Jump to content

துவாரகா உரையாற்றியதாக...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

 

 

இவர் தலைவர் தமையனது புதல்வரா? சார்ஸ் அன்ரனியின் சாயல் உள்ளது. அருமையான காணொளி. நேரக்கரம் மீடியா/சாந்தி அக்காவிற்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • Replies 300
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

வல்வை சகாறா

விதியே விதியே தமிழச்சாதியை என செய நினைத்தாயோ? வேகுது நெஞ்சம் வீழுது ஓர்மம் விடை ஒன்று தருவாயோ? மவுனத்தை எல்லாம் உறக்கம் என்று எண்ணிய மதியுயர் மாக்களே! அதி உயர் மேன்மையை அசிங்கப்படுத்தும

பாலபத்ர ஓணாண்டி

"தங்கை துவாரகா இந்தியாவின் உறுதுணையுடன்  களத்தில் நிற்பாள்"           -காசியானத்தன்   “இந்தியாவின் உறுதுணையுடன்”’ இந்த ஒற்றை சொல்லிலேயே காசி உண்மையை கக்கிவிட்டார்..  இந்தியாவும் புல

Ahasthiyan

* Making of the "Thuvaraka"? உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள். இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid07EkJvbNu8Yoh19kszqErZ155n4kWNM94ATWYoVoVdZM2PVTAEe3kr4L7FQajJWZQl&id=100078207157578&mibextid=Nif5oz

நெத்தி அடியான, நியாயமான பேச்சு.

இந்த காணொளியை நேரடியாக இணைக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

முழுமையாக கேளுங்கள், பலருக்கும் பகிருங்கள்.

 

 

அந்தப்பிள்ளை வேலுப்பிள்ளை பிரபாகரனை எப்படி உச்சரிக்கின்றது என கேட்கும் முன்னரே காணொளி காணாமல் போய்விட்டதே. அந்தக்குரலை மீண்டும் கேட்க இனி ஒரு வருடம் பொறுக்க வேண்டுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நியாயம் said:

 

இவர் தலைவர் தமையனது புதல்வரா? சார்ஸ் அன்ரனியின் சாயல் உள்ளது. அருமையான காணொளி. நேரக்கரம் மீடியா/சாந்தி அக்காவிற்கு நன்றி!

ஓம் அண்ணா டென்மார்க்கில் வ‌சிக்கும் த‌லைவ‌ரின் அண்ணாவின் ம‌க‌ன்

த‌மிழ் பிள்ளைக‌ளுக்கு Vejleல‌ ப‌டிப்பிக்கிறார்..........என்ர‌ அக்காட‌ ம‌க‌ள் இவ‌ரிட்ட‌ ப‌டிச்ச‌வா 4வ‌ருட‌த்துக்கு முத‌ல் 

6 minutes ago, நியாயம் said:

 

அந்தப்பிள்ளை வேலுப்பிள்ளை பிரபாகரனை எப்படி உச்சரிக்கின்றது என கேட்கும் முன்னரே காணொளி காணாமல் போய்விட்டதே. அந்தக்குரலை மீண்டும் கேட்க இனி ஒரு வருடம் பொறுக்க வேண்டுமா?

ஆம் எல்லா இட‌ங்க‌ளிலும் அதை நீக்கி போட்டின‌ம்...........ம‌று ப‌டியும் என் க‌ண்ணில் ப‌டாது என்று நம்புகிறேன் ப‌ட்டால் த‌னி ம‌ட‌லில் அனுப்பி விடுகிறேன் ச‌கோ............

Link to comment
Share on other sites

23 minutes ago, பையன்26 said:

 

ஆம் எல்லா இட‌ங்க‌ளிலும் அதை நீக்கி போட்டின‌ம்...........ம‌று ப‌டியும் என் க‌ண்ணில் ப‌டாது என்று நம்புகிறேன் ப‌ட்டால் த‌னி ம‌ட‌லில் அனுப்பி விடுகிறேன் ச‌கோ............

Tiktok இல் பரவலாக கிடக்கின்றது. தமிழக உறவுகள் பலர் நம்பி தொடர்ச்சியாக repost பண்ணுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாளில் துவாரகா எனக் கூறும் பெண்ணின் உரை..இந்திய ஊடகங்களே முக்கியத்துவம்.

