Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதவ யாருமில்லை, தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் வேதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உதவ யாருமில்லை, தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் வேதனை

spacer.png

உக்ரைனில் ரஷ்யா தாக்குதலில் 137 பேர் பலியாகி உள்ளதாகவும் ரஷியாவுக்கு எதிராக தனிந்தனியாக போராடி வருகிறோம் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் 18 – 6- வயது ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற உக்ரைன் அரசு தடை விதித்துள்ளது.ரஷ்ய படையை எதிர்த்து உக்ரைன் ராணுவத்துக்கு துணையாக நிற்க 10 ஆயிரம் தானியங்கி இயந்திர துப்பாக்கிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

ரஷியாவிடம் இருந்து உக்ரைனைக் காக்கத் அதற்கு முன், அந்நாட்டு ராணுவ அதிகாரி தனது மகள் மற்றும் மனைவியிடம் விடைபெறும்போது கண்ணீர் விட்டு கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.உக்ரைன் தலைநகர் கிவ்-வில் பலத்த சத்ததுடன் குண்டு வெடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் கீவ்வில் இருந்து கிராமங்களை நோக்கி கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்து உள்ளனர். குண்டுவீச்சில் குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. அதில் இருந்தவர்கள் படுகாயமடைந்து உள்ளனர். இனிமேல் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் ஏடிஎம் மையங்களிலும், கடைகளிலும் குவிந்துள்ளனர்.

இதனிடையே உக்ரைனில் நுழைந்து தாக்குதல் நடத்திய ரஷியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. பொருளாதார தடையை விதித்ததற்காக ரஷியா சைபர் தாக்குல் நடத்தினால் எதிர்கொள்ள தயார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.(15)
 
http://www.samakalam.com/உதவ-யாருமில்லை-தனித்து-வ/

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கிருபன் said:

உதவ யாருமில்லை, தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் வேதனை

----ரஷியாவிடம் இருந்து உக்ரைனைக் காக்கத் அதற்கு முன், அந்நாட்டு ராணுவ அதிகாரி தனது மகள் மற்றும் மனைவியிடம் விடைபெறும்போது கண்ணீர் விட்டு கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.உக்ரைன் தலைநகர் கிவ்-வில் பலத்த சத்ததுடன் குண்டு வெடித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் கீவ்வில் இருந்து கிராமங்களை நோக்கி கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்து உள்ளனர். குண்டுவீச்சில் குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. அதில் இருந்தவர்கள் படுகாயமடைந்து உள்ளனர். இனிமேல் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் ஏடிஎம் மையங்களிலும், கடைகளிலும் குவிந்துள்ளனர்.

எங்கள் மீது...  பன்றிக் கூட்டம் மாதிரி, உங்களையும் சேர்த்து...
பதினோரு நாடுகள்... விமான / ஆயுதத்  தாக்குதல் நடத்திய போது...
நாங்களும் பொருளாதார தடை, மருத்துவ  உபகரண தடை என்று ...
தனித்துத் தான்... இருந்தோம்.

அந்த நேரம் உங்களுக்கு புத்தி எங்கே போனது?
ஒரு இனத்தை அழிக்க.... எவ்வளவு மும்முரமாக நின்றீர்கள்.
உங்களுக்கு இப்போ, அதன் பலனை... அறுவடை செய்யும் நேரம்.
அனுபவி... நல்லாய்... அனுபவி. 👍 👍 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

உசுப்பேத்தினவனும் வரமாட்டான் ,கருத்து சொன்னவனும் வரமாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

உசுப்பேத்தினவனும் வரமாட்டான் ,கருத்து சொன்னவனும் வரமாட்டான்

IMG-20220225-003510.jpg

வேப்பிலை அடித்து, உசுப்பு ஏத்துறவர்காளால் தான்... 
உலகில் பல பிரச்சினைகள் உருவாகின்றது. 😂

