Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களே... உங்களின் தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்யுங்கள் ; ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

PicsArt_03-27-05.33.21.jpg

புலம்பெயர் தமிழர்கள், அவர்களின் தாய்நாடான

இலங்கையில் முதலீடு செய்யலாம். கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முயன்று அவர்களுக்கு பாதுகாப்போ அல்லது இதர பிரச்சினைகளோ எதுவும் இருந்து வராமல் போயிருந்தால் அவர்களை இலங்கை வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். அவர்களின் பாதுகாப்பை எமது அரசாங்கம் உறுதி செய்யும்.

இவ்வாறு நேற்றுத் தமிழன் பத்திரிகையிடம் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட நிதியமொன்று உருவாக்கம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டமை பற்றி கேட்டபோதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் இந்த நிதியம் உருவாக்கப்படுதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோசனையொன்றை முன்வைத்துள்ளது.

இதனைப் பற்றி தொடரந்து பேசி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும்.

புலம்பெயா் தமிழர்கள் எமது நாட்டில் பிறந்தவர்களே. அவர்களுக்கு இந்த நாட்டில் எதனையும் மேற்கொள்ள உரிமையுண்டு. அவர்கள் இங்கு வருறவதற்கோ அல்லது இங்கு வந்து முதலீடுகளை செயவதற்கோ அச்சப்பட தேவையில்லை. அநவர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும். அதனை உறுதி செய்யும். இதுதொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்மிடம் முன்வைக்கலாம். அவற்றை கவனிக்க அரசு தயாராக இருக்கிறது. அதன் மூலம் புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை தருவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை அரசாங்கம் உருவாக்கும் என்றாா் ஜனாதிபதி கோட்டாபய.

https://www.madawalaenews.com/2022/03/i_981.html

Edited by colomban

  • colomban changed the title to புலம்பெயர் தமிழர்களே... உங்களின் தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்யுங்கள் ; ஜனாதிபதி
  • கருத்துக்கள உறவுகள்

ம்கும் டயஸ் போரா, புலிப்பினாமிகள் என்று சொல்லுறது பிறகு உதவி செய்யுங்க முதலீடு செய்யுங்க என்று கூப்புடுறது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்கும் டயஸ் போரா, புலிப்பினாமிகள் என்று சொல்லுறது பிறகு உதவி செய்யுங்க முதலீடு செய்யுங்க என்று கூப்புடுறது. 

இன்னும் வரும்

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டுவந்து கொட்டுங்க...நாங்கள் எல்லா இடமும் புத்தரையும் வைத்து...காணியும் பிடித்திட்டம்...நீங்கள் வந்து முதலீடு செய்து அபிவிருத்தி செய்யுங்கோ...ஒரு நாள்  பிக்குமாரிடம் சொன்னால் ..83 க்கு அடுத்த  இனவழிப்பு ரெடியாகும் ..விமான நிலையத்தை திறந்துவிட்டால் கும்பாலா ஓடிவிடுவியள் ...அப்புற மென்ன நமது சொத்து..நமதுநாடு...சம் உயிருடன் இருந்தால் ..அடுத்த பேச்சு வார்த்தை ..அடுத்த முதலீடு...எமக்கு எப்படி கஸ்டம் வரும்..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

புலம்பெயர் தமிழர்கள், அவர்களின் தாய்நாடான

இலங்கையில் முதலீடு செய்யலாம். கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முயன்று அவர்களுக்கு பாதுகாப்போ அல்லது இதர பிரச்சினைகளோ எதுவும் இருந்து வராமல் போயிருந்தால் அவர்களை இலங்கை வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். அவர்களின் பாதுகாப்பை எமது அரசாங்கம் உறுதி செய்யும்.

@ரதிஅக்கா மேடைக்கு அழைக்கப்படுகிறார் இப்படி கோத்தா அழைப்பதை எப்படி என்பது ?

புலம்பெயர் தமிழரிடம் பிச்சை தான் ஏன் 52 வீத வாக்கு போட்ட சிங்களவனிடம் கேட்கலாமே ?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

புலம்பெயர் தமிழரிடம் பிச்சை தான் ஏன் 52 வீத வாக்கு போட்ட சிங்களவனிடம் கேட்கலாமே ?

