Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • Replies 185
  • Views 17.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

புல‌வ‌ர் அண்ணா

த‌லைவ‌ரின் ப‌ட‌ம் இந்தியாவில் இருந்த‌ ப‌டி யூடுப்பில் அல்ல‌து முக‌ நூலில் போட்டால் இர‌ண்டும் முட‌க்க‌ப் ப‌டும்............த‌லைவ‌ர் விடைய‌த்தில் இந்தியா விழிப்புன‌ர்வோடு தான் இருக்குது............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ளின் வீடுக‌ளில் த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் இருக்கு.................சொச‌ல் மீடியாக்க‌ளில் த‌லைவ‌ர் விடைய‌த்தில் ப‌ல‌ த‌டைக‌ள் போட்ட‌து இதே இந்தியா அர‌சு தான்.................ப‌ல‌ ந‌ன்மைக‌ள் ந‌ம்மை வ‌ந்து சேரும் இந்த‌ நிலையில் எரியிர‌ வீட்டுக்கு ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யாவும் காசி ஆன‌ந்த‌னும் கூட‌ எண்ணை ஊத்தின‌ மாதிரி இருக்கு..............வாள் போய் கத்தி வ‌ந்த‌ க‌தை போல் க‌ருணாநிதி போய் இப்போது ப‌ழ‌நெடுமாற‌னும் காசி ஆன‌ந்த‌னும் வ‌ந்த‌ க‌தை ஆகி இருக்கு 😏

தலைவர் மீது சேறு பூசவே அவர் உயிருடன் உள்ளார் என்ற கதை அதுவும் மாறன் ஐயாவை வைத்து ஆனால் இணையம்களில் முக்கியமாய் கோர போன்ற தளம்களில் இந்த செய்தி எதிர்மறையாய் தெய்வமாகவே அவரை கொண்டு போய் வைத்து உள்ளார்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

 

மன்னிக்கவும் அண்ணா.. நிறைய விஷயங்கள் தெரிந்த  நீங்கள் இப்படியான டுபாக்கூர் மீம்ஸ் படங்களை பகிர்வதை தவிர்க்கலாம். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

 

ஊரில் இருக்கும் போதே தலைவர் தலைக்கு தாடிக்கு வர்ணம் பூசாவிட்டால் இப்படி தான் இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

 

இதுவொரு ஆப்ஸ்  அன்றோயிட்  போனில் குமரணை கிழவன் ஆக காட்டும். 

ஒருமுறை இறந்த மாவீரணை பலமுறை இந்த சாவுக்கு பயந்த ஊடகங்கள்  சாகடிக்குது .

கொடுத்த வாக்கை தவறாது கடைபிடிக்கும் கூட்டதில் இருந்து வந்தவர்களுக்கு புரியும் அவர் இல்லை என்பது  குமாரசாமியார் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
39 minutes ago, Sasi_varnam said:

மன்னிக்கவும் அண்ணா.. நிறைய விஷயங்கள் தெரிந்த  நீங்கள் இப்படியான டுபாக்கூர் மீம்ஸ் படங்களை பகிர்வதை தவிர்க்கலாம். 🙏

36 minutes ago, பெருமாள் said:

இதுவொரு ஆப்ஸ்  அன்றோயிட்  போனில் குமரணை கிழவன் ஆக காட்டும். 

ஒருமுறை இறந்த மாவீரணை பலமுறை இந்த சாவுக்கு பயந்த ஊடகங்கள்  சாகடிக்குது .

கொடுத்த வாக்கை தவறாது கடைபிடிக்கும் கூட்டதில் இருந்து வந்தவர்களுக்கு புரியும் அவர் இல்லை என்பது  குமாரசாமியார் .

 

மீடியாக்களில் என்னென்ன கூத்துக்கள் எல்லாம் நடக்கின்றன என்பதற்காகவே இணைத்தேன். மற்றும் படி எனக்கு உங்களை விட இதில் உடன்பாடில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

 

மீடியாக்களில் என்னென்ன கூத்துக்கள் எல்லாம் நடக்கின்றன என்பதற்காகவே இணைத்தேன். மற்றும் படி எனக்கு உங்களை விட இதில் உடன்பாடில்லை.

நல்லதொரு கருத்து சாமியார் தனி தமிழ் ஈழ ராட்சியம் கிடைக்காவிடின் என்ன செய்வது

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

 

மீடியாக்களில் என்னென்ன கூத்துக்கள் எல்லாம் நடக்கின்றன என்பதற்காகவே இணைத்தேன். மற்றும் படி எனக்கு உங்களை விட இதில் உடன்பாடில்லை.

உங்கள் மீம்சை பார்த்ததும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என புரிந்து கொண்டேன்.

ஆனால் இப்படியான விடயத்தில் சொல்ல வருவதை வெளிப்படையாக சொல்லுவது நல்லம் என  நினைக்கிறேன்.

இல்லாவிடில் ஏப்ரல் 1ம் திகதி கொழும்பில் இந்தியன் ஆமி இறங்கியது போல ஆகிவிடும்🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பையன்26 said:

இந்த‌ திரியின் ஆர‌ம்ப‌த்திலே எழுதி நான்..............க‌த்தி இன்றி யுத்த‌ம் இன்றி நாடு அடைவ‌து தான் சிற‌ந்த‌ வ‌ழி..............அது க‌ண்டிப்பாய் முடியும் அதுக்கு ந‌ல்ல‌ அறிவாற்ற‌ல் தேவை ந‌ண்பா

1...எப்படி அடைவீர்கள். ?

2...தந்தை செல்வா.    தலைவர் பிரபாகரன்    ஆகியோர்   இந்த நல்ல அறிவாற்றலை. ஏன் பயன்படுத்தி   தீர்வு பெற முயற்சிகள் செய்யவில்லை  ??????  காந்தி வழியையும்.   ஆயுதவழியையும்.  தெரிவு செய்த. காரணம் என்ன.??????   அவர்களுக்கு அறிவாற்றல். இல்லையா????     

