Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் தமிழருக்கெதிரான யுத்தத்தில் ரஸ்ஸிய மற்றும் உக்ரேனிய அரசுகளின் பங்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nunavilan said:

275233738_5124283017665105_2718149963647

Source of information ? 

  • Replies 477
  • Views 30.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kapithan said:

பிரித்தானியாவின் Sun tabloid   தோற்றது போங்கள்...😆

ஏன் கிருபன், இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் பின்ணணி/NATO வின் பங்கு/ அங்கு நடைபெற்ற வன்முறையில் வெளிநாட்டு கூலிப்படையினரின் பங்கு பற்றி ஏதும் நீங்கள் வாசிப்பதில்லை போல....

கபிதான், நான் பல தரப்பு ஆய்வுகளையும் படிப்பதுண்டு. குறிப்பாக இடதுசாரி ஆய்வுகள். ஏன் மெய்மை காணப் புறப்பட்டிருக்கும் அகல் நியூஸையும் அதில்  வீரகேசரியில் சண் தவராரா பிபிசியில் இருந்த தமிழுக்கு மாற்றிய போரில் உண்மைதான் முதலில் பலி என்ற செய்தியையும் படித்துத்தான் இருந்தேன். 😉 ஆனால் எல்லாவற்றையும் இங்கு இணைப்பதில்லை. 

இப்போரை ஆரம்பிக்க நேட்டோ என்னவெல்லாம் செய்தது என்று “World Socialist Website” இல் “நவம்பர் 2021 அமெரிக்க உக்ரேனிய மூலோபாய பங்காண்மையும், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பும்” என்ற அண்மைய ஆய்வு உட்பட பலவற்றையும் வாசித்திருக்கின்றேன். அதை இங்கு ஒட்டினால் வாசிக்க நேரமில்லாதவர்களுக்கு வாந்தியாகத் தெரியும். மெய்மை காணப் பலவற்றையும் படிக்கும் நீங்களே கேள்விகள் கேட்பது மட்டும்தான் இங்கு செய்கின்றீர்கள். விவாதக் கருத்துக்களை ஒருபோதும் வைப்பதில்லை.

நேட்டோ நாடுகள் தூண்டித்தான் போர் நடக்கின்றது; ரஷ்யாவுக்கு வேறு தெரிவுகள் இல்லை; ரஷ்யா உக்கிரேனை ஆக்கிரமிப்பது சரியானது என்ற லொஜிக்கில் மக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்துதையும் பார்க்கின்றேன்.

இன்னொரு வகையில் உக்கிரேனின் ஆட்சியாளர்கள் போலித்தேசியவாதிகள், நவநாஜிகள், ரஷ்யமொழி பேசும் சிறுபான்மையினரை ஒடுக்குகின்றவர்கள், 2014 இலிருந்து  14,000 பேரளவில் கொன்றவர்கள் என்று பூட்டினை நியாயப்படுத்தும் இடதுசாரிகளின் பதிவுகளையும் பார்த்திருக்கின்றேன்.

உக்கிரேன் என்பது ஒரு தேசியமே இல்லை. அது முன்னைய ரஷ்யாவென்று என்று பூட்டின் சொல்வதை நம்புபவர்களின் பதிவுகளையும் பார்த்திருக்கின்றேன். இது மலையாளிகள் தனித்துவமானவர்கள் இல்லை. அவர்களும் தமிழர்களே என்று சொல்வதைப் போன்றது என்பதை புரியாமலா இருக்கின்றார்கள்.

ரஷ்யாவுக்கு ஆதரவளிக்கவில்லை, போரை விரும்பவில்லை என்று சொல்லிக்கொண்டே உக்கிரேனுக்கு அடிகொடுக்கவேண்டும் என்று இந்தத் திரியில் எழுதுபவர்களையும் பார்க்கின்றேன்😙 அது என்ன மாதிரியான டிசைன் என்று புரியவில்லை.

இப்படிப் பல்வேறு காரணங்களைக் கொண்டு சர்வாதிகாரி பூட்டின் ஒரு இறைமையுள்ள, ஜனநாயக நாடான உக்கிரேன் மீது போர் நடாத்துவதையும், பாரிய அழிவுகளை உண்டாக்குவதையும், அடக்குமுறைக்கு உள்ளான தமிழர்கள் ஆதரிப்பது தவறு.

உக்கிரேனின் தற்காப்பு யுத்தத்தில் ஈடுபட தாங்களாக விரும்பிப் பல்லாயிரம் பேர் சேருகின்றார்களே. அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டா செல்கின்றார்கள்? ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் கேர்ஸனில் மக்கள் தன்னிச்சையாகவே ரஷ்யா ராணுவத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்களே; திரும்பிப் போங்கள் என்றார்களே. அதெல்லாம் ஏன் நடக்கின்றது என்பது சிந்திப்பது இல்லையா?

