Jump to content

சீன கண்காணிப்பு பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிகாரிகள் திட்டம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீன கண்காணிப்பு பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிகாரிகள் திட்டம்!

சீன கண்காணிப்பு பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிகாரிகள் திட்டம்!

சீன கண்காணிப்பு பலூனை கண்காணித்து வரும் அமெரிக்கா, அதன் இடிபாடுகள் விழும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டதால், அதைச் சுட்டு வீழ்த்த திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு நிலைமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சீனா இன்னும் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.

சீனாவிற்கு சொந்தமான கண்காணிப்பு பலூன், சமீபத்திய நாட்களில் முக்கியமான இடங்களில் பறப்பதைக் கண்டறிந்துள்ளது. இது சமீபத்தில் மேற்கு மாநிலமான மொன்டானாவிற்கு மேலே காணப்பட்டது.

கடந்த புதன்கிழமை மொன்டானாவில் உள்ள பில்லிங்ஸ் நகரின் மீது தோன்றுவதற்கு முன், இந்த பொருள் அலாஸ்காவின் அலுடியன் தீவுகள் மற்றும் கனடா வழியாக பறந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி, பெயர் தெரியாத நிலையில், வெள்ளை மாளிகை அந்த பொருளை சுட்டு வீழ்த்துவதற்கு உத்தரவிட்டால், எஃப்-22 உட்பட போர் விமானங்களை அரசாங்கம் தயார் செய்ததாக கூறினார்.

பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி உள்ளிட்ட உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் இந்த அச்சுறுத்தல் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

வணிக விமான நிறுவனங்கள் பயன்படுத்தும் உயரத்தை விட பலூன் குறிப்பிடத்தக்க வகையில் இருந்ததால் பொதுமக்களின் விமானப் போக்குவரத்துக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

https://athavannews.com/2023/1322897

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவுக்கு மேலாக பறக்கும் சீனாவின் உளவு பலூன் : பின் தொடர்கிறது பெண்டகன்

By SETHU

03 FEB, 2023 | 09:41 AM
image

 

அமெரிக்காவுக்கு மேலாக பறக்கும் உளவு பலூன் ஒன்றை தான் பின்தொடர்வதாக அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. இது சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஜனாதிபதி ஜோ பைடனின் கோரிக்கையின் பேரில், இந்த பலூனை சுட்டுவீழ்த்துவது குறித்து அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லொயிட் ஆஸ்டின் மற்றும் பாதுகாப்புத் தரப்பு உயர் அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர். 

ஆனால், இவ்வாறு  செய்தால் தரையிலுள்ள பலருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என அவர்கள் கருதுகின்றனர் என அமெரிக்கப் பாதுகாப்புத் தரப்பு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

 பல படைத்தளங்கள் மற்றும் அணுவாயுத ஏவுகணைகள் உள்ள அமெரிக்காவின் வடமேற்குப் பிராந்தியத்தில் இந்த பலூன் பறந்துள்ளது.

https://www.virakesari.lk/article/147306

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியண்ணை இனி  24 மணி நேரமும் கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டுதான் திரியோணும் போல கிடக்கு...:beaming_face_with_smiling_eyes:

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 😎

  • Like 1
Link to comment
Share on other sites

சீனா தங்களுடைய பலூன் இல்லை என தெரிவித்துள்ளது.
3 பஸ்ஸின் அளவில் உள்ளதால் அந்த பலூனை சுட்டு  விழுத்துவது பற்றி அமெரிக்கா சிந்திக்கிறது.
மற்றுமொரு பலூன் கனடாவின் மேல் பறப்பதாகவும் கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

இவ்வாறான பலூன்கள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவமும் ஒரு சக்திவாய்ந்த பலூன் ஒன்றை இதே உயரத்தில் செலுத்தி பரிசோதித்துள்ளது. அதி உயரத்தில் இருந்தவாறே வீதியில் ஓடும் வாகனம் ஒன்றைக் கண்காணிக்க முடியுமாம்.
https://information.tv5monde.com/info/etats-unis-l-armee-teste-des-ballons-de-haute-altitude-pour-la-surveillance-de-masse-314651

இந்த பலூனைக் கைப்பற்றி அதிலுள்ள உபகரணங்களை ஆராய்ந்தால் யார் அனுப்பியது என்று தெரியவரும். 😀

Link to comment
Share on other sites

16 minutes ago, நந்தன் said:

எனக்கு வடகொரியா மேலதான் சந்தேகம்

வடகொரியாவுக்கு வாய்வீரத்தைத் தவிர அமெரிக்காவோடு உரசிப் பார்க்க இவ்வளவு தைரியம் கிடையாது.

வடகொரியா தவறுதலாக அணுகுண்டை வெடித்துவிடும் என்ற பயம்தான் எல்லோருக்கும் உள்ளதெ ஒழிய போர் வந்தால் தாக்குப் பிடிக்கக் கூடிய இராணுவம் இல்லை.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

எனக்கு வடகொரியா மேலதான் சந்தேகம்

கிம்முதான் பெஸ்ட்டு மற்றவன்லாம் புஸ்கு🤣

50 minutes ago, இணையவன் said:

வடகொரியாவுக்கு வாய்வீரத்தைத் தவிர அமெரிக்காவோடு உரசிப் பார்க்க இவ்வளவு தைரியம் கிடையாது.