ஐரோப்பிய யூனியன் ஆசை காட்டி... 
உக்ரைனை, மாட்டி விட்டவன் எல்லாம்...
பம்மிக் கொண்டு இருக்கிறார்கள். 🤣

உக்ரேன்...  மரண அடி,  வாங்க வேண்டும் என்று... அதன் சாதக பலன் இருந்தால்,
அதற்கு  பரிகாரம் இல்லை என்று, நீர்வேலி சாத்திரியார் அடிச்சு சொல்லுறார். 😛 😁

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் அவன் செயல் ....எண்டு போட்டு கறுப்பனை திறக்க வேண்டியான் 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, putthan said:

எல்லாம் அவன் செயல் ....எண்டு போட்டு கறுப்பனை திறக்க வேண்டியான் 

GIF absolut nights drink trinken - animated GIF on GIFER - by Malaris

"வொட்கா" வெள்ளையன் ஐயா....  😛 🤣

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

உக்ரேன்...  மரண அடி,  வாங்க வேண்டும் என்று... அதன் சாதக பலன் இருந்தால்,
அதற்கு  பரிகாரம் இல்லை என்று, நீர்வேலி சாத்திரியார் அடிச்சு சொல்லுறார். 😛 😁

அமெரிக்காவின் ஆயுத கறுப்புச் சந்தையாக விளங்கியது உக்கிரேன். விடுதலை அமைப்புகள் பலவற்றுக்கான ஆயுத கறுப்புச் சந்தையாக உக்கிரேன் விளங்கிவருகிறது.

எங்களுக்கு பெரும் அழிவுகளை உண்டாக்கிய ஸ்ரீலங்கா விமானப்படையின் மிகையொலி விமானங்களை ஆரம்பத்தில் இயக்கிய விமானிகள் உக்கிரேன் நாடடைச் சேர்ந்தவர்கள் மேலும் அவர்களே இலங்கை விமானிகளுக்குப் பயிற்சிகளையும் அளித்திருந்தார்கள்.

இறுதியுத்தகாலத்தில் எமக்கான பெருமளவு ஆயுதங்களை வழங்குவதாக ஒப்புதல் அளித்து பணத்தைப்பெற்று அமெரிக்காவுடன் இணைந்து ஏமாற்றியவர்களும் உக்கிரேனியா நாடு.

அன்று எமது ஆயுதக்கப்பல்களை அழிக்காமலும் , எமக்கான ஆயுதங்களை அதற்கான பணம் முழுவதையும் பெற்று தராமல் ஏமாற்றாமலும் விட்டிருந்தால் நாங்கள் நிச்சயம் எமது தாயகப் போரில் வென்றிருப்போம்.

இன்று உலகில் அமெரிக்காவினால் அதன் "தான்" என்கின்ற இறுமாப்புக்காக உலகில் பலபாகங்களில் பல்லின அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுவருகிறார்கள்.

இன்று அமெரிக்காவின் பலிக்கடாவாக தங்களையே அழித்துக்கொள்ளுகிறது உக்கிரேன். ஒருவகையில் ரஸ்யா எடுக்கும் படையெடுப்பானது நியாயமானதென்றே கூறலாம்.

உக்கிரேனில் அமெரிக்கா தங்களது கைக்கூலி அமைப்புகளை உருவாக்கி ஆயுதங்களையும் கொடுத்து அவர்களுக்கு பயிற்சிகளையும் கொடுத்து ரஸ்யாவுக்கெதிராக பயன்படுத்திக்கொண்டிருப்பதன் விளைவேதான் இன்றைய ரஸ்யாவின் உக்கிரேன் மீதான படையெடுப்பாகும்.

அதாவது ரஷ்யா அமெரிக்காவின் மறைமுக அச்சுறுத்தல்களிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளுமுகமாக இந்த இராணுவநடவடிக்கையைத் தொடங்கியுள்ளது எனலாம்.

