Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு (Video) 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Breaking news: ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு

May be an image of standing, fire and outdoors

ரணிலின், வீட்டுக்கு... தீ வைப்பு.

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், அந்த வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://athavannews.com/2022/1290526

Edited by தமிழ் சிறி

  • Replies 50
  • Views 3.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு (Video) 

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், அந்த வீட்டுக்கு தீ வைத்துள்ளனர் என்று பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. 
 
https://www.tamilmirror.lk/video/ரணலன-வடடகக-த-வபப-Video/52-300091

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவோடு சேர்ந்து நாட்டை குட்டிசுவர் ஆக்கியவர்களை அல்லவா மக்கள் தண்டிக்க வேண்டும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும்  எதிர்பார்க்கின்றோம்

நல்ல  செய்திகள்  தொடரவேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

9A78B3AD-EF96-4779-8C47-16E82F302A24.jpg

👉  https://www.themorning.lk/protesters-set-fire-to-ranils-private-residence/  👈

இப்பிடி கொழுந்து விட்டு எரிவதை பார்க்க, ஒன்றும் மிஞ்சாது போலை.
அதுகும் நல்லது, நல்லாய் எரியட்டும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  ❤️❤️❤️❤️

Edited by Kapithan

59 minutes ago, விசுகு said:

இன்னும்  எதிர்பார்க்கின்றோம்

நல்ல  செய்திகள்  தொடரவேண்டும்

47 minutes ago, Kapithan said:

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி  ❤️❤️❤️❤️

57 minutes ago, தமிழ் சிறி said:

9A78B3AD-EF96-4779-8C47-16E82F302A24.jpg

👉  https://www.themorning.lk/protesters-set-fire-to-ranils-private-residence/  👈

இப்பிடி கொழுந்து விட்டு எரிவதை பார்க்க, ஒன்றும் மிஞ்சாது போலை.
அதுகும் நல்லது, நல்லாய் எரியட்டும்.

சில சந்தோசங்களை வெளிக்காட்டிடக் கூடாது. எங்களுக்கே பின்னர் பாதிப்பாய் அமையலாம். படுங்கள் ஆனால் வெளித்தெரியாமல். எனது கருத்து மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
நீயும் என்றோ எமக்கு இட்ட தீ - இது

மூள்கவே மூள்கவே

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் இல்லத்தை எரித்தமைக்கு சுமந்திரன் கண்டனம் 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தை எரித்தமையை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வன்முறை எதற்கும் தீர்வாகாது என்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவிக்கு வந்ததில் இருந்து அவருடன் கருத்து வேறுபாடுகள் உள்ள போதும் இச்சம்பவத்தை மன்னிக்க முடியாது என்றும் தயவு செய்து இப்போது வன்முறையை நிறுத்துங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
https://www.tamilmirror.lk/செய்திகள்/பிரதமரின்-இல்லத்தை-எரித்தமைக்கு-சுமந்திரன்-கண்டனம்/175-300092

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

பிரதமரின் இல்லத்தை எரித்தமைக்கு சுமந்திரன் கண்டனம் 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தை எரித்தமையை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

வன்முறை எதற்கும் தீர்வாகாது என்றும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவிக்கு வந்ததில் இருந்து அவருடன் கருத்து வேறுபாடுகள் உள்ள போதும் இச்சம்பவத்தை மன்னிக்க முடியாது என்றும் தயவு செய்து இப்போது வன்முறையை நிறுத்துங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
சுமந்திரன் தானே…. கோத்தாகம போரட்டத்துக்கு தமிழர்களைப் போய் போராடச் சொன்னவர்.
இப்ப நிற்பாட்டச் சொல்லுறார்…

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம ஹிருணிக்கா எங்க போனாலும் அங்க நெருப்பு பத்திகிதாமே?

கோட்டாவின் மீரிஹான வீடு…..

ஞானாக்கா வீடு…..