இந்த ஆக்கிரமிப்பு உக்கிரேன் நாட்டை இரண்டாகப் பிரிப்பதில்தான் முடியும். அதேவேளை, சீனா தாய்வானை மீண்டும் அகண்ட சீனாவுக்குள் விரைவில் கொண்டுவர வழி செய்யும். அதையும் நாம் ஆதரிப்போம்!

10 hours ago, Sasi_varnam said:

"தமிழீழம் என்று ஒரு நாடு கிடைக்க கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்க காரணம் தமிழ்நாடு பிரிந்து விடும் என்பதால் தான்"...

"போர் நடக்க முதலே அதை தடுக்க எவ்வளவோ வழி ... தனது அயல் நாட்டுடன் நட்பை பேணி இருக்க வேண்டும்"...

"அவர்களுக்கு அவர்கள் விரும்பியதை செய்ய உரிமை இருக்கு...ஆனால் , அது தனது  அயல் நாடுகளுக்கு எந்த வித  பாதகங்களை ஏற்படுத்தும் என்பதை யோசித்து முடிவு எடுத்திருக்க வேண்டும்"...

"மக்களை பிழையான வழிக்கு இட்டு சென்று அவர்களது மரணத்திற்கும் ,இழப்பிற்கும்  முதலில்  பொறுப்பு ஏற்க வேண்டும் "... 

👆  
இதையும் தான் ரதி உறைக்கிற மாதிரி அழுத்தம் திருத்தமா சொல்லி இருக்கிறா.... 
அது பலருக்கு  உறைக்கவில்லையே என்று மிகப் பெரிய அதிர்ச்சியில் நான் இருக்கிறேன். 😢

நன்றி சசி வர்ணம். 

இதற்கு மேல் ரதியின் கருத்துக்கு பதில் சொன்ன ஒன்றுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தனி நாடு கேட்டு போராடிய தமிழர் போராட்டத்தையும், ஏற்கனவே தனி நாடாய் இருக்கின்ற உக்கிரேனின் போராட்டத்தையும் எதற்கு ஒப்பிடுகிறார்கள் என்று எனக்கு சத்தியமாய் விளங்கவில்லை.
நில ஆக்கிரமிப்பு என்பது எந்த வித காரணமின்றி அந்த நிலத்தை அடைவதற்கான முயற்சி செய்தல்.
ரஸ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்புக்கு நில ஆக்கிரமிப்போ , அடக்கு முறையோ காரணமில்லை .
நோட்டோவில் சேர்ந்து தான் அல்லது ஜ நாவில் சேர்ந்து தான் உக்ரேன் தன் தனித்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதில்லை 

40 minutes ago, கிருபன் said:

நன்றி சசி வர்ணம். 

இதற்கு மேல் ரதியின் கருத்துக்கு பதில் சொன்ன ஒன்றுமில்லை.

ஓ, அப்படியா! ...உங்களை போன்றவர்களிடமிருந்து பதில் வராது என்று எனக்கு தெரியும் . மேலே நீங்கள் குவாட் பண்ணி எழுதினவரும் முகத்திற்கு நேரே பதில் எழுத முடியாமல் வேறு எங்கோ எழுதி இருக்கிறார்  ...மேற்கு ஊடகங்கள் சொல்வதையும் ,பார்ப்பதையும் மட்டும் தான் உண்மை என்று நம்புவீர்கள்...தயவு செய்து நீங்களாவது சொல்லுங்கள் தமிழர் நாடு கேட்டு போராடினத்திற்கும் , இப்போது நடக்கும் யுத்தத்திற்கும் என்ன சம்மந்தம்   

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரதி said:

தமிழர் நாடு கேட்டு போராடினத்திற்கும் , இப்போது நடக்கும் யுத்தத்திற்கும் என்ன சம்மந்தம்   

தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடனும், சுதந்திரமாகவும் வாழப் போராடினார்கள்.  தமிழர்களை ஒரு தேசியம் என்று ஏற்றுக்கொள்ளாத சிங்களவர்கள், பல நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து ஆயுதப்போராட்டத்தை அழித்தார்கள்.

உக்கிரேன் ஸார் மன்னர் காலத்து ரஷ்யப்பேரரசு காலத்தில் இருந்தே ரஷ்யாவின் கீழ் இருந்தது. உக்ரைன் மொழியும் உக்ரைன் தேசியமும் ஒரு தெளிவான வடிவத்தை 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அடைந்தன. ரஷ்யப்புரட்சியின் பின்னர் 1918 இல் சுதந்திரநாடாக மாறியது. ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகளிலிலேயே சோவியத் யூனியனுக்குள் சேர்த்துக்கொள்ளப்ப்பட்டது. உக்கிரேனிய மொழியில் கற்பதே தடைசெய்யப்பட்டிருந்தது. 3 மில்லியன் உக்கிரேனியர்கள் ஸ்டாலின் காலத்தில் பட்டினியால் இறந்தார்கள். 