பெருமாளே! நிலத்தில் இருக்கும் தமிழர்களான கருணா, பிள்ளையான், டக்ளசு, அங்கயன் இவர்களை மறந்தது ஏனோ?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Paanch said:

பெருமாளே! நிலத்தில் இருக்கும் தமிழர்களான கருணா, பிள்ளையான், டக்ளசு, அங்கயன் இவர்களை மறந்தது ஏனோ?

அவர்கள் தமிழ் பேசும் சிங்களவர்களா மாறியவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள்தான் இங்க இருந்து நக்கல் நையாண்டி விட்டுக்கொண்டிருக்கிறம்.. லைக்கா லிபரா ஓனர் மாரில் இருந்து புங்குடுதீவு வியாபாரியள்வரை இலங்கை அரசோடு இணைந்து அங்க ஒட்டிஉறவாடி முதலீடு செய்யினம்.. லைக்கா ஓனர் வன்னிக்கு அரசமரியாத ஓட கெலியிலையே போய் இறங்கினவர்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாங்கள்தான் இங்க இருந்து நக்கல் நையாண்டி விட்டுக்கொண்டிருக்கிறம்.. லைக்கா லிபரா ஓனர் மாரில் இருந்து புங்குடுதீவு வியாபாரியள்வரை இலங்கை அரசோடு இணைந்து அங்க ஒட்டிஉறவாடி முதலீடு செய்யினம்.. லைக்கா ஓனர் வன்னிக்கு அரசமரியாத ஓட கெலியிலையே போய் இறங்கினவர்..

போனவர்கள் பாதிக்கு மேல் பின்பக்கத்தில் குறி இழுப்பு வாங்கிக்கொண்டு வந்து சத்தமில்லாமல் அழும் அழுகை உங்களுக்கு கேட்காது .

சிங்களம் விழும்போதெல்லாம் தமிழனிடம் ஒட்டி உறவாடும் எழுந்தபின் தமிழனை அடிமையாய் நடாத்தும் இது பலமுறை நடந்த வரலாறு .

சிங்களம் பிச்சைக்கு வராது உங்களிடம் என்று சொல்லியவர்கள் நாளைக்கு அவன் நல்லவன் நம்புங்கள் என்று யாழில் பாடம் எடுப்பினம் .

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

PicsArt_03-27-05.33.21.jpg

புலம்பெயர் தமிழர்கள், அவர்களின் தாய்நாடான

இலங்கையில் முதலீடு செய்யலாம். கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முயன்று அவர்களுக்கு பாதுகாப்போ அல்லது இதர பிரச்சினைகளோ எதுவும் இருந்து வராமல் போயிருந்தால் அவர்களை இலங்கை வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். அவர்களின் பாதுகாப்பை எமது அரசாங்கம் உறுதி செய்யும்.

இவ்வாறு நேற்றுத் தமிழன் பத்திரிகையிடம் கருத்துத் தெரிவிக்கும்போது குறிப்பிட்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின்போது, வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட நிதியமொன்று உருவாக்கம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டமை பற்றி கேட்டபோதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது,

புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் இந்த நிதியம் உருவாக்கப்படுதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோசனையொன்றை முன்வைத்துள்ளது.

இதனைப் பற்றி தொடரந்து பேசி தீர்மானமொன்றை மேற்கொள்ள வேண்டும்.

புலம்பெயா் தமிழர்கள் எமது நாட்டில் பிறந்தவர்களே. அவர்களுக்கு இந்த நாட்டில் எதனையும் மேற்கொள்ள உரிமையுண்டு. அவர்கள் இங்கு வருறவதற்கோ அல்லது இங்கு வந்து முதலீடுகளை செயவதற்கோ அச்சப்பட தேவையில்லை. அநவர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும். அதனை உறுதி செய்யும். இதுதொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்மிடம் முன்வைக்கலாம். அவற்றை கவனிக்க அரசு தயாராக இருக்கிறது. அதன் மூலம் புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை தருவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலைகளை அரசாங்கம் உருவாக்கும் என்றாா் ஜனாதிபதி கோட்டாபய.

https://www.madawalaenews.com/2022/03/i_981.html

நிச்சயமாக. மூன்றாவது உலகப்போர் தொடங்கினால் மூட்டை முடிச்சுக்களுடன் இலங்கை திரும்புவதாய் உத்தேசம் 🤔

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

புலம்பெயா் தமிழர்கள் எமது நாட்டில் பிறந்தவர்களே. அவர்களுக்கு இந்த நாட்டில் எதனையும் மேற்கொள்ள உரிமையுண்டு.

