Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் க‌ள‌ உற‌வு த‌மிழ் சிறி அண்ணா இன்றுட‌ன் யாழில் இணைந்து 15 ஆண்டு த‌மிழ் சிறி அண்ணா மீதான அன்பான‌ நினைவுக‌ளை எழுதுவோம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nilmini said:

சிறி எனது தந்தை வழி நெருங்கிய உறவினர். மிகவும் கண்ணியமான தாய் தந்தையர், சகோதரி சகோதரனுடன் யாழ்ப்பாணம் நல்லூரான் அடியில் பிறந்து வளர்ந்தவர். அவரை பற்றி எனது தகப்பனுக்கு தான் அதிகம் தெரியும். ஆனால் அவர் இன்று இல்லை. எனக்கு அவரின் பெற்றோர் மற்றும் தம்பியை தான் அதிகம் பழக்கம். அருமையான மனிதர்கள். நன்றாக ஆடம்பரமின்றி வாழ்ந்த குடும்பம்(எனது தகப்பனை போலவே). அம்மாவுக்கும்,  மாமாவுக்கும் சிறியய் நன்றாக ஞாபகம் உள்ளது. சிறி தன்னை மிகவும் எளிமையாய் காட்டிக்கொள்வதை பார்த்தாலே தெரியும் அவரது தன்னடக்கம்.

நீண்ட‌ கால‌த்துக்கு பிற‌க்கு யாழில் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி அக்கா.................அப்ப‌டியா தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி...............
 

  • Replies 63
  • Views 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

இங்கே எழுதியவற்றை வாசித்தபோது நான் மட்டுமே உங்களை சந்திக்கிறேன்.

படங்கள் போடுவா சிறி???😂

விசுகர்,animiertes-fotograf-bild-0048.gif படங்களை... பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். 😂
இன்னும் பத்து, பதினைந்து வருசத்தால் பதியவும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

விசுகர்,animiertes-fotograf-bild-0048.gif படங்களை... பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். 😂
இன்னும் பத்து, பதினைந்து வருசத்தால் பதியவும். 🤣

அதுவரை 7 அடியாகவே கணிப்பு இருக்கட்டும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பையன்26 said:

நீண்ட‌ கால‌த்துக்கு பிற‌க்கு யாழில் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி அக்கா.................அப்ப‌டியா தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி...............
 

எனக்கும் மகிழ்ச்சி தம்பி.  யாழுக்கு வந்து பார்த்ததோடு சரி. இப்ப திரும்ப பங்கு பற்றுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2023 at 11:27, புங்கையூரன் said:

தமிழ் சிறி என்னைப் பொறுத்த வரையில் ஒரு கேள்வியின் நாயகன்...!

ஏன் சொல்லுகின்றேன் என்றால், இவரைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு குறு குறுப்பு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றது..!

இவர் எழுதும் விடயங்கள் மிகவும் பரிச்சயமானதாக உள்ளது தான் காரணம்..!

எனது ஆசிரியர்களின் பெயர்கள், நண்பர்களின் பெயர்கள், சம காலத்தில் இருந்தவர்களுக்கே தெரிந்த ஊர்கள் (நாவாந்துறை, கோணாந்தோட்டம், சோடாப் போத்தல்) எல்லாம் இவருக்கும் தெரிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல...கவிஞர் ஜெயபாலன் பற்றி..பல்கலைக் கழக சுற்று வட்டாரத்திலிருந்த அபிப்ப்பிராயம் அனைத்தும் இவருக்குத் தெரிந்திருக்கின்றது. இது வெறும் கேள்வி ஞானத்தால் மட்டும் வந்ததென்று நான் நம்பவில்லை!

இவரின் நகைச்சுவை உணர்வு ஒருவரை நினைவூட்டுகின்றது. அவரா இவர்..! பதிலைக் காலத்திடம் விட்டு விடுகின்றேன்!

எனது ஆரம்ப காலங்களில் யாழில்..எனது பதிவுகளுக்கு ...ஊக்கமும்..ஒத்துழைப்பும் வழங்கிய ஒரு கள உறவு..!

ஒரு முறை வெள்ளிக்கிழமை விலையாட்டு ஒன்று விபரீதமாக முடிந்து விட்ட போது..மூன்று நாளைக்கு யாழ் பக்கம் தலை காட்ட மாட்டேன் என்று விட்டு மருத்துவ மனையில் போய்ப் படுத்து விட்ட உறவு..!

ஒரு தடவை யாழில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று எழுதும் உறவு ஒன்று என்னைப் பற்றி ஏதோ எழுதி விட்டது என்பதற்காக, ஆறுமுக நாவலர் மட்டும் தான் அந்த உறவிடம் பேச்சு வாங்கவில்லை என்று ஆறுதல் படுத்திய ஒரு ஊறவு..!