இப்படி சோவியத் கீழ் இருந்த உக்கிரேன் 1991 இல் சோவியத் உடைவின் பின்னர் சுதந்திர நாடாக மாறியது. அதன் எல்லைகள் ரஷ்யாவுடன் இணைந்தே தீர்மானிக்கப்பட்டிருந்தன. 

ஆக உக்கிரேன் தமிழர்களைப் போன்ற ஒரு தனித்துவமான இனம். சுதந்திரமாகவும், சுயநிர்ணய உரிமையுடனும் வாழ அவர்களுக்கு சகல உரிமைகளும் உள்ளன. நேட்டோவில் சேர்வதோ, ஐரோப்பிய யூனியனில் சேர்வதோ அந்நாட்டு மக்களின் ஜனநாயக ஆணைப்படி செய்யக்கூடிய உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. அதைத் தடுக்க ரஷ்யாவுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஒரு சுதந்திர நாடான உக்கிரேன் தனது விருப்பங்களுக்கு மாறாகச் செயற்படுகின்றது என்ற காரணத்தால் ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. அதை சுதந்திரமே கிடைக்காத தமிழர்கள் எந்தவகையில் நியாயப்படுத்தமுடியும்? இப்படி நியாயப்படுத்துபவர்கள் உண்மையாகவே தமிழரின் சுதந்திரத்தை விரும்புகின்றார்களா? அப்படியாயின் அது என்ன வகையான சுதந்திரம்? அடக்குமுறைக்கு ஆளானவர்கள் நாம் என்றால், ஏன் எங்களால் அடக்குமுறைக்கு உள்ளாகும் உக்கிரேனியர்களுக்கு தார்மீக ஆதரவு கொடுக்கமுடியாமல் உள்ளது? தமிழீழம் என்பது வல்லரசுக் கனவில் இருக்கும் இந்தியாவுக்கு அருகிலும், சிங்களப் பெரும்பான்மையுள்ள இலங்கைத் தீவிலும் இருப்பதால் அவர்களின் விருப்பங்களை, உக்கிரேன் ரஷ்யாவை அனுசரிக்கவேண்டும் என்பதுபோல் அனுசரித்துப் போகவேண்டுமா?  இவைதான் கேள்விகள்! 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரதி said:

தனி நாடு கேட்டு போராடிய தமிழர் போராட்டத்தையும், ஏற்கனவே தனி நாடாய் இருக்கின்ற உக்கிரேனின் போராட்டத்தையும் எதற்கு ஒப்பிடுகிறார்கள் என்று எனக்கு சத்தியமாய் விளங்கவில்லை.
நில ஆக்கிரமிப்பு என்பது எந்த வித காரணமின்றி அந்த நிலத்தை அடைவதற்கான முயற்சி செய்தல்.
ரஸ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்புக்கு நில ஆக்கிரமிப்போ , அடக்கு முறையோ காரணமில்லை .
நோட்டோவில் சேர்ந்து தான் அல்லது ஜ நாவில் சேர்ந்து தான் உக்ரேன் தன் தனித்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதில்லை 

ஓ, அப்படியா! ...உங்களை போன்றவர்களிடமிருந்து பதில் வராது என்று எனக்கு தெரியும் . மேலே நீங்கள் குவாட் பண்ணி எழுதினவரும் முகத்திற்கு நேரே பதில் எழுத முடியாமல் வேறு எங்கோ எழுதி இருக்கிறார்  ...மேற்கு ஊடகங்கள் சொல்வதையும் ,பார்ப்பதையும் மட்டும் தான் உண்மை என்று நம்புவீர்கள்...தயவு செய்து நீங்களாவது சொல்லுங்கள் தமிழர் நாடு கேட்டு போராடினத்திற்கும் , இப்போது நடக்கும் யுத்தத்திற்கும் என்ன சம்மந்தம்   

இரஸ்சியா உக்கிரேனை ஆக்கிரமிப்பதற்கு காரணம், உக்கிரேன் இரஸ்சியாவின் எரிவாயுவிற்கு போட்டியாக இரஸ்சியாவை விட மலிவு விலையில் எரிவாயுவை வழங்கமுடியும் என்ற காரணத்தால்தான் எரிவாயு அதிகமாக காணப்படும் கிரிமியாவையும் தற்போது உக்கிரேனை முழுமையாக ஆக்கிரமிப்பதாக கூறிகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடனும், சுதந்திரமாகவும் வாழப் போராடினார்கள்.  தமிழர்களை ஒரு தேசியம் என்று ஏற்றுக்கொள்ளாத சிங்களவர்கள், பல நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து ஆயுதப்போராட்டத்தை அழித்தார்கள்.

