Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு இலட்சம் இலங்கைக் குரங்குகளை வழங்குமாறு சீனா கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இலட்சம் இலங்கைக் குரங்குகளை வழங்குமாறு சீனா கோரிக்கை!

Published By: Digital Desk 5

12 Apr, 2023 | 10:56 AM
image

சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இலங்கையின் குரங்குகளை வழங்குமாறு சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.

முதற்கட்டமாக இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் குரங்குகளை வழங்குவதற்கான விசேட கலந்துரையாடல் பத்தரமுல்லையில் உள்ள விவசாய அமைச்சில் நடைபெற்றது.

விவசாய அமைச்சர்  மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சு, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டுக்கு இவற்றை வழங்குவது தொடர்பான சட்ட நிலைமைகளை ஆராய்வதற்காக அமைச்சரவையின்  அங்கீகாரத்தின்  பின்னர் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 

https://www.virakesari.lk/article/152719

  • Replies 85
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இலட்சமப்பு...

வெவ்வாள் தின்ற சீனனுக்கு, குரங்காசை வந்துட்டுது போல....

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல விஷயம். தென்மராட்ச்சிப் பகுதியில் இந்த குரங்குகள் தொல்லை மிக அதிகம். ஒரு வாழை நட்டு பழம் சாப்பிட முடியாது, மாங்காய் காய்க்கும் பொழுது உலுத்தி எல்லாவற்றையும் மண்ணில் போட்டு விடுகின்றது, வயது போன கிழவிகளையும் விடுவதில்லை. ஓடு மாத்தவே வருஷம் அம்பதாயிடம் செலவு.. குசினிக்குள் புகுந்து அங்கர் பக்கெட்றை திருடி காதலிக்கு கொடுத்து இணை சேர்க்கிறது.. இதெற்கெல்லாம் முடிவு சீனாவால் வந்தால் நல்லது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பிடியே 10 லட்சம் தெரு நாய்களையும் கேட்டால் புண்ணியமாய் போகும்..:cool:

Tollwut-Fall in Frankreich: Kind infizierte sich in Sri Lanka

  • கருத்துக்கள உறவுகள்

என்னட்டையும் கொஞ்சம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

ஒரு இலட்சம் இலங்கைக் குரங்குகளை வழங்குமாறு சீனா கோரிக்கை!

Published By: Digital Desk 5

12 Apr, 2023 | 10:56 AM
image

சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு இலங்கையின் குரங்குகளை வழங்குமாறு சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று விவசாய அமைச்சிடம் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது.

https://www.virakesari.lk/article/152719

ஆ கடவுளே எல்லா குரங்குகளையும் பொரிச்சு அவித்து சாப்பிடபோறானுகள் சீனர்கள். IMF  இடம் கடன் வாங்கினால் இப்படி எல்லாவற்றையும் கொடுக்க வேண்டிதான் வரும்.
 
1 hour ago, சுவைப்பிரியன் said:

என்னட்டையும் கொஞ்சம் இருக்கு.

மனிதக்குரங்குளாக்கும்😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அப்பிடியே 10 லட்சம் தெரு நாய்களையும் கேட்டால் புண்ணியமாய் போகும்..:cool:

 

ஏன் பிலிப்பினோ காரங்கள் மாதிரி பண்ணி சாப்பிடவோ? நான் இலங்கை நாய்களை காப்பாற்றும் இயக்கத்தில் இருக்கிறேன் கு சா அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nilmini said:
 IMF  இடம் கடன் வாங்கினால் இப்படி எல்லாவற்றையும் கொடுக்க வேண்டிதான் வரும்.
 

இது பராவாயில்லை, ஜப்பான் காரன் இனி என்ன கேட்க போகின்றானோ😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

இது பராவாயில்லை, ஜப்பான் காரன் இனி என்ன கேட்க போகின்றானோ😁

அவன் கடலுக்குள்ள, ஆற்றுக்குள்ள இருக்கிறதை தான் அதிகம் கேப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

என்னட்டையும் கொஞ்சம் இருக்கு.

எங்கை?

ஊரிலையோ, இங்கினையோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, இணையவன் said:

மருத்துவ பரிசோதனை ஆராச்சிகளுக்காக இருக்கலாம்.

