Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ஷக்களுக்கெதிரான சிங்களவரின் ஆர்ப்பாட்டங்கள் தமிழர் தொடர்பான அவர்களின் மனமாற்றத்தினைக் காட்டுகின்றனவா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷக்களுக்கெதிரான சிங்களவரின் ஆர்ப்பாட்டங்கள் தமிழர் தொடர்பான அவர்களின் மனமாற்றத்தினைக் காட்டுகின்றனவா ?

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மிகவும் அசெளகரியமான, வாழ்வாதாரத்தினை முற்றாகப் பாதித்திருக்கும் நிலை இலங்கை முழுதும் உள்ள சிங்கள மக்களை வீதிக்கு இறக்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரமும், அடிப்படை வசதிகளும் அதளபாதாளத்திற்குச் சென்றுகொண்டிருப்பதும், ஆனால் இதுபற்றிய பிரக்ஞை ஏதுமின்றி ஆளும் ராகபக்ஷ குடும்பம் தனது அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும், நாட்டின் மீதான தமது குடும்பத்தின் பிடியினைத் தக்கவைப்பதிலும் தனது முழுக் கவனத்தையும் வளங்களையும் குவித்துவருவது சாதாரன அடிமட்ட சிங்கள மக்கள் முதல் நடுத்டர மற்றும் மேற்தட்டு வர்க்க மக்கள்வரை பலரையும் சினங்கொள்ள வைத்திருக்கிறது. இதனால் நாள்தோறும் அரசுக்கெதிரான போராட்டங்களில் கலந்துகொள்ளும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதுடன், எந்த அரசியல்க் கட்சிகளினதும் பின்புலமோ, ஆதர்வோ இன்றியே இவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட நாள்முதல் இன்றுவரை பல செய்தி ஊடகங்களும், தனி நபர் விமர்சகர்களால் நடத்தப்பட்டு வரும் யூடியூப் ஊடான விமர்சனங்களையும் நான் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறேன். அரசுக்கெதிரான இந்த விமர்சனங்களை முன்வைப்போர் ஒன்றில் நேரடியாகவே கோத்தாபயவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டினை எடுத்தோர் அல்லது கோத்தாவின் அதிதீவிர சிங்கள பெளத்த நிலைப்பாட்டினை ஆதரித்து அவரை பதவியில் அமர்த்தி அழகுபார்த்துவிட்டு, சீ சீ இந்தப்ப்ழம் புளிக்கிறது என்று இன்று கோத்தாவை எதிர்ப்போர் அல்லது, இவர்கள் இருவருமே இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிஉஅ எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவானவர்களால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவை எல்லாவற்றிலும் ஒரு விடயம் மிகவும் ஆணித்தரமாக குறிப்பிடப்பட்டும், அதுகுறித்து தமக்கிடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லாமலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அதுதான் வடக்குக்கிழக்கில் நடந்த யுத்தமும், அதனை கோத்தாபய தலைமையில் ராணுவம் நடத்திய விதமும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் தொடர்பாக இந்த அனைவருமே ஒரேவகையான பார்வையினைத்தான் கொன்டிருக்கிறார்கள் என்பது அவர்களின் விமர்சனங்களிலிருந்து மிகவும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, கோத்தபாய செய்த யுத்தம் சரியானது. அவரால் நன்றாக யுத்தம் செய்யமுடியும். ஆனால், அவரால் அரசியல் அவ்வாறு செய்யமுடியாது என்பதே அவர்களின் அனைவரினதும் பொதுவான விமர்சனம். 

உதாரணத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடக பொறுப்பாளராகக் கடமையாற்றிய, பொலொன்னறுவயைச் சேர்ந்த பாரத தென்னாக்கோன் என்பவர், கோத்தாவுக்கெதிரான தனிப்பட்ட பகையினைக் கொண்டிருக்கிறார். இதனாலேயே, கோத்தாபய ஆட்சிக்கு வந்தவுடன் உயிர் அச்சம் காரணமாக பிரான்ஸின் பரீசுக்கு அடைக்கலம் தேடி வந்து வாழ்ந்துவருகிரார். அவரின் காணொளிகளைத் தொடர்ச்சியாக நான் பார்த்து வருகிறேன். அவரின் மிக அண்மைய காணொளி ஒன்றில் அவர் பிவருமாறு கூறுகிறார், 

