Jump to content

தியாகதீபம் திலீபனின் ஊர்தி மீது காடையர்கள் தாக்குதல் 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தியாகதீபம் திலீபனின் ஊர்தி மீது காடையர்கள் தாக்குதல் 

Published By: VISHNU

17 SEP, 2023 | 05:24 PM
image
 

(துரைநாயகம் சஞ்சீவன்)

தியாகி திலீபனின் திரு உருவத்தை சுமந்து சென்ற ஊர்தி மீது காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருகோணமலை நோக்கி பயணித்த திலீபனின் நினைவு ஊர்தியின் மீது திருகோணமலை சர்தாபுர பகுதியில் வைத்து சிலரால் தாக்கப்பட்தோடு பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் தாக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (17) மாலை இடம்பெற்றுள்ளது.

15ம் திகதி பொத்துவில் பகுதியில் இருந்து யாழ். நல்லூர் நோக்கிய தனது பயணத்தை தொடர்ந்த திலீபனின் நினைவு ஊர்தியானது இன்றையதினம் (17) மூதூர் - கட்டைபறிச்சான் பகுதியில் இருந்து ஆரம்பித்து ஆலங்கேணி, தம்பலகாமம் ஊடாக திருகோணமலை நோக்கி ஏ 6 பிரதான வீதியூடாக பயணித்தபோது சர்தாபுர பகுதியில் வீதியில் கற்களைப் போட்டு வழிமறித்து குறித்த வாகனம் சில பெரும்பான்மையினத்தவர்களால் தாக்கப்பட்டுள்ளது. 

இதன்போது வாகனத்தில் அமர்ந்திருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனும் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் திலீபனின் நினைவு ஊர்தியானது திருகோணமலை நகருக்குள் உள்நுழையவிடாது திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் இரண்டு பொலிஸ் ஜீப் வண்டி உட்பட பஸ் ஒன்றுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.

377643695_3444742042412376_1533447591583

377674533_682337193833963_54368642865078

தியாகதீபம் திலீபனின் ஊர்தி மீது காடையர்கள் தாக்குதல்  | Virakesari.lk

 

நன்றி - யூரூப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் தலைநகரில் தமிழ் தியாகிக்கு அவமரியாதையும் தமிழர்களுக்கு அடி உதையும்.

பெளத்த சிங்களம் இந்தக் காலத்திலும் அதன் காடைத்தனத்தை காட்டத் தவறவில்லை.

வேதனை என்னவென்றால்.. சீமான் - விஜயலட்சுமி - வீரலட்சுமி அசிங்கத்தை 8 பக்கத்துக்கு எழுதி ரசித்த இதே களத்தில்..

தியாகி திலீபனுக்கு நேர்ந்த இந்த அவமரியாதைக்கு ஒரு கண்டனம்.. கருத்து இல்லை..!

இந்த ஜென்மங்களின் விடுதலைக்காக.. ஒரு வைத்தியத்துறை மாணவன் தன் வாழ்க்கையை பாழாக்கியது தான் மிச்சம். வேறு எதுவும் மாறவில்லை. தமிழரும் கூட.

Edited by nedukkalapoovan
  • Sad 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://fb.watch/n6-o8Rooe5/

முழுமையான காணொளி.

இன்று திருகோணமலையில் நடந்தது நாளை யாழ்ப்பாணத்திலும் நடக்கும்.நாங்கள் 13 ஐ அமுல் படுத்தச் சொல்லி இந்தியாவுக்கு னடிதம் எழுதிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

தமிழரின் தலைநகரில் தமிழ் தியாகிக்கு அவமரியாதையும் தமிழர்களுக்கு அடி உதையும்.

பெளத்த சிங்களம் இந்தக் காலத்திலும் அதன் காடைத்தனத்தை காட்டத் தவறவில்லை.

வேதனை என்னவென்றால்.. சீமான் - விஜயலட்சுமி - வீரலட்சுமி அசிங்கத்தை 8 பக்கத்துக்கு எழுதி ரசித்த இதே களத்தில்..

தியாகி திலீபனுக்கு நேர்ந்த இந்த அவமரியாதைக்கு ஒரு கண்டனம்.. கருத்து இல்லை..!

இந்த ஜென்மங்களின் விடுதலைக்காக.. ஒரு வைத்தியத்துறை மாணவன் தன் வாழ்க்கையை பாழாக்கியது தான் மிச்சம். வேறு எதுவும் மாறவில்லை. தமிழரும் கூட.

எனது கருத்தும் இதேதான்.

உரல் போற இடத்தை தவற விட்டு உலக்கை போகும் இடத்தை கவனிக்கும் உலகில் வாழ்கின்றோமோ என்றும் யோசிக்க வேண்டியுள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வின் இணயத்தளத்தில் மேற்கண்ட சம்பவம் பற்றிய செய்தி, வீடியோ பார்த்தேன். 

அவரவர் தமது தனிப்பட்ட பாதுகாப்பில் அக்கறை எடுக்கவேண்டியது அவரவர் பொறுப்பு. 

போதிய தற்காப்பு இல்லாமல் அசட்டு தைரியத்தில் கஜேந்திரகுமார் சிங்கள பகுதி ஊடாக நினைவேந்தல் ஊர்தியில் சென்றுள்ளார் போல் தெரிகின்றது. 

உயிர் தப்பியது என நினைத்து ஆறுதல் அடையவேண்டியதுதான். 

  • Like 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கா போலீசு வாய் பாக்கத்தான் லாயக்கு! இதில நீதி நிலைநாட்டப்போகுதாம். ஐ. நா வில பாராட்டு வாங்கத்துடிக்கும் சிங்களத்துக்கு முன்னால இதை போட்டு காண்பித்து பாராட்டைத் தெரிவிக்க வைக்கலாம்.

திருகோணமலை தமிழர் பாரம்பரிய பூமி. அங்கு சிங்கள காடையர் சண்டித்தனம். வேறு எங்கு சிங்களவர் இல்லை நாம் நமது எதிர்ப்பை தெரிவிக்க? ஏன் சைவ ஆலயத்தில் வழிபாடு நடத்தத்தான் முடிந்ததா? தமிழருக்கு போதிய பாதுகாப்பு எங்கிருந்து வரும்? பாதுகாக்க வேண்டிய போலீசு பராக்கு பாக்குது, வேறு யார் பாதுகாப்பளிப்பது? ஆயுதம் ஏந்தியது தவறு என விமர்சித்தவர்கள் எங்கே போய்விட்டார்கள்? நேற்று சோனக காடையர், இன்று சிங்கள காடையர் சண்டித்தனம். தமிழ் மக்கள் ஏன் புலிகளை ஆதரித்தனர் என்பதற்கு இதுவே காரணம், புலிகள் தோன்றவும் இதுவே காரணம் என்பதை ஆதாரத்துடன் அவர்களது காவற்துறையும் அவர்களும் நிரூபித்துள்ளார்கள் உலகுக்கு. நடப்பவையெல்லாம் நன்மைக்கே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழ் டயஸ்பொறாவின் சத்தித்திட்டமல்லாமல் வேறல்ல ..😉
ஐ நா மாநாட்டிற்கு அத்தியுத்தமம் சாணாத்திபதி சென்றிருக்கும் இவ்வேளையில்,  அவரையும் சிங்கள பவுத்த ஸ்ரீலங்காவையும் வசதியீனத்திற்கு உட்படுத்த,  தமிழ் டயஸ்போரா,  பணம் கொடுத்து, சிங்கள கடையாரையும், சிங்கள பொலிஸாரையும் விலைக்கு வாங்கி,  இதனை செய்த்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை .  😜

Hail Pillaiyaan ( for providing this idea ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் மீது தாக்குதல் - ஹரி ஆனந்த சங்கரி கண்டனம்

Published By: RAJEEBAN

18 SEP, 2023 | 07:06 AM
image
 

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஆனந்த சங்கரி தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

பொலிஸார் தடுக்க முயலாமல்வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நான் கண்டிக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கையில் அச்சமின்றி சட்டத்தை மீறுபவர்கள் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை  எவ்வாறு அனுபவிக்கின்றனர் என்பதை வெளிப்படுத்துகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/164802

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனின் உருவப்படத்தை தாங்கிய ஊர்தி பவனி மீது தாக்குதல் – மணிவண்ணன் கண்டனம்

September 17, 2023
manivannan.jpeg?fit=585%2C329&ssl=1

தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கிய வாகன ஊர்தியை   காவல்துறையினா் வேடிக்கை பார்க்க  காடையர்கள் தாக்கி சேதப்படுத்தியமையும் அவ் வாகன அணியோடு வந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையும் ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி தனம் என  யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

தியாகதீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது திருகோணமலையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி குறிப்பில்,தியாக தீபம் திலீபன் அண்ணாவின் உருவப்படத்தை தாங்கிய வாகன ஊர்தியை  காவல்துறையினா்  வேடிக்கை பார்க்க   காடையர்கள் தாக்கி சேதப்படுத்தியமையும் அவ் வாகன அணியோடு வந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டமையும் ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டி தனம். இந்த ஈன செயலை வன்மையாக கண்டிக்கின்றேன்.

