Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

29 JUN, 2023 | 07:55 PM
image
 

கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் பிரதான வீதியில் பாடசாலைக்கு அருகாமையில் நீர் வழங்கல் அதிகாரசபையில் நீர் வழங்கல் வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

356828105_291950336539467_42069938699978

356858506_291950309872803_72108431214118

கொக்குளாய் பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு நாளை நீதிமன்றில்  வழக்குதாக்கல் செய்யவுள்ளதாக பொலிசார் தெருவித்தனர்.

https://www.virakesari.lk/article/158870

  • Replies 99
  • Views 12.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    உக்ரைனில் மனிதப் புதைகிழியாம் என்றால்.. முன் பக்கத்தில்.. பிரேக்கிங் நியூஸ் போடும் உலக முன்னணி ஊடகங்களுக்கு இது தெரியாமல் இல்லை. கண்டுகொள்ளாமை அல்லது புறக்கணிப்புத் தன்மை. என்ன தான் இவர்களை நோக்க

  • Kapithan
    Kapithan

    உக்ரேனுக்காக சாரை சாரையாகக் கண்ணீர் விடத் தெரிந்த யாழ் கள சனநாயகக் காவலர்களில் எத்தனை பேர் இந்தத் துயரத்திற்கு கருத்துத் தெரிவித்தார்கள் ?   

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    நிச்சயம் இதனை… வெளி உலகத்துக்கு, துரித கதியில் தெரிவிக்க எமது அமைப்புகள் முன் வரவேண்டும். எமது போராளிகளை கொடூரமாக கொன்ற சிங்கள இராணுவத்தை  உலகின் முன் அம்பலப் படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண் போராளிகளின் மனித எச்சங்கள் தென்பட்டதால் பரபரப்பு

பெண் போராளிகளின் மனித எச்சங்கள் தென்பட்டதால் பரபரப்பு

முல்லைத் தீவில் பெண்போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் தென்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்புச் சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினைத்  தோண்டிய போதே குறித்த மனித எச்சங்கள் தென்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பெண்களின் மேலாடை மற்றும் பச்சை சீருடை மற்றும் எலும்பு எச்சங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை கொக்கிளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

https://athavannews.com/2023/1336914

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்த போராளிகளை கொலை செய்து புதைத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மனம் வெதும்பும்..வேதனையான காட்சி....லட்சியக் கனவுடன்....கலைந்த வீராங்கனைகளின் வாழ்வு..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை: முல்லைத்தீவில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி - சரணடைந்த விடுதலைப்புலிகள் கொலையா என சந்தேகம்

இலங்கை மனித எச்சங்கள் கண்டெடுப்பு
 
படக்குறிப்பு,

மனித எச்சங்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • 2 ஜூலை 2023

இலங்கையில் 30 வருடங்களுக்கு மேல் அவ்வப் போது அடையாளம் காணப்பட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மனிதப் புதைக்குழிகள் தொடர்பில் எந்தவித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு சுமார் ஒரு வார காலத்திற்குள் மற்றுமொரு மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பகுதியிலேயே இந்த மனிதப் புதைக்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு - கொக்கிளாய் பகுதியில், நீர் வழங்கலுக்கான குழாய்களை பொருத்துவதற்காக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன்போது, வெட்டப்பட்ட குழியிலிருந்து மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மனித எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த பணிகள் இடைநிறுத்தப்பட்டதுடன், அது குறித்து கொக்கிளாய் போலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

   

இதையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

குறித்த இடத்தில் மனித எச்சங்கள் மாத்திரமன்றி, ஆடைகள் சிலவற்றையும் காணக்கூடியதாக இருந்தது என அந்த இடத்திலிருந்தவர்கள் கூறுகின்றனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடத்தில் பெண்களின் உள்ளாடைகளும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

குறித்த மனித எச்சங்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

இந்த நிலையில், அந்த பகுதியில் அகழ்வு நடவடிக்கைகளின் போது மனித எச்சங்கள் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, அந்த இடத்திற்கு வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் விஜயம் செய்து, விடயங்களை ஆராய்ந்துள்ளார்.

இலங்கை மனித எச்சங்கள் கண்டெடுப்பு
 
படக்குறிப்பு,

அடையாளம் காணப்பட்ட இடத்தில் பெண்களின் உள்ளாடைகளும் காணப்பட்டதாக கூறப்படுகின்றது

அந்த இடத்தில் தான் நேரில் கண்ட விடயங்களை பிபிசி தமிழுக்கு, துரைராசா ரவிகரன் தெளிவூட்டினார்;

'' தகவல் கிடைத்ததும் உடனடியாக நான் சென்றேன். போலீஸார் அந்த இடத்தில் நின்றார்கள். எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, நீர் வழங்கல் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தார்கள். என்னையும், என்னுடன் வருகைத் தந்த சிலரையும் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் ஒன்று இரண்டு பேர் இல்லை. அதற்கும் கூடுதலானோரின் எலும்பு எச்சங்கள் காணப்படுகின்றன.

ஆடைகள், பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டதை அவதானித்து, மக்கள் கவலையடைந்திருந்தார்கள். அது விடுதலைப் புலிகளுடையது என்ற உறுதிப்பாடுடன் இருக்கின்றோம். இறுதி யுத்தத்தின் போது 2009ம் ஆண்டு காலப் பகுதியில் வட்டுவான் பகுதியில் சரணடைந்த ஆட்களாக இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. 84ம் ஆண்டிற்கு பிறகு கொக்கிளாய், கொக்குதொடுவாய் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்.

அவர்கள் 2012,13,14 ம் ஆண்டு காலப் பகுதிகளிலேயே அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டார்கள். 2009ம் ஆண்டு சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்களின் குழுவை ஏதாவது செய்திருக்கலாம் என்ற கருத்து பரவலாக பேசப்படுகின்றது. இருந்தாலும், இது தொடர்பில் தாம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக போலீஸார் எம்மிடம் தெரிவித்தார்கள். நீதிமன்றத்தின் ஊடாகவே நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கொக்கிளாய் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி என்னிடம் கூறினார்" என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மனித எச்சங்கள் கண்டெடுப்பு
 
படக்குறிப்பு,

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமான ஆடைகளை ஒத்த ஆடைகள் குறித்த பகுதியில் காணப்பட்டதை தான் அவதானித்ததாக வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் குறிப்பிடுகின்றார்

இந்த நிலையில், குறித்த பகுதியில் தற்போது நீதவான் விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையில், குறித்த பகுதியில் மேலதிக அகழ்வு பணிகள் எதிர்வரும் 6ம் தேதி முன்னெடுக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அகழ்வு பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொக்கிளாய் போலீஸாருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, மனித எச்சங்கள் கிடைக்கப் பெற்ற இடத்தில் தற்போது போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

தடயங்களை மறைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உள்ள போதிலும், தான் நேரில் கண்ட தடயங்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மறைக்க முடியாது என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கூறுகின்றார்.

