Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளது.   

Tamilmirror Online || யாழுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ  ஒருவருக்கு  வரியற்ற இலவச ஆடம்பர  வாகனம் கிடைக்கப்போகிறது?

அதைத்தவிர.......???

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றம்…. கள்வர் குகை.
அங்கை போய்…. இவர்கள் இவ்வளவு நாளும் செய்ததே… போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 6 ஆக இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.

19 ஆக இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! – Athavan News

தேர்தல் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

21 minutes ago, தமிழ் சிறி said:

பாராளுமன்றம்…. கள்வர் குகை.
அங்கை போய்…. இவர்கள் இவ்வளவு நாளும் செய்ததே… போதும்.

சரி, பாராளுமன்றம் வேண்டாம், மாகாணசபை வேண்டாம்... அப்ப எதில் தமிழர்கள் பங்குகொள்ள வேண்டும்? தமிழீழம் கிடைக்கும் வரைக்கும் எதிலும் பங்குபற்றாமல் இருக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

சரி, பாராளுமன்றம் வேண்டாம், மாகாணசபை வேண்டாம்... அப்ப எதில் தமிழர்கள் பங்குகொள்ள வேண்டும்? தமிழீழம் கிடைக்கும் வரைக்கும் எதிலும் பங்குபற்றாமல் இருக்க வேண்டுமா?

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்… எத்தினை பேர் அங்கு இன்னும்,
வாயே திறக்காமல் இருக்கின்றார்கள். 
சிலர் கிடைத்த சந்தர்ப்பங்களையும் தவற விட்டுட்டு…
இன்னும் பேய்க்காட்டு அரசியல் காட்டி, மக்களை முட்டாளாக்கி 
கொண்டு இருப்பவர்களுக்கு, பாராளுமன்ற கதிரை எதற்கு?

24 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்… எத்தினை பேர் அங்கு இன்னும்,
வாயே திறக்காமல் இருக்கின்றார்கள். 
சிலர் கிடைத்த சந்தர்ப்பங்களையும் தவற விட்டுட்டு…
இன்னும் பேய்க்காட்டு அரசியல் காட்டி, மக்களை முட்டாளாக்கி 
கொண்டு இருப்பவர்களுக்கு, பாராளுமன்ற கதிரை எதற்கு?

அப்ப என்ன செய்யலாம்? அதே போன்று தொடர்ச்சியாக இப்படியான ஆட்களை தேர்ந்தெடுக்கும் மக்களை என்ன சொல்வது?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

சரி, பாராளுமன்றம் வேண்டாம், மாகாணசபை வேண்டாம்... அப்ப எதில் தமிழர்கள் பங்குகொள்ள வேண்டும்? தமிழீழம் கிடைக்கும் வரைக்கும் எதிலும் பங்குபற்றாமல் இருக்க வேண்டுமா?

விசர் கதை கதைக்கிறியள், நாங்கள் அப்படி தான் கதைப்பம், ஏனெனில் நாம் குழந்தை குட்டிகள், பேரக்குழந்தைகள்  என வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டம், தாயக மக்கள் எப்படி பாட்டாலும் நமக்கு என்ன, இருந்து இருந்திட்டு சில டாலர்களை தாயகம் நோக்கி வீசி விடுவோம்.🤪

இங்கு விமர்சிக்கப்படும்  பொருள் 

தலைவர்களின் பிரதிநிதிகளின் ஆற்றாமை  மற்றும் சுயநலப்போக்குகளே தவிர...

வேண்டும்  வேண்டாம்  என்பதல்ல  சகோ...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளது.   

Tamilmirror Online || யாழுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

யாழ்ப்பாணத்தின் சனத்தொகை அதிகரித்து உள்ளது, நல்ல செய்தி தான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, zuma said:

யாழ்ப்பாணத்தின் சனத்தொகை அதிகரித்து உள்ளது, நல்ல செய்தி தான்.

ஆக, சந்தோசப் படாதேங்கோ…

யாழ்ப்பாணத்தில்…. சிங்களவனும், சோனகனும் தான்… அதிகரித்து  இருக்கிறான்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ஆக, சந்தோசப் படாதேங்கோ…

யாழ்ப்பாணத்தில்…. சிங்களவனும், சோனகனும் தான்… அதிகரிச்சு இருக்கிறான்.

