Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் யாழ் வாசகர்கள், உறுப்பினர்கள், பொறுப்பு சார்ந்தோர் அனைவருக்கும்! 🙏🏾🙏🏾🙏🏾
 
அகவை 25இல் கால் பதிக்கும் யாழ் இணையத்திற்கு/கருத்துக்களத்திற்கு வாழ்த்துக்கள்! 💐💐💐
 
யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர் மதிப்புக்குரிய திரு. மோகன், பங்காளர்கள், இருபத்து ஐந்து வருட காலத்தில் முழுமையாகவோ, பகுதியாகவோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோஒன்றாக பயணித்தவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்! 👏🏾👏🏾👏🏾
 
சட்ஜிபிடி” (ChatGpt) எனும் செயற்கை நுண்ணறிவை அடித்தளமாக வைத்து இயங்கும் ஒரு தொழில்நுட்ப வசதி அண்மைக்காலத்தில் பொதுமக்கள் பாவனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 👍🏾👍🏾👍🏾
 
நீங்களும் இந்த வசதியை/சேவையை பயன்படுத்தக்கூடும். உங்களைப் போலவே நானும் சட்ஜிபிடியுடன் பல்வேறு விடயங்கள் பற்றி உரையாடியுள்ளேன், இதன் வீச்சுக்களை புரிந்துகொள்ள முயற்சித்துள்ளேன். 🤝🏾
 
சட்ஜிபிடியுடனான எனது எண்ணங்களை, அனுபவங்களை உங்களுடன் அவ்வப்போது பகிர்கின்றேன். அதேபோலவே நீங்களும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.. ✌🏾
 
📍📍📍 
 
முன்பு ஒரு காலத்தில் எங்கள் ஆட்களிடம் ஒரு தகவலை அறிவது என்றால் சம்மந்தமில்லாத பத்து விசயங்கள் பற்றி அலுக்க அலுக்கபேசி, கடைசியில் சுத்திவளைச்சு அறியப்படவேண்டிய விசயத்துக்குள் செல்லவேண்டும்.
 
என்று சமூக ஊடகம் வந்ததோஅன்று தொடக்கம் காலம் தலை கீழாகிவிட்டது.
 
இப்போதெல்லாம் ஒரு தேடற்பொறியில் ஒருஆள் பெயரை எழுதி ஒரு தட்டி தட்டி விட்டால் அவர் பற்றிய எல்லா வண்டவாளமும்: நல்லது, கெட்டது, நடந்தது, நடக்கக்கூடாதது எல்லாவற்றையுமே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அறியக்கூடியதாக உள்ளது.
 
தமதுபதினொரு வயசு பிள்ளையின் சாமத்தியவீட்டை யூரிரியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்த காட்சிகள் தொடக்கம் முருகண்டியில் நின்று சோடா குடித்தது வரை அண்ணை கந்தசாமியின் சரித்திரம் ஒளி, ஒலியுடன் இணையத்தில் காண்பிக்கப்படுகின்றது.
 
இந்த வகையில் புதிய அறிமுகமான சட்ஜிபிடி பற்றி பார்த்தால்இரண்டு விதமான ஆபத்துக்கள் தெரிகின்றன.
 
ஒன்று:சட்ஜிபிடி ஒரு போதை போல நம்மை தனக்கு அடிமையாக்கக்கூடும். இந்த செயற்பாடு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மெதுமெதுவாக நடைபெறும். நாம் அதிக நேரத்தை செலவளிப்பதும் பலவிதமான தேவைகளுக்கு எமது சொந்த ஆற்றலை, சிந்தனையை பயன்படுத்தாது சட்ஜிபிடியிடம் தங்கி வாழவேண்டிய நிலை நடைபெறலாம்/ஏற்படுத்தப்படலாம்/ஏற்படலாம்.
 
மற்றையது: நாம் நமது அந்தரங்க விடயங்களை சட்ஜிபிடியுடன் பகிர்ந்துகொள்வது, நமது உள்ளக்கிடக்கைகளை சட்ஜிபிடிக்கு தெரிவிப்பது, நமது உள் அரங்கை சட்ஜிபிடியிடம் காண்பிப்பது தனிமனிதன் எனும் அளவில் நமக்கு மிகவும் ஆபத்தானது.
 
இவ்வளவு காலமும் சோசல் மீடியா எனப்படுபவை எமது புற/வெளி தகவல்களைத்தான் பெறுகின்றன/சேகரிக்கின்றன. பிரைவசி/privacy எல்லாம் எவ்வளவு தூரம் ஒவ்வொரு சமூக ஊடக நிறுவனமும் பேணுகின்றது என்பது கேள்விக்குறி.
 