ஆம். சீனாவில் கோவிட் 19 காலத்திலிருந்து ஆய்வுகளில் பயன்படும் மகாக் (Macaque) குரங்குகளுக்குத் தட்டுப்பாடு.  இலங்கையில் இந்த வகைக் குரங்குகள் இருக்கின்றன.

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC8236990/

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, இணையவன் said:

மருத்துவ பரிசோதனை ஆராச்சிகளுக்காக இருக்கலாம்.

ஒரு இலட்சமே? 🥴

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

மருத்துவ பரிசோதனை ஆராச்சிகளுக்காக இருக்கலாம்.

இந்த மனிதர்களை காப்பாற்றுவற்காக விலங்குகள் அனுபவிக்கும் சித்திரவதைக்கு அளவேயில்லை😥

58 minutes ago, Nathamuni said:

ஒரு இலட்சமே? 🥴

 

மிச்சம் சாப்பிட 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nilmini said:

இந்த மனிதர்களை காப்பாற்றுவற்காக விலங்குகள் அனுபவிக்கும் சித்திரவதைக்கு அளவேயில்லை😥

அதுகளுக்கும் வருத்தங்கள் வருகுது.

நாய் வளர்ப்பவர்கள் பேசும் போது, சொல்லும் விபரங்களை கேட்கும் போது ஆச்சிரியம் வருகிறது.

பிரஷர் இருக்குது, சுகர் இருக்குது.....

ஆக, கண்டுபிடிக்கிற மருந்துகளில, அதுகளுக்கும் சுகமாக கொடுக்க வேணும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அதுகளுக்கும் வருத்தங்கள் வருகுது.

நாய் வளர்ப்பவர்கள் பேசும் போது, சொல்லும் விபரங்களை கேட்கும் போது ஆச்சிரியம் வருகிறது.

பிரஷர் இருக்குது, சுகர் இருக்குது.....

ஆக, கண்டுபிடிக்கிற மருந்துகளில, அதுகளுக்கும் சுகமாக கொடுக்க வேணும். 

மிருகங்களுக்கு வருத்தங்கள் வருவது குறைவு. வாழ்நாளும் கொஞ்சம்தானே? அளவான சாப்பாடு, நடை, விளையாட்டு அத்துடன் அன்பும் கொடுத்தால் நோய்நொடி இல்லாமல் வாழும்.  செயற்கையான கலப்பின நாய்கள், மிகவும் சிறிய அல்லது மிகவும் பெரிய நாய் பூனைகளுக்கு வருத்தம் வருவது கூட. 
 
செல்லப்பிராணிகளுடன் விளையாடாமல், நடக்க கூட்டிக்கொண்டு போகாமல் இருந்துகொண்டு சாப்பாட்டையும் , ட்ரீட் களையும் கொடுப்பவர்களால் தான் பிரச்சனை.
 
 அநேகமான ட்ரீட்டுகள் சீனாவில் செய்யப்பட்டு மேலை நாடுகளில் பொதி செய்யப்பட்டு விற்கும்போது பொதி செய்யப்பட்ட நாட்டின் பெயரை பெரிதாகவும், சீனாவின் பெயரை சின்னதாகவும் போடுவார்கள். அதைப்பார்த்து எல்லோரும் வேண்டுகிறார்கள். மனிதர்களை போல குழம்பிப்போய் இருக்கும் இனம் ஒன்றும் இல்லை 🙄

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அதுகளுக்கும் வருத்தங்கள் வருகுது.

நாய் வளர்ப்பவர்கள் பேசும் போது, சொல்லும் விபரங்களை கேட்கும் போது ஆச்சிரியம் வருகிறது.

பிரஷர் இருக்குது, சுகர் இருக்குது.....

ஆக, கண்டுபிடிக்கிற மருந்துகளில, அதுகளுக்கும் சுகமாக கொடுக்க வேணும். 

A.jpg

a1.jpg

A2.jpg

இவர்தான் அலெக்ஸ். 11 வயது 6 மாதங்கள்.

