Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

”ஒரு பெண்ணுக்காக மட்டும் நான் படைக்கப்படவில்லை” – 3 சகோதரிகளை திருமணம் செய்த நபர்

Kenya Man Marries Three Sistersமூன்று சகோதரிகளையும் ஒரே நபர் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் கென்யா நாட்டில் நிகழ்ந்துள்ளது.

ஒரே நபர் பலரை திருமணம் செய்வதற்கு பெரும்பாலான நாடுகளில் அனுமதி இல்லை என்றாலும், இவ்வாறு நிகழ்ந்து வருகிறது.

கென்யாவில்  மூன்று சகோதரிகள் ஒரே ஆணை திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கேத், ஈவ் மற்றும் மேரி என்ற மூன்று சகோதரிகளும் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற நபரை திருமணம் செய்துகொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

newssensetn%2F2023-02%2Fe587f1a2-887f-4d
 
முதலில் கேத் தான் ஸ்டீவோவை சந்தித்துள்ளார். பின்னர் கேத்தின் சகோதரிகளை சந்தித்த ஸ்டீவ், அவர்களிடம் பேசி பழகியபோது, தான் ஒரு பெண்ணுக்காக மட்டும் படைக்கப்படவில்லை என்பதை உணர்ந்தாராம்.

உடனே மூன்று பேரையும் திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார்.

மூன்று பெண்களுடனும் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டு இணையவாசிகளை கடுப்பேற்றியுள்ளார்.

ஸ்டீவோ பேசுகையில், “3 பேருடனும் சமமாக நேரம் செலவிட நான் தீவிரமாக அட்டவணையை பின்பற்றுகிறேன். வாரந்தோறும் திங்கட்கிழமைகளை மேரிக்காகவும், செவ்வாய்க்கிழமைகளை கேத்திற்காகவும், புதன்கிழமைகளை ஈவிற்காகவும் ஒதுக்கியுள்ளேன்.

அதேநேரத்தில் மூன்று சகோதரிகளின் தேவைகளை பூர்த்திசெய்வதில் கொஞ்சம் சிரமமாக இருப்பதாக கூறியுள்ளார்

மேலும் 3 பேர் பேர் மட்டும் ஸ்டீவோவிற்கு போதுமானவர்கள் என்றும், வேறொரு பெண்ணை வாழ்க்கைக்குள் கொண்டுவர நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்றும் அந்த பெண்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
 
https://thinakkural.lk/article/237906

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திங்கள், செவ்வாய், புதன் சரி. அப்புறம்?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியும் அதிஸ்டசாலிகள் உலகத்தில் இருக்கின்றார்களே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

திங்கள், செவ்வாய், புதன் சரி. அப்புறம்?!

ரிப்பீட்டூ🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவையளுக்கு நான்காவது ஐந்தாவது சகோதரிகள் இருக்கினமோ தெரியேல்ல .......எதுக்கும் கிருபன் சொல்லட்டும், அதுவரை பொறுமையாய் இருப்போம்........இருந்தால் அத்தான்  ஐந்துநாள் வேலை இரண்டுநாள் லீவு என்று இருப்பார்........!   😂

Posted
2 hours ago, colomban said:

இப்படியும் அதிஸ்டசாலிகள் உலகத்தில் இருக்கின்றார்களே

 Utah ல் உள்ளார்கள். இங்கு சட்டவிரோதம் என்றாலும் ஒரு ஆண் பல பெண்களுடன் வாழ்வதாக ஒரு ஆவணப்படம் A&E   ல் போட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ஏராளன் said:

திங்கள், செவ்வாய், புதன் சரி. அப்புறம்?!