இன்று மேற்குலகம் எல்லாம் ரசியாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக குரல் கொடுக்கத்தொடங்கியதோடு ரஸ்யாவுக்கெதிராக பொருளாதாரத் தடையையும் விதித்துள்ளன.

அன்று ஸ்ரீலங்கா இராணுவம் எங்கள் மீதான ஆக்கிரமிப்பைச் செய்து எம்மக்களை வகைதொகையின்றி கொல்லும்பொழுது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலகம் இன்றுதான் விழித்துக்கொண்டிருக்கின்றது . அன்று ஸ்ரீலங்கா இராணுவம் செய்தது சரியென்றால் இன்று ரஸ்யா செய்வதும் சரியேதான்.

என்னதான் உலகத்தில் எங்கு போரென்றாலும் எங்கும் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களேதான் ஆதலால் எங்கென்றாலும் போரை வெறுக்கிறேன். போரின் வலிகளை பல தசாப்தங்களாக போருக்குள்ளே வாழ்ந்து அனுபவித்துள்ளேன்.

ஏகாதியபத்திய அரசுகளின் நலனுக்காகவும் , பலப்பரீட்சைக்காகவும் யாரோ அப்பாவி மக்கள்தான் பலிக்கடாவாகிறார்கள் என்பதுதான் இங்கு நிதர்சனம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

எங்கள் மீது...  பன்றிக் கூட்டம் மாதிரி, உங்களையும் சேர்த்து...
பதினோரு நாடுகள்... விமான / ஆயுதத்  தாக்குதல் நடத்திய போது...
நாங்களும் பொருளாதார தடை, மருத்துவ  உபகரண தடை என்று ...
தனித்துத் தான்... இருந்தோம்.

அந்த நேரம் உங்களுக்கு புத்தி எங்கே போனது?
ஒரு இனத்தை அழிக்க.... எவ்வளவு மும்முரமாக நின்றீர்கள்.
உங்களுக்கு இப்போ, அதன் பலனை... அறுவடை செய்யும் நேரம்.
அனுபவி... நல்லாய்... அனுபவி. 👍 👍 

எதை  விதைத்தோமோ அதையே  அறுவடை செய்யமுடியும்??

இப்பவெல்லாம் இவற்றைப்பார்க்கையில்

யென்ம  பலன்களில்  நம்பிக்கை  வரப்பார்க்குது?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

எதை  விதைத்தோமோ அதையே  அறுவடை செய்யமுடியும்??

இப்பவெல்லாம் இவற்றைப்பார்க்கையில்

யென்ம  பலன்களில்  நம்பிக்கை  வரப்பார்க்குது?

இப்ப உங்களுக்கு… ஜென்ம பலனில், பாதி நம்பிக்கை வந்திருக்கு.
சீனா… அருணாசல பிரதேசத்தை பிடிக்கும் போது, முழு நம்பிக்கையும் வந்து விடும். 😁 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கிருபன் said:

உதவ யாருமில்லை, தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் வேதனை

spacer.png

ஆ.....அப்படியாகவா? 😜

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இப்ப உங்களுக்கு… ஜென்ம பலனில், பாதி நம்பிக்கை வந்திருக்கு.
சீனா… அருணாசல பிரதேசத்தை பிடிக்கும் போது, முழு நம்பிக்கையும் வந்து விடும். 😁 🤣

இந்த நாள் வந்தது போல் அந்த நாளும் வரும். 
மேற்கின் கையாலாகாத்தனத்தை சீனா நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Paanch said:

அன்று ஸ்ரீலங்கா இராணுவம் எங்கள் மீதான ஆக்கிரமிப்பைச் செய்து எம்மக்களை வகைதொகையின்றி கொல்லும்பொழுது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உலகம் இன்றுதான் விழித்துக் கொண்டிருக்கின்றது. 
 