உண்ணா நோன்பிருந்து அகிம்சை போர் தொடுத்து ஈகச்சாவடைந்ந உத்தமனை நினைவு கூர கூட இந்த மண்ணில் அனுமதி இல்லை என்பதை இது காட்டி நிற்கின்றது. இச் செயல் இந்த நாட்டில் ஒருபோதும் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை என்பதையும் தமிழ்மக்கள் இந்த மண்ணில் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படப் போவதில்லை என்பதையும் பட்டவர்த்தனமாக காட்டுகின்றது. இதனை சர்வதேசம் கண்டும் காணாதிருப்பது தான் வேதனையானது – என்றுள்ளது.
 

 

https://globaltamilnews.net/2023/195286/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு சுமந்த ஊர்தி மீது சிங்கள இனவாதிகளால்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டிக்கிறோம் – ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம்

September 17, 2023

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த ஊர்தி மீது சிங்கள இனவாதிகளால்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை  வன்மையாக கண்டி ப்பதாக என ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

 

ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரதும் அரசியல் உரிமைகளை அவர்கள் பெற்றுப் பாதுகாப்பான அமைதி வாழ்வில் வளர்ச்சிகள் கண்டு வாழ அந்நேரம் ஈழத்தமிழர்களின் பாதுகாப்பை இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் பொறுப்பேற்றிருந்த இந்திய அரசிடம் ஒப்பந்தப்படி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 முதல் 26.09.1987 வரை உண்ணாநோன்பிருந்து தன் இன்னுயிரையே ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் 36வது  நினைவு சுமந்த ஊர்தி தாயகப்பகுதிகளில் பயணம் மேற்கொண்டுவருகிறது, அவ்வாறு திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த தியாகி தீபம் திலீபனின் நினைவூர்தி சர்தாபுரத்தில் ஏ6 நெடுஞ்சாலையில் திட்டமிட்ட முறையில் கற்களைப் போட்டு மறித்து சிங்களவர்களால் தாக்கி சேதப்படுத்தப்பட்டு வாகனமும் அடித்து சேதமாக்கப்பட்டு திருகோணமலைக்குள் செல்லாதவாறு தடுக்கப்பட்டுள்ளது அத்துடன் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஏனைய தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தியது ஈழத்தமிழருடன் சேர்ந்து வாழ மறுக்கும் மனோநிலையை உணர்த்துகிறது.

spacer.png

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலே ” அமைதிப் போராட்டங்களுக்கும், நினைவு நிகழ்வுகளுக்கும் தடை ஏற்படுத்தக் கூடாது ” என  குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் எந்தவித பொறுப்புக்கூறலுமின்றி  மக்கள் மீதான அதுவும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் மீது தலைக்கவசத்தாலும் தடிகளாலும் அடித்து தாக்கிய சம்பவமும் அதனை  இலங்கை அரச படைகள்  வேடிக்கை பார்த்தனர்  என்பதையும்  காணொளிகள் மூலம் மீண்டும் சர்வதேசத்திற்கு எமது துணிச்சலான ஊடகவியலார்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

இச்செயற்பாடு  மிகத்தெளிவாகச் சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற முறைமை என்பது ஈழத்தமிழர்கள் மீது பாராளுமன்றக் கொடுங்கோன்மையாகவும் ஈழத்தமிழின அழிப்புக்குச் சிங்களவர்களுக்குச் சட்டப்பாதுகாப்பு வழங்கி ஈழத்தமிழர்கள் சட்டத்தின் முன் சமம் என்ற பாராளுமன்ற சனநாயக ஆட்சி முறைமைக்கான அடிப்படை உரிமையும் கூட மறுக்கப்பட்டவர்களாக வாழ்கிறார்கள் என்பதை உலகுக்கு மீண்டும் தெளிவுபடுத்தும் நிகழ்வாக உள்ளது. இது ஈழத்தமிழர்கள் இந்த சிங்களப் பெரும்பான்மை ஒற்றையட்சிப் பாராளுமன்ற முறைமையால் மட்டுமல்ல எத்தகைய சிங்களப் பாராளுமன்ற முறைமையிலும் அனைத்துலகச் சட்டங்களுக்கு அஞ்சாது சிங்களவர்களால் இனப்படுகொலைகளுக்கும்  இனத்துடைப்புகளுக்கும்  பண்பாட்டு இன அழிப்புகளுக்கும் எந்நாளும் ஆளாவார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தவறால் 2009 இல் 146000 பேர் இன அழிப்புக்கு உள்ளானமை போன்ற உலவக வரலாறை மீளவும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்க உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்கள் அனுமதிக்கமாட்டார்கள். ஐக்கிய நாடுகள் சபை உடன் தலையீடுகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், அவ்வாறே உலகநாடுகளுக்கும் உலக அமைப்புக்களுக்கும் உங்கள் அனைத்துலகச்  சட்டங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர்களுக்கான இறைமையுடன் கூடிய தன்னாட்சியை அவர்கள் பெற நீங்கள் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளை ஈழத்தமிழர்கள் உங்களுக்கு வலியுறுத்துவதற்கான  சட்ட ஒழுங்குகளுக்கு அமைய சனநாயக வழிகளில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் பேரணிகளையும் அரசியல் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய பொறுப்புள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்பதை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கும், உலக நாடுகள்  மற்றும் உலக அமைப்புகளுக்கும்  தெரிவிக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர்.

அன்பான தமிழீழ  மக்களே! எமது தமிழீழ வரலாற்றில் இவ்வாறான நிகழ்வுகள் புதிதல்ல, முள்ளிவாய்க்காலில் இலட்ச்சக்கணக்கான  மக்களை இழந்தவர்கள் நாம். எமது மாவீரர்கள் தமது உயிர்களை எமது விடிவிற்காக ஈகம் செய்திருக்கின்றார்கள். அவர்களை போற்ற வேண்டியது எமது உரிமை. அவர்களின் நினைவுகளை  எதிர்கால சந்ததிக்குக்  கடத்த வேண்டியது எமது கடமை. தியாகி திலீபன் அவர்களின் ஊர்தி தமிழர் தாயகத்தில் ஊர்வலம் வரும்போது அதனை தாக்க வந்த சிங்கள மக்களின் எண்ணிக்கை எம்மை விட குறைவாக இருந்த ஒரு வருத்தமான நிலைமையை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

எமது விடுதலையை தன் உயிரினும் மேலாக மதித்து பன்னிரெண்டு நாட்கள் தனையுருக்கி ” மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்ற தமிழீழ கனவை எம்மில் விதைத்து சென்ற தியாகதீபம் திலீபன் அவர்களின் வார்த்தையைக்  கருத்திற்  கொண்டு தமிழர்களின் அமைதி போராட்டங்களுக்கு ஆதரவு நல்குவதே  இத்தகைய வன்முறைகளுக்கு எதிராக  நாம் தரும் பதிலாக இருக்கும்.

 

https://www.ilakku.org/108291-2/


 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

தமிழ்வின் இணயத்தளத்தில் மேற்கண்ட சம்பவம் பற்றிய செய்தி, வீடியோ பார்த்தேன். 

அவரவர் தமது தனிப்பட்ட பாதுகாப்பில் அக்கறை எடுக்கவேண்டியது அவரவர் பொறுப்பு. 

போதிய தற்காப்பு இல்லாமல் அசட்டு தைரியத்தில் கஜேந்திரகுமார் சிங்கள பகுதி ஊடாக நினைவேந்தல் ஊர்தியில் சென்றுள்ளார் போல் தெரிகின்றது. 

உயிர் தப்பியது என நினைத்து ஆறுதல் அடையவேண்டியதுதான். 

