Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ce9b83da-7c9c-408c-8bfe-3d97575c2b85.jpg

- M.Mohamed -

டியூனிசியாவில் ஆட்சி மாற்றம் அங்கு ஒரு தனியாவரின் போராட்
டத்தினால் உருவாகியது.

தனிநபர் போராட்டம் சிறுக சிறுக மக்கள் கூட்டம் ஒன்று சேர்ந்து என் காரணமாக பெரும் போராட்டமாக மாறி அரபு வசந்தமாக மாறி துனீசியா லிபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுத்தது.

முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் இஸ்லாத்தை ஏற்ற புதிய முஸ்லிம்கள் துன்புறுத்தப்பட்டார்கள் அந்தக் காலப்பகுதியில் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் புரட்சிகரமாக  மக்கள் முன் தோன்றி தான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள்  அதனால் தாறுமாறாக தாக்கப்பட்டு மயங்கி விட்டார்கள்.

ஆனால் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதும் அவரும் தான் இஸ்லாத்தை ஏற்றதே புரட்சிகரமாக மக்கள் முன் தெரிவித்தார்கள் ஆனால் உங்களுடைய வீரத்தன்மையை அரபிகள் அறிந்திருந்த காரணமாக அவர்கள் பயந்து அவருக்கு எதுவும் செய்யவில்லை இந்தப் புரட்சியின் பின்னர் தான் முஸ்லிம்கள் ஓரளவுக்கு துணிவுடன் மக்காவுக்குள் நடமாட முடிந்தது.

உலகில் கைத்தொழில் புரட்சியை ஆடும் ஆட்சி மாற்றங்களுக்கான புரட்சியாகட்டும்  கம்யூனிச புரட்சியாகட்டும் எல்லாமே ஒரு சிலரால் ஏலனப்படுத்தப்பட்ட அதை வேலை அந்தப் புரட்சிகள் எல்லாம் பல்கிப் பெருகி மக்கள் ஆதரவு அதிகமாகி பெரும் போராட்டங்களாக மாறி மக்களுக்கு பல நன்மைகளை பெற்றுக் கொடுத்தது.

இலங்கையை எடுத்துக் கொண்டாலும் இங்கும் பல்வேறு புரட்சிகள் இடம் பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு இடம்பெற்ற புரட்சி இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது பலரும் கண்களால் கண்ட உண்மை.

1990 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் காத்தாங்குடி ஏராவூர் போன்ற இடங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

இந்தப் பிரதேசங்களில் கை வைக்க முடியாது என அறிந்த இயக்கத்தினர் பாதுகாப்பு குறைவாக இருந்த பொலநறுவை  பிரதேசத்தில் படுகொலைகளை நிகழ்த்தி ஏறக்குறைய 150 முஸ்லிம்களை கொலை செய்திருந்தனர்..

இதை அடுத்து அக்டோபர் மாதத்திலும் அக்டோபர் மாதத்தில் மீண்டும் ஒரு படுகொலையை நிகழ்த்தி 190 கும் மேற்பட்ட முஸ்லிம்களை கொலை செய்திருந்தனர்.

இதனை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் இப் படுகொலைக்கு எதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண முஸ்லிம்கள் கருப்பு அக்டோபர் நினைவு தினத்தை அனுஷ்டித்தனர்.

இவற்றுக்கெல்லாம் ஆதரவாக இலங்கை முஸ்லிம்கள் சகல ஊர்களிலும் தமது கடைகளை அடைத்து ஹர்த்தால் அனுஷ்டித்தனர்.

இதன் காரணமாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சர்வதேச மன்னிப்பு சபை சர்வதேச ஊடகங்கள் புலிகளை கடுமையாக சாடியதுடன் எச்சரிக்கையும் செய்திருந்தனர்.

புலிகள் நூற்றுக்கணக்கு முஸ்லிம்களை கொன்று குவித்தது இறுதியாக நடந்தது 1992 ஆம் ஆண்டு தான்.

கருப்பு அக்டோபர் நிகழ்வுகள் அவர்களுடைய இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்தியது வரலாற்றை அலசி ஆராய்வு செய்பவர்களுக்கு தெரியும்.

2015 ஆம் ஆண்டு கூட யாழ்ப்பாணத்தில் வீடமைப்பு திட்டங்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்படாத காரணமாக ஏமாற்றம் அடைந்த முஸ்லிம்கள் அங்கு உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து புரட்சி செய்தனர்.

இதன் பிறகு தான் சுமார் 225 முஸ்லிம்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டது.

1744 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் நல்லூரில் இருந்து வெளியேற்றப்பட்ட சமயம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முஸ்லிம்கள் தமது பூங்காவில் ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர் என்பதை ஒல்லாந்தரின் வரலாற்று குறிப்புகள் கூறுகின்றது.

இந்தப் போராட்டம் காரணமாக ஏறக்குறைய நூறு ஆண்டுகள் அதனுடைய தாக்கம் இருந்தது.

எப்போது முஸ்லிம்கள் அந்தப் போராட்டத்தை கைவிட்டார்களோ அதன் காரணமாக அடுத்த தலைமுறைகளில் வந்தவர்களுக்கு தம்மை பாதுகாக்க திட்டம் வகுத்து செயற்பட தெரியவில்லை.

அப்படி தெரிந்து இருந்தால் புதிய தலைமுறைகள் தமது சொத்துக்கள் எல்லாவற்றையும் யாழ்ப்பாணத்திலேயே குவித்து வைத்திருந்து 1990 இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் பொழுது பறிகொடுத்து இருக்க மாட்டார்கள்.

அவர்களின் செல்வத்தின் ஒரு பகுதியை ஏனைய மாவட்டங்களில் சரி சொத்துக்களாக வைத்திருந்திருப்பார்கள்.

பாலஸ்தீனத்தை பொருத்தவரையில் இந்த பலஸ்தீனத்தை கைப்பற்றும் திட்டம் ஓர் இரண்டு நாட்களில் தீட்டப்பட்டதல்ல. பல  ஆண்டுகளாக தீட்டப்பட்டு உடன்படிக்கையில் செய்யப்பட்டு அதற்குள் உருவாகியதுதான் இன்று உலக முஸ்லிம்கள் அனைவரையும் அடக்கி ஒடுக்கி நடத்தும்  நாடாகும்.

அந்தப் பாலஸ்தீனர்களை பெருந்தொகையானால் இந்த போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றையும் எதிர்த்து வேறு நாடுகளில் சென்று குடியேறி தமக்கு என ஜோர்தான் என்ற பெயரில் ஒரு நாட்டையும் உருவாக்கி வாழ்ந்து வந்த காரணமாக காசா மேற்கு கரை பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் பலம் இழந்து சிறு தொகையாகினர்.

மிகுதியாக இருந்த மக்களும் நமது காணிகளையும் வீடுகளையும் பெருந்தொகைக்கு விற்பனை செய்துவிட்டு எகிப்து உட்பட மேற்கு நாடுகளில் குடியேறினர்.

இன்று பலரும் புரியாமல் கதைப்பது போன்று அன்றும் பலஸ்தீனத்திலே யாழ்ப்பாணத்தில் மக்கள் எச்சரிக்கை இல்லாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்து விட்டனர்.

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நினைவுபடுத்துதல் என்பது பல்வேறு தாக்கங்களை சொந்த மக்களுக்கும் எதிரிகளுக்கும் ஏற்படுத்தக் கூடியது.

இன்று கருப்பு அக்டோபர் என்றால் அதனை தடுத்து நிறுத்த எத்தனையோ தமிழ் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

முஸ்லிம்களை வெளியேற்றி அவர்களை செய்துவிட்ட மகா பெரிய தவறு அவர்களது போராட்டத்தை மழுங்கடித்து விட்டது ஒரு புறம் இருக்க முஸ்லிம்கள் தொடர்ந்து செய்து வரும் இந்த கருப்பு அக்டோபர் நினைவுபடுத்தல் நிகழ்வுகள் தொடர்ந்து அவர்களுக்கு நெற்றியடியை கொடுத்து வருகின்றது.

கருப்பு அக்டோபர் நினைவுகளை மீட்டுபவர்கள் அடுத்த தலைமுறைக்கு சில எச்சரிக்கை தகவல்களை சொல்லுகின்றனர்.

வெள்ளம் வரும் முன் அணை கட்டுவோம் என்பது போல் எதிர்கால அச்சுறுத்தல்களுக்கு தற்போது இருந்தே எமது உம்மத்தை பாதுகாப்புடன் வாழ எச்சரிக்கையுடன் வாழ இந்த நினைவுபடுத்தல்கள் உதவும்.

யாழ்ப்பாணத்தில் 2011 ஆம் ஆண்டு 2000 முஸ்லிம் குடும்பங்கள் மீளவும் குடி ஏறுவதற்காக விண்ணப்பித்திருந்தார்கள்.

சுமார் ஐந்து  வருடங்கள் இழுத்தடிப்பு செய்யப்பட்ட இவர்களுடைய மீள்குடியேற்றம் ஐந்து வருட முடிவில் எந்த ஒரு வீடும் அவர்களுக்கு வழங்கப்படாமல் சூழ்ச்சிகரமாக முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கை தடுக்கப்பட்டது..

பின்னர் நீதி கேட்டு முஸ்லிம்கள் உண்ணாவிரதப் போராட்டம் செய்ததன் பின்னர்தான் 50 வீடுகள் வழங்கப்பட்டது.

வருடா வருடம் மேற்கொள்ளப்பட்டு வரும் கருப்பு அக்டோபர் நிகழ்வுகள் மூலமாக மேலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதன் காரணமாக மேலும் சில வீடுகள் காலத்துக்கு காலம் வழங்கப்பட்டு சுமார் 225 முஸ்லிம்களுக்கு இதுவரை வீடமைப்பு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இழுத்தடிப்பு செய்வது ஒரு மனித உரிமை மீறலாகும்.

அதேபோன்று 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திரும்பவும் குடியேறுவதற்காக சுமார் 2000 முஸ்லிம்கள் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுடைய விண்ணப்பங்கள் எல்லாம் தொலைந்து விட்டது என கூறப்பட்டு 2016 ஆம் ஆண்டு  நடமாடும் சேவை என்ற பெயரில் இரண்டாவது தடவையாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது

.

முக்கியமான ஆவணங்களை தொலைத்து விட்டோம் எனக் கூறும் அதிகாரிகளின் செயற்பாடுகள் மனித உரிமை மீறல் அல்லவா?

இந்த விடயம் ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் பொழுது ஏறக்குறைய 3000 குடும்பங்கள் திரும்ப குடியேறுவதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.

ஆனால் அவர்களில் யாருக்கும் இதுவரை வீடுகள் கட்டுவதற்கான நிதி உதவி வழங்கப்படவில்லை.

மேலும் 2017 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களால் யாழ்ப்பாணம் முஸ்லிம்களை குடி ஏற்றுவதற்கு சுமார் 160 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்தத் தொகை ஒரு குடும்பத்துக்கு தலா எட்டு லட்சம் ரூபாய் என்ற அடிப்படையில் சுமார் 200 குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆகும்.