இன்று விழிக்கவில்லை.  அவர்கள் வசதிக்கேற்ப கண்களை மூடித் திறக்கும் காட்டு நரிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, nunavilan said:

இந்த நாள் வந்தது போல் அந்த நாளும் வரும். 
மேற்கின் கையாலாகாத்தனத்தை சீனா நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளும்.

உண்மையும் அதுதான்.
சீனா…. நீளமான கயிறை கொடுத்து விட்டு,
தனது சந்தர்ப்பத்திற்க்காக… பார்த்துக் கொண்டு இருக்கின்றது.
இன்று… உக்ரைன் கதறுவது போல், இந்தியா… ஒரு நாள் கதறும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

தூண்டி விட்டிட்டு நேட்டோ கொட்டாவி விடுகுது. 

இஸ்ரேல்.. சிரியாவுக்குள் தினமும் குண்டு வீசுவதை கண்டிக்க வக்கில்லாதவர்கள்.. 

ஈழத்தில் தமிழ் மக்கள் மீது 25 நாடுகள் சேர்ந்து குண்டு வீசியதை.. இனப்படுகொலை செய்ததை ஏற்க முடியாதவர்கள்..

ஈராக்.. லிபியா.. சேர்பியா.. ஆப்கானிஸ்தான்.. என்று ஆக்கிரமிப்புக்களை செய்தவர்கள்..

எப்படி ரஷ்சியாவை கேள்வி கேட்க முடியும். ஐநா வும் வெறும் பொம்மை அமைப்பு என்று நிரூபனமாகிவிட்டது. 

உக்ரைன் மேற்கை நம்பி.. அழியப் போகுது. இது விடயத்தில் உக்ரைன் துருக்கியிடம் இருந்து பாடம் படித்திருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 48 மணி நேரத்தில் உக்ரைன் மட்டுமின்றி, சிரியா, ஏமன், சோமாலியா என உலகின் பல பகுதிகளிலும் பெரும் போர்த் தாக்குதல்கள் நடந்தாலும், “உக்ரைனைப் பற்றி மட்டும் கவலைப்படுங்கள்” என்று உலக ஊடகங்கள் அனைவருக்கும் போதிக்கின்றன.  "  20 ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தினமும் குண்டுகளை வீசி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகிறது.

  ஆனால் உலக ஊடகங்கள் நாம் எப்படி சிந்திக்க வேண்டும், எதைப் பற்றி சிந்திக்க வேண்டும், எவ்வளவு மட்டுமே விவாதிக்க வேண்டும், எதை மறந்து பேசக்கூடாது என்று உலக மக்களை கிளிப்பிள்ளைகளை போல நடத்துகின்றன.

  அமைதியை விரும்புபவர்கள், உலக அமைதியை விரும்புபவர்கள், எல்லாப் போர்களையும் கண்டிக்கிறார்கள், போர் மனித குலத்திற்கு எதிரானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மேற்குலகம் ஆசிய ஆபிரிக்க நாடுகளில்  செய்த கொடுமைகளை  யாரிடம் முறையிடுவது??????

அது மட்டுமல்லாமல் அண்மையில் நடந்த ஈழப்படுகொலைகளை கண்டும் காணாமல் இருந்த சர்வதேசத்திற்கு உக்ரேன் சம்பவம் நல்ல பரிசு.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

உதவ யாருமில்லை, தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர் வேதனை

நடைமுறைக்கு வாரும் .. அணு ஆயுதம் இருந்தால் ஓராயிரம் நண்பர்களுக்கு சமன்.. ஆரும் கை வைக்க யோசிப்பான்.

ஆர் பேச்சு கேட்டு கைவிட்டவை.? ☺️

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2022 at 20:15, Paanch said:

என்னதான் உலகத்தில் எங்கு போரென்றாலும் எங்கும் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொதுமக்களேதான் ஆதலால் எங்கென்றாலும் போரை வெறுக்கிறேன். போரின் வலிகளை பல தசாப்தங்களாக போருக்குள்ளே வாழ்ந்து அனுபவித்துள்ளேன்.

