்பெயர் ஹேமா. ஆனால் அவரது தந்தையின் நாடகங்களில் லத்திகா எனும் பாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். அதனால் அனைவரும் அவரை 'லதா' என்று அழைக்கத் தொடங்கினர். அதுவே அவரது பெயராகவும் ஆகிப்போனது.

 

லதா மங்கேஷ்கர் மரணம்

பட மூலாதாரம்,NIYOGI BOOKS

இவரது தந்தை தீனாநாத் மங்கேஷ்கர் மராத்தி மொழியில் நன்கு அறியப்பட்ட பாடகராகவும், நாடக ஆசிரியராகவும் இருந்தார். அவரது ஐந்து குழந்தைகளில் முதல் குழந்தை லதா மங்கேஷ்கர்.

சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்ற லதா மங்கேஷ்கர், இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1989ஆம் ஆண்டு பெற்றார்.

1949ஆம் ஆண்டு மகள் எனும் இந்தி படத்தில் தனது முதல் திரை இசை பாடலை பாடி இசை பயணத்தை தொடங்கினார்.

அதன்பின்பு பல்வேறு இந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடி திரை இசையில் உச்சத்தை தொட்டார் லதா மங்கேஷ்கர்.

இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது 2001ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

எம்.எஸ். சுப்புலட்சுமி பிறகு பாரத ரத்னா விருது பெற்ற பாடகர் லதா மங்கேஷ்கர்.

முன்னதாக அவர் பத்மவிபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

லதா மங்கேஷ்கர் எட்டு இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

1999 - 2005 ஆண்டுகளில் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் நியமன உறுப்பினராகவும் இருந்துள்ளார் லதா மங்கேஷ்கர்.

தலைவர்கள் இரங்கல்

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். "நான் வார்த்தைகளில் விவரிக்க முடியாத வேதனையில் இருக்கிறேன். அன்பும், அக்கறையுள்ள லதா அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்துள்ளார். அவர் நம் நாட்டில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றிருக்கிறார். இனிவரும் தலைமுறையினர் அவரை இந்திய கலாச்சாரத்தில் தலைசிறந்து விளங்கியவராக நினைவுகூர்வார்கள். அவரது மெல்லிசை குரல் மக்களை ஈர்க்கும் இணையற்ற திறனைக் கொண்டிருந்தது.", என்று அவர் டீவிட் செய்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Twitter பதிவின் முடிவு, 2

மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "லதா மங்கேஷ்கரின் மறைவு குறித்த சோகமான செய்தி கிடைத்தது. பல தசாப்தங்களாக இந்தியாவின் மிகவும் பிரியமான குரலாக இருந்தார். அவரது தங்கமான குரல் அழியாதது; அது அவரது ரசிகர்களின் இதயங்களில் தொடர்ந்து எதிரொலிக்கும்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்கள்.", என்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-60277145

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.........!

என்ன ஒரு இனிமையான குரல்வளம் .......அன்று பார்த்த ஹிந்திப் படங்களின் அத்தனை பாடல்களிலும் முத்திரை பதித்தவர்......!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தோ ஒலித்து, எங்களை வேறொரு இசை உலகில் ஆழ்த்தி இன்பமுற வைத்துவந்த ஒரு குயிலின் குரல் ஓய்ந்துபோனது மனதைத் துன்பமுற வைக்கிறது. தமிழினத்தைக் கூறுபோட்டு அந்த இனத்தை இன்றுவரை அழிவுக்கு உள்ளாக்கிவரும் இந்தியனை எண்ணும்போதெல்லாம் எழும் கோபத்தையும் வெறுப்பையும் ஓரளவுக்கேனும் அவரது பாடல்களும், இனிய குரல்வளமும் தணியச் செய்துவந்ததை மறுக்க முடியாது.

மங்கை லதா அவர்களின் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகிறேன்.🙏 💐

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் லதா ஜிக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தால் அழியாத குரலுக்கு சொந்தக்கார அம்மா .. தரணியில் உங்கள் புகழ் என்றென்றும் பேசப்படும். 💐💐💐💐💐🙏🙏🙏🙏
கண்ணீர் அஞ்சலிகள்.  ஆத்மா சாந்தியடையட்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
எந்தன் கண்ணாளன் கரை நோக்கி போகிறான் என்று 55/56  இல் கலங்கிய குயில் பறந்து போயிற்று ..
 
இந்த இசை எல்லாவற்றையும் இலவசமாக அனுபவிப்பது ஒரு கொடுப்பினை தான் ...
           
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

273645499_1235332150290755_4300260508057

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.