இந்த நிதியை சுமார் எட்டு மாதங்கள் மக்களுக்கு தெரியப்படுத்தாமல் ஒழித்து வைத்துவிட்டு இந்த நிதியை பயன்படுத்துவதற்கான கால அவகாசம் இல்லாத காரணமாக அந்த நிதி திருப்பி அனுப்பப்பட்டது யாழ்ப்பாணத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்ததாக அப்போதைய அமைச்சர் ரிசாத் அவர்கள் 2017 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேசிய மீளாத் விழா நிகழ்வுகளின் போது மேடையில் வைத்து தெரிவித்திருந்தார்.

எனவே இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்வதன் ஜனாதிபதிக்கும் இந்த விடயம் தெரிவிக்கப்பட வேண்டும்.

எனவே கருப்பு அக்டோபர்  நினைவுகள் பல  தசாப்தங்களுக்கு நடத்தப்பட வேண்டும்.

நீங்கள் அதனூடாக எதிர்கால சந்ததிகள் எச்சரிக்கையுடன் வாழ்ந்து தம்மை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் வியூகங்கள் போன்றவற்றை வகுத்து தமது பொருளாதார இழப்புகளை குறைத்துக் கொள்ள வழி சமைக்கப்பட வேண்டும்.

https://www.jaffnamuslim.com/2023/10/blog-post_694.html

  • Downvote 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1995 இல் இருந்து அரச கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்ப்பாணத்தில், புலிகள் இல்லாத கடந்த 14 வருடங்களில் ஏன் முஸ்லிம் அரசியல்வாதிகளால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டவர்களை மீளக்குடியமர்த்தமுடியவில்லை? அதிகாரிகளை கைகாட்டிவிட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் நழுவப்பார்க்கின்றார்கள் என்றுதான் தோன்றுகின்றது.

மேலும் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பலர் ஏன் இன்னும் புத்தளத்தில் இருக்க விழைகின்றார்கள்?

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சாத்தியமாகும் நாள் வருமா?

- சொந்த மண்ணிலிருந்து இடம்பெயர்ந்து 33 ஆண்டுகள் பூர்த்தி

Rizwan Segu MohideenOctober 30, 2023

Muslims-Resettle.jpg

யாழ் மண்ணில் இருந்து புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதியான இன்று 33 ஆண்டுகளாகின்றன. 33 ஆண்டுகள் கடந்த நிலையிலும்கூட அந்த துரதிர்ஷ்டமான கோரச் சம்பவம் யாழ் முஸ்லிம் மக்களின் மனதில் அழியாத வடுக்களாக என்றுமே நிலைத்திருக்கின்றது.

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி துரதிர்ஷ்ட நாள். சுமார் காலை 8 மணியளவில் 1000 இற்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய புலிகள் யாழ்ப்பாணம் சோனகத் தெருவை சுற்றி வளைத்தனர். முஸ்லிம் மக்கள் செறிவாக வாழும் பகுதிதான் சோனகத் தெரு. புலிகளின் திட்டத்தை அறியாத முஸ்லிம்கள் அனைவரும் வெ ளியேற்றப்பட்டனர்.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என அனைவரும் வெ ளியேற்றப்பட்டனர்.

அனைவரும் பிறந்த மண்ணை விட்டு புறப்பட்டனர். பெண் புலி உறுப்பினர்கள் பெண்களையும் ஆண் புலி உறுப்பினர்கள் ஆண்களையும் உடல் பரிசோதனை செய்தனர்.

இப்படியான ஓர் அவலநிலை இனி இந்த நாட்டில் யாருக்குமே வரக்கூடாது. சொந்த ஊரில் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்த எம்மை வெளியூர்களில் அகதி எனும் பட்டத்தோடு கூனிக்குறுகி நாலாபுறமும் சிதறி வாழ வைத்துவிட்டார்கள்.

வடக்கில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கும் தமிழ் மக்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அவர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு புலிகள் மாத்திரமே காரணம். முஸ்லிம்களை வெளியேற்றும்போது தமிழ் மக்களின் முக்கியமானவர்கள், இந்து சமய குருக்கள், கிறிஸ்தவ பாதிரிமார்கள் முஸ்லிம்களின் வெளியேற்றத்தினை தடுத்து நிறுத்த புலிகளிடம் உடனடி அவசரப் பேச்சுவார்த்தைகளை நடாத்தியும்கூட அவை தோல்வியிலேயே முடிவடைந்தன. 2002 ஆம் ஆண்டு வட்டக்கச்சியில் நடந்த புலிகள் இயக்கத் தலைவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பங்குபற்றிய மதியுரைஞரான அன்டன் பாலசிங்கம் முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் சம்பவம் என்று மட்டும் கூறி இதுதொடர்பில் முஸ்லிம் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

காலம் தாழ்த்தியாவது வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தவறு என உணர்ந்தனர் புலிகள். இது எமக்கு ஓரளவு ஆறுதலளித்தது.

முஸ்லிம் மக்களை மீளக் குடியமர்த்த காத்திரமான, அர்த்தபுஷ்டியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

33 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் முஸ்லிம்களாகிய நாங்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் என்று எவ்வாறு ஒன்றாக இருந்தோமோ அந்நிலைமை ஏற்பட வேண்டும்.

தற்போது வடக்கில் முஸ்லிம்கள் தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் பாதுகாப்புடனும் எமது சமய, கலாசாரத்துடனும் வாழ நல்ல சூழல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் காத்திரமான, அர்த்தபுஷ்டியான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டுகிறோம்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் பேதமின்றி ஒற்றுமையுடன் செயற்பட்டு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற திட்டத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டுகிறோம்.

கலாபூஷணம் பரீட் இக்பால்
யாழ்ப்பாணம்

https://www.thinakaran.lk/2023/10/30/featured/21168/வடக்கிலிருந்து-வெளியேற்/

  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கொழும்பான் வேறு வேறு தலைப்புகளில் ஒரே விடயத்தை குளோனிங் செய்வதன் நோக்கம் என்ன..??! பிரச்சாரமா..??!

ஒரு துப்பாக்கி வேட்டும் இன்றி.. செய்த துரோகத்தனத்திற்கு தண்டனையும் இன்றி முஸ்லிம்களை பாதுகாப்புக்காக.. மீள் குடியேற்ற உத்தரவாதத்தோடு வெளியேறக் கேட்டது எப்படி கறுப்பு தினமாகும். 

1983 கறுப்பு யூலையில் தெமட்டகொடையில் இருந்து முஸ்லிம் கும்பல்கள் தமிழ் மக்களை சிங்களவர் தாக்க முதலே தாக்க வெளிக்கிட்டது தான்.. கறுப்பு யூலைக்கான காள்கோள்.

அதுவும் இதுவும் எந்த வகையில் ஒற்றுமைப்படுகிறது..??!

இது ஒரு இனத்தின் பாதுகாப்புக் கருதிய பாதுகாப்பான இடம்பெயர்வு. இதற்கு கறுப்பு ஒக்டோபர் என்று பெயரிடுவதற்கு எந்த நியாயமும் இல்லை.

மேலும் பிரபா- ஹக்கீம் 2002 உடன்பாட்டின் பிரகாரம் இவ்வாறு பாதுகாப்பு வெளியேற்றம் மூலம் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை புலிகள் முன்னர் அளித்த வாக்குறுதிக்க அமைய மீளக் குடியேற அழைத்தும் விட்டனர். 

இன்னும்.. கறுப்பு.. சிவப்பு என்று பெயரிட்டுக் கொண்டு பகைமை உணர்வை கட்டிக்காக்க விருப்பும் இப்படியான தலைப்புக்கள் அவசியம் தானா.

என்னைக் கேட்டால்.. யாழுக்கான முஸ்லிம்களின் மீள் வரவென்பது.. போதைப்பொருள்களின் மீள் வருகை.. சண்டித்தனத்தின் மீள்வருகையாகவே தான் தெரிகிறது. இது அல்ல.. சமூகங்களுக்கிடையே.. ஒருங்கிணைவுக்கு அவசியம். இது சமூகத் துருவமயமாக்கலை ஏற்படுத்துவது மட்டுமன்றி.. சமூகங்களை நாசமாக்கி அழிக்க உதவுகிறது. இனப்படுகொலை நோக்கங்களை நீட்டிச் செல்ல எதிரிக்கு உதவுகிறது. 

கிழக்கில்.. கிறிஸ்தவ தமிழ் மக்களை மற்றும் கொழும்பு.. நீர்கொழும்பில்.. கிறிஸ்தவ தமிழ் பேசும் மக்களை குறிவைத்து இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத் தாக்குதல்கள் என்பன.. உட்பட.. சொறீலங்கா முஸ்லிம்கள்.. பல கறுப்பு தினங்களை.. மாதங்களை தமிழ் மக்கள் மீது திணித்துள்ள போதும்.. தமிழ் மக்கள் பகைமை பாராட்டாதிருப்பது.. இட்டு.. முஸ்லிம்கள் நன்றியுடையவர்களாக இருப்பதற்கு பதில்.. காழ்புணர்வை வளர்ப்பதில் ஈடுபடுவது.. தமக்கு இஸ்லாமிய அடிப்படைவாத பக்க பலம் துணை இருக்கிறது என்று கனவில் போலும். அதற்கு தமிழ் மக்கள் எனியும் இடமளிக்க கூடாது.. முடியாது. சொறீலங்கா முஸ்லிம்களின் மதவெறி துரோகங்களுக்கு எனியும் தமிழ் மக்களையும் தமிழ் மண்ணையும் பலிக்கடா இடமுடியாது. 

இதே காலப் பகுதியில் கிழக்கில் இருந்தும் வடக்கில் இருந்தும் சிங்களப் படைகளாலும்.. சிங்கள முஸ்லிம் ஊர்காவல்படைகளாலும் சுட்டும் வெட்டியும் பல நூறு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு.. கிழக்கில் இருந்து வடக்கு நோக்கியும்.. தமிழகம் நோக்கியும்... தமிழ் மக்கள் சாரை சாரையாக இடம்பெயரவும் செய்யப்பட்டனர்.

கல்முனை.. சம்பாந்துறை.. சம்பூர்.. மூதூர்.. நிலாவெளி.. கிண்ணியா.. உட்பட கிழக்கின் முக்கிய பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் முஸ்லிம் ஜிகாத் பயங்கரவாதக் காடைகளால்.. ஊர்காவல் கும்பல்களால்.. படுகொலை செய்யப்பட்டதோடு.. துரத்தி அடிக்கவும் பட்டனர்.

வடக்கு யாழ்ப்பாணம்.. சாவகச்சேரி.. பருத்தித்துறை.. கிளிநொச்சி.. பள்ளிவாசல்களிலும் வீடுகளிலும் திட்டமிட்ட வகையில்.. கிழக்குப் போன்று வடக்கிலும்.. தமிழ் - முஸ்லிம் கலவரத்தை தூண்ட நிகழ்த்தப்பட்ட சதிகள் விடுதலைப்புலிகளால் கண்டறியப்பட்டு முறியடிக்கப்பட்டதுடன்.. வடக்கு முஸ்லிம்கள் பாதுகாப்பான வெளியேற்றதுக்கு கோரப்பட்டதுடன்.. போர் முடிவோடு மீளக் குடியேறவும் உறுதியளிக்கப்பட்டது.

