Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: VISHNU

11 AUG, 2023 | 05:05 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.

தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராணவன் இந்தியாவுக்கு விமானத்தில் சென்று சீதாவை கடத்தி வந்ததாக குறிப்பிட்டால் பெரும்பாலானோர் நம்புவதில்லை. எமது வரலாற்றில் இன்றும் உயிர் துடிப்பாக உள்ள விடயங்கள் வியப்புக்குரியதாக உள்ளது.

மன்னராட்சி காலத்தில் சிங்கள பொறியியலாளர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாற்று சின்னங்கள் மற்றும் தொல்பொருள் சின்னங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இவ்வாறான நிலையில் இராவணன் விமானத்தில் சென்று சீதாவை கொண்டு வந்ததாக குறிப்பிடுவதை மறுக்க முடியாது என்று குறிப்பிடுகிறேன்.

இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர். இராணவன் தமிழர் என்று குறிப்பிட்டுக் கொண்டு இனவாதத்தை தூண்டிவிட முயற்சிக்கிறார்கள்.

தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும்.

மகாவம்சத்தில் இராணவன் சிறந்த தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இராவணனின் படை கொடியில் சிங்கச் சின்னம் உள்ளது.

இந்தியா இராவணன் மீது இன்றும் அச்சம் கொண்டுள்ளதால் தான் வருடாந்தம் அவரது உருவத்தை எரிக்கிறார்கள். ஆகவே இராணவன் சிங்கள தலைவர் என்றார்.

https://www.virakesari.lk/article/162152

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராவணன் தமிழ் மன்னனா ? அல்லது சிங்கள மன்னனா ? முரண்பட்டுக் கொள்வது பயனற்றது : வால்மீகிக்கு நன்றி கூறினார் ரோஹினி குமாரி

11 AUG, 2023 | 05:10 PM
image
 

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இராவணன் தமிழ் மன்னனா ? அல்லது சிங்கள மன்னனா ?என்று முரண்பட்டுக் கொள்வது பயனற்றது. அவர் இலங்கையை ஆண்ட சிறந்த அரசர்களில் ஒருவர் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு நோக்க வேண்டும்.

மகாவம்சத்தில் மறைக்கப்பட்ட இராவணன் யுகத்தை வால்மீகியே வெளிக்கொண்டு வந்தார்  என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) இடம்பெற்ற இராணவன் மன்னன் தொடர்பாக முறைசார்ந்த ஆய்வொன்றை மேற்கொள்ளல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மகாவசம்சத்தில் மறைக்கப்பட்ட இராவணவனின் யுகத்தை வால்மீகி  இராமாயணத்தில் வெளிக்கொண்டு வந்ததையிட்டு வால்மீகிக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இராவணன் வரலாற்று கதைகளை வெறும் கற்பனை என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல விடயங்கள் உண்மை தன்மையாகவே காணப்படுகிறது.

இராவணன் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு சிறந்த மாவட்டமாக மாத்தளையை தெரிவு செய்ய வேண்டும்.

இராவணன் புஷ்பக விமானத்தை தரித்ததை, சீதா தேவி இருந்த இடம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மாத்தளை பகுதியில் வரலாற்று அம்சமாக இன்றும் குறிப்பிடப்படுகிறது.

இராவணன் சிறந்த அரசர் என்பதற்கு பல ஆதாரங்கள் சான்றுகள் காணப்படுகின்றன. 10 பிரதேசங்களை ஆண்டதாலும், 10 கலைகளில் தேர்ச்சிப்பெற்றதாலும் அவர் 10 தலையுடைய இராவணன் என்று போற்றப்பட்டார். இராவணன் இலங்கை மன்னன் என்ற கோணத்தில் இருந்துக் கொண்டு நோக்க வேண்டும்.

இராவணன் தமிழ் மன்னனா ? அல்லது சிங்கள மன்னனா? என்று முரண்பட்டுக் கொள்வது பயனற்றது. அவர் இலங்கையின் சிறந்த அரசர்களில் ஒருவர் என்பது உண்மை. ஆகவே வரலாற்றுக்களை சிறந்த முறையில் ஆய்வு செய்து அவற்றை நாட்டின் எதிர்காலத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/162158

  • கருத்துக்கள உறவுகள்
Posted

போற போக்கை பார்த்தால் குமாரதுங்க மருவி குமாரசாமி ஆனது எண்டு  சொன்னாலும் சொல்லுவார்கள் போல கிடக்கு...:face_with_tears_of_joy:
ஏனெண்டால் முந்தி ஒருக்கால் இனக்கலவர விசாரணை கமிஷன் முன் சாட்சி சொன்ன புத்த பிக்கு ஒருவர்  கோண்டாவில் கொக்குவில் எண்டு ஒண்டும் கிடையாது. அதெல்லாம் கொக்குவில, கோண்டாவில எண்ட சிங்கள பிரதேசம் எண்டவர்.:rolling_on_the_floor_laughing:

யாருக்கும் ஞாபகமிருக்கோ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, ஏராளன் said:

இராவணன் மன்னன் இயக்கர் குலத்தை சேர்ந்த சிங்களவர்.

IMG-4340.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் முன்னர் இராமாயணம் தொடர்பாக நடந்த பல கருத்தாடல்களின் போது சொன்னது... தான்.. இராமாயணம் வெறும் புனைகதை இலக்கியம் அல்லது புராணம் என்றும் அதற்கு எதிராக பேசுவது பகுத்தறிவு.. முற்போக்குவாதம் என்றும் பசப்பப்படுவதிலும்.. இராமாயணம் சொல்லும் புவியியல்... சமூகச் சான்றுகளை மையமாக வைச்சு.. தமிழர் வரலாற்றுச் சான்றுகள் பெறப்படுவதும்.. ஆவணப்படுத்தப்படுவதும் அவசியம் என்று. ஆனால்.. அதனை எல்லாம் கருத்தியலால் மறுத்தவர்கள் இப்பவும் இங்கு யாழில் இருக்கினம். அவைட.. அந்த மறுதலிப்புகளின் பலனை சிங்களம்.. தனக்கான வாய்ப்பாய்க்குக் கொண்டிருக்குது.

