Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 3    25 OCT, 2023 | 09:39 AM

image

ஆர்.ராம்-

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும்,  திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோது, 288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் பாராளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்பட்டுள்ள தகவல்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், அவருடைய வருகை வீதம் 13.6சதவீதமாக உள்ளது. அவ்வாறான நிலையில் அவருக்கு பாராளுமன்ற படிகளாக 4 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள், தொலைபேசி மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவற்றுக்காக 4இலட்சத்து 19ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுமக்களின் வரிப்பணமாக உள்ளது. ஊழல் தடுப்புப் பற்றி பேசப்படுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் இதுவொரு மாற்றுவடிவமாக அமைகின்றதா? என்று வினவப்பட்டபோது பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சம்பந்தனின் முதுமை காரணமாக அவர் தொடர்ச்சியாக பாராளுமன்றத்துக்கு வருகை தரமுடியாதிருக்கின்றமை தொடர்பில் நாங்கள் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம். விசேடமாக நான் அந்த விடயத்தில் கரிசனைகளைக் கொண்டிருக்கின்றேன்.

அந்தவகையில் நான் ஒருவிடயத்தினை இந்தச் சந்தர்ப்பத்தில் பகிரங்கமாக தெரிவிக்க விரும்புகின்றேன். சில ஆண்டுகளுக்கு முன்னதாக அவரால் பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்க முடியாத நிலைமைகள் ஏற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் நான் சம்பந்தனிடத்திலேயே நேரடியாக பதவி விலகுமாறு கோரினேன். அதன்போது சம்பந்தன் அதனை நிராகரித்திருந்தார். அத்துடன், அவர் அதற்கான காரணத்தினையும் தெளிவு படுத்தினார். 

2020ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது திருகோணமலை மக்கள் தன்னை அந்த மாவட்டத்தின் முதலாம் நபராக தெரிவு செய்திருக்கின்றார்கள். அவர்கள் தனது உடல்நிலைமைகளை அறிந்தே தெரிவு செய்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்டார். அதனை சம்பந்தன் மீண்டும் நினைவு படுத்தினார்.

எனினும், திருகோணமலை மக்களை பிரதிநிதித்துவம் செய்து செயற்படத்தப்பட வேண்டிய பல விடயங்கள் உள்ளன. பிறிதொரு பிரதிநிதியை நாங்கள் நியமித்தாலும் அவர் முழுமையான செயற்பாடுகளை ஆற்றுவரா என்பது பற்றிய பல கரிசனைகள் உள்ளன.

எவ்வாறாயினும், சம்பந்தன் தனது முதுமை நிலைமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆகவே, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது. அடுத்துவரும் காலத்தில் அதுதொடர்பான சில நடவடிக்கைளை எடுப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/167684

  • Replies 50
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

சம்பந்தன் மட்டும் இல்லை.... பாராளுமன்றத்தில் இருக்கும் தமிழ் எம்பிக்கள்,
பலரும்  செயல்படாத நிலையிலேயே உள்ளனர். இவர்களால் தமிழ்  இனத்துக்கு.... 
ஒரு  பிரயோசனமும் இல்லை. 

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஏராளன் said:

சம்பந்தன் தனது முதுமை நிலைமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது. ஆகவே, அவர் பதவியைத் துறக்க வேண்டும் என்பது தான் எனது தனிப்பட்ட கருத்தாகவுள்ளது.

IMG-4955.jpg

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

**** சுமந்திரனுக்கே 59 வயதாயிற்று!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, ஏராளன் said:

இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும்,  திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார்.

இவரை அரசியல் மேடைக்கு கூட்டிக்கொண்டு வந்ததே சம்பந்தன் தான்....இப்ப என்ன கதைக்கிறார் பாருங்கோ? 😂

துரோகி 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

இவரை அரசியல் மேடைக்கு கூட்டிக்கொண்டு வந்ததே சம்பந்தன் தான்....இப்ப என்ன கதைக்கிறார் பாருங்கோ? 😂

துரோகி 😎

கூட்டி வந்தவர் என்பதால் சம் செய்வது எல்லாவற்றையும் ஆதரிக்க வேண்டியதில்லை.

ஆனால் சும் இதை இப்போ சொல்வது தான் அந்த இடத்துக்கு வரவே.

