Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்... சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று, வன்புணர்வு. – சிறுமிகள் உள்ளிட்ட... 7 பேர் விளக்க மறியலில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று வன்புணர்வு – சிறுமிகள் உள்ளிட்ட 7 பேர் விளக்க மறியலில்!

யாழில்... சிறுமிகள் இருவரை கடத்திச் சென்று, வன்புணர்வு. – சிறுமிகள் உள்ளிட்ட... 7 பேர் விளக்க மறியலில்!

17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இருவர் உள்பட ஐவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி துர்நடத்தையில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் கட்டளையிட்டது.

இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்ற நிலையில் சிறுமிகள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்ட ஐவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவுகள் வழங்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாவது; இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமிகள் இருவர் வீட்டிலிருந்து வெளியேறி வந்து யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் இருந்துள்ளனர்.

அவர்கள் தொடர்பில் அறிந்த ஆண் ஒருவர், சிறுமிகள் இருவரையும் அழைத்துச் சென்று சாவகச்சேரியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

எனினும் நேற்றுமுன்தினம் அந்த விடுதியிலிருந்து வெளியேறிய மூவரும் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளனர்.

அன்றைய தினம் இரவு வாகனம் ஒன்றில் பேருந்து சாரதிகள் இருவர் நடத்துநர்கள் இருவர் என மேலும் நால்வர் இணைந்து வாகனம் ஒன்றில் எழுதுமட்டுவாழ் பற்றைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். அதன்போது சிறுமி ஒருவர் சாதூரியமாகப் பேசி வாகனத்திலிருந்து இறங்கி எழுதுமட்டுவாழில் மக்கள் வாழும் பகுதிக்கு வந்துள்ளார்.

வீதியில் சென்றவர்களிடம் நடந்தவற்றை தப்பிவந்த சிறுமி தெரிவித்த நிலையில் பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவிக்கபட்டது.

மற்றைய சிறுமியுடன் சென்ற ஐவரும் மறுநாள் யாழ்ப்பாணம் நகருக்கு அழைத்து வந்து சிறுமியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சிறுமிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களை கடத்திச் சென்றமை மற்றும் தகாத உறவு கொண்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐவர் கைது செய்யப்பட்டனர்.

வீட்டைவிட்டு வெளியேறி வந்து துர்நடத்தையில் ஈடுபட்டமையினால் சிறுமிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

https://athavannews.com/2022/1295141

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில என்ன நடக்குது? 

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திர தாகம்........!

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மிகவும் வருமை மிக்க மாவட்டமாக முல்லைத்தீவு கருதப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

அத்துடன், வீட்டைவிட்டு வெளியேறி துர்நடத்தையில் ஈடுபட்ட சிறுமிகள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் கட்டளையிட்டது.

எதோ ஒரு காரணதுக்காக வீட்டை விட்டு வெளிகிட்டிருக்குதுகள். யாழ்பாணம் பேருந்து நிலையத்தில் வந்து நின்றிருக்குதுகள்.

அதற்கு பின் நடந்த எதற்கும் இந்த பிள்ளைகள் பொறுப்பல்ல.

இதுவே ஒரு நல்ல மனிதர் கண்ணில் பட்டிருந்தால் அவர்கள் அன்றே ஒரு பாதுகாப்பான இடத்துக்கு போயிருக்க கூடும்.

அவர்கள் கெட்ட காலம் இந்த ஓநாய்கள் கையில் சிக்கிவிட்டார்கள்.

இவர்களை பாதிக்கப்பட்டவராக கருதி காப்பகம் அனுப்புவதே முறை. இந்த நீதிபதி விளக்க மறியலில் போட்டுள்ளார்😢.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

யாழ். பேருந்து நிலையத்தில் இரவு... 10 மணிக்கு பின்,  
பெண்கள் திக்குத் தெரியாமல்... நின்றாலே ஆபத்துத் தான்.
இதுக்கு என்றே.. சில காவாலிகள் வட்டமடித்துக் கொண்டு திரிவார்கள்.

பிள்ளைகள் பாவங்கள், அதுகளை  ******** ஆக்கி விட்டான்   சக தமிழன். 😡

முதலில்... சிறுவர் பாலியல் குற்றத்திற்கு, 
அரசு.. மேற்கு நாடுகளில் கொடுக்கும் தண்டனை மாதிரி கொடுக்க வேண்டும்.

