Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஒரு புலப்பெயர்ச்சி அலை? நிலாந்தன்.

ஒரு புலப்பெயர்ச்சி அலை? நிலாந்தன்.

கனடாவில் வசிக்கும் ஒரு நண்பர் சொன்னார்..கனடாவுக்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கு படிவங்களை நிரப்பி கொடுப்பதற்கு என்று கிட்டத்தட்ட 30 மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்று.அம்மையங்களில் ஒரு படிவத்தை நிரப்புவதற்கு ஆயிரம் கனேடியன் டாலர்கள் அறவிடப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.கிட்டத்தட்ட இலங்கை ரூபாயில் இரண்டரை லட்சம். கனடாவில் இருக்கும் தமிழர்கள் தாயகத்தில் உள்ள தமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களை அவ்வாறு அழைக்கலாம் என்று ஒரு கதை பலமாக உலாவுகிறது. அதனால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமல்ல, நண்பர்கள் தெரிந்தவர்கள் போன்றவர்களும் கனடாவில் இருப்பவர்களை அனுகி தமக்கு விசா பெற்றுத் தருமாறு கேட்கின்றார்கள்.

இது சம்பந்தமாக அண்மையில் அரசியல் விமர்சகர் யதீந்திரா ஒரு கட்டுரையும் எழுதியிருக்கிறார்.

கனடாவை நோக்கி மட்டுமல்ல லண்டனை நோக்கியும் ஏனைய ஐரோப்பிய நாடுகளை நோக்கியும் ஒரு புலப்பெயர்ச்சி அலை எழுந்திருக்கின்றது. தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை என்று இதனை அழைக்கலாமா? ஏனெனில் ஜூலை 83 க்கு முன்பு ஒரு புலப்பெயர்ச்சி இருந்தது. அது ஒரு அலை அல்ல.தமிழ் மக்கள் மத்தியில் இருந்து படித்தவர்கள், பணக்காரர்கள்,ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களை நோக்கிப் போனார்கள். ஒரு சிறிய தொகையினர் ஆசிரியர்களாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்குப் போனார்கள்.அதுபோலவே இன்னொரு தொகுதியினர் மேற்காசிய நாடுகளுக்குப் போனார்கள். அவ்வாறு மேற்காசிய நாடுகளுக்கு போனவர்களில் ஒரு பகுதியினர் அங்கே தங்களை நிதி ரீதியாகப் பலப்படுத்திக் கொண்ட பின் தமக்கு கிடைத்த தொடர்புகளைப் பயன்படுத்தி ஐரோப்பா, அமெரிக்க போன்ற கண்டங்களுக்குப் போனார்கள். இது முதலாம் கட்டப் புலப்பெயர்ச்சி.

இரண்டாவதாக 83 ஜூலைக்குப் பின் ஒரு புலப்பெயர்ச்சி அலை எழுந்தது. உண்மையாகவே இதைத்தான் அலை என்று வர்ணிக்கலாம். படித்தவர், படிக்காதவர், பணக்காரர், ஏழை என்ற வேறுபாடு இன்றி ஈழத் தமிழர்கள் தொகையாக குறிப்பாக சட்டவிரோத வழிகளின் ஊடாக ஐரோப்பிய அமெரிக்கக் கண்டங்களை நோக்கிப் புலம் பெயரத் தொடங்கினார்கள். இந்த புலப்பெயர்ச்சி அலையின் விளைவாக ஒரு பலமான தமிழ் புலம்பெயர்ந்த சமூகம் உலகம் முழுவதும் உருவாகியது. இது ஏறக்குறைய மொத்த தமிழ் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதி என்று உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கனடாவில் வசிக்கும் கவிஞர் சேரன் கூறுவார் அந்த எண்ணிக்கை சற்று மிகைப்படுத்தப்பட்டது என்று.நான்கு தமிழர்களின் ஒருவர் புலம்பெயர்ந்து விட்டார் என்பதுதான் திருத்தமாக இருக்கும் என்று.

எதுவாயினும், தாய் நாட்டுக்கு வெளியே ஈழத் தமிழர்கள் அதிகரித்த அளவில் வசிக்கும் ஒரு நாடாக கனடா மாறிவிட்டது. அங்கே மூன்றரை லட்சத்திலிருந்து 5 லட்சம் வரையிலுமான ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்வதாக கணிப்பிடப்படுகிறது. இந்த எண்ணிக்கை கனடாவில் வசிக்கும் சீக்கியர்களின் எண்ணிக்கைக்கு அடுத்தபடியானது என்றும் ஒர் கணிப்பீடு உண்டு.

இது இரண்டாவது புலப்பெயர்ச்சி அலை.மூன்றாவது புலப்பெயர்ச்சி அலை கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியோடுயோடு தொடங்கியது.முதலில் அது தென்னிலங்கையில்தான் தொடங்கியது. சிங்கள இளையோர் மத்தியில்தான் தொடங்கியது. அங்கெல்லாம் சிங்கள இளையோர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு முன் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகின. முதலில் சிங்கள மக்கள் மத்தியில் தோன்றிய அந்த அலை பின்னர் தமிழ் மக்களுக்கும் பரவியது. அதன் விளைவாக தமிழ் மக்கள் மத்தியிலிருந்து வயது வேறுபாடு இன்றி பெரும் தொகையினர் புலம்பெயர்வதற்கு தயாராகி வருகிறார்கள்.

இளையவர்கள் மட்டுமல்ல, வயதானவர்களும் அவ்வாறு போகலாமா என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்கள். 15 வளர்ந்த பிள்ளைகள் படிக்கும் ஒரு வகுப்பில் எத்தனை பேர் வெளிநாட்டுக்கு போகத் தயார் என்று கேட்டால் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் கையை உயர்த்தும் ஒரு நிலைமை தோன்றி விட்டது. பாடசாலைக் கல்வியை முடித்தவர்கள் மட்டுமல்ல, முடிக்காதவர்களும் வெளியேறத் துடிக்கிறார்கள். சாதாரண வேலைகளில் இருப்பவர்கள் மட்டுமல்ல,உயர் பதவிகளில் இருப்பவர்களும் புலம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சிலமாதங்களுக்கு முன் வவுனியாவில் உள்ள உப பாஸ்போர்ட் அலுவலகத்தில் டோக்கனை பெறுவதற்காக இரவிலிருந்து வரிசையில் காத்திருக்கும் ஒரு போக்கு அதிகரித்தது.அவ்வாறு வரிசையில் நின்று டோக்கனைப் பெற்றுக் கொடுப்பது அங்கு ஒரு தொழிலாக மாறிவிட்டது.ஒருவர் 5000 ரூபாய் வரை கூலியைப் பெற்றார்.

அதுமட்டுமல்ல,ஆங்கில மொழி பேசும் நாடுகளை நோக்கி புலம்பெயர முற்படுகிறவர்கள் அதற்குரிய பரீட்சைகளை எழுத வேண்டியிருக்கிறது. அதனால் இப்பொழுது தமிழ்ப் பகுதிகளில் ஐஈஎல்ரி எஸ் என்று அழைக்கப்படும் ஆங்கில மொழித் திறன் காண் பரீட்சைக்கு ஆட்களைத் தயார்படுத்தும் நிறுவனங்களின் தொகையும் ஆசிரியர்களின் தொகையும் அதிகரித்து வருகின்றன.அவ்வாறான பயிற்சிகளுக்கு பெருந்தொகைப் பணம் அறவிடப்படுகிறது. கனடாவுக்கு விசிட் விசாவில் போகலாம், லண்டனுக்கு கடைகளில் வேலை செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொண்டு போகலாம் என்று நம்பி ஆங்கிலம் படிப்பவர்களின் தொகை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக லண்டனில் சொந்தமாகத் தொழில் நடத்துபவர்கள் தமது தொழில் நிலையங்களுக்கு ஆட்கள் தேவை என்று கூறி குறிப்பிட்ட தொகையினரை லண்டனுக்கு அழைப்பதற்கான அனுமதியைப் பெறலாம் என்ற ஒரு நிலை தோன்றி விட்டது. இதனால் கல்வித் தேவைகளுக்காகவன்றி தொழிற் தேவைகளுக்காகவும் பரீட்சைகளை எழுதிவிட்டு லண்டனுக்குப் போகத் தயாராகுபவர்களின் தொகை அதிகரித்து வருகிறது.