உக்கிரேன் ஸார் மன்னர் காலத்து ரஷ்யப்பேரரசு காலத்தில் இருந்தே ரஷ்யாவின் கீழ் இருந்தது. உக்ரைன் மொழியும் உக்ரைன் தேசியமும் ஒரு தெளிவான வடிவத்தை 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அடைந்தன. ரஷ்யப்புரட்சியின் பின்னர் 1918 இல் சுதந்திரநாடாக மாறியது. ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகளிலிலேயே சோவியத் யூனியனுக்குள் சேர்த்துக்கொள்ளப்ப்பட்டது. உக்கிரேனிய மொழியில் கற்பதே தடைசெய்யப்பட்டிருந்தது. 3 மில்லியன் உக்கிரேனியர்கள் ஸ்டாலின் காலத்தில் பட்டினியால் இறந்தார்கள். 

இப்படி சோவியத் கீழ் இருந்த உக்கிரேன் 1991 இல் சோவியத் உடைவின் பின்னர் சுதந்திர நாடாக மாறியது. அதன் எல்லைகள் ரஷ்யாவுடன் இணைந்தே தீர்மானிக்கப்பட்டிருந்தன. 

ஆக உக்கிரேன் தமிழர்களைப் போன்ற ஒரு தனித்துவமான இனம். சுதந்திரமாகவும், சுயநிர்ணய உரிமையுடனும் வாழ அவர்களுக்கு சகல உரிமைகளும் உள்ளன. நேட்டோவில் சேர்வதோ, ஐரோப்பிய யூனியனில் சேர்வதோ அந்நாட்டு மக்களின் ஜனநாயக ஆணைப்படி செய்யக்கூடிய உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. அதைத் தடுக்க ரஷ்யாவுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஒரு சுதந்திர நாடான உக்கிரேன் தனது விருப்பங்களுக்கு மாறாகச் செயற்படுகின்றது என்ற காரணத்தால் ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. அதை சுதந்திரமே கிடைக்காத தமிழர்கள் எந்தவகையில் நியாயப்படுத்தமுடியும்? இப்படி நியாயப்படுத்துபவர்கள் உண்மையாகவே தமிழரின் சுதந்திரத்தை விரும்புகின்றார்களா? அப்படியாயின் அது என்ன வகையான சுதந்திரம்? அடக்குமுறைக்கு ஆளானவர்கள் நாம் என்றால், ஏன் எங்களால் அடக்குமுறைக்கு உள்ளாகும் உக்கிரேனியர்களுக்கு தார்மீக ஆதரவு கொடுக்கமுடியாமல் உள்ளது? தமிழீழம் என்பது வல்லரசுக் கனவில் இருக்கும் இந்தியாவுக்கு அருகிலும், சிங்களப் பெரும்பான்மையுள்ள இலங்கைத் தீவிலும் இருப்பதால் அவர்களின் விருப்பங்களை, உக்கிரேன் ரஷ்யாவை அனுசரிக்கவேண்டும் என்பதுபோல் அனுசரித்துப் போகவேண்டுமா?  இவைதான் கேள்விகள்! 

வசதியாக ஒன்றை மறந்து அல்லது மறைத்து விடுகிறீர்கள் ....உக்ரேன் தனது விருப்பத்துக்கு மாறாக செயற்படுகுது என்று ரஸ்யா அதன் மேல் தாக்குதல் தொடுக்கவில்லை ...தனது நாட்டுக்கு பாதிப்பு வர முதல் அதை தடுக்க  முயற்சிக்குது ...எந்த நாடாக இருந்தாலும் அதை தான் செய்வார்கள்.
மற்றும் படி தாங்கள் எப்படி வாழ வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது அவர்கள் தான் ...அது அவர்களது சொந்த விருப்பமாக இருக்க வேண்டும் . அடுத்தவர்கள் சொல்கிறார்கள் /தூண்டுகிறார்கள் என்பதற்காய் வரக்  கூடாது .
அதை விட பக்கத்து நாடுகளுடன் எப்போதும் நல்லுறவை பேண  வேண்டும் ...அவற்றை பகைத்து கொண்டு ,பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு தங்கள் நாட்டை கட்டி எழுப்ப முடியாது...அது இந்தியாவாக இருந்தாலும் சரி , அமெரிக்காவாக இருந்தாலும் சரி  

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

அப்படியானால், என்னிடம் ஒரு கேள்வியிருக்கிறது...

எல்லாமே சிறப்பு விளக்கங்கள் 👍
எனக்கு தெரிந்த ஒரு இந்தியர் இருக்கிறார் தெலுங்கு இனத்தவர். நான் கலந்து கொண்ட  புரினின்  உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை கண்டித்து நடத்தபட்ட பேரணியில் இவரும் கலந்து கொண்டாராம். அவரும் ரஷ்ய கொடுமைக்கு எதிர்ப்பு ஆனால் இந்தியாவில் ரஷ்யா தான் இந்தியர்களின் உண்மை நண்பன் ஆனபடியால் ஆக்கிரமிப்பு ரஷ்யாவை ஆதரிக்க வேண்டும் என்ற போக்கு தான் அங்கே அதிகம் இருப்பதாக சொன்னார்.
ஆனால் நேட்டோ நாடுகளில் குடியேறிய இலங்கை தமிழர்கள் சர்வாதிகார புரினுக்கு ஆதரவாக உக்கிரேன் ஆக்கிரமிப்பை ஏன் இவ்வளவு தீவிரமாக ஆதரிக்கிறார்கள் 🤦‍♂️

1 hour ago, கிருபன் said:

சீனா தாய்வானை மீண்டும் அகண்ட சீனாவுக்குள் விரைவில் கொண்டுவர வழி செய்யும். அதையும் நாம் ஆதரிப்போம்!