ஜனாதிபதி மாளிகை…..

ரணில் வீடு…..

#ஐயோ பத்திக்கிச்சு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நம்ம ஹிருணிக்கா எங்க போனாலும் அங்க நெருப்பு பத்திகிதாமே?

கோட்டாவின் மீரிஹான வீடு…..

ஞானாக்கா வீடு…..

ஜனாதிபதி மாளிகை…..

ரணில் வீடு…..

#ஐயோ பத்திக்கிச்சு

பயர் லேடி. அவ்வ்வ்……….. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

மகிந்தவோடு சேர்ந்து நாட்டை குட்டிசுவர் ஆக்கியவர்களை அல்லவா மக்கள் தண்டிக்க வேண்டும்?

மகிந்த அன்ட் பிறதர்ஸைக் காப்பாற்றுவோரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பயர் லேடி. அவ்வ்வ்……….. 🤣

அயன் லேடி கேள்விப்பட்டிருக்கன்.

இப்ப தான் பயர் லேடி கேள்விப்படுறன்.

கோத்தா போனதை விட ரணில் வீடு போனது சந்தோசம்.

ரணிலின் இந்த வீடு கொழும்பு பல்கலைக்கழக த்துக்கு கொடுக்கப்பட்ட வீடு என்றும் நூலகமாக பயன்படுத்த கூடிய அளவுக்கு ஏராளமாக புத்தகங்கள் இருந்த வீடு என்றும் சில செய்திகள் செல்கின்றன...

  • கருத்துக்கள உறவுகள்

கன்னியமாக நடந்த இந்த போராட்டம் தீ வைக்கும் அளவுக்கு போனதற்க்கு காரனம் ஊடகவியளாளர்கனள தாக்கியது காரனமாக இருக்கலாம்.எனது இந்த ஊகம் தவறாக  இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கொளுத்துவதற்கு பெற்றோல் வைச்சிருகின்றார்கள்! ஆனால் ஜனாதிபதி மாளிகையை கொளுத்தவில்லை!

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதால்தான் ஆத்திரம் கொண்டு ரணிலின் வீட்டுக்குள் நுழைந்தனர்.

ரணில் சில வாரங்கள் பிரதமராக இருந்து மந்திரத்தால் பெற்றோல் கொண்டுவரவும் இல்லை. சாப்பாட்டு தட்டுப்பாட்டை தீர்க்கவும் முடியவில்லை. கடைசியில் தனது வீட்டையும் இழந்ததுதான் மிச்சம்!

மகாசங்கத்தினரினதும், முப்படைகளினதும் ஆதரவை இழந்ததால்தான் கோத்தாவும், ரணிலும் அதிகாரத்தை இழந்துள்ளனர். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜே ஆர் ஜெயவர்த்தன

Bild

  • கருத்துக்கள உறவுகள்

விதி யார் யாரை தண்டிக்க நினைத்ததோ, அவர்களை தன் வலையில் விழுத்தியது. ரணில் தானாகவே வந்து அதன் வலையில் விழுந்தார். பதவியாசை! கொஞ்சம் கூட நாட்டின் தீவிர தன்மையை சிந்திக்கவில்லை, அமெரிக்காவை நம்பியிருப்பாரோ? அமெரிக்கா தன் திட்டத்தை தனது தேவைக்கேற்ப மாற்றிவிட்டது. தமிழரின் வலிகளை, தங்கள் சொத்துக்கள் எரியும் போதென்றாலும் விளங்கிக் கொள்வார்களா இவர்கள்? தண்டிக்கப்படவேண்டியவர்கள் இன்னும் பலர் உள்ளனர், அவர்களை எப்போ எங்கே எவ்வாறு தண்டிக்க வேண்டும்? என்பது காலத்திற்கு தெரியும். அன்று தமிழரை நடுவீதிக்கு கொண்டு வந்து மகிழ்ந்த இனம் இன்று தானாகவே வந்து நடுவீதியில் நின்று புலம்புது. சரத் வீர சேகரவின் புலம்பலை கேட்க ஆவலாயுள்ளேன். தமிழரின் புண்கள் ஆற்றப்படாமல், விமோசனம் அளிக்கப்படாமல் இந்தத் தீ அடங்காது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