குறிப்பிட்ட ஒரு வயதுக்காரர்களை சந்திக்கும் பொழுது பெரும்பாலானவர்கள் எந்த நாட்டுக்கு போகலாம்? எப்படிப் போகலாம்? அதற்கு என்னென்ன ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்? என்று கதைப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது என்று கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் சொன்னார். அவர் யுத்தத்தின் இறுதி கட்டம் வரையிலும் வன்னி கிழக்கில் வசித்தவர். அவர் மேலும் சொன்னார்…யுத்தத்தின் இறுதி நாட்களில் அந்த மூன்று கிராமங்களுக்குள் வசித்தவர்கள் எந்த வழியால் தப்பிச் செல்லலாம் என்று தங்களுக்கிடையே கதைத்துக் கொள்வார்கள். கடலை ஏக்கத்தோடு பார்ப்பார்கள்.ஏறக்குறைய அப்படி ஒரு நிலைமைதான் இப்பொழுது தோன்றியுள்ளதா? என்று.அவர் அப்படிக் கேட்கும் அளவுக்கு புலம்பெயர வேண்டும் என்ற தாகம் ஒரு குறிப்பிட்ட வயதினர் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதற்கு என்ன காரணம்?

பொருளாதார நெருக்கடி மட்டும் காரணமா? அல்லது கனடா போன்ற நாடுகள் தமது குடி வரவு விதிகளில் தளர்வுகளை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுவது ஒரு காரணமா? அல்லது புலம் பெயர்ந்து ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் மிகப் பலமாக தங்களை ஸ்தாபித்துக் கொண்ட தமிழர்கள், இப்பொழுது மற்றவர்களுக்கு விசா எடுத்துக் கொடுக்கும் தகைமையை அடைந்திருப்பதன் விளைவா இது?

இவ்வாறு பெருந்தொகையாக தமிழர்கள் புலம் பெயர்வார்களாக இருந்தால் ஓர் அரசியல் சமூகமாக தமிழ் மக்கள் மேலும் திரையக்கூடிய ஆபத்து உண்டு. ஏற்கனவே போர், புலப்பெயர்ச்சி போன்றவற்றால் மெலிந்து கொண்டு போகும் சனத்தொகையானது, பிள்ளைப் பேறு விகிதம் குறைந்து வருவதனால் மேலும் மெலிகிறது. தவிர புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மணமக்களை நோக்கிச் செல்லும் வம்சவிருத்தி செய்யக்கூடிய இளம் தலைமுறையின் வெளியேற்றத்தால் அது ஏற்கனவே மெலிந்து வருகிறது.இப்பொழுது மூன்றாவது புலப்பெயர்ச்சி அலையின் விளைவாக அது மேலும் மெலியக்கூடிய ஆபத்துத் தெரிகிறது.

அண்மையில் திருகோணமலையைச் சேர்ந்த ஒரு நண்பர் கூறினார்…ஒரு பாடசாலையில் பாலர் வகுப்பில் படிப்பிக்கும் ஓர் ஆசிரியை சொன்னாராம்… தனது வகுப்பில் இருந்து கடந்த வாரத்தில் மட்டும் ஆறு பிள்ளைகள் வெளிநாடு சென்று விட்டதாக. அதாவது குடும்பமாகப் புலம் பெயர்கிறார்கள் என்று பொருள். இதனால் திருகோணமலையில் வாடகைக்கு வீடுகளை எடுப்பது ஒப்பீட்டளவில் இலகுவானதாகிவிட்டது என்றும், தமிழர்கள் பெறுமதியான தங்களது வீடுகளையும் சொத்துக்களையும் விற்றுவிட்டு புலம்பெயர்ந்து வருவதாகவும் அவர் சொன்னார்.இவ்வாறு தமிழர்கள் தொடர்ச்சியாகப் புலம்பெயர்ந்தால் ஓர் அரசியல் சமூகமாக இலங்கைத் தீவில் அவர்கள் மேலும் பலவீனமடைய நேரிடும்.

சனத்தொகை என்பது ஒரு மக்கள் கூட்டத்தைத் தேசமாக வனையும் அடிப்படை அம்சங்களில் ஒன்று. ஒரு மக்கள் கூட்டத்தை ஐந்து அடிப்படை அம்சங்கள் ஒரு தேசமாகக் கூட்டிக்கட்டுகின்றன. சனம் அல்லது இனம்; நிலம் அல்லது தாயகம்; பொது மொழி,;பொதுப் பொருளாதாரப் போன்றனவே அந்த ஐந்து அம்சங்களும் ஆகும்.

திட்டமிட்ட குடியேற்றங்கள் போர் போன்றவற்றின் காரணமாக கிழக்கில் திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் நிலம் பெருமளவுக்கு பறிபோய் விட்டது. இப்பொழுது மட்டக்களப்பிலும் நிலத்தை அபகரிக்கும் வேலைகள் முழுமூச்சாக நடக்கின்றன. வடக்கிலுந் தான்.

இவ்வாறு ஏற்கனவே நிலம் சிறுத்தை கொண்டுவரும் ஒரு பின்னணியில், சனத்தொகையும் சிறுத்துக்கொண்டே போனால் என்ன நடக்கும்? தமிழ் மக்கள் ஓர் அரசியல் சமூகமாக தங்களுக்குரிய அரசியல் இலக்குகளை முன்வைத்துப் போராடும் வலிமையை இழந்து விடுவார்கள் அல்லவா? இது தொடர்பாக தமிழ்த்தேசியப் பரப்பிலுள்ள அரசியல்வாதிகள்,கட்சிகள், செயற்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் போன்றவர்கள் இப்பொழுதே குரல் கொடுக்க தொடங்க வேண்டும். இல்லையென்றால் ஆளற்ற வீடுகளின் மத்தியில் விகாரகள் கட்டப்படுவதை எதிர்ப்பதற்கு யார் இருக்கப் போகிறார்கள்?

https://athavannews.com/2023/1350993

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஊரில் என்னுடன் படித்தவர்கள் யாரும் இல்லை.. முகநூலில் கூட்டம் கூட்டமாக வகுப்பு நண்பர்கள் சந்திப்பு என்று கனடா ஈயூ அவுஸ் அமெரிக்கா எண்டு பலநாடுகளில் இருந்து படம் போடுகிறார்கள்.. ஒவ்வொரு படத்திலும் பத்து பதினைந்து பேருக்கு குறையாமல் இருக்கிறார்கள்.. ஒரு வகுப்பிலையே ஆகக்கூட 30-35 பேர்தான் ஊர் பாடசாலைகளில் அனுமதிப்பார்கள்.. ஒவ்வொரு பச்சில் இருந்தும் ஆகக்குறைந்தது அரைவாசிப்பேர் சில பச்களில் முழுப்பேரும் புலம்பெயர்ந்து விட்டார்கள்..

பொருளாதார பிரச்சினையின் பின் யுத்தகாலத்தில் இருந்ததை விட இரு மடங்கு வேகத்தில் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள் ஊரில் இருந்து.. நாட்டில் ஒருவர் விடாமல் வழித்துத் துடைத்து வெளி நாடுகளுக்குள் தஞ்சம் புகுகின்றனர்..

இனிமேல் கனடா ஈயு அவுசுக்கு போனாதான் நண்பர்களை சந்திக்க கூடிய நிலமை.. நண்பர்கள் உறவினர்கள் அவர்கள் பிள்ளைகள் கலியாணவீடு புதுவீடு துக்க நிகழ்வுகள் எண்டு எல்லாத்துக்கும் ஊரில் இருந்து பிளைட் பிடிச்சு போனாத்தான் சமூகமளிக்க முடியும் என்ற நிலைமை.. 

மிகத் தவிர்க்கமுடியாத காரணங்களால் இருப்போர் மற்றும் சொத்து பத்து காணிபூமியை விட்டு போக மனமில்லாதவர்கள் வயதான தாய்தகப்பனை பராமரிக்க இருக்கும் குடும்பத்தில் நேர்ந்துவிடப்பட்ட அந்த ஒரு பிள்ளையை தவிர ஏனைய அனைவரும் வெளி நாடுகளுக்குள் தஞ்சமடைந்துவிட்டனர்...

பள்ளியில் படிக்கும் மாணவர்களையும் இளைஞர்களையும் உங்கள் எதிர்கால திட்டம் அல்லது இலட்சியம் என்ன எண்டு கேட்டால் மாணவர்கள் ஓஎல் அல்லது ஏஎல் முடிய வெளிநாடு போவது என்பார்கள் இளைஞர்கள் ஏஜென்சிக்கு காசி கட்டிட்டன் அல்லது நல்ல ஏஜென்சி ஒருத்தன தேடிக்கொண்டிருக்கிறன் என்பதாக இருக்கும்..