சந்தேகமே வேண்டாம் ஆக்கிரமிப்புக்கு உறுதியான ஆதரவு 💪

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடனும், சுதந்திரமாகவும் வாழப் போராடினார்கள்.  தமிழர்களை ஒரு தேசியம் என்று ஏற்றுக்கொள்ளாத சிங்களவர்கள், பல நாடுகளுடன் கூட்டுச்சேர்ந்து ஆயுதப்போராட்டத்தை அழித்தார்கள்.

உக்கிரேன் ஸார் மன்னர் காலத்து ரஷ்யப்பேரரசு காலத்தில் இருந்தே ரஷ்யாவின் கீழ் இருந்தது. உக்ரைன் மொழியும் உக்ரைன் தேசியமும் ஒரு தெளிவான வடிவத்தை 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அடைந்தன. ரஷ்யப்புரட்சியின் பின்னர் 1918 இல் சுதந்திரநாடாக மாறியது. ஆனால் ஒன்றிரண்டு ஆண்டுகளிலிலேயே சோவியத் யூனியனுக்குள் சேர்த்துக்கொள்ளப்ப்பட்டது. உக்கிரேனிய மொழியில் கற்பதே தடைசெய்யப்பட்டிருந்தது. 3 மில்லியன் உக்கிரேனியர்கள் ஸ்டாலின் காலத்தில் பட்டினியால் இறந்தார்கள். 

இப்படி சோவியத் கீழ் இருந்த உக்கிரேன் 1991 இல் சோவியத் உடைவின் பின்னர் சுதந்திர நாடாக மாறியது. அதன் எல்லைகள் ரஷ்யாவுடன் இணைந்தே தீர்மானிக்கப்பட்டிருந்தன. 

ஆக உக்கிரேன் தமிழர்களைப் போன்ற ஒரு தனித்துவமான இனம். சுதந்திரமாகவும், சுயநிர்ணய உரிமையுடனும் வாழ அவர்களுக்கு சகல உரிமைகளும் உள்ளன. நேட்டோவில் சேர்வதோ, ஐரோப்பிய யூனியனில் சேர்வதோ அந்நாட்டு மக்களின் ஜனநாயக ஆணைப்படி செய்யக்கூடிய உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. அதைத் தடுக்க ரஷ்யாவுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஒரு சுதந்திர நாடான உக்கிரேன் தனது விருப்பங்களுக்கு மாறாகச் செயற்படுகின்றது என்ற காரணத்தால் ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. அதை சுதந்திரமே கிடைக்காத தமிழர்கள் எந்தவகையில் நியாயப்படுத்தமுடியும்? இப்படி நியாயப்படுத்துபவர்கள் உண்மையாகவே தமிழரின் சுதந்திரத்தை விரும்புகின்றார்களா? அப்படியாயின் அது என்ன வகையான சுதந்திரம்? அடக்குமுறைக்கு ஆளானவர்கள் நாம் என்றால், ஏன் எங்களால் அடக்குமுறைக்கு உள்ளாகும் உக்கிரேனியர்களுக்கு தார்மீக ஆதரவு கொடுக்கமுடியாமல் உள்ளது? தமிழீழம் என்பது வல்லரசுக் கனவில் இருக்கும் இந்தியாவுக்கு அருகிலும், சிங்களப் பெரும்பான்மையுள்ள இலங்கைத் தீவிலும் இருப்பதால் அவர்களின் விருப்பங்களை, உக்கிரேன் ரஷ்யாவை அனுசரிக்கவேண்டும் என்பதுபோல் அனுசரித்துப் போகவேண்டுமா?  இவைதான் கேள்விகள்! 