1182322835.jpeg
 

மாவீரர் நாளான நேற்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா எனக் குறிப்பிடும் பெண் ஒருவர் ஆற்றியுள்ள கொள்கைப் பிரகடன உரை சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. 

மாவீரர் நாளில் பிரபாகரனின் மகள் துவாரகா, யூடியூப் காணொலி ஊடாக கொள்கைப் பிரகடன உரையாற்றுவார் என சமூக ஊடகங்களின் வழி தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த அறிவிப்பின்படி, குறிப்பிட்ட நேரத்தில் யூடியூப் காணொலி வாடாக பிரபாகரன் மகள் துவாரகா எனக் குறிப்பிடப்பட்ட பெண்மணி உரையாற்றியுள்ளார். சுமார் பத்து நிமிடங்கள் வரை இந்தக் காணொலி நீடித்துள்ளது.
இந்த காணொலி குறித்த செய்திகளுக்கு இந்திய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  (எ)

 

https://newuthayan.com/article/மாவீரர்_நாளில்_துவாரகா_எனக்_கூறும்_பெண்ணின்_உரை..இந்திய_ஊடகங்களே_முக்கியத்துவம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RAW ஒரு மூன்றாம் தரப்பு நாட்டின் உளவுத்துறையல்ல. தொழில்நுட்பத்தை கையாளுவதில் அவர்களிற்கு பெரிய சிக்கல் இருக்கப்போவதில்லை. அப்படியிருக்கையில் இப்படி ஒரு மட்டமான அரைவேக்காட்டுத்தனமான காணொளியை ஏன் வெளியிட வேண்டும்? பார்ப்பவர்கள் இவ்வளவு  இலகுவாக இது பொய் என்று கண்டுபிடிக்க கூடிய ஒரு காணொளியை வெளியிடவேண்டிய தேவை என்னவென்று புரியவில்லை. 

ஒன்றில் அவர்கள் தெரிந்தே இந்த தவறை செய்திருக்கவேண்டும். அல்லது இந்திய உளவுத்துறை அப்படி தரம்குறைந்து போயிருக்கவேண்டும் (இதை நான் பெரிதும் நம்பவில்லை).

2009இல் இருந்து தமிழர் பிரச்சனையில் "யாரோ" ஒரு மீட்பர் வருவார் அதுவரை காத்திருங்கள் என்று ஆசைகாட்டியே தமிழர்களின் போராட்டத்தை  கிடப்பில் போட்டு வைத்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. விடுதலைப்புலிகளின் உத்தியோகபூர்வ அமைப்பு தாங்கள் தான் என்று சொல்பவர்கள் கூட தலைவர் வருவார் என்ற ஒரு மாயைக்குள் தான் தமிழர்களை வைத்திருக்கிறார்கள். அந்த மாயைக்குள்ளயே தமிழர்கள் இருக்கும் வரை அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாது. பெரும்பாலானவர்கள் இனி தலைவர் வருவார் என்பதை 14 ஆண்டுகள் சென்றபின்னர் நம்புவதாக இல்லை. ஆனாலும் தலைவர் வருவார் என்று நம்புகிற ஒரு சிறிய கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அது புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறை பெரியவர்கள் தான். இந்த காணொளி அவர்களை மறுபடியும் அந்த மாயைக்குள்ள வைத்திருப்பதற்காக இருக்கலாம். ப்ரொஜெக்ட் தலைவர் குடும்பம் என்று ஒன்றை தொடங்கி அடுத்த 10 ஆண்டுகள் காலத்தை ஒட்டட்டும் என்று நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை. 
 

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

அந்தப்பிள்ளை வேலுப்பிள்ளை பிரபாகரனை எப்படி உச்சரிக்கின்றது என கேட்கும் முன்னரே காணொளி காணாமல் போய்விட்டதே. அந்தக்குரலை மீண்டும் கேட்க இனி ஒரு வருடம் பொறுக்க வேண்டுமா?

 

6 hours ago, பையன்26 said:

ஆம் எல்லா இட‌ங்க‌ளிலும் அதை நீக்கி போட்டின‌ம்...........ம‌று ப‌டியும் என் க‌ண்ணில் ப‌டாது என்று நம்புகிறேன் ப‌ட்டால் த‌னி ம‌ட‌லில் அனுப்பி விடுகிறேன் ச‌கோ............