சரி அதுபோக..

உவர் வீரசேகரவின் வாதப்படி.. பார்த்தாலும்.. இராவணன் சிங்களவன் என்றாலும்.. சிவனை வழிபட்ட சைவன். அப்போ சிங்களவர்கள் பெளத்தர்கள் என்ற உவரின் மகா வம்ச வாதம் அடியோடு சாய்கிறது. சொறீலங்கா சிங்கள பெளத்த நாடு என்ற கற்பனை கோட்பாடும்.. சிதறித் தூள் தூளாகிறது. அதைச் செய்த பெருமை.. வீரசேகரவை சாரும். 

உவர் வீரசேகர தமிழ் மொழியை நிந்திக்க முற்படுகிறாரா.. இல்லை பொய்யான சான்றுகள் தேடி ஒட்டுமொத்த சிங்களவர்களையும் பெளத்தர்கள் அல்லாதவர்கள் என்று காட்டிக்கொடுக்கிறாரா..!!

இராவணன்.. சைவன்.. சிவபூசை செய்தவன்.. என்பதை இவர் மறுக்க முடியாது. ஏனெனில்.. இராவணன் காலத்தில் புத்தரோ.. பெளத்தமோ இருந்ததில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராமாயணம் கதை பற்றி யாழ்கள கதை களம் பகுதியில் முன்பு கருத்தாடல் நடைபெற்றதா.
இராமாயணம் என்ற கற்பனை கதையில் வருகின்ற ராமர், அனுமானை பிஜேபி கடவுளாக்கி ராமர் பாலம் உண்மை என்று பிரசாரம்செய்ய, தமிழர்கள் சிலர் அந்த கதையில் வருகின்ற இராவணனை தமிழனாக்கி மகிழ்ச்சி அடைய, தமிழ் யூடியூப்காரர்கள் இராவணன் இலங்கையில் வாழ்ந்த இடம் இது என்று எங்களுக்கு படம் காட்ட, சிங்கலவர்கள் இராவணன் ஒரு சிங்கல அரசன் என்று சொந்தம் கொண்டாட 😭

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருணாநிதி, எம்ஜியாருக்கு எதிராக, தமிழர் அல்லாதோர், வாலாட்டினால் ஒட்ட நறுக்குவோம் என்றார்.

அவரே தெலுங்கர் என்று எம்ஜியார் போட்டுடைத்த போது வெலவெலத்துப் போனார்.

சரத் பொன்சேகா மலையாளி.... அப்படியே சரத் வீரசேகராவும் இருக்கக்கூடும்.

முன்னர் ஜெயராஜ் பர்ணாண்டோபிள்ளே என்ற தமிழர் சிங்களவராக நடித்தார்...

SWRD Banda??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஏராளன் said:

தமிழ் பூர்வீகம் என்பது பொய் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இலங்கையில் சின்னங்கள் காணப்படுகின்ற போது இராணவனை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும்

சரி.... தமிழர் நாங்கள் அதற்காக வெட்கப்படுகிறோம், நீங்கள் எதற்காக தமிழர் வரலாற்றை கூறும் நூல் நிலையத்தை இரவோடிரவாக, ஊரடங்குச்சட்டம் போட்டு, ஊர் உறங்கும் நேரத்தில், நட்ட நடு நிசியில் எரித்தீர்கள் என்கிற காரணத்தை எடுத்துரைத்தால். வரலாறு அற்றவர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து எதையும் எப்படியும் மாற்றலாம் திரிக்கலாம், வரலாறு உள்ளவர்களால் அப்படிச் செய்ய முடியாது ஏனெனில் அவர்களுக்கு ஆதாரங்கள் உள்ளன. அதனாலேயே அவற்றை எரிக்கிறீர்கள், திரிக்கிறீர்கள்,  மழுப்புகிறீர்கள், அடக்குகிறீர்கள். அவைகளை ஆராய அவற்றோடு சம்பந்தப்பட்டவர்களை இணைத்துக்கொள்ள பயப்படுகிறீர்கள் மறுக்கிறீர்கள்.

2 hours ago, nedukkalapoovan said:

உவர் வீரசேகரவின் வாதப்படி.. பார்த்தாலும்.. இராவணன் சிங்களவன் என்றாலும்.. சிவனை வழிபட்ட சைவன். அப்போ சிங்களவர்கள் பெளத்தர்கள் என்ற உவரின் மகா வம்ச வாதம் அடியோடு சாய்கிறது. சொறீலங்கா சிங்கள பெளத்த நாடு என்ற கற்பனை கோட்பாடும்.. சிதறித் தூள் தூளாகிறது. அதைச் செய்த பெருமை.. வீரசேகரவை சாரும். 

உவர் வீரசேகர தமிழ் மொழியை நிந்திக்க முற்படுகிறாரா.. இல்லை பொய்யான சான்றுகள் தேடி ஒட்டுமொத்த சிங்களவர்களையும் பெளத்தர்கள் அல்லாதவர்கள் என்று காட்டிக்கொடுக்கிறாரா..!!

இவர்கள் தமிழ்வரலாறை மறுதலிக்கிறோம் என கருத்தாட வெளிக்கிட்டு, தங்கள் வாயாலேயே தங்களை காட்டிக்கொடுக்கிறார்கள். இவர்களை பேச விட்டு பொறுமையாக  இருந்து வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும். முடிந்தால் பேச்சு தொடர முனைப்புகள் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். முடிவு தன்னாலேயே எங்கள் பக்கம் திரும்பும். நாங்கள் எங்கள் வரலாற்றை பாதுகாக்க முடியவில்லை, எடுத்துச்சொல்ல சந்தர்ப்பமோ, துணிவோ, ஆதாரமோ இப்போ நம்மிடமில்லை ஆகவே அவற்றை அவர்கள் வாயாலேயே வரவழைக்க வேண்டும், அவற்றுக்கு என்ன நடந்தது, அவை எவ்வாறு, ஏன் மாற்றியமைக்கப்பட்டன போன்ற விபரங்களை.