வடகொரியா தவறுதலாக அணுகுண்டை வெடித்துவிடும் என்ற பயம்தான் எல்லோருக்கும் உள்ளதெ ஒழிய போர் வந்தால் தாக்குப் பிடிக்கக் கூடிய இராணுவம் இல்லை.

உங்கள் கருத்துக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்🤣

பிகு

டிவிட்டரில் பலூனை விட பலூன் பற்றிய சதி கோட்பாடுகள் அதிகம் பறக்கிறது.

யாழில் இன்னும் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கிம்முதான் பெஸ்ட்டு மற்றவன்லாம் புஸ்கு🤣

உங்கள் கருத்துக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்🤣

பிகு

டிவிட்டரில் பலூனை விட பலூன் பற்றிய சதி கோட்பாடுகள் அதிகம் பறக்கிறது.

யாழில் இன்னும் காணவில்லை.

வரும்!, ஏன் பறக்கிறியள்?😂 ஒரு 48 மணி நேரம் கொடுங்கோ!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

இவ்வாறான பலூன்கள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவமும் ஒரு சக்திவாய்ந்த பலூன் ஒன்றை இதே உயரத்தில் செலுத்தி பரிசோதித்துள்ளது. அதி உயரத்தில் இருந்தவாறே வீதியில் ஓடும் வாகனம் ஒன்றைக் கண்காணிக்க முடியுமாம்.
https://information.tv5monde.com/info/etats-unis-l-armee-teste-des-ballons-de-haute-altitude-pour-la-surveillance-de-masse-314651

இந்த பலூனைக் கைப்பற்றி அதிலுள்ள உபகரணங்களை ஆராய்ந்தால் யார் அனுப்பியது என்று தெரியவரும். 😀

உலகத்தின்ரை மூலை முடுக்கெல்லாம் இருந்த இடத்திலை இருந்து கொண்டே நோண்டி நோண்டி பாக்கிற அமெரிக்காவுக்கு ஆர்ரை பலூன் எண்டது தெரியாமலா இருக்கும்?

தாங்களே மேலை விட்டுட்டு சோக்கு காட்டுவானுகள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

தாங்களே மேலை விட்டுட்டு சோக்கு காட்டுவானுகள்

பலூன் தங்களின் வானிலை அறியும் பலூன் காற்றுக்கு மாறி பறந்து விட்டது என்கிறது சீனா.

https://www.aljazeera.com/amp/news/2023/2/3/china-says-balloon-over-us-airspace-is-civilian-airship

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

பலூன் தங்களின் வானிலை அறியும் பலூன் காற்றுக்கு மாறி பறந்து விட்டது என்கிறது சீனா.

அப்ப நான்  வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு எண்டு சொன்னது சரிதானே? :beaming_face_with_smiling_eyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

அப்ப நான்  வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு எண்டு சொன்னது சரிதானே? :beaming_face_with_smiling_eyes:

ஓம்.

நீங்கள் சொல்லி நான் எப்ப மறுத்திருக்கிறன்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Map showing possible route of balloon from China to US

என்னப்பா.. ரஷ்சியாவுக்க புகுந்து கண்ணில விரலை விட்டு ஆட்டிறவைக்கு.. தங்க நாட்டுக்கு மேலால பலூன்.. பலூன்.. பலூன் பறந்தது கூடத் தெரியல்லையாம். யாரோ தெருவால போறவை சொல்லித்தான் தெரிஞ்சிருக்குது. இதில விண்வெளில பூமியை பாதுகாக்க கண்காணிச்சிட்டே இருக்கினமாம்.. நாசா பெருமிதம். கொடுமைடா சாமி. கெட்டிக்காரன் புளுகு...........

இன்னுமா சுட்டு வீழ்த்தவில்லை...??!

Map showing Montana, Billings and Malmstrom Air Force base

Graphic of high altitude balloon, showing helium filled balloon, solar panels and instruments bay which can include cameras, radar and communications equipment. They can fly at heights of 80,000ft-120,000ft, higher than fighter jets and commercial aircraft

படங்கள்: https://www.bbc.co.uk/news/world-64514120

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது: பிளிங்கன் அதிருப்தி!

அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது: பிளிங்கன் அதிருப்தி!

அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது என்று இராஜங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ள நிலையில், இது இறையாண்மையை மீறும் செயல் என ஆண்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட திட்டமிடப்பட்ட வருகைக்கு முன்னதாக இவ்வாறு நடந்துக்கொள்வது இன்னமும் பொறுப்பற்றது என அவர் விமர்சித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சீனாவுக்கான பயணத்தை உயர்மட்ட அமெரிக்க இராஜதந்திரி திடீரென ரத்து செய்துள்ளார். இது பல ஆண்டுகளாக அங்கு நடைபெறும் முதல் உயர்மட்ட அமெரிக்க-சீனா சந்திப்பாக இருந்திருக்கும்.