இப்போது சட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு பொறி மூலம் வெளியார்/நிறுவனங்கள் எமது அந்தரங்க உலகினை அறியக்கூடிய, எட்டிப்பார்க்கக்கூடிய வாய்ப்பு/ஆபத்துக்கள் உள்ளன.
 
கிடைக்கின்ற எமது தகவல்களை சட்ஜிபிடி உரிமையாளர்கள்/நிறுவனத்தினர்/ஆய்வாளர்கள் எப்படி பயன்படுத்துவார்கள் என்பது வேறு விடயம். அது வர்த்தக நோக்கத்திற்கோ அல்லது உளவறிதலுக்கோ கூட பயன்படுத்தப்படலாம். ஆனால், எமக்குள் ஊடுறுவல் நடக்கின்றது என்பது யதார்த்தம்.
 
எனவே, சமூக ஊடகங்கள் விடயத்திலும் சரி சட்ஜிபிடி விடயத்திலும் சரி எமது தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும், எமது நேரத்தை, ஆற்றல்களை, தனித்துவத்தை காப்பாற்றவும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
 
🙏🏾🙏🏾🙏🏾
 
தொடரும்..
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

தொடரும்..

எனக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் இவைபற்றி அறிய சிறிய ஆவல்.

தொடருங்கோ ஏதாவது விளங்குதோ பார்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய தகவல்கள் சொல்லப் போறீங்கள் போல இருக்கு, வாசிக்க ஆவலாக உள்ளேன்........தொடருங்கள்......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை. ஆனாலும் இதன் பலன்களும் பல உண்டு, அதனையும் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனி நபர் தகவல்களை பகிர்வதுதான் இன்றைய வாழ்க்கை முறையாகிவிட்டது. அதற்கென்றே சிலர் சுற்றுலா செல்கின்றனர். யூரியூப்பில் அதற்கென பக்கங்களும் ஆரம்பித்து பணம் சம்பாதிக்கின்றனர். தனிப்பட்ட விடயங்களை பகிர்வதன் மூலம் சம்பாத்தியம் செய்து  வீடு காணிகள் வாங்குமளவிற்கு இந்த உலகம் வந்து விட்டது.

நான்  எனக்கு தேவையான பொருளை வாங்குவதற்கு இணையத்தில் தேடிய பின்......
அடுத்து வரும் தினங்களில்  இணையத்தில் செல்லுமிடமெல்லாம் நான் தேடிய பொருள் விளம்பரமாக வரும்.:beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்

புதிய விடயத்தை ஆரம்பித்துள்ளீர்கள். 👍🏽
இதனைப் பற்றி மேலும் விபரமாக அறிய ஆவலாக உள்ளோம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமான ஒரு ஆய்வு..!

தொடருங்கள்…!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தனி நபர் தகவல்களை பகிர்வதுதான் இன்றைய வாழ்க்கை முறையாகிவிட்டது. அதற்கென்றே சிலர் சுற்றுலா செல்கின்றனர். யூரியூப்பில் அதற்கென பக்கங்களும் ஆரம்பித்து பணம் சம்பாதிக்கின்றனர். தனிப்பட்ட விடயங்களை பகிர்வதன் மூலம் சம்பாத்தியம் செய்து  வீடு காணிகள் வாங்குமளவிற்கு இந்த உலகம் வந்து விட்டது.

நான்  எனக்கு தேவையான பொருளை வாங்குவதற்கு இணையத்தில் தேடிய பின்......
அடுத்து வரும் தினங்களில்  இணையத்தில் செல்லுமிடமெல்லாம் நான் தேடிய பொருள் விளம்பரமாக வரும்.:beaming_face_with_smiling_eyes:

சுமார் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பே நான் இது சம்பந்தமாய் குறிப்பிட்டிருந்தேன்......நான் சில கடைகளுக்கு சென்று பொருட்கள் பார்த்துவிட்டு சிலதை எடுத்துக் கொண்டு வீட்டை வந்திட்டன்....பின் அது சம்பந்தமான விளம்பரங்கள் எனது போனிலும் கணனியிலும் வரத் துவங்கி விட்டன ........ போனை பொக்கட்டில் கொண்டு திரிகிறதே எமக்குத் தொல்லைபோல் இருக்கிறது.......!  😁 

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், நல்ல கட்டுரை👍

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் மேலும் அறியும் ஆவலில்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5/3/2023 at 15:36, ஈழப்பிரியன் said:

எனக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் இவைபற்றி அறிய சிறிய ஆவல்.