இருந்து பாருங்கள்... இந்தக் கயவர்கள், ஒரு மாதத்தில் சுதந்திரமாக நடமாடுவார்கள்.
அந்தச் செய்தியும், மறக்கடிக்கப் பட்டு விடும்.

Edited by நிழலி
ஒரு சொல் நீக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

யாழ். பேருந்து நிலையத்தில் இரவு... 10 மணிக்கு பின்,  
பெண்கள் திக்குத் தெரியாமல்... நின்றாலே ஆபத்துத் தான்.
இதுக்கு என்றே.. சில காவாலிகள் வட்டமடித்துக் கொண்டு திரிவார்கள்.

பிள்ளைகள் பாவங்கள், அதுகளை  -------- ஆக்கி விட்டான்   சக தமிழன். 😡

முதலில்... சிறுவர் பாலியல் குற்றத்திற்கு, 
அரசு.. மேற்கு நாடுகளில் கொடுக்கும் தண்டனை மாதிரி கொடுக்க வேண்டும்.

இருந்து பாருங்கள்... இந்தக் கயவர்கள், ஒரு மாதத்தில் சுதந்திரமாக நடமாடுவார்கள்.
அந்தச் செய்தியும், மறக்கடிக்கப் பட்டு விடும்.

உண்மைதான். அதுவும் இந்த பிள்ளையள் இதுக்கு முதல் தனியா இப்படி ஒரு நகருக்கு வந்திருக்குமோ என்பதும் சந்தேகம்தான். 

முன்பும் இப்படி அடிக்கு பயந்து, சோதனை ரிசல்டுக்கு பயந்து ஓடுற ஆக்கள் இருந்தவை.

வீட்டுக்கு சொல்லாமல் யாழ்பாணத்தில் இருந்து வற்றாப்பளை போன லொறியில் ஏறி போய், பொங்கல் முடிய வீட்டை வந்து, வீட்டில் பூசை கிடைத்த ஆட்கள் எல்லாம் இருக்கினம். 

ஆனால் அப்போ சமூகம் கண்ணியமாக இருந்தது. புலிகள் வெளுத்துபோடுவார் என்ற பயம் இருந்தது - ஆகவே ஓடியோர் சில நாளில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இப்படி பலர் சேர்ந்து, திட்டமிட்டு, ஒருவரோடு ஒருவர் பேசி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு எமது சமூகத்தில் அறம் செத்து போய்விட்டது என்பதுதான் உண்மை.

எட்டு தமிழர்களில் ஒருவருக்கு கூட இது தப்பு என்று உறைக்கவில்லை.

Edited by நிழலி
மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் இருந்த ஒரு சொல் நீக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

17 வயது சிறுமிகள் வீட்டால் வெளிக்கிட்டு தனியாக செல்வதில் அவர்களின் பெற்றோருக்கும் பொறுப்பு உண்டு.

இவ்வளவு நடந்தும் பொது மககள் யாரும் காணவில்லையா? பொறுப்புடன் காவல்துறைக்கு அறிவித்து இருக்க வேண்டும்.

வீட்டுக்கு வெளியில் இரு  சிறுமிகள் வெளிக்கிட்டால் துர்நடத்தை ஆகி விடுமா?

பாதிக்கப்பட்ட சிறுமிகள் விளக்கமறியலிலா வைக்கப்பட வேண்டும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

யாழ். பேருந்து நிலையத்தில் இரவு... 10 மணிக்கு பின்,  
பெண்கள் திக்குத் தெரியாமல்... நின்றாலே ஆபத்துத் தான்.
இதுக்கு என்றே.. சில காவாலிகள் வட்டமடித்துக் கொண்டு திரிவார்கள்.

பிள்ளைகள் பாவங்கள், அதுகளை  ------ ஆக்கி விட்டான்   சக தமிழன். 😡

முதலில்... சிறுவர் பாலியல் குற்றத்திற்கு, 
அரசு.. மேற்கு நாடுகளில் கொடுக்கும் தண்டனை மாதிரி கொடுக்க வேண்டும்.