"கோத்தா பிரபாகரன் போன்றவர்களுடன் யுத்தம் செய்வதில் கெட்டிக்காரர். அவரால் பிரபாகரனுடனான யுத்தத்தினை எப்படி வெற்றிகொள்ளமுடியும் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது. அவர், அந்தன்யுத்தத்தினை திறம்படவே செய்துமுடித்தார் என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரால் காந்தீய முறையில் நடக்கும் போராட்டங்களைக் கையாள்வதில் திறமையில்லை. பிரபாகரனின் துப்பாக்கிகளுக்குப் பதில்சொல்லத் தெரிந்த கோத்தாவுக்கு காந்தியின் வழியில் மக்கள் போராடும்போது பதில் சொல்லத் தெரியவில்லை. ஆகவேதான் அவர் முழிக்கிறார்"....என்று கூறுகிறார்.

இன்னோரிடத்தில், "பரந்தனிலோ, கிளிநொச்சியிலோ யுத்தத் தாங்கிகளையும், ஆயிரக்கணக்கான ராணுவத்தினரையும் குவித்துச் சண்டை செய்வதுபோல, கொழும்பில் மக்கள் வாழும் பகுதிகளில் உங்களின் ராணுவ வாகனங்களையும், ராணுவத்தினரையும் குவித்து வைத்திருப்பது ஏன்?" என்று கேள்வியெழுப்புகிறார்.

மேலும் பாராளுமன்ற தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை மிரட்டும் வகையில் இலக்கத்தகடுகளில்லாத உந்துருளிகளில் துப்பாக்கிகளை ஏந்தியவாறும், முகமூடிகளை அணிந்தும் கறுப்புச் சீருடைகளில் வலம் வந்த ராணுவத்தின் கொலைப்படைபற்றிக் கூறும்போது, "இது ஒன்றும் வடக்குக் கிழக்கு இல்லை என்பதை கோத்தாவோ அல்லது இவர்களை இங்கே அனுப்பிவைத்தவர்களோ நினைவில் வைத்திருப்பது நல்லது, இது மக்கள் வாழும் ஒரு நகர்ப்பகுதி, இங்கே இந்த வெருட்டல்கள் எல்லாம் வேண்டாம்" என்று கூறுகிறார். அப்படியானால், வடக்குக் கிழக்கில் நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்யுங்கள், அது எங்களுக்குப் பிரச்சினையில்லை என்பதுதானே இவர் கூறவரும் விடயம்? 

ஆகவே இவரைப் பொறுத்தவரை, யுத்தம் நடைபெற்றது பிழையில்லை, அதனைக் கோத்தா நடத்திய விதமும் பிழையில்லை, அதேபோல பரந்தனிலும், கிளிநொச்சியிலும் தாங்கிகளைக் கொண்டுயுத்தம் செய்ததும் பிழையில்லை, ஏனென்றால் அங்கு மக்கள் வசிக்கவில்லை, வசித்ததெல்லாம் புலிப் பயங்கரவாதிகளே என்று அவர் கூறுகிறார்.

சரி, இவர்தான் இப்படியென்றால், இன்னொருவர் இருக்கிறார். அவரது பெயர் சேபால் அமரசிங்க. மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே இவரது விருப்பம்.அதனால் கோத்தாவையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் கடுமையாகச் சாடி விமர்சித்து வருகிறார். அவர் அடிக்கடி கூறும் ஒரு விடயம் தான், "இப்போது கொழும்பில் குண்டுகள் வெடிப்பதில்லை.  யுத்தத்தினை நாம் வெற்றிகரமாக முடித்ததனால், நிம்மதியாக வாழ்கிறோம். பிரபாகரனிடமிருந்து மீட்ட நாட்டை இன்று ராஜபக்ஷேக்கள் தின்று தீர்க்கிறார்கள்" என்பதே அவரின் புலம்பல்.