இதன் பிரகாரம்.. 2002 பிரபா - ஹக்கீம் சந்திப்பின் பின் முஸ்லிம்கள் வடக்கில் மீளக் குடியேற புலிகளால் அழைக்கப்பட்டும் இருந்தனர். 

பிரபாகரனுடன் இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஒப்பிடுவது அறிவீனம் – ஹக்கீம் காக்கா  அந்தர்பல்டி – Eelamaravar

Hakeem-Prabha-Secret-Agreement.preview.jpg

இத்தகைய அப்பட்டமான உண்மைகளை மறைத்து.. சில முஸ்லிம் மத வெறிக் காடைகள் இப்படியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது.. இவர்களே.. தமிழ் - முஸ்லிம் பிரிவினைக்கு கலவரங்களுக்கு சிங்களத்தின் தூண்டுதலில் உதவி செய்தவர்களாக இருப்பார்களோ என்ற சந்தேகத்தை பலமாக எழுப்பவதோடு.. இது தமிழ் - முஸ்லிம் நீண்ட கால நலனை பாதிக்கவும் செய்யும். 

Edited by nedukkalapoovan
  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, nedukkalapoovan said:

கொழும்பான் வேறு வேறு தலைப்புகளில் ஒரே விடயத்தை குளோனிங் செய்வதன் நோக்கம் என்ன..??! பிரச்சாரமா..??!

அண்மையில் ஒரு காணொளியில் அருஸ் அவர்கள் தமிழ் - சோனக முரணைத் திட்டமிட்டதே இஸ்ரேல் உளவுப்படை என்று கூறியுள்ளார். மதத்தைக் கடந்து நிலத்தையும் வாழ்வையும் சிந்திக்காதவரை அழிவின் தொடர்ச்சியைத் தடுக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 30/10/2023 at 16:34, nedukkalapoovan said:

செருப்படி  நெடுக்கர்....இவை இதனை வைத்தே பழைய புண்ணை நோண்டி ..ஆதாயம் தேடுகினம் ...தாங்கள் செய்ததை எல்லம் மறைத்து உலகில் பாதிக்கப்பட்ட இனம் யாழ் முசுலிம் எனக் காட விழைகின்றனர்..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 31/10/2023 at 00:22, nochchi said:

அண்மையில் ஒரு காணொளியில் அருஸ் அவர்கள் தமிழ் - சோனக முரணைத் திட்டமிட்டதே இஸ்ரேல் உளவுப்படை என்று கூறியுள்ளார். மதத்தைக் கடந்து நிலத்தையும் வாழ்வையும் சிந்திக்காதவரை அழிவின் தொடர்ச்சியைத் தடுக்க முடியாது. 

இது உண்மையாகத் தான் இருக்கும்.

ஏனெனில், ஈழத்தமிழர் மிகுந்த கருணையுள்ளம் படைத்த அப்பாவிகள், இஸ்லாமியத் தமிழர் அவர்களை விட அப்பாவிகள்! இவர்கள் ஆளையாள் போட்டுத் தள்ளவும் சூறையாடவும் வெளிநாட்டுக்காரனின் சதி மட்டும் தான் ஒரே காரணமாக இருக்க முடியும்!

  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Justin said:

இது உண்மையாகத் தான் இருக்கும்.

ஏனெனில், ஈழத்தமிழர் மிகுந்த கருணையுள்ளம் படைத்த அப்பாவிகள், இஸ்லாமியத் தமிழர் அவர்களை விட அப்பாவிகள்! இவர்கள் ஆளையாள் போட்டுத் தள்ளவும் சூறையாடவும் வெளிநாட்டுக்காரனின் சதி மட்டும் தான் ஒரே காரணமாக இருக்க முடியும்!

நன்றி, இங்கே யாழிலேயும் சில ஆய்வுகள் உண்மையாகத்தானிருக்கும் என்றே பலரும் படித்தறிகிறார்கள். அதுபோல் அருஸ் அவர்களதும் உண்மையாயிருக்கலாம். அதேவேளை இன்று சொந்தநிலத்தவனைவிட வந்த நிலத்தவரது அழிச்சாட்டியமே அதிகரித்து அழிவுகளை விதைத்துவருகிறது.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, nochchi said:

நன்றி, இங்கே யாழிலேயும் சில ஆய்வுகள் உண்மையாகத்தானிருக்கும் என்றே பலரும் படித்தறிகிறார்கள். அதுபோல் அருஸ் அவர்களதும் உண்மையாயிருக்கலாம். அதேவேளை இன்று சொந்தநிலத்தவனைவிட வந்த நிலத்தவரது அழிச்சாட்டியமே அதிகரித்து அழிவுகளை விதைத்துவருகிறது.

நன்றி

வடக்கு கிழக்கில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் வந்த நிலத்தவரா சொந்த நிலத்தவரா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, Justin said:

வடக்கு கிழக்கில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் வந்த நிலத்தவரா சொந்த நிலத்தவரா?

நன்றி,
அவர்கள் இப்போதும் அங்கு வாழ்கின்றார்கள்தானே? இவளவு தொலைதூர ஆய்வுகளை செய்யும் உங்களுக்குத் தெரியாமல் என்னிடம் கேட்கின்றீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்பாணத்து முஸ்லிம்களுக்கு  தண்டனை கொடுக்காமல் பாதுகாப்புக்காக வெளியேற்றியதாக சொல்கிறார்களே அந்த செயல்  ஆய்வாளர் அருஸ் சொன்னது போல இஸ்ரேல் உளவுப்படையின் வேலை என்பதை கோடிட்டு காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, nochchi said:

நன்றி,
அவர்கள் இப்போதும் அங்கு வாழ்கின்றார்கள்தானே? இவளவு தொலைதூர ஆய்வுகளை செய்யும் உங்களுக்குத் தெரியாமல் என்னிடம் கேட்கின்றீர்கள்!

விரட்டப் பட்டு, பின்னர் திரும்பி வந்தார்கள். இது அவர்களுடைய உரிமை, யாரும் போடவேண்டியிருந்த பிச்சை அல்ல!
உங்களுடைய கருத்துக்களின் படி, வடக்கு முஸ்லிம்களை விரட்டியதை ஆதரிக்கிறீர்கள் எனப் புரிந்து கொண்டேன். அதனோடு சேர்த்துத் தான் வந்த நிலத்தவர் என்ற கருத்தும் வந்திருக்கிறது.

அப்படியானால் யாரை "வந்த நிலத்தவர்" என்றீர்கள்? தமிழர்களையா😂?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முஸ்லீம்களை தற்காலிகமாக் தாம் வெளியேற்றியது ஒரு தவறுதான், முஸ்லிம்கள் மீண்டும் யாழில் சென்று குடியமர்வதில் எந்த தடையும் இல்லையென்று புலிகள்  அறிவித்திருந்தனர்.

இன்று புலிகளும் இல்லை ஆயுத போராட்ட சூழ்நிலையும் இல்லை,  எவரும் இவர்களை தமது சொந்த இடத்துக்கு வரவேண்டாம் என்று தடுக்கவும் இல்லை.

இருந்தும்  மூன்று  தசாப்தத்துக்கு முன்னர் நடந்து இன்று முற்றிலும் நிலமை மாறிவிட்ட சூழலில்கூட வேண்டுமென்றே அதனை அடிக்கடி பிரச்சாரப்படுத்துகிறார்கள் காவித்திரிகிறார்கள்,  என்றால் கண்டிப்பாக தமிழர்மேல் கொண்ட இன குரோதமேயன்றி வேறெதுவும் இல்லை.

முஸ்லீம்களை படுகொலை செய்தார்கள் என்று எப்போதுபார் கூவி திரிகிறார்களே, ஒரு ஆயுதமோதல் இடம்பெற்ற காலத்தில் அனைத்து மக்கள் கூட்டத்தினரும் கொல்லப்பட்டனர்,

முஸ்லீம்கள் கொல்லப்பட்டதை பெரும் எடுப்பில் பிரச்சாரமாக செய்கிறார்களே...

என் கேள்வி இந்த யுத்தத்தில் எந்தவித பக்க சார்புமின்றி, எந்தவிதமான ரானுவ பங்களிப்புமின்றி முஸ்லிம்கள் ஒதுங்கியிருந்தார்களா? எந்தவிதத்திலும் யுத்தத்தில் பங்கெடுக்காமல் தாமுண்டு தம் வேலையுண்டு என்றிருந்த முஸ்லீம்கள்மேல்தான் புலிகள் பாய்ந்தார்களா?

இன்றுவரை முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பதை வெளியில் சொல்லியிருக்கிறார்களா?

சொல்லமாட்டார்கள் ஏனென்றால் அவர்களுக்கே தெரியும், பேரினவாதத்தால் தூக்கில் தொங்கவிடப்பட்டுக்கொண்டிருந்த தமிழர் கூட்டத்தை தாமும் சேர்ந்துதான் சிங்களவனுடன் கூட நின்று ஆளுக்கொரு பக்கமாக நின்று தூக்கி கயிற்றில் கொழுவினார்கள் என்பது. 

அளவுக்குமீறி பொறுமை கடந்த நிலையில்தான் புலிகள் இவர்கள்மேல் கை வைத்தார்கள் என்பது அவர்களுக்கும் தெரியும் எமக்கும் தெரியும்.

தமிழர்களுக்கே உள்ள பெரும்நோய் மறதி என்பது, இல்லையென்றால் வருடாவருடம் இவர்களைப்போல் நாமும் முஸ்லீம் கூட்டத்தினாலும் அவர்கள் ஊர்காவல் படையினாலும் கொல்லப்பட்ட தமிழர்களை வடக்குகிழக்கில் நினைவு கூர்ந்தால் இவர்களின் வாய் கொஞ்சமாவது எப்போதோ அடங்கியிருக்கும்

ஆககுறைந்தது எந்தவிதமான போர் சூழலும் இல்லாத நிலையில் தேவாலயங்களில் .தற்கொலைகுண்டு தாக்குதலை நடத்தி இஸ்லாமிய பயங்கரவாதிகள் எம் மக்களை கொன்று குவித்ததை, சஹ்ரான் என்ற இஸ்லாமிய அடிப்படைவாதி தமிழர்மேல் மேற்கொண்ட படுகொலையை வருடா வருடம் பெரும் எடுப்பில் நினைவுகூரவேண்டும்.

இல்லையெனின் அவர்கள் அப்பாவிகள் நாம் மட்டுமே கொடூரர்கள் என்ற இவர்களின் விஷம  பிரச்சாரம் காலம் காலமாக எம்மீது பழியாய் சுமத்தப்படும்.

எம் அரசியல்வாதிகளும், அரசியல் அமைப்புக்களும் கடந்த காலத்தில் நாங்கள் பிறரை அடித்தவர்கள் அல்ல அடித்தவர்களை திருப்பி அடித்தவர்கள் என்பதை எப்போதுமே இவர்களைபோல பிரச்சாரம் செய்ய தவறியதன் விளைவு இன்று தமிழர் என்ற இனத்தை கொடூரவாதிகளாக காண்பிக்க கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது இஸ்லாமிய சதி கூட்டம்.