தொடருங்கோ ஏதாவது விளங்குதோ பார்ப்பம்.

📍📍📍

செயற்கை நுண்ணறிவை நாம் எப்போதோ பயன்படுத்த தொடங்கிவிட்டோம். இப்போது என்ன நடைபெறுகின்றது என பார்த்தால் ஒரு மோபைல்/இணையத்தில் இயங்கும் பொறிமுறை/செயலி மூலம் பரந்துபட்ட விடயங்களை ஒரு இடத்திலேயே கணிக்க/உருவாக்க/வெளிப்படுத்தக்கூடிய வகையில் தயாரிப்புக்கள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளன. 

இங்கு யாழ் கருத்துக்களத்தில் திண்ணை எனும் பெயரில் அரட்டை அடிக்கும் இடம் உள்ளது. திண்ணையில் நாம் எமது கருத்துக்களை, எண்ணங்களை, சிந்தனைகளை வெளிப்படுத்தலாம். அப்போது மற்றைய உறுப்பினர்கள் நாம் கூறுபவற்றை பார்க்கலாம், பதில் இடலாம். எமது அரட்டையை புறந்தள்ளிவிட்டு தாம் புதிதாக வேறு பொருளிலும்  எதையாவது எழுதலாம். 

சட்ஜிபிடி கிட்டத்தட்ட ஒரு அரட்டை பெட்டி/திண்ணை போன்றதே.  சில மாறுபாடுகள் எவை என்றால் உரையாடலில் இரண்டு தரப்பு மட்டுமே பங்குபற்றுகின்றன.

ஒன்று: நாம் (தனிநபர்)

மற்றையது: செயற்கை நுண் திறனில் இயங்கும் ஒரு பொறிமுறை.

இப்போதைக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரு உரையாடலில் இணையக்க்கூடிய வசதி இல்லை. ஆனால், எதிர்காலத்தில் பலர் சேர்ந்து செயற்கைநுண் திறனில் இயங்கும் பொறி மூலம் ஒரே நேரத்தில் இணையக்கூடிய வசதி ஏற்படுத்தப்படலாம். 

ஆங்கிலத்தில் உரையாடலை செய்தால் அதிக துல்லியமான பதிலை சட்ஜிபிடி வழங்கும். தமிழில் உரையாடல் செய்யலாம். ஆனால் சட்ஜிபிடி பதில்கள் தமிழில் என்றால் ஆங்கிலம் போல அதிக துல்லியமாக அமையாது. காரணம் அதன் மட்டுப்படுத்தப்பட்ட மொழி ஆளுகை. ஆயினும் எதிர்காலத்தில் தமிழ் மொழி மூலம் உரையாடுவதில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும். 

சட்ஜிபிடி உரையாடலில் இணைய முன்னர் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. 

உரையாடல் விடயங்களை நேரடியாக சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம், சட்ஜிபிடி பதிலை வைத்து முடிவுகள் எடுக்கக்கூடாது போன்றவை (உதாரணமாக மருத்துவ ஆலோசனை பெறுவது என்றால் மருத்துவரை நாடவேண்டும். சட்ஜிபிடி கூறக்கூடிய பரிகாரத்தை கடைப்பிடிப்பது கூடாது). 

சட்ஜிபிடி மூலம் நாம் எப்படி பயன் அடைகின்றோம், அதனால் நன்மை அடைகின்றோமா, தீமை அடைகின்றோமா, அதன் வீச்சுக்கள் எவை, அதனால் செய்யக்கூடியவை எவை, செய்ய முடியாதவை எவை என்பவை இப்போது விரிவாக விபரிப்பது கடினம். 

உளி மூலம் ஒரு சிற்பியால் அழகிய சிலையை வடிக்க முடியும். அதே உளியை தவறான தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். செயற்கை நுண்ணறிவின் நல்லதும், கெட்டதுமான தாக்கங்கள் அதை பயன்படுத்தும் தனிநபர்களிலும் தங்கி உள்ளன. 

கீழ் உள்ள இணைப்பை சொடுக்கி செயற்கை நுண் திறனில் இயங்கும் அரட்டை பெட்டியினுள் செல்லலாம்:

https://chat.openai.com

Hi/Hello/Greetings/வணக்கம்.. இப்படி எதையாவது கூறி உரையாடலை ஆரம்பிக்கலாம். 