இலங்கை மனித எச்சங்கள் கண்டெடுப்பு
 
படக்குறிப்பு,

அகழ்வு பணிகளுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கொக்கிளாய் போலீஸாருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சொந்தமான ஆடைகளை ஒத்த ஆடைகள் குறித்த பகுதியில் காணப்பட்டதை தான் அவதானித்ததாக வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் குறிப்பிடுகின்றார்.

''பெண்களின் ஆடைகள், விடுதலைப் புலிகளின் ஆடை என்பதை என்னால் உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்தது. பச்சை நிற உடுப்பு. ராணுவ ஆடையிலிருந்து வேறுபட்டதாக உள்ளது. ஆனால், இது விடுதலைப் புலிகளின் ஆடை என்பதை உறுதிப்படுத்த முடியும். பெண்களின் ஆடைகளும் காணப்பட்டன. குறிப்பாக பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டன. இதனை அங்கிருந்து வெளியான படங்களில் காணக்கூடியதாகவும் உள்ளது." என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எச்சங்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

எனினும், விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/c3g7jzy9078o

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஏராளன் said:

இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எச்சங்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை மக்கள் வெளியிட்டு வருகின்றனர்.

ஊடகங்களுக்கு செய்தி. உயிரையும் உறவுகளையும் பறிகொடுத்தோர் யாரென்றறியாத துயரத்துள் வெதும்பும் நிலை. இந்த அவலட்சணத்தில் ஐ.நாவும் மனித உரிமையும் என்று கதையளப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (06) அகழ்வு பணிகள் இடம்பெற்றன.

IMG-20230706-WA0156.jpg

இந்நிலையில் மாலை 03.30மணியளவில் அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தப்பட்டதுடன், குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் எதிர்வரும்  வியாழக்கிழமை (13.07.2023) அன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வுப்பணிகளுடன் தொடர்புடைய திணைக்களங்கம் மற்றும், அமைப்புக்களுடன் விசேடகலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

IMG-20230706-WA0108.jpg

அக்கலந்துரையாடலைத் தொடர்ந்தே அகழ்வுப் பணிகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

IMG-20230706-WA0107.jpg

குறிப்பாக காலை 10.00மணியளவில் தொடங்கிய குறித்த அகழ்வுப்பணிகள், மாலை 03.30மணிவரையில் இடம்பெற்றன.

IMG-20230706-WA0100.jpg

இவ்வாறு இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் பிரகாரம் 13 பகுதிகளில் 13 மனித எச்சங்கள் இனங்காணப்பட்டு, அவ்வாறு இனங்காணப்பட்டஇடங்கள் தடயவியல் பொலிசாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

IMG-20230706-WA0099.jpg

அத்தோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா, தடையவியல் பொலிசார் உள்ளிட்டவர்களினால் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

IMG-20230706-WA0096.jpg

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், வல்லிபுரம் கமலேஸ்வரன், பொது அமைப்புகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த அகழ் பணிகள் இடம்பெற்றன.

IMG-20230706-WA0097.jpg

கடந்த 29.06.2023 அன்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

IMG-20230706-WA0090.jpg

இந்த சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து கொக்குளாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர் .

IMG-20230706-WA0092.jpg

இது தொடர்பாக 30.06.2023 நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள் குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

IMG-20230706-WA0081.jpg

இதன்போது குறித்த மனித எச்சங்கள் காணப்படுகின்றன பகுதியில் யூலை 6 திகதி அகழ்வு பணிக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு அதற்குரிய நபர்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அதுவரை எச்சங்கள் அழிவடையாமால் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் பொலிசாருக்கு பணிப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி : 13 மனித எச்சங்கள் : அகழ்வு இடை நிறுத்தம் | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் தோண்டப்படும் மனித புதைகுழி - கிடைத்தது விடுதலை புலிகளின் எச்சங்களா? ராணுவம் என்ன சொல்கிறது?

முல்லைத்தீவு மனித புதைக்குழி அகழ்வு ஆரம்பம் - ராணுவம் கொலை செய்து புதைத்ததா?
கட்டுரை தகவல்
  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

முல்லைத்தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின.

முல்லைத்தீவு நீதவான்(நீதிபதி) முன்னிலையில் இன்று முற்பகல் இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் குடிநீர் குழாய் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக கடந்த 29ஆம் தேதியன்று ஒரு குழி தோண்டப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் மனித எச்சங்கள் மாத்திரமன்றி, ஆடைகள் சிலவற்றையும் காணக்கூடியதாக இருந்தது என அந்த இடத்திலிருந்தவர்கள் கூறினர்.

 

வீதியோரத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து மனித எச்சங்கள், பெண்களின் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆடைகளில் பெண்களின் உள்ளாடைகள், விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்த உடைகள் காணப்பட்டதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இதையடுத்து, இன்று குறித்த பகுதி தோண்டப்பட்டதுடன், அதிலிருந்த எலும்பு எச்சங்களும் ஆடைகளும் மீட்கப்பட்டு வருகின்றன. அந்த எச்சங்கள் மூலம் என்ன தெரிய வந்துள்ளது?

 

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் புதைகுழி எப்படி வந்தது?

குறித்த மனித எச்சங்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டது.

பாதுகாப்பு பிரிவினர், ரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், நிலஅளவை திணைக்கள அதிகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், நீர் வழங்கல் திணைக்கள அதிகாரிகள், தொலைபேசி நிறுவன அதிகாரிகள், மின்சார சபை ஊழியர்கள் எனப் பலரும் இந்த இடத்திற்கு இன்று வந்திருந்தனர்.

புதைகுழி கண்டறியப்பட்ட நேரத்தில் அங்கு நேரில் கண்டது குறித்து நம்மிடம் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் விவரித்தபோது, "அந்த இடத்தில் ஒன்று இரண்டு பேர் இல்லை. அதற்கும் கூடுதலானோரின் எலும்பு எச்சங்கள் காணப்படுவதாக" கூறினார்.

முல்லைத்தீவு மனித புதைக்குழி அகழ்வு ஆரம்பம் - ராணுவம் கொலை செய்து புதைத்ததா?
 