அரசியலை பொறுத்தவரை அடுத்து ஓரிரு எலெக்சன்களின் பின் தமிழ்த்தேசியம் என்பது தமிழ்நாட்டில் கம்யூனிசம் போல் ஒரு சிறுபான்மை ஆட்கள் பேசும் விடயம் ஆகிவிடும்..  தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் பேசுபவர்கள் சீமான் மற்றும் தமிழ்தேசிய இயக்கங்களால் இப்பொழுதே நம்மைவிட பலமடங்கு அதிகமாகிவிட்டார்கள்..

ஈழத்தில் தீவிர தமிழ் தேசியமென்று இன்னமும் அரசியல் செய்வோரை பார்க்க பாவமாகவும் சிலசமயம் சிரிப்பாகவும் இருக்கிறது... என்னைப் பொறுத்தவரை 2009 களின் பின்னர் ஒரு ஜந்து தொடக்கம் பத்துவருடங்களுக்கு உள்ளேயே ஈழத்தில் அது காலாவதியான அரசியல் ஆகிவிட்டது..

இவர்கள் கைவிடாவிட்டாலும் கூட அடுத்த ஐந்து பத்து வருடங்களில் அது தன்னால் காலாவதியாகிவிடும்... அதன் பின் ஒரு ஐம்பது நூறு பேர் தொடர்ந்து தமிழ் தேசியம் பேசிக்கொண்டும் இயங்கிக்கொண்டும் இருக்கலாம்... இப்போதைய இடதுசாரிகள் போல..

வேண்டுமானால் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்தேசியவாதிகள் அடுத்த தலைமுறைக்கு வரலாறையும் மொழியையும் கடத்தும் வகையில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருக்கும் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து உலகளாவிய புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான தமிழ் தேசிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்கலாம்... எதிர்கால தமிழ் தேசிய அரசியல் என்பது அந்தந்த நாடுகளில் கலாசாரத்துடனும் மொழியுடனும் இணைந்து எமது புலம்பெயர்ந்த தலைமுறைக்கு எமது மொழியையும் வரலாற்றையும் கடத்துவதாக ஊரில் உள்ள தமிழ்மக்களுக்கு பொருளாதார மேம்பாட்டுக்கு உதவி ஊரில் புதிய தொழில்களை உருவாக்க ஊக்குவித்து அங்கு வாழும் மக்களை புலம்பெயர ஊக்குவிக்காமல் அங்கேயே தன்னிறைவுடன் வாழும் வகையில் ஈழத்தமிழர்களின் எண்ணிக்கையை ஊரில் அதிகரிக்கும் வலையில் அமையவேண்டும்... 

தற்போதைய நிலமையில் ஊரில் இருக்கும் உண்மையான தமிழ் தேசிய வாதிகள் என்றால் தங்கள் அண்ணன் தம்பி சகோதரங்களை இயன்றவரை ஊரில் தொழில் செய்ய ஊக்குவித்து வெளிநாட்டுக்கு அனுப்பாமல் தவிர்க்கலாம் வெளிநாட்டில் இருக்கும் தமிழ்தேசிய வாதிகள் என்றால் முடிந்தால் ஊரில் வந்து செட்டில் ஆகுங்கள் இல்லை என்றால் நீங்கள்தான் ஊருக்கு வரமாட்டீர்கள் ஆகக்குறைந்தது உங்கள் உறவுகளை வெளிநாட்டுக்கு எடுக்காமலாவது இருங்கள்.. அந்த காசை அவர்கள் சொந்த தொழில் தொடங்க அல்லது சொத்துக்களில் முதலிட உதுவுங்கள்.. அதுதான் நாம் பேசும் தமிழ்தேசிய அரசியலுக்கு தற்போதைய நிலைமையில் செய்யக்கூடிய ஆகக்கூடிய விசுவாசமான செயல்..

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

சொல்ல சொல்ல கேளாமல் அலைக்கு எதிர் திசையில் தான் வள்ளத்தை விட்டதும் மட்டும் இல்லாமல், எங்களையும் எல்லே வரட்டாம் சிங்கன்🤣.

தம்பி, நாங்கள் தமிழ் தேசியத்கை காக்க சுய நலனை துறக்கிற ஆட்கள் எண்டா இப்போ எங்கோ ஒரு இனம் தெரியாத பற்றையாக உள்ள துயிலும் இல்லத்தில் தூங்கி கொண்டிருப்போம்.

நீங்களும்தான் - எல்லாம் முடிந்து தூசும் அடங்கின பின் தானே திரும்பி போனியள்.

வெளிநாட்டில் வந்து உழைத்த காசு உள்ளோர், வெளிநாட்டில் இன்னும் சொத்து இருப்போர் ஊர் திரும்பி, கார் டிரெவர், சமையல்காரி, தோட்டக்காரன் எண்டு வாழலாம் (எங்கேயோ கேட்ட குரல்🤣).

ஆனால் தாம் நன்றாக உழைத்து அதை கொண்டு ஊர் திரும்பியோர் அங்க வாழ வழியில்லாமல் நாட்டை விட்டு ஓட நினைப்பவனுக்கு அட்வைஸ் பண்ணவோ, நக்கல் அடிக்கவோ தகுதி அற்றவர்கள்.

நீங்கள் 25 வருடம் முன் ஓடி வந்து உழைத்ததை போலதான் அவனும் முன்னேற முயல்கிறான்.

பிகு

ஒரு மனிதனுக்கு நண்பர்கள், உறவு வலையமைப்பு முக்கியம்.

என்னை பொறுத்தவரை கொழும்பில் ஒரு வயசாளி, அம்மாவின் ஒன்று விட்ட சகோதரி - இவர் மட்டுமே நாட்டில் உறவினர். ஊருக்கு போனால் அது கூட இல்லை. எனது அயலில் சுற்று வட்டத்தில் இருந்த 30 வீட்டில், 27 வீட்டில் அப்போ இருந்தவர்கள் இல்லை. புதிய முகம்கள். எல்லாரும் வெளிநாட்டில்.

நான் அறிய இதுதான் பலரின் ஊருக்கு கொலிடே போன அனுபவம்.

எல்லாரும் ஊரை விட்டு போனபின், இருப்போரும் ஓடி கொண்டு இருக்கும் நிலையில் நாம் ஊரில் போய் இருந்து, யாரும் இல்லையே என அங்கலாய்ப்பதில் பொருள் இல்லை.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, goshan_che said:

இக்கட்டுரைக்கு அக்கரை பச்சை தான். ஆனால் யாருக்கு யார் சொல்வது??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களோ தெரியவில்லை 

நாம் வெளியேறிய நேரம் பணம் + உயிர் உத்தரவாதமும் முக்கிய காரணம் 

இப்போ ஓரளவு உயிர் உத்தரவாத பிரச்சனை இல்லை என்று சொல்லலாம் 
தவிர பணம் பொருளாதார சிக்கல் இருக்கிறதுதான் 

அதே நேரம் நிறைய சந்தர்ப்பங்களும் குவிந்து கிடக்கிறது யாரும் பயன்படுத்துகிறார்கள் இல்லை 
பணத்தை எப்படி கையாள்வது எனும் அறிவு மிகவும் குறைவு 

படித்தவர்கள் ஐடி துறையில் அங்கிருந்தே இங்கு உள்ள வருமானத்தில் வேலை பார்க்கலாம் 
நோ மோர்ட்கேஜ்  நோ மெடிக்கல் எவ்வளவு வசதி? 

ஆனால் மைண்ட் செட் வெளிநாடு என்றே செட்டாகி போனதால் அங்கிருக்கும் வளங்கள் மண்ணாகி போகிறது இனி ஓரளவுக்கு உலகில் எங்கு இருந்தாலும் ஒன்றுதான் மதம் $3000 - 4000 வருமானத்தை உருவாக்கி கொண்டால் எங்கு செலவு குறைவோ ஆரோக்கியமான உணவு கிடைக்கிறதோ  இயற்கையான சூழல் இருக்கிறதோ அங்கு நகர்வதே புத்திசாலித்தனம் என்றே நான் நம்புகிறேன். 