Edited by nilmini

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவுக்கு ஒரு லட்சம் குரங்குகளை இலங்கை அனுப்பும் யோசனை: இறைச்சிக்கா ஆராய்ச்சிக்கா?

monkey

பட மூலாதாரம்,GETTY IMAGES

2 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை கொண்டு செல்வதற்கான கோரிக்கை சீன அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சீன பிரதிநிதிகள் இலங்கை அதிகாரிகளுடன் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கின்றார்.

சீனாவினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த கோரிக்கை தொடர்பிலான யோசனையை தாம் அமைச்சரவைக்கு முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

இதன்பிரகாரம், முதற்கட்டமாக ஒரு லட்சம் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பி வைக்கின்றமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குரங்குகளை சீனாவிற்கு அனுப்பி வைக்கின்றமை தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று, விவசாய அமைச்சில் நேற்றைய தினம் (ஏப்ரல் 11) நடத்தப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் விவசாய அமைச்சின் அதிகாரிகள், தேசிய மிருககாட்சிசாலை திணைக்கள அதிகாரிகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.

 

இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக பல தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம், குழுவொன்றை நியமித்து அதனூடாக இந்த விடயம் தொடர்பில் தீர்மானமொன்றை எட்ட எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகின்றார்.

இலங்கை வாழ் குரங்குகளை சீனாவிற்கு அனுப்பி வைக்கின்றமை தொடர்பில் காணப்படுகின்ற சட்ட நிலைமைகள் குறித்து ஆராய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, குறித்த யோசனையை அமைச்சரவையில் முன்வைக்க அமைச்சர் மஹிந்த அமரவீர எதிர்பார்த்துள்ளார்.

இலங்கை குரங்குகளினால் பொருளாதார பாதிப்பு

இலங்கையில் குரங்குகளின் இனப் பெருக்கம் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பல மடங்காக அதிகரித்துள்ளது.

இதன்படி, நாட்டில் தற்போது சுமார் 30 லட்சம் குரங்குகள் உள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார்.

நாட்டில் காணப்படுகின்ற விளை நிலங்களை குரங்குகள் தற்போது அதிகளவில் சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது.

குறிப்பாக 200 மில்லியன் தேங்காய்களை கடந்த ஆண்டில் மாத்திரம் குரங்குகள் சேதப்படுத்தியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

அதுதவிர, ஏனைய பயிர் வகைகளையும் குரங்குகள் சேதப்படுத்தியுள்ளமையினால், பொருளாதார ரீதியில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

இதையடுத்தே, குரங்குகளை சீனாவிற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குரங்குகளை இறைச்சிக்காக சீனர்கள் பயன்படுத்த வாய்ப்புள்ளதா?

இலங்கை குரங்குகளை சீனாவிற்கு கொண்டு சென்று இறைச்சிக்கு பயன்படுத்த போவதாக சிலர் கூறி வருகின்ற நிலையில், இந்த விடயம் தொடர்பிலும் பிபிசி தமிழ், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் வினவியது.

சீனாவிலுள்ள மிருககாட்சிசாலைகளுக்கு கொண்டு செல்லும் வகையிலேயே சீனாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் பதிலளித்தார்.

அத்துடன், இறைச்சிக்கு பயன்படுத்தப்படும் என கூறப்படுகின்ற கருத்தை அமைச்சர் மஹிந்த அமரவீர முற்றாக நிராகரித்தார்.

இலங்கையிலுள்ள குரங்கொன்றை பிடிப்பது முதல், அதனை சீனாவிற்கு கொண்டு செல்வது வரையான அனைத்து செலவீனங்களையும் சீனாவே ஏற்றுக்கொள்கின்றது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

நாட்டிற்குள் குரங்கொன்றை பிடிப்பதற்காக மாத்திரம் சுமார் 5000 இலங்கை ரூபா, சீனாவினால் செலவிடப்படவுள்ளது.

