Jump to content

லண்டனில் பனி மழை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனிமழை செம்மையாய் இருக்கு........பெர்லினில் - 12 என்று சொன்னார்கள்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Hourly Forecast

PREV |  NEXT
THURSDAY, DECEMBER 15 - SUNDAY, DECEMBER 18
Rain Outlook: Close to 5 mm 1:00pm Thu to 12:00am Sat
Snow Outlook: Close to 10 cm 1:00pm Thu to 12:00am Sat
 
எங்களுக்கு இன்று விரைவில் ஆரம்பமாகி போகிறது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ட பக்கம் இன்னும் பனி கரையவில்லை ...இத்தனைக்கும் பெஞ்சு நாளைந்து நாள் ஆகிட்டுது...மைனஸ் 5,6 காலநிலை போகின்றது ..ஏனைய ஐரோப்பிய வீடுகள் குளிருக்கு ஏத்த மாதிரி கட்டி இருப்பார்கள் ...லண்டனில் அப்படி இல்லை என்று நினைக்கிறேன்...முக்கியமான ரோடுகளில் மட்டும் பனியை அள்ளி  எடுத்தார்கள் ...உள் வீதிகளை பற்றி அரசுக்கோ ,மாநகர சபைக்கோ கவலை இல்லை ...வரியை மட்டும் புடுங்கி எடுப்பார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வேளை, இம்மாதிரி நாடுகளுக்கு வேலைக்கு செல்லவில்லை.

50 பாகை வெயிலை தாங்கிக்கொள்ளலாம், ஆனால் இந்த பனியும், பனிக்கட்டிகளும்..!

கை, கால்கள் விறைத்து மூச்சு விடமும் சிரமம்.  (சுவிஸ், டாப் ஆஃப் ஈரோபில் பெற்ற அனுபவத்தில் சொல்கிறேன்.)

வாழ்க்கையை இம்மாதிரி இடங்களில் ஓட்ட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

நல்ல வேளை, இம்மாதிரி நாடுகளுக்கு வேலைக்கு செல்லவில்லை.

50 பாகை வெயிலை தாங்கிக்கொள்ளலாம், ஆனால் இந்த பனியும், பனிக்கட்டிகளும்..!

கை, கால்கள் விறைத்து மூச்சு விடமும் சிரமம்.  (சுவிஸ், டாப் ஆஃப் ஈரோபில் பெற்ற அனுபவத்தில் சொல்கிறேன்.)

வாழ்க்கையை இம்மாதிரி இடங்களில் ஓட்ட முடியாது.

இயற்கையில் கொடைகளில் ஒன்றான குளிரான காலநிலையும் ஒரு சுகமான அனுபவம் தான் வன்னியர். 0 பாகைக்கு குறைவான வெப்பநிலையில் திறந்த வெளி   Christmas market ல் சூடான ஐரோப்பிய பாரம்பரிய mulled wine ஐ குடிப்பதும் மகிழ்ச்சியான அனுபவம்.

பனிச்சறுக்கு விளையாட்டுக்காக விசேட விடுமுறை எடுத்துக் கொண்டு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவதும், அனுபவிப்பதும் இந்த பனிபொழிவின் பின்னரான காலப்பகுதியில் தான்.

அதை விட,  பஞ்சு போல் வெளியில் அழகாகக் காட்சி தரும் வெள்ளி பனி யை வீட்டு படுக்கையறையில் சூடான போர்வையை போர்ததியபடி மெதுவாக ஜன்னலைத் திறந்து பார்த்துவிட்டு மீண்டும் போர்ததுக்கொண்டு தூங்குவதும் ஒரு சுகமான அனுபவம் தான்.   

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ராசவன்னியன் said:

நல்ல வேளை, இம்மாதிரி நாடுகளுக்கு வேலைக்கு செல்லவில்லை.

50 பாகை வெயிலை தாங்கிக்கொள்ளலாம், ஆனால் இந்த பனியும், பனிக்கட்டிகளும்..!

கை, கால்கள் விறைத்து மூச்சு விடமும் சிரமம்.  (சுவிஸ், டாப் ஆஃப் ஈரோபில் பெற்ற அனுபவத்தில் சொல்கிறேன்.)

வாழ்க்கையை இம்மாதிரி இடங்களில் ஓட்ட முடியாது.