8 hours ago, ஏராளன் said:

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இராணவன் இந்தியாவுக்கு விமானத்தில் சென்று சீதாவை கடத்தி வந்ததாக குறிப்பிட்டால் பெரும்பாலானோர் நம்புவதில்லை. எமது வரலாற்றில் இன்றும் உயிர் துடிப்பாக உள்ள விடயங்கள் வியப்புக்குரியதாக உள்ளது.

 அவரே ஒத்துக்கொள்கிறார், இன்னொருவர் மனைவியை தங்கள் அரசன் கடத்தியதாக. தங்களை தங்கள் வாயாலேயே அசிங்கப்படுத்திக்கொள்கிறார்கள். வெகு விரைவில் தங்களுக்குள்ளேயே அடிபடுவார்கள், ஆளாளுக்கு வரலாறு திரித்து, விளக்கம் சொல்ல வெளிக்கிட்டு முரண்பட்டு ஆதாரம் தேடி ஒருபகுதி நமக்கு சார்பாக, நம்மிடம்  வரவும் கூடும். கலகம் பிறக்க, நிஞாயம் பிறக்கும்!

 

8 hours ago, ஏராளன் said:

இராவணன் தமிழ் மன்னனா ? அல்லது சிங்கள மன்னனா? என்று முரண்பட்டுக் கொள்வது பயனற்றது. அவர் இலங்கையின் சிறந்த அரசர்களில் ஒருவர் என்பது உண்மை.

இந்த வாதம், அவரின் பயத்தை வேறு பக்கம் திசை மாற்ற முயற்சிக்கிறார். எங்கே நாங்களாக போட்ட தூண்டிலில் மாட்டிவிடுவோமோ என்கிற அச்சம் தெரிகிறது. இத்தோடு இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட அவசரம் காட்டுகிறார். 

2 hours ago, Nathamuni said:

முன்னர் ஜெயராஜ் பர்ணாண்டோபிள்ளே என்ற தமிழர் சிங்களவராக நடித்தார்...

சிங்களத்துக்கு முண்டு கொடுக்கப்போய், அவருக்காக எந்த இனமும் வருத்தப்பட முடியாத, உரிமை கோர முடியாத நிலையை உருவாக்கிக்கொண்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரா ப்ரோ,

இராவணின் பழைய பேச்சுகள் எதாவது பழைய விசிஆர் டேப்பில் ஆடியோ, வீடியோ வடிவில் இருந்தால் தேடிப்பாருங்கள். 

அதை வைத்து சிங்களவர் என நிறுவிவிடலாம். 

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மன்னிக்கவும்! நாம் திட்டமிட்டு வைத்த தீயில் தவறுதலாக அதுவும் தீய்ந்து விட்டது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, satan said:

மன்னிக்கவும்! நாம் திட்டமிட்டு வைத்த தீயில் தவறுதலாக அதுவும் தீய்ந்து விட்டது.

முன்னையிட்ட தீ முப்புரத்திலே
பின்னையிட்ட தீ தென்னிலங்கையிலே
அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கவே மூள்கவே!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
53 minutes ago, goshan_che said:

வீரா ப்ரோ,

இராவணின் பழைய பேச்சுகள் எதாவது பழைய விசிஆர் டேப்பில் ஆடியோ, வீடியோ வடிவில் இருந்தால் தேடிப்பாருங்கள். 

அதை வைத்து சிங்களவர் என நிறுவிவிடலாம். 

 

இப்படியான கேள்விகள் எதிர்காலத்தில் எழுந்து, அதை எதிர்க்கொள்ளமுடியாமல் இவர்கள் மூச்சுத்திணறி, உண்மையை ஒப்புக்கொள்வதோடு அவமானமுமடைவர் தங்கள் இனத்தாலேயே. நான் சொல்லவில்லை கடந்த வரலாறுகள் சொல்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்களத்து சீமான் சரத் விஜயவீரவின் கதையாடல்கள் சிங்கள இனத்தையே அழித்தது ஒழிக்க போகிறது.  பாவம் எதையாவது உளறிவதே இவரின் பொழுது போக்கு போலும்.  தனது கதையாடல்கள் தனது ஶ்ரீலங்கா நாட்டுக்கும் சிங்கள இனத்துக்கும் உலை வைக்கும் என்பதை அறியாமல் உளறுகிறார்.   

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, satan said:

இப்படியான கேள்விகள் எதிர்காலத்தில் எழுந்து, அதை எதிர்க்கொள்ளமுடியாமல் இவர்கள் மூச்சுத்திணறி, உண்மையை ஒப்புக்கொள்வதோடு அவமானமுமடைவர் தங்கள் இனத்தாலேயே. நான் சொல்லவில்லை கடந்த வரலாறுகள் சொல்கின்றன. 

சொல்லமுடியது - இப்படி பேசுபவர்களை வீரயோ, சூரயோ என தூக்கி கொண்டாடுவதுதான் இது வரை சிங்கள மக்களின் பாணி. இனி திருந்தினால்தான் உண்டு.

35 minutes ago, island said:

சிங்களத்து சீமான் சரத் விஜயவீரவின் கதையாடல்கள் சிங்கள இனத்தையே அழித்தது ஒழிக்க போகிறது.  பாவம் எதையாவது உளறிவதே இவரின் பொழுது போக்கு போலும்.  தனது கதையாடல்கள் தனது ஶ்ரீலங்கா நாட்டுக்கும் சிங்கள இனத்துக்கும் உலை வைக்கும் என்பதை அறியாமல் உளறுகிறார்.   

🤣 சரியான ஒப்பீடு.

நான் நினைக்கிறேன் இவரை இப்படி பேசும்படி இராஜபக்சக்கள் கேட்டுள்ளார்கள் என.

அரகலயவுக்கு பின்னான இலங்கையில் இன்னும் சிங்கள மக்கள் மத்தியில் பச்சை இனவாதம் எடுபடுமா? என பரிசோதித்து பார்கிறார்கள்.