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இஸ்ரேல் தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பகையுணர்வை ஏற்படுத்துமாறு சிங்களவருக்கு ஆலோசனை வழங்கவில்லை
சிங்களம் தமிழரையும் முஸ்லீம்களையும் பீரித்தாளவில்லை, தமிழரின் விடுதலைப் போராட்டத்தினை அழிக்க முஸ்லீம்களைப் பாவிக்கவில்லை
புலநாய்வுத்துறை, பொலீஸ், இராணுவம் என்று அரச படைகளில் முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கில் உள்வாங்கப்பட்டது வெறும் வேலைவாய்ப்பிற்காக மட்டுமே
ஆரம்பத்தில் கூட்டணியினருடன் முஸ்லீம்கள் இருந்ததது எனும் சரித்திரம் பொய்யானது

தமிழரின் மரபணுவில் இருக்கும் குரூரமே முஸ்லீம்களை அழித்தது, விரட்டியது. போதுமா?!!!!!

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 hours ago, ரஞ்சித் said:

உங்களின் இந்த கடுப்பு தான் அவர்களின் அறுவடை. எனவே......?🙏

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

6ம் திகதி ஓகஸ்ட்மாதம் 1990 ஆம் ஆண்டு வெளியான ஈழநாதம் நாளேட்டில் காத்தான்குடி படுகொலைக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாதென புலிகள் மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளனர். 

ஒரு வரலாற்றுத் தகவலுக்காக இங்கே சேர்த்துவிட்டுப் போகிறேன்
 
Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted

14ம் திகதி ஓகஸ்ட் மாதம் 1990 ஆம் ஆண்டு வெளியான ஈழநாதம் நாளேட்டில் ஏறாவூர் படுகொலைக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் கிடையாதென லண்டனில் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  

ஒரு வரலாற்றுத் தகவலுக்காக இங்கே சேர்த்துவிட்டுப் போகிறேன்
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்று வரும்போது கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளையும் parallel ஆக நோக்கப்பட வேண்டும். 

முஸ்லிம்களது வெளியேற்றத்திற்கான அடிப்படைக் காரணத்தை வினாயகமூர்த்தி முரளிதரனைக் கேட்டால் புரியும். 

வட மாகாண முஸ்லிம்களால் வடபகுதித் தமிழர் பாதிக்கப்பட்டது பூச்சியம். ஆனால் தென் தமிழீழத் தமிழர்கள் முஸ்லிம்களின் மீது கொண்டுள்ள கோபத்திற்கான காரணத்தை அவர்கள் வாயால் கேட்பதுதான் பொருத்தம். 

அப்போது வடக்கிலிருந்து முஸ்லிம்களது வெளியேற்றத்தில் நியாயம் இருக்கிறதா இல்லையா  என்பதற்கு விடை கிடைக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/11/2023 at 14:49, ரஞ்சித் said:

இஸ்ரேல் தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பகையுணர்வை ஏற்படுத்துமாறு சிங்களவருக்கு ஆலோசனை வழங்கவில்லை
சிங்களம் தமிழரையும் முஸ்லீம்களையும் பீரித்தாளவில்லை, தமிழரின் விடுதலைப் போராட்டத்தினை அழிக்க முஸ்லீம்களைப் பாவிக்கவில்லை
புலநாய்வுத்துறை, பொலீஸ், இராணுவம் என்று அரச படைகளில் முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கில் உள்வாங்கப்பட்டது வெறும் வேலைவாய்ப்பிற்காக மட்டுமே
ஆரம்பத்தில் கூட்டணியினருடன் முஸ்லீம்கள் இருந்ததது எனும் சரித்திரம் பொய்யானது

தமிழரின் மரபணுவில் இருக்கும் குரூரமே முஸ்லீம்களை அழித்தது, விரட்டியது. போதுமா?!!!!!

நான்தான் ஆய்வாளர் 
நான்தான் அரசியல் விற்பன்னர் 
நான்தான் வரலாற்று சட்டாம்பி 

என்று வாழுவோருக்கு ஊர் உலகில் நடந்ததை வைத்து கிரகிக்க கூடிய தன்மைகள் என்றாலும் இருந்தால்தான் ஆச்சரியம். இரண்டாம் கட்ட ஈழப்போர் கிழக்கில்தான் தொடங்கப்பட்டது கிழக்கில் வேண்டும் என்றே சிங்கள இராணுவம் பல போராளிகள் மேல் தாக்குதல் நடத்திக்கொண்டு இருந்தனர். ஏப்பிரல் மாதமே இரண்டு புலிகள் முஸ்லீம் கடைகளால் கொல்லபட்டு இருந்தார்கள். இருப்பினும் புலிகள் எந்த அசம்பாவிதமும் செய்யவில்லை. 
அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ன மே மாதம் கிழக்குக்கு வந்து போனதில் இருந்து. புலிகளை மறிப்பது சிலரை கைது செய்வது என்று நடந்துகொண்டே இருந்தது. ஜூன் ஆரம்பதில் பேச்சுவார்த்தைக்கு வந்த கமித்தை அழைக்க சென்ற அப்போதைய யாழ் அரசியல் பொறுப்பாளர் டொமினிக் மற்றும் செஞ்சுலுவை சங்கத்தினர் வாகனம் மீதும் பலாலி இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதை வேண்டும் என்றே செய்தார்கள் ... பின்னர் செஞ்சுலுவை சங்கம் தொடர்பு கொண்டு அதன் பின்பும் பலாலி முகாமிற்குள் சென்று கமித்தை அழைத்துவந்து இறுதி பேச்சுவார்த்தை நடந்தது. கமித்தே புலிகளுக்கு கூறிச்சென்றது ஜனாதிபதியையும் தாண்டி பாதுகாப்பு பிரிவு மற்றும் இராணுவம் போரை முன்னெடுக்கிறார்கள் என்று. மறுநாளே பலாலியில் இருந்து காலை யாழ் நகருக்கு ஆட்லறி அடித்தார்கள். அதற்கு முன்பே கிழக்கில் சில துப்பாக்கி சண்டைகள் நடந்து முடிந்துவிட் டது. 

அதே  நாளே கருணா தலைமையில் மட்டக்களப்பு அம்பாறையில் அனைத்து போலீஸ் நிலையமும் சுற்றிவளைக்கப்பட்டு  அனைவரையும் சரண் அடைய சொல்லி இருந்தார்கள் முன் பின் வேறு எண்ணிக்கை சொல்கிறார்கள்  அண்ணளவாக 450-500 போலீஸ் சரணடைந்ததாக சொல்கிறார்கள். இப்போதும்  பருத்தித்துறை  போலீஸ் ஸ்டேஷன் இருந்தது காங்கேசன்துறை இராணுவம் மகசினில் இருந்தது 

இரண்டு நாள் கழித்து இரண்டு தமிழ் கிராமங்கள் முஸ்லீம் கடைகளால் துடைத்து வழிக்கபட்டது  
புலிகளில் இருந்த பல முஸ்லீம்கள் ஆயுதங்களுடன் இராணுவத்திடம் ஓடிக்கொண்டு இருந்தார்கள்  
திகதி சரியாக ஞாபகம் இல்லை ஜூன் 10 என்று நினைக்கிறேன். தமிழ் கிராமங்கள் மீது நடந்த தாக்குதலுக்கு  பழிக்கு  பழியாக சரணடைந்த போலீஸ்காரர்கள் கருணாவின் உத்தரவில் கொல்லபட்டார்கள். இது புலிகளின்  தலைமைக்கே நடந்தபின்புதான் தெரிந்தது. மறுநாள் பருத்தித்துறை போலீஸ் ஸ்டேசன் சென்ற  புலிகள்  அனைவரையும் அள்ளிகட்டிக்கொண்டு பலாலிக்கு செல்ல சொல்லி இருந்தார்கள்  கே கே ஸ்  மகஸினில் இருந்த இராணுவமும்   கே கே ஸ் முகாமிற்குள் சென்று விட்டது. 

அதில் இருந்து பல தமிழ் கிராமங்கள் முஸ்லீம் கடைகளால் தாக்குதலுக்கு உள்ளாகிக்கொண்டு இருந்தது  
மடடகளப்பு நகர மக்கள்  ஒவ்வொரு இரவும்  பயத்துடனே தூங்க போய்க்கொண்டு இருந்தார்கள்  ( இதை ரதி அக்காவிடம் கேட்டு  உறுதிப்படுத்தி கொள்ளலாம்) அப்போதைய கிழக்கு நிலவரம் எப்படி இருந்தது என்பதை  அங்கு அப்போது வாழ்ந்தவர்   மூலம் கேட்டு அறிந்தால் நன்று. 

இப்போதிருக்கும் கேள்வி?
இந்த முஸ்லீம் காடைகளுக்கு ஆயுத பயிற்சி தொடங்கியது எப்போ? எங்கே? யாரால் கொடுக்கபட்டது? 
ஏன் பேச்சுவார்த்தை காலத்திலேயே  இது துரித கதியில் நடந்தது? இதையெல்லாம் சிந்தித்தது செய்யும் அளவுக்கு  சிங்களவன் இருக்கவில்லை என்பது அப்போது அங்கு வாழ்ந்த ஓரளவுக்கு அறிவுள்ளவர்களுக்கு புரியும். முஸ்லீம் காடைகளிடம் இருந்த T- 56  T-81 ரக AK துப்பாக்கிகள் எல்லாம் யார் கொடுத்தார்? 

பிரேமதாசாவும் புலிகளும் பேச்சுவார்த்தையில் இருக்கும்போதே காமினி திசயநாயக்கா ரஞ்சன் விஜயரடனே  போன்றோர் போரை தொடங்கியதன் பின்னணி என்ன? 

ஸ்ட்ரேல் மொஸாட்டிடம் சிங்கள இராணுவம் பயிற்சி முடித்து வந்த பின்னர்தான் கொத்தலாவல மற்றும்  கொப்பேகடுவ  தலைமையில் 1987இல் லிபேராசன் ஒபேராசன் என்ற பிரமாண்ட இராணுவ நடவடிக்கையை  தொடங்கினார்கள். அதற்கான வரைபடமே அங்கிருந்துதான் கொண்டுவந்தார்கள். மில்லர் நெல்லியடியில்  அடிக்கும்வரை  அது அவர்களுக்கு வெற்றியாகவே இருந்தது. 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Maruthankerny said:

கிழக்கில்தான் இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமாகியது என்பதாகவே நினைவில் உள்ளது, ஒரு இஸ்லாமிய தையல் கடைகாரர் இலங்கை சிங்கள காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராரினை அடுத்து புலிகளிடம் முறைப்பாடு தெரிவித்திருந்ததாகவும் அதற்கு மனோ மாஸ்ரர் அந்த காவல்நிலையத்தினை முற்றுகையிட்டு காவல்துறையினரை சிறைபிடிக்க அதனை தொடர்ந்து கிழக்கில் இருந்த அனைத்து காவல்நிலையங்களையும் புலிகள் முற்றுகையிட்டு ஏறத்தாழ 600 காவல்துறையினரை சிறைப்பிடித்திருந்தாக கேள்விப்பட்டிருந்தேன்.

அதே சமகாலத்தில் ரோந்தில் சென்ற இராணுவத்தினர் மேல் மேற்கொண்ட தாக்குதலில் 11 சிங்கள படையினர் கொல்லப்பட்டதாகவும், கிழக்கில் யுத்தம் ஆரம்பித்த பின்னர்தான் கமீது பேச்சுவார்த்தைக்கு வந்த போது அவரை வரவேற்க சென்ற டொமினிக்கின் மீது இராணுவம் தாக்குதல் நடத்த ஜீப்பின் கீழ் பதுங்கி தப்பித்தாகவும் பத்திரிகைகளில் வாசித்த நினைவுள்ளது.