ஆனால், இது அமெரிக்க வான்வெளியில் தவறாக வீசப்பட்ட வானிலை விமானம் என்று சீனா முன்னதாக வருத்தம் தெரிவித்தது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனிடையே, நேற்று (வெள்ளிக்கிழமை) பென்டகன் இரண்டாவது சீன உளவு பலூன் தென்பட்டதனை உறுதிசெய்தது. இந்த முறை இது லத்தீன் அமெரிக்கா வானில் பறந்ததாக அது கூறியது.

பென்டகன் செய்தித் தொடர்பாளர் பிரிக் ஜெனரல் பேட்ரிக் ரைடர் இதுகுறித்து கூறுகையில், ‘லத்தீன் அமெரிக்காவைக் கடக்கும் பலூன் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். இது மற்றொரு சீன கண்காணிப்பு பலூன் என்று நாங்கள் இப்போது மதிப்பிடுகிறோம்’ என கூறினார். பலூன் இருக்கும் இடம் பற்றிய கூடுதல் விபரங்களை அவர் வழங்கவில்லை.

வர்த்தக போர், பாதுகாப்பு, தாய்வான் மற்றும் கொவிட்-19 உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் உயர்மட்ட தூதர் பெப்ரவரி 5 முதல் 6 வரை பெய்ஜிங்கிற்குச் செல்லவிருந்தார்.

ஆனால், அமெரிக்க வான்பரப்பில் சீனாவின் கண்காணிப்பு பலூனை அவதானித்த பிறகு இந்த பயணம் இரத்துசெய்யப்பட்டது.

 

https://athavannews.com/2023/1323022

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chinese Spy Balloon in US: அமெரிக்க வானில் தென்பட்ட வெள்ளை பலூன் சீனா அனுப்பியதா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எந்த ஆதாரமும் அற்ற யூகத்தின் அடிப்படையிலான பேச்சுக்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 
- சீனா 👇
 
China does not accept baseless speculation, hype, Wang Yi says in phone talks with Blinken after balloon incident
By Global Times Published: Feb 04, 2023 09:54 AM Updated: Feb 04, 2023 06:03 PM
  •  
  •  
    •  
    •  
      •  
      •  
        •  
Chinese State Councilor and Foreign Minister Wang Yi (left) and US Secretary of State Blinken.

Chinese State Councilor and Foreign Minister Wang Yi (left) and US Secretary of State Blinken.


China is a responsible country and has always strictly abided by international law. We do not accept any groundless speculation and hype, Wang Yi, director of the Office of the Foreign Affairs Commission of the Central Committee of the Communist Party of China said in phone talks with US Secretary of State Antony Blinken on Friday after the US continued to hype an balloon incident.

A spokesperson of the Chinese Foreign Ministry said on Friday a Chinese unmanned civilian airship used mainly for meteorological research purposes made an unintended entry of into the US airspace due to force majeure and rejected the spy claim made by the US.

During Wang and Blinken's phone conversation, they communicated on how to deal with the accidental incident in a calm and professional manner. Wang said in face of unexpected situations, both sides should maintain focus, communicate in a timely manner, avoid misjudgments, manage and control differences.

Prior to Wang and Blinken's talk, State Department spokesman Ned Price said that Blinken postponed his visit to China due to the balloon incident and Blinken would be prepared to visit Beijing "as soon as conditions allow."

Previous news on Blinken's visit to China on February 5 and 6 all came from the US. China has never confirmed the information.  
 
China US

China US


On Saturday, a spokesperson from the Chinese Foreign Ministry said in a statement that maintaining contact and communication at all levels is an important common understanding reached by the Chinese and US presidents at their meeting in Bali. One of the tasks of the diplomatic teams on both sides is to properly manage bilateral relations, particularly to manage unexpected situations in a cool-headed and prudent manner. 

"In fact, neither side has ever announced that there would be a visit. It is a matter for the US to make its latest announcement, and we respect that," said the spokesperson. 

Regarding the unintended entry of a Chinese unmanned airship into US airspace due to force majeure, the Chinese side has verified the situation and communicated the facts to the US side. It is a civilian airship used for research, mainly meteorological, purposes. Affected by the Westerlies and with limited self-steering capability, the airship deviated far from its planned course, the spokesperson said in the statement. 

"This is entirely an unexpected situation caused by force majeure and the facts are very clear. China always acts in strict accordance with international law and respects the sovereignty and territorial integrity of all countries," read the statement.

We have no intention to violate and has never violated the territory or airspace of any sovereign country. Some politicians and media in the US have hyped up the incident and used it to attack China. The Chinese side is firmly opposed to this kind of behavior, the spokesperson said. 

Global Times 

https://www.globaltimes.cn

Link to comment
Share on other sites

சீன பலூன் தொடர்பான சர்ச்சையை அமைதியான முறையில் கையாளுமாறு அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்!

சீன பலூன் தொடர்பான சர்ச்சையை அமைதியான முறையில் கையாளுமாறு அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்!

 

சீன பலூன் தொடர்பான சர்ச்சையை அமைதியான முறையில் கையாளுமாறு அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது.