இது சிங்கள பவுத்தநாடு, இங்கு தமிழர் வந்தேறுகுடிகள், அவர்கள் இங்கு இருக்க விரும்பினால் இருக்கலாம், அரசியல் தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றவர் உங்களை தடை செய்தவர் அழைக்கிறார்! ஓடோடி வாருங்கள், வந்து கொட்டுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நிச்சயமாக. மூன்றாவது உலகப்போர் தொடங்கினால் மூட்டை முடிச்சுக்களுடன் இலங்கை திரும்புவதாய் உத்தேசம் 🤔

மூன்றாம் உலகப்போர் என்பவர்கள் முதலில் ரஷ்யன் ஐரோப்பா இங்கிலாந்துக்கு கொடுக்கும் காஸ் சப்பிளையை நிறுத்த முடியாமல் இருக்கிறார்கள் ஏன் என்பதை சிந்திக்கணும்  இங்கு போரிஸ் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்கிறார் இல்லை அப்படியும் எரிவாயு ரஸ்யாவில் இருந்து வருகிறது. புதிய புதிய ஆய்வாளர்கள் கதையை கேட்க 10 பனடோல் வேணும் இவிங்க வேறை என்றால் பாபா வாங்க என்ற சூனிய கிழவியின் சாத்திரம் அதைக்கேட்டு இன்னும் பத்து மடங்கு உற்சாகத்துக்கு புடின் செல்வார் .

25 minutes ago, satan said:

இது சிங்கள பவுத்தநாடு, இங்கு தமிழர் வந்தேறுகுடிகள், அவர்கள் இங்கு இருக்க விரும்பினால் இருக்கலாம், அரசியல் தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றவர் உங்களை தடை செய்தவர் அழைக்கிறார்! ஓடோடி வாருங்கள், வந்து கொட்டுங்கள்!

போன வேகத்தில் திரும்ப வருவினம் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

போனவர்கள் பாதிக்கு மேல் பின்பக்கத்தில் குறி இழுப்பு வாங்கிக்கொண்டு வந்து சத்தமில்லாமல் அழும் அழுகை உங்களுக்கு கேட்காது .

பெருமாள் இந்தக் கதைகளை எங்களுக்கும் சொன்னா என்னவாம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ம்கும் டயஸ் போரா, புலிப்பினாமிகள் என்று சொல்லுறது பிறகு உதவி செய்யுங்க முதலீடு செய்யுங்க என்று கூப்புடுறது. 

ஒரு நிரந்தர தீர்வை கொடுத்தபின் கூப்பிடுறது முதலில் பயங்கரவாத தடை சட்டத்தையே எடுக்க முடியவில்லை காசமட்டும் கொடுக்க புலம்பெயர் போங்கோ .

2 minutes ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் இந்தக் கதைகளை எங்களுக்கும் சொன்னா என்னவாம்.

நம்பி சொல்லுகினம் ஊடகங்களில் போட்டு நாறடிக்கக்கூடாது இலங்கை லண்டன் தூதரகங்களில் போர் முடிந்தபின் விளக்கு ஏத்திய பாதி சீமான் சீமாட்டிகள்   முன்பு போல் வாரப்பாடு  கிடையாது பறிகொடுத்தவர்களுக்குத்தான் தெரியும் இழப்பின் வலி .😀

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

பெருமாள் இந்தக் கதைகளை எங்களுக்கும் சொன்னா என்னவாம்.

உது தெரியுமோ 
இலங்கையில் பிரமிட் வர்த்தகத்தை Revolving matrix மார்க்கெட்டிங் என்ற பெயரில் ஏகப்பட்ட பணத்தை சுருட்டி ஏப்பம் விட்ட F3C அணில் பண்டார என்றவனிடம் நமது புலம்பெயர்ஸ் லட்சக்கணக்கில் கோட்டை விட்டிருக்கினமாமே, பயல் கதிரையில் இருந்தவிடத்திலிருந்தே இலட்சக்கணக்கில் உழையுங்கள் என்று விட்ட கரடியில் இழுபட்டு தங்களது சிங்கள நண்பர்குழாம்கள் விரித்த வலையில் ஏகப்பட்ட லகரங்கள் நாமமாம்.