தமது கட்சி தலைமையை கூட சுமூகமாக பேசி தீர்க்காமல் பொதுவெளியில் போட்டடிக்கும் இவர்கள் மக்களுக்கு எதையும் கெட்டித்தனமாக செய்யப்போவதில்லை.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுமந்திரனை தவிர்த்து விட்டு, வேறு யார் சம்பந்தரின் பதவிக்கு வரக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்? ஏதாவது ஐடியா யாருக்கேனும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதுமையை விட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தொடர்ந்து செயற்படுத்த வக்கற்று போன.. தோற்றுப்போன அரசியல்வாதிகளாக.. சம்பந்தன்.. சுமந்திரன்.. மாவை உட்பட பலர் தமிழ் தேசிய அரசியலுக்கு செய்த தொடர் துரோகத்தினை கருத்தில் கொண்டு சுயமாகவே பதவி விலகி அரசியலில் இருந்து ஒதுங்கி.. மக்களை வழிநடத்தக் கூடிய.. இளையோருக்கு வழிவிடுதலே சிறந்தது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, nedukkalapoovan said:

முதுமையை விட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை தொடர்ந்து செயற்படுத்த வக்கற்று போன.. தோற்றுப்போன அரசியல்வாதிகளாக.. சம்பந்தன்.. சுமந்திரன்.. மாவை உட்பட பலர் தமிழ் தேசிய அரசியலுக்கு செய்த தொடர் துரோகத்தினை கருத்தில் கொண்டு சுயமாகவே பதவி விலகி அரசியலில் இருந்து ஒதுங்கி.. மக்களை வழிநடத்தக் கூடிய.. இளையோருக்கு வழிவிடுதலே சிறந்தது. 

சரியான கருத்து!

இப்படி வயசாளிகளால் முன்னே வர முடியாமல் முடக்கப் பட்டிருக்கும் இளையோர் யார்? சில பெயர்களைக் குறிப்பிடுங்கள், உதாரணமாகவேனும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, Justin said:

சரியான கருத்து!

இப்படி வயசாளிகளால் முன்னே வர முடியாமல் முடக்கப் பட்டிருக்கும் இளையோர் யார்? சில பெயர்களைக் குறிப்பிடுங்கள், உதாரணமாகவேனும்?

அநேகர் இந்தக் வயதான அரசியல் கூனிகளால்.. அரசியலுக்குள் வராமலே இருக்கினம். இவர்கள் விலகினால்.. அவர்கள் தாமாகவே முன் வருவார்கள். அப்போது தெரிந்து கொள்ளலாம். 

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, nedukkalapoovan said:

அநேகர் இந்தக் வயதான கூத்தாடிகளால்.. அரசியலுக்குள் வராமலே இருக்கினம். இவர்கள் விலகினால்.. அவர்கள் தாமாகவே முன் வருவார்கள். அப்போது தெரிந்து கொள்ளலாம். 

 அது வரை அண்டர்கவரில் இருப்பார்கள் என்கிறீர்கள்?

அப்ப எல்லோரும் ராஜினாமா செய்து விட்டுப் போகும் இடைவெளியில் அங்கஜனும், சித்தார்த்தும் (டக்ளஸ் போல) சில ஆயிரம் வாக்குகளோடு பதவிக்கு வரும் அபாயம் இருக்காது என்கிறீர்கள்!

எனக்குப் புரிந்த வரையில், தாயகத்தில் இளம் சந்ததியிடம் தமிழர்களின் அரசியலில் தலைமை தாங்க என்ன, பங்கு பற்றும் ஆர்வம் கூட இல்லை!

தீவிர தேசியம் பேசுவோர் பாராளுமன்றத்தில் மட்டும் பேசி ஓய்கின்றனர் என்ற முறைப்பாடும், எந்த அரசியல்வாதியும் 100% தங்களை பிரதிபலிக்க வேண்டுமென்ற தீவிர தேசியர்களின் எதிர்பார்ப்பும் தாயக இளையோரிடம் அரசியல் ஆர்வத்தைக் குறைத்து விட்டன என்றே நான் உணர்கின்றேன்.

எனவே தான், உங்களிடம் ஏதாவது சுட்டிக் காட்டக் கூடிய பெயர்கள் தெரியுமா எனக் கேட்டேன். உங்களுக்கும் தெரியாது போல இருக்கு!

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, Justin said:

எனவே தான், உங்களிடம் ஏதாவது சுட்டிக் காட்டக் கூடிய பெயர்கள் தெரியுமா எனக் கேட்டேன். உங்களுக்கும் தெரியாது போல இருக்கு!

தெரியாது என்பதல்ல. ஏன் உங்கள் நண்பர் ஐங்கரநேசன் கூட அவருக்குத் தெரிந்த எத்தனையோ இளைய.. ஆர்வமுள்ள இளைஞர்/ யுவதிகளை இனங்கண்டிருக்கிறார். பலர்.. இந்த வயதான அரசியல் கூனிகளின் இழிவான இனத்துரோக சரணாகதி அரசியல் தடைக்கல் விலகாமல்.. அரசியலுக்குள் வருவதை.. தம் முயற்சிகள் பயனற்றுப் போவதை விரும்பவில்லை. இதே நிலை யாழ் கல்விச் சமூக இளையோர் மத்தியிலும் உள்ளது.. யாழ் பல்கலைக்கழக.. கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் உள்ளிட. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, nedukkalapoovan said:

புரிகிறது!