அடுத்தவர் சுதத் எனப்படும் அவுஸ்த்திரேலியாவில் தற்போது வசிக்கும் ஒரு பாடகர். அவுஸ்த்திரேலியாவின் பேர்த் நகரில் வாழும் இவர் ஒரு மிகப்பெரும் சிங்கள பெளத்த இனவாதி. 2019 இல் கோத்தா ஆட்சிக்கு வரும் முயற்சியில் மிகக்கடுமையாக உழைத்தவர். தன்னையொத்த சுமார் 150 சிங்களப் பாடகர்களைக் கொண்டு கோத்தாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கென்று சிங்கள பெளத்த தேசியத்தை முன்னிறுத்தி எழுச்சிமிக்க பல பாடல்களைப் பாடி வெளியிட்டவர். கோத்தாவின் பிரச்சார மேடைகளில் தமிழர்களையும், அவர்களின் அரசியலையும் மிகக் கேவலமாக விமர்சித்து, "பயங்கரவாதிகள், பறத் தமிழ் சுமந்திரன், எமது நாட்டைக் கூறுபோட நினைக்கிறார்கள்" என்று பலமுறை கர்ஜித்தவர். ஆனால் இன்று, கோத்தாவுடனான இவரது உறவு கசத்துவிட்டது இவருக்கு. அதனால், மீண்டும் கோத்தாவை வீட்டிற்கு அனுப்புவேன் என்று கூறிக்கொண்டு சூறாவளிச் சுற்றுப்பயணங்களை அவுஸ்த்திரேலியாவிலும், இலங்கையிலும் செய்துவருகிறார். ஆனால், இந்த பிரச்சாரத்தில் மிகவும் கவனமாக கோத்தாவை மட்டுமே குற்றவாளியாக்கும் இவர், ராணுவ தளபதியாகவிருந்த சரத்தையோ அல்லது சவேந்திர சில்வா உட்பட்ட ஏனைய பல போர்க்குற்ரவாளிகளையோ மிகவும் மரியாதையுடனே அழைக்கிறார். புலிப்பயங்கரவாதம் என்றும், இது சிங்கள பெளத்த நாடென்றும் அடிக்கடி கூறும் இவர் கூட, யுத்தம் நடந்த விதத்தையும், அதனைச் செய்த ராணுவத்தினரையும் வெகுவாக ஆதரிப்பதுடன், கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் மக்கள் பற்றி ஒரு வார்த்தைதன்னும் பேசியதில்லை.

Edited by ரஞ்சித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த யூ டியூப் காணொளிகளூக்கு அப்பால், செய்திகளில் தொடர்ச்சியாகக் காண்பிக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்ட நிகழ்வுகளையும் நான் பார்ப்பதுண்டு.

அதன்படி, தற்போது கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி குறித்து பல சிங்களச் செய்தி நிறுவனங்களும், தனிப்பட்டவர்களும் பல காணொளிகளை வெளியிட்டு வருகிறார்கள். 

 அவ்வாறானதொரு நீண்ட காணொளியொன்றினை இன்று பார்த்துக்கொண்டிருந்தேன். பல முன்னணி நடிகர்கள், கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்கள் அரச - தனியார் ஊழியர்கள் என்று மிகப்பெரும் மக்கள் கூட்டமொன்று கோத்தாபாயவுக்கு எதிராக, "கோத்தா - வீட்டுக்குப் போ", "கோத்தா - ஒரு விசரன்", "எங்களுக்கு காஸ் இல்லை, பெட்ரொல் இல்லை, பாணில்லை", "நீ தவாறான சந்ததியுடன் விளையாடுகிறாய்", "எங்களுக்கு கோத்தா வேண்டாம்" என்று கோஷமிட்டவாறு, இன்னும் பல பதாதைகளைத் தாங்கியவாறும் பவனி வருகிறார்கள். 

நான் இந்த கூட்டத்திடையேயும், இந்த பல்லாயிரக்கணக்கான பதாதைகளிலும் தேடிய விடயம் ஒன்றுதான், அதாவாது ஒருவராவது எமக்கு நடந்த அநியாயத்திற்காக நீதி கேட்கிறார்களா என்பதுதான் . 
இந்த லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தில் இருவர் மட்டுமே இந்த பதாதைகளைத் தாங்கியிருந்தனர். அதில் ஒரு பதாகை, "2009 இல் வடக்கிலிருந்து நீ கடத்திச் சென்ற எமது உறவுகள் எங்கே கோத்தா" . இரண்டாவது, "போர்க்குற்றவாளிகளை நீதியின் முன்னால் நிறுத்து" எனும் முகவரியில்லாத கோரிக்கை.

இவை இரண்டையும் தவிர எமக்கு நடந்த மிகப்பெரும் அழிவுபற்றி வேறு எதையுமே நான் காணவில்லை.