Winter im Harz: So wird Ihr Winterurlaub unvergesslich

கடும் குளிரும் ஒரு சந்தோசம் தான்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

Winter im Harz: So wird Ihr Winterurlaub unvergesslich

கடும் குளிரும் ஒரு சந்தோசம் தான்.😁

சாமி ஒரு மூடுல சொல்லுற மாதிரி இருக்கு எனக்கு மட்டும்தானா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சாமி ஒரு மூடுல சொல்லுற மாதிரி இருக்கு எனக்கு மட்டும்தானா

என்ரை கூட்டுவள் எல்லாத்துக்கும் கற்பூர மூளையப்பா 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2022 at 09:48, ராசவன்னியன் said:

நல்ல வேளை, இம்மாதிரி நாடுகளுக்கு வேலைக்கு செல்லவில்லை.

50 பாகை வெயிலை தாங்கிக்கொள்ளலாம், ஆனால் இந்த பனியும், பனிக்கட்டிகளும்..!

கை, கால்கள் விறைத்து மூச்சு விடமும் சிரமம்.  (சுவிஸ், டாப் ஆஃப் ஈரோபில் பெற்ற அனுபவத்தில் சொல்கிறேன்.)

வாழ்க்கையை இம்மாதிரி இடங்களில் ஓட்ட முடியாது.

கடும் பனிகுளிர் வெப்பம் பற்றி அனுபவம் உள்ள நண்பர்களிடம்  விவாதித்தோம். நல்ல சூடான கோப்பியும் மின்சார அல்லது காஸ்  கீட்டர் வசதியும் இருந்தால் அறைக்குள் இருந்து பனியை யன்னல் வழியாக பார்க்க தான் முடியும்.வெளியே சென்றால் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை தான் குளிருக்கு தாங்குபிடிக்க முடியும். ஆனால் வெப்பத்தில் போதுமான தண்ணீர் போத்தல் கிடைக்கும் வசதி இருந்தால் களைக்க களைக்க வெளியில் தாரளமாக திரியலாம்.
நீங்கள் சொன்னது சரியே.
செய்தி கேட்டிருப்பீர்கள் அமெரிக்காவில் கடும் குளிர்  மக்கள் வீடுகளுக்குள் முடங்கி போய் உள்ளனர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

கடும் பனிகுளிர் வெப்பம் பற்றி அனுபவம் உள்ள நண்பர்களிடம்  விவாதித்தோம். நல்ல சூடான கோப்பியும் மின்சார அல்லது காஸ்  கீட்டர் வசதியும் இருந்தால் அறைக்குள் இருந்து பனியை யன்னல் வழியாக பார்க்க தான் முடியும்.வெளியே சென்றால் ஒரு குறிப்பிட்ட நேரம் வரை தான் குளிருக்கு தாங்குபிடிக்க முடியும். ஆனால் வெப்பத்தில் போதுமான தண்ணீர் போத்தல் கிடைக்கும் வசதி இருந்தால் களைக்க களைக்க வெளியில் தாரளமாக திரியலாம்.
நீங்கள் சொன்னது சரியே.
செய்தி கேட்டிருப்பீர்கள் அமெரிக்காவில் கடும் குளிர்  மக்கள் வீடுகளுக்குள் முடங்கி போய் உள்ளனர்.

இந்தக் கடுங்குளிரும் பனிமழையும் நீங்கள் இருக்கும் இடங்களின் சேவைகள், வசதிகள், மற்றும் உங்கள் உடல் பழக்கம் என்பவை பொறுத்து சுமையாக அல்லது சுகமாகத் தெரியும்.

சில யாழ் கள உறவுகள் வசிக்கும் மினசோட்டா மாநிலத்தில் பல வருடங்கள் வசித்தேன். நவம்பரில் தரையில் விழும் பனி, மார்ச் வரைக் கரையாது. ஆனால், நகரங்கள் பனி பெய்யும் போதே இரவிரவாக தெருக்களைச் சுத்தம் செய்து, பனி உருக்கும் உப்பைப் போட்டு காலையில் போக்குவரத்திற்கு வழி செய்து விடும் - எந்த வேறுபாடுமில்லாமல் நாளாந்த வாழ்க்கை நகரும். சில நாட்களில் windchill மூலம் ஏற்படும் உணரும் (feel-like) வெப்ப நிலை பூச்சியத்திற்குக் கீழே -30-40  வரை போயிருக்கிறது. அந்த நாட்களில் உங்கள் மூச்சுக் காற்று அப்படியே உங்கள் மீசை மீது பனித்துகளாக உறையும்😅. ஆனால், கையுறை, down feather coat எனப்படும் கோட், தொப்பி இவையெல்லாம் இருந்தால் வெளியே நடப்பதில் பிரச்சினையிருக்காது. வாகனங்கள் high crank Amp பற்றரியோடு வருவதால் அந்த உறைபனியிலும் ஸ்ரார்ட் ஆகி ஓடும்! இயந்திரத்தினுள் இருக்கும் நீர்த்துளிகள் உறைந்து விடாமலிருக்க இடைக்கிடை அன்ரி பிறீஸ் (anti-freeze) பெற்றோலோடு கலப்பதும் வாகனங்கள் சாதாரணமாக ஓட உதவும்!