பேச்சுவார்த்தை நடத்திய சமயத்தில் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை கொல்ல சிங்கள புலானாய்வு துறையினர் ஒரு முயற்சியினை மேற்கொண்டதாக கேள்விப்பட்டேன், முரசொலியில் பின்பக்கத்தில் ஒரு பெட்டி செய்தியாக வெளியான தலைவர் பிரபாகரனின் துணைவியார் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார் என்ற செய்தியினை தொடர்ந்து சிங்கள புலானாய்வு பிரிவினர் அவரை பின் தொடர்ந்து தலைவர் பிரபாகரனின் இடத்தினை அறிய முயன்றாதாக பொட்டம்மான் கூறியதாக கேள்விப்பட்டேன்.

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பகாலத்தில் விடுதலை புலிகள் அமைப்பில் 500 இஸ்லாமிய மத போராளிகள் இருந்ததாகவும், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு போனவர்கள் திரும்பவில்லை எனவும் மறுநாள் காலையில் புலிகளின் மறைவிடங்கள், ஆயுதங்கள் என்பவற்றின் மீது இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் எங்கோ வாசித்த அல்லது கேள்விபட்டதாக நினைவுள்ளது.

தமிழர்களின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக காத்தான் குடி போன்ற இஸ்லாமியர்கள் செறிவாக வாழ்ந்த பகுதியில் சிங்கள விமானப்படை தாக்குதலை மேற்கொண்டிருந்தது, தம்மை காப்பாற்றுவதற்காகவே இஸ்லாமியர்கள் அக்காலத்தில் தமிழர் எதிர்ப்பு நிலை எடுத்திருக்கலாம் என கருதுகிறேன், ஏனெனில் அக்காலகட்டத்தில் இராணுவம் முன்னேறுகிறது என்ற செய்தி வெளியானவுடன் அதுவரை காலமும் புலிகளுடன் சேர்ந்தியங்கிய சில நெருங்கிய புலி ஆதரவாளர்களும் தமது பங்கிற்கு கையில் வாளுடன் சென்று தமிழர்களை கொன்று தமது விசுவாசத்தினை இலங்கை இராணுவத்திற்கு காட்டமுயன்றதாக கேள்விப்பட்டேன்.

தமிழர்கள் இதனை மறைத்துவிட்டு இன்னொரு சமூகத்தினை மட்டுமே குறை சொல்வதாக உணருகிறேன்.

பிரேமதாச புலிகளை அழிப்பதற்கான வாய்ப்பிற்காக காத்திருந்தார் (குறிப்பாக பிலிகளின் தலைமையினை), 1992  யாழ்குடா கைப்பற்றுவதற்கான முயற்சியின் போது 10,000 தமிழ்மக்கள் கொல்லப்படுவார்கள் என கூறப்பட்ட போதும் அதற்கு பச்சைகொடி காட்டியதாக பத்திரிகைகளில் செய்தி அப்போது வெளியாகியிருந்தது.

இவை அனைத்தும் கேள்விப்பட்ட செய்திகளே உண்மை நிலவரம் தெரியாது.

இஸ்லாமிய ஊர்காவல்படையினருக்கு (ஜிகாத் என்று அழைத்தாக நினைவுள்ளது) 1984 - 1985 காலப்பகுதியில் இஸ்ரேலிய மொசாட்டின் ஆலோசனைக்கேற்ப ஆயுத பயிற்சி வழங்கப்பட்டதாக நினைவுள்ளது.

வடமராட்சி ஒபரேசன் லிபரேசன் நடத்தப்பட்டதன் நோக்கம் அக்கால கட்டத்தில் வடமராட்சியில் தங்கியிருந்த புலிக்ளின் தலைவரை குறிவைத்தே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, அதில் கெமுனு, கஜபா மற்றும் சிங்க படைபிரிவினர் பயன்படுத்தப்பட்டனர், அவர்கள் இஸ்ரேல் பயிற்சி பெற்றவர்களா என்பது தெரியவில்லை.

Edited by vasee
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, vasee said:

கிழக்கில்தான் இரண்டாம் ஈழப்போர் ஆரம்பமாகியது என்பதாகவே நினைவில் உள்ளது, ஒரு இஸ்லாமிய தையல் கடைகாரர் இலங்கை சிங்கள காவல்துறையினருடன் ஏற்பட்ட தகராரினை அடுத்து புலிகளிடம் முறைப்பாடு தெரிவித்திருந்ததாகவும் அதற்கு மனோ மாஸ்ரர் அந்த காவல்நிலையத்தினை முற்றுகையிட்டு காவல்துறையினரை சிறைபிடிக்க அதனை தொடர்ந்து கிழக்கில் இருந்த அனைத்து காவல்நிலையங்களையும் புலிகள் முற்றுகையிட்டு ஏறத்தாழ 600 காவல்துறையினரை சிறைப்பிடித்திருந்தாக கேள்விப்பட்டிருந்தேன்.

அதே சமகாலத்தில் ரோந்தில் சென்ற இராணுவத்தினர் மேல் மேற்கொண்ட தாக்குதலில் 11 சிங்கள படையினர் கொல்லப்பட்டதாகவும், கிழக்கில் யுத்தம் ஆரம்பித்த பின்னர்தான் கமீது பேச்சுவார்த்தைக்கு வந்த போது அவரை வரவேற்க சென்ற டொமினிக்கின் மீது இராணுவம் தாக்குதல் நடத்த ஜீப்பின் கீழ் பதுங்கி தப்பித்தாகவும் பத்திரிகைகளில் வாசித்த நினைவுள்ளது.

பேச்சுவார்த்தை நடத்திய சமயத்தில் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை கொல்ல சிங்கள புலானாய்வு துறையினர் ஒரு முயற்சியினை மேற்கொண்டதாக கேள்விப்பட்டேன், முரசொலியில் பின்பக்கத்தில் ஒரு பெட்டி செய்தியாக வெளியான தலைவர் பிரபாகரனின் துணைவியார் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார் என்ற செய்தியினை தொடர்ந்து சிங்கள புலானாய்வு பிரிவினர் அவரை பின் தொடர்ந்து தலைவர் பிரபாகரனின் இடத்தினை அறிய முயன்றாதாக பொட்டம்மான் கூறியதாக கேள்விப்பட்டேன்.

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பகாலத்தில் விடுதலை புலிகள் அமைப்பில் 500 இஸ்லாமிய மத போராளிகள் இருந்ததாகவும், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு போனவர்கள் திரும்பவில்லை எனவும் மறுநாள் காலையில் புலிகளின் மறைவிடங்கள், ஆயுதங்கள் என்பவற்றின் மீது இலங்கை விமானப்படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் எங்கோ வாசித்த அல்லது கேள்விபட்டதாக நினைவுள்ளது.

தமிழர்களின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக காத்தான் குடி போன்ற இஸ்லாமியர்கள் செறிவாக வாழ்ந்த பகுதியில் சிங்கள விமானப்படை தாக்குதலை மேற்கொண்டிருந்தது, தம்மை காப்பாற்றுவதற்காகவே இஸ்லாமியர்கள் அக்காலத்தில் தமிழர் எதிர்ப்பு நிலை எடுத்திருக்கலாம் என கருதுகிறேன், ஏனெனில் அக்காலகட்டத்தில் இராணுவம் முன்னேறுகிறது என்ற செய்தி வெளியானவுடன் அதுவரை காலமும் புலிகளுடன் சேர்ந்தியங்கிய சில நெருங்கிய புலி ஆதரவாளர்களும் தமது பங்கிற்கு கையில் வாளுடன் சென்று தமிழர்களை கொன்று தமது விசுவாசத்தினை இலங்கை இராணுவத்திற்கு காட்டமுயன்றதாக கேள்விப்பட்டேன்.

தமிழர்கள் இதனை மறைத்துவிட்டு இன்னொரு சமூகத்தினை மட்டுமே குறை சொல்வதாக உணருகிறேன்.

பிரேமதாச புலிகளை அழிப்பதற்கான வாய்ப்பிற்காக காத்திருந்தார் (குறிப்பாக பிலிகளின் தலைமையினை), 1992  யாழ்குடா கைப்பற்றுவதற்கான முயற்சியின் போது 10,000 தமிழ்மக்கள் கொல்லப்படுவார்கள் என கூறப்பட்ட போதும் அதற்கு பச்சைகொடி காட்டியதாக பத்திரிகைகளில் செய்தி அப்போது வெளியாகியிருந்தது.

இவை அனைத்தும் கேள்விப்பட்ட செய்திகளே உண்மை நிலவரம் தெரியாது.

இஸ்லாமிய ஊர்காவல்படையினருக்கு (ஜிகாத் என்று அழைத்தாக நினைவுள்ளது) 1984 - 1985 காலப்பகுதியில் இஸ்ரேலிய மொசாட்டின் ஆலோசனைக்கேற்ப ஆயுத பயிற்சி வழங்கப்பட்டதாக நினைவுள்ளது.

வடமராட்சி ஒபரேசன் லிபரேசன் நடத்தப்பட்டதன் நோக்கம் அக்கால கட்டத்தில் வடமராட்சியில் தங்கியிருந்த புலிக்ளின் தலைவரை குறிவைத்தே அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, அதில் கெமுனு மற்றும் சிங்க படைபிரிவினர் பயன்படுத்தப்பட்டனர், அவர்கள் இஸ்ரேல் பயிற்சி பெற்றவர்களா என்பது தெரியவில்லை.

என்னை பொறுத்தவரை சிங்கள ஜனாதிபதிகளில் பிரமதாஸா இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்து 
நாட்டை முன்னேற்ற விரும்பிய ஒருவர் 89 90 களில். இன பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதற்கு மிகுந்த சிரத்தை எடுத்தவர் என்றே எண்ணுகிறேன். புலிகளை அரசியல் கடசியாகி வடகிழக்கு பிரதிநிதிகளாக பாராளமன்றம் வரவேண்டும் என்று வற்புறுத்தினார் அதை ஆரம்பத்தில் மறுத்துவந்த புலிகள். பின்பு ஒரு அரசியல் கடசியை உருவாக்குவதாக கூறியே மாத்தையா - யோகி தலைமையில் விடுதலை புலிகள் மக்கள் முன்னணியை உருவாக்கினார்கள். ஆனாலும் இனவாதிகளான ரஞ்சன் விஜேரட்ன காமினி போன்றோரை எதிர்த்து எல்லாவற்றையும் முன்னெடுக்க முடியாது பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டுவந்தார்கள். 