இது தமிழர் தலைநகரம் தமிழர் பூமி.இற்கே குடியேற்றப்பட்ட காடையர்களுக்கு இராணுவப்புலாய்வாளர்களின் மறைமுகத் தூண்டல் இருந்திருக்கிறது. என்ன தைரியம் இருந்தால் பொலிசார் பார்த்துக்கொண்டிருக்கக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பொலிசாரும் இதற்கு உடந்தை. பிக்குமார் தாக்கியிருந்தால் அவர்களின் வழக்கப்படி பிக்குமாருக்கு எதராக எதுவும் செய்யமாட்டார்கள் என்று எண்ணலாம். ஆனால் சாதாரண காடையர்கள் தாக்கதல் நடத்தும் போது கைகட்டி வாய்பார்க்கிறார்கள். ஒரு பாரளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டிருப்பது பாரதூரமான குற்றம். இதற்குத்தான் பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்கிறோம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் – சீமான்

இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் – சீமான்

திலீபன் நினைவு ஊர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்நாடு அரசாங்கம் இந்திய ஒன்றிய அரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல், ஜனநாயக முறையில் தமிழர்கள் ஒருபோதும் உரிமையைப் பெற்றுவிட முடியாது என்பதையே மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் இனவாத அடக்குமுறைகளைத் தடுத்து நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2023/1350068

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட வேண்டும் - உதய கம்மன்பில

Published By: VISHNU

18 SEP, 2023 | 08:35 PM
image
 

(இராஜதுரை ஹஷான்)

விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் சிங்கள சமூகத்தின் மத்தியில் கோபம், வெறுப்பு காணப்படுவது இயல்பானதே. இவ்வாறான பின்னணியில் விடுதலை புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் சிங்களவர்கள் வாழும் பகுதிக்கு ஊர்தி பவனி செல்வது சிங்களவர்களை ஆத்திரத்துக்குள்ளாக்கி இன முரண்பாட்டை ஏற்படுத்தும்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அரசியலமைப்பை மீறியுள்ளார். ஆகவே உடனடியாக அவர் கைது செய்யப்பட வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

விடுதலை புலிகள் அமைப்பினரின் நோக்கங்களுக்காக உயிர் தியாகம் செய்த திலீபனை நினைவு கூரும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணத்துக்கு ஊர்தி பவனியில் செல்லும் போது சிங்களவர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

திலீபன் என்பவர் இந்த நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்.

விடுதலை புலிகளின் நோக்கத்துக்காகவே தனது உயிரை திலீபன் தியாகம் செய்தார். விடுதலை புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டு இந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

விடுதலை புலிகள் அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான வாகனத்தில் திலீபனின் உருவப்படத்தை வைத்து கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணம் நோக்கி வாகன பவனியில் செல்வதற்கு யார் அனுமதி வழங்கியது.

தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினரான திலீபனின் உருவபடத்தை சுமந்து பொது இடத்தில் பகிரங்கமாக செல்வதற்கு அரச அதிகாரி அனுமதி வழங்கியிருந்தால் அவர் அரசியலமைப்பின் 157 (அ) பிரிவை முழுமையாக மீறி பிரிவினைவாதத்துக்கு அனுசரனை வழங்கியுள்ளதாக கருத வேண்டும்.

நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் அரச அதிகாரி செயற்படுவதற்கு அரசியல்வாதியொருவர் அழுத்தம் பிரயோகித்திருந்தால் உடனடியாக அந்த அரசியல்வாதி கைது செய்யப்பட்டு அரசியலமைப்பின் 157(அ) பிரிவு பாதுகாக்கப்பட வேண்டும்.

சாதாரண சிங்கள சமூகத்தினரை இலக்காக கொண்டு விடுதலை புலிகள் அமைப்பு 300 இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. பிரிவினைவாத தாக்குதலால் ஒட்டுமொத்த சிங்கள சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சிங்களவர்கள் தமது உறவுகளை இழந்துள்ளார்கள்.

விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் சிங்கள சமூகத்தின் மத்தியில் கோபம், வெறுப்பு காணப்படுவது இயல்பானதே. இவ்வாறான பின்னணியில் விடுதலை புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் சிங்களவர்கள் வாழும் பகுதிக்கு ஊர்தி பவனி செல்வது சிங்களவர்களை ஆத்திரத்துக்குள்ளாக்கி இன முரண்பாட்டை ஏற்படுத்தும் ஒரு சூழ்ச்சியாகும்.

2007ஆம் ஆண்டு 57 ஆவது இலக்கத்தின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் 3ஆவது பிரிவுக்கு அமைய இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறும் வகையில் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் முன்னெடுக்கும் சகல செயற்பாடுகளும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அத்துடன் அவை பாரதூரமான குற்றச்சாட்டாக கருதப்படுவதால் தான் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபருக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு வழங்கப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா  கஜேந்திரன்  அரசியலமைப்பின் 157 (அ) பிரிவை மீறியுள்ளார்,மறுபுறம சர்வதேச  அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சமவாய சட்டத்தின் 3ஆவது பிரிவை மீறியுள்ளார். ஆகவே இவ்விரண்டு காரணிகளையும் முன்னிலைப்படுத்தி அவர் கைது செய்யப்பட வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பில் எவரும் முறைப்பாடளிக்கவில்லை என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு எதிராக நாங்கள் இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளிப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/164887

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

போதிய தற்காப்பு இல்லாமல் அசட்டு தைரியத்தில் கஜேந்திரகுமார் சிங்கள பகுதி ஊடாக நினைவேந்தல் ஊர்தியில் சென்றுள்ளார் போல் தெரிகின்றது. 

எங்கள் வரலாற்றிலேயே அகிம்சைப் போராட்டத்தின் முதல் அடையாளம் என்றால் அது  திலீபன்தான். திலீபனின் தியாகம் பற்றி உலகமே அறிந்தது. 

திலீபனின் தியாகத்தை நாங்கள் மதிப்பதாக இருந்தால், முதற் கட்டமாக நாங்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். ஒரு பொது இடத்தில் அமைதியாக தியாகி திலீபனுக்கு  அஞ்சலி செலுத்துவதே அவருக்கு நாங்கள் செலுத்தும் மதிப்பாகும். நாங்கள் தான் கொள்கைப் பிடிப்பாளர்கள் என தனித்தனியாக அதுவும் கட்சிகள் ரீதியாக தியாகி திலீபனுக்கு செய்யப்படும் அஞ்சலிகள் அநாவசியமானவை. அது ஒருவகையில் சுயநலம் என்று கூடச் சொல்லலாம்.

தனி ஒருவர் மீதானாலும் சரி அல்லது ஒரு குழு மீதானாலும் சரி   தாக்குதல் நிகழுமானால் அது கண்டிக்கப் பட வேண்டும் என்பதில் எதிர் கருத்து கிடையாது. ஆனால் நாங்களே அதற்கான காரணியாக இருப்போமானால் அந்த நிகழ்வு நடை பெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்களே எடுத்திருக்க வேண்டும்.    

கஜேந்திரன், தாங்கள்  திலீபனின் தியாகத்தை பெரும்பான்மை மக்களுக்கு தெளிவு படுத்த விரும்பியதாகவும் அதன் மூலம் அவர்கள் ஆட்சியாளர்களைப் புரிந்து கொள்வார்கள் என்ற அடிப்படையிலேயே இதுவரை தாங்கள் பயணிக்காத பாதையில் ஊர்தியை செலுத்தியதாகவும் சொல்லியிருக்கிறார். இது ஒரு வில்லங்கம் பிடித்த வேலை.  இது அரசியலில் இப்பொழுதுதான் ஆனா, ஆவன்னா படித்தவர்களுக்கும் விளங்கும்.  நேற்று நடந்த நிகழ்வு, தன்னை வருத்தி ஈழத் தமிழருக்காக அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டு எங்கள் கண் முன்னே மெது மெதுவாக உயிர் துறந்த ஒரு புனிதனை  வீதியில் வைத்து அசிங்கப் படுத்தி தங்கள் கட்சியை வளர்க்கும் ஒரு நிலையாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. 

இன்னுமொன்று. நாலு ஐந்து பேர் மட்டும்  பங்கு கொள்ளும் ஊர்தி பவனியைக்  கண்டு, எப்படி பெரும்பான்மை எங்கள் நிலையைப் புரிந்து கொள்ளும்? பவனியை ஏற்பாடு செய்தவருக்கே  பாதுகாப்பில்லாத போது இவர்களை நம்பி  எப்படி பொது மக்கள் போவார்கள்? ‘பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை’ நடந்த பேரணியை ஒருதரம் நினைத்துப் பார்க்கிறேன். கடந்த வருடம் ஒக்ரோபரில் நாட்டுக்குப் போய் இருந்தேன். தெகிவல சிவன் கோவில் தேர்த்திருவிழா, தேர்ப் பவனிக்காக காலி வீதியை சில மணிநேரம் ஒருபக்கம் மூடி இருந்தார்கள். தென்னிந்தியாவில் இருந்து வந்த கலைஞர்களின் குதிரை ஆட்டங்கள், நடனங்கள் என பல நடந்தன. பிரச்சனைகள் எதுவும் நடைபெறவில்லை.