இருந்து பாருங்கள்... இந்தக் கயவர்கள், ஒரு மாதத்தில் சுதந்திரமாக நடமாடுவார்கள்.
அந்தச் செய்தியும், மறக்கடிக்கப் பட்டு விடும்.

2 hours ago, goshan_che said:

உண்மைதான். அதுவும் இந்த பிள்ளையள் இதுக்கு முதல் தனியா இப்படி ஒரு நகருக்கு வந்திருக்குமோ என்பதும் சந்தேகம்தான். 

முன்பும் இப்படி அடிக்கு பயந்து, சோதனை ரிசல்டுக்கு பயந்து ஓடுற ஆக்கள் இருந்தவை.

வீட்டுக்கு சொல்லாமல் யாழ்பாணத்தில் இருந்து வற்றாப்பளை போன லொறியில் ஏறி போய், பொங்கல் முடிய வீட்டை வந்து, வீட்டில் பூசை கிடைத்த ஆட்கள் எல்லாம் இருக்கினம். 

ஆனால் அப்போ சமூகம் கண்ணியமாக இருந்தது. புலிகள் வெளுத்துபோடுவார் என்ற பயம் இருந்தது - ஆகவே ஓடியோர் சில நாளில் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இப்படி பலர் சேர்ந்து, திட்டமிட்டு, ஒருவரோடு ஒருவர் பேசி, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு எமது சமூகத்தில் அறம் செத்து போய்விட்டது என்பதுதான் உண்மை.

எட்டு தமிழர்களில் ஒருவருக்கு கூட இது தப்பு என்று உறைக்கவில்லை.

34 minutes ago, nunavilan said:

17 வயது சிறுமிகள் வீட்டால் வெளிக்கிட்டு தனியாக செல்வதில் அவர்களின் பெற்றோருக்கும் பொறுப்பு உண்டு.

இவ்வளவு நடந்தும் பொது மககள் யாரும் காணவில்லையா? பொறுப்புடன் காவல்துறைக்கு அறிவித்து இருக்க வேண்டும்.

வீட்டுக்கு வெளியில் இரு  சிறுமிகள் வெளிக்கிட்டால் துர்நடத்தை ஆகி விடுமா?

பாதிக்கப்பட்ட சிறுமிகள் விளக்கமறியலிலா வைக்கப்பட வேண்டும்?

இவையெல்லாம் இன்றைய சமூகத்திற்கு புதிதல்லவே. தினசரி இந்திய தொடர் நாடகங்களிலும்,திரைப்படங்களிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் தானே?  நடக்கக்கூடாத நிகழ்வுகளையெல்லாம் தத்துவரூபமாக காண்பித்து  அதை சரியென நிறுவிவிடுவார்கள்:அந்த முன்னேற்றத்தை பார்த்து  நிஜ வாழ்க்கையிலும் அதை தொடர ஆரம்பித்து விட்டார்கள்.

ஏனெனில் இன்றைய காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி நாடகங்கள் தானே ஆட்சி செய்கின்றது.

Edited by நிழலி
மேற்கோள் காட்டப்பட்ட கருத்தில் இருந்த ஒரு சொல் நீக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

17 வயது சிறுமிகள் வீட்டால் வெளிக்கிட்டு தனியாக செல்வதில் அவர்களின் பெற்றோருக்கும் பொறுப்பு உண்டு.

இந்த பதின்ம வயது பிள்ளைகள் எதற்காக வீட்டில் இருந்து வெளியேறினார்கள் என்பது தெளிவில்லை. பெற்றோர்களின் அனுமதியுடன் போனார்களா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. அவர்களுக்கு வெளி உலகம் எப்படியானது என்ற விழிப்புணர்வு கூட இருந்திருக்காது. ஏன் பெற்றோருக்கும் தெரிந்திருக்கவில்லை போலுள்ளது. ஆனால் அரைகுறை செய்தியை வெளியிட்டு அந்தப் பிள்ளைகளுக்கு ஒரு பட்டம் கொடுத்தாயிற்று.. 