 

கண்காணிப்பு பலூன் இருப்பது பொறுப்பற்ற செயல் என்று கூறி, அமெரிக்க இராஜாங்க செயலர் ஆண்டனி பிளிங்கன் பெய்ஜிங்கிற்கான பயணத்தை நிறுத்தினார். அத்துடன் கடுமையாக விமர்சித்தார்.

இந்த நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

‘எந்தவொரு இறையாண்மை, நாட்டின் எல்லையையும் வான்வெளியையும் ஒருபோதும் மீறவில்லை. அனைத்து மட்டங்களிலும் தகவல் தொடர்பு சேனல்களைப் பராமரிப்பது முக்கியம். சில எதிர்பாராத சூழ்நிலைகளை அமைதியான மற்றும் நம்பகமான முறையில் கையாள வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள சில அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் சீனாவைத் தாக்குவதற்கும் அவதூறு செய்வதற்கும் இந்தச் சம்பவத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்திக் கொண்டன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தைப் பற்றி பிளிங்கனுடன் விவாதித்ததாகவும் கூறியது,

https://athavannews.com/2023/1323131

அமெரிக்க வான் பரப்பில் பறந்தது உளவு பலூன் அல்ல; ஆகாயக் கப்பல் – சீனா விளக்கம்

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற இராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தைக் கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது.

China-1-300x166.jpg
அந்தப் பலூனை சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டு விடலாம் என்று கருதி அந்த முடிவைக் கைவிட்டனர். ஏற்கனவே அமெரிக்கா-சீனா இடையே தாய்வான் விவகாரத்தால் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் உளவு பலூன் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அமெரிக்க வான் பரப்புக்குள் பறந்தது உளவு பலூன் அல்ல என்றும், அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாயக் கப்பல் என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு விவகார அமைச்சு கூறியதாவது:- அமெரிக்கா மீது பறந்து கொண்டிருக்கும் பலூன் எங்களுடையதுதான். அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாயக் கப்பல். அது இராணுவ பயன்பாட்டுக் கானதல்ல. பொதுமக்கள் பயன்பாட்டுக்கானதாகும். மேற்கில் இருந்து வீசிய காற்று மற்றும் குறைவான சுய இயங்கு தன்மையால், ஆகாயக் கப்பல் திசை மாறிச் சென்று விட்டது. அது அமெரிக்க வான் பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இது பற்றி அமெரிக்கத் தரப்புடன் தொடர்பு கொண்டு விளக்குவோம் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க வான் பரப்பில் பறந்தது ஆகாய கப்பல்தான் என்று சீனா அளித்துள்ள விளக்கத்தை அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் ஏற்க மறுத்து விட்டது. இது குறித்து பென்டகனின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பேட் டைரடர் கூறும்போது, “சீன அரசின் விளக்கம் பற்றி அறிந்தோம். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஓர் உளவு பலூன் என்பது எங்களுக்குத் தெரியும். அது அமெரிக்க வான்வெளி மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபற்றி சீன அரசிடம் தூதரக ரீதியிலும் மற்றும் பல்வேறு மட்டங்களிலும் நேரடியாகவே தெரிவித்து விட்டோம்” என்றார்.

https://thinakkural.lk/article/237613

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://tamil.oneindia.com/news/new-york/us-defense-experts-explain-that-china-s-balloon-flying-over-the-us-cannot-be-shot-down-497348.html

யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்

இதேபோல 1998ம் ஆண்டு ஒரு பலூனை கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான F-18 விமானம் சுட்டது.
Published: Sunday, February 5, 2023, 0:48 [IST]
 
Google Oneindia Tamil News
 

நியூயார்க்: அமெரிக்காவின் வான் எல்லையில் அந்நாட்டு ஏவுகணை தளங்கள் மீது நிலைகொண்டுள்ள சீனாவின் பலூன் குறித்து சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இந்த பலூனை சுட்டு வீழ்த்துவது எளிதான காரியமல்ல என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

 
 
 

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புப் படையின் உளவு பலூன் நிபுணரான வில்லியம் கிம் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது, "இந்த மாதிரியான பலூன்களை பயன்படுத்துவதில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. நீங்கள் உளவு பணிக்காக விமானங்களையோ அல்லது ஆளில்லாத விமானங்களையோ அனுப்பினால் அது நிச்சயம் ரேடார் கண்களுக்கு சிக்கவிடும். ஆனால் பலூன்கள் இப்படி சிக்காது. ஏனெனில் பலூன்கள் உலோகத்தால் செய்யப்பட்டவை கிடையாது.

எனவே இதனை கண்டுபிடிப்பது கஷ்டம். இரண்டாவது அம்சம் இதன் பறக்கும் திறன். இந்த வகை பலூன்கள் அசால்டாக 65 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 1 லட்சம் அடி உயரம் வரை பறக்கும். எனவே இதனை பூமியிலிருந்து பார்த்தால் கூட கண்களுக்கு தெரியாது. ஆனால் இந்த சீன பலூன் 45 ஆயிரம் அடியில்தான் பறந்துக்கொண்டிருக்கிறது. விமானத்தை இயக்குவதை பலூன்களை இயக்குவது மிகவும் கடினமானது. காற்றின் வேகத்திற்கு உங்களால் அதனை எப்போதும் மிகச்சரியாக இயக்க முடியாது.