கன்னியமாக நடந்த இந்த போராட்டம் தீ வைக்கும் அளவுக்கு போனதற்க்கு காரனம் ஊடகவியளாளர்கனள தாக்கியது காரனமாக இருக்கலாம்.எனது இந்த ஊகம் தவறாக  இருக்கலாம்.

உண்மை. ஒரு தமிழ் ஊடகவியலாளர் உட்பட 4 ஊடகவியலாளர்களை ரணிலின் பாதுகாப்பு ஊழியர்களான விசேட அதிரடிப்படையினர் நேற்று அவரது வீட்டிற்கு முன்னால் செய்தி சேகரித்துக்கொண்டிருந்தபோது  கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது அதற்கான பழிவாங்கலாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நம்ம ஹிருணிக்கா எங்க போனாலும் அங்க நெருப்பு பத்திகிதாமே?

கோட்டாவின் மீரிஹான வீடு…..

ஞானாக்கா வீடு…..

ஜனாதிபதி மாளிகை…..

ரணில் வீடு…..

#ஐயோ பத்திக்கிச்சு

அப்போ நம்ம மருதர் நிலை?

1 hour ago, நிழலி said:

என்றும் நூலகமாக பயன்படுத்த கூடிய அளவுக்கு ஏராளமாக புத்தகங்கள் இருந்த வீடு என்றும் சில செய்திகள் செல்கின்றன...

அப்போ! விதி ஒன்றையும் மறக்காமல் வைத்து பழிவாங்குது என்று செல்லுங்கோ.

2 hours ago, nochchi said:

மகிந்த அன்ட் பிறதர்ஸைக் காப்பாற்றுவோரும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே!

விகாரைகளை நெருப்பிலிருந்து காப்பாற்ற மகாநாயக்கர்கள் முயற்சிக்கிறார்கள். பாப்போம் விதியின் வலிமையை!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சுமந்திரன் தானே…. கோத்தாகம போரட்டத்துக்கு தமிழர்களைப் போய் போராடச் சொன்னவர்.
இப்ப நிற்பாட்டச் சொல்லுறார்…

சுமந்திரனின் பொலிசி அது! அக்கினி அழகாக சொல்வார். நீங்கள் அப்படிக்க என்றால்; இவர் இப்படிக்க.... என்று சுத்துவார். அவர் ரணிலின் தோஸ்து! ஏனையோரின் சொத்துக்கள் எரியும்போது கருத்து சொல்லாதவர், தமிழர் சொத்துக்கள் எரியும்போது, சூறையாடப்படும்போது அனுதாபம் தெரிவிக்க மறந்தவர், இப்போ மட்டும் போதிக்கிறார் என்றால் பாருங்கோவேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

ரணிலின் இந்த வீடு கொழும்பு பல்கலைக்கழக த்துக்கு கொடுக்கப்பட்ட வீடு என்றும் நூலகமாக பயன்படுத்த கூடிய அளவுக்கு ஏராளமாக புத்தகங்கள் இருந்த வீடு என்றும் சில செய்திகள் செல்கின்றன...

கொழும்பு ரோயல் கல்லூரிக்கு அவரினதும் மனைவியினதும் காலத்தின் பின் என எழுதப்பட்டுள்ளதாக அறிகிறேன். ஆம் பெரும் பகுதி நூலகம்தானாம். 

இலங்கை தீவில் எரியும் முதலாவது நூலகம் அல்லவே இது.

