Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில எல்லோருக்கும் தெரிந்த  ஒரு  இடம் அல்லது விடயம் அங்கொட.

அதோட அங்க  போற இபோச BUS இலக்கம் 134 என்றதும்  தெரியும்.

காரணம்  என்ன? எதுக்கு  கொழும்பில  இவ்வளவு  இடம்  இருக்க இந்த  இடமும் BUS இலக்கமும் நமக்கு  பாடம்  என்று 

கொஞ்சம்  மண்டைய சுத்தினால் நமக்கே உறைக்கும் மற்றவரை பைத்தியம்  அல்லது மட்டம் தட்ட நமக்கு  இருக்கும் ஆர்வம் தான் காரணம்  என்று. 

தம்பி 134 இல் ஏறியே வருகிறீர் என்பதும் இவனை 134 இல்  ஏற்றி  விடுங்கோ என்பதும்  பெரிய  பகிடி  அப்ப.  ஏன் இப்பவும் தான்.

அதாவது  ஒருவருடைய மனதில் ஏற்படும்  சிறு  பிசகை  அல்லது  சிறியதொரு மன அழுத்தத்தை நாம் ஏளனமாக அல்லது விளையாட்டாக  எடுத்துக்கொள்கின்றோம்?

நான்  பிரான்சுக்கு  வந்தும் இந்த  மனநிலை  தான்.

நான் இருக்கும் வீட்டிலிருந்து ஒரு 100 மீற்றரில் மனநிலை வைத்தியசாலை  இருக்கிறது.

மனைவி  மக்களுடன்  சிரிப்பதுண்டு. உங்களை  அடிக்கடி கொண்டு  திரிய முடியாது  என்று  தான் பக்கத்தில்  வீடு எடுத்தனான்  என்று.

ஆனால் இது பற்றி கொஞ்சம் ஆளமாக அல்லது  தற்போதைய சூழ்நிலைப்படி  பார்த்தால் 

மனநிலை  வைத்தியரைப்பார்ப்பது  என்பது

சிறியவர்  தொடக்கம்  பெரியவர்கள் வரை இன்று சாதாரணமாகிவிட்டது  நித்திரை  வராததிலிருந்து வேலை  மற்றும்  படிக்க ஆர்வமில்லாதவர் வரை 

சர்வசாதாரணமாக மனநிலை  சார்ந்த  வைத்தியர்களின்  ஆலோசனைகளைக்கேட்பது  அவர்களுடன் தொடர்பில் இருப்பது நாளாந்த  நிகழ்வாகிவிட்டது.

இன்றைய  இயந்திர வாழ்வு  காரணமாக அதற்கு  அடுத்த  கட்டமாக அதற்கு தேவையான  மாத்திரைகளை  பாவிப்பதும் சாதாரண  நிகழ்வுகள்.

ஆனால் தமிழர்கள்  நாம்  இன்றும் இவை  கொஞ்சம் குறைவான ஆட்கள்  என்ற மனநிலையுடன்??? அவர்களை  ஒதுக்கியபடி???

நமது குடும்பத்தில் கூட அவ்வாறு யாருக்கும் இவ்வாறான வைத்திய தேவைகள்  இருப்பின் சமூதாய  பயத்தைக்காட்டி 

நாம்  எதை விதைத்தோமோ அதையே  இந்த  சமூகம்  பரிசாக நமக்கு  தந்துவிடக்கூடும் என்ற தேவையற்ற பயம்  மற்றும் குறுகிற மனப்பான்மையுடன் எவ்வளவு  நாளைக்கு  இன்னும்???

25வது சுய ஆக்கத்திற்காக  விசுகு...

  • கருத்துக்கள உறவுகள்

தேவையான ஒரு தலைப்பு.

மன நிலை சமநிலை குழம்புவதை இன்னும் ஒரு இழுக்காக stigma பார்க்கும் நிலையில்தான் எம் சமூகமும், ஏனைய சமூகங்களும் உள்ளன.