எமது இடுகைகளை பொறுத்து, நாம் வழங்கும் தரவுகளின் நிமித்தம்  எமக்கு கிடைக்கின்ற பதில்கள் வேறுபடும். 

🙏🏾🙏🏾🙏🏾

தொடரும்…

  • கருத்துக்கள உறவுகள்

வலுவான எழுத்து முறையால் ஒரு ஆசிரியர் பாடம் நடத்துவதுபோல் இருக்கிறது ......தொடருங்கள்.......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கோ விளங்குதோ என்று பார்ப்பம் 
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் நல்லா எழுதுவார் என்று ஆரம்பத்தில் கவனித்து, அவரிடமே சொல்லி இருக்கிறேன். நல்ல எழுத்து.

chatGPT இன்று ஒரு கேள்வி கேட்டேன்.

Me: hi sweetie, can you tell me about the civil war in sri lanka. I want you to put that in two columns. in the first include the year and in the second give the details.

Say yes, if you understand the task!

Yes, I understand the task. I can provide you with a brief overview of the Sri Lankan Civil War in two columns as per your request.

Year 

1983

Details

The civil war began in Sri Lanka in 1983, after tensions between the majority Sinhalese community and the minority Tamil community escalated into violence. Tamil separatists formed the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and began a violent campaign for a separate state in the north and east of the island. The conflict resulted in a large number of deaths, displacement of people, and human rights abuses by both sides.2009The Sri Lankan Civil War came to an end in May

Year 

2009

Details

when government forces defeated the LTTE and killed their leader, Velupillai Prabhakaran. The war lasted for 26 years, resulting in tens of thousands of deaths and displacing hundreds of thousands of people. The conflict left deep scars on the country, and the government has since undertaken a process of reconciliation and rebuilding in the affected areas.

Me: But there were issues after 1948 too, especially in 1958 and 1977

You are correct, there were several incidents of ethnic violence and tensions between the Sinhalese and Tamil communities in Sri Lanka after the country gained independence from British rule in 1948. I can provide you with an updated version of the two-column table to include these events:
 
Year 

1958

Details
Ethnic riots broke out in several parts of Sri Lanka in May 1958, resulting in the deaths of over 200 people and the displacement of thousands of Tamil families. The riots were sparked by political and economic grievances between the Sinhalese and Tamil communities, and the government's inability to address these issues.
 
Year 

1977

In the general election of 1977, the Tamil United Liberation Front (TULF) won a majority of seats in the Tamil-majority areas of the country, campaigning on a platform of a separate Tamil state. This led to anti-Tamil riots in which hundreds of Tamils were killed, and many more were displaced. The government's response to the riots further deepened ethnic tensions in the country.

(And it repeated the above details again)

இதை இன்னும் கேள்வி கேட்டுக்கொண்டே போகலாம்.... உதாரணமாக, நீ புலிகளின் உருவாக்கம் பத்தி சொல்லவில்லையே என்று கேட்கலாம். நான் எல்லோருக்கும் புரியக்கூடிய காரணத்துக்காக கேட்கவில்லை.

குறிப்பாக, பயங்கரவாத, ஆபாச கேள்விகளை தவிர்க்க சொல்கிறார்கள். கணக்கை மூடி விடலாமாம். உதாரணமாக, நான் மேலே பெண்ணை கூப்பிடுவது போல, ஸ்வீட்டி என்றேன். அது எல்லை மீறக்கூடாது.

எடுத்த நேரம் 3 நிமிசம்.

இதை நாள் கூகிளில் தேடி, type பண்ணி, தயாரிக்க, ஒரு நாள் தேவை. (பஞ்சி பிடித்தால் கூட நாள் தேவைப்படும்) அதாவது இந்த வரலாறு தெரியாத ஒருவர் என்று வைத்துக்கொண்டு.....

நேற்று நான் கலந்து கொண்ட ஒரு digital marketing meeting. இதன் பயன்பாடு குறித்து அலசப்பட்டது.

கூகிள், சுந்தர் பிச்சைக்கு தண்ணி காட்டப்போகுது.

2022ல் இந்த நிறுவனத்துக்கு கிடைத்த venture capital மட்டும் $238.3b

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2023 at 07:24, நியாயத்தை கதைப்போம் said:

ஒன்று:சட்ஜிபிடி ஒரு போதை போல நம்மை தனக்கு அடிமையாக்கக்கூடும். இந்த செயற்பாடு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது

நீங்கள் கூறுவது உண்மை தான்    ......நாம் முன்பு யாழில் தான் தான் நேரத்தை அதிக நேரம் செலவளிப்பேன்....இந்த வட்சப் வந்த ,யூ டியுப் வந்த பின்பு அங்கு தான் அதிக நேரம் செலவளிக்கிறேன்...