தானே தடியைக் கொடுத்து  அடிவாங்கிய கதையாகத்தான் கஜேந்திரனை நான் பார்க்கிறேன். இவருக்கு நடந்ததற்காக பதாதை பிடித்து வீதியில் நின்று கண்டனம் செலுத்தி ஆர்ப்பாட்டம் செய்து நேரத்தை வீணாக்காமல் , தியாகச்சுடர் திலீபனுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தவே நான் விரும்புவேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kavi arunasalam said:

தானே தடியைக் கொடுத்து  அடிவாங்கிய கதையாகத்தான் கஜேந்திரனை நான் பார்க்கிறேன். இவருக்கு நடந்ததற்காக பதாதை பிடித்து வீதியில் நின்று கண்டனம் செலுத்தி ஆர்ப்பாட்டம் செய்து நேரத்தை வீணாக்காமல் , தியாகச்சுடர் திலீபனுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தவே நான் விரும்புவேன்.

தனது சொந்த இன மக்களையே கொழும்பில் வச்சி செய்த அரசாங்க்கமும் ஆதரவாளர்களும்  இருக்கும் வரைக்கும் இவர்கள் மற்ற இன மக்களின் வலிகளை புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது எனது கருத்து அப்படி புரிந்து கொண்டார்கள் ஆனால் இலங்கை வேற மாதிரி இருக்கும் 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தனது சொந்த இன மக்களையே கொழும்பில் வச்சி செய்த அரசாங்க்கமும் ஆதரவாளர்களும்  இருக்கும் வரைக்கும் இவர்கள் மற்ற இன மக்களின் வலிகளை புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது எனது கருத்து அப்படி புரிந்து கொண்டார்கள் ஆனால் இலங்கை வேற மாதிரி இருக்கும் 

இலங்கை வேற மாதிரி இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் எம்.பி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐவர் கைது

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும், தியாக தீபம் திலீபனின் உருவப்படத்துடன் வந்த ஊர்தியின் மீதும் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஐந்து சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை சர்தாபுர பகுதியில் நேற்று மாலை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் மீதும் , தியாக தீபம் திலீபனின் உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்தி மீதும், இலங்கை தேசிய கொடியுடன் வந்த ஒருசிலர் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சீனக் குடா பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் முறைப்பாடொன்றை அளித்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட விசாரணைகளின்படி, ஐந்து சந்தேகநபர்களை சீனக் குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதான ஐந்து சந்தேகநபர்களையும் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சீனக் குடா பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://thinakkural.lk/article/273584

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/9/2023 at 03:59, nedukkalapoovan said:

தமிழரின் தலைநகரில் தமிழ் தியாகிக்கு அவமரியாதையும் தமிழர்களுக்கு அடி உதையும்.

பெளத்த சிங்களம் இந்தக் காலத்திலும் அதன் காடைத்தனத்தை காட்டத் தவறவில்லை.

வேதனை என்னவென்றால்.. சீமான் - விஜயலட்சுமி - வீரலட்சுமி அசிங்கத்தை 8 பக்கத்துக்கு எழுதி ரசித்த இதே களத்தில்..

தியாகி திலீபனுக்கு நேர்ந்த இந்த அவமரியாதைக்கு ஒரு கண்டனம்.. கருத்து இல்லை..!

இந்த ஜென்மங்களின் விடுதலைக்காக.. ஒரு வைத்தியத்துறை மாணவன் தன் வாழ்க்கையை பாழாக்கியது தான் மிச்சம். வேறு எதுவும் மாறவில்லை. தமிழரும் கூட.

நெடுக்ஸ், பொதுவாக எல்லாருக்கும் இந்த விடயத்தில் மன ஆதங்கம் இருந்தாலும், எல்லாருக்கும் கையாகாலாத நிலைமை. இதை இதில் எழுத பிறகு வாக்குவாதமாக மாறி, இந்த திரி வேறுதிசைக்கு போகும். அதைவிட்டு விட்டு, நாங்கள் இதை எப்படி எமக்கு சாதகமாக மாற்றலாம் என்று பார்ப்போம், ஆராய்வோம். 🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

2007ஆம் ஆண்டு 57 ஆவது இலக்கத்தின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் 3ஆவது பிரிவுக்கு அமைய இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறும் வகையில் மக்களை ஆத்திரமூட்டும் வகையில் முன்னெடுக்கும் சகல செயற்பாடுகளும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அப்படியாயின் கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இல்லத்தின் மீதான வன்முறைக்கு முயன்றமைக்காக முதலில் கைது செய்யவேண்டியவராக இவரே உள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புலவர் said:

இது தமிழர் தலைநகரம் தமிழர் பூமி.இற்கே குடியேற்றப்பட்ட காடையர்களுக்கு இராணுவப்புலாய்வாளர்களின் மறைமுகத் தூண்டல் இருந்திருக்கிறது. என்ன தைரியம் இருந்தால் பொலிசார் பார்த்துக்கொண்டிருக்கக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பொலிசாரும் இதற்கு உடந்தை. பிக்குமார் தாக்கியிருந்தால் அவர்களின் வழக்கப்படி பிக்குமாருக்கு எதராக எதுவும் செய்யமாட்டார்கள் என்று எண்ணலாம். ஆனால் சாதாரண காடையர்கள் தாக்கதல் நடத்தும் போது கைகட்டி வாய்பார்க்கிறார்கள். ஒரு பாரளுமன்ற உறுப்பினர் தாக்கப்பட்டிருப்பது பாரதூரமான குற்றம். இதற்குத்தான் பொலிஸ் அதிகாரம் வேண்டும் என்கிறோம்.

 

இது சோசல் மீடியா யுகம். தமது சாகசங்களை அனைத்து தரப்பினரும் படம், வீடியோ பிடித்து தமக்கு பெருமை சேர்க்கின்றார்கள். 

மேற்கண்ட அசம்பாவிதம் நடைபெறும் வீடியோவில் எத்தனைபேர் கையில் போனுடன் வீடியோ எடுக்கின்றார்கள் என்று பாருங்கள். இவற்றை பேஸ்புக்கில் போட்டால் லைக்ஸ் அள்ளிக்கொண்டு வராதா என்ன! ஆனால், பாதிக்கப்படும் நபர்/நபர்களுக்கு உதவிட எத்தனைபேர் முன்வருவார்கள்?

கஜேந்திரனை தாக்கியவர்/கள் நாளை மக்கள் பிரதிநிதி ஆகலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, சாமானியன் said:

இது தமிழ் டயஸ்பொறாவின் சத்தித்திட்டமல்லாமல் வேறல்ல ..😉
ஐ நா மாநாட்டிற்கு அத்தியுத்தமம் சாணாத்திபதி சென்றிருக்கும் இவ்வேளையில்,  அவரையும் சிங்கள பவுத்த ஸ்ரீலங்காவையும் வசதியீனத்திற்கு உட்படுத்த,  தமிழ் டயஸ்போரா,  பணம் கொடுத்து, சிங்கள கடையாரையும், சிங்கள பொலிஸாரையும் விலைக்கு வாங்கி,  இதனை செய்த்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை .  😜

Hail Pillaiyaan ( for providing this idea ) 

ஹாஹா.... செய்வதெல்லாம் செய்துவிட்டு, புலம்பெயர்ஸ் பணம், சர்வதேச சதி என்று இழுத்து மூடும் சிங்களத்தின் போலீசும் புலனாய்வும் அதை தடுக்காது வேடிக்கை பார்ப்பது மட்டுமேனோ? முதலில் அவர்கள் தமது கடமையை செய்யத்தவறிய குற்றத்திற்காக அவர்கள்மேல் நடவடிக்கை எடுத்து, அவர்களது பதவியில் இருந்து அவர்களை நீக்க வேண்டும், அதன் பின் இந்த குற்றச்சாட்டை வைப்பதே நிஞாயமானது. அடுத்து, எப்போதும் இதையே சொல்லி தம்மை தாமே ஏமாற்றிக்கொண்டிருந்தால், ஒருநாள் இவர்கள் உண்மையை சொன்னாலும் அதை கேட்ப்பதற்கோ நம்புவதற்கோ யாரும் தயாராக இருக்க மாட்டார்கள்.