முடிவு ஆம் என்றால் தாமே கையில் எடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, Kavi arunasalam said:

IMG-4340.jpg

அதைப்பற்றி எனக்கென்ன கவலை. நானென்றாவது தமிழர் பற்றி அக்கறைப்படவனா. எந்தச் சிங்களக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் அமைச்சர்தானே. பிறகேன் கவலை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, goshan_che said:

சொல்லமுடியது - இப்படி பேசுபவர்களை வீரயோ, சூரயோ என தூக்கி கொண்டாடுவதுதான் இது வரை சிங்கள மக்களின் பாணி. இனி திருந்தினால்தான் உண்டு.

எனக்கென்னவோ இவரும் அடிச்சு விரட்டப்படுவார் என்றே தோன்றுகிறது. இதுவரை இவரது ஊழையிடலுக்கு யாரும் கிளம்பவில்லையே கொள்ளியோடு. களைச்சுபோய் அடங்குவாரென நினைக்கிறேன்.

21 hours ago, nochchi said:

அதைப்பற்றி எனக்கென்ன கவலை. நானென்றாவது தமிழர் பற்றி அக்கறைப்படவனா. எந்தச் சிங்களக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நான் அமைச்சர்தானே. பிறகேன் கவலை

அவருக்கு யார் கதிரை கொடுக்காவிட்டாலும் தானே ஒன்றை இழுத்துபோட்டுக்கொண்டு குந்திவிடுவார், யார் அழையாவிட்டாலும் இடையில பூந்து தலையை நீட்டி தன்னைக்காட்டுவார். சிங்களத்துக்கு தன் திட்டத்தை நிறைவேற்றவும், தன் கையை துடைத்து  சுத்தப்படுத்தவும் இப்படியானவர்களின் கை,  தேவை, அவசியம். மக்களுக்காக இவர் செய்த நன்மைகளை குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும் விரல் விட்டு எண்ணக்கூடியதாகவேனும் ஏதாவது செய்துள்ளாரா? போராட வெளிக்கிட்டு ஏதாவது.....? இல்லாத ஜனநாயகத்தில் இணைந்து அறிக்கையும் புலம்பலும் தவிர வேறேதும்.....? பூஜ்ஜியமான இவரை ஏதோ இராஜ்ஜிஜம் ஆள்கின்ற மாதிரி படம் காட்ட, இவரும் அந்த  நினைவில் மிதக்க, தன் அடையாளத்தை துலைத்து அந்நியப்படுத்தப் படுகிறேன் என்கிற தன்மானமே இல்லாமல், என்ன சொல்லகிறேன் எனும் தெளிவில்லாமல், "அதுதான் எனது நிலைப்பாடும், அதுதான் எனது தீர்க்க கரிசனம்." என்று எதுக்கெடுத்தாலும் பல்லவி படுவது. வெளிஉலகத்திடம் தீர்வை தேடாமல் எசமானிடம் தேடுவதே தனது நிலைப்பாடாம். அப்போ எப்போ தேடப்போகிறார்? அப்படியானவர் சுற்றுலா வந்த பயணிகளை இங்கிதம் இல்லாமல், உள்ளாடையுடன், உடை மாற்றக்கூட அவகாசம் அளிக்காமல் ஏன் கடத்தினார்? அதனால் சாதித்தது என்ன? பதின்மூன்றாம் சட்ட திருத்தம் தனது தீர்க்க தரிசனமாம். அது எங்கிருந்து திணிக்கப்பட்டது? என்கிற விவஸ்தையே இல்லாமல் உளறுவது இவரது பிழைப்பு. சிங்களவனே சிரிப்பான் இவரது அறிக்கைகளை பாத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கைத் தமிழ் மண்ணில் பிறந்த எவரும் , இனிமேலாவது , இராவணன் என்ற ஒரு தமிழ் மன்னன் , வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்று கூறக்ககூடாது
#கன்னியா_மலையில்_காணப்படும்  #இராவணனின்_தாயின்_சமாதி
அது  தொடர்பான ஆய்வுகளும், ஆதாரங்களும்

என்.கே.எஸ்.திருச்செல்வம்                                                                                 
 NKS/157   

திருகோணமலையின் அருகில் உள்ள கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இவ்வெந்நீர்க் ஊற்றுகளைச் சுற்றி கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெந்நீர் ஊற்றுகள் சிவபக்தனான இராவணன் தன் தாயின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றுவதற்காக உருவாக்கியவையாகும்.
இவ்வெந்நீர் கிணறுகளின் அருகில் ஓர் மலை உள்ளது. இது கன்னியா மலை என அழைக்கப்படுகிறது. இம்மலையின் உச்சியில் 60 அடி நீளமான சமாதி உள்ளது. 40 அடி என்றும் சொல்கிறார்கள். இது ஓர் இஸ்லாமியரின் சமாதி என்றே அண்மைக்காலமாக  கூறப்பட்டு வருகிறது.

 கன்னியா வெந்நீர் கிணறுகளையும், அங்குள்ள சமாதியையும் பார்ப்பதற்காக 1980 ஆம் ஆண்டு முதன் முதலாக கன்னியாவுக்கு சென்றேன். அப்போது அங்கு கடமையில் இருந்த காவலாளியிடம் கன்னியா மலையில் உள்ள சமாதியைப் பற்றி விசாரித்த போது, அவர் கூறிய விபரங்கள் சற்று புதுமையாக இருந்தது. மலையில் 60 அடி நீளமான ஓர் பிரமாண்டமான சமாதி உள்ளது, அதுதான் இந்த வெந்நீர் ஊற்றுக்களை உருவாக்கிய இராவணனின் தாயின் சமாதி, இஸ்லாமியர்கள் அதை ஓர் இஸ்லாமிய பெரியவரின் சமாதி என்று சொல்கின்றனர், நீங்கள் போய்ப் பார்க்கலாம் எனக் கூறி, தனது பிள்ளைகள் இருவரை எனக்கு வழிகாட்டியாக என்னோடு மலைக்கு அனுப்பி வைத்தார். மலை உச்சிக்குச் சென்று பிரமாண்டமான அந்த  சமாதியைப் பார்த்து வியப்படைந்தேன். அப்படி ஓர் நீளமான சமாதியை அன்று தான் முதல் முறையாகப் பார்த்தேன். மலையில் இருந்து இறங்கி வந்ததும் இது இராவணனின் தாயின் சமாதி தானா? என மீண்டும் அவரிடம் கேட்டேன். ஆம், எனது மூதாதையர்கள் அப்படித்தான் என்னிடம் சொன்னார்கள் என்றார் காவலாளி. வெந்நீர் ஊற்றுக்களில் நீராடியதும், மிகப்பெரிய சமாதியைப் பார்த்ததும் பெருமிதமாக இருந்தது.