மிக நீண்ட உறைபனிக் கால நிலை கொண்ட நோர்வே, பின்லாந்து நாடுகளில் வாழும் மக்களுக்கு இதெல்லாம் ஜுஜுபியாகத் தெரியும்!😂

  • Like 1
Link to comment
Share on other sites

-40 இலிருந்து + 40 வரை வாழ்ந்தாகி விட்டது. குளிர் பிரதேசங்களில் பனி மழையில்(freezzing rain) வாகனம் செலுத்துவது சவாலானது. அடிக்கடி வாலி சொல்வது போது பனியை சவள் கொண்டு அள்ளி எறிவது வாழ்க்கை வெறுக்கும். 
பிள்ளைகளுடன் பனியில் விளையாடுவது  வாழ்க்கையின் சந்தோசத்தின் ஒரு பங்கு உங்கள் நினைவில் இருக்கும். மேலும் பனியின் அழகை எழுத்தில் வடிக்க முடியாது. யாழில் சில உறவுகள் படம் பிடித்து போட்டது நினைவில் உண்டு.
ஒரு முறை எனது கார் கியூபெக்கில் பனியில் புதைந்து விட்டது.  ஒரு சில நிமிடங்களில் தெருவில் பயணிப்போர்  தமது வாகனங்களை நிறுத்தி விட்டு எனது வாகனத்தை தள்ளி பொது வீதியில் விட்டு விட்டு சென்றார்கள். அவர்களை நினைவில் இன்று வரை இருந்தாலும் அவர்கள் யாரென்றே தெரியாது. இப்படியான அரிதான அனுபவங்கள் நிறைய உண்டு.

பழகி விட்டால்  ஜஸ்டின் சொல்வது போல் எல்லாம் piece of cake.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரவில் இங்கே 20 பாகை வெப்பம் தான். ஆனால் இந்த குளிரையே தாங்க முடியவில்லை, இரவில் தூக்கமும் வரவில்லை.

சாதாரணமாக திரியும் மொட்ட பசங்க, "டவுசர் பாண்டி"களாக இங்கே தெருவில் உல்லாசமாக திரிவதும் வெப்பம் கொடுக்கும் தயவில்தான். 🤣

வெப்பத்தில் வாழ்ந்த எமக்கு, 20 பாகை மிதமான குளிரும் சுமைதான்..! எப்போடா ஜூன் மாதம் வருமென உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இம்மாதிரி தேவையா? இதையா ரசிக்கிறீர்கள் அன்பர்களே?🤔

Fk4ulY7aYAQ_8GD.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

இன்று இரவில் இங்கே 20 பாகை வெப்பம் தான். ஆனால் இந்த குளிரையே தாங்க முடியவில்லை, இரவில் தூக்கமும் வரவில்லை.

சாதாரணமாக திரியும் மொட்ட பசங்க, "டவுசர் பாண்டி"களாக இங்கே தெருவில் உல்லாசமாக திரிவதும் வெப்பம் கொடுக்கும் தயவில்தான். 🤣

வெப்பத்தில் வாழ்ந்த எமக்கு, 20 பாகை மிதமான குளிரும் சுமைதான்..! எப்போடா ஜூன் மாதம் வருமென உள்ளது.

நயன் தாரா, திரிஷா இவிங்க அரைகுறை உடுப்போட பனிமலையிலை உருண்டு பிரண்டு டூயட் பண்ணேக்க ரசிச்சீங்களா சார்? 😷
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

நயன் தாரா, திரிஷா இவிங்க அரைகுறை உடுப்போட பனிமலையிலை உருண்டு பிரண்டு டூயட் பண்ணேக்க ரசிச்சீங்களா சார்? 😷
 

அந்த மாதிரி உருண்டாங்களா என்ன? நான் பார்த்ததில்லையே கு.சா..! 🤓😎

இந்த அரைகுறை பாலின கவர்ச்சியை ரசிச்ச காலம் இளவயசுக் கோளாறு இருந்தப்போதான்..!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நயன் தாரா, திரிஷா இவிங்க அரைகுறை உடுப்போட பனிமலையிலை உருண்டு பிரண்டு டூயட் பண்ணேக்க ரசிச்சீங்களா சார்? 😷
 