உண்மைதானே அங்கிள்!!

இது சாதாரன மனிதர்களான எங்களுக்கு விளங்குகிறது.. அதனால்தான் இது ஒரு entertainment இல்லை என்று வெறுக்கிறோம்.. 
போர் சூழலில் வளர்ந்து வாழ்ந்து வந்தவர்களாகிய எங்களுக்கு இன்னொரு சிறுபான்மை இனம் எங்களைப்போல அழிக்கப்படுவதை நாங்கள் எந்தவகையிலும் நியாயப்படுத்தமுடியாது என்றே நினைக்க தோன்றும்!

இந்த வல்லரசுகளின் போட்டியில் சிக்கி ஏற்படும் போர்களை வெறுக்கிறேன்..ஆனால் அதிகாரம், ஆதிக்கம் இந்த எண்ணங்களில் இருப்பவர்களுக்கு சாதரான மக்களின் உயிரிற்கு மதிப்பு இல்லை என்பதுதான் உண்மை!

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரெயினின் ஸெல் தாக்குதல்களால்  பல ஆயிரம் ரஸ்யர்களும் அகதிகளாகி உள்ளார்கள். போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் அப்பாவி மக்களின் இழப்புகளை தவிர்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஆனால் அதிகாரம், ஆதிக்கம் இந்த எண்ணங்களில் இருப்பவர்களுக்கு சாதரான மக்களின் உயிரிற்கு மதிப்பு இல்லை என்பதுதான் உண்மை!

அதிகாரம், ஆதிக்கம் எதுவுமே இல்லாமலும் கூட பிரச்சினைகளை மேலோட்டமாக பார்ப்பவர்களும் இந்த ரகம் தான்  போல.  🙂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

அதிகாரம், ஆதிக்கம் எதுவுமே இல்லாமலும் கூட பிரச்சினைகளை மேலோட்டமாக பார்ப்பவர்களும் இந்த ரகம் தான்  போல.  🙂

அதிகாரம், ஆதிக்க குணங்கள், சுயநலம் சாதாரன மனிதர்களிடமும் உள்ளதுதானே. இல்லை என்று முழுவதுமாக மறுத்துவிட முடியாது... இல்லாவிட்டால் ஏழை பணக்காரன், வர்க்க வேறுபாடுகள் என ஏன் வரப்போகிறது.. 

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நாங்கள் எங்களது தொப்புள்கொடி உறவு அது இது என இந்தியாவை நம்பி இருந்தோம்.. ஆனால் நம்ப வைத்து அழித்தார்கள் ஆனால் அவர்களின் பொருளாதாரத்திற்கு இராமர் பாலம் கட்ட உதவிய அணில் போல இலங்கை தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் எத்தனை வழிகளில் உதவிக்கொண்டுதானே இருக்கிறோம், உறவுகளையும் ஏற்படுத்திக்கொள்கிறோம்.. இது எப்படி முடிகிறது என சில சமயங்களில் நினைப்பதுண்டு.. ஒரு வேளை நான் மேலோட்டமாக யோசிப்பது பிழையாகவும் இருக்கலாம்.. I don’t know!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்திய கிரிக்கெட் அணியையும் CSK ஐயும் புறக்கணித்தால் போதும் என யாழ்கள ஜாம்பவான் ஒருவர் கூறி இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2022 at 10:15, Paanch said:

ஏகாதியபத்திய அரசுகளின் நலனுக்காகவும் , பலப்பரீட்சைக்காகவும் யாரோ அப்பாவி மக்கள்தான் பலிக்கடாவாகிறார்கள் என்பதுதான் இங்கு நிதர்சனம்.

உலகெங்கணும்இரண்டாம் உலகப்போரின் முன்பு தொடங்கி  இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்கள் அனைத்தும் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்க வெறியும் சுரண்டல் சிந்தனையுமேயாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.