இதனடிப்படையில் ஒரு கதை எழுதிகொண்டிருக்கிறேன். உங்கள் பதிவு வருகிறது.

Great minds think alike 🤣

பிகு

134 பஸ்சுக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அது கொழும்பு லேடிஸ் காலீஜை தாண்டி போகும் ஒரே பஸ் 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

நன்றி சகோ

கன  காலமாக  மனதில்  இருந்த ஒரு விடயம்  அல்லது  உறுத்தல் என்றே  சொல்லலாம்

ஏன்  சகோ கொழும்பு லேடிஸ் காலீஜை தாண்டி 155, 101, 138 என்று  கனக்க பஸ்  போகுமோ.

அல்லது எனக்குத்தான்  வயதாகி  மறந்து  விட்டேனா?

ஆனால்  எனக்க  மிக மிக  நம்பிக்கையுண்டு

இந்த விடயங்களை  மறக்கவே மாட்டேனே?🤪

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

நன்றி சகோ

கன  காலமாக  மனதில்  இருந்த ஒரு விடயம்  அல்லது  உறுத்தல் என்றே  சொல்லலாம்

ஏன்  சகோ கொழும்பு லேடிஸ் காலீஜை தாண்டி 155, 101, 138 என்று  கனக்க பஸ்  போகுமோ.

அல்லது எனக்குத்தான்  வயதாகி  மறந்து  விட்டேனா?

ஆனால்  எனக்க  மிக மிக  நம்பிக்கையுண்டு

இந்த விடயங்களை  மறக்கவே மாட்டேனே?🤪

இல்லை அவை எல்லாம் கிட்ட போகும் ஆனால் தாண்டி போவது 134 மட்டும்தான். இப்ப வன் வே வந்த பின் எப்படியோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கத்துக்கு நன்றி விசுகண்ணா. சின்னதாக இருவர்  வாதிட்டாலே counseling தேவை எனும் அளவில் நாமுள்ளோம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அவர்கள் குழந்தைகளின் மனநிலை உடையவர்கள்.
அவர்களை நம் நாட்டில் நடத்தும் விதங்களைப் பார்க்க வேதனையாக இருக்கும்.
நாளை எவரும் இந்த நிலைக்கு வரலாம் என்பதை யோசித்து பார்ப்பதில்லை.
அவர்களுக்காக… யாழ்.களத்தில் ஒரு ஆக்கம் படைத்தமைக்கு நன்றி விசுகர். 👍🏽 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு விசுகு அண்ணா ...தொடருங்கள் வாசிக்க ஆவல் 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nunavilan said:

ஆக்கத்துக்கு நன்றி விசுகண்ணா. சின்னதாக இருவர்  வாதிட்டாலே counseling தேவை எனும் அளவில் நாமுள்ளோம். 🙂

இதுவும் உண்மைதான்.

எதையும் நோய் என பார்க்காமல் எல்லாவற்றையும் போர்த்து மூடல்

Vs

தொட்டதுக்கும் நோய் சொல்லல்.

இரெண்டு extreme உம் கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nunavilan said:

ஆக்கத்துக்கு நன்றி விசுகண்ணா. சின்னதாக இருவர்  வாதிட்டாலே counseling தேவை எனும் அளவில் நாமுள்ளோம். 🙂

இதற்கான  பதிலும் மேலே இருக்கு  தம்பி  நுணா

(நமக்கே உறைக்கும் மற்றவரை பைத்தியம்  அல்லது மட்டம் தட்ட நமக்கு  இருக்கும் ஆர்வம் தான் காரணம்  என்று.)