படக்குறிப்பு,

மனித எச்சங்கள் மற்றும் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினருக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

"ஆடைகள், பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டதை அவதானித்து, மக்கள் கவலையடைந்திருந்தார்கள். அது விடுதலைப் புலிகளுடையது என்ற உறுதிப்பாட்டுடன் இருக்கின்றோம். இறுதி யுத்தத்தின்போது 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் வட்டுவால் பகுதியில் சரணடைந்த ஆட்களாக இருக்கலாம் எனச் சந்தேகம் உள்ளது," எனவும் தெரிவிக்கின்றார் துரைராசா ரவிகரன்.

இன்று, புதைகுழி அகழ்வு நடந்த இடத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் வருகை தந்திருந்தது அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்த சந்தர்ப்பத்தில் காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரைப் பல ஆண்டுகளாகத் தேடி வரும் மரியசுரேஷ் ஈஸ்வரி பிபிசி தமிழுக்கு கருத்து தெரிவித்தார்.

முல்லைத்தீவு மனித புதைக்குழி அகழ்வு ஆரம்பம் - ராணுவம் கொலை செய்து புதைத்ததா?

''தொடர்ந்து 14 ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறோம். ராணுவத்திடமும் இந்த அரசிடமும் நம்பி ஒப்படைத்த எமது உறவுகள் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டார்கள். ஆனால் அவர்கள் இன்று வரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், இந்தப் புதைகுழி மனதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதைகுழியில் பெண் போராளிகளின் சீருடைகள் கிடைத்ததாகக் கூறுகிறார்கள். இந்தப் பிரதேசம் 24 ஆண்டுகளாக மக்கள் நடமாட்டமின்றிக் காணப்பட்டது. அப்படியிருக்க, இந்தப் புதைகுழி எப்படி வந்தது என்பது சந்தேகத்திற்குரிய விஷயம்," என்கிறார் மரியசுரேஷ் ஈஸ்வரி.

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப் பிரதேசத்தில் இந்தப் புதைகுழி எப்படி வந்தது, என்ற கேள்விகளோடு இன்று இந்த இடத்திற்கு வந்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

"இறுதி யுத்தத்தில் வட்டுவாலில் ஏற்றப்பட்ட எமது உறவுகளோடு பின்னர் எந்தத் தொடர்புகளும் இல்லை. எங்கு கொண்டு போனார்கள் என்றும் தெரியவில்லை. அரசாங்கத்தின் எந்தப் பதிலும் தெளிவுபடுத்தவில்லை," என்று தனது கணவரை தேடும் மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார்.

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம்

முல்லைத்தீவு மனித புதைக்குழி அகழ்வு ஆரம்பம் - ராணுவம் கொலை செய்து புதைத்ததா?

இறுதி யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் கட்டப்பட்டுள்ள பெரிய விஹாரைகளுக்குக் கீழேயும் உடல்கள் இருக்கக்கூடும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிக்கின்றார்.

கடந்த 2009ஆம் ஆண்டு ராணுவத்திடம் சரணடைந்த ஆட்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்றைக்கும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று கூறுகிறார் துரைராசா ரவிகரன்.

இந்தப் புதைகுழி வெளியே தெரிய வந்த நேரத்தில் நேரில் பார்த்ததை விவரித்தபோது, விடுதலைப் புலிகளின் ஆடைகள் என்பது தம்மால் உறுதிப்படுத்தக்கூடியதாக இருந்ததாக ரவிகரன் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு மனித புதைக்குழி அகழ்வு ஆரம்பம் - ராணுவம் கொலை செய்து புதைத்ததா?

"விடுதலைப் புலிகளின் ஆடை என்பதை என்னால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது. பச்சை நிற உடுப்பு. ராணுவ ஆடையிலிருந்து வேறுபட்டதாக உள்ளது.

பெண்களின் ஆடைகளும் காணப்பட்டன. குறிப்பாக பெண்களின் உள்ளாடைகள் காணப்பட்டன," என்றும் அவர் விளக்கினார்.

தற்போது நடந்துவரும் அகழ்வில் கிடைத்துள்ள எச்சங்கள் குறித்துப் பேசியவர், ''இந்த பிரதேசமானது 1984ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை சூனிய பிரதேசமாக(இந்தக் காலகட்டத்தில் மக்கள் அந்தப் பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ராணுவம் மாத்திரமே பயன்படுத்தியது) ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.

கடந்த 2009ஆம் ஆண்டு சரணடைந்தவர்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து, கொன்று விட்டு, அல்லது அடித்து விட்டு புதைகுழி வெட்டிப் புதைத்துள்ளனர்," என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.

சர்வதேச நியதிகள் பின்பற்றப்படவில்லையா?

ஏனென்றால், இந்த இடத்தில் அப்போது மக்கள் இருக்கவில்லை. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இறுதி யுத்தம் இடம்பெற்ற இடங்களில் மக்கள் சரணடைந்த பகுதிகளில் கட்டப்பட்டுள்ள விஹாரைகளின் கீழும் சடலங்கள் இருக்கக்கூடும் என்ற அச்சத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.

"வட்டுவால் பகுதியில் பெரிய விஹாரை கட்டப்பட்டுள்ளது. அதேபோல கேப்பாபிலவு பகுதியில் பெரிய விஹாரை கட்டப்பட்டுள்ளது. இந்த பெரிய விஹாரைகளின் கீழ் ஏன் சடலங்கள் இருக்க முடியாது என்ற ஐயப்பாடு இந்த மக்கள் மத்தியில் தற்போது தோன்றுகின்றது. உடல்களைப் புதைத்து, அதற்கு மேல் விஹாரைகளை கட்டியிருக்கலாம்," என்ற ஐயப்பாடு காணப்படுவதாக அவர் கூறுகிறார்.

சர்வதேச நியதிகள் பின்பற்றப்படவில்லையா?

இந்த மனித புதைகுழி சர்வதேச நியதிகளுக்கு அமைவாகத் தோண்டப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

முல்லைத்தீவு மனித புதைக்குழி அகழ்வு ஆரம்பம் - ராணுவம் கொலை செய்து புதைத்ததா?

''இந்த அகழ்வுகள் குறித்த முறைப்படி செய்யப்படுவதாகத் தெரியவில்லை. சர்வதேச ரீதியில் இது எப்படி செய்யப்பட வேண்டும் என்ற பல நியதிகள் காணப்படுகின்றன. அது பின்பற்றப்படுவதாகத் தெரியவில்லை.