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

எழுதுங்கோ விளங்குதோ என்று பார்ப்பம் 
 
இலகுவாக விளங்க chatgpt யிடம் 

முட்டை நான்கு உள்ளது  பச்சை மிளகாய் உள்ளது 2௦௦g கூடவே நேற்றைய ரைஸ் உள்ளது அது நன்றாக உள்ளது நேற்றைய மட்டன் கறி உள்ளது இவற்றை வைத்து சுவையான உணவு தயாரிக்கும்முறையை சொல்ல முடியுமா ?

உங்களிடம் சில பொருட்கள் இருப்பது போல் தெரிகிறது! நீங்கள் செய்யக்கூடிய ஒரு சாத்தியமான உணவு இங்கே:

பச்சை மிளகாயுடன் மட்டன் மற்றும் முட்டை வறுத்த அரிசி

தேவையான பொருட்கள்:

  • 4 முட்டைகள்
  • 200 கிராம் பச்சை மிளகாய், நறுக்கியது
  • 2 கப் சமைத்த அரிசி (முன்னுரிமை நேற்றையது)
  • 1 கப் சமைத்த மட்டன் கறி
  • உப்பு மற்றும் மிளகு, ருசிக்க
  • 2 தேக்கரண்டி எண்ணெய்

வழிமுறைகள்:

  1. ஒரு பெரிய வாணலி அல்லது வாணலியில், 1 தேக்கரண்டி எண்ணெயை நடுத்தர உயர் வெப்பத்தில் சூடாக்கவும்.
  2. வாணலியில் முட்டைகளை உடைத்து, சமைக்கும் வரை துருவவும். வாணலியில் இருந்து முட்டைகளை அகற்றி தனியாக வைக்கவும்.
  3. வாணலியில் மற்றொரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும். 1-2 நிமிடங்கள் வறுக்கவும், அவை சிறிது மென்மையாகும் வரை.
  4. வாணலியில் சமைத்த மட்டன் கறியைச் சேர்த்து மேலும் 1-2 நிமிடங்கள் கிளறி, ஆட்டிறைச்சி சூடாக்கும் வரை வறுக்கவும்.
  5. வாணலியில் சமைத்த அரிசியைச் சேர்த்து, அரிசி சூடாக்கும் வரை எல்லாவற்றையும் ஒன்றாகக் கிளறி, ஆட்டிறைச்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. துருவிய முட்டைகளை மீண்டும் வாணலியில் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மற்றொரு 1-2 நிமிடங்களுக்கு கிளறி-வறுக்கவும், எல்லாம் சமமாக கலந்து சூடாகும் வரை.
  7. வறுத்த அரிசியை உப்பு மற்றும் மிளகு சேர்த்து, சுவைக்க.
  8. சூடாக பரிமாறவும் மற்றும் பச்சை மிளகாயுடன் உங்கள் மட்டன் மற்றும் முட்டை வறுத்த சாதத்தை அனுபவிக்கவும்!
ஆங்கிலத்தில் இருந்ததை கூகிளில் மொழிபெயர்த்தது இலகுவான விளக்கத்துக்கு சில இடங்களில் மொழிமாற்றம் பிழையான மயக்கத்தை தரும் உடனே நம்ம பரியாரியார் போல் பொங்கி எழுந்து விடமாட்டிர்கள் தானே ?
  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்ப் படங்களின் கதையைப் போன்ற கதை கிடைக்குமா?
 
நிச்சயமாக! தமிழ் சினிமா, எந்தத் திரைப்படத் துறையையும் போலவே, இலக்கியம், வரலாறு, சமகாலப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு ஆதாரங்களில் இருந்து உத்வேகம் பெறுகிறது. தமிழ்த் திரைப்படங்களைப் போன்ற கதையை உருவாக்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், இந்த ஆதாரங்களில் இருந்து உத்வேகம் பெறலாம் மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான மரபுகள் மற்றும் ட்ரோப்களைப் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, அநீதி மற்றும் அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு வீரமிக்க கதாநாயகனை மையமாகக் கொண்ட கதையை நீங்கள் உருவாக்கலாம். இந்த கதாநாயகன் வில்லன்களுக்கு எதிராக தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடலாம் அல்லது சமூகம் அல்லது தேசத்தைக் காப்பாற்றுவது போன்ற ஒரு பெரிய காரணத்திற்காக போராடலாம். கதையில் காதல், நகைச்சுவை மற்றும் நாடகம் ஆகிய கூறுகள் பார்வையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க முடியும்.