இதே காணொளியில் பல பிரபலங்கள் சில நிமிடங்களாவது பேசினார்கள். அதில் ஒருவர், இவர் தனியார் தொலைக்காட்சியொன்றின் அரசியல் விமர்சகர் போலத் தெரிந்தது. அவர் பின்வருமாறு கூறுகிறார், "இங்கே கோத்தாவின் அரசுக்கு எதிராக பல லட்சம் மக்கள் இன, மத, கட்சி பேதமின்றி கலந்துகொண்டிருக்கிறார்கள். எமக்குள் சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் என்று வேறுபாடில்லை. நாம் அனைவரும் சிறிலங்காவின் பிள்ளைகள். இந்த நாட்டில் பிறந்தவர்கள். எம்மைக் காக்க ராணுவத்தினரும் பொலீஸாரும் இங்கே கூடியிருக்கிறார்கள். ஆகவே நாம் அவர்களை மரியாதையுடன் நடத்துவது அவசியம்.எக்காரணம் கொண்டும் நாம் அவர்களைத் தாக்கக் கூடாது. இந்த நாட்டைப் பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்றி எம்மிடம் கொடுத்த உத்தமர்கள் அவர்கள்தான், ஆகவே அவர்களை நாம் மரியாதையுடன் நடத்துவோம். இவர்களும் தமது சீருடைகளைக் களைந்துவிட்டு எம்முடன் சேரும் நாள் தொலைவில் இல்லை" என்று பேசிக்கொண்டுபோனார். 
இவர் பேசும் போது எனது மனதில் தோன்றியது ஒன்றுதான். 2009 இல், இதேபோன்றதொரு கடற்கரையில் இதேயளவு மக்கள் கூட்டத்தை வெறும் ஒறுகிலோமீட்டர் சதுர பரப்பளவு மட்டுமே கொண்ட ஒரு இடத்தில் அடைத்து, வானிலிருந்தும், பல்குழல் எறிகணைச் செலுத்திகளிலிருந்தும், கடலில் வலம்வந்த பீரங்கிக் கப்பல்களிலிருந்தும், 50,000 ராணுவத்தினரின் கையிலிருந்த துப்பாக்கிகளிலிருந்தும் உயிர்குடிக்க ஏவப்பட்ட குண்டுகளால் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை இதே ராணுவம் தானே கொன்றுகுவித்தது? அந்த ராணுவத்தைத்தானே இவர் உத்தமர்கள் என்றும், நாட்டை மீட்ட காவலர்கள் என்றும் போற்றுகிறார் ?

அப்படியானால், இவர்கள் இபோது கூறும் "நாம் அனைவரும் சிறிலங்காவின் புதல்வர்கள், எமக்குள் இன மட்ட பேதமில்லை. நாம் அனைவரும் ஒரு நாட்டின் பிள்ளைகள்" என்கிற வெற்றுக் கோஷங்கள் எல்லாம் தமக்கு இன்று ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தம்மை மீட்க எமது உதவியையும் கோருகிறார்கள் என்பதுதானே? 

ஒரு கதைக்கு, நாளையோ மறுதினமோ கோத்தாவும் மகிந்தவும் தாம் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தையெல்லாம் கொண்டுவந்து நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நிமிர்த்தினால் இந்த "இனமத பேதமில்லை" கோஷமும், "ஒரு நாட்டின் பிள்ளைகள் கோஷமும்" என்னவாகும்?  இன்று தமது நண்பர்களாகத் தெரியும் தமிழர்களும் முஸ்லீம்களும் நாளை என்னாவார்கள்? ஆகவே இதெல்லாம் "ஆறு கடக்கும்வரை அண்ணனும் தம்பியும், கடந்தபின் நீ யாரோ , நான் யாரோ" என்பதுதானே? அல்லது, இன்றிருக்கும் பொருளாதார இக்கட்டு நிலை ஏற்பட்டிருக்கவேயில்லையென்றால், ஒரு பொதுப் பேரணியில் தமிழர் சார்பாகப் பேசவோ அல்லது ஒரு பதாகையையாவது ஏந்தவோ எவரும் துணிந்திருப்பார்களா? 

இந்தப்ப் போராட்டங்களின் போது, இதேவகையான மனோநிலையே பெரும்பாலும் சிங்களவர்களிடம் காணப்படுகிறது. கோத்தாவின் மீதான எதிர்ப்பேயன்றி, தமிழர் சார்பான மனமாற்றத்தையோ அல்லது தமிழர்களுக்கெதிரான இனவழிப்பைக் ஏற்றுக்கொண்டு கண்டிக்கும் மனோநிலை இவர்கள் எவரிடமும் காணவில்லை. எல்லோருமே 2009 இல் இனவழிப்பு என்று ஒன்று நடக்கவேயில்லை என்பதுபோல பாசாங்கு செய்கிறார்கள். அதேவேளை எல்லோருமே தவறாது கூறும் விடயமான "கோத்தா ஒரு சிறந்த போர் வீரன், ராணூவத்தினர் இந்த நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டுக் கொடுத்தார்கள்" எனும் கருத்து, அப்போரோடு கொன்றழிக்கப்பட்ட இன்னும் ஒன்றரை லட்சம் அப்பாவிகள் குறித்து பேசுவதை முற்றாகவே விலக்கி வருகிறது.