அப்புறம் என்ன அப்புறம் புதனுக்கு பிறகு திங்கள் செவ்வாய் புதன்.....:cool:
என்ன தம்பி நீங்கள்   கூட்டல் பெரிக்கல்  கழித்தல் வாய்ப்பாடு தெரியாமல் திரியுறியள்?? :beaming_face_with_smiling_eyes:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கள உறவுகள்  செய்தியை தங்கள் மனைவிக்கு வாசித்து காட்டிவிட்டு வந்த றியக்சனை எழுதலாமே. ( ஒரு ட்றயல் தான்) 😂

Posted
1 hour ago, island said:

யாழ் கள உறவுகள்  செய்தியை தங்கள் மனைவிக்கு வாசித்து காட்டிவிட்டு வந்த றியக்சனை எழுதலாமே. ( ஒரு ட்றயல் தான்) 😂

ஐலன்ட்டிற்கு ஏனிந்த கொலைவெறி??  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, குமாரசாமி said:

அப்புறம் என்ன அப்புறம் புதனுக்கு பிறகு திங்கள் செவ்வாய் புதன்.....:cool:
என்ன தம்பி நீங்கள்   கூட்டல் பெரிக்கல்  கழித்தல் வாய்ப்பாடு தெரியாமல் திரியுறியள்?? :beaming_face_with_smiling_eyes:

அண்ணை அட்டவணை போடுவதென்றால் சரியாக போடவேணும்!
எங்களைப் போல சிறியவர்களுக்கு விளங்காதெல்லோ!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, ஏராளன் said:

அண்ணை அட்டவணை போடுவதென்றால் சரியாக போடவேணும்!
எங்களைப் போல சிறியவர்களுக்கு விளங்காதெல்லோ!

புதன் முடிய திருப்பி திங்கள்ல இருந்து ஆரம்பிக்கலாம்.வார விடுமுறை எல்லாம் தேவையில்லை.:cool:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

புதன் முடிய திருப்பி திங்கள்ல இருந்து ஆரம்பிக்கலாம்.வார விடுமுறை எல்லாம் தேவையில்லை.:cool:

அட்டவணை போடுவதற்கு யாழ் களத்தில் இருந்து எம்மில் ஒருவரை அனுப்பி உதவலாம்.  3+3=6.

மீதி ஒரு நாளை குரங்கு அப்பம் பகிர்ந்த மாதிரி பகிராமல் தடுக்க மட்டுறுத்தினராக  @நிழலி யை அனுப்பி வைக்கலாம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, island said:

அட்டவணை போடுவதற்கு யாழ் களத்தில் இருந்து எம்மில் ஒருவரை அனுப்பி உதவலாம்.  3+3=6.

மீதி ஒரு நாளை குரங்கு அப்பம் பகிர்ந்த மாதிரி பகிராமல் தடுக்க மட்டுறுத்தினராக  @நிழலி யை அனுப்பி வைக்கலாம். 😂

துணை போனாலும் பிணை போகக்கூடாது என்ற கொள்கை உடையவன் நான்...... எனவே :rot: :rolling_on_the_floor_laughing:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, குமாரசாமி said:

துணை போனாலும் பிணை போகக்கூடாது என்ற கொள்கை உடையவன் நான்...... எனவே :rot: :rolling_on_the_floor_laughing:

நான் சும்மா தமாசு பண்ணினேன் சாமி. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/2/2023 at 13:33, nunavilan said:

 Utah ல் உள்ளார்கள். இங்கு சட்டவிரோதம் என்றாலும் ஒரு ஆண் பல பெண்களுடன் வாழ்வதாக ஒரு ஆவணப்படம் A&E   ல் போட்டார்கள்.

ஏமீஷ் இனத்தினரா?

On 7/2/2023 at 10:39, colomban said:

இப்படியும் அதிஸ்டசாலிகள் உலகத்தில் இருக்கின்றார்களே

ஏன் கொழும்பான் நீங்கள்தான் சட்டபடி இவரை விட ஒண்டு கூட போகலாமே.

பிறகென்னா? 

ஹோர் பனேகா குரோர்பதி!

நீங்களும் ஆகலாம் அதிஸ்டசாலி!

  • Haha 1
Posted
3 hours ago, goshan_che said:

ஏமீஷ் இனத்தினரா?