நான் துபாய் அல்லது இலங்கை நோக்கி மெல்ல மெல்ல நகர்ந்துகொண்டு இருக்கிறேன் 
முக்கிய காரணம் வரி வரி என்று இங்கு எம்மை உயிருடன் தின்கிறார்கள். அரசாங்க ஊழியர்கள் மெத்தன போக்கு  ஒத்து வருவதில்லை என்பதால் இலங்கை செல்ல அதிக இஷடம் இல்லை ஆனால் நிறைய வசதி வாய்ப்பு  அங்குதான் இருக்கிறது 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Maruthankerny said:

இந்த digital nomads வாழ்க்கை முறை எல்லாருக்கும் சரிவராது மருதர்.

 எல்லாரும் நாவல் எழுதுபவர்களோ, கம்யூட்டர் துறையிலோ, முதலீட்டாளர்களோ இல்லைத்தானே. ஒரு வைத்தியரோ, பீல்ட் எஞ்சினியரோ இப்படி செய்ய முடியாது.

இப்படி வாழ்வோர் ஒன்றில் சில வருடங்கள் போக மீண்டும் தத்தம் நாடு வந்து mortgage சுற்றில் இணைகிறார்கள், அல்லது ஏலவே அதில் இருந்து கொண்டு - எப்போதும் தேவைபட்டால் நாடு திரும்ப தயாராக உள்ளார்கள்.

அதுபோக பிள்ளைகளின் படிப்பு என்ற விடயம் இருக்கிறது. கொழும்பின் முண்ணனி பாடசாலையில் படித்த 3 நண்பர்களின் குடும்பம் கடந்த இரெண்டு வருடத்தில் லண்டனில் வந்து சேர்ந்துள்ளார்கள்.  கொழும்பில் வாழ்ந்த வாழ்க்கையிலும் 30% வாழ்க்கை தர இழப்போடு. ஒரே காரணம் - பிள்ளைகளின் எதிர்காலம்.

அப்புறம் மருத்துவம், பெற்றோல், ஒரு வயதுக்கு மேல் இவை மிக அத்தியாவசியம். காசை மருந்தென கரைச்சு குடிக்க முடியாது. இவனுகள் செய்யும் கூத்தில் நாம் “செத்து செத்து” விளையாட முடியாது.

சொன்னால் நம்பமாட்டீர்கள் 2019 இல் ஊருக்கு தனியே போய் வீட்டில் தங்கி இருந்தேன். யாழ்பாணத்தை ஒரு ரவுண்ட் வந்தாகிவிட்டது, எல்லா இடமும் பார்த்தாகி விட்டது, எல்லா கடையிலும் சாப்பிட்டாகி விட்டது…3ம் கிழமையில் இருந்து முகட்டை பார்த்து கொண்டு இருந்தேன். பின்னர் வேறு வழியில்லாமல் கொழுபுக்கு கிளம்பிபோய் அங்கே கொஞ்சம் ஜாலியாக பொழுது போனது.

20,30,40 வருட புலம்பெயர் வாழ்க்கை எம்மை நாமறியாமலே ரொம்பவே மாற்றியுள்ளது. 

3 கிழமை போகத்தான் ஒரு நல்ல சீஷ் கெபாப் சாப்பிட வேணும் என தோன்றும். அல்லது ஒரு கோஸ்டா கோப்பி கொஞ்சமாக சொக்கலேட் தூவி குடித்தால் என்ன என மனம் நினைக்கும்.

அடுத்து…யாழ்பாணம் செம போர்…ஒரே எண்டர்டெயின்மென்ட் ஒன்றில் சினிமா போவது அல்லது மூக்கு முட்ட குடித்துப்போட்டு கவிழ்வது.

ஒரு hiking, camping போவது என்றால் கூட…அப்படி ஒரு அமைப்பே இல்லை…இருந்தாலும்…யாரோடு கூடப்போவது? கதிர்காம யாத்திரை கோஸ்டியோடு சேர்ந்தால்தான் உண்டு.

இந்த வகையில் கொழும்பு, சென்னை எவ்வளவோ திறம்.

பிகு

ஓணாஅண்டி சொன்னது போல விரைவில் ஊரில் தமிழ் தேசியம் கம்யூனிசம் மாதிரி ஒரு செத்த கொள்கையாகிவிடும் என்பதை நானும் ஏற்கிறேன்.

அது எல்லாரும் ஊரில் இருந்தாலும் நடக்கத்தான் போகிறது.

ஊரில் எமக்கு இருப்பது nostalgia, holiday romance போன்ற ஒரு விடயம்.

எனக்கு லண்டனில் இருந்தால் ஊர் விடாய்க்கும். ஊரில் 3 கிழமை தாண்ட லண்டன் விடாய்க்கும்.

இதுதான் மனித மனம்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இன்றல்ல, அன்றும் கூட, யாழ்ப்பாணம் ஒரு money order economy தான். கல்வி தான் ஒரே மூலதனம் அதனை வைத்து, வெளியே வேலை. பணத்தினை ஊருக்கு அனுப்புதல். பிரிட்டிஷ் காலத்தில் மலேசியா, சிங்கப்பூர் கிளம்பிப்போனார்கள். (இன்று கல்வியை விடுத்தும் உடல் உழைப்பினை நம்பியும் பலர் கிளம்புகின்றனர்.)

சிலர் தங்க, பலர் திரும்பினர். காரணம் இரண்டாம் உலக யுத்தத்துக்கு பின்னான யுத்தமில்லா அமைதியான சூழ்நிலை.

ஓரளவு பொருளாதாரம் சேர்த்தவர்கள் ஊர் திரும்பி சில வேலைகள் செய்வதை பார்க்கிறோம். லைக்கா, லேபரா, ஊரில் சில வேலைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ செய்கிறார்கள். 

ஐபிசி யின் கந்தையா பாஸ்கரன், மாஜிக் கிச்சினின் இந்திரன் பத்மநாதன் பல சமூக வேலைகளை செய்கிறார்கள்.

இவர்கள் திரும்பியதுக்கு காரணம் ஓரளவுக்கு யுத்தம் இல்லாத சூழ்நிலை.  ஆக, திரைகடல் ஓடி, திரவியம் தேடிய பலர் திரும்புவார்கள். 

ஓரளவுக்கு ஒப்பீடு செய்யக்கூடியது, இஸ்ரேல். 2000 ஆண்டுகளுக்கு முன்னர், ஒட்டு மொத்தமாக துரத்தி அடிக்கப்பட்ட பின்னும், பொருளாதார பலத்துடன் நாடு திரும்பியவர்களின் கதையே இஸ்ரேல். இது போலவே எமது மக்களும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் திரும்புவார்கள்.

இப்போது முயல்பவர்கள், களவாக, கப்பல்களில் போகலாம் என்று எடுபடவில்லை. அது நின்று விட்டது அல்லது, மிக, மிக குறைவு. இவர்கள், விசா எடுத்து போகலாமா என்று தான் முனைகிறார்கள். அது ஒரு நல்ல விடயமாகவே படுகிறது.

இந்தியாவில் இருந்து, கனடா, பிரிட்டன் என்று வந்தவர்களில் பலர், சரியான வேலை கிடைக்கவில்லை என்று திரும்புகின்றனர். கனடா கதவை திறந்தது, low level வேலைக்கு. அடித்துப்பிடித்துக் கொண்டு வந்த பலர், தமது கல்விக்கு உரிய வேலை இல்லை என்றவுடன், ஏமாந்து திரும்புகின்றனர்.

வெளிநாட்டுக்கு போவதால், பிரயோசனம் இல்லை என்று சீக்கிரமே புரியும், புரியும் போது, கிளம்புவது குறையும். வந்தவர்கள், தமது அனுபவத்தினை, வரப்போவர்களுக்கு சொல்லும் போது தெளிவு பிறக்கும்.

Edited by Nathamuni
Posted
2 hours ago, Nathamuni said:

ன்று வந்தவர்களில் பலர், சரியான வேலை கிடைக்கவில்லை என்று திரும்புகின்றனர். கனடா கதவை திறந்தது, low level வேலைக்கு. அடித்துப்பிடித்துக் கொண்டு வந்த பலர், தமது கல்விக்கு உரிய வேலை இல்லை என்றவுடன், ஏமாந்து திரும்புகின்றனர்.

வெளிநாட்டுக்கு போவதால், பிரயோசனம் இல்லை என்று சீக்கிரமே புரியும், புரியும் போது, கிளம்புவது குறையும். வந்தவர்கள், தமது அனுபவத்தினை, வரப்போவர்களுக்கு சொல்லும் போது தெளிவு பிறக்கும்.