3....காந்தி வழி. ....ஆயுதவழி .....   நல்ல அறிவாற்றல். வழி ....  இவற்றை விட. வேறு வழிகளிலும் ......இலங்கை தமிழர்கள் இலங்கையில் தனி அரசாங்கம் அமைக்க சர்வதேசம். ஒருபோதும் உதவாது     .....நாங்கள் இலங்கையில் அரசாங்கம் ஆக இருந்தால் சர்வதேசம்  உதவும்    சர்வதேசம்.  சிங்களம் தமிழர்.  என்று பார்ப்பதில்லை   எவன் /யார்  அரசாங்கம் என்று தான்   பார்ப்பார்கள் 

4.    சிங்களம் எங்களை விட நல்ல அறிவாற்றல்  பயன்படுத்தமாட்டார்களா.?   ....நிச்சயமாக பயன்படுத்துவார்கள்    எனவே… நாங்கள் தீர்வு பெற முடியாது     

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் மர்மம்..பழ. நெடுமாறனின் உண்மை முகம் | உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

மீடியாக்களில் என்னென்ன கூத்துக்கள் எல்லாம் நடக்கின்றன என்பதற்காகவே இணைத்தேன். மற்றும் படி எனக்கு உங்களை விட இதில் உடன்பாடில்லை.

நன்றி அண்ணா!! 🙏

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் குறித்த நெடுமாறன் அறிவிப்பு தமிழ்நாடு அரசியல் களத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பிரபாகரன்

பட மூலாதாரம்,STR/AFP VIA GETTY IMAGES

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் சொல்வது தமிழ்நாடு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? அந்தத் தாக்கம் யாருக்கு சாதகமாக இருக்கும்? இந்தத் தருணத்தில் அந்த அறிவிப்பு வெளியானது ஏன்?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக கவிஞர் காசி ஆனந்தனும் பழ. நெடுமாறனும் நேற்று அறிவித்த நிலையில், இலங்கை ராணுவம் அந்தக் கூற்றை முற்றிலுமாக மறுத்துவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களில் சீமான், வைகோ ஆகியோர் பிரபாகரன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்ற கருத்தைத் தெரிவித்துவிட்டனர்.

நெடுமாறனைப் பொறுத்தவரை இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டம் முடிவடைந்து பிரபாகரன் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்ததிலிருந்தே, அதனை மறுத்துவருகிறார். இதுவரை நான்கிற்கும் மேற்பட்ட தடவைகள் பிரபாகரன் திரும்பவருவார் என்ற கருத்தைத் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில்தான், திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் அதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையில் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டம் என்ற விவகாரம் தமிழ்நாட்டில் எப்போதுமே உணர்வுகளைத் தூண்டக்கூடிய ஒன்றாக இருந்திருக்கிறது. ஆனால், அது தேர்தல் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்திருக்கிறதா என்பது கேள்விக்குரியதுதான். இந்தப் பின்னணியில், நெடுமாறனின் தகவல் குறித்து பலரும் பல்வேறு கோணங்களில் மறுப்புகளையும் சந்தேகங்களையும் தெரிவித்துவருகின்றனர்.

 

"பிரபாகரன் உயிரோடு இருக்கிறார்" என்ற இந்தக் கருத்து தமிழ்நாடு அரசியலில், தற்போதைய சூழலில் எந்தத் தாக்கத்தையாவது ஏற்படுத்துமா என்ற கேள்வியும் இருக்கிறது.

"இதெல்லாம் நான்சென்ஸ். இப்படிச் சொல்வதால் தமிழ்நாட்டிலும் ஒன்றும் நடக்காது, இலங்கையிலும் ஒன்றும் நடக்காது. ஏனென்றால் இலங்கை ராணுவம் பிரபாகரனின் உடலுக்கு டி.என்.ஏ. சோதனை செய்திருக்கிறது. பிரபாகரன் கொல்லப்பட்டாரா இல்லை என்ற உண்மை அவர்களுக்குத் தெரியும். நெடுமாறன் நீண்ட காலமாக இதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதனால், தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக எதுவும் நடக்காது" என்கிறார் தி இந்து குழுமத்தின் இயக்குநர்களில் ஒருவரும் மூத்த பத்திரிகையாளருமான என். ராம்.

ஆனால், இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சதி இருக்கலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "2009ஆம் ஆண்டில் இலங்கையில் இறுதிப் போர் நடந்தது. அப்போது வைகோ சென்ற இடங்களுக்கெல்லாம் மிகப் பெரிய கூட்டம் வந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 27 இடங்களைப் பிடித்தது. ஆகவே, பிரபாகரன் இருக்கிறார் அல்லது இல்லை என்பது தேர்தல் களத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.

ஆனால், நெடுமாறன் இதை இப்போது சொல்ல வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி இருக்கிறது. இறுதிப் போரில் தமிழர்கள் இறந்ததற்கு காங்கிரஸ் காரணம் என்ற குற்றச்சாட்டை எழுப்பி, தி.மு.கவிற்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்த நினைக்கலாம். இது மத்திய உளவுத் துறையின் திட்டமாகவும் இருக்கலாம்.

பிரபாகரனை இவர் பார்க்கவில்லை என்கிறார். அவரை சந்தித்த நபர் யாரையாவது சுட்டிக்காட்டலாம். அதையும் செய்யவில்லை. ஏதோ ஒரு நாட்டிலிருந்து நித்யானந்தா வீடியோ போடுவதைப் போல, பிரபாகரனே ஒரு வீடியோவைப் பேசியிருக்கலாம். அப்படியும் செய்யவில்லை. நெடுமாறன் இப்படி இந்தத் தருணத்தில் சொல்ல வேண்டிய நெருக்கடி என்ன என எனக்குத் தெரியவில்லை.

"பிரபாகரன் உயிருடன் இல்லை" என பழ. நெடுமாறனின் கூற்றை இலங்கை ராணுவம் மறுத்தது
 
படக்குறிப்பு,

"பிரபாகரன் உயிருடன் இல்லை" என பழ. நெடுமாறனின் கூற்றை இலங்கை ராணுவம் மறுத்தது

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் முதலில் வைகோவும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், வெறும் அறிக்கை மட்டும்தான் இருக்கிறது. வேறு ஆதாரங்கள் இல்லை என்றவுடன் அவர் பின்வாங்கிவிட்டார். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக 2010ல் நெடுமாறன் சொன்னார். 16ல் சொன்னார். 2018லும் சொன்னார். இப்போதும் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். இது நிச்சயம் எடுபடாது" என்கிறார் குபேந்திரன்.