என்ன இனம் என தெரியவில்லை. உதாரணத்துக்கு இன்னுமொன்று..யூரியூபில்

மோமன்ஸ்சால்(mormons) தான் பொலிகமி(poligamy) கொண்டுவரப்பட்டது என்று கூறுகிறார்கள்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, nunavilan said:

என்ன இனம் என தெரியவில்லை. உதாரணத்துக்கு இன்னுமொன்று..யூரியூபில்

மோமன்ஸ்சால்(mormons) தான் பொலிகமி(poligamy) கொண்டுவரப்பட்டது என்று கூறுகிறார்கள்.

நன்றி நுணா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

”ஒரு பெண்ணுக்காக மட்டும் நான் படைக்கப்படவில்லை” 

“ஒரு பெண்ணுக்காக மட்டுமே நான் படைக்கப்பட்டதாக உணர்கின்றேன்!”😂

ஒன்றையே சமாளிக்க மூச்சுவாங்குது. இதுக்குள்ள இரண்டு மூண்டு ….. நினைக்கவே மூச்சுவாங்குது🙄

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர்களின் வாழ்க்கையை… 10-15 வருடங்களின் பின் பார்த்தால்,
இதே மகிழ்ச்சியுடன் இருப்பார்களா என்பது சந்தேகமே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, தமிழ் சிறி said:

இவர்களின் வாழ்க்கையை… 10-15 வருடங்களின் பின் பார்த்தால்,
இதே மகிழ்ச்சியுடன் இருப்பார்களா என்பது சந்தேகமே.

தமிழர்கள் நாங்கள் நாளை நாளை என்று இன்றைய சந்தோசத்தை தொலைத்துவிடுகிறோம்.

இவர் என்னத்துக்காகப் படைக்கப்பட்டாரோ.. அதை உச்ச அளவில் செய்ய விளைகிறார். நாங்கள் மிகக் குறைந்த அளவில் செய்கிறோம். அவ்வளவும் தான். சிலர் மித மிஞ்சிய அளவில் செய்து இருக்கிறார்கள்.. இடியமீன் போன்றவர்கள். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

இவர்களின் வாழ்க்கையை… 10-15 வருடங்களின் பின் பார்த்தால்,
இதே மகிழ்ச்சியுடன் இருப்பார்களா என்பது சந்தேகமே.

சரியாக சொன்னீர்கள் தமிழ் சிறி. 👍 உண்மைதான். 

————>👇🏻

மைன்ட் வொய்ஸ் ……….. இப்படியாவது சொல்லி ஆறுதல் அடைவோம்.  வேற என்னத்த செய்ய முடியும். 😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

இவர்களின் வாழ்க்கையை… 10-15 வருடங்களின் பின் பார்த்தால்,
இதே மகிழ்ச்சியுடன் இருப்பார்களா என்பது சந்தேகமே.

ஒரு மனிசன் 10,15 வருசம்  சந்தோசமாய் இருந்தாலே பெரிய விசயம் தானே. அதுக்கு பிறகு கடற்கரை தாளங்காய் அங்கை கிடந்தால் தான் என்ன இஞ்சை கிடந்தால் தான் என்ன..........:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/2/2023 at 23:18, island said:

சரியாக சொன்னீர்கள் தமிழ் சிறி. 👍 உண்மைதான். 

————>👇🏻

மைன்ட் வொய்ஸ் ……….. இப்படியாவது சொல்லி ஆறுதல் அடைவோம்.  வேற என்னத்த செய்ய முடியும். 😂

Chilling Hang Out GIF

ஐலண்ட்... ஐந்து பேரை ஒருத்தன் கட்டி மேய்க்கிறான் என்றவுடன் எனக்கும் ஒரு மாதிரித்தான் இருந்தது. 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/2/2023 at 08:59, ஏராளன் said:

திங்கள், செவ்வாய், புதன் சரி. அப்புறம்?!

வியாளன், வெள்ளி, சனி ஞாயிறு துவக்கு ரிப்பயர் பண்ணாட்டி, கதை கந்தல். 😁

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.