வல்வெட்டி துறையிலும், பருத்தித்துறையிலும் தான் சனத்தொகை அதிகரித்து உள்ளதாக செய்திகள் சொல்லுகின்றன, அறிந்தவரையில் அங்கு சிங்களவரும், முஸ்லிங்களும் அதிகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, zuma said:

வல்வெட்டி துறையிலும், பருத்தித்துறையிலும் தான் சனத்தொகை அதிகரித்து உள்ளதாக செய்திகள் சொல்லுகின்றன, அறிந்தவரையில் அங்கு சிங்களவரும், முஸ்லிங்களும் அதிகம் இல்லை.

விவசாயம் செய்வது இல்லை. மீன்பிடிக்க போக சிங்கள மீனவரும், தமிழக ரோலர்களும் பிரச்சினை. சும்மா இருக்கமுடியாதுதானே! அதுதான் சனத்தொகை அதிகரிக்கின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, zuma said:

விசர் கதை கதைக்கிறியள், நாங்கள் அப்படி தான் கதைப்பம், ஏனெனில்

1 - நாம் குழந்தை குட்டிகள், பேரக்குழந்தைகள்  என வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டம்,

2 - தாயக மக்கள் எப்படி பாட்டாலும் நமக்கு என்ன, இருந்து இருந்திட்டு சில டாலர்களை தாயகம் நோக்கி வீசி விடுவோம்.🤪

நீங்கள் இதை  அடிக்கடி காப்பி எடுத்து  எல்லா  இடமும் ஒட்டி  வருகிறீர்கள்?

அதனால்  உங்களது மேலே உள்ள கருத்து  சார்ந்து   அதற்குள்ளேயே கேள்விகள் உள்ளன

1- வெளிநாட்டில்  செட்டில் ஆகியவர்களுக்கு ஊர்  பற்றிய கரிசனை  வரக்கூடாதா???

2 - தாயக  மக்கள்  எப்படி என்றாலும்  இருந்திட்டு  போகட்டும்  என்பவர்கள்  புலத்தில் நாய்  படாதபாடாக  உழைக்கும்  பணத்தை எதற்கு  அவர்களுக்கு  வீசணும்???

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான அதிரடி மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது இலங்கை நாட்டின் ஜனநாயகபாதையில் பயணத்தின்  ஆரோக்கியமான சமிக்ஜைகளாக தெரியவில்லை.

தேர்தல் நடைமுறைகளில் புதிய மாற்றங்களை அமுலுக்கு  கொண்டுவரும்முன்னர் நாடாளுமன்றில் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் விவாதிக்கப்பட்டு நன்மை தீமை பற்றி ஆலோசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட  தீர்மானமா அல்லது ஒரேநாளில் முடிவெடுக்கப்பட்டு வர்த்தமானியில் அறிவித்தல் விடப்பட்டதா என்பதையும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் அரசியல்வாதிகளும் இந்த  விடயத்தை கரிசனையில் எடுத்து அதில் உள்ள நன்மை தீமை பற்றி ஆலோசித்ததாக தெரியவில்லை. வர்த்தமானி அறிவித்தலில் இருந்துதான் செய்தி அவர்களுக்கும் தெரியவந்திருக்கவும் வாய்ப்புண்டு.

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசும் அதன் முகவர்களும் (அரசியல்வாதிகள்) மக்களை சுரண்டுகிறார்கள், ஏற்கனவே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் அதிகரிக்கும் வரிப்பணத்தால் ஒரு புறம் மேலும் பாதிப்படைய, மக்களின் வரிப்பணத்தை மக்களின் நலனிற்கு  பாவிப்பதை விட்டு குறுகிய சுய இலாபத்திற்காக வரிப்பணம் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது.
புலம்பெயர் தமிழர்களால் வடமாகாணத்திலுள்ள ஒரு இரசாயன ஆலையை மீள இயக்குவதற்கு திட்டம் சமர்பிக்கப்பட்டது, அதில் மேலை நாடுகளில் உள்ள தரத்திற்கு கழிவு அகற்றல், மாசு கட்டுப்பாடு உள்ளடங்களாக ஒரு சிறப்பான திட்டம் ஒன்றை சமர்ப்பித்தார்களாம் (நான் கேள்விப்பட்ட விடயம் திட்டம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது), அங்குள்ள ஒரு தமிழ் அரசியல்வாதி அத்திட்டத்தை நிறைவேற்ற கையூட்டு கேட்டாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

பாராளுமன்றம்…. கள்வர் குகை.
அங்கை போய்…. இவர்கள் இவ்வளவு நாளும் செய்ததே… போதும்.