மூத்த பத்திரிகையாளரான ப்ரியனும் இதே கருத்தை எதிரொலிக்கிறார். "இதற்கு எந்தத் தாக்கமும் இருக்காது. ஈழப் பிரச்சனை குறித்து சீமானே இப்போது பேசுவதில்லை. தவிர, ஈழப் பிரச்சனை இனி தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தோன்றவில்லை. ஆனால், நெடுமாறன் ஏன் இப்போது இதைச் சொன்னார் என்பது ஒரு கேள்வி" என்கிறார் ப்ரியன்.

ஆனால், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என வலியுறுத்திச் சொல்கிறார் வழக்குரைஞரும் பிரபாகரனுடன் நீண்ட நாட்கள் பழகியவருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "இந்தச் செய்தி எனக்கும் அவருக்கும் மட்டும்தான் வந்தது. அது உண்மையானது. இந்தியாவில் புலிகள் இயக்கத்திற்கு தடை இருக்கிறது. அதை சட்டரீதியாக நீக்க வேண்டிய முயற்சிகளை நீதிமன்றத்தில் மேற்கொள்வோம். இந்திய அரசின் ஆதரவை பெற வேண்டியிருக்கும். நிறைய வேலை இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இது ஒரு நல்ல தொடக்கம்" என்கிறார் அவர்.

இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி செய்யப்பட்ட 13வது சட்டத்திருத்தத்தை நிறைவேற்றுவது பற்றிய பேச்சுகள் அந்நாட்டில் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், இது போல அறிவிப்பது அங்குள்ள அரசிற்கு தயக்கத்தை ஏற்படுத்தாதா எனக் கேட்டபோது, "இந்திய - இலங்கை ஒப்பந்தம் நிறைவேறி 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை என்ன செய்திருக்கிறார்கள். இதுவரை செய்யாதவர்கள் இனியும் செய்ய மாட்டார்கள். பிரபாகரன் வரும்போது அங்குள்ள மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள்" என்கிறார் அவர்.

பிரபாகரன் வரும்போது அவர் எந்த நாட்டிலிருந்து செயல்படுவார், இந்தியாவில் ராஜீவ் கொலை வழக்கு அவர் மீது இருக்கிறதே என்ற கேள்விகளைக் கேட்டபோது, "நீங்கள் கேட்பதைப் போல பல பெரிய கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு காலம் பதில் சொல்லும்" என்கிறார் அவர்.

Newspapers

பட மூலாதாரம்,GETTY IMAGES

பெ. மணியரசன் தலைமையிலான தமிழ் தேசியப் பேரியக்கம் நெடுமாறனின் அறிவிப்பு தொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. "தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தப்பிச் சென்று வாழ்கிறார் என்பது அவர் மீது தமிழர்களும் பன்னாட்டு மக்களும் வைத்துள்ள பெருமதிப்பைச் சிதைப்பதாக உள்ளது.

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் தமிழின உணர்வை மடைமாற்றி, பா.ஜ.கவின் பக்கவாத்தியமாக திசைமாற்றும் உத்தி தெரிகிறது. மேலும், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உற்சாகத்தோடு தமிழ்நாட்டுத் தமிழர்கள் செயல்படும்போது, பயங்கரவாத அமைப்பை ஆதரித்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் ஆட்சியாளர்கள் அவர்களைச் சிறைப்படுத்த வாய்ப்பிருக்கிறது. இல்லாத விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு மீண்டும் மீண்டும் பிறப்பிக்க நெடுமாறனின் அறிக்கை வாய்ப்பளிக்கும்" என அந்த அமைப்பு கூறியிருக்கிறது.

தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.கவும் இது தொடர்பாக அதிகாரபூர்வமாக இதுவரை எதையும் தெரிவிக்கவில்லை.

https://www.bbc.com/tamil/india-64642056

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அழைப்பு விடுத்தும் தமிழீழ விடுதலை ஆதரவு தலைவர்கள் புறக்கணிப்பு? - தஞ்சை வந்தும் நெடுமாறனை சந்திக்காமல் சென்ற வைகோ

Published By: RAJEEBAN

15 FEB, 2023 | 10:17 AM
image

.தஞ்சாவூர்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தொடர்பான அறிவிப்பை வெளியிடும் முன், அதுதொடர்பாக விவாதிக்க தமிழீழவிடுதலை ஆதரவு தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தும், அவர்கள் அதனை புறக்கணித்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், அறிவிப்பு வெளியிடும் முதல் நாள் இரவு தஞ்சாவூர் வந்த வைகோ,பழ.நெடுமாறனை சந்திக்காமலேயே மறுநாள் காலை புறப்பட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில், பிப்.13-ம் தேதி காலை11 மணிக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கியமான அறிவிப்பை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட உள்ளதாகவும், அதில் தமிழீழ விடுதலை ஆதரவுத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் எனவும், முதல்நாள்(பிப்.12) இரவு பத்திரிகையாளர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க தமிழீழ ஆதரவுதலைவர்களான வைகோ, திருமாவளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் முள்ளிவாய்க்கால் முற்றத்துடன் தொடர்புள்ளவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, பிப்.12-ம் தேதி இரவு தஞ்சாவூர் வந்த வைகோ, தமிழ்நாடு ஓட்டலில் அறை எண் 22-ல் தங்கி இருந்தார். அப்போது, அவர் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட யாரையும் சந்திக்கவில்லை. மேலும், மற்ற தலைவர்கள் யாரும் வராத நிலையில், மறுநாள்(பிப்.13) காலை 7.30 மணிக்கு வைகோ அறையை காலி செய்துவிட்டு தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, திருமாவளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி போன்றோரும் தஞ்சாவூர் வரவில்லை.

இதனிடையே 13-ம் தேதி காலை 11 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் விருப்பத்தின்பேரில் இதைத் தெரிவிப்பதாகவும் கூறினார். அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர். அதில் குறிப்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், ‘‘பிரபாகரனோடு களத்தில் நின்ற போராளிகள் சிலர்உலகின் பல நாடுகளில் இருக்கின்றனர். என்னிடம் தொடர்பில் இருக்கும் அந்த போராளிகள், பழ.நெடுமாறன் வெளியிட்ட செய்தியை உறுதிப்படுத்தவில்லை. ஆனாலும் அவர் கூறியபடி பிரபாகரன் நலமுடன் இருந்தால், அதைவிட மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி வேறு ஏதும் இல்லை’’ என தெரிவித்திருந்தார்.