இவர்கள் மனம் மாறப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரஞ்சித் said:

உண்மை ரொம்ப சரி 👍

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பௌத்த பேரினவாதம் ஒருபோதும் திருந்தப்போவது இல்லை. அது என்றுமே திருந்தாது. அது திட்டமிடப்பட்டு நன்கு வடிவமைக்கப்பட்டதொன்று. 

தமிழ் இளைஞர்களின் குருதியில் மண் நனையட்டும் தமிழ் பெண்களை மனபங்கப் படுத்துங்கள் என்று கோட்டா சிங்கள ராணுவத்துக்கு அனுமதி வழங்கியபோது, எந்தவொரு சிங்கள புத்திசீவிகளோ மக்களோ அதை கண்டிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. புலிகளின் வீழ்ச்சியில் மகிழ்ந்த சிங்களவர், இலட்சக்கணக்கான அப்பாவி தமிழ் உயிர்கள் அடையாளம் எதுவுமே இல்லாமல் அழிக்கப்பட்டபோது கண்டுகொள்ளவே இல்லை. 

வயிற்றுப் பசிக்கு போதிய ஆகாரம் கிடைத்தவுடன் சிங்களம் தன் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

@ரஞ்சித்

இதை நீங்கள் எழுதுவது நல்லதொரு விடயம் ஏனெனில் சில தமிழ் மக்களிடம் “எங்கட சிங்கள siblings உதவ வேண்டும்” என்ற ரீதியில் வரும் கருத்துக்களை என்னுடைய நட்புவட்டத்தில் பதிந்திருந்தார்கள்..ஆனால் அவர்களின் அடிப்படை மனநிலை மாறவே இல்லை என்பதைதான் இந்த YouTubeகாரர்களும் உறுதிப்படுத்துகிறார்கள்!

ஆனால் இன்னொரு விதமாக பார்க்கும் பொழுது வடக்கு கிழக்கு, மலையக தமிழர்கள் பாதிக்கப்படுவது கவலையாக உள்ளது. 

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் நிபந்தனைகளுடன் உதவலாம், அது சாத்தியமா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

வடக்கு கிழக்கு தமிழ் அரசியளாளர் ஒருவரை இலங்கையின் பிரதம மந்திரியாக்க சிங்களம்  உடன்படுமா ?

உடன்படுமென்றால் உங்கள் விருப்பமும் சாத்தியமே.

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

@ரஞ்சித், உங்களுக்கு சிங்கள மொழி தெரிந்திருக்கின்றது! என்னைப் போன்ற பலருக்கு சிங்கள மொழியும் தெரியாது. சிங்கள நண்பர்களும், அறிமுகங்களில் கதைப்பவர்களும் கிடையாது. அதனால் இப்படியான அவர்களின் சிந்தனைகளை அறியும் வழியுமில்லை. ஆனால் அவர்கள் இனவாதிகளாக தொடர்ந்தும் இருக்கின்றார்கள் என்பதே அவர்களுடன் என்னைப்போன்ற தமிழர்கள் ஒருங்கிணையமுடியாது என்பதைக் காட்டுகின்றது!