இல்லை சிறியர்! அடுத்தமுறை இன்னொரு தமிழன் மக்களின் வாக்குகளை பெற்று  சிங்களத்தை பிரதிபலித்து  பாராளுமன்றம் செல்வார். சிங்களத்தின் திட்டங்களுக்கு வடக்கிலிருந்து இன்னொரு கை கூடுதலாக உயரும். மக்கள் எல்லாவற்றையும் மறந்து அரசோடு சேர்ந்தியங்க முன்வந்துள்ளார்கள் என்கிற செய்தி பறை சாற்றப்பட  கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, விசுகு said:

நீங்கள் இதை  அடிக்கடி காப்பி எடுத்து  எல்லா  இடமும் ஒட்டி  வருகிறீர்கள்?

அதனால்  உங்களது மேலே உள்ள கருத்து  சார்ந்து   அதற்குள்ளேயே கேள்விகள் உள்ளன

1- வெளிநாட்டில்  செட்டில் ஆகியவர்களுக்கு ஊர்  பற்றிய கரிசனை  வரக்கூடாதா???

2 - தாயக  மக்கள்  எப்படி என்றாலும்  இருந்திட்டு  போகட்டும்  என்பவர்கள்  புலத்தில் நாய்  படாதபாடாக  உழைக்கும்  பணத்தை எதற்கு  அவர்களுக்கு  வீசணும்???

நான் புலம் பெயர்ந்த எல்லோரையும் குறிப்பிடவில்லை, எனக்கு தெரியும் அநேக புலப்பெயர்ந்தவர்கள் எப்படி கஷ்ட படுகின்றார்கள் என்று, யானும் அந்நிலையை கடந்து வந்தவன் தான். எனது விமர்சனம், புலம் பெயர்தேசங்களில் குடுப்ப சகிதமாய் செட்டில் ஆகிவிட்டு, தாயக மக்களை நோக்கி புளிப்பு கதை கதைப்பவர்களை பற்றியே, தொப்பி அளவு என்றால் போட்டுக்கொள்ளவும்.  

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்… எத்தினை பேர் அங்கு இன்னும்,
வாயே திறக்காமல் இருக்கின்றார்கள். 
சிலர் கிடைத்த சந்தர்ப்பங்களையும் தவற விட்டுட்டு…
இன்னும் பேய்க்காட்டு அரசியல் காட்டி, மக்களை முட்டாளாக்கி 
கொண்டு இருப்பவர்களுக்கு, பாராளுமன்ற கதிரை எதற்கு?

வாயை திறந்தாலும்  வாயை திறக்கவில்லை என்றாலும் இரண்டுமே சமன் தான்..ஏனெனில் ஒரு கதைக்கு இலங்கை அரசு ஒன்பது மாகாணத்துக்கும் கூடுதலான அதிகாரங்கள் வழங்க முன் வந்தால்....அதாவது ஜேர்மனி சுவிஸ்..........போன்ற நாடுகளில் உள்ளது போல்...என்று வைத்துக் கொண்டால்.  இந்தியா அரசின் நிலை என்னாவக இருக்கும் இதனை வரவேற்று அமுல் படுத்த உதவியாக இருக்குமா  ?யாழ் கள உறுப்பினர்களின். கருத்துக்களை பதிவு செய்யுங்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

நான் புலம் பெயர்ந்த எல்லோரையும் குறிப்பிடவில்லை, எனக்கு தெரியும் அநேக புலப்பெயர்ந்தவர்கள் எப்படி கஷ்ட படுகின்றார்கள் என்று, யானும் அந்நிலையை கடந்து வந்தவன் தான். எனது விமர்சனம், புலம் பெயர்தேசங்களில் குடுப்ப சகிதமாய் செட்டில் ஆகிவிட்டு, தாயக மக்களை நோக்கி புளிப்பு கதை கதைப்பவர்களை பற்றியே, தொப்பி அளவு என்றால் போட்டுக்கொள்ளவும்.  