அத்துடன், குரங்குகளை பிடித்து, அதனை தனிமைப்படுத்தி, நோய்கள் ஏதேனும் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்ந்து, கூடுகளில் அடைத்து, சீனாவிற்கு கொண்டு செல்வதற்கான முழு செலவினத்தையும் சீனாவே ஏற்றுக்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அமைச்சர் மஹிந்த அமரவீர

அவ்வாறாயினும், இலங்கை குரங்கொன்றிற்காக சுமார் 30,000 முதல் 50,000 இலங்கை ரூபா வரை சீனா செலவிட எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

இலங்கையிலிருந்து கொண்டு செல்லும் குரங்கிற்கு 50,000 ரூபா வரை செலவிடும் சீனா, அந்த குரங்கை இறைச்சிக்காக பயன்படுத்துமாயின், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் வைத்து ஒரு லட்சம் ரூபாயாக விற்க வேண்டும்.

அதே சமயம் ஒரு லட்சம் ரூபாவை செலவிட்டு, குரங்குகளை சீனர்கள் உட்கொள்ளமாட்டார்கள் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

இதேவேளை, விவசாய நிலங்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள் உள்ளிட்ட 6 வகையான உயிரினங்களை கொல்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும், இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் வினவியது.

அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளையும் தாம் எடுக்கவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர பதிலளித்தார்.

குரங்குகளை சீனாவிற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தாலும், தற்போதைய சூழலில் சீனாவின் மிருகக் காட்சி சாலையில் காட்சிப்படுத்த மட்டுமே குரங்குகள் கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/crgq9q76zz7o

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nilmini said:
மிருகங்களுக்கு வருத்தங்கள் வருவது குறைவு. வாழ்நாளும் கொஞ்சம்தானே? அளவான சாப்பாடு, நடை, விளையாட்டு அத்துடன் அன்பும் கொடுத்தால் நோய்நொடி இல்லாமல் வாழும்.  செயற்கையான கலப்பின நாய்கள், மிகவும் சிறிய அல்லது மிகவும் பெரிய நாய் பூனைகளுக்கு வருத்தம் வருவது கூட. 
 
செல்லப்பிராணிகளுடன் விளையாடாமல், நடக்க கூட்டிக்கொண்டு போகாமல் இருந்துகொண்டு சாப்பாட்டையும் , ட்ரீட் களையும் கொடுப்பவர்களால் தான் பிரச்சனை.
 
 அநேகமான ட்ரீட்டுகள் சீனாவில் செய்யப்பட்டு மேலை நாடுகளில் பொதி செய்யப்பட்டு விற்கும்போது பொதி செய்யப்பட்ட நாட்டின் பெயரை பெரிதாகவும், சீனாவின் பெயரை சின்னதாகவும் போடுவார்கள். அதைப்பார்த்து எல்லோரும் வேண்டுகிறார்கள். மனிதர்களை போல குழம்பிப்போய் இருக்கும் இனம் ஒன்றும் இல்லை 🙄

இந்த நாய், பூணை சாப்பாடுகள் மிக மோசமானது.

மனிதர், சுவைத்துப் பாரார் என்று, மனிதர் சாப்பிடாத பல ஜயிட்டங்களை அரைத்துக் கலப்பார்கள்.

உதாரணமாக, குடல் பிரட்டல், மூளைப் பொரியல் , ரத்தவறை என்று நம்ம ஊரில் வறுமை காரணமாக உண்பவைகளை, வெள்ளையர் சீண்டுவதில்லை.

அவைகள் வளர்ப்பு பிராணிகள் உணவாகும்.

பணம் இருப்பவர்கள், இதுதான் வேண்டும் என்று ஓடர் பண்ணுவர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
24 minutes ago, Nathamuni said:

உதாரணமாக, குடல் பிரட்டல், மூளைப் பொரியல் , ரத்தவறை என்று நம்ம ஊரில் வறுமை காரணமாக உண்பவைகளை, வெள்ளையர் சீண்டுவதில்லை.

என்ன நாதமுனியர்! பொசுக்கெண்டு இப்பிடி சொல்லிப்போட்டியள்?
இஞ்சை ஜேர்மனியிலை பன்றி,மாடு எண்டு பார்த்தால் எந்தவொரு உறுப்பையும் மிச்சம் வைக்க மாட்டார்கள். எல்லாத்தையும் பிரயோசனமாக்கி போடுவார்கள். :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

சீனனின் கடன் அடைக்க முதல் பொறி குரங்கு ....எல்லாமே போக கடைசியாய் எஞ்சுவது ரணில் மட்டுமே....நாங்கள்  தப்பிட்டம்?