 

தேவையில்லாம பேசாதீங்க.. நாங்க அப்படி பண்ணல! 'உளவு' பலூன் விவகாரத்தில் சீனா கறார் விளக்கம்தேவையில்லாம பேசாதீங்க.. நாங்க அப்படி பண்ணல! 'உளவு' பலூன் விவகாரத்தில் சீனா கறார் விளக்கம்

 
 
திசை

திசை

உயரத்தை ஏற்றி இறக்குவதன் மூலம் பலூன் பயணிக்கும் திசையை நம்மால் மாற்றி அமைக்க முடியும். அதுமட்டுமல்லாது பலூனோடு இருக்கும் பொருள் என்னவென்று நம்மால் பூமியிலிருந்து சரியாக பார்த்து புரிந்துக்கொள்ள முடியாது. ஒரு அனுமானம் மட்டுமே செய்ய முடியும். சீன பலூனை பொறுத்த அளவில் இதில் கண்களுக்கு புலப்படும் வகையில் உளவு கருவிகள் இருக்கின்றன. இதனை பார்த்தால் பூமியிலிருந்து இயக்குவதை போல தெரியவில்லை. என்னுடைய கணிப்பு சரியாக இருப்பின், இது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

 
 
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

எனவே இது தான் நினைத்த இடத்திற்கு தானாக சென்றுவிடும். இதனை தடுக்க முடியாது, இதில் ரேடியோ தகவல் தொடர்பு கருவிகள் இணைக்கப்பட்டிருக்கலாம். அதன் மூலம் இது உளவு செய்திகளை தன்னுடைய உரிமையாளருக்கு அனுப்பும். செயற்கைக்கோள்களை ஒரே இடத்தில் வைத்து நம்மாள் நீண்ட நாட்களுக்கு அந்த இடம் குறித்த தகவல்களை திரட்ட முடியாது. ஆனால், பலூன்களை சுமார் ஒரு மாதம் வரைகூட ஒரே இடத்தில் நிலையாக வைத்திருக்க முடியும். அமெரிக்க எல்லைகளுக்கு வெளியே இருந்து அமெரிக்கா தொடர்பான டேட்டாக்களை சேகரிக்க இந்த சழுன பலூன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

 
 
சுட முடியாது
 

சுட முடியாது

ஆனால் தற்போது இது வேலை செய்துக்கொண்டிருக்கிறதா? இல்லையா? என்பது சரியாக தெரியாது. இந்த பலூனில் சோலார் பேனல்கள் இருக்கின்றன. இதுதான் உள்ளே இருக்கும் கருவிகளுக்கு பவரை வழங்குகிறது. அதேபோல இந்த பலூனை பூமியிலிருந்து சுடுவது சாத்தியமற்றது. ஏனெனில் 46 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இலக்கை எந்த குண்டும் குறி தவறாமல் தாக்காது. இரண்டாவது இதனை சுட ராக்கெட் ஏவுகணைகளையும் பயன்படுத்த முடியாது. ஏனெனில் இந்த ஏவுகணைகள் உலோகத்தால் ஆன பொருட்களை மட்டும் இலக்கு வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
ஏன் தெரியுமா?

ஏன் தெரியுமா?

 

இதனை வானத்திலேயே சுட்டு வீழ்த்தலாம். ஆனால் அதுவும் சுலபமான காரியம் அல்ல. ஏனெனில், பலூன் முழுவதும் ஹீலியம் இருக்கிறது. ஒரு வேலை பலூனை சுட்டால் அடு வெடிக்காது ஏனெனில் ஹீலியம் எந்த அளவுக்கு லேசாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வளிமண்டலம் உள்ள பகுதியில்தான் இது நிலைக்கொண்டுள்ளது. எனவே ஜெட் விமானங்கள் மூலம் சுட்டாலும் அது எரியதான தொடங்கும் வெடிக்காது. பின்னர் மெதுவாக பூமியில் விழும். இதற்கு ஒருவாரம் வரை டைம் ஆகலாம். கடந்த 1998ம் ஆண்டு இதேபோல ஒரு பலூனை கனடாவின் விமானப்படைக்கு சொந்தமாக F-18 விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த பலூன் ஒருவழியாக கீழே வருவதற்கு சுமார் 6 நாட்கள் வரை ஆனது" என்று கூறியுள்ளார்.

 

சீனாக்காரன் பலூனை வைச்சு அமெரிக்காவைையே உளவு பார்க்கிறான். இந்த இலட்சணத்தில் இலங்கைக்கு கப்பலை அனுப்பித்தான் உளவு பார்ப்பானாம்.சீனாதான் உலக வல்லரசு. சீனா எல்லோருக்கும் ஆப்படிக்கப் போகிறது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய இராணுவ தளங்களை உளவு பார்த்ததாக கூறப்படும் இராட்சத சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.

பாதுகாப்புத் துறை, அதன் போர் விமானங்கள் அமெரிக்க கடல் எல்லையில் பலூனை வீழ்த்தியதை உறுதிப்படுத்தியது.