 

6 hours ago, நிழலி said:

Tiktok இல் பரவலாக கிடக்கின்றது. தமிழக உறவுகள் பலர் நம்பி தொடர்ச்சியாக repost பண்ணுகின்றனர்.

இப்படியான அரை வேக்காட்டுதனமானது என்றாலும் சேமிப்பில் உள்ளது தேவையான போது பிரித்து மேய .https://www.youtube.com/watch?v=ISmazFMmohc

6 hours ago, நிழலி said:

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid07EkJvbNu8Yoh19kszqErZ155n4kWNM94ATWYoVoVdZM2PVTAEe3kr4L7FQajJWZQl&id=100078207157578&mibextid=Nif5oz

நெத்தி அடியான, நியாயமான பேச்சு.

இந்த காணொளியை நேரடியாக இணைக்க முடியவில்லை.

நன்றி நிழலி 

 

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெடுகுடி சொல் கேளாது சாகிறவன் மருந்து குடியான்...

இந்த "சேரா-மான்", தனக்கு இருந்த அறிமுகங்களை வைத்து, அப்பாவிகளை (தமிழர் தாகம் கொண்டவர்களை) சலவை செய்து "சேற்று -மான்" கூட்டமாக்கி, இன்னோர் சார் குடிகளுக்கு அய்யத்தை உருவாக்கி, ஆயிடை குடிகளை நகைஉரு குடியாக்கி "வம்பிழுத்து சேதமாகி அனுங்குகிறது".

"நையாண்டி - எல்லா சர்வாதிகாரிகளினதும் சிம்ம சொப்பனம் " என அறிமுகமும், முகமூடியும் போடும்.

தடையும்,அணியும் தடுக்கிறது...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

களவுறவு எங்கண்ட சாந்தி அக்காவும் களத்திலை....

இதில என்ன விசயம் என்றால், இந்த விசயம் தமிழ்நாட்டினையும் குழப்பி விட்டுள்ளது. ஏர்போர்ட் மூர்த்தி ஒரு அரசியல் வாதியாக கருத்து சொல்கிறார் எண்டால், அட நம்ம நம்ம பயில்வான் ரங்கநாதனும் இறங்கி கருத்து சொல்கிறார். 

 

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

* Making of the "Thuvaraka"?

உண்மையாக அவரின் மகளா ? அவர்கள் சொன்னது உண்மை தானா? நீங்கள் நம்புகிறீர்களா ? இவை தான் இன்று என்னிடம் பலரும் முன்வைத்த கேள்விகள்.

இதுவே, இன்று தாயகத்திலும், தமிழர்கள் வாழும் நாடுகளிலும் பிரதான பேசுபொருள். தமிழர்கள் மத்தியில் சமூகவலைத்தளப் பதிவுகளையும் இன்று ஆக்கிரமித்த பேசுபொருளும் இதுவே.

என்னைப் பொறுத்தவரையில், இவ்வாறான கேள்விகள் மக்களிடம் உலாவருவதே நம் சமூகத்தில் அரசியல் தெளிவின்மையின் வெளிப்பாடே. யாரும் எப்பொழுதும் நம்மை இலகுவில் இயக்கிவிடலாம் அல்லது குழப்பிவிடலாம் என்பதற்கான சான்றுகளே இவை.

இன்னொருவிதத்தில் கூறுவதானால், முள்ளிவாய்க்களுக்குப் பின்னர் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு சார்ந்த விடயங்களில் நாம் மிகவும் பலவீனப்பட்ட சமூகமாக உருவெடுத்துள்ளோம் என்பது நம்மைக்  குழப்பிவிட நினைப்பவர்களுக்குக் கிடைத்த பெரு வெற்றி என்றே கூறலாம்.

ஆனால், வேடிக்கை என்னவெனில், ஈழத்தமிழர்களின் அரசியலைக் கையாள நினைக்கும் சக்திகள், தாமும் குழம்பி, நம்மையும் குழப்புகிறார்கள் என்பதே. ஆனால், இது  இன்று நேற்றல்ல, ஈழத்தைக் கையாள முற்பட்ட காலம் முதல் இவ்வாறுதான் தீர்க்கதரிசனம் அற்றவகையில் Trial and Error போன்று பரீட்சார்த்த முனைப்புகளையே முன்னெடுக்கிறது அத்தரப்பு.