இங்கு வந்து கோப்பி கடை, பீசாக் கடை போன்ற மிகச் சாதாரணக் கடைகளிலும், இலகுவான தொழில் துறைகளிலும் வேலை எடுத்த பலர் Work Permit  கிடைக்காமல் திரும்பி போகின்றனர்.  LMIA (Labour Market Impact Assessment (LMIA)) இற்கு தகுதி பெறுவது என்பது இலகுவான விடயம் அல்ல. இங்குள்ள நிரந்தர வசிப்பிட அனுமதி உள்ளவர்களாலும், கனடிய பிரஜைகளாலும் நிரப்ப முடியாத ஒரு வேலை வாய்ப்பை, இங்கு புதிதாக வந்தவர் மூலம் நிரப்புகின்றோம் என்பதை தொழில் வழங்குநர் நிரூபிக்க வேண்டும். இது இலகுவான விடயம் அல்ல. மென்பொருள் துறையில் வேலைய பெற்றவர்களல் கூட இதை இங்கு பெறுவது கடினம். ஆனால், சில Trade skills உடன் வருகின்றவர்களால் முடியும்.

இரண்டு வருட student visa வில் வந்து, சும்மாச்சும் ஒரு படிப்பை படித்து விட்டு (Criminology), அதற்கு ஏற்ப வேலை கிடைக்காமல், பீசாக் கடையில் வேலை செய்த ஒரு பெண்மணியை அண்மையில் சந்தித்தேன். அவரால், அவர் படித்த துறையையும், வேலையையும் சரியான காரணங்களாக காட்டி Work permit இனை நீடிக்க முடியவில்லை. அத்துடன் PR இற்கு விண்ணபித்தும், அது சரிவரவில்லை. அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

இந்த digital nomads வாழ்க்கை முறை எல்லாருக்கும் சரிவராது மருதர்.

 எல்லாரும் நாவல் எழுதுபவர்களோ, கம்யூட்டர் துறையிலோ, முதலீட்டாளர்களோ இல்லைத்தானே. ஒரு வைத்தியரோ, பீல்ட் எஞ்சினியரோ இப்படி செய்ய முடியாது.

இப்படி வாழ்வோர் ஒன்றில் சில வருடங்கள் போக மீண்டும் தத்தம் நாடு வந்து mortgage சுற்றில் இணைகிறார்கள், அல்லது ஏலவே அதில் இருந்து கொண்டு - எப்போதும் தேவைபட்டால் நாடு திரும்ப தயாராக உள்ளார்கள்.

அதுபோக பிள்ளைகளின் படிப்பு என்ற விடயம் இருக்கிறது. கொழும்பின் முண்ணனி பாடசாலையில் படித்த 3 நண்பர்களின் குடும்பம் கடந்த இரெண்டு வருடத்தில் லண்டனில் வந்து சேர்ந்துள்ளார்கள்.  கொழும்பில் வாழ்ந்த வாழ்க்கையிலும் 30% வாழ்க்கை தர இழப்போடு. ஒரே காரணம் - பிள்ளைகளின் எதிர்காலம்.

அப்புறம் மருத்துவம், பெற்றோல், ஒரு வயதுக்கு மேல் இவை மிக அத்தியாவசியம். காசை மருந்தென கரைச்சு குடிக்க முடியாது. இவனுகள் செய்யும் கூத்தில் நாம் “செத்து செத்து” விளையாட முடியாது.

சொன்னால் நம்பமாட்டீர்கள் 2019 இல் ஊருக்கு தனியே போய் வீட்டில் தங்கி இருந்தேன். யாழ்பாணத்தை ஒரு ரவுண்ட் வந்தாகிவிட்டது, எல்லா இடமும் பார்த்தாகி விட்டது, எல்லா கடையிலும் சாப்பிட்டாகி விட்டது…3ம் கிழமையில் இருந்து முகட்டை பார்த்து கொண்டு இருந்தேன். பின்னர் வேறு வழியில்லாமல் கொழுபுக்கு கிளம்பிபோய் அங்கே கொஞ்சம் ஜாலியாக பொழுது போனது.

20,30,40 வருட புலம்பெயர் வாழ்க்கை எம்மை நாமறியாமலே ரொம்பவே மாற்றியுள்ளது. 

3 கிழமை போகத்தான் ஒரு நல்ல சீஷ் கெபாப் சாப்பிட வேணும் என தோன்றும். அல்லது ஒரு கோஸ்டா கோப்பி கொஞ்சமாக சொக்கலேட் தூவி குடித்தால் என்ன என மனம் நினைக்கும்.

அடுத்து…யாழ்பாணம் செம போர்…ஒரே எண்டர்டெயின்மென்ட் ஒன்றில் சினிமா போவது அல்லது மூக்கு முட்ட குடித்துப்போட்டு கவிழ்வது.

ஒரு hiking, camping போவது என்றால் கூட…அப்படி ஒரு அமைப்பே இல்லை…இருந்தாலும்…யாரோடு கூடப்போவது? கதிர்காம யாத்திரை கோஸ்டியோடு சேர்ந்தால்தான் உண்டு.

இந்த வகையில் கொழும்பு, சென்னை எவ்வளவோ திறம்.

பிகு

ஓணாஅண்டி சொன்னது போல விரைவில் ஊரில் தமிழ் தேசியம் கம்யூனிசம் மாதிரி ஒரு செத்த கொள்கையாகிவிடும் என்பதை நானும் ஏற்கிறேன்.

அது எல்லாரும் ஊரில் இருந்தாலும் நடக்கத்தான் போகிறது.

ஊரில் எமக்கு இருப்பது nostalgia, holiday romance போன்ற ஒரு விடயம்.

எனக்கு லண்டனில் இருந்தால் ஊர் விடாய்க்கும். ஊரில் 3 கிழமை தாண்ட லண்டன் விடாய்க்கும்.

இதுதான் மனித மனம்.

எனக்கு எங்கேயிருந்தாலும் அமெரிக்கா தான் விடாய்க்கும்!

இதைப் பவிசு, சொகுசு என்று பலர் நினைக்கக் கூடும், ஆனால் உண்மைக் காரணம் இருக்கும் சுதந்திரமும் சட்ட ஆட்சியும். ஏற்கனவே எழுதிய விதிகள், சட்டங்கள் - இவற்றைப் பெரும்பாலும் மதிக்கும் மக்கள், அப்படி மதிக்கா விட்டால் பார்த்துப் பாராமல் தண்டிக்கும் சிஸ்ரம்.

பலர்  "இங்கே மிகவும் பிசி வாழ்க்கை, நேரமில்லை, ஓய்வில்லை" என்று குறைப்படுவதைக் கேட்டிருக்கிறேன். இப்படிக் குறைப்படும் பலர் ஓய்வாக இருக்கும் போது செய்வதோ கவுச்சில் இருந்து வட்சப்பை நோண்டுவது தான் என்பதை அறியும் போது, இது மேற்கு நாடுகளின் வாழ் நிலையின் தவறல்ல என்பது புரிகிறது😅!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, நிழலி said:

இங்கு வந்து கோப்பி கடை, பீசாக் கடை போன்ற மிகச் சாதாரணக் கடைகளிலும், இலகுவான தொழில் துறைகளிலும் வேலை எடுத்த பலர் Work Permit  கிடைக்காமல் திரும்பி போகின்றனர்.  LMIA (Labour Market Impact Assessment (LMIA)) இற்கு தகுதி பெறுவது என்பது இலகுவான விடயம் அல்ல. இங்குள்ள நிரந்தர வசிப்பிட அனுமதி உள்ளவர்களாலும், கனடிய பிரஜைகளாலும் நிரப்ப முடியாத ஒரு வேலை வாய்ப்பை, இங்கு புதிதாக வந்தவர் மூலம் நிரப்புகின்றோம் என்பதை தொழில் வழங்குநர் நிரூபிக்க வேண்டும். இது இலகுவான விடயம் அல்ல. மென்பொருள் துறையில் வேலைய பெற்றவர்களல் கூட இதை இங்கு பெறுவது கடினம். ஆனால், சில Trade skills உடன் வருகின்றவர்களால் முடியும்.