 

வைகோ சந்திக்காதது ஏன்? -

தஞ்சாவூரில் கட்சிப் பணி எதுவும்இல்லாத நிலையில், பிப்.12- ம் தேதி இரவு தஞ்சாவூர் வந்த வைகோ,பழ.நெடுமாறனை சந்திக்காமலேயே மறுநாள் காலை புறப்பட்டுச் சென்றது ஏன் எனவும், பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பை வைகோவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையா அல்லது பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பில் வேறு ஏதும் உள்நோக்கம் உள்ளதா எனவும் தமிழீழ பற்றாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

 

இதுதொடர்பாக தஞ்சாவூர் மதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தஞ்சாவூருக்கு வந்து சென்ற பின்னரே, அவர் இங்கு வந்த விவரம் எங்களுக்கு தெரியவந்தது. கட்சி நிகழ்வுகள் ஏதும் இல்லை. பிரபாகரன் குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கை தெளிவாக உள்ளது. இதைத் தான் நாங்கள் கூற முடியும்’’ என்றனர்.

 

உலகத் தமிழர் பேரமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, ‘‘தஞ்சாவூருக்கு வைகோ வந்திருந்தும், அவர் பழ.நெடுமாறனை சந்திக்காமல் சென்றதற்கு சில அரசியல் காரணங்கள் இருக்கலாம்’’ என்றார்.

 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க திருமாவளவன், வேல்முருகன், கொளத்தூர் மணி போன்றோருக்கு அழைப்பு விடுத்தும், அவர்கள் வராதது ஏன் என்று தெரியவில்லை என பழ.நெடுமாறன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

உளவுத்துறை கண்காணிப்பு:

இதைத் தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தங்கியிருக்கும் பழ.நெடுமாறனின் நடவடிக்கைகளை உளவுத் துறை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

hindutamil

https://www.virakesari.lk/article/148234

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

1...எப்படி அடைவீர்கள். ?

2...தந்தை செல்வா.    தலைவர் பிரபாகரன்    ஆகியோர்   இந்த நல்ல அறிவாற்றலை. ஏன் பயன்படுத்தி   தீர்வு பெற முயற்சிகள் செய்யவில்லை  ??????  காந்தி வழியையும்.   ஆயுதவழியையும்.  தெரிவு செய்த. காரணம் என்ன.??????   அவர்களுக்கு அறிவாற்றல். இல்லையா????     

3....காந்தி வழி. ....ஆயுதவழி .....   நல்ல அறிவாற்றல். வழி ....  இவற்றை விட. வேறு வழிகளிலும் ......இலங்கை தமிழர்கள் இலங்கையில் தனி அரசாங்கம் அமைக்க சர்வதேசம். ஒருபோதும் உதவாது     .....நாங்கள் இலங்கையில் அரசாங்கம் ஆக இருந்தால் சர்வதேசம்  உதவும்    சர்வதேசம்.  சிங்களம் தமிழர்.  என்று பார்ப்பதில்லை   எவன் /யார்  அரசாங்கம் என்று தான்   பார்ப்பார்கள் 

4.    சிங்களம் எங்களை விட நல்ல அறிவாற்றல்  பயன்படுத்தமாட்டார்களா.?   ....நிச்சயமாக பயன்படுத்துவார்கள்    எனவே… நாங்கள் தீர்வு பெற முடியாது     

நல்ல கேள்விகள்தான், அத்துடன் இன்னும் சில கேள்விகள்.

1. இலங்கையில் சிறுபான்மையினருக்கு பேச்சுவார்த்தியினூடாக ஏதாவது தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறீர்களா?

2. அப்படி தீர்வு கிடைக்காதுவிடில் தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் நம்பியது போல தமிழீழம்தான் ஒரே தீர்வா?

3. அப்படி தீர்வு கிடைக்காது எனில், அரசியல்வாதிகளின் வகிபாகம் என்ன?

4.அப்படியாயின் எமது அரசியல்வாதிகளால் யாருக்கு பலன்?

கந்தையா, உங்களது கேள்விக்கு எனது அபிப்பிராயத்தினடிப்படையில் கருத்து கூறுகிறேன் தவறாக இருக்கலாம்.

உதாரணத்திற்கு உங்களது வேலையில் ஒரு மிக முக்கிய புரொஜெக்ட் ஒன்றிற்கு தலைமை பொறுப்பினை உங்களிடம் கொடுக்கிறார்கள், அந்த வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முடித்தால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் அதற்காக நீங்கள் சில ஆபத்தான முடிவுகளை எடுக்கும்போது நீங்கள் உங்கள் வேலையினை இழக்க நேரிடலாம்.

அந்த வேலைத்திட்டத்தினை ஆபத்துகலை தவிர்த்து சாதாரணமாக முடித்து கொடுத்தால் வேலை இழப்பு இல்லை அதே நேரம் பதவி உயர்வும் இல்லை.

இந்த விடயத்தில் உள்ள சிக்கல்கள்

1.வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கும் போது அதன் இறுதி முடிவு தெரியாது.

2.எவ்வளவு காலம் எடுக்கும் என்பது தெரியாது.

3.புறச்சூழ்நிலைகள் ஏற்படுத்தும் தாக்கம் தெரியாது.

எமது பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை மூலமான தீர்வு கிடைக்காது என்பத்னை 1970 களிலேயே தந்தை செல்வா உணர்ந்ததால்தான் தனிநாட்டு தேவை உருவாகியது.

அப்போது ஆரம்பித்த ஆயுத போர் பனிப்போர் காலத்தினூடாக பிரச்சினையில்லாமல் பயணித்தது.

90 களில் ஆரம்பத்தில் சோவியத் இரஸ்சியாவின் உடைவின் பின்னர் உலகில் நிலவிய பல சமநிலை தகர்ந்து ஒற்றை ஆளுமை ஏற்பட்டது இந்த புதிய உலக ஒழுங்கு 2001 பின்னர் பெரியளவில் பல தேசிய இனங்களின் விடுதலையினை காவு வாங்கும் நிலைக்கு சென்றது.