இத்தனைக்கும் பயல் இலங்கையில் இன்னும்  ஜம்மென்று வடக்கு கிழக்கு தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து யாவாரம் செய்யுறானாம், எவ்வளவோ முறைப்பாடு போயும் ஒன்னும் வேலைக்காகவில்லை ஏனென்றால் கட்டிங் ஏகப்பட்ட  இடங்களுக்கு பாயுதாம். சும்மா உன் குழாய் அதுதான் you tube இல் தட்டிப்பாருங்கோ ஏகப்பட்ட புலம்பல்களை பார்த்து ரசிக்கலாம்      

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பெருமாள் said:

அவர்கள் தமிழ் பேசும் சிங்களவர்களா மாறியவர்கள் .

அது உண்மைதான் பெருமாள்! ஒரு சிங்கள ஆமி மாத்தையா சொல்லிச்சு, "எங்கள் இரத்தம் தமிழரிலும் ஓடுது" எண்டு. அது யார்? எவர்? எண்டு இப்ப தெரியவந்திருக்கு.?? 🧐

  • கருத்துக்கள உறவுகள்

கறக்குமட்டும் மாத்தையா.... மாத்தையா! என்று வழிவான்கள், பிறகு பாக்கவேண்டும் பயமுறுத்தல் ஆரம்பிக்கும், புலனாய்வுகள் வரத்தொடங்கும் அதோடு துண்டைக்காணோம், துணியைக்காணோம் உயிர் தப்பினால் போதும் என்று எதுவும் பேசாமல்  பறப்பினம். எத்தனை தடவை பட்டாலும் அறிவு வராது நம்மவர்க்கு!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

உது தெரியுமோ 
இலங்கையில் பிரமிட் வர்த்தகத்தை Revolving matrix மார்க்கெட்டிங் என்ற பெயரில் ஏகப்பட்ட பணத்தை சுருட்டி ஏப்பம் விட்ட F3C அணில் பண்டார என்றவனிடம் நமது புலம்பெயர்ஸ் லட்சக்கணக்கில் கோட்டை விட்டிருக்கினமாமே, பயல் கதிரையில் இருந்தவிடத்திலிருந்தே இலட்சக்கணக்கில் உழையுங்கள் என்று விட்ட கரடியில் இழுபட்டு தங்களது சிங்கள நண்பர்குழாம்கள் விரித்த வலையில் ஏகப்பட்ட லகரங்கள் நாமமாம்.

இத்தனைக்கும் பயல் இலங்கையில் இன்னும்  ஜம்மென்று வடக்கு கிழக்கு தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து யாவாரம் செய்யுறானாம், எவ்வளவோ முறைப்பாடு போயும் ஒன்னும் வேலைக்காகவில்லை ஏனென்றால் கட்டிங் ஏகப்பட்ட  இடங்களுக்கு பாயுதாம். சும்மா உன் குழாய் அதுதான் you tube இல் தட்டிப்பாருங்கோ ஏகப்பட்ட புலம்பல்களை பார்த்து ரசிக்கலாம்      

நல்ல காலம் நான் தப்பீட்டன்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

கறக்குமட்டும் மாத்தையா.... மாத்தையா! என்று வழிவான்கள், பிறகு பாக்கவேண்டும் பயமுறுத்தல் ஆரம்பிக்கும், புலனாய்வுகள் வரத்தொடங்கும் அதோடு துண்டைக்காணோம், துணியைக்காணோம் உயிர் தப்பினால் போதும் என்று எதுவும் பேசாமல்  பறப்பினம். எத்தனை தடவை பட்டாலும் அறிவு வராது நம்மவர்க்கு!

சென்ற கிழமை ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பில்….
புலம் பெயர் தமிழருடன் உறவை ஏற்படுத்தி தர, தான் தயாராக இருப்பதாக…
சுமந்திரன் கூறியுள்ளாரே….

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடு வாழ் தமிழர்கள் இலங்கையில் முதலிடலாமா?