நான் சொல்ல வருவது தமிழர் போராட்டமும், உக்ரேனிய யுத்தமும் இரு வேறு துருவங்கள் ...தமிழர் நாடு கிடைத்த பின்னர் வேறு நாடுகளோடு சேர்ந்து இலங்கையை தாக்கவில்லை ....அதன் பாதுகாப்புக்கு எதிராய் செயற்படவில்லை ...ஆனால் உக்ரேனியர் செய்வது அதைத் தான் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நேட்டோ நாடுகளில் குடியேறிய இலங்கை தமிழர்கள் சர்வாதிகார புரினுக்கு ஆதரவாக உக்கிரேன் ஆக்கிரமிப்பை ஏன் இவ்வளவு தீவிரமாக ஆதரிக்கிறார்கள் 🤦‍♂️

எனக்கு ஜேர்மனி மீது நன்றி விசுவாசம் இருக்கின்றது. அதற்காக அவர்களின் பின்பக்கத்தை சலவை செய்யவேண்டும் என்ற அவசியம் எனக்கு மட்டுமல்ல யாவருக்கும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

நேட்டோ நாடுகளில் குடியேறிய இலங்கை தமிழர்கள் சர்வாதிகார புரினுக்கு ஆதரவாக உக்கிரேன் ஆக்கிரமிப்பை ஏன் இவ்வளவு தீவிரமாக ஆதரிக்கிறார்கள் 🤦‍♂️

Vladimir Putin GIF | Gfycat

புட்டினை... சர்வாதிகாரி என்று அழைப்பதை, மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
புட்டின்... தனது நாட்டை, காக்கும் தேச பக்தன். 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, தமிழ் சிறி said:

புட்டினை... சர்வாதிகாரி என்று அழைப்பதை, மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
புட்டின்... தனது நாட்டை, காக்கும் தேச பக்தன். 👍

ரஷ்யா கியுபாவிலோ அல்லது வெனிசுலாவிலோ தனது படைகளை இறக்கினால் அண்ணன் அமெரிக்கா என்ன செய்வார் சிறித்தம்பி? 😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ரஷ்யா கியுபாவிலோ அல்லது வெனிசுலாவிலோ தனது படைகளை இறக்கினால் அண்ணன் அமெரிக்கா என்ன செய்வார் சிறித்தம்பி? 😂

குமாரசாமி அண்ணை,  அதோடை... அமெரிக்காவின் ஆட்டம்  முடிவுக்கு வரும்.
சீனாவும்... ஒரு  "லைற்ராய்" ஒரு தட்டு தட்ட, 
இவங்கள் எல்லாரும் ஓடிப் போய்... பங்கருக்குள்ளை இருப்பாங்கள்.      🤣

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

ரஷ்யா கியுபாவிலோ அல்லது வெனிசுலாவிலோ தனது படைகளை இறக்கினால் அண்ணன் அமெரிக்கா என்ன செய்வார் சிறித்தம்பி? 😂

அண்ணை

இங்கே நாம்  பேசுவது புரியாமல்  இல்லை

ஆனால் தாம்  லட்சியவாதிகள் இளகிய  மனதுக்கு  சொந்தக்காறர்

எங்கெல்லாம் குண்டு விழுந்தாலும் ஓடிச்சென்று  அரவணைக்கும்  பாசக்காறர்  என்று நடிக்கிறார்கள்

ஆனால் சொந்த  மண்ணுக்காக கடைசிவரை  போராடி வீீழ்ந்தவர்களை  மொக்கன்கள்  கூட்டம்  என்பார்கள்

அதையே பட்ட  பாடங்களின்  அடிப்படையில் முன்பே சண்டையை தவிர்

வருபவன் மோடன் எதையும் செய்வான் என்றால் மொக்கனுக்கு வக்காலத்தா  என்பார்கள்?

இது அறப்படித்தவர்களின் விவாதமேடை

பாமரர்  எமது குரல்  எடுபடாது?

நான்  செய்வது செத்தவீட்டில்  ஒப்பாரி மட்டுமே

உன்னால் நாம் பதுங்கு குழிக்குள்  இருந்ததும்

கொத்து கொத்தாக  என் இனம் சதைத்துண்டுகளானதும் உனக்கு இப்பவாவது புரியுதா??

வலி தெரியுதா?

தெரிந்தால்  நானும் உன் இனமே???

இப்பொழுதும்  தெரியவில்லையா

உள்ளே விட்டு அவனை அழி

அப்பொழுதாவது  கரம் பிடிப்போம்

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு ரஷ்யாவும் நண்பனல்ல உக்கிரேனும் நண்பனல்ல.......இருவருமே எம்மினத்தை அழித்த அழிக்க துணைபோன கொலைகாரர்கள்......இப்போது தங்களுக்குள் அடிபடுகிறார்கள் துழைஞ்சு போகட்டும். ......இன்று உக்கிரேனில் இருந்து ஏதிலிகளாகவும் அகதிகளாகவும் போகும் பொதுமக்களைப் பார்க்க ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும் உள்ளுக்குள் சிறு திருப்தி (மகிழ்ச்சி அல்ல) இருக்கிறது........!