போர் தொடங்கிய பின்பு இந்திய இராணுவம்போல புலிகளை காட்டுக்குள் அனுப்பி அங்கு வைத்து அழித்துவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டுக்கொண்டார்கள். அதற்கு முஸ்லிம்களின் பிரிவினைவாதம் பெரும் பங்கு வகுத்து வெற்றி தரும் என்றே நம்பினார்கள். அதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்தில் பல வெற்றிகளை அது கொடுத்து இருந்தது. கிழக்கு மாகாண பொறுப்பாளர் கரிகாலனின் மெய்ப்பாதுக் காப்பாளர்கள்  இருவர் முஸ்லீம்கள்தான் ..... கரிகாலன் உயிர்தப்பியது அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று.  யாழை பொறுத்தவரை முஸ்லீம்களின் துல்லிய தகவல்கள் மூலம் துல்லியமான தாக்குதல்களை நடத்தி வந்தனர். ஒரே நாளில் அன்டன் பாலசிங்கம்   அப்போதைய யாழ் மாவட்ட தளபதி பானு யாழ் மாவட்ட புலிகளின் தொலைத்தொடர்பு நிலையம் என மூன்று வீடுகள் மீதும் விமான குண்டு வீசினார்கள். 

தீவு தரையிறக்கம் வெற்றி கண்டதும் அதே போலதொரு தரையிறக்கம் பொம்பை வெளியில் செய்து யாழ் நகரை முழுவதுமாக  கைப்பற்றி  யாழ் கோடையையும் மீட்க திட்டம் வகுத்தனர். அது நடக்கும்போது புலிகள்  மீதும் சில தளபதிகளை குறிவைத்தும் கிளைமோர் தாக்குதல் செய்யும் வேலை திட்டம் முஸ்லிம்களிடம்  இருந்தது. இது கையும் களவுமாக பிடிபட்ட பின்னர்தான் முஸ்லிம்களை புலிகள் யாழில் இருந்து துரத்தி அடித்தார்கள்  மூவரை சுட்டும் கொன்றார்கள்.  

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போர் தொடங்கிய ஆரம்ப நாட்களில் முஸ்லீம் காடைகளினால் துரத்தி அடிக்கப்பட்டு வேறு சில கிராமங்களில் இருந்து வந்து சாத்தான்குளத்தில் அகதிகளாக இருந்த தமிழர்கள் மீதே 90 செப்டம்பரில் கொடூரமான தாக்குதலை செய்து நூற்று கணக்கான தமிழர்களை சித்திரவதை செய்து கொன்றார்கள். 

கிழக்கில் நடந்து எல்லாம் திகதிவாரியாக இப்போ ஆவனமாகி இருக்கும் காலத்தில் 

"தமிழர்கள் இதனை மறைத்துவிட்டு இன்னொரு சமூகத்தினை மட்டுமே குறை சொல்வதாக உணருகிறேன்." 

ஏன் இப்படி உணருகிறீர்கள்? என்பது தெரியவில்லை.
இந்த காலப்பகுதியில் நான் அடிக்கடி கம்பஹா சென்று வருவேன் அப்போ முஸ்லிம்களுடனேயே நான் புலிகள் யாழில் இருந்து துரத்தி விட்டது சரியானதுதான் நீங்கள் துரோகிகள் என்று வாக்குவாதம் செய்திருக்கிறேன் 
கிழக்கில் நடந்தவை எல்லாம் அவர்களுக்கும் வெறுப்பாகவே இருந்து. காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல்தான் எமக்கும் தலைகுனிவாகி போனதொன்று ......... ஏன் செய்தார்கள் என்றுதான் தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, Maruthankerny said:

போர் தொடங்கிய பின்பு இந்திய இராணுவம்போல புலிகளை காட்டுக்குள் அனுப்பி அங்கு வைத்து அழித்துவிடலாம் என்று தப்பு கணக்கு போட்டுக்கொண்டார்கள். அதற்கு முஸ்லிம்களின் பிரிவினைவாதம் பெரும் பங்கு வகுத்து வெற்றி தரும் என்றே நம்பினார்கள். அதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்தில் பல வெற்றிகளை அது கொடுத்து இருந்தது. கிழக்கு மாகாண பொறுப்பாளர் கரிகாலனின் மெய்ப்பாதுக் காப்பாளர்கள்  இருவர் முஸ்லீம்கள்தான் ..... கரிகாலன் உயிர்தப்பியது அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று.  யாழை பொறுத்தவரை முஸ்லீம்களின் துல்லிய தகவல்கள் மூலம் துல்லியமான தாக்குதல்களை நடத்தி வந்தனர். ஒரே நாளில் அன்டன் பாலசிங்கம்   அப்போதைய யாழ் மாவட்ட தளபதி பானு யாழ் மாவட்ட புலிகளின் தொலைத்தொடர்பு நிலையம் என மூன்று வீடுகள் மீதும் விமான குண்டு வீசினார்கள். 

தீவு தரையிறக்கம் வெற்றி கண்டதும் அதே போலதொரு தரையிறக்கம் பொம்பை வெளியில் செய்து யாழ் நகரை முழுவதுமாக  கைப்பற்றி  யாழ் கோடையையும் மீட்க திட்டம் வகுத்தனர். அது நடக்கும்போது புலிகள்  மீதும் சில தளபதிகளை குறிவைத்தும் கிளைமோர் தாக்குதல் செய்யும் வேலை திட்டம் முஸ்லிம்களிடம்  இருந்தது. இது கையும் களவுமாக பிடிபட்ட பின்னர்தான் முஸ்லிம்களை புலிகள் யாழில் இருந்து துரத்தி அடித்தார்கள்  மூவரை சுட்டும் கொன்றார்கள்.

இதனை மறுக்கவில்லை அப்போது நிலமை கட்டுக்கடங்காமல் இருந்ததனாலேயே ஒரு ஒட்டு மொத்தமான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது, அப்போதய நிலையில் புலிகளுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை.

ரிவிரச நடவடிக்கைக்கு முன்னர் ஏறத்தாழ 150 தமிழ் போராளிகள் (உண்மை தெரியாது) காணாமல் போனதாக கூறப்பட்டது (சிங்கள இராணுவத்துடன் சேற்ந்து இயங்கிய) அவர்கள் வேறு ஒரு சமூகத்தினராக இருந்திருந்தால் அது ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக ஆகியிருக்கும். 

இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் தொடர்ந்தும் குறை சொல்வதால் எந்த பயனும் ஏற்படாது மென்மேலும் பிரிவினையே ஏற்படும்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

//பாண்டியப் படைகளிடம் வீரம் அதிகம். ஆனால் மாலிக்கபூரின் படைகள் நவீன ஆயுதங்களை வைத்துக்கொண்டு குரூரமான போர் முறையில் ஈடுபட்டன. ஆகவே நீண்ட நேரம் வீரபாண்டியனின் படைகளால் அவர்களை எதிர்க்கமுடியவில்லை. எனவே வலுவான அரண்கள் உள்ள கண்ணனூர்க் கொப்பம் கோட்டைக்குப் பின்வாங்கின பாண்டியப் படைகள். ஆனால் மாலிக்கபூர் விடாமல் அங்கேயும் அவர்களைத் துரத்திவந்தான்.

கண்ணனூர்க் கொப்பத்தில் பாண்டியர்கள் வீரப்போர் புரிந்து மாலிக்கபூரின் படைகளைத் தடுத்து நிறுத்தினர். ஆனால், பாண்டியர் தரப்பில் போரிட்டுக்கொண்டிருந்த இஸ்லாமியப் படைப்பிரிவு கட்சி மாறி மாலிக்கபூரின் பக்கம் சென்றுவிட்டது. போரின் முக்கியமான கட்டத்தில் நடந்த இந்தத் திருப்பத்தை வீரபாண்டியன் எதிர்பார்க்கவில்லை. மாலிக்கபூரின் படைகளுக்கே வெற்றி கிடைத்தது. வீரபாண்டியன் கொல்லி மலைகளுக்குத் தப்பி ஓடினன். பாண்டியப் படைகளில் இருந்த யானைகளையும் குதிரைகளையும் மாலிக்கபூர் கைப்பற்றிக்கொண்டான்.

அதன்பின் ஶ்ரீரங்கம், சிதம்பரம் போன்ற கோவில்களில் மாலிக்கபூரின் படைகள் பேரழிவு நடத்திக் கொள்ளையடித்ததும் தன்னை தமிழகத்திற்கு அழைத்த சுந்தரபாண்டியனின் மீதே போர் தொடுத்து அவனை மதுரையை விட்டுத் துரத்திவிட்டு அங்குள்ள செல்வங்களையும் கொள்ளையடித்துக்கொண்டு டெல்லி திரும்பியதும் வரலாறு.//

நடந்தது 1323ம் வருடம்..

https://yarl.com/forum3/topic/285844-தமிழ்நாட்டுப்-போர்க்களங்கள்/?do=findComment&comment=1682265

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, vasee said:

இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் தொடர்ந்தும் குறை சொல்வதால் எந்த பயனும் ஏற்படாது மென்மேலும் பிரிவினையே ஏற்படும்.

இது நூறுவீதம் உண்மைதான் 
ஆனால் அதில் குளிர்க்காயும் யாரும் அதை கைவிட போவதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/11/2023 at 20:49, ரஞ்சித் said:

இஸ்ரேல் தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே பகையுணர்வை ஏற்படுத்துமாறு சிங்களவருக்கு ஆலோசனை வழங்கவில்லை
சிங்களம் தமிழரையும் முஸ்லீம்களையும் பீரித்தாளவில்லை, தமிழரின் விடுதலைப் போராட்டத்தினை அழிக்க முஸ்லீம்களைப் பாவிக்கவில்லை
புலநாய்வுத்துறை, பொலீஸ், இராணுவம் என்று அரச படைகளில் முஸ்லீம்கள் ஆயிரக்கணக்கில் உள்வாங்கப்பட்டது வெறும் வேலைவாய்ப்பிற்காக மட்டுமே
ஆரம்பத்தில் கூட்டணியினருடன் முஸ்லீம்கள் இருந்ததது எனும் சரித்திரம் பொய்யானது

தமிழரின் மரபணுவில் இருக்கும் குரூரமே முஸ்லீம்களை அழித்தது, விரட்டியது. போதுமா?!!!!!