அதன்பின் 2014 ஆம் ஆண்டு “யார் இந்த இராவணன்” எனும் தொடர் ஆய்வுக் கட்டுரையை நான் பத்திரிகையில் எழுதி வந்த போது, இராவணனின் தாயாரின் சமாதி பற்றிக் குறிப்பிட வேண்டி இருந்தது. அது பற்றிய ஆதாரங்களை ஆராய்ந்தபோது தான் இந்திய ஆய்வாளரான அசோக்காந்த் எழுதிய குறிப்பொன்றைப் படித்தேன். கன்னியா மலையில் இருப்பது இராவணனின் தாயின் சமாதி என அவர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் முன் வைத்திருக்கவில்லை. இராவணன் தனது தாய்க்கு ஈமக் கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாயின் சமாதியை அமைத்திருப்பான் எனும் யூகத்திலேயே அக்குறிப்பை எழுதியிருந்தார். இந்த ஆதாரத்தை வைத்து “யார் இந்த இராவணன்” கட்டுரையில் கன்னியா மலையிலுள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என முதன் முதலாக எழுதினேன்.  2018 ஆம் ஆண்டு “யார் இந்த இராவணன்?” புத்தகமாக வெளிவந்தது.

இது இப்படி இருக்க, கடந்த வருடம் கன்னியா வரலாறு பற்றிய ஓர் முழுமையான நூலை எழுத வேண்டிய ஓர் தேவை ஏற்பட்டது. அப்போது கன்னியாவில் இருந்த சிவன் கோயில், பிள்ளையார் கோயில், இராவணனின் தொடர்பு, இராவணனின் தாயின் சமாதி போன்றவை பற்றிய வாய்வழிச் செய்திகளும், ஐதீகங்களும் மட்டுமே இருந்தன. இவற்றிற்கான வலுவான பழமையான ஆதாரங்கள் இருக்கவில்லை.

இந்த சமயத்தில் கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயுடையது என்பதற்கு வலுவான ஆதாரங்களை இந்த நூலில் எழுத வேண்டும் என எண்ணினேன். ஏனெனின் எனது சந்தேகமும் இராவணன் தனது தாய்க்கு கிரிகைகள் செய்த இடத்தில் தானே தாய்க்கு ஓர் ஞாபகச் சின்னத்தை அமைத்திருக்க வேண்டும்  என்பதே. 
 
கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் உள்ள நூலகங்களுக்குச் சென்று இவை பற்றி ஐரோப்பிய அறிஞர்கள் எழுதிய ஆதாரங்களைத் தேடினேன். கன்னியா பற்றிய நான்கு ஆதாரங்கள் கிடைத்தன. ஆனால் அவை எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவை அவ்வளவு  பழைய ஆதாரங்கள் அல்ல. இருப்பினும் முயற்சியைக் கைவிடவில்லை. 

ஐரோப்பிய நாடுகளில் உள்ள நூலகங்கள், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் கன்னியா பற்றிய குறிப்புகள் கிடைக்குமா என இணைய தளங்கள் மூலம் தேடினேன். விடாமுயற்சியுடன் இரண்டு மாதங்கள் வரை தேடினேன். இறுதியில் இங்கிலாந்து, கலிபோர்னியா(அமெரிக்கா), கனடா, போர்த்துக்கல் ஆகிய நாடுகளில் உள்ள நூலகங்களில் இருந்து கன்னியா பற்றிய பல நூல் குறிப்புகள் கிடைத்தன. இங்கு கிடைத்தவை 26 நூல் ஆதாரங்கள். மொத்தமாக இப்போது 30 ஆதாரங்கள் என் கையில் இருந்தன. இவை சுமார் 300 வருடங்களுக்கு முற்பட்ட ஆதாரங்களாகும். இவற்றில் கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய 5 ஆதாரங்கள் கிடைத்தன.

பிரமாண்டமான சமாதி காணப்படும் கன்னியா மலையின் உண்மையான பெயர் பெரிய கரடிமலை என்பதாகும். இம்மலையில் கரடிகள் அதிகமாக வாழ்வதால் இப்படி ஒரு பெயர் வைக்கப் பட்டுள்ளது. இம்மலை இங்கிருந்து விளாங்குளம் வரை 5 கி.மீ தூரம் வரை ஒடுங்கி, நீளமாகக் காணப்படும் தட்டையான மலையாகும். இம்மலைக்கு இரண்டு உச்சிகள் உள்ளன. கன்னியாவில் உள்ள உச்சியில் சமாதி உள்ளது. இவ்வுச்சி 50 மீற்றர் உயரம் கொண்டது. அடுத்த உச்சி விளாங்குளத்தின் அருகில் உள்ளது. இது 100 மீற்றர் உயரமானது.  கன்னியா மலை அடர்ந்த காட்டுப் பகுதியின் ஆரம்பப் இடமாகும். இக்காடு கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியில் இருந்து தெற்குப்பக்கம் 6 கி.மீ வரையும், மேற்குப்பக்கம் 16 கி.மீ வரையும், தென்மேற்குப்பக்கம் ஹபரணை வரை 80 கி.மீ நீளம் கொண்ட மிகப்பெரிய காடாகும். 

கன்னியாவுடன் தொடர்புள்ள இராவணனின் தாய் பற்றிய விபரங்கள் பின்வருமாறு.