ஆனால், இப்படியான இளைய தலைவர்கள் உண்மையிலேயே இருந்தால் அடுத்த தேர்தலில் தமிழ் கட்சிகள் ஆசனம் கொடுக்கா விட்டாலும் தங்கள் தகுதிகளையும் கொள்கைகளையும் மட்டும் முன்னிறுத்தி சுயேட்சையாக சவால் விடலாம் என கருதுகிறேன். ஏன் செய்வதில்லை? என் ஊகம், இப்படி வரிசையில் நிற்போரும் பாராளுமன்ற சலுகைகளை எதிர்பார்த்து, பெரிய கட்சிகளூடாக வெல்லவே எதிர்பார்த்திருக்கின்றனர்.

கிழக்கைப் பற்றி அறியேன், ஆனால் யாழ் பல்கலையின் தற்கால மாணவர் தலைமையிடம் இருந்து தமிழர்களுக்கு உகந்த தலைமை வருமென நான் கருதவில்லை. தீவகத்தில் சாதி வாத சம்பவங்களின் முன்னோடிகளாக இருந்த இந்த தலைவர்கள் ஈழத்தில் தலைவர்களாக வரக் கூடாது என்பது என் அபிப்பிராயம்!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெருன்பான்மை இனத்தில் வயது குறைந்தோர் அரசியலில் உள்ளார்கள். இப்போதைய நவீன/தொழில்நுட்ப/சமூக ஊடகங்கள் முன்னிலை வகிக்கும் யுகத்தில் இளையவர்கள் அரசியலில் இல்லாமைக்கு வயது போனவர்களை காராணமாக காட்ட முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கை அரசியலில், இலங்கை வழித்தோன்றல்கள் போட்டியிடலாம் என்று ஒரு மாற்றம் வருமானால், இங்கே கருத்துரைக்கும் எத்தனைபேர் தங்கள் பிள்ளைகளை அல்லது தாங்களோ இலங்கை அரசியலில் ஈடுபட ஊக்குவிப்பீர்கள் /விரும்புவீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இத்தனை நாள் நம்ம வேலு ஊரில் இல்ல .. ஊர் நிம்மதியா இருந்துச்சு நேற்று தான் வந்தான் .. வரும் போதே பிரச்னையோடு வந்துட்டான்.. 😊

0.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Justin said:

எனக்குப் புரிந்த வரையில், தாயகத்தில் இளம் சந்ததியிடம் தமிழர்களின் அரசியலில் தலைமை தாங்க என்ன, பங்கு பற்றும் ஆர்வம் கூட இல்லை!

தீவிர தேசியம் பேசுவோர் பாராளுமன்றத்தில் மட்டும் பேசி ஓய்கின்றனர் என்ற முறைப்பாடும், எந்த அரசியல்வாதியும் 100% தங்களை பிரதிபலிக்க வேண்டுமென்ற தீவிர தேசியர்களின் எதிர்பார்ப்பும் தாயக இளையோரிடம் அரசியல் ஆர்வத்தைக் குறைத்து விட்டன என்றே நான் உணர்கின்றேன்

தாயகத்தில் இதுவரை இயங்கிய கட்சிகள், இயக்கங்களை தாண்டி சுயமாக சிந்திக்கக் கூடியவர்கள் முரண்பாடுகளை கருத்தியல் ரீதியாக தீர்ககும் சகிப்பு தன்மையுள்ளவர்கள் குறிப்பிட அளவுக்காவது பெரும்பான்மையாக அரசியலுக்கு வந்தால்  மட்டுமே ஒரு உருப்படியான அரசியலை கொண்டு நடத்த முடியும்.  

ஒரு மாநகரசபை நிர்வாகத்தில் நகரை அழகுபடுத்த பல சிரமங்களுக்கு மத்தியில் செயற்பட்ட முன்னாள் மேயர் மணிவண்ணனின் செயற்பாடுகள் கூட சகிக்காது அவரை தோற்கடித்த சுயநல குறுகிய மனப்பானமை கொண்ட அரசியலவாதிகளை கொண்ட அரசியல் தமிழரின் அரசியல். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

இலங்கை அரசியலில், இலங்கை வழித்தோன்றல்கள் போட்டியிடலாம் என்று ஒரு மாற்றம் வருமானால், இங்கே கருத்துரைக்கும் எத்தனைபேர் தங்கள் பிள்ளைகளை அல்லது தாங்களோ இலங்கை அரசியலில் ஈடுபட ஊக்குவிப்பீர்கள் /விரும்புவீர்கள்? 