இரண்டு வருட student visa வில் வந்து, சும்மாச்சும் ஒரு படிப்பை படித்து விட்டு (Criminology), அதற்கு ஏற்ப வேலை கிடைக்காமல், பீசாக் கடையில் வேலை செய்த ஒரு பெண்மணியை அண்மையில் சந்தித்தேன். அவரால், அவர் படித்த துறையையும், வேலையையும் சரியான காரணங்களாக காட்டி Work permit இனை நீடிக்க முடியவில்லை. அத்துடன் PR இற்கு விண்ணபித்தும், அது சரிவரவில்லை. அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றார்.

இந்தியர்களில் இருவிதம்.

ஒருவகையினர், TCS, Wipro, Infosys போன்ற கம்பெனிகளினூடாக வருவார்கள். அவர்கள் ஒருபகுதி நல்ல ஆங்கிலம் பேசுவர், ஆனால் தடிப்பு கூட. அடுத்த பகுதி, மாஞ்சு, மாஞ்சு வேலை செய்வர், ஆனால் ஆங்கில அறிவு குறைவு. இந்த வகையினர், கம்பனி காண்ட்ராக்ட் என்பதால் பிரச்சனை இல்லாமல் தப்பி வேலை செய்து திரும்புவர். கம்பெனி சம்பளம் குறைவு.

அடுத்த வகை, நேராக work விசா போட்டு வருபவர்கள். அவர்கள், வெள்ளை முகாமைக்கு வேலை செய்யும் போது, கலாச்சார, மொழி சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். தாக்குப்பிடிக்க முடியாமல், ஒரு understanding கில் போய் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் spouses தமிழர் ஆயின், தமிழர் கடைகளிலும், ரெஸ்டூரண்ட்களிலும் இப்போது வேலை செய்கின்றனர். இந்த வேலைகளை அங்கே செய்யமாட்டார்கள். மாணவர்களாக வந்தால் பரவாயில்லை. இவர்கள் இங்கே குடியமரலாம் என்று வந்தவர்கள். ஒரு வித சந்தோசம் இல்லாமல், விரக்தியாக காணப்படுவார்கள்.

கனடாவில் உள்ள நண்பர் ஒருவரை கேட்டேன்: இவர்கள் டிம் ஹார்டன் போன்ற இடங்களில் தமிழர் வேலைகளை எடுத்துக் கொள்கிறார்களா என்று. அவர் சொன்னார், எடுத்தார்கள், ஆனால் அவர்கள் அந்த வேலைக்கு தம்மை தயாராக்கி வரவில்லை. ஆகவே வேண்டாவெறுப்பாக செய்கின்றனர். தமிழர்களின் வேகம் அவர்களிடம் இல்லை என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, நிழலி said:

இங்கு வந்து கோப்பி கடை, பீசாக் கடை போன்ற மிகச் சாதாரணக் கடைகளிலும், இலகுவான தொழில் துறைகளிலும் வேலை எடுத்த பலர் Work Permit  கிடைக்காமல் திரும்பி போகின்றனர்.  LMIA (Labour Market Impact Assessment (LMIA)) இற்கு தகுதி பெறுவது என்பது இலகுவான விடயம் அல்ல. இங்குள்ள நிரந்தர வசிப்பிட அனுமதி உள்ளவர்களாலும், கனடிய பிரஜைகளாலும் நிரப்ப முடியாத ஒரு வேலை வாய்ப்பை, இங்கு புதிதாக வந்தவர் மூலம் நிரப்புகின்றோம் என்பதை தொழில் வழங்குநர் நிரூபிக்க வேண்டும். இது இலகுவான விடயம் அல்ல. மென்பொருள் துறையில் வேலைய பெற்றவர்களல் கூட இதை இங்கு பெறுவது கடினம். ஆனால், சில Trade skills உடன் வருகின்றவர்களால் முடியும்.

இரண்டு வருட student visa வில் வந்து, சும்மாச்சும் ஒரு படிப்பை படித்து விட்டு (Criminology), அதற்கு ஏற்ப வேலை கிடைக்காமல், பீசாக் கடையில் வேலை செய்த ஒரு பெண்மணியை அண்மையில் சந்தித்தேன். அவரால், அவர் படித்த துறையையும், வேலையையும் சரியான காரணங்களாக காட்டி Work permit இனை நீடிக்க முடியவில்லை. அத்துடன் PR இற்கு விண்ணபித்தும், அது சரிவரவில்லை. அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்றார்.

உண்மையில் திரும்பி போவபர்கள் இந்த காரணத்தால்தால் திரும்புகிறார்கள். 

தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என திரும்பி போகவில்லை. எந்த வேலையையும் செய்து கொண்டு ஒரு ஐந்து வருடத்தை லீகலாக கடத்தி விட்டால் செட்டில் பண்ணி விடலாம் என்றே பலர் நினைக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் வரும் (ஸ்டூடன் வீசா போன்ற) வீசாக்களில் ஒரு வருடம், இரெண்டு வருடம் தாண்ட முடியவில்லை - இந்த நிலையில்…

தொடர்ந்து லீகலாக இருப்பதா, அல்லது இல்லீகலாக இருப்பதா எனும் இக்கட்டு போது…வேறு வழியின்றி திரும்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வெளிநாடு வரும் போது ஒரு 5 year plan உடன் வரவேண்டும்.

5 வருடம் எப்படி லீகலாக இருப்பது என்பதை ஒரு road map போல போட்டு வருபவர்கள் வெல்கிறார்கள்.

அதேபோல் இந்த 5 வருட வரவு செலவு எப்படி என்பதையும் திட்டமிட வேண்டும்.

எப்படியோ முதலில் நாட்டுக்குள் நுழைவோம் - பிறகு வெட்டி ஆடுவோம் என குறுகியகால திட்டமிடலுடன் வருவோரே திண்டாடுகிறனர்.

இப்படி வருவது இளையோர், தனி ஆட்களுக்கு ஓகே - ஆனால் பிள்ளை குட்டியோடு வந்து சீரழிய முடியாது. ஆகவே பிச்சை வேண்டாம் நாயை பிடி என திரும்புகிறனர்.

இப்படி வருவோரில் பலர் இலங்கையில் வேலையை கூட ரிசைன் பண்ணுவதில்லை. Long leave இல்தான் வருகிறனர். 

இரெண்டு தோணியில் கால் வைத்த நிலைதான்.

ஆனால் வரும்போதே வைத்தியர், நர்ஸ், இப்போ புதிதாக கடை வேலைக்காரர் என வருபவர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை.

என் வைத்திய நண்பர் வந்து… செட்டிலாகி…இப்போ ஊரில் இருந்த காணியை வித்து இங்கே இரெண்டாவது buy to let வீடு வாங்குகிறார்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

எனக்கு எங்கேயிருந்தாலும் அமெரிக்கா தான் விடாய்க்கும்!

இதைப் பவிசு, சொகுசு என்று பலர் நினைக்கக் கூடும், ஆனால் உண்மைக் காரணம் இருக்கும் சுதந்திரமும் சட்ட ஆட்சியும். ஏற்கனவே எழுதிய விதிகள், சட்டங்கள் - இவற்றைப் பெரும்பாலும் மதிக்கும் மக்கள், அப்படி மதிக்கா விட்டால் பார்த்துப் பாராமல் தண்டிக்கும் சிஸ்ரம்.

பலர்  "இங்கே மிகவும் பிசி வாழ்க்கை, நேரமில்லை, ஓய்வில்லை" என்று குறைப்படுவதைக் கேட்டிருக்கிறேன். இப்படிக் குறைப்படும் பலர் ஓய்வாக இருக்கும் போது செய்வதோ கவுச்சில் இருந்து வட்சப்பை நோண்டுவது தான் என்பதை அறியும் போது, இது மேற்கு நாடுகளின் வாழ் நிலையின் தவறல்ல என்பது புரிகிறது😅!  

எனக்கும் அதே நிலைதான்.

இந்த தனிமனித சுதந்திரம் இல்லாத நாட்டில் என்னால் இருக்க முடியாது என முன்பு எழுதப்போய் - ரதி அக்காவிடமும் @பாலபத்ர ஓணாண்டியிடம்மும் வாங்கி கட்டி கொண்டேன்🤣.

ஆனால் இதுதான் உண்மை.

நான் இப்போது பிக்குவோ, பாதிரியோ, பிரைமினிஸ்டரோ யார் வந்தாலும் பேரூந்தில் எழுப்பி இடம்கொடுக்க தேவையில்லாத நாட்டில் இருக்கிறேன். இந்த சுதந்திரத்தை ஒவ்வொரு நாளும் பொக்கிசம் என உணர்கிறேன்.