கீரோ எனும் ஆண் குரங்கு குளிர் உடுப்பு போட்டபடி கையை காலை அசைத்து கொண்டு இருப்பார் கீரோயின் என்ற விசர் குரங்கு அந்த குளிருக்குள்ளும் தாவணியுடன் நிண்டு ஆடிக்கொண்டு இருக்கும் . படத்திலை கதையை நம்பாமல் கீரோ குரங்கை நம்பி தமிழ் சினிமா உலகம் இருக்கும் வரை தியேட்டர் பக்கம் போவதை நிறுத்தி விடனும் . 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

இம்மாதிரி தேவையா? இதையா ரசிக்கிறீர்கள் அன்பர்களே?🤔

Fk4ulY7aYAQ_8GD.jpg

இதை விளக்குவது கடினம் வன்னியர்! இதுவும் ரசிக்கக் கூடிய ஒரு நிலை தான், a slice of life என்று சொல்லலாம். பொதுவாகவே குளிர்காலம் என்பது எனக்கு பல வழிகளில் பிடித்தமான சீசன்: ஒரு அமைதி வந்து விடும், எழுதுவது , வாசிப்பது போன்ற வேலைகளில் மனமொன்றக் கூடிய அமைதி நிலவும். வீட்டினுள் கிறிஸ்மஸ் மரமும் வந்து விட்டால் கூடுதல் bliss வரும்.

ஆனால், இவையெல்லாம் கதகதப்பான சூடேற்றப் பட்ட வீடுகளுக்குள் வசிப்போருக்கான மனநிலை. வீடில்லாதோர் பாடு கடுங்குளிரில் மிகத் துன்பம் என்பதை மறக்க முடியாது!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

இம்மாதிரி தேவையா? இதையா ரசிக்கிறீர்கள் அன்பர்களே?🤔

Fk4ulY7aYAQ_8GD.jpg

 

இந்த  மாதிரி நாடுகளில் 4 காலநிலைக்கேற்ப  வாழணும்

உடுப்புக்கள் பாதணிகளிலிருந்து சாப்பாடு வரை மாற்றியாகணும்

ஆனால் நாம்  இவர்களிடமிருந்த  கற்கவேண்டியது

இவ்வாறு  இருந்தும் 

அவர்கள்  தான்  வளர்ச்சியடைந்த  நாடுகளின்  வரிசையில்  முன்னணியில்  இருக்கிறார்கள்

நாம்  அவர்களுக்கு அடிமையாக  அல்லது வறுமைக்கோட்டுக்கு கீழ்  உள்வராக  இருந்தோம் இருக்கிறோம்.

ஏன்???  எதனால்???

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

அந்த மாதிரி உருண்டாங்களா என்ன? நான் பார்த்ததில்லையே கு.சா..! 🤓😎

இந்த அரைகுறை பாலின கவர்ச்சியை ரசிச்ச காலம் இளவயசுக் கோளாறு இருந்தப்போதான்..!😜

ஐயனே! குளிர் நாடுகளில் குளிரை தாங்கக்கூடிய வீட்டு வசதிகள். குளிரை  தாங்கக்கூடிய உடை,பாத அணி வசதிகள் எல்லாம் இருக்கின்றது.அதை விட வாகனங்களுக்கும் குளிகாலத்திற்கென ரயர் வசதிகள் எல்லாம் உண்டு. எந்த குளிரிலும் நல்ல உடை அணிந்து சென்றால் குளிர் தெரியாது. அதே போல் வெய்யில் காலத்திலும் அதற்கேற்ற உடை மற்றும் இன்னும் பல வசதிகள்.
நான் இருக்கும் இடம் மலைப்பிரதேசம் என்ற படியால் சினோ முதல் கொட்டி கடைசியாக கரையும். அதாவது 6மாதம் கீற்றர் அவசியம்.


இளவேனிற்காலம் , கோடைகாலம் , இலையுதிர்காலம் , குளிர்காலம் . இந்த நான்கு காலங்களையும் அனுபவிக்கக்கூடிய நாடுகளில் வசிப்பதும் ஒரு வகை சொர்க்கம் தான்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களையும், அனுபவங்களையும் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி..!