                                காரணம் இந்தக் குடும்பங்களில் பத்தில் ஒன்றாவது எங்கள் தலைகளில் குண்டு போட்டு அழித்த, அங்கவீனர்களாக்கிய, பைத்தியங்களாக்கிய  உக்கிரேன் விமானிகளின் குடும்பங்களில் ஒன்றாவது இருக்கும்தானே.....எம்மினம் வீதிகளில் தெறித்து ஓடியபோது ஆகாயத்தில் இருந்து சிரித்துக் கொண்டு பார்த்த அவர்கள்  கண்முன்னே தெரியும்....இப்ப அவர்களின் மண்டைக்குள் வண்டு குடைந்து கொண்டிருக்கும் சாகும்வரை...........நாங்கள் இதையெல்லாம் மறந்து நைச்சியம் பேசுவதற்கு ஐம்பது, நூறு வருடங்களா போய்விட்டன வெறும் பத்து பன்னிரெண்டு வருடங்கள்தான்......!

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, suvy said:

நாங்கள் இதையெல்லாம் மறந்து நைச்சியம் பேசுவதற்கு ஐம்பது, நூறு வருடங்களா போய்விட்டன வெறும் பத்து பன்னிரெண்டு வருடங்கள்தான்......!

தமிழர்களுக்கு மறதிக் குணம் அதிகம் என்று, 
யாழ். களத்தில் உள்ள ...சில ஆட்களின், கருத்தை பார்க்கவே தெரிகிறது. 🧐

பிற் குறிப்பு: உங்களுக்கு.... ரஞ்சித், கிருபன் ஜீ, சசி வர்ணம், விளங்க நினைப்பவன் ஆகியோரின் நினைவு  வந்தால்.... கம்பெனி பொறுப்பல்ல.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

ரஷ்யா கியுபாவிலோ அல்லது வெனிசுலாவிலோ தனது படைகளை இறக்கினால் அண்ணன் அமெரிக்கா என்ன செய்வார் சிறித்தம்பி? 😂

அமெரிக்காவை சுத்தி இருக்கிறவன் செத்தான்.
தமிழர்களுக்கு உலகமே சேர்ந்து அடித்தது போல் உலகமும் உக்ரேனும் பொருளாதார தடையுடன் இராணுவ பலத்தையும் பிரயோகிக்கின்றன. இந்த டிசைன் சிலருக்கு விளங்கவில்லை.

அடுத்தது ரசியாவை சுற்றி உள்ள நாடுகளில் நேட்டோ படைகள் போருக்கு முன்பே பல நாடுகளில் குவிக்கப்பட்டிருக்கின்றன. அத்தோடு சோவியத்யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளிலும் உள்ளன. அந்த வகையில் உக்ரேனும் போனால் தனது நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தல் என பல காலமாக பொறுத்தே பார்த்து இப்போர் ஆரம்பிக்கப்பட்டது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் பக்கத்துவீட்டுக்காரனுக்கு ஏனைய ஊரானை கூட்டி வந்து அடித்தல் தான் தற்போது நடக்கிறது.

யாராவது அமெரிக்காவின் சொல்லைக் கேட்டு தன்நாட்டு மக்களை காவு கொடுபாரா ஸெலன்ஸ்கியை தவிர.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, தமிழ் சிறி said:

தமிழர்களுக்கு மறதிக் குணம் அதிகம் என்று, 
யாழ். களத்தில் உள்ள சில ஆட்களின் கருத்தை பார்க்கவே தெரிகிறது

நாங்கள் மீம்ஸ் படிச்சு அறிவை வளர்க்கிறனாங்களாம்....அதுதானே அவையள் படிக்கிற புத்தகங்களின்ர  நீளமென்ன அகலமென்ன தடிப்பென்ன...நாங்கள் அவையளுக்கு கிட்ட வரேலுமே.....🤣😂

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

நாங்கள் மீம்ஸ் படிச்சு அறிவை வளர்க்கிறனாங்களாம்....அதுதானே அவையள் படிக்கிற புத்தகங்களின்ர  நீளமென்ன அகலமென்ன தடிப்பென்ன...நாங்கள் அவையளுக்கு கிட்ட வரேலுமே.....🤣😂

"அறப் படிச்ச பல்லி, 🦎 கூழ்  பானைக்குள்ளை விழுந்ததாம்" என்ற மாதிரி....
கனக்க  படிச்சாலும், தலை எல்லாம் குழம்பிப் போகும். 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

ஈழத்தில் உக்ரைன் நாட்டு மிக் 27 ரக போர் விமானத்தை செலுத்திய உக்ரேனிய பெண் விமானிகளே. 

புதுகுடியிருப்பு  வெண்புறா மீது குண்டு வீச்சு  தாக்குதலை மேற்கொண்டடீர்கள் நினைவிருக்கிறதா?

எம் இனத்தை குண்டு வீசி கொத்து கொத்தாக அழித்தீர்களே தலை சிதறி,  கை, கால் இழந்து பல்லாயிரம் பேர் இறந்து போனார்கள்

உக்ரைனே! 
எங்கள் மீது குண்டு வீசியது நியாயம் என்றால் ..
ரஸ்யா உங்கள் மீது குண்டு வீசுவதும் தாக்குதல் நடத்துவது நியாயம் தானே?