நன்றி நேரத்துக்கும் கருத்துக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ...விசுகர் .     தலையங்கத்தில் இன்னொரு மயக்கமும் உண்டு

1...அந்த பிள்ளை கொஞ்சம் புத்தி குறைவானது 

2. அவை  கொஞ்சம் (சாதி )குறைவான ஆட்களாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

உண்மையில் அவர்கள் குழந்தைகளின் மனநிலை உடையவர்கள்.
அவர்களை நம் நாட்டில் நடத்தும் விதங்களைப் பார்க்க வேதனையாக இருக்கும்.
நாளை எவரும் இந்த நிலைக்கு வரலாம் என்பதை யோசித்து பார்ப்பதில்லை.
அவர்களுக்காக… யாழ்.களத்தில் ஒரு ஆக்கம் படைத்தமைக்கு நன்றி விசுகர். 👍🏽 

நன்றி  சகோ

நான்  உண்மையில் மனநிலை  பாதிக்கப்பட்டவர்கள்  பற்றி பேச  விழையவில்லை

மாறாக மனநிலை  வைத்தியரைப்பார்ப்பதே தீண்டத்தகாதது போல்  பார்க்கும்  எமது  சமூகத்தின்  மனநிலையைத்தான் இங்கே  கொண்டு வந்தேன்

நீங்கள் குறிப்பிடுவது அடுத்த  கட்டம்

நன்றி  சகோ

நேரத்துக்கும் கருத்துக்கும்

Edited by விசுகு
எழுத்துப்பிழை திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

நல்ல தலைப்பு விசுகு அண்ணா ...தொடருங்கள் வாசிக்க ஆவல் 

நன்றி

கனநாள் உறுத்துதல்

நன்றி சகோதரி

நேரத்துக்கும் கருத்துக்கும்

22 minutes ago, நிலாமதி said:

பகிர்வுக்கு நன்றி ...விசுகர் .     தலையங்கத்தில் இன்னொரு மயக்கமும் உண்டு

1...அந்த பிள்ளை கொஞ்சம் புத்தி குறைவானது 

2. அவை  கொஞ்சம் (சாதி )குறைவான ஆட்களாம். 

எப்படி எடுத்தாலும் எமது  கோணல்ப்பார்வையின் தவறு தானே?

நன்றி  பாட்டி

நன்றி சகோதரி

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சமூகத்துக்கு மிகவும் அவசியமான கருத்துக்கள் பல விவாதிக்கக் கூடிய தலைப்பு.......!

70 வயதுக்கு மேல் கொஞ்சம் மறதி வரத்தான் செய்யும் அதையெல்லாம் மனநிலை பிறழ்த்தலுடன் ஒப்பிடக்கூடாது.........உது காரியவிசர் என்றெல்லாம் பேசக்கூடாது.......(அட என்ர மைண்ட் வாய்ஸ் எல்லாம் வெளிய வருது போலக்கிடக்கு)  😂

5/6 வருடங்களுக்கு முன் மகளுடன் காரில் வரும்பொழுது அவதான் ஓடிக்கொண்டு வந்தவ, வீதிமாறி ஒரு இடத்துக்குள் வண்டி வந்து நிக்குது பெயர் பலகையைப் பார்த்தால் அது ஒரு மனநலக் காப்பகம்........நானும் "ஏன் பிள்ளை நான் இன்னும் கொஞ்சநாள் இருந்து உங்கட கலியாணங்கள் எல்லாம் பார்த்தபின் இஞ்ச கொண்டுவந்து விடலாம்தானே என்று சொல்ல அவளுக்கு சிரிப்பு வந்திட்டுது......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

ஆனால் தமிழர்கள்  நாம்  இன்றும் இவை  கொஞ்சம் குறைவான ஆட்கள்  என்ற மனநிலையுடன்??? அவர்களை  ஒதுக்கியபடி???