அவர்களாக விரும்பி இதற்கு உடன்பட்டிருந்தால் மற்றையவர் இடையில் தப்பிப் போய் உதவி கேட்டிருக்கமாட்டார், அந்த ஆண்களின் territory என்பதால் பயத்தில்/மனப்பயத்தில் இருந்திருக்கலாம். எதுவாக இருந்திருந்தாலும் தனியே பெற்றோர், பிள்ளைகளை மட்டும் குறை கூற முடியாது. சமூகப்பொறுப்புணர்வு கூட இல்லை என்பதைதான் இது காட்டுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

இவையெல்லாம் இன்றைய சமூகத்திற்கு புதிதல்லவே. தினசரி இந்திய தொடர் நாடகங்களிலும்,திரைப்படங்களிலும் நடக்கும் நிகழ்ச்சிகள் தானே?  நடக்கக்கூடாத நிகழ்வுகளையெல்லாம் தத்துவரூபமாக காண்பித்து  அதை சரியென நிறுவிவிடுவார்கள்:அந்த முன்னேற்றத்தை பார்த்து  நிஜ வாழ்க்கையிலும் அதை தொடர ஆரம்பித்து விட்டார்கள்.

ஏனெனில் இன்றைய காலங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சி நாடகங்கள் தானே ஆட்சி செய்கின்றது.

உண்மைதான். இதில் மட்டும் அல்ல, குடும்பபூசல்கள் வரவும், வயது முதிர்ந்த பலர் விரைவாக மனநிலை பாதிக்கபடவும் இவை காரணமாகிறது.

அதே போல் மிக இலகுவாக இப்போ கிடைக்கும் பாலியல் வீடியோக்களும் கூட பலதை சாதராணமாக்கி விட்டிருக்கிறது.

அவற்றில் வருவதை நடிப்பு என்று பார்க்காமல் அதையே செயல்படுத்த விழைவது. யூகேயில் பதின்மவயது பிள்ளைகள் பலர், கூட்டு பாலியல் உறவை சாதாரணமாக கருதி, அதை ஒரு காதல் உறவின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பாக வைத்திருப்பதாக அண்மையில் ஒரு அறிக்கை வாசித்தேன்.

ஆனால் என்னதான் படம் பார்த்து கெட்டு போயிருந்தாலும்… இதை செய்யும் போது அவர்கள் கட்டாயம் இதை தப்பென உணர்ந்தே இருப்பார்கள்.

அல்லது அவர்கள் மத்தியில் இது சாதாரணம் என்ற அளவில் அவர்கள் மனநிலை இருந்திருக்க வேண்டும்.

இங்கே 12-18 வயது ஆதரவறோர் காபகங்களில் வாழும் பிள்ளைகளை 500 பேருக்கு மேல், பல நூற்றுகணக்கான பாகிஸ்தான் ஆண்கள் இப்படி வருட கணக்கில் வட இங்கிலாந்தில் வன் கொடுமை செய்த மூன்று வேறு சம்பவங்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.

இதில் ஈடுபட்ட ஆண்கள் அநேகம் பேர் சகோதரர்கள், சகோதரிகளின் கணவர்கள், சம்பந்திகள், மகன்கள், மருமகன்கள். எல்லாரும் தமது சொந்த டாக்சிகளில், தமக்கு சொந்தமான சிக்கன் கடைகளில், பிளாட்டுகளில் இந்த பிள்ளைகளை கூட்டாக பல வருடம் வன் கொடுமை செய்துள்ளார்கள்.

பின்னர் அதே ஆண்கள் தம் வீடுகளுக்கு போய், தம் வீட்டு பெண்கள் முன் தந்தையாக, கணவனாக, பாட்டனாக, மகனாக வாழ்ந்து வந்துள்ளனர். அடுத்த முறை இந்த பிள்ளைகளை தீண்டும் வரை.

ஒரு சமூகம் இப்படி மோசமாக அறம் பிழைக்குமா? என நான் இவற்றை பார்த்து யோசிப்பதுண்டு. ஏனைய மதத்தவரை மனிதரே இல்லை என போதிக்கும் அவர்கள் மதம் ஒரு காரணம் எனவும் நினைப்பதுண்டு.

டெல்லி, தமிழ் நாட்டில் இப்படி செய்திகள் வரும் போதும் இப்படி நினைப்பேன்.