மருத்துவர் இருக்கின்றார், ஒரு குழியை தோண்டி ஒரு சடலத்தை எடுத்து செய்கின்ற பரிசோதனைகளிலும், இவ்வாறான மனித புதைகுழியைத் தோண்டிச் செய்கின்ற பரிசோதனைகளிலும் வித்தியாசம் காணப்படுகின்றது. சர்வதேச நியதிகள் பின்பற்றப்படுவதில்லை," என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான சாட்சியங்கள் வருகின்றபோது, அது சர்வதேச நியமங்களுக்கு அமைய விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

சர்வதேச நியதிகள் பின்பற்றப்படவில்லையா?

பட மூலாதாரம்,SRI LANKA ARMY

இலங்கை ராணுவத்தின் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்து பிபிசி தமிழ், ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத்திடம் வினவியது.

''எம்மால் அப்படிக் கூற முடியாது. ஏனெனில், அதை உறுதிப்படுத்தும் சாட்சியங்கள் இல்லை. மக்கள் குற்றம் சுமத்துவதில் அர்த்தம் கிடையாது. யுத்தத்தின்போது உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் மாத்திரம் அல்ல, ராணுவத்தினரின் உடல்களும் தற்போது கிடைக்கின்றன," என்கிறார் அவர்.

மேலும், சரியான விசாரணைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகே இது எந்த காலப்பகுதியைச் சேர்ந்த எச்சங்கள் என்பதைக் கூற முடியும் என்றார் பிரிகேடியர் ரவி ஹேரத்.

அடுத்ததாக, "இது மனித எலும்பு எச்சங்களா என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும். விசாரணைகளுக்குப் பிறகே சரியான தீர்மானத்திற்கு வர முடியும்," என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/articles/c72v251ln27o

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மனித புதைகுழி: 13 உடலங்கள் இனங்காணப்பட்டன

image_d7e485bfa2.jpg

சண்முகம்  தவசீலன்

முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் பகுதியில் கடந்தவாரம் விடுதலை புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வு பணிகள்  வியாழக்கிழமை(6) இடம் பெற்ற நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில்  ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட  எலும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில் மேலும் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ன

அதே நேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உட்பட சில சான்று பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன 

முதல் நாள் அகழ்வில் 13 எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இன்னும் பல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை ஆண், பெண் இருபாலரும் இருக்கலாம் எனவும் மேலதிக அகழ்வு பணி இடம்பெறவுள்ள நிலையில்  அகழ்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் வருகின்ற வியாழக்கிழமை இடம்பெற உள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

image_58969409a4.jpg

 

https://www.tamilmirror.lk/வன்னி/முல்லைத்தீவு-மனித-புதைகுழி-13-உடலங்கள்-இனங்காணப்பட்டன/72-320506

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கோரி முல்லையில் போராட்டம் !

07 JUL, 2023 | 09:15 AM
image
 

விஜயரத்தினம் சரவணன்

இலங்கை அரசே கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துக" எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை காலை 10.00மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  ஒன்று இடம்பெறவுள்ளது.

இவ்வார்ப்பாட்டத்தினை முல்லைத்த்தீவுமாவட்ட பொதுமக்கள் மற்றும், பொது அமைப்புக்கள் என்பன இணைந்து முன்னெடுக்கவுள்ளன. 

எனவே குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரையும் வருமாறு முல்லைத்தீவு மாவட்ட பொதுமக்கள் மற்றும், பொது அமைப்புகள் அழைப்புவிடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/159402

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கோரி முல்லையில் கவனயீர்ப்பு

07 JUL, 2023 | 05:33 PM
image
 

"இலங்கை அரசே கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துக" எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

IMG-20230707-WA0083.jpg

முல்லைத்த்தீவு மாவட்ட பொதுமக்கள் மற்றும், பொது அமைப்புக்கள், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் என்பன இணைந்து முன்னெடுத்த இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதானமாக சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இடம்பெறவேண்டும் என்பதனை வலியுறுத்தியிருந்தனர்.

IMG-20230707-WA0064.jpg

அதேவேளை இலங்கை அரசே  உன்கையில் ஒப்படைத்த உறவுகள் எங்கே, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்காணிப்பு வேண்டும், உள்ளிட்ட பதாதைகளைத் தாங்கியவாறும் கோசங்கைளை எழுப்பியும் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

IMG-20230707-WA0063.jpg

மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG-20230707-WA0060.jpg

https://www.virakesari.lk/article/159472

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொக்குத்தொடுவாயில் காணப்படுவது இறுதிப்போரில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் சடலங்களே : இரு பக்கமும் அடுக்கடுக்காக சீருடைகள் : சர்வதேச சமூகம் கண்காணிக்க வேண்டும் - சமூக ஆர்வலர் பீற்றர் இளஞ்செழியன்

Published By: RAJEEBAN

05 JUL, 2023 | 12:12 PM
image
 

(நேர்காணல் - ரஜீபன்) 

கொக்குத்தொடுவாயில் காணப்படுவது சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளின் சடலங்களே

பொலிஸ் பாதுகாப்பில் நம்பிக்கையில்லை.

விசாரணைகள் அகழ்வை சர்வதேச சமூகம் கண்காணிக்கவேண்டும்...

கொக்குத்தொடுவாயில் காணப்படுவது படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் சடலங்களே என கருதுவதாக புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்ட சமூக ஆர்வலர்  இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். 

அதன் அருகாமையில் இரண்டு பக்கங்களும் அடுக்கடுக்காக விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளின் சீருடைகள் போன்றவை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேர்காணலின்போது இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியதாவது,

kokuthoduvai_human_remains.jpg

கேள்வி : மனிதபுதைகுழிகள் காணப்படும் பகுதியை பார்வையிட்டவர்களில் நீங்களும் ஒருவர். நீங்கள் அவதானித்தவற்றை தெரிவிக்க முடியுமா?

பதில் : கொக்குத்தொடுவாயில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியை நாங்கள் சென்று பார்வையிட்டபோது மனித எச்சங்களின் எலும்புகள் மேல் நோக்கி காணப்பட்டன.

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் பயன்படுத்தியிருக்கக்கூடிய அணிந்திருக்கக்கூடிய சேர்ட்கள்,  மேலாடைகள் காணப்படுகின்றன. பெண்கள் பயன்படுத்தக்கூடிய மேலாடைகளும் காணப்பட்டன.

உதாரணமாக, இந்த மனித எச்சங்கள் நீண்ட காலமாக இருந்ததாக கருத முடியாதவண்ணம் காணப்படுகின்றன.

அது ஒரு மீற்றர் ஆழமான பகுதியிலேயே காணப்பட்டது. அதன் மூலம் எங்களுக்கு தோன்றுவது என்னவென்றால், இது 10 தொடக்கம் 15 வருட காலத்துக்குட்பட்டதாக இருக்கலாம். இறுதிப்போரில் - இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்டதா அல்லது கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதா என்ற கேள்விகள் எங்களுக்கு எழுந்துள்ளன.