  • கருத்துக்கள உறவுகள்

அவன் கேட்கிறான் இவன் கேட்கிறான் என்று எந்த யோசனையும் இன்றி தாரை வார்த்து  கொடுப்பதுதான் சிங்களவர்களின் மனநிலை தமிழன் கேட்டால் மட்டும் வேறுகதை  குரங்குகள் காடுகளை பெரிதாக்குவதில் வல்லமை கொண்டவை .இதன் பாதிப்பு உடனே தெரியாது அது சரி தமிழனுக்கு நிம்மதி இல்லாத நாடு அழியட்டும் .

நம்ம பக்கம் வருவம் 

வயல்களை நாசம் பண்ணும் குரங்குகளை தடுப்பது எப்படி ? அவர்களுக்கு  பாம்புகளுக்கு படு பயம் இந்தியாவில் சில ரசயான மனம் குரங்குகளை அண்ட விடாது பாவிக்கிறார்கள் இங்கு அது பற்றி வேண்டாம் காலப்போக்கில் மண்ணை நிரந்தரமாய் பழுதாக்கி விடும் டிரோன் காலத்தில் இருக்கிறம் மனிதர் சத்தம் போடுவது போல் கருவிகள் உண்டு அத்துடன் நிஜ பாம்பு போல் சத்தம்  வரும் கருவிகளும் உண்டு சென்சார் மூலம் இயங்குபவை நம்ம வீட்டில் கராச் உள் சென்சார் நாய் சத்தம் வரும் கருவி உண்டு நிஜ நாயை விட சூப்பராய் குரைக்கும் .

ஆகவே சொறிலங்கா காட்டை உருவாக்கும் 1லட்சம் பேரை சைனாவுக்கு தாரை வார்க்குது .இப்ப முட்டை இறக்கிரான்கள் இன்னும் பத்து வருடத்தில் மழைஇன்றி தண்ணீரையும் இறக்குமதி செய்வாங்கள் மோட்டு கூட்டம் .

  • கருத்துக்கள உறவுகள்

தமக்கென ஒரு நாடு இல்லாமற் போனாலும் பரவாயில்லை, தமிழனுக்கென்றொரு நாடு அமைந்துவிடக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஒன்றொன்றாக ஏதோ ஓர் காரணங்களை தேடி நாட்டின் வளங்களை இனாமாகவும் குறைந்தவிலையிலும் இழந்து கொண்டும்  விற்றுக்கொண்டுமிருக்கிறார்கள். எங்களுக்கு இலாபம் தரும் வர்த்தகநிலையங்கள், வளங்கள் ஒவ்வொன்றாக இழக்கப்படுகிறது. எந்த மடையனாவது இதைச் செய்வானா? இது நாட்டின்மன வளம்குறைந்த, திறனற்ற அரசின், அமைச்சின் தன்மையை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஒரு பழமொழி, "ஊசி போகிற  இடம் பார்ப்பாராம் உலக்கை போகிற  இடம் பாராராம்." 

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டை பாதுகாக்க முடியவில்லை, விலங்குகளை தங்கள் நாட்டில் வாழ வைக்க முடியவில்லை, அந்த நாட்டின் குடிகளை வாழ விடவில்லை, இதில சிங்கள பவுத்த நாடு, அதன் இறைமை என்கிற வாய்வீச்சு வேற. நாளைக்கு சீனன் வந்து தொல்பொருள் ஆராய்ச்சி என்று  தோண்டி பொறுக்கி இது எங்களுக்கு சொந்தம் என்று  கொண்டாட என்ன செய்வினம்? இப்போ இலங்கை குரங்கு அது இது என்று கொண்டு போறவன் நாளைக்கு இலங்கைக்கு வந்து இதுவெல்லாம் நம்நாட்டு குரங்கின் எச்சங்கள் இது எங்கள் நாடு என்பான். அப்போ இந்த சரத்துகளும் இருக்க மாட்டார்கள் குரைப்பதற்கு, குரைக்கவும் முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.