மேலே நீங்கள் சொன்னதுபோல சிங்கள மக்களில் பெரும்பான்மையோருக்கு (கோத்தாவுக்கு வாக்குப்ப்போட்ட 69 இலட்சம், சஜித்துக்கு வாக்குப்ப்போட்ட பெரும்பகுதி சிங்களவர்களும் அவர்களின் பரம்பரையினருக்கும்) தமிழர்கள், முஸ்லிம்கள் ஒரு பொருட்டே அல்ல. மின்சாரமும், எரிவாயுவும், கிடைக்கும் வருமானத்தில் மத்தியதர, உயர்தர வாழ்வைப் பேணுவதும்தான் முக்கியம். இதற்கு உடனடித் தீர்வு எதுவும் கிடையாது. அந்நிய செலவாணியை உள்நாட்டுக்குள் கொண்டுவந்தால் பிரச்சினைகள் தீராது. புலம்பெயர் மக்களிடம் இருக்கும் பணத்தை அவர்களுக்கு கொடுப்பதே முட்டாள்தனம். இந்தவேளையில் தமது சொந்தங்களும், உறவுகளும் நாளாந்த வாழ்வைக் கொண்டு நடாத்த தேவையான பண உதவியைச் செய்தால் மட்டும் போதுமானது. சிறிலங்கா பொருளாதாரம் இன்னமும் கீழே போய் சிங்கள மக்களின் சேமிப்பு எல்லாம் கரைந்தால்தான் அவர்களுக்கு இந்தப் பொருளாதாரப் பிரச்சினையின் அடிப்படையே இனப்பிரச்சினைதான் என்று உறைக்கவேண்டும்.

அடிப்படைப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு இல்லாமல் தங்கள் பொருளாதாரப் பிரச்சினைகள் மாறாது என்பதை சிங்களவர்கள் உணர்ந்து, சிறிலங்கா என்பது பல தேசிய இனங்கள் வாழும் தீவு என்பதை ஏற்று, தேசிய இனங்கள் சுய நிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய அரசியல் தீர்வை அவர்களாகவே கோரவேண்டும். 

அந்நிலை இப்போதைக்கு வரும் என நம்பிக்கையில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதுடன் சிங்களவர்களின் ஆர்ப்பாட்டம் முடிந்துவிடும்.மேற்கும் அமெரிக்காவும் தங்களுக்கு தேவையான ஒருவர் வந்ததும் தாராளமாக கொடுத்து தமது அலுவல்களைப் பார்ப்பார்கள்.

    என்ன கொஞ்சகாலம் கஸ்டம் 

பின்னர் அதுவே பழகி போயிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்+

ரஞ்சித் அவர்களே, 

இதை வாசித்தாவது சிங்களவர் திருந்திட்டார்கள்; அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவனது சிறீலங்காவைக் காப்பாற்ற நினைக்கும் சில வெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு அவங்கள் இன்னும் அதே பேரினவாத மனநிலையில்தான் இருக்கிறாங்கள் என்ற உண்மை விளங்க வேண்டும். ஆகையால் இதை இப்படியே நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

ராஜபக்ஷக்களுக்கெதிரான சிங்களவரின் ஆர்ப்பாட்டங்கள் தமிழர் தொடர்பான அவர்களின் மனமாற்றத்தினைக் காட்டுகின்றனவா ?

இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இப்படி சிங்கவர்களை தூற்றுகின்றேம்.

இன்று நான் தமிழ் செய்தியில் இந்த நினைவுதின அனுஸ்டிப்பை பார்த்தேன். வெருகல் படுகொலை  நினைவு நாள். பிள்ளையான் தீபமேற்றி மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றார். தாய்மார்கள் அழுவதை பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. எம்து உடலை நாமே காயப்படுத்தி கொண்டுள்ளோம்

இது உண்மையாக புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலா? இது எப்படி நடந்தது ? யாரும் விபரம் தெரிந்தால் எழுதவும்.

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, colomban said:

உங்களால் அது தொடர்பான ஏதேனும் லிங்கை இங்கு பகிர இயலுமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

நாங்கள் இப்படி சிங்கவர்களை தூற்றுகின்றேம்.

இன்று நான் தமிழ் செய்தியில் இந்த நினைவுதின அனுஸ்டிப்பை பார்த்தேன். வெருகல் படுகொலை  நினைவு நாள். பிள்ளையான் தீபமேற்றி மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றார். தாய்மார்கள் அழுவதை பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. எம்து உடலை நாமே காயப்படுத்தி கொண்டுள்ளோம்

இது உண்மையாக புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலா? இது எப்படி நடந்தது ? யாரும் விபரம் தெரிந்தால் எழுதவும்.

வெருகல் படுகொலையென்று ஒன்று நான் கேள்விப்பட்டதில்லை. 