தீவிர சிவபக்தையான இராவணனின் தாய் கைகேசி சுகவீனமாக இருந்த வேளை தட்சிண கைலாயம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் இருக்கும் சிவனைத் தரிசிக்க விரும்பியதாகவும், தன் விருப்பத்தை மகன் இராவணனிடம் கூறியபோது இராவணன் தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு சுவாமி மலையில் இருந்த சிவாலயத்தை மலையோடு சேர்த்து வாளால் வெட்டி எடுக்க முற்பட்டதாகவும், அப்போது சிவன் இராவணனின் கையில் வலியை உண்டாக்கி வாளை கீழே விழச் செய்ததாகவும் ஓர் ஐதீகம் உள்ளது. இத்தனை முயற்சிகள் எடுத்தும் இராவணனின் தாய் கைகேசி இறுதிவரை தட்சிண கைலாயப் பெருமானை தரிசிக்காமலேயே உயிர் துறந்தாள். தாய் இறந்த பின்பு அவளின் ஈமக்கிரிகைகளை கன்னியா கங்கை தீர்த்தத்தில் செய்து முடித்த இராவணன் அவ்விடத்திலேயே தாயின் சமாதியையும் அமைத்தான்.

கன்னியா மலையில் உள்ள சமாதி இராவணனின் தாயின் சமாதி என்பது பலருக்குத் தெரியாத விடயமாகும். தாயின் சமாதியின் அருகிலேயே இராவணனின் சமாதியும் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதே சமயம் கன்னியா மலையில் உள்ள இராவணனின் தாயின் சமாதி இவ்வளவு  நீளமாக ஏன் இருக்க வேண்டும்? 

அதற்கும் ஓர் காரணம் உள்ளது.
கன்னியா மலையில் உள்ள சமாதி பல்லாயிரம்  வருடங்களுக்கு முன்பு இராவணன் தன் தாய்க்கு அமைத்த சமாதியாகும். இராவண னின் தாய் ஓர் யக்ஷ குலப்பெண் என்பது குறிப்பிடத்தக்கது. யக்ஷ குலத்தைச் சேர்ந்தவர்கள் பெரிய இராட்சத உடலமைப்பைக் கொண்ட வர்கள் எனும் அர்த்தத்திலேயே மலைமீது மனித உருவத்திற்கு அப்பாற்பட்ட வகையில் 60 அடி நீளத்தில் சமாதி அமைக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இராவணனின் சமாதியும் அவனது தலைநகருக்கருகில் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள திரிகூடகிரி என்பது கோணசர் மலையாகும். எனவே இராவணனின் சமாதியும் அவனது தாயின் சமாதியின் அருகிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டு யக்ஷர்களின் பெரிய இருவேறு சமாதிகள் பிற்காலத்தில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு 40 அல்லது 60 அடி நீளத்தில் அமைக்கப்பட்டன எனக் கூறப்படுகிறது. எனவே இவ்வளவு நீளத்தில் காணப்படும் இப்பெரிய சமாதி இராட்சத அரக்கர்கள் எனக் கூறப்படும் இராவணனினதும், அவனின் தாயாரினதும் சமாதிகள் என ஆய்வாளர்கள் கூறுவது பொருத்தமாக உள்ளது.

இராவணன் தனது தாயின் சமாதியை வெந்நீர் கிணறுகளின் அருகில் அமைக்காமல் ஏன் மலை உச்சியில் அமைக்க வேண்டும்?
 
அதற்கும் ஓர் முக்கிய காரணம் உள்ளது. இராவணனின் தாயான கைகேசியின் நெடுநாள் ஆசையானது தட்சிண கைலாசம் எனும் திருக்கோணேஸ்வரத்தில் வீற்றிருக்கும் சிவனை தரிசித்து வழிபடுவ தாகும். ஆனால் இராவணன் தன் தாயின் ஆசையை நிறைவேற்ற இரண்டு தடவைகள் முயற்சி செய்தும் அதை நிறைவு செய்ய முடியாமல் போய்விட்டது. தாயும் நிறைவேறாத ஆசையோடு உயிர் துறந்தார். அதன்பின் இராவணன் தாயின் கிரிகைகளை முடித்துவிட்டு கன்னியா மலை உச்சியில் சமாதியை அமைத்தான். இம்மலை உச்சியிலிருந்து திருக்கோணேஸ்வரத்தை அழகாகத் தரிசிக்கலாம். எனவே தனது தாயின் இறுதி ஆசையான திருக்கோணேஸ்வரப் பெருமானை தரிசிக்க வேண்டும் எனும் வேண்டுகோளை தாய் இறந்த பின்பாவது நிறைவேற்ற வேண்டும்  எனும் எண்ணத்துடன் மலைமீது தாயின் சமாதியை இராவணன் அமைத்திருக்க வேண்டும். இச்சமாதி மீது இருந்து தன் தாயின் ஆன்மா என்றென்றும் திருக்கோணேஸ்வரப் பெருமானை நேரடியாகவே தரிசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே சிவ பக்தனான இராவணனின் ஆசையும், சிவன் மீது அதீத பற்று கொண்ட தாய்க்குச் செய்யும் கடமையும் ஆகும் என இராவணன் நினைத்திருக்க வேண்டும்.

இச்சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி எனவும் சிலர் கூறுகின்றனர். இம்மலையில் இராவணன் காலத்துடன் தொடர்புடைய தொன்மை வரலாற்றை அறிந்திராத சிலரே இவ்வாறு கூறுகின்றனர். 200 வருடங்களுக்கு முன்பு இலங்கையை ஆராய்ந்து தமது நூல்களில் ஆவணப்படுத்திய ஐரோப்பிய அறிஞர்கள் யாரும் கன்னியா மலையில் உள்ள சமாதி இஸ்லாமிய பெரியாருடையது எனக் குறிப் பிடவில்லை. மாறாக இது இராவணன் மற்றும் அவனின் தாயின் சமாதி எனும் பொருளில் ஓர் இராட்சதனினதும், அவனின் மகனி னதும் சமாதி என்றே குறிப்பிட்டுள்ளனர்.
 
கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றிய அறிஞர்களின் குறிப்புகள்.

ஜேம்ஸ் கோர்டினரின் குறிப்பு

கன்னியா மலையில் உள்ள சமாதி பற்றி ஜேம்ஸ் கோர்டினர் எனும் வரலாற்றறிஞர் 1798 ஆம் ஆண்டு அவர் எழுதிய “A Description of Ceylon” எனும் நூலில் பின்வருமாறு விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

 “On the Summit of the above mentioned Hill are shewn two monumental piles of earth enclosed with loose stones, one thirty-six feet in length, and ten in breath, the other ten feet long, and three broad. They are said to be the dimensions of a giant and his son, who were buried there at a very remote period in the fabulous History of Ceylon.”