இதனைதான் புறக்காரணிகள் என்பார்கள்.

ஆயுத போர் தோல்வியில் முடிந்ததனாலோ அல்லது பேச்சுவார்த்தை தோல்வியடைவதாலோ அவை தவறான முயற்சி ஆகுமா?

2009 முன் இருந்த போராடும் வலுவும், சிறந்த தலைமையும் மட்டும் இல்லை, ஆனால் மற்ற வளங்கள் தற்போது உண்டு அல்லவா?

இப்போது முக்கியமாக தேவை நல்ல அரசியல் தலமை, அதனை உருவாக்குவது மக்களின் கடமை, தற்போது நடக்கும் தவறுகளுக்கு மக்கள் அரசியல்வாதிகளை கை காட்டி தப்பி விடுகிறார்கள், உண்மையான குற்றவாளிகள் இந்த மோசமான தற்போதய அரசியல்வாதிகளை தெரிவு செய்த மக்கள்தான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் திரும்பி வந்தால், தேர்தல் கேட்டு பாராளுமன்றத்திற்கு வாருங்கள் என கேட்பேன் - அநீதி இழைக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு அவரிடம் நீதி கேட்பேன்

FB_IMG_1676437349066.jpg

பிரபாகரன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முஸ்லீம்களுக்கு எந்தவொரு தீர்வினையும் பெற்று தர முடியாது

 

 

பாறுக் ஷிஹான்

 

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்றால் அவர் மறைந்து வாழந்து கொண்டிருக்கின்றார் என்பதில் எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.

 

 

பிரபாகரன் மட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கூட முஸ்லீம்களுக்கு எவ்வித விமோசனமும் இல்லை என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்தியாவில் உள்ள தமிழக தலைவர்கள் சிலர் கூறுவது தொடர்பில் பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதாக இந்தியாவில் உள்ள தமிழக தலைவர்கள் சிலர் கூறுவதை மறுப்பதற்கில்லை.அவர் உயிருடன் இருந்தால் நல்லது தான்.

 

 

அதாவது இதுவரை காலமும் நன்றாக அனுபவங்களை அனுபவித்திருப்பார்.போராட்டம் என்பது தற்போது சாத்தியப்படாது என ஒழிந்து இருந்திருப்பார்.

 

 

இப்படி ஒழிந்து தான் பிரபாகரன் வாழ்ந்திருந்தால் அவருக்கு தான் அவமானம்.அவர் அவ்வாறு திரும்பி வந்தால் ஜனநாயகத்திற்கு வந்து தேர்தல் கேட்டு பாராளுமன்றத்திற்கு வாருங்கள் என கேட்பேன்.

 

அவ்வாறு பாராளுமன்றம் அவர் வருகின்ற சந்தரப்பத்தில் அநீதி இழைக்கப்பட்ட முஸ்லீம்களுக்கான நீதியை முஸ்லீம் கட்சிகள் உட்பட நானும் அவரிடம் கேட்பேன்.

 

 

பிரபாகரனோ அல்லதோ தமிழ் தேசிய கூட்டமைப்போ முஸ்லீம்களுக்கு எந்தவொரு தீர்வினையும் இனியும் பெற்று தர மாட்டார்கள் என்பதும் எமக்கு தெரியும்.

 

 

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட இதர கட்சிகள் கூட பாராளுமன்றத்தில் இருந்தும் கூட முஸ்லீம் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை.

 

பிரபாகரன இனி வந்து என்ன தர போகின்றார்.அவராலும் அது முடியாது.

 

நேதார்ஜி அஸ்ரப் போன்றோர்களும் இறந்த போதிலும் இவ்வாறு அவர்கள் உயிருடன் திரும்பி வருவார்கள் என மக்கள் மத்தியில் கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன.

 

 

அது போன்று தான் பிரபாகரனின் விடயமும் கதையாக வெளிவந்துள்ளது.ஆனால் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்றால் அவர் ஒழித்து கொண்டிருக்கின்றார் என்பதில் எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என குறிப்பிட விரும்புகின்றேன் என்றார்.

https://www.madawalaenews.com/2023/02/i_437.html

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, colomban said:

பிரபாகரன் மட்டுமல்ல தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கூட முஸ்லீம்களுக்கு எவ்வித விமோசனமும் இல்லை என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

க(கா)க்கா .....அதுதான் இலங்கை பழைய நெடுமாறன் நானும் இருக்கிறன் என்று கரைத்து காட்டுகிறார் 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

1...எப்படி அடைவீர்கள். ?

2...தந்தை செல்வா.    தலைவர் பிரபாகரன்    ஆகியோர்   இந்த நல்ல அறிவாற்றலை. ஏன் பயன்படுத்தி   தீர்வு பெற முயற்சிகள் செய்யவில்லை  ??????  காந்தி வழியையும்.   ஆயுதவழியையும்.  தெரிவு செய்த. காரணம் என்ன.??????   அவர்களுக்கு அறிவாற்றல். இல்லையா????     

3....காந்தி வழி. ....ஆயுதவழி .....   நல்ல அறிவாற்றல். வழி ....  இவற்றை விட. வேறு வழிகளிலும் ......இலங்கை தமிழர்கள் இலங்கையில் தனி அரசாங்கம் அமைக்க சர்வதேசம். ஒருபோதும் உதவாது     .....நாங்கள் இலங்கையில் அரசாங்கம் ஆக இருந்தால் சர்வதேசம்  உதவும்    சர்வதேசம்.  சிங்களம் தமிழர்.  என்று பார்ப்பதில்லை   எவன் /யார்  அரசாங்கம் என்று தான்   பார்ப்பார்கள் 

4.    சிங்களம் எங்களை விட நல்ல அறிவாற்றல்  பயன்படுத்தமாட்டார்களா.?   ....நிச்சயமாக பயன்படுத்துவார்கள்    எனவே… நாங்கள் தீர்வு பெற முடியாது     

வ‌ண‌க்க‌ம் அண்ண‌ நல‌மா
யாழில் முன்னைய‌ கால‌ங்க‌ளில் யாழில் இருக்கும் பெரிசுக‌ள் இதை ப‌ற்றி ப‌ல‌ ப‌ந்திக‌ள் எழுதி விட்டு அமைதியாய் இருக்கின‌ம்