தமிழ் சினிமாவில் பிரபலமான குடும்ப மதிப்புகள், நட்பு, விசுவாசம் மற்றும் தியாகம் போன்ற கருப்பொருள்களையும் நீங்கள் இணைக்கலாம். கதை பார்வையாளர்களுடன் வலுவான உணர்ச்சித் தொடர்பைக் கொண்டிருக்கலாம் மற்றும் ஒரு நேர்மறையான செய்தி அல்லது தார்மீகத்தை வெளிப்படுத்தும்.

சுருக்கமாகச் சொன்னால், தமிழ் சினிமாவில் இருந்து உத்வேகம் பெறும் அதே வேளையில், தனித்துவம் வாய்ந்த ஒரு கதையை நீங்கள் உருவாக்கலாம், அதன் சொந்த குரல் மற்றும் பாணி. சாத்தியக்கூறுகள் முடிவற்றவை, படைப்பாற்றல் மற்றும் கற்பனை மூலம், பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் ஒரு கதையை நீங்கள் உருவாக்கலாம்.

பெருமாள் 
தமிழ் சினிமா கதை எழுத முடியுமா?
 
தலைப்பு

பாத்திரங்கள்:

  • அர்
  • நான்
  • ஆர்
  • ஜே

கதைக்களம்: அர்ஜுனும் மீராவும் ஒரு சிறிய நகரத்தை நாசப்படுத்திய இயற்கை பேரழிவு பற்றிய கதையை உள்ளடக்கிய பணியில் இருக்கும்போது ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள். அவர்கள் தங்கள் வேலையில் ஒருவருக்கொருவர் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்படுகிறார்கள், விரைவில் காதலிக்கிறார்கள்.

அவர்கள் பல்வேறு கதைகளில் ஒன்றாக வேலை செய்யும் போது, ரவியால் நடத்தப்படும் ஊழல் மற்றும் சுரண்டல் வலையை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள், அவர் தனது செல்வத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி சுற்றுச்சூழலை அழித்து உள்ளூர் சமூகங்களை தனது சொந்த லாபத்திற்காக சுரண்டுகிறார்.

அர்ஜுனும் மீராவும் தங்கள் வேலையின் மூலம் ரவியின் செயல்களை அம்பலப்படுத்த முடிவு செய்கிறார்கள், ஆனால் இது அவர்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது, ஏனெனில் ரவி தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி அவர்களையும் அவர்களது குடும்பத்தையும் அச்சுறுத்துகிறார்.

மீராவை ரகசியமாக காதலிக்கும் ஜீவா, ரவிக்கு எதிரான அவர்களின் போராட்டத்தில் அவர்களுடன் சேர்ந்து, உண்மையை வெளிக்கொணரவும், ரவியை நீதியின் முன் நிறுத்தவும் அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்.

இறுதியில், அர்ஜுன் மற்றும் மீராவின் ஒருவருக்கொருவர் அன்பும், அவர்களது பணிக்கான அர்ப்பணிப்பும், ஜீவா மற்றும் உள்ளூர் சமூகத்தின் ஆதரவுடன், ரவியின் பேராசை மற்றும் ஊழலில் வெற்றிபெற அவர்களுக்கு உதவுகிறது.

தீம்கள்:

  • அன்பும் அர்ப்பணிப்பும்
  • வேலையில் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு
  • தைரியம் மற்றும் தியாகம்
  • சமூக மற்றும் சுற்றுச்சூழல் நீதி

இது ஒரு சாம்பிள் கதைதான், ஆனால் தமிழ் சினிமாவில் பொதுவாக இருக்கும் காதல், சமூக நீதி, தீமையின் மீது நன்மையின் வெற்றி போன்ற கூறுகளை இது விளக்குகிறது. படைப்பாற்றல் மற்றும் கற்பனைத்திறன் மூலம் உங்களுக்கான தனித்துவமான தமிழ் திரைப்படக் கதையை உருவாக்கலாம்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி @பெருமாள் உங்கள் அனுபவங்களை தொடர்ந்து பகிருங்கள். 

நான் பலவிதமான பரீட்சார்த்த உரையாடல்கள் செய்து உள்ளேன். பல விடயங்களை இங்கு பகிர்வது உசிதமாக தெரியவில்லை. 