ஆனால் இப்போ நாமும் அப்படி ஒரு சமூகமாக, அதுவும் எமது கலாச்சார தலைநகரிலே மாறி நிற்கிறோம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, goshan_che said:

ஆனால் இப்போ நாமும் அப்படி ஒரு சமூகமாக, அதுவும் எமது கலாச்சார தலைநகரிலே மாறி நிற்கிறோம்.

 உண்மைதான்......
 முதலில் நான் இந்த செய்தியை வாசிக்கும் போது இது இந்தியாவிலா இலங்கையிலா என ஒரு கணம் யோசித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டை விட்டு தனியே புறப்படும் போதே நடக்கப் போகும் அத்தனைக்கும் இவர்களே பொறுப்பாளிகள்

வெளியில் தனியே செல்வதால் வரக்கூடிய ஆபத்துக்களை எமது வீடுகள் சொல்லியே வளர்க்கின்றனர்

அதையும் தாண்டி சென்று பாதிக்கப்பட்ட இவர்கள் இன்னொரு தலைமுறைகளுக்கு பாடமாக இருக்கப் போகிறார்கள் ☹️

1 minute ago, விசுகு said:

பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக காட்டும் (victim blaming), குற்றவாளிகளாக தீர்ப்பெழுதும் இந்த கயமையை கைவிடுங்கள் விசுகு. 
ஒரு பெண்ணோ அல்லது பெண் பிள்ளையோ வீட்டை விட்டு வெளியே வந்தால் அப் பெண் மீது வன்முறையை பிரயோகிக்காமல் இருப்பது குறைந்தபட்ட அறமும் மனசாட்சியுமுள்ள ஒரு சமூகத்தின் கடமை. அப்படி சொல்லாமல் கொள்ளாமல் வெளியே வந்தால் உன் மீது பாலியல் வன்முறையை ஏவுவதில் தவறே இல்லை என்ற ஆணாதிக்க மனப்பான்மை அங்கு இருப்பதால் தான் இவை நிகழ்கின்றன. அந்த மனனிலையில் இருந்து தான் உங்களின் இந்தப் பதிலும் வருகின்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த பதின்ம வயது பிள்ளைகள் எதற்காக வீட்டில் இருந்து வெளியேறினார்கள் என்பது தெளிவில்லை. பெற்றோர்களின் அனுமதியுடன் போனார்களா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. அவர்களுக்கு வெளி உலகம் எப்படியானது என்ற விழிப்புணர்வு கூட இருந்திருக்காது. ஏன் பெற்றோருக்கும் தெரிந்திருக்கவில்லை போலுள்ளது. ஆனால் அரைகுறை செய்தியை வெளியிட்டு அந்தப் பிள்ளைகளுக்கு ஒரு பட்டம் கொடுத்தாயிற்று.. 

ஆசிரியர்கள் பெற்றேர்கள் நாங்கள் இருந்த காலத்தில் இல்லை.

எல்லோருமே வெறும் பார்வையாளராக மாறிவிட்டார்கள்(மாற்றிவிட்டார்கள்)இது வேதனையான உண்மை.

1 hour ago, nunavilan said:

17 வயது சிறுமிகள் வீட்டால் வெளிக்கிட்டு தனியாக செல்வதில் அவர்களின் பெற்றோருக்கும் பொறுப்பு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

வீட்டை விட்டு தனியே புறப்படும் போதே நடக்கப் போகும் அத்தனைக்கும் இவர்களே பொறுப்பாளிகள்

வெளியில் தனியே செல்வதால் வரக்கூடிய ஆபத்துக்களை எமது வீடுகள் சொல்லியே வளர்க்கின்றனர்

அதையும் தாண்டி சென்று பாதிக்கப்பட்ட இவர்கள் இன்னொரு தலைமுறைகளுக்கு பாடமாக இருக்கப் போகிறார்கள் ☹️

பாவங்கள் அண்ணை. பதின்ம வயதில் வீட்டை விட்டு ஓடுற பனிப்புத்தி சிலருக்கு வாறது. இப்படி வந்து ஆபத்தில் மாட்டி விட்டதுகள்.