நான்கு நாட்கள் சுவிஸ்ஸில் இருந்தபோது இயற்கை கொஞ்சும் மலைப்பகுதிகள் அபாரம், ஆனால் மலையேறி ஜங்ஃபரூச்(Jungfraujoch) சென்றபோது 'எப்போடா கீழே இறங்குவோம்..?' என்றாகிவிட்டது. முதுகெலும்பை ஊடுருவும் பனிக் குளிர்..! 🙄

ஆனால் மலை அலையடிவாரத்திலுள்ள "லாட்டர்புரூனன்" கிராமம் சொல்லவே வேணாம், பனி இல்லாத நாட்களில் கொள்ளை அழகு, நடக்கவே களைப்பு தெரியாத அவ்வளவு ரசிக்கத்தக்க இடம். அடுத்த வருடம் நிச்சயம் குடும்பத்தோடு அங்கே செல்ல வேண்டும்..!

ab693384-fcaa-44ad-af64-fd2156be27b5-16973-zurich-jungfraujoch---top-of-europe-departing-from-zurich-01.jpg

இங்கே அமீரகத்தில் இரண்டே காலம்தான். வெப்ப காலம் தோராயமாக 50 பாகையை எட்டும் அதுவும் எண்ணை வளப் பகுதியான "ருவைஸ்" பக்கம் சொல்லவே வேணாம். சூடு தாங்க இயலாது, ஆனால் எங்கு போனாலும் குளிரூட்டப்பட்டிருக்கும், பேருந்து தரிப்பிடம் முதற்கொண்டு.

மற்றது, குளிர் காலம்..இனிவரும் சனவரி முதல் மார்ச் வரை அதிக குளிர், இக்காலத்தைத்தான் தாங்க இயலாது.

இன்றும் அலுவலகம் முடிந்து வெளியே வந்தால் முகத்தில் அடித்த சில்லென்ற குளிர், தாங்க இயலாமல் பறந்துவிட்டேன் வீட்டினுள்..! 😉 ஏறக்குறைய சென்னையை ஒத்த தட்பவெப்ப நிலை, அதுவே நமக்கு பழகியது..ஏற்றது..!

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனடாவில் உள்ள ஒரு   கடற்கரையில்....  மலசலம் கழித்து விட்டு,   மண்ணால்  மூடி விட்டுப் போகும் அளவுக்கு கொஞ்சம் முன்னேறி இருக்கின்றார்கள் என அறிந்தேன். 😂
    • கனடாவில் (Canada) உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்தியா (India) தெரிவித்துள்ளது. இந்த கருத்தை வெளிவிவகார அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று (07) வெளியிட்டுள்ளார்.  அத்துடன், கடந்த ஆண்டில், கனடாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகள், அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களை அதிகளவில் எதிர்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாதுகாப்பு  இந்தநிலையில் தமது உயர்ஸ்தானிகரக அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்ட போதும், கனேடிய தரப்பால் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  அதேவேளை, கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, இந்திய பேச்சாளர் கடுமையாகக் கண்டித்துள்ளார்.  அத்துடன், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் வன்முறைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். https://tamilwin.com/article/indian-diplomats-in-under-surveillance-in-canada-1730990907#google_vignette
    • ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொன்னம்பலம் காலமானார்    ஈழத்தின் முதுபெரும் கவிஞரும் எழுத்தாளருமான மு. பொன்னம்பலம்  (மு. பொ) நேற்று புதன்கிழமை (06) கொழும்பில் காலமானார். மறைந்த எழுத்தாளர் மு. தளையசிங்கத்தின் சகோதரரான மு.பொ. 1939 இல் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்தார்.  இவர் கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனக் கட்டுரைகள் என பலவற்றை எழுதி, ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் ஆவார்.   1968இல் வெளியான “அது” கவிதைத் தொகுதியே இவரது முதல் நூலாகும்.  அகவெளிச் சமிக்ஞைகள், விடுதலையும் புதிய எல்லைகளும், பேரியல்பின் சிற்றொலிகள், யதார்த்தமும் ஆத்மார்த்தமும், கடலும் கரையும், நோயில் இருத்தல், திறனாய்வு சார்ந்த பார்வைகள், பொறியில் அகப்பட்ட தேசம், சூத்திரர் வருகை, விசாரம், திறனாய்வின் புதிய திசைகள், முடிந்துபோன தசையாடல் பற்றிய கதை முதலான நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார். எழுத்தாளர் மு. பொன்னம்பலத்தின் மறைவு ஈழத்து இலக்கியத்துறைக்கே பேரிழப்பாக கருதப்படுகிறது.  https://www.virakesari.lk/article/198112
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.