வாழ்க்கையின் ஒரு சில நேரம்களில் ஏற்படும் மனஉலைசசல் அல்லது பொறுக்க முடியாத மன குமுறல்கள் போது மூளை பிழையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கும் ஆரம்பத்தில் கவனித்து அதற்க்கு தகுந்த வைத்தியம் எடுக்க காய்ச்சல் தடிமன் போல் வந்து போய் விடும் ஆனால் எங்கள்  XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX ஒருத்தனுக்கு மனநிலை பிறள்வு  வந்தால் அது ஏதோ பாரதூரமான வியாதி போல் உலகம் முழுக்க போன் போட்டு இன்னாரின் இன்னாருக்கு மண்டை தட்டி விட்டது என்று செய்தி பரப்பி கடசியில் சிறிய அளவான பிறள்வை  பெரிதாக்கி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள் ஒரு நோயாளிக்கு அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் முக்கிய நேரத்தில் நக்கலும்  நையாண்டியமாக பார்த்து இங்கு வந்த 90 களில் வந்த இளைய உயிர்கள் ரெயில்வே மதகுகளில் இருந்து குதித்து  தற்கொலை செய்து கொண்டவர்கள் எனக்கு தெரிய ஐந்துக்கும் மேல் . 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இது பற்றி எழுதணும் பெரியப்பா என்று என்னை எழுத தூண்டியவன் இவன். (ஆனால் இதை எழுதி விட்டு தான் அவனது வீடியோவை பார்க்க நேரம் கிடைத்தது)

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0etJDhzHipHopcVUbutHZeeCXH5kAHydawN17z8UtwDHJT1i7WMFGTi7LLkGRvSuql&id=718105359

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

மனநிலை  வைத்தியரைப்பார்ப்பதே தீண்டத்தகாதது போல்  பார்க்கும்  எமது  சமூகத்தின்  மனநிலையைத்தான் இங்கே  கொண்டு வந்தேன்

அதே தான் கொடுமை அய்யா.
மனநிலை  வைத்தியரை சென்று பார்த்தால் தங்களது குடும்பத்தையே மற்றவர்கள் ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்று சிகிச்சை பெற மாட்டார்கள் இப்படி பாதிக்கபட்டவர்கள் மற்றவர்களுக்கு பயந்து மத மாற்று குழுக்களின் வலயில் விழுவதுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

யூரேக்கா...யூரேக்கா என்று நிர்வாணமாக வீதியில் ஓடிய ஆக்கிமிடிசு, தமிழராக இருந்திருந்தால் நிச்சயம் 134 பஸ்ஸில் ஏற்றி அனுப்பப் பட்டிருப்பார் என்பது மட்டும் உறுதி...!

சிங்களவராக இருந்தால்...தொவில் சடங்கு நடத்தப்பட்டிருக்கும்!

இது தான் நமது நாட்டின் நிலை....!

நல்ல ஒரு சிந்தனையைத் தூண்டும் பதிவு, விசுகர்.....!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தலைப்பு விசுகு.

எமது ஊரில் உண்மையிலேயே சுகயீனமானவர்களே அங்கொடையில் இருப்பார்கள்.

ஆனால் வெளிநாடுகளில் முழுமுழு கிரிமினல்களே இருக்கிறார்கள்.

ஏதாவது பாரிய குற்றம் செய்து விட்டால் வழக்கறியரின் முதல் வேலை இவருக்கு மூளை சரியில்லை.கொஞ்சநாள் இருப்பார் நடிப்பார் வழக்கு தள்ளுபடி.

எதுவித குற்றம் செய்யாமல் ஒருத்தர் இருந்தால் இனித்தான் குற்றம் செய்ய போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

வாகன விபத்துக்களில் கடுமையாக பாதிக்கபடுவர்களும் மன நல மருத்துவரிடம் வருகிறார்கள்.ஒன்று அதிக பணம் பெறும் முயற்சியில் வருவார்கள் மற்றயைவர்கள் உண்மையாகவே மனோ ரீதியாக பாதிக்கபட்டவர்களாகவும் இருப்பார்கள்..சில வேளைகளில் அந்த நாட்களை கடத்துவது மிகவும் கடினமாக இருக்கும்...அம்மாக்கள் : பிள்ளைகள் வயது வந்தோர்..இப்படியாக பல தரட்டப்பட்வர்களையும் பார்க்க கூடியதாக இருக்கிறது..சிலரைப் பார்க்கும் போது அவர்கள் சொல்லும் விடையங்களை கேட்கும் போது அழுகை வந்துடும்..நான் எழுத விரும்புவதில்லை யார் எல்லாம் பார்க்கிறார்களோ தெரியாது தானே..அவர்களது வாழ்வு சம்பந்தப்பட்டது..
 