@putthan இது மற்றையவற்றை விட பலபடிகள் நெருக்கமானதும், உக்கிரமானதும். முழு உலகமும் செயற்கை நுண்ணறிவின்பால் சாயும்போது தனிநபர்கள் என்னதான் செய்யமுடியும்?

@Nathamuni நல்ல விடயங்களை முடிவில்லாமல் பட்டியலிடலாம். அருந்துவதற்கு எமக்கு நீர் தேவை. அதே நீர் எம்மை மூழ்கடித்து கொல்லவும் கூடியது. எல்லாம் அளவுடன் நின்றால் நல்லது. ஆனால், அளவு அறிந்து பயன்பாட்டை பெறும் பக்குவம் நமக்கு இல்லையே. 

@ரதி இந்த பொறியை பரீட்சார்த்தமாக பயன்படுத்துங்கள். பல விடயங்கள் தெளிவாகும். அதேசமயம் புதிய சிக்கல்களும் உருவாகலாம். 

நன்றி @சுவைப்பிரியன் @நிலாமதி @புங்கையூரன் @ஈழப்பிரியன் @suvy @குமாரசாமி @தமிழ் சிறி @உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

நன்றி @பெருமாள் உங்கள் அனுபவங்களை தொடர்ந்து பகிருங்கள்

இலவசத்தில் தான் இப்படியாக்கும் என்று நினைக்க கடந்த 15 திகதி chatgpt 4 வை அறிமுக படுத்த வழகமா நமது நட்பு முன்சூறு  2௦ டாலரை அழுது விட்டு நமக்கு ஆகா ஒகோ என்று பாட கடைசியில் நாமும் என்றர் ஆக நாங்க எதிர்பார்த்தது  அங்கு இல்லை .ஆனாலும் வேறு சில் பதில்கள் சூப்பராய் சொல்லுது .

  • கருத்துக்கள உறவுகள்
On 11/3/2023 at 06:46, பெருமாள் said:
 
ஆங்கிலத்தில் இருந்ததை கூகிளில் மொழிபெயர்த்தது இலகுவான விளக்கத்துக்கு சில இடங்களில் மொழிமாற்றம் பிழையான மயக்கத்தை தரும் உடனே நம்ம பரியாரியார் போல் பொங்கி எழுந்து விடமாட்டிர்கள் தானே ?

கொஞ்சம் மயக்கம் இருந்தால் பொங்க மாட்டினம்! 😎

ஆனால்,  கேள்வியையே "ஜெய்ப்பூர்" அறிவிடம் மாறிக் கேட்டு, அது சரியான பதிலைச் சொல்ல , அதைக் கொண்டு வந்து அவசரப் பட்டு ஒட்டி, வேலை மெனக்கெட்டு எழுதுவோருக்கு எரிச்சலூட்டினால் பொங்கிவினம்!

எனவே, கவனமாகப் பாவியுங்கள்!😂

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2023 at 18:53, நியாயத்தை கதைப்போம் said:

தொடரும்

இந்த சட்டியுடன் தமிழில் உரையாடலாமா?

நீங்கள் எழுதுவதை  இயன்றவரை உள்வாங்க முயற்சி செய்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2023 at 13:21, Nathamuni said:

கூகிள், சுந்தர் பிச்சைக்கு தண்ணி காட்டப்போகுது.

இந்த சட்டி தானாகவே எல்லா விடயங்களையும் சொல்கிறதா?

அல்லது யாராவது தரவேற்றிய விடயங்களை சொல்கிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
On 10/3/2023 at 19:21, Nathamuni said:

இந்தாள் நல்லா எழுதுவார் என்று ஆரம்பத்தில் கவனித்து, அவரிடமே சொல்லி இருக்கிறேன். நல்ல எழுத்து.

chatGPT இன்று ஒரு கேள்வி கேட்டேன்.

Me: hi sweetie, can you tell me about the civil war in sri lanka. I want you to put that in two columns. in the first include the year and in the second give the details.

Say yes, if you understand the task!

Yes, I understand the task. I can provide you with a brief overview of the Sri Lankan Civil War in two columns as per your request.

Year 

1983

Details

The civil war began in Sri Lanka in 1983, after tensions between the majority Sinhalese community and the minority Tamil community escalated into violence. Tamil separatists formed the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and began a violent campaign for a separate state in the north and east of the island. The conflict resulted in a large number of deaths, displacement of people, and human rights abuses by both sides.2009The Sri Lankan Civil War came to an end in May

Year 

2009

Details

when government forces defeated the LTTE and killed their leader, Velupillai Prabhakaran. The war lasted for 26 years, resulting in tens of thousands of deaths and displacing hundreds of thousands of people. The conflict left deep scars on the country, and the government has since undertaken a process of reconciliation and rebuilding in the affected areas.