சனிக்கிழமையன்று இராணுவம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதால் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா கடற்கரையில் மூன்று விமான நிலையங்கள் மூடப்பட்டன மற்றும் வான்வெளி மூடப்பட்டது.

கடலில் வீழ்ந்தது

சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா | China Balloon Us Shoots Down

AP செய்தி நிறுவனத்தில் இருந்து வெளியான காட்சிகள் சிறிய வெடிப்புக்குப் பின்னர் பலூன் கடலில் விழுவதைக் காட்டியது.

வோஷிங்டனுக்கும் பீஜிங்கிற்கும் இடையே ஏற்பட்டுள்ள பதட்டங்களுக்கு மத்தியில் பலூன் அமெரிக்காவிற்கு வந்துள்ளது, வெளியுறவுத்துறை செயலாளர் அன்ரனி பிளிங்கன் இந்த விவகாரம் தொடர்பாக சீனாவிற்கான பயணத்தை நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://ibctamil.com/article/china-balloon-us-shoots-down-1675544513

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலூன் சுட்டுவீழ்த்தப்படும் காட்சி- ட்வீட்டரிலிருந்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பலூனை முதலில் பறக்க விட்டது அமெரிக்கா -  - சோவியத்தின் வான்வெளிப்பரப்பில், 50 - 60 களில் அடிக்கடி..

அனால் இந்த பலூன் மீளம் உளவு பார்த்தல் - சோவியத்தின் வான்வெளிப்பரப்பில் -  அமெரிக்கா 1945 களில் தொடங்கிவிட்டது என்ற ஓர் செய்தியும் இருக்கிறது.

இது நடக்காதது அல்ல.

அனால், சீனாவின் கையாளுதல், அமெரிக்கா துடிப்பை விட, முதிர்ச்சி அடைந்த தன்மையாக உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் 'உளவு பலூன்' - உடைந்த பாகங்களைத் தேடும் அமெரிக்கா

4 மணி நேரங்களுக்கு முன்னர்
சீனா - அமெரிக்கா

பட மூலாதாரம்,REUTERS

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன "கண்காணிப்பு பலூனின்" உடைந்த பாகங்களை தேடும் பணியில் அமெரிக்க கடற்படை டைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேடுதல் பணி விரைவாக நடக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அதையடுத்து அப்பாகங்களை நிபுணர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் அமெரிக்க ராணுவ முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த கண்காணிப்பு பலூனை கடந்த சனிக்கிழமை அமெரிக்க கடல் பகுதியில் போர் ஜெட் விமானங்கள் மூலம் சுட்டு வீழ்த்தினர். பலூனின் உடைந்த பாகங்கள் அப்பகுதியை சுற்றி உள்ளன.

இந்த பலூன் தங்கள் நாட்டின் முக்கியமான ராணுவ மையங்களை கண்காணித்ததாக அமெரிக்கா நம்புகிறது.

 

இதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ராஜரீதியிலான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கென் கடந்த வார இறுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில் இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பயணத்தை உடனடியாக ரத்து செய்தார்.

அப்பலூன் உளவு பலூன் அல்ல எனவும் வானிலை ஆராய்ச்சிக்கான பலூன் எனவும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர்களின் முன்னாள் தலைவரான அட்மிரல் மைக் முல்லன், பிளிங்கெனின் சீனப் பயணத்தை சீர்குலைப்பதற்காக அந்நாட்டு ராணுவம் வேண்டுமென்றே பலூனை ஏவியிருக்கலாம் என, ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். சமீப ஆண்டுகளில் அமெரிக்கா -சீனாவுக்கு இடையேயான உயர்மட்ட சந்திப்பாக பிளிங்கெனின் பயணம் இருந்திருக்கக்கூடும்.

"இது ஒரு விபத்து அல்ல. வேண்டுமென்றே பலூன் ஏவப்பட்டது, அப்பலூன் உளவு சார்ந்தது," என்றும் அவர் கூறினார்.

அந்த பலூனை தடையின்றி நாடு முழுவதும் செல்ல அனுமதித்ததாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடமை தவறியதாகவும் குடியரசுக் கட்சியை சேர்ந்த தலைவர்கள், குற்றம் சாட்டினர்.

செனட் புலனாய்வுக் குழுவின் துணைத் தலைவரான மார்கோ ரூபியோ, செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள அமெரிக்க அதிபரின் முக்கியத்துவம் வாய்ந்த 'ஸ்டேட் ஆஃப் யூனியன்' உரைக்கு முன்னதாக அதிபரை சங்கடப்படுத்துவதற்கான சீனாவின் "வெட்கக்கேடான முயற்சி இது" என்று சி.என்.என். ஊடகத்திடம் கூறினார்.

"ஒரு வெளிநாட்டு எதிரியை மொண்டானாவிலிருந்து எங்கள் வீட்டு வாசலுக்கு தடையின்றி பறக்க அரசாங்கம் எவ்வாறு அனுமதித்தது என்பது குறித்து எனக்கு கவலை உள்ளது," என அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திற்கு அருகே உள்ளா மர்ட்டில் பீச்சின் மேயர் பிரெண்டா பெத்துனே தெரிவித்தார்.