தங்கள் நேரத்துக்கும் கருத்துக்கும் நன்றி, 
 
  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கவனமா போய் வா மச்சான் !     புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார். மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என் நண்பனாகி, பின்நாட்களில் கடற்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த மருதுவை நியமிக்கிறார் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி. அதற்கான ஆயுத்தங்கள் நிறைவு பெற்றிருந்தன. படகு தயாராக செம்மலைக் கடற்கரையில் நிற்கிறது. படகுக்கட்டளை அதிகாரி மருது மற்றும் படகு இயந்திரவியலாளன், ஓட்டுனர் என பல நிலைகளைக் கொண்ட பாலையா ஆகியோர் அதன் அருகில் எம் அணிக்காக காத்து நிற்கிறார்கள். நாம் சென்ற போது மச்சான்… நீயும் வாறியா? என்கிறான் மருது. நீண்ட நாட்களின் பின்னான அவனுடனான சந்திப்பு மகிழ்ச்சியை தந்த போது புன்னகைத்துக் கொண்டு, இல்ல மருது வாமன் அண்ணை டீம் தான் வருகுது. நான் கூறிய உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய மருத்துவ அணியில் இருந்த போராளி மருத்துவர் வாமன் மற்றும் அவரது துணைவியாரான போராளி மருத்துவர் வான்மதி ஆகியோருடன் வேறு சில மருத்துவ போராளிகளை மருது பார்க்கிறான். வணக்கம் வாமன் அண்ண… மருது அவர்களை வரவேற்றுக் கொள்கிறான். டொக்டர் எல்லாம் ரெடியா? அவரோடு சில விடயங்களைக் கதைத்தான். அவன் செல்வதற்கான இறுதித் தயார்ப்படுத்தல்கள் செய்தான். அவனிடம் பல இரகசிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அவை எதிரியிடம் பிடிபடவோ அல்லது கொண்டு செல்லப்படும் மருத்துவ அணிக்கு இழப்புக்கள் ஏற்படவோ கூடாது என்பது இறுக்கமான கட்டளை. அத்தனையும் எதுவும் நடந்துவிடாது இலக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இருந்தது. அவனின் படகிற்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புக்காக இரு படகுகள் கனரக ஆயுதங்கள் கொண்ட போராளிகளுடன் செல்லத் தயாராக உள்ளது. அவர்களையும் இறுதியாக அழைத்து, அனைத்து ஒழுங்குகளும் சரியா என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்கிறான் மருது. சாக்குகள் தயாரா என்று கேட்டான். எல்லாம் சரி என்றவுடன் புறப்படத் தயாராகினான். கடற்பயணம் பல சிக்கல்களை உருவாக்கும். பழக்கமற்றவர்களுக்கு வாந்தி, தலைச்சுத்து, மயக்கம் போன்றவை வரும். போகும் பாதையில் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகலாம். அத்தனையையும் தாண்டி இலக்கிற்கு சென்றடைய வேண்டும். ( சென்ற மருத்துவ அணி பற்றி பின்பொரு பதிவில் சொல்கிறேன்) அவர்கள் செல்லும் பாதை குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் பல சிக்கல்கள் நிறைந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை கூட அவர்கள் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இயந்திரத்தின் சத்தம், படகின் வேகத்தால் எழும் இரைச்சல்கள் அவர்களை எதிரிக்கு இனங்காட்டக் கூடியவை. இதற்கெல்லாம் அவர்களிடம் துணிவு மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. இயந்திரத்தின் சத்தத்தை குறைப்பதற்காக ஈரச்சாக்குகளை அதற்கு மேல் போட்டு சத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விடுபட்ட போது, யாழ் நகரில் இருந்து காயங்களை ( காயப்பட்ட போராளிகளை) அல்லைப்பிட்டி கடலால் வெளியேற்ற கடற்புலிகள் பயன்படுத்திய வழிமுறையும் இதுவே என்று நினைவு வந்தது( இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன் ” குருதிக்குள் ஒரு பயணம் 5 ) செல்ல வேண்டிய அணியை ஏற்றிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற தயாராகிறான் மருது. “மருது கவனம் கடல்ல அவன் கண்டபடி முட்டுப்படுவான் பார்த்து போ சரியா? ” மருத்துவரே கவலைப்படாத நாங்கள் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் சேருவம். அப்பிடி எதாவது ஆச்சுதென்றாலும் பயப்பிடாத சாமான் இருக்கு. அவன் கை காட்டிய திசையில் பாக்கிறேன். படகின் அணியத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான். அதற்குள் முழுவதுமாக சக்கை அடைக்கப்பட்டிருந்தது. அவன் வேறு எதையும் கூற வில்லை. படகு புறப்பட்டு விட்டது. இவன் எதற்காக அணியத்தை காட்டுகிறான்? அதுவும் எப்போதும் வெடிக்க வைக்கப்படும் நிலையிலே அந்த அணியத்துக்குள் தூங்கும் சக்கை இருந்தது. நான் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு போய் சேர் என்று தானே கூறினேன். சென்ற படகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். படகு அந்த இருட்டுக்குள் மறைந்துவிட்டது. மருதுவிடம் நான் கவனமாக போ என்று சொன்னதன் அர்த்தத்தையும் அவனின் பதிலின் அர்த்தத்தையும் எடை போடுகிறேன். ஒவ்வொரு போராளியும் எப்பவும் சாவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதை அவர்கள் கழுத்தில் தூங்கும் நஞ்சுக்குப்பி சொல்லும். ஆனாலும் ஒரு பயணத்தின் போது “கவனமா போ ” என்று கூறப்படும் வார்த்தைகள் எம் உள்ளக்கிடக்கைகளில் அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் போக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. அதற்கு கூட அவன் “சரிடா “என்று ஒரு வார்த்தையை பதிலாக கூறி இருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவன் தன் செய்கைக்குறியியீட்டால் எது நடந்தாலும் உயிருடன் பிடிபட மாட்டோம் அவ்வாறு எதாவது நடந்தால் எதிரியை அழித்து நாமும் அழிந்து விடுவோம் என குறிப்பிட்டு செல்வது என்பது அவனது தேசத்தின் மீதான பற்றுதலையும் தன் உயிரை விட தான் தாங்கி செல்லும் செய்திகளின் பெறுமதியையும் எனக்கு உணர்த்திச் சென்றது. தரைச்சண்டைகளுக்கும் கடற்சண்டைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். அவ்வாறான நிலையில் படகின் வேகத்தையும் துப்பாக்கிகளின் சூட்டு வீச்சையும், கட்டளை அதிகாரிகள் அல்லது படகு ஓட்டுனர்களின் கடல் ஆளுமையையும் மட்டும் காப்பாக கொண்டு சண்டையிடும் கடலணிக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பது நான் சொல்ல வேண்டிய செய்தியல்ல. ஆனாலும் இந்த நடவடிக்கைப் பொறுப்பாளன் மருது அன்று செம்மலையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற அந்த நடவடிக்கையில் தான் ஒரு கரும்புலியாகவே சென்றிருந்தான் என்பதே நியம்… கரும்புலிகள் என்பவர்கள் போராளிகளில் இருந்து வேறுபட்டவர்கள் ஆனால் போராளிகளில் இருந்து தான் அவர்களும் உருவானவர்கள். மருதுவும் தன்னையும் தன் அணியையும் கரும்புலி அணியாகவே நினைத்துக் கொண்டான். சரி அண்ண வேறு ஒரு போராளி பற்றிய குறிப்போடு சந்திப்போம் அண்ண… நான் எமக்காக பல ஆண்டுகள் போராளி மருத்துவராக வாழ்ந்து தமிழீழ தேசம் எங்கும் தன் மருத்துவ அறிவைப் பதித்து மக்களையும் போராளிகளையும் உயிர்ப்பித்த போராளி மருத்துவர் அறத்தலைவனிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி அண்ண… கவிமகன்.இ 17.11.2017
    • ன்பானவர்களே! “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நூல் தமிழீழ மண்ணின் பல லட்சம் தியாகங்களின் உச்சங்களில் ஒரு சில உச்சங்களை தன் உள்ளத்தில் சுமந்து வெளி வருகிறது. இது மாவீரங்களின் அதி உச்ச தியாகம் என்பதில் எக்கருத்து வேறுபாடுகளும் இருக்க முடியாது. கண்ணீர்களை வர வைக்கும் வரலாற்று வலிகளை சுமந்து கார்த்திகை வேங்கைகளுக்காக அவர்களுக்குச் சொந்தமான கார்த்திகை மாதத்திலையே காந்தள் பூவாக பூக்க இருக்கிறது. வரும் கார்த்திகை மாதம் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வை நடாத்த மாவீரர் நினைவுகளைச் சுமந்து பயணிக்கும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இது தொடர்பான மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்வேன். என்றும் எம் தியாகச் செம்மல்களின் பாதம் பணிந்து அவர்களின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கும் அனைவரும் எம்முடன் இணைந்து எம்முடைய இம் முயற்சிக்கு கரம் தருவீர்கள் என்று நம்புகிறேன். நட்புடன் இ.இ. கவிமகன் இயக்குனர் முருகு வெளியீட்டகம் முள்ளிவாய்க்கால் மண் முன்னால் வெளியிடப்பட்ட பகிரப்படாதபக்கங்கள். *********************************************** “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நீண்ட கனவு தனது அடைவை பெற்றுக் கொண்டது. எதிர்பார்த்தளவு வருகையாளர்களுடன் மண்டபம் நிறைந்து இருந்தது. காலை 9.30 க்கு தொடங்க வேண்டிய நிகழ்வு 30 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தது. போராளி மருத்துவர் திரு. தணிகை அவர்களின் தலமையில் நிகழ்வுகள் ஆரம்பித்த போது, ஆனந்தத்தில் விழிகள் கலங்கியதை தவிர்க்க முடியவில்லை. மாவீரங்களின் உன்னத தியாகங்களை, இது மாவீரர்களான போராளிகள் மட்டுமல்லாது, வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய போராளிகள் மற்றும் மக்கள் நாட்டுப்பற்றாளர்கள் என பல நிலைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் “பகிரப்படாதபக்கங்கள்” மிக நீண்ட கால உழைப்பின் பெறுபேறாக வெளியில் வந்தது மனம் மகிழ்வுக்குரியது. திருமதி. தீபாவின் நிகழ்வு ஒருங்கிணைப்பில் நிகழ்வு ஆரம்பமாகிய போது ஜேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.,சிறீரவீந்திரநாதன் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மகளிர் பிரிவப் பொறுப்பாளர் திருமதி. வசந்தி ஏற்றி வைக்க இப் புத்தகத்தில் இடம்பெற்ற 16 மாவீரர்களின் திருவுருவப்படத்துக்கும் வருகையாளர்கள் ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார்கள். தொடர்ந்து மலர் வணக்கத்தை ஜேர்மனியின் தமிழ் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு. லோகன் அவர்கள் ஆரம்பித்துவைக்க வருகையாளர்கள் மாவீரர்களுக்கான மலர்வணக்கத்தை செய்தார்கள். அதன் நிறைவு வந்த போது அகவணக்கம் செய்யப்பட்டு நிகழ்வின் தலமையுரை ஆரம்பித்தது. தலமையுரையினை நிகழ்வின் தலைவர், போராளி மருத்துவர் தணிகை நிகழ்த்தினார். தொடர்ந்து புத்தகத்துக்கான அறிமுகவுரையினை கடற்புலிப் போராளி மருது அவர்கள் நிகழ்த்தி முடித்த போது, மிக முக்கிய நிகழ்வான புத்தக வெளியீடு நடைபெற்றது. பகிரப்படாதபக்கங்கள் என்ற நூலினை வெளியிட்டு வைக்குமாறு நூலாசிரியர் கவிமகனின் தாயாரான, திருமதி. இந்திரப்பிரபா அவர்கள் அழைக்கப்பட்டார். அப்போது அவர் கூட போராளி மருத்துவர் தணிகை மற்றும் நூலாசிரியர் கவிமகன் ஆகியோர் கூட இருந்தனர். மாவீரன் லெப். கேணல் மேனனின் துணைவியாரான யசோ அவர்களிடம் முதல் பிரதியை கையளித்து. நூலினை வெளியிட்டு வைத்தார் கவிமகனின் தாயார். வெளியீட்டு நிகழ்வு நிறைவுபெற்றதும் சிறப்புப் பிரதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போது சிறப்புப் பிரதியினை நூலாசிரியர் கவிமகன் வழங்க, சிறப்புப் பிரதியின் முதல் பிரதியை உறவுகளுக்குக் கரங்கொடுப்போம் அமைப்பை சேர்ந்த அமுதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஏனையவர்களுக்கான சிறப்புப் பிரதிகள் கவிமகனால் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவையோருக்கான பிரதிகள் வழங்கப்பட்டு சிற்றுண்டி இடைவேளை விடப்பட்டது. தொடர்ந்து உறவுகளை ஒன்றிணைப்போம் அமைப்பை சேர்ந்த திரு. வேணுவின் தேசியத்தலைவர் பற்றிய கவிதை ஒன்று வாசிக்கப்பட்டு நிகழ்வுகள் தொடர்ந்தன. நிகழ்வின் முக்கிய பேச்சுக்களான நூல் பற்றிய ஆய்வுரை மற்றும் மதிப்பீட்டுரை ஆகியவை தொடர்ந்த போது, அவற்றை முறையே லண்டன் மாநகரில் இருந்து வந்திருந்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான கோபிரட்னம் அவர்களும், பெண் எழுத்தாளர் மாலினி மாலாவும் வழங்கினர். பல விடயங்கள் அவர்களால் நிறை குறை என்ற இரு பெரும் வகைக்குள் சுட்டிக் காட்டி, இப் புத்தகம் பற்றிய அலசல் ஒன்றை செய்திருந்தார்கள். அதன் நிறைவில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் சிறீரவீந்திரநாதன் அவர்களின் வாழ்த்துரை நடைபெற்றது. அதில் இன்னும் பல படைப்புக்கள் இவ்வாறு வெளிவருவதற்கு தாம் உதவி புரிவதாக உறுதி வழங்கினார். தொடர்ந்து நூலாசிரியர் கவிமகன் ஏற்புரை வழங்கினார். அதில் ஆய்வுரை மற்றும் மதிப்பீட்டுரையில் சந்தேகிக்கப்பட்ட அல்லது குறைகளை களைவதற்காக கூறப்பட்ட விடயங்களுக்கான விளக்கங்களையும், காரணங்களையும் விளக்கினார். பின் புத்தகத்தில் இருந்த சில விடயங்களைச் சுட்டிக் காட்டி அவற்றை எழுதத் தூண்டிய காரணிகளையும் விளக்கினார். தொடர்ந்து தான் இப் புத்தகத்தை எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இந்நிகழ்வு நடைபெறும் வரை தன் தோளோடு கூட நின்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு தன் ஏற்புரையினை நிறைவு செய்தார் கவிமகன். இந்த இடத்தில் மிக முக்கிய விடயம் ஒன்று நடைபெற்றதை சுட்டிக் காட்ட வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உச்ச தியாகங்களாக பதிவாகியிருக்கும் இத் தொகுப்பின் வெளியீடு, எமது விடுதலைப் போராட்டம் மௌனித்துப் போன முள்ளிவாய்க்கால் நிலத்தில் இருந்து எடுக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட மண் வைக்கப்பட்டு அதன் முன் நிலையிலே வெளியீடு செய்யப்பட்டது.     https://eelamaravar.wordpress.com/2019/06/14/ltte-history-book/
    • தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திர சிகிச்சைமானி கற்கை நெறியினை நிறைவு செய்தவர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசான் துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) மற்றும் உதவி மருத்துவர்களிற்கான (Assistant Medical Practitioner)கற்கை நெறிகள் என இரண்டு கற்கை நெறிகள் இங்கே பலரும் அறியாத வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதில் கிருபா அவர்கள் சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி(MBBS) கற்கையைத் தொடர்ந்தார். மூன்று வருடங்கள் யாழில் கற்கைநெறிகள் வெற்றிகரமாக த்தொடர்ந்தாலும், யாழ் குடாநாடு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட போது மருத்துவக்கல்வி தேக்க நிலையை அடைந்தது. வன்னிக்கு புலிகளின் தளம் நகர்த்தப்பட்ட காலத்தில் மருத்துவக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவனாக(3rd MBBS) இருந்த கிருபாகரன் களங்களில் ஓர் முன்னணி களமருத்துவராக பணியாற்றிவர். 