16 hours ago, புலவர் said:

பிக்குமார் தாக்கியிருந்தால் அவர்களின் வழக்கப்படி பிக்குமாருக்கு எதராக எதுவும் செய்யமாட்டார்கள் என்று எண்ணலாம்.

பிக்குகளும் நாட்டின் குடிமக்களே அவர்களுக்கும் நாட்டின் சட்ட ஒழுங்குகளை கடைப்பிடிக்க வேண்டிய பாரிய பொறுப்புண்டு அவர்களே சட்டத்தை கையிலெடுக்கும்போது அதை வேடிக்கை பார்ப்பதும் அதற்கு பாதுகாப்பளிப்பதும் விலக்களிப்பதும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். மதத்தின்மேல், வழிகாட்டிகள் மேல் கேள்வியும் அவமரியாதையும் ஏற்படும் பிற மதத்தினருக்கு. அதே நேரம் அவர்களை பின்பற்றுபவர்களை தவறாக வழிநடத்தி சமூக விரோத செயல்களை மதத்தின் பெயரால் போதிக்கின்றனர். இலங்கையில் இருப்பது; ஆன்மீக பௌத்தமல்ல  சமூக விரோத பௌத்தம்.

8 hours ago, ஏராளன் said:

விடுதலை புலிகள் அமைப்பு தொடர்பில் சிங்கள சமூகத்தின் மத்தியில் கோபம், வெறுப்பு காணப்படுவது இயல்பானதே. இவ்வாறான பின்னணியில் விடுதலை புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் சிங்களவர்கள் வாழும் பகுதிக்கு ஊர்தி பவனி செல்வது சிங்களவர்களை ஆத்திரத்துக்குள்ளாக்கி இன முரண்பாட்டை ஏற்படுத்தும் ஒரு சூழ்ச்சியாகும்.

ஓ .... கயேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின்முன் நடத்திய கூச்சலின் அடுத்த கட்டமாகவே இதை கருத வேண்யுள்ளது. இதன் சூத்திரதாரி இவராக இருக்கவும்  வாய்ப்புள்ளது. ஆகவே இவரது கருத்தையும் சேர்த்து ஐ. நாவுக்கு அனுப்புவதே சிறந்தது.

தமிழரின் பூர்வீக, தனிப்பட்ட காணியில் விகாரை அமைத்து அவர்களை விரட்டிவிட்டு அடாவடி பண்ணுவது மட்டும் நிஞாயமானது? நல்ல காட்டுச்சட்டங்களும் விளக்கங்களும். உலகமே வியக்கும்  இவர்களின் விளக்கங்களை கேட்டு. மதிகேடருக்கு உலகத்தை பற்றியோ அதன் நியமங்களைப்பற்றியோ கவலையில்லை, தமது தவறான சித்தாந்தங்களை அவர்கள் ஏற்கவில்லையென குறைகூறி கோபப்படுவார்கள்.

8 hours ago, Kavi arunasalam said:

இது அரசியலில் இப்பொழுதுதான் ஆனா, ஆவன்னா படித்தவர்களுக்கும் விளங்கும்.  நேற்று நடந்த நிகழ்வு, தன்னை வருத்தி ஈழத் தமிழருக்காக அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டு எங்கள் கண் முன்னே மெது மெதுவாக உயிர் துறந்த ஒரு புனிதனை  வீதியில் வைத்து அசிங்கப் படுத்தி தங்கள் கட்சியை வளர்க்கும் ஒரு நிலையாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. 

எனது பார்வையில் நடத்திய விதம் சரியோ தவறோ இந்த நிகழ்வு முன்னெடுத்தது காலத்திற்கேற்றது. நாங்கள் அஹிம்சையில் போராடினோம் தாக்கினார்கள், ஆயுதம் ஏந்தி தடுத்தோம் சர்வதேசமும் சேர்ந்து அழித்தது, மீண்டும் அஹிம்சையில் போராடுகிறோம் எங்கள் விடுதலைக்காக, ஏற்கப்படுகிறதா? அதன் விளைவு என்ன என்பதை சிங்கள மக்களும் சர்வதேசமும் நேரடியாக காண வாய்ப்பேற்படுகிறது, அதற்கு அவர்களின் கருத்தை வைக்க சந்தர்ப்பம் கொடுக்கப்படுகிறது. அன்று செய்ய வேண்டியதை பிந்தியேனும் செய்வதற்கு இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி வாய்ப்பேற்படுத்தியுள்ளது. சிங்கள அமைப்புகளிடமிருந்தும் எதிர்ப்பும் கண்டனங்களும் எழுந்துள்ளன. பல போராடங்களுக்கு அணிதிரண்ட மக்கள் இங்கு ஒதுங்கியிருத்தமைக்கு காரணமென்ன? பயம், விரக்தி, தெரியாமை, வெறுப்பு. ஆனால் மற்றய தமிழ்கட்சிகள் சேர்ந்து பயணிக்காமைக்கு காரணமென்ன? அழைப்பு விடுக்கவில்லையா? ஆலோசிக்கவில்லையா? இணைந்து செயற்பட விரும்பவில்லையா? அல்லது இணைக்கவில்லையா? தனித்து நின்று போராடுவதால் எதுவும் சாதிக்க முடியாது, மக்களின் போராட்டமாக கருதப்படவும் மாட்டாது. இது ஒரு கட்சியினர் மாத்திரம் அரசியலுக்காக நடத்தும் போராட்டம் என இழிவு படுத்தப்படும், ஒதுக்கப்படும். சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து நடந்தால் மக்களுக்கு நல்லது.

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தனது சொந்த இன மக்களையே கொழும்பில் வச்சி செய்த அரசாங்க்கமும் ஆதரவாளர்களும்  இருக்கும் வரைக்கும் இவர்கள் மற்ற இன மக்களின் வலிகளை புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது எனது கருத்து

ஒப்பிட்டு கருத்து பதிந்துள்ளார் அரக்கலயா ஏற்பாட்டாளர் ஒருவர்.

7 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அப்படி புரிந்து கொண்டார்கள் ஆனால் இலங்கை வேற மாதிரி இருக்கும்

இப்போதுதான் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அதனாலேயே இனவாதம் மிகுந்த அச்சப்படுகிறது. இந்தநேரத்திற்தான் நமது போராட்டத்தின் நோக்கத்தை, வலியை, வலியை எல்லோருக்கும் சென்றடைய செய்ய வேண்டும். "அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமாம்." செய்துதான் பாப்போமே. அவர்களுக்கு வலிக்கும்போது நமது வலியை சொன்னால், நமது காயங்களை  காட்டினால் புரிந்து கொள்ள இலகுவாக இருக்கும். அதுதான் இப்போ நடக்கிறது. "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்."

3 hours ago, ragaa said:

நாங்கள் இதை எப்படி எமக்கு சாதகமாக மாற்றலாம் என்று பார்ப்போம், ஆராய்வோம்.

 அதுதான் இப்போது நாம் செய்ய வேண்டியது!  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

எங்கள் வரலாற்றிலேயே அகிம்சைப் போராட்டத்தின் முதல் அடையாளம் என்றால் அது  திலீபன்தான். திலீபனின் தியாகம் பற்றி உலகமே அறிந்தது. 

திலீபனின் தியாகத்தை நாங்கள் மதிப்பதாக இருந்தால், முதற் கட்டமாக நாங்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். ஒரு பொது இடத்தில் அமைதியாக தியாகி திலீபனுக்கு  அஞ்சலி செலுத்துவதே அவருக்கு நாங்கள் செலுத்தும் மதிப்பாகும். நாங்கள் தான் கொள்கைப் பிடிப்பாளர்கள் என தனித்தனியாக அதுவும் கட்சிகள் ரீதியாக தியாகி திலீபனுக்கு செய்யப்படும் அஞ்சலிகள் அநாவசியமானவை. அது ஒருவகையில் சுயநலம் என்று கூடச் சொல்லலாம்.

தனி ஒருவர் மீதானாலும் சரி அல்லது ஒரு குழு மீதானாலும் சரி   தாக்குதல் நிகழுமானால் அது கண்டிக்கப் பட வேண்டும் என்பதில் எதிர் கருத்து கிடையாது. ஆனால் நாங்களே அதற்கான காரணியாக இருப்போமானால் அந்த நிகழ்வு நடை பெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்களே எடுத்திருக்க வேண்டும்.    