இது இறுதிப்போரில் சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளின் உடல் எச்சங்கள் என்பதே உண்மையில் எங்கள் கண்முன் நிற்கின்றது.

பெண்களின் உள்ளாடைகளும் காணப்படுவதால் இது இறுதிப்போரில் சரணடைந்த முன்னாள் போராளிகளின் உடல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நானும் அவ்வாறே நம்புகின்றேன்.

கேள்வி : அவை விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் என்ற கருத்து காணப்படுகிறது. அதனை உறுதி செய்யும் விதத்தில் எதனையாவது அவதானித்தீர்களா?

பதில் : ஆம். அவை விடுதலைப்புலிகளின் உடல்கள் என்றே நாங்கள் நம்புகின்றோம். காரணம், விடுதலைப்புலிகளின் சீருடையாகவே அதனை நாங்கள் பார்க்கின்றோம்.

அது 1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் எவரும் நடமாடாத இடம் இது. முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்கின்ற ஒரு நேரடிப்பாதை. குறுக்குப்பாதையும் இல்லை. இந்த புதைகுழி பிரதான வீதியில் உள்ளது.

இது விடுதலைப்புலிகளின் உடல்களா என சொல்வதற்கு அவர்களின் சீருடைகளை ஒத்த சீருடைகளை நாங்கள் அவதானித்திருந்தோம்.

இந்த உடல்கள் இராணுவத்தினருடையவை என்றால் அவர்கள் அங்கு அதனை தாண்டியிருக்கமாட்டார்கள். கொழும்புக்கு அவர்களின் வீட்டுக்கு கொண்டு சென்று கொடுத்திருப்பார்கள். இது விடுதலைப்புலிகளின் மனித எச்சங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இறுதிப்போரில் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளது எங்கள் உறவுகளின் உடல்களாகவே இந்த மனித எச்சங்களை நாங்கள் பார்க்கின்றோம். அதனை உறுதி செய்ய விரும்புகின்றோம்.

இது விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல்களாக நம்புவதற்கான காரணம் ஒன்று உள்ளது. இதனை நாளை மறுதினம் நீதிமன்றம் அகழ்வு செய்து ஆராயவுள்ளது அதன்போது விடுதலைப்புலிகள் பயன்படுத்தக்கூடிய இலக்கத்தகடுகள் உடைகள் போன்றவற்றின் மூலம் உண்மை தெரியவரலாம். மேலும் அகழ்வு இடம்பெறுகின்றபோதே உண்மை தெரியவரலாம்.

kokuthoduvai__human_remains.jpg

கேள்வி : குறிப்பிட்ட பகுதி யுத்த காலத்தில் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது?

பதில் : இந்த பகுதியிலிருந்து 1984ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் மக்களை அவசரமாக வெளியேற்றியது. அதன் பின்னர் 2009 வரை இந்த பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

எங்கள் பொதுமக்கள் எவரும் அங்கு வாழவில்லை. இராணுவத்தினரின் முழு கட்டுப்பாட்டில் அந்த பகுதி காணப்பட்டது. நாயாற்றுப்பாலத்துக்கு அப்பால் இராணுவத்தினரின் முழு பாதுகாப்பில் அந்த பகுதி காணப்பட்டது.

ஆகவே இந்த மனித எச்சங்கள் அதற்கு முன்னர் இடம்பெற்ற போரில் அல்லது மோதலில் கொல்லப்பட்டவர்களுடையது என கருதுவதற்கான வாய்ப்பு இல்லை. அந்த சந்தேகம் எங்களுக்கு எழவில்லை.

ஆனால், ஒன்றை மாத்திரம் தெரிவிக்க முடியும். இவை கடத்தப்பட்ட அல்லது சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல்களாக இருக்கலாம். தற்போது காணப்படுகின்ற சீருடைகள்  விடுதலைப்புலிகளுடைய சடலங்களாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. மேலும், அகழ்வுகள் இடம்பெறுகின்றபோதுதான் அவற்றில் பொதுமக்கள் காணாமலாக்கப்பட்டவர்களின் உடல்கள் உள்ளனவா என்பது தெரியவரும்.

கேள்வி : நீதிபதியின் உத்தரவில் பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மனித புதைகுழிக்கு பாதுகாப்பு அளிக்கும் விதம் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில் : நீதிபதியின் உத்தரவின் பேரில் மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர். ஆனால், பொலிஸார் மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாதபடியினால் நாங்கள் அந்த பிரதேச மக்களை உள்வாங்கி சுழற்சி முறையிலான அவதானிப்பு குழுக்களை நிறுத்தியுள்ளோம்.

இராணுவத்தினர் அரசாங்கத்தின் துணையுடன் பொலிஸார் அந்த பகுதியிலிருந்து சான்றுப் பொருட்களை அகற்றக்கூடிய நிலை உருவாகலாம் என்பதற்காகவும், தடயப்பொருட்களின் சாட்சிப்பொருட்கள் ஒருபோதும் அழியக்கூடாது என்பதற்காகவும் சமூக செயற்பாட்டாளர்களான நாங்கள் அந்த கிராமக்களுடன் சேர்ந்து அவற்றை மறைமுகமாக அவதானித்துக்கொண்டிருக்கின்றோம். பொலிஸார் எதை செய்தாலும், வரலாறே சொல்கின்றது பொலிஸார் ஒரு வழக்கை தொடர்ந்தால் அதில் நூறு பொய் இருக்கும். பொலிஸாரின் வழக்குகள் பெரிதாக வென்றதும் இல்லை.

இது ஒரு மனித எச்சம். அதன் சான்றுப்பொருட்களை அழித்துவிடுவார்கள் என்ற அச்சம் என்னிடமும் பொதுமக்களிடம் காணப்படுகின்றது. ஆகவே அதனை கருதி நாங்கள் சுழற்சி முறையிலே சிறு சிறு குழுக்களாக நாங்கள் அவதானித்து வருகின்றோம். பொலிஸார் சான்றுகளை அழித்துவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாக நாங்கள் இவ்வாறான குழுக்களை அமைத்து அவற்றை அவதானித்து வருகின்றோம்.

kokuthoduvai_human_remains_4.jpg

கேள்வி : இந்த மனித புதைகுழி விடயத்தில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் - சர்வதேச சமூகம் எடுக்கவேண்டிய நடவடிக்கை என்ன என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

பதில் : வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் அரசாங்கம் கரிசனை கொண்டதும் இல்லை. கரிசனை செய்யப்போவதுமில்லை. மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதேபோல வடக்கிலே அடுத்து அகழப்படக்கூடிய இடமாக இது கருதப்படுகின்றது.