களமருத்துவ செயற்பாட்டுக்கான பயிற்சிகளை சத்திரசிகிச்சை நிபுணர் சூரியகுமாரன் அவர்களிடம் பெற்றார். அதேபோல வைத்தியக் கலாநிதி எழுமதி கரிகாலன் மற்றும் தமிழீழ சுகாதார சேவைப்பணிப்பாளர் காசிலிங்கம் சுஜந்தன் அவர்களிடமும் மேலதிக பயிற்சிகளை பெற்றார். கடுமையான சண்டைகள் நடைபெறும் காலங்களில் களத்திலும் மற்றைய காலங்களில் வன்னிப்பெருநிலப்பரப்பில் காணப்பட்ட கிராமிய வைத்தியசாலைகளிலும்(Rural and Remote Hospitals)தனது மகத்தான மருத்துவ சேவையை மனநிறைவுடன் ஆற்றிவந்தார். சமாதான நாடகம் நோர்வே நாட்டின் தலைமையில் அரங்கேறிய காலத்தில் மீண்டும் யாழ் சென்று யாழ் மருத்துவபீடத்தில் தனது மருத்துவ சத்திரசிகிச்சைமானி பட்டப்படிப்பை வெற்றிகரமாகவும் திறமைச் சித்திகளுடனும் நிறைவு செய்தார். இயல்பாகவே அன்பும் பெரும் பண்பும் நிறைந்த இவர் பொதுமக்களையும் போராளிகளையும் ஆழமாக நேசித்தார். அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

சண்டை மிக உக்கிரமாக நடைபெற்ற காலங்களில் சத்திரசிகிச்சைக் கூடங்களில் மயக்க மருந்து கொடுக்கும் பொறுப்பு மிகுந்த கடினமான பணியைதானே தெரிவு செய்து மருத்துவ சேவையில் சிறந்து விளங்கினார். பூநகரி மண்ணை மீட்க நடைபெற்ற ஈரூடகத் தாக்குதலான தமிழர் சேனையின் தவைளைப் பாய்ச்சல் படைநடவடிக்கையில்(Operation Frog)பங்கேற்றவர். 

அந்த நடவடிக்கையில் படுகாயமடைந்தமையால் ஓர் கையையும் காலையும் மடிக்க முடியாத நிலையை அடைந்தார். பாதிப்படைந்த கையையும் காலையும் சத்திரசிகிச்சை ஒன்றின் மூலம் சீர்ப்படுத்த வெளிநாட்டில் இருந்து வருகை தந்த என்பியல் நிபுணர்கள் (Orthopedic Surgeons) பலர் முயன்றும் முடியாமல் போய்விட்டது. மனவலிமை மிக்க வைத்தியர் கிருபா அவர்கள் அவற்றை ஓர் குறையாக எண்ணாமல் தனது கடமைகளை ஓடியோடி செய்து முடிக்கும் போது பிரமிக்காதவர்கள் இல்லை எனலாம். தீவிரமான பொது வாழ்வில் கிருபா அல்லது கிருபாகரன் என்று அறியப்பட்ட இவரின் இயற்பெயர் கந்தசாமி தயாபரன் ஆகும். 

ஈர நெஞ்சம் கொண்ட இந்த வைத்தியர் “கோணாவில் கிருபா””வாசுகி கந்தசாமி” 
என்ற பெயர்களிலும் ஈழத்து இலக்கிய வானிலும் சிறகடித்தவர். மாங்கனித்தீவில் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளையும் சிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகளையும் எழுதி வந்தார். முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் அதாவது 17/05/2009 ஆம் தேதி இலங்கைப் படையினரின் கட்டுப்பட்டுப் பகுதிக்குள் மனைவியுடன் வந்தவரின் எந்தவிதமான தொடர்புகளும் இன்று வரை கிடைக்கவில்லை.

மனைவி,
சகோதரங்கள் மற்றும் பெற்றோரால் இன்று விண்ணிலும் மண்ணிலும் தேடப்படும் ஒருவராக வைத்தியர் கிருபாகரன் உள்ளார்.  
    • “நான் வயதானவன்,என்னால இந்தச் சமூகத்துக்கு இனி பலன் ஏதும் இல்லை.” என்னை விட்டிட்டு சின்னப் பிள்ளைகளைக் காப்பாத்துங்கோ” 26/01/2009 அன்று காயமடைந்து உடையார்கட்டு இடப்பெயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது திருமிகு வே.பாலகுமார் அவர்களின் திருவாய் உதிர்த்த வசனங்கள் இவை! கையிலும் பழுவிலும் அவருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. கையில் என்பு முறிவினால் ( compound fracture of forearm bone) ஏற்பட்ட கடுமையான வேதனையையும் தாண்டி தெளிவாக கதைத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர். அவர் அப்படிச் சொல்லிவிட்டார் என்பதற்காக விட்டுவிடமுடியுமா? குன்றாத விடுதலை வேட்கை கொண்ட பெருமதிப்புக்குரியவரை Dr.குயின்ரஷ் ஜீவன் இமானுவேல், Dr.வாமன் தருமரட்ணம் ஆகியோருடன் யானும் அவரை சத்திரசிகிச்சை மேசையில் ஏற்றினோம். தனது மக்கள் மீது கொண்ட வாஞ்சை காரணமாக எம்மிடையே ஒற்றுமையை வளர்த்தெடுத்தவருக்கு சத்திரசிகிச்சை செய்வதாயின் பொது மயக்கமருந்து கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டோம். பொது மயக்கமருந்து (General Anesthesia) கொடுப்பதற்கு முன்னர் மீண்டும் ஒரு தடவை குருதி அமுக்கத்தைச்( Blood Pressure) சோதித்த போது குருதி அமுக்கமானது அதிகரித்துக் காணப்பட்டது. அதற்காகவும் சத்திரகிச்சையைக் கைவிடமுடியாத நிலை. அவரை எங்களால் இயன்றளவு ஆசுவாசப் படுத்தி நிமிடங்களின் பின்னர் மீண்டும் சோதித்த போதும் குருதியமுக்கம் அதே நிலையிலேயே இருந்தது. பொதுவாக நாங்கள் பாவிக்கும் மயக்கமருந்துகள் குருயமுக்கத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை இந்த நிலையில் உயர் குருதி அமுக்கம் உள்ள ஒருவருக்கு மயக்கமருந்து கொடுத்தால் மேலும் குருதி அமுக்கம் அதிகரித்து நிலைமையை மோசமாக்கிவிடும் என்பது வெளிப்படையானது. ஆதலினால் அன்று அங்கிருந்த இளைய மயக்கமருந்து கொடுக்கும் வைத்தியர்( Anesthetist) அந்நிலையில் மயக்கமருந்து கொடுக்க மறுத்துவிட்டார். மேலதிக உதவிக்காக மயக்கமருந்து கொடுக்கும் மூத்த வைத்தியர்களை அந்த இடத்துக்கு அழைக்க முடியாதவாறு பலமாக எறிகணைகள் உடையார்கட்டு வைத்தியசாலைக்கு அண்மைய இடத்திலும் மைதானத்திலும் விழுந்து வெடித்துகொண்டேயிருந்தது. விண்ணும் மண்ணும் அதிர்ந்து கொண்டிருக்க தனது உயிரிலும் மேலாக மக்களை நேசித்த அந்தத் மறத்தலைவனையும் நெஞ்சிருத்தி நிமிர்வோம்! https://vayavan.com/?p=12795
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.