இக்குறிப்பில் கன்னியா மலையின் உச்சியில் இறுக்கமற்ற கற் களினால் சுற்றிவர கட்டப்பட்ட இரண்டு நினைவுச் சின்னக் குவிய ல்கள் காணப்படுவதாகவும், அவற்றில் ஒன்று 36 அடி நீளமும், 10 அடி அகலமும் கொண்டதாகவும், அடுத்தது 10 அடி நீளமும், 3 அடி அகலமும் கொண்டதாகவும் காணப்படுகிறது. இவை இலங்கை வரலாற் றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன் ஆகியோரினது பரிமாண ங்கள் எனக் கூறப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.35 ஜேம்ஸ் கோர்டினரின் மேற்சொன்ன குறிப்பு இராவணன் மற்றும் அவனின் தாய் ஆகியோரின் சமாதியைக் குறிக்கிறது என்பதற்கு இவர் பயன்படுத்தியிருக்கும் “இலங்கை வரலாற்றில் நம்பமுடியாத மிகமிகத் தொன்மையான காலத்தில் புதைக்கப்பட்ட ஓர் இராட்சதன் மற்றும் அவனின் மகன்..” எனும் சில வரிகள் ஏதுவாக அமைகின்றன.

இவரின் குறிப்பின் படி இராவணனின் தாயின் சமாதி 36 அடி நீளமும், இராவணனின் சமாதி 10 அடி நீளமும் கொண்ட இரு வேறு சமாதிகளாக மொத்தமாக 46 அடி நீளமாக இருந்துள்ளன. அண் மைக்காலத்தில் இவ்விரு சமாதிகளையும் ஒன்றாக்கி கட்டியவர்கள்  60 அடி சமாதி எனப் பெயரிட்டு,  இது ஓர் இஸ்லாமியப் பெரியாரின் சமாதி எனக் கதை கட்டி விட்டனர்.

சைமன் காசிச்செட்டியின் குறிப்பு

மேலே சொன்ன கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் சைமன் காசிச்செட்டி எனும் அறிஞர் 1833 ஆம் ஆண்டு அவர் எழுதிய “The Ceylon Gazetteer” எனும் நூலில் “Fasing the west side there are several hills, and on the Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.” எனக் கூறியுள்ளார். இக்குறிப்பில் சைமன் காசிச்செட்டி இங்குள்ள மலை உச்சியில் ஓர் இராட்சதனினதும், அவனின் மகனினதும் சமாதியின் சிதைவுகள் காணப்படுகின்றன என்றே குறிப்பிட்டுள்ளார்.
    
சார்லஸ் ப்ரிதாமின் குறிப்பு

இதே குறிப்பை சார்லஸ் ப்ரிதாம் எனும் ஆராய்ச்சியாளர் 1849 ஆம் ஆண்டு தான் எழுதிய “An Historical Political and Statistical of Ceylon” எனும் நூலில் “The Summit of one is shewn the remains of the Tombs of a Giant and his son.”  எனக் குறிப்பிட்டுள்ளார்.37

மூன்று அறிஞர்களின் கூற்றுக்கும் வலு சேர்க்கும் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு

கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் எனும் அறிஞர் 1950 ஆம் ஆண்டு எழுதிய “Ceylon Pearl of the East” எனும் நூலில் சில முக்கிய விபரங்களைக் கூறியுள்ளார். மேலே கன்னியா மலையில் உள்ள சமாதியை மூன்று அறிஞர்களும்  “Tombs of a Giant and his Son” என்றே குறிப்பிட்டுள்ளனர். இது  இராட்சதன் மற்றும் அவனின் மகன் எனப் பொருள்படும். இங்கே இராட்சதன் என்பது இராவ ணனையே குறிப்பதாகும். இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் வகையில் இந் நூலில் ஹரி வில்லியம்ஸின் குறிப்பு அமைந்துள்ளது. அக்குறிப்பின்  பின்பகுதி கீழ்வருமாறு.

“According to them King Ravanna, during his long war with Vishnu, was informed by that deity that Kanya virgin mother of the King of Ceylon, was dead. Ravanna naturally had to set about the task of performing the necessary obituary services for the beloved dead, and Vishnu to help him … and incidentally to accomplish his main design of delaying him … Caused hot springs to burst out of the ground for the Giant’s use. and there they remain.
 
மேலே கன்னியா பற்றி ஹரி வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ள விபரங்களில் இராவணன் தன் தாய்க்கு கிரிகைகள் செய்வதற்காக இவ்வெந் நீர் ஊற்றுகள் உருவாக்கப்பட்டன எனும் செய்தியே கூறப்பட்டுள்ளது. இப்பந்தியின் கடைசி இரண்டு வரிகளும் மிக முக்கியமானவையாகும். 

இதில் “caused hot springs to burst out of the ground for the giant’s use. And there they remain.” எனக் கூறப்பட்டுள்ளது. இது “வெந்நீர் ஊற்றுக்கள் இரட்சதனின் பாவனைக்காக நிலத்திலிருந்து  திடீரெனத் தோன்றின. அங்கே அவை நிலைத்து இருக்கின்றன.”எனப் பொருள்படுகிறது. இதில் இவர் நேரடியாகவே இராவணனை Giant எனக் கூறியுள்ளார். 

எனவே “Tombs of a Giant and his Son”  என மேலே மூன்று அறிஞர்களும் குறிப்பிட்டிருப்பது இராவணன் மற் றும் அவனின் தாயின் சமாதியையே என்பது ஹரி வில்லியம்ஸின் குறிப்பு மூலம் உறுதியாகிறது.  