இந்த‌ நூற்றாண்டு அர‌சிய‌ல் சூழ் நிலைய‌ ச‌ரியா புரிந்து அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா திற‌ம்ப‌ட‌ புத்திய‌ தீட்டி ச‌ரியா செய‌ல் ப‌ட்டார் ............2001நீயூயோக் மீதான‌ தாக்குத‌லுக்கு பிற‌க்கு ச‌ர்வ‌தேச‌ அள‌வில் பெரிய‌ மாற்ற‌ம் கொண்டு வ‌ர‌ ப‌ட்ட‌து அதை எல்லாம் புரிந்து அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா பேச்சு வார்த்தையில் விட்டுக் கொடுத்து மெது மெதுவாக‌ காயை ந‌க‌ர்த்தினார்

இடையில் நாச‌மாய் போன‌ க‌ருணாவின் துரோக‌ம்...............பின்னைய‌ கால‌ங்க‌ளில் வ‌ன்னி த‌ல‌மை பொறுமை காக்காம‌ ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் அவ‌ச‌ர‌ப் ப‌ட்ட‌தால்  பேர் அழிவை 2009 ச‌ந்திச்ச‌வை

வ‌ன்னி த‌ல‌மையின் கெட்ட‌ நேர‌ம் 
அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா 2006க‌ட‌சியில் த‌வ‌றி விட்டார்............பிற‌க்கு த‌மிழ்செல்வ‌ன் அண்ணா அர‌சிய‌லில்  நிஜ‌மிக்க‌ப் ப‌ட்டார்............அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா அள‌வுக்கு உல‌க‌ அர‌சிய‌லை ச‌ரியா புரிந்த‌வ‌ர்க‌ள் யாரும் இல்லை...........அந்த‌ ம‌னுஷ‌ன் அறிவாற்ற‌லிள் சிற‌ந்த‌ ம‌னித‌ர்

  பொறுத்தார் பூமி ஆள்வார்
ச‌மாதான‌ கால‌த்தில் தாங்க‌ள் வான் ப‌டை வைத்து இருக்கிறோம் என்று  வ‌ன்னித் த‌ல‌மை  காட்ட‌  ம‌கிந்தா உட‌ன‌ அறிக்கை விட்டான் புலிகளின் வான் ப‌டையால் இந்தியாவுக்கு பெருத்த‌ ஆவ‌த்து என்று

அமெரிக்கா இல‌ங்கையில் க‌ட‌ல் ப‌ல‌த்தை ச‌மாதான‌ கால‌த்தில் உருவாக்கி கொடுத்த‌வ‌ங்க‌ள்.............

 

எம‌க்காக‌ போராடி உயிர் நீத்த‌வ‌ர்க‌ளின் தியாக‌த்தை கொச்சை ப‌டுத்த‌ இத‌ எழுத‌ வில்லை எம்ம‌வ‌ர் விட்ட‌ சில‌ பிழைக‌ளால் தான் பின்னைய‌ கால‌ங்க‌ளில் பெருத்த‌ அழிவை ச‌ந்திச்சோம்

எழுத‌ நிறைய‌ இருக்கு இதோட‌ நிறுத்துறேன் அண்ணா 😢 ................

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழ. நெடுமாறன் கூற்றை, வசூல் வேட்டையாளர்கள் பயன்படுத்திக்  கொண்டு விடுவார்களோ?  பதறும் தமிழர்கள்!

AaraFeb 14, 2023 21:27PM
nedumaran.webp

பிப்ரவரி 13 ஆம் தேதி திங்கள் கிழமை காலையில் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இருந்து  மூத்த தமிழ் தேசியவாதியும் உலகத் தமிழர்   பேரமைப்பின் தலைவருமான  நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்த தகவல் உலகத் தமிழர்களை எல்லாம் உலுக்கி இருக்கிறது.

“விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் நலமோடு உயிரோடு இருக்கிறார்.  இதுவரை அவரைப் பற்றி திட்டமிட்டு பரப்பப்பட்ட யூகங்களுக்கு ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்திருந்தார் பழ.நெடுமாறன். 

ஆனால் அவரது இந்த அறிவிப்பு மீண்டும் பல யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் வித்திட்டு உள்ளது.

2009 ஈழப் போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்று அவ்வப்போது உறுதியாக தெரிவித்து வந்திருக்கிறார் பழ.நெடுமாறன்.

இப்போது மீண்டும் அதே அறிவிப்பை வெளியிட்டு இருந்தாலும் நேற்றைய அவரது அறிவிப்பு ஒரு திட்டமிட்ட முறைப்படியான அறிவிப்பாக கருதப்படுகிறது.

Will the collection hunters take advantage of Nedumaran

பழ.நெடுமாறன்  தேசிய கட்சியான காங்கிரஸில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி அதன்பிறகு  தமிழ் தேசிய அரசியலுக்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்தவர். ஈழத்தோடுதொடர்பு வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் மற்ற பலர் மீது எழுந்த பண குற்றச்சாட்டுகள் இதுவரை நெடுமாறன் மீது எழுந்ததில்லை.

புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்படாத நெடுமாறன் எளிய வாழ்வையே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டது தான் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி வரைக்கும் டெல்லி தாண்டி இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் பேசு பொருளாகி இருக்கிறது.

இந்த நிலையில் புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் அவர்களோடு   தொடர்பு கொண்ட தமிழ்நாட்டு பிரமுகர்களிடமும் இது பற்றி விசாரித்தோம்.

“விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் 2009 மே 18ஆம் தேதி வீர மரணம் அடைந்ததை ஒட்டி அன்று முதல் ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் அவருக்கு உலகம் முழுவதும் வீரவணக்கம் செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் புலம்பெயர் நாடுகளில் சிலர் தலைவர் இன்னும் இருக்கிறார் தலைவர் விரைவில் வெளியே வருவார் என்றெல்லாம் கடந்த பத்து வருடங்களில் பலமுறை கூறியிருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஒரு வீடியோ பரபரப்பானது. அது என்னவென்றால் பிரபாகரனின் மகள் துவாரகா பேசுவதைப் போன்று அந்த வீடியோவில் காட்சிகள் இருந்தன. கண்கள் மட்டும் தெரிந்த அந்த வீடியோவில் நான் துவாரகா பேசுகிறேன். தலைவரின் லட்சியங்களை தலைவரின் ஆதரவோடு தொடர்ந்து நாம் முன்னெடுத்து செல்ல வேண்டி இருக்கிறது. தலைவருக்கு நீங்கள் உதவ வேண்டும். மீண்டும் நமது நடவடிக்கைகளை தொடங்குவதற்கு உங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதாவது பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் புலிகள் இயக்கத்தை கட்டி எழுப்பப் போவதாகவும் அதற்காக நிதி வேண்டும் என்றும் துவாரகா பேசுவதைப் போன்று அந்த வீடியோ காட்சிகள் இருந்தன. இதை நம்பி பல்வேறு புலம்பெயர் தமிழர்கள் இந்திய மதிப்பில் கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்தனர். 

ஆனால் இந்த வீடியோவை பார்த்த ஒரு சிலர் தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முயன்றனர். அந்த வீடியோவில் துவாரகா போல பேசிய அந்த பெண்ணை தொடர்பு கொண்ட ஒருவர்,  ’உனக்கு நான்காம் வகுப்பு  ஆசிரியர் யார்?’ என்று கேட்டார். ஏனென்றால் துவாரகாவை குழந்தையிலிருந்து முழுமையாக அறிந்தவர் அவர். அப்படி ஒரு கேள்வி கேட்ட போது துவாரகாவை போல பேசி நிதி சேகரித்த அந்த பெண்ணிடம் இருந்து சரியான பதில் வரவில்லை. இதை அவர் மற்ற புலம்பெயர் தமிழர்களிடம் எடுத்துக் கூறி இது ஒரு மோசடியான முயற்சி என்று அப்போதே எச்சரித்தார்.

இதற்குப் பிறகு 2023 ஜனவரி 24ஆம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. 

Will the collection hunters take advantage of Nedumaran

விழிப்புதான் விடுதலையின் முதற்படி என்ற முன் குறிப்போடு வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில்…. ‘ எமது தேசிய தலைவர் மற்றும் அவரது குடும்பம் தொடர்பாக புனைந்து பரப்பப்பட்டு வரும் ஆதாரமற்ற தகவல்களும் அதன் மூலம் புலம்பெயர் தமிழ் மக்களிடம் பெருந்தொகை நிதி சேகரிப்பு செயற்பாட்டில் இயக்க விரோத கும்பல் ஒன்று ஈடுபடுவதாக அறிகின்றோம். இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு எமது மக்களை கேட்டுக் கொள்கிறோம்.

தேசிய தலைவரின் வாழ்வியல் வரலாற்றில் தனது தனிப்பட்ட குடும்ப நலன்களுக்காக என்றுமே அவர் வாழ்ந்ததில்லை என்பதை அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிவீர்கள். உண்மை இவ்வாறு இருக்க தேசிய தலைவரின் நற்பெயரை களங்கப் படுத்துவதற்காக புலனாய்வாளர்களால் திட்டமிட்டு இயக்கப்படும் இயக்க விரோத கும்பல்கள் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துவது தொடர்பாக எம் மக்கள் எச்சரிக்கை கலந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கடந்த காலங்களில் புலம்பெயர் நாடுகளில் நிதி மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்டு தேசிய செயற்பாட்டில் இருந்து நீக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து தேசிய தலைவர் மீதும் இயக்கத்தின் மீதும் அதீத பற்றுள்ள மக்களை இனங்கண்டு நிதி வசூலிப்பை நடத்தி வருகிறார்கள். இவர்கள் அனைவரும் எமது விடுதலைப் போராட்டத்தை சிதைக்க நினைக்கும் சக்திகளின் கைக்கூலிகளாக செயல்பட்டு வருவதோடு புலம்பெயர் தமிழர்களின் பொருளாதாரம் இன விடுதலை நோக்கிய பணிகளில் பயன்படுத்த முடியாதவாறு சிதைக்க முற்படுவதாக நாம் கருதுகிறோம்.

இது போன்ற மோசடிக்காரர்களை இனம் கண்டு புறந்தள்ள வேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம். தேசிய தலைவரையும் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தில் நடைபெற்ற அப்பழுக்கற்ற தியாக வரலாற்றையும் கொச்சைப்படுத்தி எமது போராட்டத்தை நீர்த்துப் போக வைக்கும் செயற்பாடுகள் இவை.  என்பதை எமது மக்கள் ஆழமாக புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும் என அன்பு உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்’ என்று அந்த கடிதத்தில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை சார்பாக வி. ஜெயாத்தான் என்பவர் கையெழுத்திட்டு வெளியிட்டு இருந்தார்.

இது மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை சார்பிலும் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது அதில்,  ’தேசியத் தலைவரும் குடும்பத்தினரும் வெளிநாட்டில் இருப்பதாக கூறி கொள்ளை கும்பல் ஒன்று பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து செயல்பட்டு வருகிற விடயம் அறிந்து நாம் எமது தேடுதலை முடுக்கி உள்ளோம்.  ஆரம்ப கட்டமாக சில விடயங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அதன்படி சுவிட்சர்லாந்தில் 4 நபர்கள், பிரான்சில் மூன்று நபர்கள்,  இங்கிலாந்தில் மூன்று நபர்கள்,  நெதர்லாந்து இரண்டு நபர்கள்,  ஜெர்மனியில் இரண்டு நபர்கள்,  இத்தாலியில் ஒரு நபர்,  பெல்ஜியத்தில் ஒரு நபர் இவர்களுடைய பெயர் விவரங்களை வெகு விரைவில் வெளியிடுவோம்’ என்று எச்சரித்திருந்தனர்.