2022-03-27_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.jpg
 
நெசவு செய்யும் திறமைமிக்க தொழிலாளி ஒருவர் தனது வீட்டில் ஒரு நெசவுத்தறி போட கடன் கேட்டால் அவருக்கு கடன் கொடுக்க நிதி நிறுவனங்கள் முன்வரலாம். இன்னொரு நெசவுத் தொழிலாளி தனது வருமானத்தில் தினமும் மது அருந்தி கைநடுக்கம் ஏற்பட்ட பின்னர் அவரால் போதிய அளவு நெய்ய முடியாத நிலையில் அவரது வருமானம் குறைந்து உணவிற்கு திண்டாடும் போது அவர் தனக்கு கடன் தரச் சொல்லி கேட்டால் யாரும் கடன் கொடுக்க மாட்டார்கள். இலங்கையும் இனக்கொலைப் போருக்கு அளவிற்கு மிஞ்சி கடன் பட்டு பின் பட்ட கடனுக்கு வட்டி கொடுக்க புதிய கடன் பட்டு விட்டு மேலும் கடன் பட முடியாத நிலையில் அங்கு வந்து முதலீடு செய்யுங்கள் என்று சொன்னால் இனக்கொலைக்கு உள்ளான இனத்தைச் சேர்ந்தவர்களை கேட்க முடியுமா? சொல்லுவார் சொல்ல கேட்ப்பார்க்கு மதியென்ன?

யோக்கியன் வாறான் செம்பை எடுத்து வை

எனக்கு தெரிந்த ஒருவர் இலங்கை நாணயம் பெறுமதி இழந்துள்ளமையால் அங்கு இப்போது முதலீடு செய்வது உகந்தது என எண்ணி முதலீடு செய்வது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கையில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் புலம்பெயர்ந்த தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தான் பாலமாக இருக்கத் தயார் என அறிவித்தவுடன் தன் முடிவை மாற்றிக் கொண்டார். பாலமே இந்தளவு கேவலமானதாக இருக்கையில் அதை நம்பி பயணித்தால் என்ன நடக்குமோ என அவர் அஞ்சுகின்றார். 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றி விட்டு அதற்கும் அப்பால் சென்று இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு வழங்கினால் புலம்பெயர் தமிழர்கள் உதவுவார்கள் என்றாராம் சுமந்திரன். 2009 நடந்த போரின் போது மருத்துவமனைகளும் சட்ட பூர்வமான குண்டு வீச்சு இலக்கு எனச் சொல்லிய கோத்தபாய ராஜபக்ச கூட்டிய கூட்டத்தில் தான் சுமந்திரன் இந்தக் கருத்தை முன்வைத்தார். பாலம் மட்டும் கேவலமானதல்ல பாலம் சொல்லும் படகான 13 ஓட்டை மிகுந்தது அதை நம்பி யாரையா இறங்குவார்? புலிகள் இனச்சுத்தீகரிப்பு செய்தனர் ஆனால் சிங்களவர் இனக்கொலை செய்தனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்ற யோக்கியரின் கூற்றை நம்பி யார் இலங்கையில் முதலீடு செய்வார்.

விடுதலை வேட்கைக்கு எதிராக சுமந்திரனின் சதியா?

இலங்கையில் தமிழரகளுக்கு சுதந்திரம் வழங்காமல் சிங்களத்தால் இழுத்தடிக்க முடியாது. சிங்களத்தின் அடக்கு முறைக்கு எதிராக தமிழர்கள் நிச்சயம் பொங்கி எழுவார்கள். தந்தை செல்வாவின் போராட்டத்தை அடக்குமுறையால் இல்லாமல் செய்தார்கள். பின்ன அதிலும் பார்க்க வலிமை மிக்க போராட்டம் வந்தது. அது போல சிங்களத்தை சிதறடிக்கக் கூடிய ஒரு போராட்டம் இனி எந்த நேரத்திலும் ஆரம்பமாகலாம். அடுத்த தீபாவளி, அடுத்த பொங்கல், அடுத்த ஆடி அமாவாசை எனப் பலவற்றைக் கேட்டு விரக்தியடைந்திருக்கும் மக்கள் செய்யும் கிளர்ச்சி அபாயகரமானதாக இருக்கும். புலம் பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்தால் அம் முதலீடு மக்கள் கிளர்ச்சிக்கு எதிரான அடக்கு முறையால் அழிக்கப்படும். அதனால் மக்கள் கிளர்ச்சிக்கு புலம் பெயர் தமிழர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என சிங்களமும் சுமந்திரனும் கணக்குப் போடுகின்றார்கள். அடுத்த விடுதலைப் போராட்டத்திற்கு தமிழர்கள் உதவி செய்யாமல் தடுப்பதற்காக சுமந்திரன் செய்யும் சதிதான் வெளிநாடு வாழ் தமிழர்களை முதலீட்டுக்கு அழைக்கின்ற செயலா?வ்

ஒரு நாளில் ஒரு இலட்சம் டொலர் இழப்பீடா?