நீர் விநியோக குழாய்க்காக தோண்டப்பட்ட பகுதியில் இரண்டடி அகலம் ஓரடி ஆழத்தில் தோண்டப்பட்ட குழியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதன் அருகாமையில் இரண்டு பக்கங்களும் அடுக்கடுக்காக உடுப்புகள் அதாவது விடுதலைப்புலிகளின் சீருடைகள் போன்ற சீருடைகள் இருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

அவற்றை அகழ்வு செய்கின்ற போதுதான் எத்தனை உடல்கள், மனித எச்சங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் இலங்கை அரசாங்கம் இது குறித்து கரிசனை கொண்டு சரியான தீர்வினை வழங்கப்போவதில்லை. காரணம், ஜனாதிபதியும் நீதியமைச்சரும் தெளிவாக சொல்லிவிட்டனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்திலே உள்ளதால் நாங்கள் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என நீதியமைச்சர் தெரிவித்துவிட்டார்

உண்மையில் இந்த மனித புதைகுழிகள் என்பது இறுதிப்போரில் சரணடைந்த ஆண், பெண் போராளிகளுடையனவாக இருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுகின்றது. பகுப்பாய்வு முடிவுகள் போன்றவை வந்த பின்னர்தான் அவற்றை உறுதி செய்ய முடியும்.

அனைத்தும் அரசாங்கத்தின் கரங்களில் உள்ளதால் பொலிஸார், இது தொடர்பான திணைக்களங்கள் அனைத்தும் பொலிஸாரின் கரங்களில் உள்ளதால் அவர்கள் சரியான அறிக்கையை கூட மாற்றியமைக்கக்கூடியவர்கள். ஆகவே இந்த அகழ்வுகளும் விசாரணைகளும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெற வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள். 

இந்த செய்தி ஊடாக நாங்கள் உலக நாடுகளை பகிரங்கமாக கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்த புதைகுழி அகழ்வும் விசாரணையும் இடம்பெறும்போதும் உலக நாடுகள் தங்கள் கண்காணிப்பாளர்களை அனுப்ப வேண்டும். அப்போதுதான் இந்த விசாரணை திருப்திகரமாக இருக்கும்.

இதிலே ஒரு பகுதியினருக்கு பல சந்தேகங்கள் உள்ளன. காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு பெரும் சந்தேகம் உள்ளது. புதைகுழியில் காணப்படுவது சீருடையாக இருந்தாலும் சரி, காணாமல்போன பொதுமக்களும் இதற்குள் இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இதேபோல இறுதிப்போரில் பெற்றோர் பிள்ளைகளையும், மனைவி கணவரையும், கணவர் மனைவியையும் இராணுவத்தினரிடம் ஒப்படைத்த சம்பவங்கள் உள்ளன. அந்த முன்னாள் போராளிகளின் உடல்களாக இவை இருக்கலாம் என்ற சந்தேகங்களும் உள்ளன.

ஆகவே இந்த விசாரணைக்கு சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பு மிக அவசியம்.

இந்த மனிதப்புதைகுழிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் விரைந்து உங்கள் கண்காணிப்பாளர்களை அனுப்புங்கள் என சர்வதேச சமூகத்தை, உலக நாடுகளை கேட்டுக்கொள்கின்றோம். 

https://www.virakesari.lk/article/159242

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka: மனித புதைகுழியில் கிடைத்தது விடுதலை புலிகளின் எச்சங்களா? ராணுவம் என்ன சொல்கிறது?

Human Remains Found in Mullaitivu - இலங்கை முல்லைத்தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது மனித புதைகுழிதானா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், ஜூலை 6ஆம் தேதி வியாழக்கிழமையன்று நடந்து முடிந்த அகழ்வுப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, முல்லைத்தீவு பகுதியில் இன்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விவகாரம் தொடர்பான விசாரணையில் சர்வதேச தலையீடு வேண்டும் என்ற கோரிக்கையும் ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

 

இந்த புதைகுழி விடயத்தை உலகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல எம்மால் முடியாதா?

இங்கே ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

யாராவது முன்வரலாமே.

பல நாடுகளிலும் இருந்து யாழில் இணைந்திருப்பதால் பத்திரிகைகள் அரசியல்வாதிகள் என்று பலருக்கும் இந்த செய்தியை சென்றடையச் செய்யலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இந்த புதைகுழி விடயத்தை உலகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல எம்மால் முடியாதா?

இங்கே ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

யாராவது முன்வரலாமே.

பல நாடுகளிலும் இருந்து யாழில் இணைந்திருப்பதால் பத்திரிகைகள் அரசியல்வாதிகள் என்று பலருக்கும் இந்த செய்தியை சென்றடையச் செய்யலாமே.

உக்ரைனில் மனிதப் புதைகிழியாம் என்றால்.. முன் பக்கத்தில்.. பிரேக்கிங் நியூஸ் போடும் உலக முன்னணி ஊடகங்களுக்கு இது தெரியாமல் இல்லை. கண்டுகொள்ளாமை அல்லது புறக்கணிப்புத் தன்மை.

என்ன தான் இவர்களை நோக்கி எழுதினாலும்.. அதை அவர்கள் கவனத்தில் எடுக்கமாட்டார்கள். ஏனெனில்.. அவர்கள் எஜமானர்களுக்காக எழுதுபவர்கள்.

இந்த விடயத்தை.. ஊரில் இருந்து மக்கள்.. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் நடுநிலையான நாடுகளின் உதவியுடன் ஐநா வரைக்கும் எடுத்துச் செல்வதே கூடிய வினைத்திறனாக.. நீதிக்கான குரலாக இருக்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

உக்ரைனில் மனிதப் புதைகிழியாம் என்றால்.. முன் பக்கத்தில்.. பிரேக்கிங் நியூஸ் போடும் உலக முன்னணி ஊடகங்களுக்கு இது தெரியாமல் இல்லை. கண்டுகொள்ளாமை அல்லது புறக்கணிப்புத் தன்மை.

என்ன தான் இவர்களை நோக்கி எழுதினாலும்.. அதை அவர்கள் கவனத்தில் எடுக்கமாட்டார்கள். ஏனெனில்.. அவர்கள் எஜமானர்களுக்காக எழுதுபவர்கள்.