இப்படியான சுதந்திர சுயாதீன அரசியலுக்கு வழி வராது.. சொறீலங்காவில். அப்படி அதிஷ்டவசமாக அமைந்தால்.. நிச்சயம்... மக்களுக்கான அரசியலை உள்ளூர் இளைய கல்வி.. மற்றும் சமூக ஆர்வலர்கள்.. அரசியல் ஒத்த கருத்துள்ளோருடன் இணைந்து செயலாற்ற விருப்பம் உள்ளது. நிச்சயம்.. பதவி ஆசை.. மக்கள் நலனில் விட்டுக்கொடுப்புக்கு இடமிருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, nedukkalapoovan said:

இப்படியான சுதந்திர சுயாதீன அரசியலுக்கு வழி வராது.. சொறீலங்காவில்.

வரலாம்...😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, goshan_che said:

கூட்டி வந்தவர் என்பதால் சம் செய்வது எல்லாவற்றையும் ஆதரிக்க வேண்டியதில்லை.

ஆனால் சும் இதை இப்போ சொல்வது தான் அந்த இடத்துக்கு வரவே.

தமது கட்சி தலைமையை கூட சுமூகமாக பேசி தீர்க்காமல் பொதுவெளியில் போட்டடிக்கும் இவர்கள் மக்களுக்கு எதையும் கெட்டித்தனமாக செய்யப்போவதில்லை.

நமது அரசியல் தலைவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு அரசியல்  பயணங்களை மேற்கொண்டாலும்......... இன்னும் அந்தந்த  நாட்டு அரசியல் முறைகளையும்  சீர்திருத்தங்களையும் கண்டு கற்றுக்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, குமாரசாமி said:

நமது அரசியல் தலைவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு அரசியல்  பயணங்களை மேற்கொண்டாலும்......... இன்னும் அந்தந்த  நாட்டு அரசியல் முறைகளையும்  சீர்திருத்தங்களையும் கண்டு கற்றுக்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது.

இடம்பெயர்ந்து சென்ற தமிழ் மக்களின் நிலமை இவ்விடயத்தில் எப்படி? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, நன்னிச் சோழன் said:

**** சுமந்திரனுக்கே 59 வயதாயிற்று!

அவுஸ்ரேலிய பிரதமருக்கு 60 வயதாயிற்று.யேர்மன் பிரதமருக்கு 65 வயதாயிற்று அமெரிக்க ஜனாதிபதிக்கு 80 வயதாயிற்று.
பிரச்சனை சம்பந்தன் உடல் செயற்பாடமுடியாத நிலை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, Kapithan said:

இலங்கை அரசியலில், இலங்கை வழித்தோன்றல்கள் போட்டியிடலாம் என்று ஒரு மாற்றம் வருமானால், இங்கே கருத்துரைக்கும் எத்தனைபேர் தங்கள் பிள்ளைகளை அல்லது தாங்களோ இலங்கை அரசியலில் ஈடுபட ஊக்குவிப்பீர்கள் /விரும்புவீர்கள்? 

இது ஒரு தொழில் துறை இல்லை. தமிழ் சமூகம் கல்வி, தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். யாராவது உங்கள் மகன் என்ன செய்கின்றார் என்று கேட்டால் அவர் அரசியல் தொழில் செய்கின்றார் என்று கூற முடியுமா?

பொதுவாக வக்கீல் துறையில் உள்ளவர்கள் அரசியலில் நுழைவது சுலபம். 

40 வயதுக்கு முன்னர் வேறு சோலிகள் உள்ளனவே. சீதனம்/பெண் பார்ப்பு/திருமணம்/குடும்பம்/வருமானம்/சொத்து சேர்த்தல்/இத்தியாதி. ஒரு பெயர், பக்கபலம் தேவை அரசியலுக்கு. 

Edited by நியாயம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, Justin said:

சுமந்திரனை தவிர்த்து விட்டு, வேறு யார் சம்பந்தரின் பதவிக்கு வரக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்? ஏதாவது ஐடியா யாருக்கேனும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

நமது அரசியல் தலைவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு அரசியல்  பயணங்களை மேற்கொண்டாலும்......... இன்னும் அந்தந்த  நாட்டு அரசியல் முறைகளையும்  சீர்திருத்தங்களையும் கண்டு கற்றுக்கொள்ளவில்லை என்பது கவலைக்குரியது.

வருவதே டியூட்டி ஃப்ரீ யில் சாமான் வாங்கி கொண்டு போகத்தானே. பல எம்பிகள் ஜனநாயக, நல்லாட்சி   பட்டறைகள் என வருவார்கள்…ஆனால் அதை கிரகிப்பதை தவிர மிச்சம் எல்லாம் செய்வாகள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.