இலங்கை நாணயத்தின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் ஒரு ஒருவர் ஒரு மில்லியன் டொலரை முதலீடு செய்யும் போது முதலில் டொலரை ரூபாவாக மாற்றும் போது ஒரு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அதன் பின்னர் ரூபாவின் பெறுமதி மேலும் பத்து விழுக்காடு வீழ்ச்சியடைந்தால் முதலிட்டவருக்கு ஒரு இலட்சம் டொலருக்கு மேல் இழப்பீடு ஏற்படும். தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் இனி வீழ்ச்சியடைய இடமில்லை. இலங்கையில் செய்த முதலீட்டை இலகுவில் மீண்டும் வெளிநாட்டுக்கு கொண்டு வர முடியாது. இலங்கைப் பொருளாதாரம் இனி மீழவும் எழும் (Rebound) என யாரும் சொல்லாத நிலையில் நிதித்துறையில் அறிவில்லாத சுமந்திரன் எந்த ஒரு நிதி ஆலோசனையும் பெறாமல் எப்படி புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் செய்யும் முதலீட்டிற்கான பாலமாக தன்னை முன்னிறுத்த முடியும்?

தரம் தாழ்த்திய நிறுவனங்கள்

இலங்கையில் ஏற்கனவே முதலீடு செய்த பன்னாட்டு தனியார் முதலீட்டாளரகள் இலங்கைக்கு கொடுத்த கடனை எப்படி மீளப் பெறுவது என்பது தொடர்பாக பன்னாட்டு சட்ட நிறுவனமான White & Case LLP என்னும் பன்னாட்டு சட்ட நிறுவனத்தை அணுகியுள்ளனர். இலங்கையில் பொருளாதார சூழலை அடிப்படையாக வைத்து. S&P, Fitch, Moody ஆகிய நிறுவனங்கள் இலங்கைய தரம் தாழ்த்திக் கொண்டே இருக்கின்றன. அவை இன்னும் இலங்கையின் தரத்தை மீளவும் உயர்த்த முன்னர் சுமந்திரன் ஏன் அங்கு முதலீடு செய்வது பற்றி சிந்திக்கின்றார்? பிரித்தானிய தொழிற்கட்சியைச் சேர்ந்த தமிழர் ஒருவர் சுமந்திரனைச் சந்திக்கும் போது இலங்கைக்கு ஜீஎஸ்பி+ வரிச்சலுகையை நிறுத்தும் படி மேற்கு நாட்டு அரசுகளிடம் பரப்புரை செய்வது பற்றி பேசிய போது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் தான் செய்ய மாட்டேன் எனச் சொல்லிய சுமந்திரன், மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்க போராடிய சுமந்திரன் இப்போது இலங்கைக்கான முதலீட்டு தரகராக செயற்படுகின்றாரா?

அரசியல் உறுதிப்பாடில்லாத இலங்கை

ஒரு நாட்டில் முதலீடு செய்வதாயின் அங்கு அரசியல் உறுதிப்பாடு இருக்க வேண்டும். இலங்கையில் பொருட்கள் விலை ஏற ஏற மக்கள் அரசுக்கு எதிராக போராடுவது அதிகரிக்கும். அத்துடன் 13-ம் திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றினால் அதற்கு எதிராக பௌத்த அமைப்புக்களும் பிக்குகளும் ஆட்சிக்கு எதிராக கொதித்து எழுவர். வலிமையற்று தலையெடுக்க முடியாமல் இருக்கும் எதிர்க்கட்சிகள் இனவாத தீயை மூட்டுவார்கள். கடந்த கால வரலாற்றைப் பார்க்கும் போது ஆட்சியாளர்களை சுட்டுக் கொல்லவும் சிங்களவர்கள் தயங்க மாட்டார்கள். அதனால் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டு படைத்துறையினர் ஆட்சியைக் கைப்பற்றும் சாத்தியம் உண்டு. இத்தகைய இடர்(Risk) மிகு சூழலில் எந்த முட்டாள் இலங்கையில் முதலீடு செய்ய பாலமாக இருப்பான்?