கஜேந்திரன், தாங்கள்  திலீபனின் தியாகத்தை பெரும்பான்மை மக்களுக்கு தெளிவு படுத்த விரும்பியதாகவும் அதன் மூலம் அவர்கள் ஆட்சியாளர்களைப் புரிந்து கொள்வார்கள் என்ற அடிப்படையிலேயே இதுவரை தாங்கள் பயணிக்காத பாதையில் ஊர்தியை செலுத்தியதாகவும் சொல்லியிருக்கிறார். இது ஒரு வில்லங்கம் பிடித்த வேலை.  இது அரசியலில் இப்பொழுதுதான் ஆனா, ஆவன்னா படித்தவர்களுக்கும் விளங்கும்.  நேற்று நடந்த நிகழ்வு, தன்னை வருத்தி ஈழத் தமிழருக்காக அமைதிப் போராட்டத்தை மேற்கொண்டு எங்கள் கண் முன்னே மெது மெதுவாக உயிர் துறந்த ஒரு புனிதனை  வீதியில் வைத்து அசிங்கப் படுத்தி தங்கள் கட்சியை வளர்க்கும் ஒரு நிலையாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. 

இன்னுமொன்று. நாலு ஐந்து பேர் மட்டும்  பங்கு கொள்ளும் ஊர்தி பவனியைக்  கண்டு, எப்படி பெரும்பான்மை எங்கள் நிலையைப் புரிந்து கொள்ளும்? பவனியை ஏற்பாடு செய்தவருக்கே  பாதுகாப்பில்லாத போது இவர்களை நம்பி  எப்படி பொது மக்கள் போவார்கள்? ‘பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை’ நடந்த பேரணியை ஒருதரம் நினைத்துப் பார்க்கிறேன். கடந்த வருடம் ஒக்ரோபரில் நாட்டுக்குப் போய் இருந்தேன். தெகிவல சிவன் கோவில் தேர்த்திருவிழா, தேர்ப் பவனிக்காக காலி வீதியை சில மணிநேரம் ஒருபக்கம் மூடி இருந்தார்கள். தென்னிந்தியாவில் இருந்து வந்த கலைஞர்களின் குதிரை ஆட்டங்கள், நடனங்கள் என பல நடந்தன. பிரச்சனைகள் எதுவும் நடைபெறவில்லை.

தானே தடியைக் கொடுத்து  அடிவாங்கிய கதையாகத்தான் கஜேந்திரனை நான் பார்க்கிறேன். இவருக்கு நடந்ததற்காக பதாதை பிடித்து வீதியில் நின்று கண்டனம் செலுத்தி ஆர்ப்பாட்டம் செய்து நேரத்தை வீணாக்காமல் , தியாகச்சுடர் திலீபனுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தவே நான் விரும்புவேன்.

 

விடுதலைப்புலிகளை பின்புலமாக வைத்து மக்கள் ஆதரவு பெறுவது புதிய விடயம் இல்லை. இங்கு கஜேந்திரன் புதினமாக ஒன்றும் செய்யவில்லை. 

தமிழர் செரிந்து வாழும் பகுதியில் ஜெனரல் கொப்பேகடுவ படத்தை தாங்கிய நினைவு ஊர்தி ஒரு சில சிங்கள அரசியல்வாதிகளுடன் சென்றால் கல்லெறி விழுமா/விழாதா?

மற்ற இனத்தவரின் உணர்ச்சிகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்/மனமுதிர்ச்சி சாதாரண மக்களிடம் காணப்படுமா? இல்லை என்றால் இப்படி போதிய பாதுகாப்பு இல்லாமல் ஆபத்தான பயணங்களை தவிர்ப்பது நல்லது. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/9/2023 at 23:29, nedukkalapoovan said:

தமிழரின் தலைநகரில் தமிழ் தியாகிக்கு அவமரியாதையும் தமிழர்களுக்கு அடி உதையும்.

பெளத்த சிங்களம் இந்தக் காலத்திலும் அதன் காடைத்தனத்தை காட்டத் தவறவில்லை.

வேதனை என்னவென்றால்.. சீமான் - விஜயலட்சுமி - வீரலட்சுமி அசிங்கத்தை 8 பக்கத்துக்கு எழுதி ரசித்த இதே களத்தில்..

தியாகி திலீபனுக்கு நேர்ந்த இந்த அவமரியாதைக்கு ஒரு கண்டனம்.. கருத்து இல்லை..!

இந்த ஜென்மங்களின் விடுதலைக்காக.. ஒரு வைத்தியத்துறை மாணவன் தன் வாழ்க்கையை பாழாக்கியது தான் மிச்சம். வேறு எதுவும் மாறவில்லை. தமிழரும் கூட.

இங்கு தமிழர்களின் தலை நகர் என்று நீங்கள் எழுதினாலும் அது எவ்வளவு தூரம் சரியாக இருக்குமென்று தெரியவில்லை. இப்போது இங்கு சிங்களவர்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்க வேண்டிய நிலைமை வந்து கொண்டிருக்கிறது. திருகோணமலையை அபிவிருத்தி என்னும் பெயரில் இன்னும் அவர்களது பிடியை இறுக்க போகின்றார்கள். கொழும்பில் தமிழர்கள் எப்படி இருக்கிறார்களோ அதே நிலைமைதான் அங்கும் சீக்கிரத்தில் வரப்போகின்றது.

நேற்று அனுராதபுரத்தில் ஒரு சிங்கள எம்பியை தாக்கியதட்கு (அவருக்கு ஒன்றும் பாதிப்பில்லை) உடனே விசாரணைக்கு CID இணர் கொழும்பிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட்னர். இங்கு போலீசார் முன்பாகவே தாக்குதல் நடத்தப்படுகின்றது. அதாவது அரசாங்கம் இதை அங்கீகரிக்கிறது போல தான் இருக்கிறது. அதாவது இங்கு இனத்துக்கிணம்   சடடம் வேறு படுகின்றது. கேடடாள் எங்களை விட முன்னேறிய வேறு நாடு இல்லை என்பார்கள். தான் ஆடாவிடடாலும் தன் தசை ஆடும் என்பது போலத்தான் இங்குள்ள நிலைமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று தமிழர் பிரதேசமெங்கும் விகாரைகளும் இராணுவ முகாம்களும் சிங்கள குடியேற்றங்களும் தொழில் பறிப்புகளும் நடக்கின்றன, தமிழரால் எதை தடுக்க முடிந்தது? சிங்கள அரசியல்வாதிகள் பவனியாக அழைத்து செல்லப்படுகிறார்கள், போராட்டங்களும் செய்கிறார்கள், கொப்பேகடுவ இல்லை கோத்தபாயவுக்காகவே நம்மவர் அடிவாங்குகின்றனர். இந்த கேள்வியெல்லாம் தமிழரை அடக்கிவிடாது, அல்லது சிங்கள அடாவடியை மாற்றவும் மாட்டாது. போராட்டத்தை நடத்தியது அவர்கள், அடிவாங்கியது அவர்கள், விஷயம் சர்வதேசத்துக்கு கொண்டுபோகப்பட்டது. நம்மால் விமர்சிக்க மட்டுமே முடியும்.

9 hours ago, ஏராளன் said:

ஐந்து சந்தேகநபர்களை சீனக் குடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்தால் மட்டும் போதாது, இவர்களுக்குப்பின்னால் இருந்தவர்களை கொண்டுவந்து தண்டிக்க வேண்டும். சும்மா கைது செய்து கண்துடைப்பு வேலையால் எதுவும் மாற்றியமைக்காது. தாக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை நடத்தும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் உள்ள மாணவிகளை வைத்து கோவில்களில் கந்த சஷ்டி பாராயணம் செய்ய வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகளே இதற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. நவம்பர் இரண்டாம் தேதியன்று சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசத்தைப் பாராயணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேர், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 51 பேர் என மொத்தம் 120 பேர் இதில் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர்.   'விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதி' பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, இந்நிகழ்வில் 120 பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர் அந்தத் தருணத்தில் இதுகுறித்து பேட்டியளித்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, "இந்து சமய அறநிலையத் துறை சார்பில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இசைக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை மட்டுமே அவர்கள் விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதிக்கிறோம்" என்று தெரிவித்தார். 738 மாணவ, மாணவிகளுக்கு கந்த சஷ்டி பாராயணம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதுபோல 12 கோவில்களில் மாணவ, மாணவிகள் பங்கேற்று பாட உள்ளதாகவும் அவர் கூறினார். எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டிருந்த இந்த கந்த சஷ்டி பாராயண நிகழ்வின் வீடியோவை மேற்கோள்காட்டி, ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், பாராட்டும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆனால், விரைவிலேயே தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் இயக்கங்களிலிருந்து கண்டனக் குரல்கள் எழுந்தன. நவம்பர் ஐந்தாம் தேதி வெளியான திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வ இதழான விடுதலையின் முதல் பக்கத்திலேயே இதனைக் கண்டித்து செய்தி வெளியானது. "தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தென்மாவட்டத்தில் நடத்தப்படும் கல்லூரியிலிருந்து கந்த சஷ்டி கவசம் பாட முருகன் கோயிலுக்கு மாணவர்/மாணவிகளை அனுப்ப வேண்டும் என்று துறையின் அதிகாரிகள் கட்டாயப்படுத்தப்படுவதாக ஒரு செய்தி வருகிறது. கல்லூரி நடத்தப்படுவது எந்தத் துறையால் என்றாலும், மாணவர்கள் வந்திருப்பது கல்வி கற்கத் தானே ஒழிய, பஜனை செய்ய அல்ல. திராவிட மாடல் அரசின் கொள்கை செயல் திட்டங்களுக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது யார் என்ற கேள்வி எழவில்லையா?" என அந்நாளிதழ் கேள்வி எழுப்பியிருந்தது. பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, 'மாணவ, மாணவிகளை மட்டுமே அவர்கள் விருப்பத்தின் பேரில் கந்த சஷ்டி பாராயணம் பாட அனுமதிக்கிறோம்' என்று தெரிவித்தார் அமைச்சர் சேகர் பாபு ‘திமுக அரசின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானது’ அதேபோல, மே 17 இயக்கமும் இதனைக் கண்டித்து எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டது. "கந்த சஷ்டி பாராயணம் என்ற தொடர் ஆன்மீக நிகழ்வை முன்னெடுப்பதும், அதில் பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்கேற்க வைப்பதும், திராவிடத்தின் வழிவந்த - 'திராவிட மாடல்' ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பதாக சொல்லிக்கொள்ளும் திமுக அரசின் அடிப்படை கொள்கைகளுக்கு முரணானதாகும்.” “மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டிய தமிழ்நாடு அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை வளர்த்தெடுக்கும் வகையில் செயல்படுவது ஏற்புடையதல்ல" என அந்த இயக்கத்தின் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.   திமுகவின் தோழமைக் கட்சிகள் எதிர்ப்பு Twitter பதிவை கடந்து செல்ல, 1 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 விரைவிலேயே தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதனை எதிர்க்க ஆரம்பித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார் இதனைக் கண்டித்து எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். "தமிழ்நாட்டில் அதிக அளவில் பெண்கள் கல்லூரிக்குப் போக வேண்டும் என்பதற்காக ‘புதுமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் முதலமைச்சர். அவரது நல்ல நோக்கத்துக்கு மாறாக பள்ளி மாணவிகளைப் பாராயணம் பாடச் சொல்லி ‘பழமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் மாண்புமிகு அமைச்சர் சேகர் பாபு.” “கல்வியின் மதச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ‘அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்களைப் பள்ளி, கல்லூரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்பது தவிர வேறு வழியில்லை" என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், "அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாடச் சொல்லி கோவிலுக்கு அனுப்புவீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 இதற்கிடையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் சென்னை ராயப்பட்டையில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பாகத் திரண்டு, அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஊர்வலமாகச் செல்ல முயன்ற அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். இப்படி எதிர்ப்புகள் வந்தபோதும், சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் ஒரு பகுதியாக, நவம்பர் ஆறாம் தேதி மாணவியரை வைத்து கந்த சஷ்டி பாராயணம் நடைபெற்றிருக்கிறது. வட பழனியில் நடந்த நிகழ்வில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேர், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 50 பேர் என மொத்தம் 119 பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடினர்.   பட மூலாதாரம்,@DRAVIDARKAZAGAM படக்குறிப்பு, சேகர் பாபுவைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய போராட்டம் அனைத்துலக முருகன் மாநாடும் விமர்சனங்களும் தி.மு.க. அரசு 2021இல் பதவியேற்ற பிறகு, இந்து சமய அறநிலையத் துறையின் அமைச்சராக பி.கே. சேகர் பாபு பொறுப்பேற்றார். இதற்குப் பிறகு, இந்து சமய அறநிலையத் துறையின் பணிகள் வேகமெடுத்தன. வெகு சீக்கிரத்திலேயே அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சிலரை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நியமனம் செய்தார். மேலும், நூற்றுக்கணக்கான கோவில்களுக்குக் குடமுழுக்கு செய்வது, ஆன்மீக நூல்களை வெளியிடுவது என விறுவிறுப்பாகச் செயல்பட்டார் சேகர் பாபு. ஆனால், விரைவிலேயே இவரது நடவடிக்கைகள் மீது விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக, அனைத்துலகமுருகன் மாநாடு நடத்த முடிவுசெய்தபோது பெரும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த மாநாட்டிற்கு தி.மு.கவை கடுமையாக விமர்சனம் செய்துவரும் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்தை அழைத்ததும், அதில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களும் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தன. குறிப்பாக, 8வது மற்றும் 12வது தீர்மானங்கள் விமர்சனத்தை எதிர்கொண்டன. எட்டாவது தீர்மானமாக, 'கந்த சஷ்டி விழாக்காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோவில்களில் மாணவர், மாணவியரைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.’ என்றும் 12வது தீர்மானமாக ‘முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது’ என்றும் குறிப்பிடப்பட்டது. இதற்குக் கண்டனம் தெரிவித்த திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி, "இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? தி.மு.க. அரசின் கொள்கை என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டதாயிற்றே! தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்குக் கூட மதச்சார்பற்ற கூட்டணி என்றுதானே பெயர் - இதற்குமேல் விளக்கத் தேவையில்லை" என்று குறிப்பிட்டார். தி.மு.கவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அந்தத் தருணத்தில் இதற்குக் கண்டனம் தெரிவித்தது. ஆனால், தி.மு.கவின் தரப்பில் இருந்து அப்போது பதில் ஏதும் வரவில்லை. சேகர் பாபு இவற்றையெல்லாம் தானாகச் செய்யவில்லையெனக் கருதுவதாகச் சொல்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவரான கொளத்தூர் மணி. "அறநிலையத் துறை நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள் மீது தனக்கு உரிமை இருப்பதாகக் கருதுகிறார் சேகர் பாபு. அறநிலையத் துறை அரசின் அங்கம். அப்படியிருக்கும் போது சேகர் பாபு தன் விருப்பப்படி எப்படிச் செயல்படுகிறார் என்பது புரியவில்லை. இது மிகவும் கண்டனத்திற்கு உரியது.” என்கிறார் கொளத்தூர் மணி. தொடர்ந்து பேசிய அவர், “அறநிலையத் துறை செய்வது சரியென்றால், பள்ளிகளில் சென்று இதேபோலப் பேசிய மகாவிஷ்ணு மீது வழக்குப் போட்டது ஏன்? இதையெல்லாம் அவர் தானாகச் செய்வதாகத் தோன்றவில்லை" என்று கூறினார்.   