இந்த விடயத்தை.. ஊரில் இருந்து மக்கள்.. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் நடுநிலையான நாடுகளின் உதவியுடன் ஐநா வரைக்கும் எடுத்துச் செல்வதே கூடிய வினைத்திறனாக.. நீதிக்கான குரலாக இருக்க முடியும். 

முயற்சி செய்வதில் தவறேதும் இல்லையே?

எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு உலகம் கண்டு கொள்ளவில்லையே என்பதா?

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2023 at 00:51, ஏராளன் said:

"இது மனித எலும்பு எச்சங்களா என்பதைத் தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

செய்த தவறை ஏற்று, மனம்வருந்தி, மன்னிப்பு கேட்டு, திருந்திக்கொள்வதற்கு பதிலாக முட்டாள்தனமான பதில் சொல்லி தப்பிக்கும் முயற்சி. சீருடைகளையும் சின்னங்களையும் அணிவதால் மட்டும் போதாது அதற்கேற்ற அறிவுத்திறனும் வேண்டும். மனிதனை தவிர டைனோசரும் ஆடை அணிந்தது  என்று புதிய அத்தியாயம்  மகா வம்சத்தில் எழுதுங்கள், தொல்பொருள் அகழ்வை நிறுத்தி மனித எச்சங்களை தோண்டுங்கள், விகாரை கட்டுமானங்களை நிறுத்தி கல்லறைகளை எழுப்பி கண்ணீர் விட்டு பாவத்தை கழுவுங்கள். இதற்கு காரணமானவர்களும் தங்கள் பிள்ளைகளை, மனைவியரை, கணவனை இழந்து அவர்களுக்கு என்ன நடந்தது என தெரியாமல் தவிப்பார்கள். நாட்டை  பயங்கரவாதத்தில் இருந்து மீட்டோம் என்று கொக்கரித்தவர்கள் அதற்காக வெட்கப்படட்டும், அவர்களை போற்றியவர்கள் அவர்கள் முகத்தில் காறி உமிழட்டும், வெற்றிக்கோபுரங்கள் உடைத்தெறியப்படட்டும், வரலாறு இந்த கொடூரத்தை பறை சாற்றட்டும். இன்னும் எத்தனையோ வெளிவந்து சம்பந்தப்பட்டவர்களை  தண்டிக்கட்டும். எல்லாம் தமக்குள் என்று நிலைதெரியாமல் ஆடியவர்கள் தரையில் விழுந்து மிதிபடட்டும். ஐ ,நா. தேவையில்லை, மனித உரிமைகள் பேசுவோர் பேசவில்லை, காலம் கேள்வி கேட்க்கும். ஆட்டம் முடிந்தது பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனுக்காக சாரை சாரையாகக் கண்ணீர் விடத் தெரிந்த யாழ் கள சனநாயகக் காவலர்களில் எத்தனை பேர் இந்தத் துயரத்திற்கு கருத்துத் தெரிவித்தார்கள் ? 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2023 at 00:51, ஏராளன் said:

ராணுவத்தினரின் உடல்களும் தற்போது கிடைக்கின்றன," என்கிறார் அவர்.

இவரின் நாக்கில் சனியன் நடனமாடுகிறார். போராட மறுத்த,  தப்பியோட முயற்சித்த இராணுவத்தினரை தாமே போட்டுத்தள்ளிய, புலிகளால் ஒப்படைக்கப்பட்ட இராணுவத்தினரின் உடல்களை எரித்துவிட்டு புலிகளின் மேலும், தப்பியோடிய இராணுவத்தினர் என்றும் அறிவித்து தப்பியவர்கள், இப்போ தங்கள் வாயாலேயே உளறித்தள்ளிவிட்டனர். இனி அந்த இராணுவத்தினரின் குடும்பங்களுக்கும் பதில் சொல்லியே ஆகவேண்டும். புத்திசாலியென்கிற நினைப்பு!  "நுணலும் தன வாயால் கெடும்." என்பதுபோல் வாயைக்கொடுத்து மாட்டிக்கொண்டுவிட்டாரே. எல்லாவற்றையும் புலிகளின் தலையில்  கட்டியடித்து தமிழரின் மேல் குரோதத்தை வளர்த்து தப்பிக்கொண்டதுபோல் தப்பமுடியாது. ஆப்பிழுத்த குரங்குபோல இனி இழுத்துப் பாக்கட்டுமேன். முடிந்தால் முகநூலில் சிங்களத்தில் உரையாடக்கூடியவர்கள் இவரின் இந்த செவ்வியை இணைத்து விடுங்கள், இராணுவ முகாமில் எப்படி இராணுவத்தினரின் உடல்கள் புதைக்கப்பட்டது? ஏன் குடும்பத்தினருக்கு அறிவிக்கவோ, வழங்கவோ இல்லையென கேள்வி எழுப்பிவிடுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

 

இந்த புதைகுழி விடயத்தை உலகத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல எம்மால் முடியாதா?

இங்கே ஆங்கிலப் புலமை உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

யாராவது முன்வரலாமே.

பல நாடுகளிலும் இருந்து யாழில் இணைந்திருப்பதால் பத்திரிகைகள் அரசியல்வாதிகள் என்று பலருக்கும் இந்த செய்தியை சென்றடையச் செய்யலாமே.

 

8 hours ago, ஈழப்பிரியன் said:

முயற்சி செய்வதில் தவறேதும் இல்லையே?

எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு உலகம் கண்டு கொள்ளவில்லையே என்பதா?

நிச்சயம் இதனை… வெளி உலகத்துக்கு,
துரித கதியில் தெரிவிக்க எமது அமைப்புகள் முன் வரவேண்டும்.
எமது போராளிகளை கொடூரமாக கொன்ற சிங்கள இராணுவத்தை 
உலகின் முன் அம்பலப் படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 8/7/2023 at 23:01, ஈழப்பிரியன் said:

முயற்சி செய்வதில் தவறேதும் இல்லையே?

எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு உலகம் கண்டு கொள்ளவில்லையே என்பதா?

இப்படியான பெரும் பிரச்சனைகளை உங்களாலோ என்னைப் போன்றவர்களாலோ எதுவுமே செய்யமுடியாது.. அங்கு அன்றாடம் கஷ்ரப்படும் மக்களுக்கு உதவி செய்வதை தவிர......
எமது அரசியல்வாதிகள்  அல்லது முன்னணி பொது  உதவி அமைப்புகள் தான் இப்படியான நிகழ்வுகளை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.அழுத்தங்களை கொடுத்து  விசாரணைகளை கோர வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித புதைகுழிகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

Published By: RAJEEBAN

12 JUL, 2023 | 07:27 AM
image
 

கொக்குதொடுவாய் மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

மனித புதைகுழி விடயம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக டெய்லிமோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

எனக்கு மனித புதைகுழி குறித்து எதுவும் தெரியாது எந்த தரப்பும் அது குறித்து எந்ததகவலையும் வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மனித புதைகுழி தொடர்பில்  கருத்துக்களை பெறுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நீதியமைச்சர் ஆகியோரை தொடர்புகொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என மோர்னிங் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை முல்லைத்தீவு மனித புதைகுழியை மீண்டும் அகழ்வது குறித்து  ஆராய்வதற்கு தொடர்புபட்ட அனைத்து தரப்பினரையும் முல்லைத்தீவு நீதிமன்றம் அழைத்துள்ளது.