வெளி நாடு வந்ததும்..மரத்திலிருந்து நேரே மகிழுந்துக்குள் விழுந்தவர்கள் போல அல்லது எமது மக்களின் விடிவுக்காக ஏங்கும் ஒருவர் என்ற வகையில்...தமிழ் சிறி மிகவும் உன்னதமானவர்..!

ஒரு முறை வேலையிலிருக்கும் போது..யாழை எட்டிப் பார்த்த வேளையில்..தமிழ் சிறி துருக்கியில் ஒரு மஸ்ஸாஜ் பாலருக்குப் போன கதையை வாசிக்க நேர்ந்தது!

இளமையான அழகிய பெண்கள் வாசலில் நின்று உள்ளே அழைத்துச் சென்றனர்..!

ஒரு ஆண்மகனின் என்னவாக இருந்திருக்கும் என்று நான் இங்கே எழுதத் தேவையில்லை!

ஆனால் நடந்தது என்னவோ..ஒரு தடியன் ஒருவன் உள்ளே வந்து ..நெளிவெடுத்து விட்டான் என்று எழுதியிருந்தார்.

அன்று சிரித்த சிரிப்புக்கான விளக்கம் இன்னும் ஒருவருக்கும் கொடுக்கவில்லை. தலையில் ஏதும் பிழையோ என்று நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்...!

உறவு தொடரும்...!

 

 

 

 

 

 

 

 

 

 

 

கதையோடு ,கதையாய் என்னையும் சேர்த்து தாக்கி இருக்கிறீர்கள் .நன்றி  

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

கதையோடு ,கதையாய் என்னையும் சேர்த்து தாக்கி இருக்கிறீர்கள் .நன்றி  

புங்கையூரான்... உங்களைச் சொல்லவில்லை ரதி.
அவர் சொன்ன ஆள்... வேறை ஆள். 😂

ஆனால்... நேற்று திண்ணையில் உங்களைப் பற்றி கதைத்தோம். 🤣
இன்னும் இருக்கு, ஒருக்கால்  பாருங்கள்.   🙂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

புங்கையூரான்... உங்களைச் சொல்லவில்லை ரதி.
அவர் சொன்ன ஆள்... வேறை ஆள். 😂

ஆனால்... நேற்று திண்ணையில் உங்களைப் பற்றி கதைத்தோம். 🤣
இன்னும் இருக்கு, ஒருக்கால்  பாருங்கள்.   🙂

ஓ! அப்படியா மன்னியுங்கோ புங்கை 

  • கருத்துக்கள உறவுகள்

திரியை ஆரம்பித்த பையனுக்கு வாழ்த்துக்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கதையோடு ,கதையாய் என்னையும் சேர்த்து தாக்கி இருக்கிறீர்கள் .நன்றி  

அக்கா இது க‌ருத்துக்க‌ள‌ம் 

பல‌ர் ப‌ல‌ருட‌ன் முர‌ன் ப‌டுவ‌து உண்டு

அது உங்க‌ளுட‌ன் ந‌ட‌ந்த‌ க‌ருத்து மோத‌ல‌ வைச்சு தான் புங்கையூர‌ன் அண்ணா எழுதினார் என்று நினைப்ப‌து த‌வ‌று அக்கா , நான் பார்த்த‌ ம‌ட்டில் அந்த‌ ம‌னுஷ‌ன் யார் கூட‌வும் சோலிக்கு போக மாட்டார்

இது த‌மிழ் சிறி அண்ணாவை ம‌கிழ்விக்க‌ ஊக்க‌ப் ப‌டுத்த‌ தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ திரி அக்கா

த‌மிழ் சிறி அண்ணாவுட‌ன் உங்க‌ளுக்கு ம‌ற‌க்க‌ முடியாத‌ அன்பான‌ நினைவுக‌ளை இந்த‌ திரியில் எழுத‌லாம்❤️😁🙏..................

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தமிழ்சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

வாழ்த்துக்கள் தமிழ்சிறி

என்ன‌ உடையார் அண்ணா வெறும‌ன‌ம் வாழ்த்துக்க‌ள் என்று சொல்லி விட்டு ஓட‌ப் பாக்கிறீங்க‌ள்................த‌மிழ் சிறி அண்ணா எழுதின‌தில் உங்க‌ளுக்கு ம‌ற‌க்க‌ முடியாத‌தை ஒரு சில‌த‌ எடுத்து விடுங்கோவேன்.............❤️😁🙏

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதல் , முதல் யாழுக்கு வரேக்குள்ள என்னை வரவேற்றவர்களில் தமிழ்சிறியும் ஒருவர் ...எங்களுக்குள் கருத்து முரண்பாடுகள் வந்த நினைவு இல்லை ...ஆனால் ஒரேயொரு தடவை சக பெண் உறவோடு இவருக்கு  ஏற்பட்ட கருத்து மோதலால் நான் போய் இவருக்கு பேச்சு கொடுத்திருக்கிறேன் ...நான் சந்திக்க விரும்பும் கள உறவுகளில் இவரும் ஒருவர். ஆனால் இவர் என்னை சந்திக்க விரும்புவாரா என்பது கேள்விக் குறியே ...யாழ் தொடர்ந்து நிலைத்து நிற்பதற்கு இவர் போன்றவர்களும் காரணம்...உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