சிலவேளை கருணாவுக்கெதிரான புலிகளின் ராணுவ நடவடிக்கையில் வெருகல் ஆற்றங்கரையில் கொல்லப்பட்ட கருணா குழு உறுப்பினர்களுக்கான அஞ்சலியாக இருக்கலாம். இதனை பிள்ளையான் நினைவுகூர்வது தனது துனைராணுவக் குழுவுக்கான அஞ்சலியாக இருக்கலாம். தமிழினத்திற்கும், புலிகளுக்கும் அழிவுகளை அழிவுகளை ஏற்படுத்திய துணைராணுவக் குழுவினரின் இறப்பினை மக்கள் படுகொலை என்று ஒப்பிடுவது சரியானதாகப் படவில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

நாங்கள் இப்படி சிங்கவர்களை தூற்றுகின்றேம்.

இன்று நான் தமிழ் செய்தியில் இந்த நினைவுதின அனுஸ்டிப்பை பார்த்தேன். வெருகல் படுகொலை  நினைவு நாள். பிள்ளையான் தீபமேற்றி மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றார். தாய்மார்கள் அழுவதை பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. எம்து உடலை நாமே காயப்படுத்தி கொண்டுள்ளோம்

இது உண்மையாக புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலா? இது எப்படி நடந்தது ? யாரும் விபரம் தெரிந்தால் எழுதவும்.

நீங்கள் கேட்டுக்கொண்டதால் இதனை எழுதுகிறேன். 

வெருகல் ஆற்றினைக் கடந்தே புலிகள் கருணா துணைராணுவக்குழு மீது தமது நடவடிக்கையினை ஆரம்பிப்பார்கள் என்று பலராலும் எதிர்வுகூறப்பட்டது. நடந்ததும் அதுதான்.

ஆனால், இந்த நடவடிக்கைக்கு முன்னதாக கருணாவிடமிருந்து விலகி நில்லுங்கள், உங்களின் வீடுகளுக்குச் செல்லுங்கள் என்று புலிகளால் கருணா துனைராணுவக் குழு உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், இவை எல்லாவற்ரையும் மீறியே கருணா பல பதின்ம வயதினரை கேடயங்களாக வெருகல் ஆற்றில் நிறுத்திவைத்திருந்தார்.

தமது படையணிகளைத் தாக்கவேண்டாம், ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையுங்கள் என்று கருணா குழுவினருக்கு புலிகளின் தாக்குதல் அணிகளால் அறிவுருத்தல் விடப்பட்டிருந்தது. ஆனால், கருணாவின் சகோதரன் ரெஜி தலைமையில் சமரை நடத்திய குழு, புலிகள் மீது தாக்கத் தொடங்கிவிட்டு, இளையவர்களை விட்டு விட்டு பின்வாங்கிச் சென்றுவிட தாக்குதலில் ஈடுபட்ட கருணா குழு இளையவர்கள் புலிகளின் தாக்குதலில் அநியாயமாகப் பலியாகினர்.

தமது துரோகத்தையும், கையாலாகாத் தனத்தையும் சிறுவர்களின் மரணங்களின் பின்னால் மறைத்து, முதலைக் கண்ணீர் வடிக்கும் கொலைகாரப் பாதகன் பிள்ளையானின் நாடகங்களுக்கு நீங்கள் எடுபடத் தேவையில்லை.

தனது எஜமானர்களின் நாட்கள் எண்ணப்பட்டுக்கொன்டிருக்கின்றன என்கிற பயத்தில் தன்னால் முடிந்ததை கிழக்கில் அவன் செய்ய நினைக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, beard and text that says 'சிங்களவனுகள் GAS பால் PETROL இல்ல என்டுதான் நம்மளோட சேந்து போராடுரானுகள் TROLL EASTERN அத பாத்துத்து நமக்கு சம உரிமை சுயாட்சி தருவானுகள் னு நினைச்சா அது நம்ம முட்டாள்தனம்'

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் கேட்டுக்கொண்டதால் இதனை எழுதுகிறேன். 

வெருகல் ஆற்றினைக் கடந்தே புலிகள் கருணா துணைராணுவக்குழு மீது தமது நடவடிக்கையினை ஆரம்பிப்பார்கள் என்று பலராலும் எதிர்வுகூறப்பட்டது. நடந்ததும் அதுதான்.

ஆனால், இந்த நடவடிக்கைக்கு முன்னதாக கருணாவிடமிருந்து விலகி நில்லுங்கள், உங்களின் வீடுகளுக்குச் செல்லுங்கள் என்று புலிகளால் கருணா துனைராணுவக் குழு உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால், இவை எல்லாவற்ரையும் மீறியே கருணா பல பதின்ம வயதினரை கேடயங்களாக வெருகல் ஆற்றில் நிறுத்திவைத்திருந்தார்.