இவர்கள் வீட்டை விட்டு ஓடி வராமல் பெற்றோர் அனுப்பி பேரூந்து நிலையத்தில் மாட்டுப்பட்டிருந்தாலும் இதேதான் நடந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
48 minutes ago, விசுகு said:

வீட்டை விட்டு தனியே புறப்படும் போதே நடக்கப் போகும் அத்தனைக்கும் இவர்களே பொறுப்பாளிகள்

வெளியில் தனியே செல்வதால் வரக்கூடிய ஆபத்துக்களை எமது வீடுகள் சொல்லியே வளர்க்கின்றனர்

விசுகர்! பத்து வருடங்களுக்கு முன்னர் இதே சம்பவம் நடந்திருந்தால் இந்த வசனங்களை உதிர்த்திருப்பீர்களா? 
நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நாடு என்றல்லவா புகழ் பாடித்திரிந்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆசிரியர்கள் பெற்றேர்கள் நாங்கள் இருந்த காலத்தில் இல்லை.

எல்லோருமே வெறும் பார்வையாளராக மாறிவிட்டார்கள்(மாற்றிவிட்டார்கள்)இது வேதனையான உண்மை.

அங்கிள், மானிப்பாயில் என நினைக்கிறேன் குடும்பத்திலுள்ள ஆண்களாலும் வேறு ஆண்களாலும் பாலியல் ரீதியாகவும் வன்முறைகளாலும் பாதிக்கப்பட்டு கருவுற்ற பெண்கள்,சிறுமிகள் மற்றும் காதலர்கள் ஏமாற்றப்பட்டு கருவுற்ற பெண்கள், சிறுமிகளை பாராமரித்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை உரிய முறையில் தத்தெடுக்கும் வசதி, மற்றும் அந்த பெண்களுக்கான சுய தொழில் ஒன்று etc..செய்கிறார்கள் என எனது நண்பி கூறினார்.. அவர் கூறிய சம்பவங்களை கேட்டபொழுது.. மனதில் பாறாங்கல்லை வைத்தது போன்ற ஒரு உணர்வு, வேதனை. அந்தளவிற்கு எங்களது சமூகத்தின் நிலை. அங்கே போகும் பொழுதெல்லாம் எப்பொழுது எங்கள் சமூகம் இந்தப் போதையில் இருந்து வெளி வரும் என்ற எண்ணமே ஏற்படுகிறது.  

அதே போல பாடசாலைகள் தனியே பெறுபேறுகளில் மட்டூமே கவனம் செலுத்துகின்றனவோ என அங்கே போகும் சமயங்களில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து நினைப்பதுண்டு.. பெற்றோர்களுக்கும் மாணவர்களும் சமூகத்தில் நடைபெறும் சீரழிவுகளை பற்றிய விழிப்புணர்வுகள், ஆலோசனைகள் பெரிதளவில் பேசப்படுவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக காட்டும் (victim blaming), குற்றவாளிகளாக தீர்ப்பெழுதும் இந்த கயமையை கைவிடுங்கள் விசுகு. 
ஒரு பெண்ணோ அல்லது பெண் பிள்ளையோ வீட்டை விட்டு வெளியே வந்தால் அப் பெண் மீது வன்முறையை பிரயோகிக்காமல் இருப்பது குறைந்தபட்ட அறமும் மனசாட்சியுமுள்ள ஒரு சமூகத்தின் கடமை. அப்படி சொல்லாமல் கொள்ளாமல் வெளியே வந்தால் உன் மீது பாலியல் வன்முறையை ஏவுவதில் தவறே இல்லை என்ற ஆணாதிக்க மனப்பான்மை அங்கு இருப்பதால் தான் இவை நிகழ்கின்றன. அந்த மனனிலையில் இருந்து தான் உங்களின் இந்தப் பதிலும் வருகின்றது.

மன்னிக்கவும் தம்பி நிழலி 

நான் எங்கும் பெண் பிள்ளைகள் என்று குறிப்பிடவில்லையே 

எந்த பிள்ளையாயினும் வீட்டில் இருந்து வெளியே கால் வைக்கும் போதே வெளி உலகத்தை புரிந்து இருக்கணும் என்பதே என் கருத்து.

காதல் காமம் ஆணாதிக்கம் என்று எங்கும் நான் குறிப்பிட்டவில்லை.

இது தாயகத்தில் மட்டும் அல்ல வளர்ந்த நாடுகளுக்கும் பொருந்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

விசுகர்! பத்து வருடங்களுக்கு முன்னர் இதே சம்பவம் நடந்திருந்தால் இந்த வசனங்களை உதிர்த்திருப்பீர்களா? 
நள்ளிரவிலும் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நாடு என்றல்லவா புகழ் பாடித்திரிந்தோம்.