என்னால் இனி பிக்குவுக்கு எழும்பி இடம் கொடுக்கும் நாட்டில் போய் நிரந்தரமாக வாழ முடியாது.

கொலிடே போய் அட்ஜஸ்ட் பண்ணலாம். அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, goshan_che said:

வெளிநாடு வரும் போது ஒரு 5 year plan உடன் வரவேண்டும்.

5 வருடம் எப்படி லீகலாக இருப்பது என்பதை ஒரு road map போல போட்டு வருபவர்கள் வெல்கிறார்கள்.

அதேபோல் இந்த 5 வருட வரவு செலவு எப்படி என்பதையும் திட்டமிட வேண்டும்.

எப்படியோ முதலில் நாட்டுக்குள் நுழைவோம் - பிறகு வெட்டி ஆடுவோம் என குறுகியகால திட்டமிடலுடன் வருவோரே திண்டாடுகிறனர்.

இப்படி வருவது இளையோர், தனி ஆட்களுக்கு ஓகே - ஆனால் பிள்ளை குட்டியோடு வந்து சீரழிய முடியாது. ஆகவே பிச்சை வேண்டாம் நாயை பிடி என திரும்புகிறனர்.

இப்படி வருவோரில் பலர் இலங்கையில் வேலையை கூட ரிசைன் பண்ணுவதில்லை. Long leave இல்தான் வருகிறனர். 

இரெண்டு தோணியில் கால் வைத்த நிலைதான்.

ஆனால் வரும்போதே வைத்தியர், நர்ஸ், இப்போ புதிதாக கடை வேலைக்காரர் என வருபவர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை.

என் வைத்திய நண்பர் வந்து… செட்டிலாகி…இப்போ ஊரில் இருந்த காணியை வித்து இங்கே இரெண்டாவது buy to let வீடு வாங்குகிறார்.

என்னுடைய உறவு ஒருவர் மாணவர் விசாவில் லண்டன் வந்து 5 ஆண்டுகள் உறவுக்காறரின் கடையில் முழுநேரமும் வேலை செய்து ஊரில் வீடும் கட்டி, திரும்ப வந்து மீள அரசு வேலையிலும் சேர்ந்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனது ஒன்று விட்ட தம்பி பொருளாதாரம் சம்மந்தப்பட்ட வேளையில் இருக்கிறார் ...எல்லோரும் நாட்டை விட்டு போனால் ஊரில் மிச்சம் இருப்பவர்கள் ஒரு காலத்தில் மிக பெரிய பணக்காரர்கள் ஆவார்கள் என்று  சொன்னார் 
நான் அவதானித்த வரையிலும் ஒரு சிலரை தவிர பலர் வெளிநாட்டு மோகத்தில் தான் வருகிறார்கள் ...அவன் போறான் ஆகவே நானும் போக வேண்டும் என்று வெளிக்கிடுபவர்கள் அதிகம்  ....ஊரில் சண்டை நடக்கும் போது  இவ்வளவு பேர் நாட்டை விட்டு போனதில்லை ...ஏன் அங்கு இருக்கும் பிள்ளைகளுக்கு எதிர்காலம் இல்லையா?...தற்போது இணையத்திலேயே எல்லாவற்ரையும் கற்கலாம்
முஸ்லீம்கள் இருக்கிறார்கள் தானே!...ஒரு காலத்தில் வட,கிழக்கு முழுவதும் இவர்களாய் தான் இருப்பார்கள் ...தமிழர்கள் நாடு இல்லாமல் அலைய வேண்டியது தான்  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, ஏராளன் said:

என்னுடைய உறவு ஒருவர் மாணவர் விசாவில் லண்டன் வந்து 5 ஆண்டுகள் உறவுக்காறரின் கடையில் முழுநேரமும் வேலை செய்து ஊரில் வீடும் கட்டி, திரும்ப வந்து மீள அரசு வேலையிலும் சேர்ந்துவிட்டார்.

இவரும் 5 வருட திட்டமிடலுடந்தான் வந்துள்ளார். ஆனால் திட்டம் வேறுவிதமானது.

எல்லாராலும் வெளிநாட்டில் காலம் தள்ள முடியாது. குறிப்பாக 25 வயது தாண்டி ஊரில் ஒரு நிலையான தொழிலில், பதவியில் இருந்த பின் இங்கே வந்து சூரியின் பரோட்டா கணக்கு போல் ஆரம்பத்தில் இருந்து தொடங்கு என்றால் கஸ்டம்தானே?

இலண்டன் என வந்து ஒரு விண்டரோடு ஓடியவர்களையும் எனக்கு தெரியும்🤣.

எனது தந்தையார் 60 களில் மேற்கு நாட்டுக்கு வந்து 3 வருடம் இருந்து விட்டு நாடு திரும்பியவர். கடைசிவரை நிரந்தரமாக நாட்டை விட்டு வெளியேறவில்லை.

அவர் எனக்கு சொன்னது

”உழுகிற மாடு உள்ளூரிலேயே உழும்”.

ஆனால் இந்த மாட்டுக்கு வெளி நாட்டில் உழத்தான் பிடித்தது 🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
39 minutes ago, ஏராளன் said:

என்னுடைய உறவு ஒருவர் மாணவர் விசாவில் லண்டன் வந்து 5 ஆண்டுகள் உறவுக்காறரின் கடையில் முழுநேரமும் வேலை செய்து ஊரில் வீடும் கட்டி, திரும்ப வந்து மீள அரசு வேலையிலும் சேர்ந்துவிட்டார்.

இன்னுமொரு விடயம். மருத்துவ இளநிலை தவிர ஏனைய படிப்புகளில் 4-5 வருடம் இருப்பது கடினம். 

அப்படி இருந்தாலும் அதற்கான course fees மிகவும் கூட. கடையில் 24/7 வேலை செய்தாலும் கையில் காசும் பெரிதாக மிஞ்சாது. (சட்சப்படி மாணவர் வாரம் 20 மணத்தியாலம்தான் வேலை செய்யலாம்).

5 வருடம் ஸ்டூடண்டாக இருந்து கையில் காசோடும் ஊருக்கு வந்துள்ளார் எனில் - 

1. வேறு ஏதும் வழியில் பணம் பண்ணி இருக்கலாம்

2. தலைமறைவாகி, இருக்கும் வரை இருந்து, கடையில் cash in hand அடிப்படையில் வேலை செய்திருக்கலாம் (course fees கட்டாமல்).

இதை எல்லாம் ஊர் வந்து சொல்லமாட்டார்கள்தானே London returns.

17 minutes ago, ரதி said:

எனது ஒன்று விட்ட தம்பி பொருளாதாரம் சம்மந்தப்பட்ட வேளையில் இருக்கிறார் ...எல்லோரும் நாட்டை விட்டு போனால் ஊரில் மிச்சம் இருப்பவர்கள் ஒரு காலத்தில் மிக பெரிய பணக்காரர்கள் ஆவார்கள் என்று  சொன்னார் 
நான் அவதானித்த வரையிலும் ஒரு சிலரை தவிர பலர் வெளிநாட்டு மோகத்தில் தான் வருகிறார்கள் ...அவன் போறான் ஆகவே நானும் போக வேண்டும் என்று வெளிக்கிடுபவர்கள் அதிகம்  ....ஊரில் சண்டை நடக்கும் போது  இவ்வளவு பேர் நாட்டை விட்டு போனதில்லை ...ஏன் அங்கு இருக்கும் பிள்ளைகளுக்கு எதிர்காலம் இல்லையா?...தற்போது இணையத்திலேயே எல்லாவற்ரையும் கற்கலாம்
முஸ்லீம்கள் இருக்கிறார்கள் தானே!...ஒரு காலத்தில் வட,கிழக்கு முழுவதும் இவர்களாய் தான் இருப்பார்கள் ...தமிழர்கள் நாடு இல்லாமல் அலைய வேண்டியது தான்  

இலண்டன் இலங்கை முஸ்லீம், சிங்களவர்களால் நிரம்பி வழிகிறதே அக்கா.

எனது மகனின் வகுப்பில் இப்போ தமிழ் மாணவரை விட சிங்கள மாணவர் அதிகம்.

Edited by goshan_che
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, goshan_che said:

எனக்கும் அதே நிலைதான்.

இந்த தனிமனித சுதந்திரம் இல்லாத நாட்டில் என்னால் இருக்க முடியாது என முன்பு எழுதப்போய் - ரதி அக்காவிடமும் @பாலபத்ர ஓணாண்டியிடம்மும் வாங்கி கட்டி கொண்டேன்🤣.