  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2023 at 02:58, விசுகு said:

எப்படி எடுத்தாலும் எமது  கோணல்ப்பார்வையின் தவறு தானே?

 நாங்கள் எங்கள் உள்மனதில் எப்படியான எண்ணங்களை வைத்திருக்கிறோம், எதனை நம்புகிறோம் என்பதை வைத்துத்தான் எங்களது பார்வையும் நேரா அல்லது கோணலா எனத் தெரியும்.. 

உளவியல், உளநல மருத்துவம், அவை தொடர்பான ஆலோசனைகள் இவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது. இதற்குப் பல காரணங்கள், ஆனாலும் எங்களது சமூகத்தில் அதிலும் வெளிநாடுகளிலும் கூட அந்த துறைகளில் படித்து தேர்ச்சி பெறுவோர் குறைவு எங்களது சமூகத்தில் இவை இந்தமாதிரியான துறைகளுக்கு மதிப்பும் இல்லை. ஏனெனில் எங்களது பார்வை இந்த விடயத்தில் கோணலாக இருப்பதுதான். 

பின் ஒன்று நடந்தவுடன் ஜயோ ஒருத்தருக்கும் இப்படி என தெரியாதே என கவலைப்பட்டு என்ன பிரயோசனம்? கதைப்பதற்கோ, உதவி கேட்பதற்கோ அல்லது உதவுவதற்கோ வழிவிட்டிருந்தால் தானே!!.  

நன்றி அண்ணா இந்த விடயத்தைப் பற்றி எழுதியது.. 

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு முறை மனநல மருத்துமனையிலிருந்து ஒருவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது விழையாட்டாக சொன்னார் உள்ளே இருக்க வேன்டியவர்கள எல்லாம் வெளியே இருக்கிறார்கள் என்டு.நன்றி விசுகர் பதிவுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்+

நல்ல ஆக்கம்...

"அங்கொடையில இருக்கிறவங்க அங்கானையில இருக்காங்க!......" என்ற மீன்பாடும் தேன்நாட்டிலிருந்து உருவான பாடல் வரியின் பொருள் இன்டைக்குத்தான் எனக்கு விளங்கினது!😆

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2023 at 17:12, suvy said:

இன்றைய சமூகத்துக்கு மிகவும் அவசியமான கருத்துக்கள் பல விவாதிக்கக் கூடிய தலைப்பு.......!

70 வயதுக்கு மேல் கொஞ்சம் மறதி வரத்தான் செய்யும் அதையெல்லாம் மனநிலை பிறழ்த்தலுடன் ஒப்பிடக்கூடாது.........உது காரியவிசர் என்றெல்லாம் பேசக்கூடாது.......(அட என்ர மைண்ட் வாய்ஸ் எல்லாம் வெளிய வருது போலக்கிடக்கு)  😂

5/6 வருடங்களுக்கு முன் மகளுடன் காரில் வரும்பொழுது அவதான் ஓடிக்கொண்டு வந்தவ, வீதிமாறி ஒரு இடத்துக்குள் வண்டி வந்து நிக்குது பெயர் பலகையைப் பார்த்தால் அது ஒரு மனநலக் காப்பகம்........நானும் "ஏன் பிள்ளை நான் இன்னும் கொஞ்சநாள் இருந்து உங்கட கலியாணங்கள் எல்லாம் பார்த்தபின் இஞ்ச கொண்டுவந்து விடலாம்தானே என்று சொல்ல அவளுக்கு சிரிப்பு வந்திட்டுது......!  😂

நன்றி அண்ணா

இது பற்றி கட்டுரைகள் ஆவணங்கள் காணொளிகள் என்று கனக்க செல்ல முடியும். 