இந்த கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிகளை அகழும் பணிகள் நீதவானின் உத்தரவின் பேரில் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும் அவைமீண்டும் ஆரம்பமாகும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை; பாரிய மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் சமீபத்தில் இடம்பெற்றிருந்தவேளை அது சர்வதேச தராதரங்களின் அடிப்படையில் இடம்பெறவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்திருந்தாh.

இது குறித்து மோர்னிங்கிற்கு கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர்  இதுமுன்கூட்டியே அவசரப்பட்டு வெளியிடப்பட்ட கருத்து புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச தராதரங்கள் மற்றும் உரிய தரப்பினரின் பங்களிப்புடன் ஆரம்பமாகவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/159783

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவும் உலக நாடுகளும் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை விசாரணைகளை நடத்த முன்வரவேண்டும் - மனித புதைகுழிகள் குறித்து வேல்முருகன்

Published By: RAJEEBAN

12 JUL, 2023 | 02:46 PM
image
 

கொக்குதொடுவாயில் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த ஐநாவும்  உலக நாடுகளும் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன்  உலக நாடுகளை ஒன்றுதிரட்ட மத்திய அரசாங்கத்திற்கு தமிழக அரசாங்கம் போதிய அழுத்தம் கொடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழீழத்தில் 2008-2009-ம் ஆண்டில் லட்சக்கணக்கான தமிழர்களைச் சிங்கள படை கொன்று குவித்தது. குறிப்பாக, சிங்களப்படையின் குண்டு வீச்சிலிருந்து உயிர்தப்ப, பதுங்கு குழிகளுக்குள் ஒன்றன் மேல் ஒன்றாகப் பலநாள் படுத்திருந்த சிறுவர்கள் பட்டினியால் துடித்துத்துடித்துச் செத்துப்போனார்கள்.

உயிர் பிழைக்க வெட்டப்பட்ட பதுங்கு குழிகள் அவர்களின் மரணக் குழிகள் ஆயின. அடுக்கப்பட்டது போல், கிடந்த அச்சிறுவர்களின் பிணங்களை அப்படியே மண் போட்டு மூடினார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் இப்படித்தான் பதுங்கு குழிகளுக்குள் படுத்து மரணத்தைத் தழுவினர்.

 

வெற்றிவாகை சூடிக்கொண்டதாக இராசபட்சே அறிவித்த அந்தக்கடைசி இருநாட்களில் (16, 17.05.2009),  உயிர்காக்க அங்குமிங்கும் அலமந்து ஓடிய மக்களை எறிகணைகளாலும் எந்திரத் துப்பாக்கிகளாலும் குறி இலக்கு எதுவுமின்றி கைபோன போக்கில், கண்போன போக்கில் சுட்டுப் பல்லாயிரக்கணக்கானோரைப் பிணமாக்கினர். படுகாயமுற்று மருந்தின்றி துடித்துத் துடித்துச் செத்தோர் பல ஆயிரம் பேர்.

இத்துயரத்தை எண்ணி கலங்கிய உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழீழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும், உலக அளவில் ஏற்புடைய புகழ்பெற்ற நீதிபதிகள் குழு ஒன்றின் தலைமையில் புலனாய்வும், விசாரணையும் நடத்த ஐ.நா முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனாலும், ஐ.நாவும் முன் வரவில்லை; வழக்கம் போல் இந்திய ஒன்றியும் கவலைக்கொள்ளவில்லை. ஏனென்றால், செத்தவர்கள் தமிழர்கள்; காணாமல் போனவர்கள் தமிழர்கள்.

இந்நிலையில், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த 29ம் தேதி குழாய் நீர் பொருத்தும் பணிகளுக்காக குழியொன்று தோண்டப்பட்ட போது, கொத்து கொத்தாக பெண்களின் உள்ளாடைகள் மற்றும் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட 'மனித புதைக்குழிகள்'  தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதி என்பது, 1984ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையான காலம் வரை முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தவை. இறுதி போரின் போது, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும், அவ்வாறு சரணடைந்தவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அச்சமயத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டுக்களை  ராணுவம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றது.

 

இச்சூழலில்,  முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வாயிலாக, சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இரத்த வெறி அம்பலப்பட்டுள்ளது.

எனவே, இனியாவது தாமதிக்காமல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.நாவும், உலக நாடுகளும் முன் வர வேண்டும். உலக நாடுகளை திரட்ட  ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

இது ஒருபுறம் இருக்க, அறிவாற்றல், போராற்றல் அர்ப்பணிப்பு, விடுதலை வேட்கை ஆகியவற்றின் உருவமாகத் திகழும், உலகத் தமிழர்கள், ஈழம் தனி நாடாவதற்கான  புரட்சியை முன்னிலும் பல மடங்கு வேகமாக முன்னெடுக்க வேண்டிய நேரமிது.

ஆயுதக் குழுப்போராட்டம் என்பது மக்களை ஈர்க்காது; ஈழம் தனி நாடாவதற்கான கோரிக்கையை எழுப்பும், இலட்சிய இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும்.

எல்லாமே முடிந்துவிட்டது என்று நம் எதிரிகள் கருதுகிறார்கள்; எல்லாமே புதிய திசையில் இனிமேல் தான் தொடங்குகிறது என்று அவர்களுக்கு நாம் பறைசாற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் சுட்டிக்காட்டுகிறேன்.

https://www.virakesari.lk/article/159838

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள ஊடகங்களில் இச்செய்தி இருட்டடிக்கப்பட்டதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஏராளன் said:

ஐநாவும் உலக நாடுகளும் இனியாவது தாமதிக்காமல் மனித உரிமை விசாரணைகளை நடத்த முன்வரவேண்டும் - மனித புதைகுழிகள் குறித்து வேல்முருகன்

மெல்லமாய் கதையுங்கோ.....சம் சுங் காதிலை விழாமல்........பிறகு தெரியும்  தானே...:rolling_on_the_floor_laughing:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.