Me: But there were issues after 1948 too, especially in 1958 and 1977

You are correct, there were several incidents of ethnic violence and tensions between the Sinhalese and Tamil communities in Sri Lanka after the country gained independence from British rule in 1948. I can provide you with an updated version of the two-column table to include these events:
 
Year 

1958

Details
Ethnic riots broke out in several parts of Sri Lanka in May 1958, resulting in the deaths of over 200 people and the displacement of thousands of Tamil families. The riots were sparked by political and economic grievances between the Sinhalese and Tamil communities, and the government's inability to address these issues.
 
Year 

1977

In the general election of 1977, the Tamil United Liberation Front (TULF) won a majority of seats in the Tamil-majority areas of the country, campaigning on a platform of a separate Tamil state. This led to anti-Tamil riots in which hundreds of Tamils were killed, and many more were displaced. The government's response to the riots further deepened ethnic tensions in the country.

(And it repeated the above details again)

இதை இன்னும் கேள்வி கேட்டுக்கொண்டே போகலாம்.... உதாரணமாக, நீ புலிகளின் உருவாக்கம் பத்தி சொல்லவில்லையே என்று கேட்கலாம். நான் எல்லோருக்கும் புரியக்கூடிய காரணத்துக்காக கேட்கவில்லை.

குறிப்பாக, பயங்கரவாத, ஆபாச கேள்விகளை தவிர்க்க சொல்கிறார்கள். கணக்கை மூடி விடலாமாம். உதாரணமாக, நான் மேலே பெண்ணை கூப்பிடுவது போல, ஸ்வீட்டி என்றேன். அது எல்லை மீறக்கூடாது.

எடுத்த நேரம் 3 நிமிசம்.

இதை நாள் கூகிளில் தேடி, type பண்ணி, தயாரிக்க, ஒரு நாள் தேவை. (பஞ்சி பிடித்தால் கூட நாள் தேவைப்படும்) அதாவது இந்த வரலாறு தெரியாத ஒருவர் என்று வைத்துக்கொண்டு.....

நேற்று நான் கலந்து கொண்ட ஒரு digital marketing meeting. இதன் பயன்பாடு குறித்து அலசப்பட்டது.

கூகிள், சுந்தர் பிச்சைக்கு தண்ணி காட்டப்போகுது.

2022ல் இந்த நிறுவனத்துக்கு கிடைத்த venture capital மட்டும் $238.3b

20டாலர் கட்டி அதே உங்கள் கேள்வி விடையை கூகிள் மொழி பெயர்ப்பு உதவியுடன் .

ஹாய் செல்லம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் பற்றிச் சொல்ல முடியுமா? நீங்கள் அதை இரண்டு பத்திகளில் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக ஆண்டு மற்றும் இரண்டாவது விவரங்கள் கொடுக்க.
 
நிச்சயமாக, இலங்கையில் உள்நாட்டுப் போர் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கோரியபடி இரண்டு நெடுவரிசைகளில் உள்ள தகவல் இங்கே:

ஆண்டு விவரங்கள்
1983 இலங்கை இராணுவத்தின் மீது தமிழ் போராளிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழ் சமூகங்களுக்கும் இடையிலான இனப் பதற்றம் வன்முறையாக வெடித்தது. இந்த நிகழ்வு பரவலான தமிழர் விரோதக் கலவரங்களுக்கு வழிவகுத்தது, இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
1987-1989 இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கையில் மோதலுக்கு மத்தியஸ்தம் செய்வதற்கும் தமிழ் போராளி குழுக்களை நிராயுதபாணியாக்குவதற்கும் நிறுத்தப்பட்டது. இருப்பினும், IPKF சில தமிழ் குழுக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது, IPKF மற்றும் போராளிகளுக்கு இடையே கடுமையான சண்டைக்கு வழிவகுத்தது.
1990 விடுதலைப் புலிகள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர்.
1991-1995 இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தது, இரு தரப்பினரும் கொடூரமான தந்திரோபாயங்களில் ஈடுபட்டுள்ளனர்.
2002 இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது, ஓரளவு அமைதியான காலகட்டத்திற்கு வழிவகுத்தது.
2006 விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு பெரும் தாக்குதலை நடத்தியதால் போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் சண்டை தொடங்கியது.
2009 இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்று 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த மோதலில் 70,000 முதல் 80,000 பேர் வரை உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.