21 hours ago, zuma said:

விசர் கதை கதைக்கிறியள், நாங்கள் அப்படி தான் கதைப்பம், ஏனெனில் நாம் குழந்தை குட்டிகள், பேரக்குழந்தைகள்  என வெளிநாட்டில் செட்டில் ஆகிட்டம், தாயக மக்கள் எப்படி பாட்டாலும் நமக்கு என்ன, இருந்து இருந்திட்டு சில டாலர்களை தாயகம் நோக்கி வீசி விடுவோம்.🤪

மேலே  நீங்கள்  இங்கு  கருத்தாடிய கருத்தாளர்களுக்கு சுட்டி  எழுதியது

நீங்கள்  எழுதிய  கருத்திலேயே நீங்கள்  திடமாக 

நேர்மையாக இல்லாதபோது....???

பேசிப்பலனில்லை  ராசா

நன்றி  வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, zuma said:

யாழ்ப்பாணத்தின் சனத்தொகை அதிகரித்து உள்ளது, நல்ல செய்தி தான்.

இந்த செய்தியை போட்ட மூல செய்தி தளத்தை காணமுடியவில்லை தந்து உதவமுடியுமா ?

23 hours ago, zuma said:

அங்கு சிங்களவரும், முஸ்லிங்களும் அதிகம் இல்லை.

அங்கு சிங்களவரும் சோனகரும் இரண்டு இடத்திலும் நிலமோ வீடோ வாங்க முடியாத அளவுக்கு விலை கூடிவிட்டது   ஒரு பரப்பே நல்லூரில் விற்கும் விலைக்கு போகுது .

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பெருமாள் said:

இந்த செய்தியை போட்ட மூல செய்தி தளத்தை காணமுடியவில்லை தந்து உதவமுடியுமா ?

இலங்கையின் அரசியல் அமைப்பின்படி, தேர்தல் ஆணையம் ஆண்டு தோறும் அந்தந்த தேர்தல் மாவட்டங்களின் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையைப் பொருத்து தேர்தல் மாவட்டங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை முடிவு செய்யும்.

https://web.archive.org/web/20110928051908/http://www.lawnet.lk/sec_process.php?chapterid=1981Y1V1C&sectionno=98&title=THE CONSTITUTION OF THE DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA&path=6

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2022 at 17:02, zuma said:

வல்வெட்டி துறையிலும், பருத்தித்துறையிலும் தான் சனத்தொகை அதிகரித்து உள்ளதாக செய்திகள் சொல்லுகின்றன, அறிந்தவரையில் அங்கு சிங்களவரும், முஸ்லிங்களும் அதிகம் இல்லை.

பாஸ் உங்களிடம் சன தொகை அதிகரிப்புக்கான செய்தி மூலம் தேர்தல் சட்டங்கள் விதி முறைகள்  பற்றியது அல்ல .

23 minutes ago, zuma said:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

பாஸ் உங்களிடம் சன தொகை அதிகரிப்புக்கான செய்தி மூலம் தேர்தல் சட்டங்கள் விதி முறைகள்  பற்றியது அல்ல .

தல உங்களுக்கு உய்த்தறிவு  குறைவு  என்பது எமக்கு தெரியும்.🤣

வல்வெட்டி துறையிலும். பருத்தித்துறையிலும் சனத்தொகை அதிகரித்து உள்ளதாக நான் சொன்னது கீழ் வரும் செய்தியை அடிப்படையாக கொண்டே 

https://worldpopulationreview.com/countries/cities/sri-lanka

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2022 at 10:18, nunavilan said:

யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 6 ஆக இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.

19 ஆக இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு! – Athavan News

தேர்தல் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இந்த டுபாக்கூர் ஆதவன் நியூஸ் செய்தியை ஒட்ட முதல் நுணா கொஞ்சம் செக்பண்ணி விட்டு ஒட்டியிருக்கலாம். தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு 7 பாராளுமன்ற உறுப்பினர் உள்ளனர். ஒன்று அதிகரித்தால் அது 8 ஆக உயரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.