இது எவ்வாறு நடந்தது என்பது குறித்தும் வருங்காலத்தில் மீண்டும் இவ்வாறு நடக்காமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் அரசாங்கம் விளக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

சீனா அமெரிக்கா

சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன், மூன்று பேருந்துகளின் அளவை ஒத்ததாக இருக்கலாம். இந்த பலூன் எஃப்-22 என்ற போர் ஜெட் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. சனிக்கிழமை அமெரிக்க கடற்கரையிலிருந்து ஆறு கடல் மைல் தொலைவில் இந்த பலூன் கீழே விழுந்தது.

பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட தருணத்தை அமெரிக்க தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பின.

அந்த பலூனை சுட்டு வீழ்த்தியதை படம்பிடித்த மார்ட்டின் வில்லிஸ் என்பவர் பிபிசியிடம் பேசுகையில், தான் பார்த்ததை தன்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்தார். "மிகவும் ஆச்சர்யகரமாகவும் வரலாற்று தருணமாகவும் அது இருந்தது," என அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் தாங்கள் காணும் பலூனின் உடைந்த பாகங்களை தொட வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். "அதனை சேதப்படுத்துவது விசாரணையில் இடையூறை ஏற்படுத்தும்," என, ஹாரி கவுண்ட்டி காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த பலூனின் பாகங்கள் 47 அடி கடல் நீரில் தரையிறங்கியுள்ளது. இது அதிகாரிகள் எதிர்பார்த்ததை விட ஆழம் குறைவானது. மேலும், அந்த பாகங்கள் 11 கி.மீ. வரை பரவியுள்ளது.

சீனாவின் வெளியுறவு அமைச்சகம் "ஆளில்லா விமானங்களை தாக்குவதற்கு அமெரிக்கா பலத்தை பயன்படுத்தியதற்கு கடும் அதிருப்தியையும் எதிர்ப்பையும்" வெளிப்படுத்தியது.

தெற்கு கரோலினா கடற்கரையை சுற்றியுள்ள மூன்று விமான நிலையங்களில் பொதுமக்கள் பயன்பாட்டு விமானங்களை அமெரிக்க விமான நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.

இந்த சம்பவத்தால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் சீர்குலைந்துள்ளன. தங்கள் நாட்டு இறையாண்மை மீதான "ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்" என, அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

லத்தீன் அமெரிக்காவில் இரண்டாவது சீன உளவு பலூன் காணப்பட்டதாக அமெரிக்க ராணுவ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். அதே நாளில், கொலம்பியாவின் விமானப்படை, பலூன் போன்று அடையாளம் காணப்பட்ட பொருள் ஒன்று அமெரிக்க வான்வெளியில் 55,000 அடிக்கு மேல் கண்டறியப்பட்டது.

அது வான்வெளியை விட்டு வெளியேறும் வரை அந்த பொருளைப் பின்தொடர்ந்ததாகக் கூறியுள்ள விமானப்படை, இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை என்றும் கூறுகிறது.

இந்த இரண்டாவது பலூன் குறித்து சீனா எந்த கருத்தையும் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை.

https://www.bbc.com/tamil/global-64537154

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் பலூன் 200 அடி உயரமானது; விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்து செல்லக்கூடியது அமெரிக்கா தெரிவிப்பு

By SETHU

07 FEB, 2023 | 12:46 PM
image

அமெரிக்காவினால் சுட்டுவீழ்த்தப்பட்ட சீனாவின் பலூன் சுமார் 200 அடி (60 மீற்றர்) உயரமானது எனவும் ஒரு விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்து செல்லக்கூடியது எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடா ஊடாக அமெரிக்க வான் பரப்புக்குள் கடந்த வாரம் புகுந்த மேற்படி பலூன் சீனாவின் உளவு பலூன் என அமெரிக்கா குற்றம் சுமத்தியது.

எனினும், அது காலநிலை ஆய்வு உட்பட சிவில் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட பலூன் எனவும் கடும் காற்றினால் இழுத்துச் செல்லப்பட்டு அமெரிக்காவுக்குள் புகுந்துள்ளது எனவும் சீனா தெரிவித்தது.

இந்த பலூன் அமெரிக்கப் பெருநிலப்பரப்பை கடந்து சென்று, கடந்த சனிக்கிழமை அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு மேலாக பறந்துகொண்டிருந்தபோது அமெரிக்க போர் விமானத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

பலூனின் சிதைவுகளை மீட்டு, ஆய்வுக்கு உட்படுத்த அமெரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளின் வட பிராந்திய கட்டளைப் பணியகத்தின் தளபதி ஜெனரல் கிளென் வான்ஹேர்;க் இது தொடர்பாக கூறுகையில், இந்த பலூன் 200 அடி (60 மீற்றர்) உயரமானதுடன், பல்லாயிரம் இறாத்தல் பொருட்களை, அதாவது ஒரு ஜெட் விமானத்தின் எடை அளவு  பொருட்களை சுமந்துசெல்லக்கூடியது எனவும் கூறியுள்ளார்.