தமது படையணிகளைத் தாக்கவேண்டாம், ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையுங்கள் என்று கருணா குழுவினருக்கு புலிகளின் தாக்குதல் அணிகளால் அறிவுருத்தல் விடப்பட்டிருந்தது. ஆனால், கருணாவின் சகோதரன் ரெஜி தலைமையில் சமரை நடத்திய குழு, புலிகள் மீது தாக்கத் தொடங்கிவிட்டு, இளையவர்களை விட்டு விட்டு பின்வாங்கிச் சென்றுவிட தாக்குதலில் ஈடுபட்ட கருணா குழு இளையவர்கள் புலிகளின் தாக்குதலில் அநியாயமாகப் பலியாகினர்.

தமது துரோகத்தையும், கையாலாகாத் தனத்தையும் சிறுவர்களின் மரணங்களின் பின்னால் மறைத்து, முதலைக் கண்ணீர் வடிக்கும் கொலைகாரப் பாதகன் பிள்ளையானின் நாடகங்களுக்கு நீங்கள் எடுபடத் தேவையில்லை.

தனது எஜமானர்களின் நாட்கள் எண்ணப்பட்டுக்கொன்டிருக்கின்றன என்கிற பயத்தில் தன்னால் முடிந்ததை கிழக்கில் அவன் செய்ய நினைக்கிறான்.

சீக் என்ன மனிசரப்பா!...ஒரே இரத்தம் ,கூட இருந்து போராடின போராளிகளை அநியாயமாய் தேவையில்லாமல் படுகொலை செய்து விட்டு😠 இப்படி அற்ப காரணங்கள் சொல்ல முடியுது ...இன துவேசம் பிடித்த சிங்களவனும் இப்படி  தமிழரின் ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு காரணம் வைத்திருப்பான்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

இன துவேசம் பிடித்த சிங்களவனும் இப்படி  தமிழரின் ஒவ்வொரு படுகொலைக்கும் ஒரு காரணம் வைத்திருப்பான்.

எங்கை சொல்லட்டுமன் பாப்பம்?

சிங்கள பொதுமக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என தலைவர் சொன்னதாக வாசித்த ஞாபகம்..

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2022 at 23:56, Kapithan said:

புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் நிபந்தனைகளுடன் உதவலாம், அது சாத்தியமா? 

வடக்கு கிழக்கு தமிழ் அரசியளாளர் ஒருவரை இலங்கையின் பிரதம மந்திரியாக்க சிங்களம்  உடன்படுமா ?

உடன்படுமென்றால் உங்கள் விருப்பமும் சாத்தியமே.

இல்லை, அவர்கள் ஒருபோதும் இதற்கு சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் இந்த பொருளாதார பிரச்சனையால் தமிழர்களும்தான் பாதிக்கப்படுகிறார்கள். எல்லோருக்கும்(வடக்கு, கிழக்கு, மலையக தமிழர்கள்) புலம்பெயர் தேசங்களில் உறவுகளும் இல்லை..அவர்களின் நிலை இன்னமும் கவலைக்குரியது. ஆகையால் இப்பொழுதிருக்கும் வழி பேரம் பேசுவதே. இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இன்னொரு வழி எங்களுக்கு வருமோ தெரியாது. அதை ஒழுங்காக செய்ய வேண்டியது யாருடைய கடமை? 

புலம் பெயர்ந்த தமிழர்களால்/அமைப்புகளால் உதவ முடியாது(நிபந்தனையுடன்) என நினைக்கிறீர்களா?

இந்த ராஜபக்சாக்காள் இன்னமும் அசைவது போலத்தெரியவில்லை என்பதால்  இப்பொழுது இலங்கையில் உள்ள தமிழர்கள் அமைதியாக இருக்கலாம், ஆனால் புலம்பெயர் அமைப்புகளும், தமிழ் அரசியல்வாதிகளும் சரியான சந்தர்ப்பம் வரும் பொழுது( இந்த ராஜபக்சாக்களோ அல்லது இன்னொரு சிங்கள அரசோ) அதை ஒழுங்காக பயன்படுத்தாவிட்டால் இருந்து என்ன பயன்? 

இன்று ஜனாதிபதியின் ஆலோசனைக்குழுவில் இருப்பவர்கள் இரு தமிழர்கள், இவர்களுடன் உண்மையாக தமிழர் நலனில் அக்கறை கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஒன்றும் தொடர்பில் இல்லை என்றா நினைக்கிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.