ஆனாலும் போர் கொடுமையானது..

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

எங்களுக்கு ரஷ்யாவும் நண்பனல்ல உக்கிரேனும் நண்பனல்ல.......இருவருமே எம்மினத்தை அழித்த அழிக்க துணைபோன கொலைகாரர்கள்......இப்போது தங்களுக்குள் அடிபடுகிறார்கள் துழைஞ்சு போகட்டும். ......இன்று உக்கிரேனில் இருந்து ஏதிலிகளாகவும் அகதிகளாகவும் போகும் பொதுமக்களைப் பார்க்க ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும் உள்ளுக்குள் சிறு திருப்தி (மகிழ்ச்சி அல்ல) இருக்கிறது........!

                                காரணம் இந்தக் குடும்பங்களில் பத்தில் ஒன்றாவது எங்கள் தலைகளில் குண்டு போட்டு அழித்த, அங்கவீனர்களாக்கிய, பைத்தியங்களாக்கிய  உக்கிரேன் விமானிகளின் குடும்பங்களில் ஒன்றாவது இருக்கும்தானே.....எம்மினம் வீதிகளில் தெறித்து ஓடியபோது ஆகாயத்தில் இருந்து சிரித்துக் கொண்டு பார்த்த அவர்கள்  கண்முன்னே தெரியும்....இப்ப அவர்களின் மண்டைக்குள் வண்டு குடைந்து கொண்டிருக்கும் சாகும்வரை...........நாங்கள் இதையெல்லாம் மறந்து நைச்சியம் பேசுவதற்கு ஐம்பது, நூறு வருடங்களா போய்விட்டன வெறும் பத்து பன்னிரெண்டு வருடங்கள்தான்......!

ரஷ்யா ஒரு  சர்வாதிகார

ஐனநாயகத்துக்கு  எதிரான

தனது மக்களுக்கே தனிமனித சுதந்திரங்களுக்கு எதிரான

அடக்குமுறையான   நாடு

அதிலிருந்து மீளணும் முதலில்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, விசுகு said:

ரஷ்யா ஒரு  சர்வாதிகார

ஐனநாயகத்துக்கு  எதிரான

தனது மக்களுக்கே தனிமனித சுதந்திரங்களுக்கு எதிரான

அடக்குமுறையான   நாடு

அதிலிருந்து மீளணும் முதலில்......

சரி விசுகர்! அப்படி பார்க்கப் போனால் சவூதி,ஜோர்டான் போன்ற நாடுகளும் சர்வாதிகார ஆட்சி நாடுகள் தானே. அதற்கு மேற்குலகம் ஏதும் சொன்னதில்லையே?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

Source of information ? 

https://commons.wikimedia.org/wiki/File:Ethnolingusitic_map_of_ukraine.png

1 minute ago, குமாரசாமி said:

சரி விசுகர்! அப்படி பார்க்கப் போனால் சவூதி,ஜோர்டான் போன்ற நாடுகளும் சர்வாதிகார ஆட்சி நாடுகள் தானே. அதற்கு மேற்குலகம் ஏதும் சொன்னதில்லையே?

அவர்களிடம் எண்ணை உள்ளது. அவற்றை ஆட்டையை போட வேறை  Game plan.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில் நேரு தொடக்கம் ராகுல் காந்தி வரைக்கும் ஆட்சியை தொடர விரும்புகின்றார்களே. அது எந்த பட்டியலில் வரும்?😄

கருநாநிதி வம்ச அரசியலை அப்புறம் பார்க்கலாம் 😁

2 minutes ago, nunavilan said:

அவர்களிடம் எண்ணை உள்ளது. அவற்றை ஆட்டையை போட வேறை  Game plan.

அப்ப அந்த ஆட்டைய போடுற விசயம் ரஷ்யாவிட்டையும் வெனிசுலாவிட்டையும் நடக்கல....அதத்தானே சொல்ல வாறிங்க.....😄

ஈரான் கதை பெரிய கதை 😁

10 minutes ago, விசுகு said:

ரஷ்யா ஒரு  சர்வாதிகார

ஐனநாயகத்துக்கு  எதிரான

தனது மக்களுக்கே தனிமனித சுதந்திரங்களுக்கு எதிரான

அடக்குமுறையான   நாடு

அதிலிருந்து மீளணும் முதலில்......

மாற்றுக்கருத்தில்லை. 
பிரான்ஸ்,ஜேர்மனியைப்போல் ஒழுங்கான ஜனநாயக ஆட்சி வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சரி விசுகர்! அப்படி பார்க்கப் போனால் சவூதி,ஜோர்டான் போன்ற நாடுகளும் சர்வாதிகார ஆட்சி நாடுகள் தானே. அதற்கு மேற்குலகம் ஏதும் சொன்னதில்லையே?

அண்ணா பணம் என்றால் ????

Edited by விசுகு
எழுத்துப்பிழை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.