1919 ஆம் ஆண்டு திருகோணமலை தேசப்படத்தில் கன்னியாவில் ராட்ஷசன் இராவணனின் சமாதி

கன்னியா மலையில் இராவணனின் தாய் மற்றும் இராவணன் ஆகியோரின் சமாதியே உள்ளது என்பதற்குச் சான்றாக இன்னுமோர் ஆதாரமும் காணப்படுகிறது. அது 1919 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட திருகோணமலையின் தேசப்படமாகும். இத்தேசப்படத்தின் இடது பக்க மேல் மூலையில் “Kannia-Giants Tombs” (கன்னியா இராட்ஷசன் சமாதி) எனக் குறிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேசப்படத்தின் விபரங்கள் “Description” என படத்தின் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் “This map shows the Giants Tombs near Kannia, possibly referring to the mythical King Ravana.” என கன்னியா சமாதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதா வது இந்த தேசப்படத்தில் கன்னியா ராட்சசன் சமாதி எனக் குறிப்பிடப் பட்டிருப்பது புராண காலத்து மன்னன் இராவணனைக் குறிப்பதாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து அறிஞர்களும் இச்சமாதிகள் இராட்ச சர்களின் சமாதிகள் எனும் பொருள்படக் கூறியுள்ளனரேயன்றி  இஸ்லாமியப் பெரியாருடையது எனக் கூறவில்லை. இவ் அறிஞர்கள் கன்னியா மலைக்கு சென்றபோது இப்பகுதியில் வசித்த மக்கள் இராவ ணன் மற்றும் அவனின் தாய் ஆகியோருடன் கன்னியாவுக்கு இருந்த தொடர்புகள் பற்றிக் கூறியுள்ளனர். அவர்களின் சமாதியே மலை உச்சி யில் இருப்பவை எனவும் கூறியுள்ளனர்.அறிஞர்களும் இக்கருத்தையே தமது நூலில் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 200 வருடங்களுக்கு முன்பும் இது இராட்சதர்களின் சமாதியாகவே காணப்பட்டுள்ளது.
 
இறுதியில் கன்னியா மலையில் உள்ள சமாதி ஓர் இஸ்லாமியப் பெரியவரின் சமாதி என இதுவரை கூறப்பட்டு வந்த கூற்றுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பதும், இச்சமாதி இராவணனனினதும், அவனின் தாயாரினதும் சமாதியே என்பதுக்கு 300 வருடங்களுக்கு முற்பட்ட ஐரோப்பிய அறிஞர்களின் குறிப்புகள் ஆதாரங்களாக இருக்கின்றன என்பதும் நிரூபணமாகியுள்ளது. 
  
என்.கே.எஸ்.திருச்செல்வம்
வரலாற்று ஆய்வாளர் 
இலங்கை

https://www.facebook.com/100070494699232/posts/341899521503202/?mibextid=Nif5oz

https://www.facebook.com/100009870542216/posts/pfbid0hMTwcFNQgL13fvZ57N22hXXZ9EN4SicDr3dsXALhPyBCzrmACuLwXmuFGRykdVT4l/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கைத் தமிழ் மண்ணில் பிறந்த எவரும் , இனிமேலாவது , இராவணன் என்ற ஒரு தமிழ் மன்னன் , வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை என்று கூறக்ககூடாது

இராவணன் வாழ்ந்தது சரித்திரம் என்றால் அவனது காலம் எந்த நூற்றாண்டு என்றொரு கேள்வி என்னிடம் இருக்கிறது.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
34 minutes ago, Kavi arunasalam said:

இராவணன் வாழ்ந்தது சரித்திரம் என்றால் அவனது காலம் எந்த நூற்றாண்டு என்றொரு கேள்வி என்னிடம் இருக்கிறது.

இப்படி எல்லாம் கேட்டால் கெட்ட கோவம் வரும்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kavi arunasalam said:

இராவணன் வாழ்ந்தது சரித்திரம் என்றால் அவனது காலம் எந்த நூற்றாண்டு என்றொரு கேள்வி என்னிடம் இருக்கிறது.

உஸ் மெதுவா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் தமிழர்மீதான வெறுப்பை கொட்டி தீர்க்கவும் சிங்களவர்களை சூடேற்றவும் ஒருவர் இருந்துகொண்டேயிருக்கிறார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் காணாமல் போய்விடுகிறார்கள், அல்லது அதேவேகத்துடன் மீண்டும் பேசுவதை குறைக்கிறார்கள்.

ஜேஆர் காலத்தில் சிறில் மத்யூ

பிரேமதாச காலத்தில் ரஞ்சன் விஜயரட்ண, டிபி விஜயதுங்க.

சந்திரிக்கா காலத்தில் கேகலிய ரம்புக்கல அனுரத்த ரத்வத்த.

மைத்திரி காலத்தில் மேர்வின் டி சில்வா..விமல் வீரவன்ச

இப்போ இவர்...

அரசாங்கம் நேரடியாக தமிழர்மீதான வெறுப்புணர்வை காண்பித்தால் சர்வதேச பிரச்சனையாகிவிடும் என்பதால், காலத்திற்கு காலம் சிங்களவர்களை கொதிநிலையில் வைத்து  சிறுபான்மையினருக்கெதிரான அரசியல் செய்ய  இதுபோன்று ஒருவரை பேசவிட்டு ஆட்சி தலைமை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

  • Like 1
Posted

 

இலங்கை உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத் இராவணன் ஒரு முஸ்லீம் என்று சொன்னவர். சரியான போட்டி.

mubarak.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, valavan said:

மேர்வின் டி சில்வா..

 

இவர் மீண்டும் திரையில் தோன்றுகிறார்.

எதிர்வரும் தேர்தலை குறிவைத்து நகர்கிறார் போல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

இவர் மீண்டும் திரையில் தோன்றுகிறார்.

எதிர்வரும் தேர்தலை குறிவைத்து நகர்கிறார் போல.

தமிழரின் தலைகளை கழனிக்கு கொண்டு வரப்போகிறாராம்! தேர்தலின் வாக்குறுதி மூலதனம் அது! 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
14 minutes ago, satan said:

தமிழரின் தலைகளை கழனிக்கு கொண்டு வரப்போகிறாராம்! தேர்தலின் வாக்குறுதி மூலதனம் அது! 

அதை உவரோ சொன்னது?

வேறையாரோ எல்லோ?



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.