அமைச்சர் சேகர்பாபு பதில் என்ன? பட மூலாதாரம்,@PKSEKARBABU படக்குறிப்பு, தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் இப்படி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளிக்கவில்லை கந்த சஷ்டி பாராயணம் தொடர்பாக எழுந்திருக்கும் எதிர்ப்புகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் பிபிசி கேட்டபோது, "இதை ஒன்றும் புதிதாகச் செய்யவில்லை. கடந்த ஆண்டும் வடபழனி, கந்தகோட்டம், திருச்செந்தூர் போன்ற இடங்களில் இதேபோன்ற பாராயணம் நடந்தது. இதை ஏன் தேவையில்லாமல் சர்ச்சையாக்குகிறீர்கள்?" என்கிறார் சேகர் பாபு. தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் இப்படி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளிக்கவில்லை. கூட்டணிக் கட்சியினரே இது குறித்து விமர்சிப்பது குறித்துக் கேட்டபோது, "ஆன்மீகம் தொடர்பாக எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்கிறோம். அதில் கவனம் செலுத்துங்கள்" என்று மட்டும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1lge5z7415o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • வெற்றி பெற வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள் இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) வீரப்பையன் 10)புலவர் 11) அகஸ்தியன் 12) ஈழப்பிரியன் 13) புரட்சிகர தமிழ் தேசியன் 14)goshan_che 15) நுணாவிலான் 16)வில்லவன்
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப், கடந்த ஏப்ரல் மாதம் தனக்கு எதிரான முதல் குற்றவியல் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜரானார். எழுதியவர், மேடலின் ஹால்பர்ட் பதவி, பிபிசி நியூஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். அவர் மீது பல குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தீர்ப்பளிக்கப்படாத பல குற்றவியல் வழக்குகள் உள்ள ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல்முறை. பல குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் அதேவேளையில் டிரம்ப் அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவியில் உட்காரப் போவது, அமெரிக்காவில் இதுவரை நடந்திராத ஒன்று. டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் நுழையும் போது, அவர் எதிர்கொள்ளும் நான்கு குற்ற வழக்குகள் என்ன ஆகும் என்பது இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. ஆபாசப் பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் மீது ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 34 மோசடி வழக்குகள் சுமத்தப்பட்டன வணிக ஆவணங்களில் முறைகேடு செய்ததாக அவர் மீது முன்வைக்கப்பட்ட 34 குற்றச்சாட்டுகள் நியூயார்க் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் உறுதி செய்யப்பட்டது. இவை நியூயார்க்கில் கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன. மே மாதம், நியூயார்க்கின் நடுவர் மன்றம் டிரம்பை குற்றவாளி என்று அறிவித்தது. இந்த கணக்கு பதிவேடு முறைகேடுகள் அனைத்துமே ஆபாச நடிகைக்கு பணம் தரப்பட்டதுடன் (hush money) தொடர்புடையவை. நியூயார்க் நீதிபதி ஜுவான் மார்ச்சென், டிரம்புக்கான தண்டனை அறிவிப்பை செப்டம்பர் மாதத்தில் இருந்து நவம்பர் 26-ஆம் தேதி வரை ஒத்திவைத்திருந்தார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும் வரை தள்ளிவைக்கப்பட்டது. முன்னாள் புரூக்ளின் வழக்கறிஞர் ஜூலியா ராண்டில்மேன் கூறுகையில், தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றாலும், நீதிபதி மார்ச்சென் திட்டமிட்டபடி சட்ட நடவடிக்கையை தொடர முடியும் என்று கூறினார். ஆனால், முதியவர் என்பதாலும் முதல்முறை குற்றவாளி என்பதாலும் டிரம்புக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்பில்லை என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை தண்டனை அறிவிக்கப்பட்டால், டிரம்பின் வழக்கறிஞர்கள் உடனடியாக தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். ஏனெனில் டிரம்ப் சிறைக்கு அனுப்பப்பட்டால், அவர் தனது அதிகாரப்பூர்வ வேலையைச் செய்ய முடியாது என்று ஜூலியா கூறுகிறார். "இந்த மேல்முறையீட்டு செயல்முறை பல ஆண்டுகளுக்கு நீடிக்கலாம்" என்றும் அவர் கூறினார். தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்ததாக வழக்கு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதால், கிரிமினல் வழக்குகளில் அவருக்கு இருந்த பிரச்னைகள் ‘முடிவுக்கு வந்ததுள்ளன’ கடந்த ஆண்டு டிரம்ப் மீது சிறப்பு வழக்கறிஞர் ஜாக் ஸ்மித், கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தார். இந்த வழக்கு 2020 அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்ற பின்னர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பானது. டிரம்ப் இந்த வழக்கில் தன்னை நிரபராதி என்று கூறினார். அதிபர் என்ற முறையில் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளில் இருந்து அவருக்கு ஓரளவு சட்டப் பாதுகாப்பு இருப்பதை அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்தது. இதனையடுத்து இந்த வழக்கு பற்றி குழப்பம் நிலவுகிறது. எவ்வாறாயினும், தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் டிரம்பின் முயற்சி அதிபர் என்கிற முறையிலான அவரது அதிகாரப்பூர்வ கடமைகளுக்குள் வராது என்று ஸ்மித் தனது வாதத்தை மீண்டும் முன்வைத்தார். முன்னாள் அரசு வழக்கறிஞர் நயீம் ரஹ்மானியின் கூற்றுப்படி, டிரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதால், கிரிமினல் வழக்குகளில் அவருக்கு இருந்த பிரச்னைகள் ‘முடிவுக்கு வந்ததுள்ளன’. "பதவியில் இருக்கும் அதிபருக்கு எதிரான குற்றம்சாட்டில் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்பது உறுதியாகிவிட்டது. எனவே வாஷிங்டன் டிசி நீதிமன்றத்தில் நடந்து வரும் தேர்தல் மோசடி தொடர்பான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு விடும்" என்று அவர் கூறுகிறார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய ஸ்மித் மறுத்தால், டிரம்ப் ஏற்கனவே கூறியதைப் போல அவரை அதிகாரத்தில் இருந்து நீக்க முடியும். "இரண்டு நொடிகளில் நான் அவரை நீக்குவேன்" என்று டிரம்ப் அக்டோபரில் ஒரு வானொலி பேட்டியில் கூறினார்.   அரசு ஆவணங்கள் தொடர்பான வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தீர்ப்பளிக்கப்படாத பல குற்றவியல் வழக்குகள் உள்ள ஒருவர் அமெரிக்க அதிபராவது இதுவே முதல்முறை (கோப்புப் படம்) டிரம்பிற்கு எதிரான மற்றொரு வழக்கையும் ஸ்மித் முன்னெடுத்தார். அரசின் ரகசிய ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், இதை டிரம்ப் மறுத்தார். டிரம்ப் தனது இல்லமான 'மார்-ஏ-லாகோ'வில் முக்கியமான அரசு ஆவணங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த ஆவணங்களை சட்டத் துறை திரும்பப் பெற முயன்றது. இந்த வழக்கை டிரம்ப் அதிபராக இருந்த போது நியமிக்கப்பட்ட ஃபுளோரிடா நீதிபதி எலைன் கேனன் விசாரித்தார். கடந்த ஜூலை மாதம் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார். இந்த வழக்கை விசாரிக்க சட்டத் துறை ஸ்மித்தை முறைகேடாக நியமித்துள்ளதாகக் கூறி குற்றச்சாட்டுகளை அவர் தள்ளுபடி செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்மித் மேல்முறையீடு செய்துள்ளதாக ரஹ்மானி கூறினார். ஆனால், தற்போது டிரம்ப் அதிபராவது உறுதியாகிவிட்ட நிலையில், தேர்தல் மோசடி தொடர்பான வழக்கை போல் ரகசிய ஆவணங்கள் தொடர்பான வழக்கும் ரத்து செய்யப்படலாம் என ரஹ்மானி கூறுகிறார். "ரகசிய ஆவணங்கள் வழக்கை நிராகரிப்பதற்கான லெவந்த் சர்க்யூட் மேல்முறையீட்டை (Eleventh Circuit appeal) சட்டத்துறை (DOJ) கைவிடும்," என்று அவர் கூறினார்.   ஜார்ஜியா வழக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ‘அமெரிக்க அதிபராக, அவர் அதிபர் அலுவலகத்தில் இருக்கும் வரை, அவர் மீது எந்த வழக்கும் பதியப்பட மாட்டாது என நம்புகிறேன்’ என டிரம்பின் வழக்கறிஞர் ஸ்டீவ் செடோ கூறுகிறார் ஜார்ஜியாவிலும் டிரம்ப் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இந்த விவகாரம் 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் முடிவை மாற்றச் சதி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பானது. இந்த விஷயத்தில் பல்வேறு தடைகள் இருந்தன. மாவட்ட வழக்கறிஞர் ஃபேன்னி வில்லிஸை தகுதி நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த வழக்கு தொடர்பான வழக்கறிஞர் ஒருவருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றம் வில்லிஸ் இந்த வழக்கில் இருக்க அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை பரிசீலித்து வருகிறது. ஆனால் தற்போது டிரம்ப் அதிபராக வந்துவிட்டார். எனவே இந்த வழக்கு இன்னும் தாமதமாகலாம் அல்லது தள்ளுபடி செய்யப்படலாம். இந்த வழக்கு ரத்து செய்யப்படும் என்பதே சட்ட வல்லுநர்களின் கருத்து. டிரம்ப் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் விசாரணைகளுக்கு வர முடியுமா என்று நீதிபதி கேட்ட போது டிரம்பின் வழக்கறிஞர் ஸ்டீவ் செடோ, "அமெரிக்க அதிபராக, அவர் அதிபர் அலுவலகத்தில் இருக்கும் வரை, அவர் மீது எந்த வழக்கும் பதியப்பட மாட்டாது என நம்புகிறேன்” என்றார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ce9g3j4j44no
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.