2 hours ago, சுவைப்பிரியன் said:

கன்னியமாக நடந்த இந்த போராட்டம் தீ வைக்கும் அளவுக்கு போனதற்க்கு காரனம் ஊடகவியளாளர்கனள தாக்கியது காரனமாக இருக்கலாம்.எனது இந்த ஊகம் தவறாக  இருக்கலாம்.

ஊடகவியளாலரை தாக்கி விட்டு, கண்ணீர் புகை அடித்து கூட்டம் கொஞ்சம் விலத்த, அந்த ஏரியாவில் லைட்டைநூத்து போட்டு நெருப்பை வைத்துள்ளார்களாம்.

யார் எண்டு சொல்லதேவையில்லை என நினைக்கிறேன்.

1 hour ago, ரஞ்சித் said:

உண்மை. ஒரு தமிழ் ஊடகவியலாளர் உட்பட 4 ஊடகவியலாளர்களை ரணிலின் பாதுகாப்பு ஊழியர்களான விசேட அதிரடிப்படையினர் நேற்று அவரது வீட்டிற்கு முன்னால் செய்தி சேகரித்துக்கொண்டிருந்தபோது  கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது அதற்கான பழிவாங்கலாக இருக்கலாம்.

2 hours ago, கிருபன் said:

கொளுத்துவதற்கு பெற்றோல் வைச்சிருகின்றார்கள்! ஆனால் ஜனாதிபதி மாளிகையை கொளுத்தவில்லை!

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதால்தான் ஆத்திரம் கொண்டு ரணிலின் வீட்டுக்குள் நுழைந்தனர்.

ரணில் சில வாரங்கள் பிரதமராக இருந்து மந்திரத்தால் பெற்றோல் கொண்டுவரவும் இல்லை. சாப்பாட்டு தட்டுப்பாட்டை தீர்க்கவும் முடியவில்லை. கடைசியில் தனது வீட்டையும் இழந்ததுதான் மிச்சம்!

மகாசங்கத்தினரினதும், முப்படைகளினதும் ஆதரவை இழந்ததால்தான் கோத்தாவும், ரணிலும் அதிகாரத்தை இழந்துள்ளனர். 

54 minutes ago, satan said:

அப்போ நம்ம மருதர் நிலை?

அதுதான் அவர் காஜலிசத்தில் இறங்கினாரோ?

1 hour ago, குமாரசாமி said:

ஜே ஆர் ஜெயவர்த்தன

Bild

செம்ம👆👌

  • கருத்துக்கள உறவுகள்

தீ வைக்கப்பட்ட பிரதமரின் வீடு தொடர்பில் முக்கிய தகவல்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கே தீ வைக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிக தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர் ரணில் விக்ரமசிங்க என்ற போதிலும், பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமாக இருந்த  அலரி மாளிகைக்கு அவர் ஒருபோதும் இடம் பெயர்ந்ததில்லை எனவும்  உத்தியோகபூர்வ வேலைக்காக அலரி மாளிகைக்கு சென்றாலும், இந்த வீட்டிலேயே தனது வாழ்க்கையைக் கழித்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வீடு பிரதமரால் மரபுரிமையாக பெறப்பட்டு பழைய கட்டிடக்கலைப்படி நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பாரம்பரிய வீட்டில் மிகப்பெரிய நூலகம் அமைந்திருந்தது. இங்கு பொருட்களை விட அதிகளவிலான நூல்களே காணப்பட்டுள்ளன.

இலங்கையில் எங்கும் கிடைக்காத அரிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், தனக்குப் பின்னர் கொழும்பு றோயல் கல்லூரிக்கு இந்த வீட்டை நன்கொடையாக வழங்குவதற்கான கடைசி உயிலையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.

பிரதமர் மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த வீட்டில்தான் தனது வாழ்நாளைக் கழித்தார்கள்.  (a)
 
https://www.tamilmirror.lk/செய்திகள்/தீ-வைக்கப்பட்ட-பிரதமரின்-வீடு-தொடர்பில்-முக்கிய-தகவல்கள்/175-300106

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.