Will the collection hunters take advantage of Nedumaran

இப்படிப்பட்ட நிலையில் தான் தஞ்சாவூரில் அப்பழுக்கற்ற தமிழ் தேசிய தலைவராக கருதப்படும் பழ.நெடுமாறன் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

90 வயதை நெருங்கும்  பழ. நெடுமாறன் தமிழீழ அரசியல் நிலைப்பாட்டில் மாறாத பற்று உடையவர். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை  உள்ளவர். அவரது நம்பிக்கையை வெளிநாடுகளில் இருக்கும்  வசூல் வேட்டையாளர்கள் பகடைக் காயாக பயன்படுத்திக் கொண்டுவிடுவார்களோ என்ற கவலையும் உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

 

https://minnambalam.com/political-news/will-the-collection-hunters-take-advantage-of-nedumaran/

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பையன்26 said:

  

 வ‌ன்னி த‌ல‌மை   

வ‌ன்னி த‌ல‌மையின் கெட்ட‌ நேர‌ம் 
 

    வ‌ன்னித் த‌ல‌மை  காட்ட‌  

எழுதுவது 

முரளிதரனா?

பிள்ளையானா???😭

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

எழுதுவது 

முரளிதரனா?

பிள்ளையானா???😭

அது உங்க‌ளுக்கான‌ ப‌தில் இல்லை
நான் என்ன‌ எழுதினேன் என்று கூட‌ எழுங்காய் வாசிக்காம‌

பிள்ளையானா முர‌ளித‌ர‌னா என்று கேட்ப‌த‌ன் அர்த்த‌ம்  என்ன‌ 

அடுத்த‌வ‌ர்க‌ள் எழுதுவ‌து புரிய‌ வில்லை என்றால் மூக்கை நுழைக்காம‌  சும்மா இருங்கோ...............😏

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, விசுகு said:

எழுதுவது 

முரளிதரனா?

பிள்ளையானா???😭

ஏன் நடந்த உண்மைகளை, விட்ட பிழைகளை சுட்டிக்காட்டுவதில் தவறேதும் இல்லையே!! அன்டன் பாலசிங்கம் ஐயாவின் ஒதுக்கமும், மறைவும்தான் எமது போராட்டத்தையே புரட்டிப்போட்டது என்பது கசப்பான உண்மையே!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 

இந்த‌ப் ப‌ட‌ம் தாத்தா இன்று நேற்று வ‌ந்த‌ ப‌ட‌ம் இல்லை

பல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே Photoimpact மூல‌ம் செய்து வெளி வ‌ந்த‌ ப‌ட‌ம்   , 
கூமுட்டைக‌ள் இப்ப‌வும் இந்த‌ ப‌ட‌த்தை வைத்து கால‌த்தை ஓட்டுதுக‌ள் தாத்தா.............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

இந்த‌ப் ப‌ட‌ம் தாத்தா இன்று நேற்று வ‌ந்த‌ ப‌ட‌ம் இல்லை

பல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே Photoimpact மூல‌ம் செய்து வெளி வ‌ந்த‌ ப‌ட‌ம்   , 
கூமுட்டைக‌ள் இப்ப‌வும் இந்த‌ ப‌ட‌த்தை வைத்து கால‌த்தை ஓட்டுதுக‌ள் தாத்தா.............

அப்பன்! புலி மறைந்து வாழுது என சொல்ல சிங்களவர் கூட கெக்கெட்டம் விட்டு சிரிக்கிறார்கள்.

Bild

  • கருத்துக்கள உறவுகள்
பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று கூறுவது,
(அ)சிங்கள அரசுக்கு,
(1) வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் பல்லாயிரம் சிங்கள ராணுவத்தை வைத்திருக்க உதவும்
(2) சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் வைத்திருக்க உதவும்
(3) காணமல் ஆக்கப்பட்டடோரை கண்டறியாமல் விடுவதற்கு உதவும்
(4) இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றம் செய்யாமல் இருப்பதற்கு உதவும்
(5) பல பில்லியன் டொலர் பணத்தை பட்ஜட்டில் ராணுவத்திற்கு ஒதுக்குவதற்கு உதவும்
(6) ”புலிகளை அடக்குவேன்” என்று சொல்லி மீண்டும் வருவதற்கு மகிந்தராஜபக்சவுக்கு உதவும்
(7) ”புலிகளின் பிரதிநிதிகள்” என்று கூறி தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை செய்வதை தவிர்க்க உதவும்
(ஆ) இந்திய அரசுக்கு,
(1) தொடர்ந்து புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு உதவும்
(2)சிறையைவிடக் கொடிய சிறப்புமுகாமை வைத்திருக்க உதவும்
(3)அகதிகளுக்கு குடியுரிமை வழங்காமல் இருக்க உதவும்
(4)கடலில் தமிழக மீனவர் கொல்லப்படுவதை கண்டுக்காமல் இருக்க உதவும்
(5) தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்காமல் இருக்க உதவும்
அதைவிட,,
• தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு தலைமை உருவாவதை தடுக்கிறது.
• தமிழ்மக்கள் மீண்டும் போராடாமல் பிரபாகரன் வருகைக்காக காத்திருக்க வழி செய்கிறது.
• பிரபாகரன் மரணம் குறித்து உண்மையை அறியா வண்ணம் மக்களை தடுக்கிறது.
• புலிகளின் சொத்தை புலத்து வியாபாரிகள் தொடர்ந்து அனுபவிக்க உதவுகிறது.
• சில தமிழக அரசியல்வாதிகளுக்கு ஏமாற்று அரசியல் செய்ய உதவுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக,
தனது 10வயது மகனைக்கூட காப்பாற்றாமல் தான் மட்டும் தப்பினார் பிரபாகரன் என்ற பழிச்சொல்லுக்கு வழி வகுக்கிறது.
இத்தனை வருடமாகியும் வராமல் ஏன் ஒளித்து இருக்கிறார் என்று மக்கள் விசனப்பட வைக்கிறது.
மேலும் அவருக்கு ஒரு வீர வணக்கம்கூட செலுத்தமுடியாத நிலையில் தமிழினத்தை வைத்திருக்கிறது.
 
 
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, colomban said:

இப்படி ஒழிந்து தான் பிரபாகரன் வாழ்ந்திருந்தால் அவருக்கு தான் அவமானம்.அவர் அவ்வாறு திரும்பி வந்தால் ஜனநாயகத்திற்கு வந்து தேர்தல் கேட்டு பாராளுமன்றத்திற்கு வாருங்கள் என கேட்பேன்.

தமிழர்கள் குலைத்தால் தாங்களும் காரணமில்லாமல் குலைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி...:upside_down_face:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.