ஆனால் இது தற்போது சாதாரண விடயமாக எடுத்துக் கொள்ளப்படணும். அதன் ஒரு தொடக்கமாகவே தான் இதை இங்கே பதியத்தோன்றியது. 

நன்றி நேரத்துக்கும் கருத்துக்கும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2023 at 17:46, பெருமாள் said:

வாழ்க்கையின் ஒரு சில நேரம்களில் ஏற்படும் மனஉலைசசல் அல்லது பொறுக்க முடியாத மன குமுறல்கள் போது மூளை பிழையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கும் ஆரம்பத்தில் கவனித்து அதற்க்கு தகுந்த வைத்தியம் எடுக்க காய்ச்சல் தடிமன் போல் வந்து போய் விடும் ஆனால் எங்கள்  XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX ஒருத்தனுக்கு மனநிலை பிறள்வு  வந்தால் அது ஏதோ பாரதூரமான வியாதி போல் உலகம் முழுக்க போன் போட்டு இன்னாரின் இன்னாருக்கு மண்டை தட்டி விட்டது என்று செய்தி பரப்பி கடசியில் சிறிய அளவான பிறள்வை  பெரிதாக்கி விட்டு வேடிக்கை பார்ப்பார்கள் ஒரு நோயாளிக்கு அன்பும் அரவணைப்பும் தேவைப்படும் முக்கிய நேரத்தில் நக்கலும்  நையாண்டியமாக பார்த்து இங்கு வந்த 90 களில் வந்த இளைய உயிர்கள் ரெயில்வே மதகுகளில் இருந்து குதித்து  தற்கொலை செய்து கொண்டவர்கள் எனக்கு தெரிய ஐந்துக்கும் மேல் . 

 இதிலிருந்து நாம் விடுபடணும். அதுவே முதல்படி. 

நன்றி சகோ நீண்ட அனுபவத்தின் ஊடான கருத்துக்கும் நேரத்திற்கும் 

On 11/2/2023 at 21:49, விளங்க நினைப்பவன் said:

அதே தான் கொடுமை அய்யா.
மனநிலை  வைத்தியரை சென்று பார்த்தால் தங்களது குடும்பத்தையே மற்றவர்கள் ஒதுக்கி வைத்து விடுவார்களோ என்று சிகிச்சை பெற மாட்டார்கள் இப்படி பாதிக்கபட்டவர்கள் மற்றவர்களுக்கு பயந்து மத மாற்று குழுக்களின் வலயில் விழுவதுண்டு.

அதே தான்

ஆனால் எமது அடுத்த தலைமுறை இதிலிருந்து விடுபடும் விடுபட வேண்டும். அதற்கான முதல் அடியை நானும் அதன் தொடர்ச்சியாக நீங்களும் செய்து செல்வோம். 

நன்றி ராசா

நேரத்திற்கும் கருத்துக்கும் 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இந்த ஆக்கத்தை வாசிக்க நேரம் அமைந்தது @விசுகு ஐயா. தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் பலர் மன அழுத்தங்கள், மனச் சோர்வுகள் இருந்தும் மற்றையவர்கள் அறிந்தால் மரியாதைக் குறைவு என்று தகுந்த மனநல ஆலோசகர்களை நாடுவது குறைவு. 

ஆனாலும் கவுன்சிலிங்கில் ஈடுபடும் நண்பர் கோவிட் காலத்துடன் மிகவும் பிஸியாகிவிட்டார். இப்போது ஐரோப்பாவில் இருக்கும் தமிழர்களும் அவரிடம் ஆலோசனை பெறுகின்றார்கள். எனினும் அகதி விண்ணப்பம் கோரி வருபவர்கள்தான் மன நல ஆலோசனைக்கு அதிகம் அனுப்பப்படுகின்றார்களாம்!

எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மன அழுத்தம், உளச்சோர்வு, மனப்பிறழ்வு என ஏதாவது ஒன்று வரலாம். மற்றவர்களுக்காக வாழாமல் தங்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் தகுந்த ஆலோகர்களைப் பார்க்கவேண்டும். 

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.