பலூன் சுட்டு வீழ்த்தப்பட்மைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, பலூனின் சிதைவுகளை சீனாவிடம் ஒப்படைக்கும் நோக்கம் இல்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புப் பேரவையின் பேச்சாளர் ஜோன் கேர்பி கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/147604

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • செவிட்டு நுளம்புகளாயிருந்திருக்கும்.  🤣 அதனைத் தொடர்ந்திருந்தால, தற்போதைய நிலையில்  Sri Lankan Elon Musk என்று புகழப்பட்டிடுப்பீர்கள்.  ☹️
    • அது தான் பிரச்சினை நீங்கள் அடுத்தவன் பெட் ரூமில் எட்டிப் பார்த்து கண்ணகி 2.0 வை வைத்து தேசியத்தை தேட நாங்களோ யாழில் 90 வீதம் மாவீரர், கொழும்பில் புலிகளுக்கும் எமக்கும் சம்பந்தமில்லை, புலிகள் பயங்கரவாதிகள், புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்பவர்களிடமும் தான் தேசியத்தை தேடுகிறோம். கருணா தேசியத்தலைவரை மதிக்கிறேன் என்று துணிந்து பெயரளவிலாவது சொன்னான். வாசகர்களுக்கு தெரியும் சீமான் கூத்தமைப்பை விட எவ்வளவு திறமென்று. அட நானே சொல்கிறேனே 2009 இலிருந்து வாத்திமார் Promote பண்ணிய அக்மார்க் கூத்தமைப்பு தான் என்னை கருணாவுக்கு வோட்டு போட வைத்ததென்று. கூத்தமைப்பு மட்டும் இல்லாதிருந்தால் கருணாவுக்கு அரசியலே இல்லை. என்னை நம்பாட்டில் நீங்க நசீரிடம் கேட்கலாம், தாத்தாவை நினைத்து கண்ணீர் வடிப்பார். அந்தக் காலம் அப்போ ஊரிலிருந்து சும்மா புழுகிக் புழங்காகிதமடைந்து கோடிஸ்வரனுக்கு வாக்களித்த வசந்தன் கோ காலம்.  அண்ணை கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களிடம் கொடுத்துவிட்டு பக்கோடா  சாப்பிட்டதால் சொருகப்பட்ட நேந்திர பழத்தின் கனதி கிழக்கு மாகாணத்தான் எனக்குத்தான் தெரியும் தவிர யு.கே. சிட்டிசனுக்கு தெரியாது கண்டியளோ..?
    • இது உண்மையாயின் திருமதி சுமந்திரன் வழக்கு போட வேண்டும். திருச்சபைக்கு வருவதை ஒருவருக்கு வருவதாக சொல்வதும் - அதை அவர்கள் சட்டவிரோதமாக பாவிப்பதாக சொல்வதும் - பொய்யாயின் பாரிய பொய்கள். ஆனால் இப்படி வழக்கு போட்டால் அதை வைத்து ஒரு சைவ-கத்தோலிக்க முறுகலை உருவாக்கி குளிர்காயலாம் என சங்கி ஆனந்தம் நினைப்பதாகவும் இருக்க கூடும்.  
    • நான் இப்படி வார்த்தைகளை இந்த திரியிலுமோ வேறு எந்த திரியிலுமோ பயன்படுத்தியதில்லை. ஆகவே நீங்கள் வேறு ஏவரோ ஒரு நாலாம் தர நபருக்கு அவர் இறந்த பின் கொடுத்த 3ம் தர பதில்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் நான் இந்த திரியில் என்னை இழுத்து சாதி கதை கதைத்வருக்கு கொடுக்க வேண்டிய ஷாட்டை கொடுத்துள்ளேன். நாங்கள் யூகே யில் அல்ல, உப்பு கராஜில் இருக்கும் போதும் இப்படி சாதி திமிர் கதையள் கதைக்கிற ஆட்களை கண்டால் போட்டு மொத்தி போட்டுத்தான் விடுறது. தெருப்பொறுக்கியில் சீமானை காணவில்லை. இரெண்டும் ஒன்ராக இருக்கும் போது ஏன் பிரிவினை🤣. நான் எந்த அரசியல்வாதியையும் தலைவராக ஏற்றதமில்லை வேலை செய்ததும் இல்லை. பிள்ளையான், கருணாவின் பிரசாரகர் மொள்ளமாரி தலைவர்களை பற்றி பேசுவது - இந்த சிரிப்பையும் வாசகர்களிடமே விடுகிறேன்.
    • இந்த கஜே.- கஜே கோஷ்டியை த. தே. கூ இல் இருந்து 2010 ல் பிரித்தெடுத்தலில் இருந்து இவர்களை இயக்குபவர்கள் தொடர்புசசியாக தொடர்பில் இருப்பவர்கள் புலம்பெயர் தேசிக்காய் அமைப்புகள் தானே! புலம் பெயர் தேசிக்காய் அமைப்புகள் என்றால் “கொள்ளை” என்ற வார்ததை கச்சிதமாக பொருந்தும் தானே! 😂
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.