நீங்கள் ஓடுகாலிகள் பற்றி பேசுகிறீர்கள்

நான் தமது அத்தனையையும் இழந்து நடைப்பிணமாகிய அவர்களது பெற்றோர்கள் நிலையில் இருந்து பேசுகிறேன் ☹️

குறிப்பு - இங்கும் ஆண் பெண் பிள்ளைகள் என்று எங்கும் நான் குறிப்பிட்டவில்லை 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

நீங்கள் ஓடுகாலிகள் பற்றி பேசுகிறீர்கள்

சில வார்த்தை பிரயோகங்கள் வாசிக்கும்போது சங்கடமாகவுள்ளது, புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன், அதுதவிர குறை சொல்லவேண்டும் எனும் எண்ணத்தில் கூறப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

சில வார்த்தை பிரயோகங்கள் வாசிக்கும்போது சங்கடமாகவுள்ளது, புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன், அதுதவிர குறை சொல்லவேண்டும் எனும் எண்ணத்தில் கூறப்படவில்லை.

நானும் அதை எழுதும் போது யோசித்தேன் ஆனால் வேறு சொல் கிடைக்கவில்லை

மன்னித்தருள்க 

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

நான் தமது அத்தனையையும் இழந்து நடைப்பிணமாகிய அவர்களது பெற்றோர்கள் நிலையில் இருந்து பேசுகிறேன்

இன்று பெரும்பாலான பெற்றோரின் நிலை இதுதான். ஆணைப்பெத்தாலென்ன? பெண்ணைப்பெத்தாலென்ன தாக்கம் எல்லாம் ஒன்றுதான். பெற்றோர் செய்வதெல்லாம் அவர்கள் கடமை, கேள்வி கேட்கக்கூடாது, புத்தி சொல்லக்கூடாது, தாங்கள் செய்வதுதான் சரியென்று நினைக்கிறார்கள். காலம் மாறிவிட்டது, சுயநலம் பெருகிவிட்டது. அவர்களும் பெற்றோராக வரும்போதுதான் அதன் தாக்கம் புரியும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, விசுகு said:

நீங்கள் ஓடுகாலிகள் பற்றி பேசுகிறீர்கள்

நான் தமது அத்தனையையும் இழந்து நடைப்பிணமாகிய அவர்களது பெற்றோர்கள் நிலையில் இருந்து பேசுகிறேன் ☹️

குறிப்பு - இங்கும் ஆண் பெண் பிள்ளைகள் என்று எங்கும் நான் குறிப்பிட்டவில்லை 

ஆணோ பெண்ணோ  ஓடுகாலிகளோ அல்லது நாய்க்கூட்டங்களோ 18 வயதிற்குட்பட்டவர்களுடன் கூடித்திரிந்தது,தனிமையில் இருந்தது எல்லாம் சட்டப்படி குற்றம்.பெரிய தண்டனைக்குரியது.

மேலைத்தேய நாடுகளில் என்றால் கேட்டுக்கேள்வியில்லாமல் விளக்கமறியல் தான்.....

இங்கே வளர்த்த வளர்ப்பு ,சொல்லி வளர்த்ததெல்லாம் எடுபடாது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

ஆணோ பெண்ணோ  ஓடுகாலிகளோ அல்லது நாய்க்கூட்டங்களோ 18 வயதிற்குட்பட்டவர்களுடன் கூடித்திரிந்தது,தனிமையில் இருந்தது எல்லாம் சட்டப்படி குற்றம்.பெரிய தண்டனைக்குரியது.

மேலைத்தேய நாடுகளில் என்றால் கேட்டுக்கேள்வியில்லாமல் விளக்கமறியல் தான்.....

இங்கே வளர்த்த வளர்ப்பு ,சொல்லி வளர்த்ததெல்லாம் எடுபடாது.

நன்றி.

இன்று எனக்கு எழுதும் வேலை மிச்சம் 🤣 (உண்மையாகத்தான்- ஒவ்வொரு சொல்லுடனும் உடன்படுகிறேன்).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.