பணச்சலவைக்கு வழியா?

2009 ஆண்டில் நடந்த போரின் பின்னரும் வெளிநாடுவாழ் தமிழர்களை இலங்கையில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப் பட்டது. இலங்கையில் பெருந்தொகை பணத்தைக் கொள்ளை அடித்து வைத்திருந்தவர்கள் அவற்றை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கு ஒரு வழியாக அது இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது. அதன் படி வெளிநாடு வாழும் இலங்கையர் ஒரு மில்லியன் டொலரை வெளிநாட்டு வங்கி ஒன்றில் இலங்கையில் கொள்ளை அடித்தவர்களின் பெயரில் வைப்பிலிட்டால் அதற்கு உரிய இலங்கை ரூபாக்களை கொள்ளையர்கள் அந்த வெளிநாட்டுப் பேர்வழியின் பெயரில் இலங்கையில் வைப்பிலிடுவார்கள். ராஜபக்சேக்களின் வெளிநாட்டு சொத்து பற்றி இந்த இணைப்பில் காணலாம்:

https://www.theguardian.com/world/2015/mar/20/sri-lanka-says-mahinda-rajapaksa-officials-hid-more-than-2bn-in-dubai

விளடிமீர் புட்டீனினதும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எதிராக பொருளாதார தடை என்னும் பெயரில் அவர்களின் சொத்துக்களை முடக்குவது போல் இலங்கை ஆட்சியாளர்களுக்கும் நடக்கலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இப்போது இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் இருக்கும் அவர்களது பணத்தை உள்நாட்டுக்கு கொண்டு வருவதற்கு இப்போது இன்னொரு முதலீட்டு அழைப்பு விடப்படுகின்றதா? அதற்கான தரகர் வேலையை பார்ப்பவர் யார்?

இலங்கை நடுவண் வங்கியும் மூலதனக் கணக்கும்

இலங்கை நடுவண் வங்கி இலங்கையில் இருந்து மூலதனம் வெளியேறுவதற்கு எதிராக பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இலங்கையில் முதலிடுபவர்கள் தேவை ஏற்படும் போது அந்த முதலீட்டை வெளியே எடுத்து வர முடியாது. திரவத்தன்மை (liquidity) குறைந்த முதலீட்டை சுமந்திரனின் முட்டாள்தனமான ஆலோசனையைக் கேட்ட்டு யாரும் செய்ய மாட்டார்கள்.

தமிழர்களுக்கு பாதுகாப்பற்ற இடத்தில் அவர் முதலீட்டுக்கு?

இனக்கலவரம் என்று அவ்வப்போது தோற்றுவித்து தமிழர்கள் சொத்தை கொள்ளை அடிப்பதையும் அழிப்பதையும் சிங்களவர்கள் தங்கள் பொழுது போக்காக கொண்டுள்ளனர். தமிழர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நாட்டில் அவர்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க அறிவுகெட்ட சுமந்திரனால் முடியுமா? இலங்கை அரசு தமிழர்களின் முதலீட்டை அரசுடமையாக்க மாட்டாது என சிங்களத்தின் வால் பிடியான சுமந்திரனால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா? 

பழைய சத்தியஜித் ராயின் திரைப்படமொன்றில் ஒரு செல்வந்த வயோதிபர் கடும் நோய் வாய்ப்பட்டுவிட்டார். மருத்துவர் இனி ஆள் தப்பாது என்று சொல்லி விடுவார். அந்த நிலையில் அவரது குடும்பத்தினர் சோதிடரை அணுகுவார்கள் அவர் பார்த்துவிட்டு இவருக்கு ஆயுள் முடிந்து விட்டது ஆனால் ஒரு வழி இருக்கிறது என்றார். குடும்பத்தவர்கள் ஆவலுடன் என்ன எனக் கேட்கும் போது சோதிடர் சாதகத்தில் நல்ல மாங்கல்ய வலிமையுள்ள ஒரு பெண்ணை இவருக்கு திருமணம் செய்து வைத்தால் அந்தப் பெண்ணின் பலனால் இவர் தப்புவார் என்பார்கள். அது போலத்தான் எந்த நேரமும் மண்டையைப் போடலாம் என்ற நிலையில் இருக்கும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு சுமந்திரன் சொல்லும் அறிவுரை. ஆனால் புலம் பெயர் தமிழர்கள் வாழ வழியற்று இருக்கும் ஏழைப் பெண்களல்ல.