நான் முதல் , முதல் யாழுக்கு வரேக்குள்ள என்னை வரவேற்றவர்களில் தமிழ்சிறியும் ஒருவர் ...எங்களுக்குள் கருத்து முரண்பாடுகள் வந்த நினைவு இல்லை ...ஆனால் ஒரேயொரு தடவை சக பெண் உறவோடு இவருக்கு  ஏற்பட்ட கருத்து மோதலால் நான் போய் இவருக்கு பேச்சு கொடுத்திருக்கிறேன் ...நான் சந்திக்க விரும்பும் கள உறவுகளில் இவரும் ஒருவர். ஆனால் இவர் என்னை சந்திக்க விரும்புவாரா என்பது கேள்விக் குறியே ...யாழ் தொடர்ந்து நிலைத்து நிற்பதற்கு இவர் போன்றவர்களும் காரணம்...உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன்.

வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி அக்கா.................

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 24/2/2023 at 15:52, தமிழ் சிறி said:

Thank You Thanks GIF - Thank You Thanks Thank You So Much - Discover &  Share GIFs

யாழ்.களத்தில்... எனது  15 வருடம்  நிறைவானதை ஒட்டி,
வாழ்த்துத் திரியை ஆரம்பித்த அன்புச் சகோதரன்   @பையன்26  அவர்களுக்கும் 
நினைவுகளையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அன்பு உறவுகளாகிய...  

 @நியாயத்தை கதைப்போம், @ஈழப்பிரியன், @விளங்க நினைப்பவன், @யாயினி, @பெருமாள், @குமாரசாமி அண்ணை, @suvy, @ராசவன்னியன், @நிலாமதி அக்கா, @சுவைப்பிரியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @புலவர், @ஏராளன், @நிழலி, @Kandiah57 அண்ணை, @nunavilan  ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள். 🙏 🙏 🙏

நீங்கள் எழுதிய கருத்துக்களை வாசித்து மிகவும் மனம் நெகிழ்ந்தேன். 🙂
உண்மையில்... 15 வருடம் கடந்து விட்டது என்று நம்பவே முடியாத அளவிற்கு 
🗓️ காலம் வேகமாக உருண்டோடி விட்டது. 🗓️

உலக அனுபவங்கள், ஆலோசனைகள் போன்றவற்றை... 
யாழ்களத்தின் மூலம், உங்களிடமிருந்து பெற்றுக்  கொண்டதை  என்றும் மறவேன். 🥰

என்றும் இனிமையுடன்... தொடர்ந்து பயணிப்போம். 💖

 

animiertes-danke-thank-you-bild-0043.gif அரும்புகள் மலரட்டும்: நன்றி சொல்லும் நேரமிதுanimiertes-danke-thank-you-bild-0042.gif  

மேலும்... வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட அன்பு உறவுகளுக்கு 
நன்றி தெரிவிக்க ஏற்பட்ட   தாமதத்துக்கு வருந்துகின்றேன். 🙏

@விசுகு, @முதல்வன், @புங்கையூரன், @goshan_che, @nilmini, @ரதி, @உடையார் 
ஆகியோருக்கு மிக்க நன்றிகள். 🥰

நீங்கள் என்னைப்  பற்றி எழுதிய விடயங்கள் மகிழ்வாகவும், 
மிகவும் சிரிப்பு வர வைக்கக் கூடியதாகவும் இருந்தது. 😁

நேரில் பலர் அறிமுகம் இல்லாமல் இருந்தும்... நீங்கள் என்னைப் பற்றி எழுதிய 
குணாதிசயங்கள்   பலதும் பொருந்தி வருகின்றது. 😂
யாழ் கள உறவுகள் ஒருவரை கணிப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதை நிரூபித்து வீட்டீர்கள். 👍

என்னில் அளவு கடந்த பாசம் கொண்டு இந்தத் தலைப்பை திறந்த @பையன்26க்கும்,
கருத்துக்களை எழுத நேரம் ஒதுக்கி, வெளிப்படையாக உங்களின் மனதில் பட்டவற்றை    
எழுதியமைக்கு  மீண்டும் சிரம் தாழ்ந்த நன்றிகள்.  🙏 🥰

உங்களுடன் பழகிய நாட்கள் மிகவும் இனிமையானவை. 💖
அவற்றை... என் வாழ்நாள்  முழுக்க   இரை மீட்டிக் கொண்டே இருப்பேன். 🥰 🥰 🥰

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.