ஆனால் இதுதான் உண்மை.

நான் இப்போது பிக்குவோ, பாதிரியோ, பிரைமினிஸ்டரோ யார் வந்தாலும் பேரூந்தில் எழுப்பி இடம்கொடுக்க தேவையில்லாத நாட்டில் இருக்கிறேன். இந்த சுதந்திரத்தை ஒவ்வொரு நாளும் பொக்கிசம் என உணர்கிறேன்.

என்னால் இனி பிக்குவுக்கு எழும்பி இடம் கொடுக்கும் நாட்டில் போய் நிரந்தரமாக வாழ முடியாது.

கொலிடே போய் அட்ஜஸ்ட் பண்ணலாம். அவ்வளவுதான்.

இது தான் எனது நிலைப்பாடும்

என்னால் குற்றங்களை அத்துமீறல்களை அவமானப்படுத்துதல்களை கண்டும் காணாமலும் போகமுடியாது. 

தெரியாமல் விரல் மற்றவர் மீது பட்டுவிட்டாலே மன்னிப்பு கேட்கும் நாட்டில் அதிக காலம் வாழ்ந்து விட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, விசுகு said:

இது தான் எனது நிலைப்பாடும்

என்னால் குற்றங்களை அத்துமீறல்களை அவமானப்படுத்துதல்களை கண்டும் காணாமலும் போகமுடியாது. 

தெரியாமல் விரல் மற்றவர் மீது பட்டுவிட்டாலே மன்னிப்பு கேட்கும் நாட்டில் அதிக காலம் வாழ்ந்து விட்டேன். 

அதே…

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, goshan_che said:

வெளிநாடு வரும் போது ஒரு 5 year plan உடன் வரவேண்டும்.

5 வருடம் எப்படி லீகலாக இருப்பது என்பதை ஒரு road map போல போட்டு வருபவர்கள் வெல்கிறார்கள்.

அதேபோல் இந்த 5 வருட வரவு செலவு எப்படி என்பதையும் திட்டமிட வேண்டும்.

எப்படியோ முதலில் நாட்டுக்குள் நுழைவோம் - பிறகு வெட்டி ஆடுவோம் என குறுகியகால திட்டமிடலுடன் வருவோரே திண்டாடுகிறனர்.

இப்படி வருவது இளையோர், தனி ஆட்களுக்கு ஓகே - ஆனால் பிள்ளை குட்டியோடு வந்து சீரழிய முடியாது. ஆகவே பிச்சை வேண்டாம் நாயை பிடி என திரும்புகிறனர்.

இப்படி வருவோரில் பலர் இலங்கையில் வேலையை கூட ரிசைன் பண்ணுவதில்லை. Long leave இல்தான் வருகிறனர். 

இரெண்டு தோணியில் கால் வைத்த நிலைதான்.

ஆனால் வரும்போதே வைத்தியர், நர்ஸ், இப்போ புதிதாக கடை வேலைக்காரர் என வருபவர்களுக்கு இந்த பிரச்சினை இல்லை.

என் வைத்திய நண்பர் வந்து… செட்டிலாகி…இப்போ ஊரில் இருந்த காணியை வித்து இங்கே இரெண்டாவது buy to let வீடு வாங்குகிறார்.

உண்மை

நான் இலங்கையில் நல்ல அரச வேலையில் இருக்கும் எனது தம்பி குடும்பத்தை கூப்பிட்டேன். வடிவா யோசித்து சொல்கிறோம் என்று சொல்லிவிட்டு பின்னர் இங்கு வந்து நாலைந்து வருடம் கஷ்டப் பட வேண்டும் என்று  வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த நாட்டு பாஸ்போர்ட் இருந்தால் உலகில் எங்கும் பயணிக்கலாம். ஒவ்வொரு நாட்டு பாஸ்போர்ட் ஆஃபிஸில் போய் நின்று காயத் தேவை இல்லை

Activities இங்கே கூட. நான் இதுவரை 5 தரம் வேட்டைக்கு போய் மான், மூஸ் காட்டுப் பன்றி என்று camp அடித்து சுட்டு நிஜ organic meat சாப்பிடுவேன். இலங்கையில் சாத்தியம் இல்லை 

நல்ல சம்பளதுக்கு வேலை இருந்தால் ஊரில் காணி வளவு என்று வாங்கி விடலாம்

என்ன இந்த LGBTQ+ ஐ நினைத்தால்த் தான் பயமா இருக்குது. Apple ஐ apple என்று தானே சொல்ல முடியும் அதை banana என்று சொல் என்று அடம் பிடிக்கிறார்கள் இந்த லீபரல் ஆசாமிகள் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பகிடி said:

எங்கிருந்து பகிடி விடுகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?

பக்கத்துக்கு வீட்டுகாரர் போல இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, goshan_che said:

என்னால் இனி பிக்குவுக்கு எழும்பி இடம் கொடுக்கும் நாட்டில் போய் நிரந்தரமாக வாழ முடியாது.

ஐஸே நேற்று 138 பஸ்ஸில் போகும்போது திம்பிரிகஸ்யாயா சந்தியில் எனக்கு இப்படி சீட் கொடுக்க வேண்டி ஏற்பட்டது வா 😁_
 
16 hours ago, Nathamuni said:

இன்றல்ல, அன்றும் கூட, யாழ்ப்பாணம் ஒரு money order economy தான். கல்வி தான் ஒரே மூலதனம் அதனை வைத்து, வெளியே வேலை. பணத்தினை ஊருக்கு அனுப்புதல். பிரிட்டிஷ் காலத்தில் மலேசியா, சிங்கப்பூர் கிளம்பிப்போனார்கள். (இன்று கல்வியை விடுத்தும் உடல் உழைப்பினை நம்பியும் பலர் கிளம்புகின்றனர்.)

ஆம் எனக்கு தெரிந்தி 78 / 79 / 80 களில் ஜெர்மன் போக ஆட்கள் கொழும்பில் வந்து லொட்ஜில் தங்கி இருப்பர்கள். அப்பொழுது யுத்த காலம் அல்ல ஆனால் வெளி நாட்டிற்கு உழைக்க சென்றார்கள்.

நல்ல கருத்துக்கள். 

நான் இங்கு கொழும்பில் தான் இப்பொழுது இருக்கின்றேன். பட்டய கணக்களரான எனக்கு மேற்கு நாடுகளின் விசா இருந்தாலும் நான் கொழும்பு வாழ்க்கையே விரும்புகின்றேன். இங்கிலாந்திலும் வேலை செய்தேன். ஆனால் கொழும்பே எனக்கு ‍‍‍‍‍சொர்க்கம்.

50 வயதுக்கு மேல் நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒன்றுதான். எத‌யும் சகித்து கொள்ளும் மனப்பக்குவம் எற்பட்டு விடும். அங்கு காலம் முழுவது மோட்கேஜ் கட்டுவதை விட இங்கு சொந்த வீட்டில் மன அழுத்தம் இல்லாமல் வாழலாம். என்னுடைய வகுப்பு நண்பர்கள் சிலர் 50 வய‌தில் கனடா சென்று வெற்றிகரமாக வாழ்க்கையை அமைத்துள்ளார்கள். எங்கு வாழ்ந்தோம் என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதே சிறப்பு.  

எதிர்காலம் எப்படியோ தெரியவில்லை பார்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, goshan_che said:

2. தலைமறைவாகி, இருக்கும் வரை இருந்து, கடையில் cash in hand அடிப்படையில் வேலை செய்திருக்கலாம் (course fees கட்டாமல்).

அண்ணை இது தான் காரணம்.
2009-2014 அப்ப கடைக்காறரிற்கு கெடுபிடி குறைவு தானே? இப்ப வைச்சிருக்க மாட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

அண்ணை இது தான் காரணம்.
2009-2014 அப்ப கடைக்காறரிற்கு கெடுபிடி குறைவு தானே? இப்ப வைச்சிருக்க மாட்டினம்.

ஓம்.

8 hours ago, பகிடி said:

இந்த நாட்டு பாஸ்போர்ட் இருந்தால் உலகில் எங்கும் பயணிக்கலாம். ஒவ்வொரு நாட்டு பாஸ்போர்ட் ஆஃபிஸில் போய் நின்று காயத் தேவை இல்லை

ஆனால் இந்தியாவுக்கு இனி போகேலா🤣

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.