https://www.veltharma.com/2022/03/blog-post_28.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கறக்குமட்டும் மாத்தையா.... மாத்தையா! என்று வழிவான்கள், பிறகு பாக்கவேண்டும் பயமுறுத்தல் ஆரம்பிக்கும், புலனாய்வுகள் வரத்தொடங்கும் அதோடு துண்டைக்காணோம், துணியைக்காணோம் உயிர் தப்பினால் போதும் என்று எதுவும் பேசாமல்  பறப்பினம். எத்தனை தடவை பட்டாலும் அறிவு வராது நம்மவர்க்கு!

கட்டுநாயக்க அடியின் போதும் அக்கினி கீழ படை நடவடிக்கையின் பின்பும் சிங்களம் எப்படி கெஞ்சி நடித்தார்கள் என்பதை ஒருகனம்  நினைத்து பாருங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, பெருமாள் said:

ஒரு நிரந்தர தீர்வை கொடுத்தபின் கூப்பிடுறது முதலில் பயங்கரவாத தடை சட்டத்தையே எடுக்க முடியவில்லை காசமட்டும் கொடுக்க புலம்பெயர் போங்கோ .

உண்மையில உது உத்தியோகபூர்வ செய்தியோ?

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

உண்மையில உது உத்தியோகபூர்வ செய்தியோ?

மடவளவை தமிழரை பற்றி செய்தி போடுவது என்றால் ஒன்று தமிழரை பற்றிய கேவலமான செய்திகள் என்றால் போடுவினம் இல்லை எரிச்சலில் போடுவினம் இந்த செய்தி இரண்டாவது ரகம் .

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

சென்ற கிழமை ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பில்….
புலம் பெயர் தமிழருடன் உறவை ஏற்படுத்தி தர, தான் தயாராக இருப்பதாக…
சுமந்திரன் கூறியுள்ளாரே….

தமிழரின் விடுதலைபோராட்டத்தை வெறுப்பவர், சிங்களவரோடு வாழ்வதில் மகிழ்ச்சி கொள்பவர், ஐ. நா. சபையில் சிங்களத்துக்கு கால அவகாசம் வாங்கி கொடுப்பதில் முன்னிற்பவர், தமிழருக்கு நடந்த அநீதிதிகளை மூடி மறுப்பவர், வரிச்சலுரையை குறைத்தால் சிங்கள மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கவலை கொள்பவர், தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசும்போது பொருளாதாரத் தடை, சிங்களம் போடும்போது வாய் மூடி ரசித்தவர், தமிழரை பொன்சேகாவுக்கு வாக்களிக்கும்படி உந்தியவர். இன்று பொன்சேகாவே தமிழர்; தாம் செய்ததை குற்றம் என்று சொல்லவில்லை என்கிறார். ஏற்கெனவே முதலிட்டவர்கள் மூட்டையை கட்டிக்கொண்டு கால்தெறிக்க  ஓடிவிட்டார்கள். தமிழனை முறிக்கும் பயங்கரவாத சட்டம் இன்னும் அகற்றப்படவில்லை, தமிழருக்கு கொஞ்ச நஞ்ச அதிகாரமாவது வழங்கும் பதின்மூன்றாம் திருத்த சட்டம் அமுல்படுத்தப்படவில்லை, எந்தவித விட்டுக்கொடுப்புமில்லாமல்    இருக்கும் அரசாங்கத்துக்கு எதை நம்பி, எந்த தைரியத்தில்? முண்டுகொடுக்கும் முகவரை நம்பி இறங்குபவர்கள்;  அது அவர்களின் பேராசை முட்டாள்தனம் எதுவென்று சொல்வது? சிங்களத்துக்காக எதுவும் செய்வார்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, satan said:

 நன்றி ஐயா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.