ஈற்றில் 2009 இல் ஒரு தலைமைத்துவத்தை, பூண்டோடு அழிப்பதன் ஊடாக அனைத்தையும் மீளச்சரிசெய்துவிடலாம் (RESET) என்று கணக்குப்போட்டது. ஆனால், 14 ஆண்டுகள் கடந்தும் அந்த சக்தி,  தான் விரும்பிய இலக்கை அடையவில்லை என்பதை இன்று சிறுபிள்ளைத்தனமாக ஆடிய வாரிசு உருவாக்க விளையாட்டு அமைந்துவிட்டது.

ஆனால், ஒன்றை அவர்கள் புரிந்துகொண்டார்கள், அழிக்கப்பட்ட தலைமையின் வழிவந்தவர்கள் அல்லது வாரிசுகளைத் தவிர ஈழத்தமிழர்கள் எந்தத் தலைமைகளையும்  நம்பமாட்டார்கள் என்பதே. இந்நிலை, கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் போன்றது.

அதன் விளைவுதான், தம்மிடம் இருந்த அத்தனை அஸ்திரங்களையும் பயன்படுத்தி, தலைவர் வருகிறார்....அவரின் மகள் வருகிறார்....என்ற நம்பிக்கையூட்டல்களை தமிழர்களிடம் விதைக்க முற்பட்டமை. இதற்காக தமது மேற்பார்வையில் இருந்த, தமிழ்த் தேசியவாதிகளைப் பேசவைத்து அவர்களின் தனிமனித நம்பகத்தன்மைகளை தனக்கான ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

எனினும், அவ்வாறான முயற்சிகள் சலசலப்புகளைக் கடந்து போதிய பெறுபேறுகளை அறுவடைசெய்யாத நிலையில், இன்று தாம் விதைத்த பொய்கள் உண்மை என்று நிரூபிக்க ஒரு 'பொய்மானை' மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

உண்மையில் இது மிகப்பெரிய International Operation. தமிழ்த்தேசிய வாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்ட அல்லது தம்மை அவ்வாறு இனம்காட்டிக்கொண்ட பலர், குறித்த செயற்திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

தனிநபர்கள், செயற்பாட்டுத்தளத்தில் பயணிப்போர், ஊடகங்கள் என்று பல தளங்களில் உள்ளவர்களும் உள்வாங்கப்பட்டு, நம்பிக்கையூட்டல்கள் விதைக்கப்பட்டு, இறுதியில் திரையில் உரை வெளியாகியுள்ளது.

ஆனால், என்ன? Very Low Budget திரைப்படம். Hollywood க்கு நிகராக திரைப்படங்களை வசூல் வேட்டைக்கு விடுகிற தேசம்,  தமது  கதையின்  நாயகிக்கு ஒப்பனை செய்வதற்குக்கூட முறையான ஒப்பனைக் கலைஞரை அமர்த்த முடியாமற்போனமை  வியப்புக்குரியதே.

அளவுக்கு மீறிய முகப்பூச்சு, கீறி விளையாடிய புருவ அலங்காரம், கருவளையத்தை மேவிநிற்கும் கருமை, இமைகளை மினுங்கவைக்கும் வெளிர்வர்ணம், பொருந்தாத உதட்டுச்சாயம் என்று சிறுபிள்ளைகள் Powder அலகாரம் செய்ததுபோல் தமது கதையின் நாயகியை மேடையேற்றியுள்ளனர்.

இங்குதான் மீளவும் மீளவும் Research & Analysis இல் பிழைவிடுகின்றனர் ஈழத்தமிழரை ஆட்டிவைக்க நினைப்பவர்கள். ஈழத்தின் போராட்ட மரபில் வந்த பெண்கள்  எவ்வாறு உடை உடுத்துவார்கள்? எவ்வாறு தலைமுடியை வாருவார்கள்?  எந்த அளவுக்கு அலங்காரம் செய்வார்கள்? என்பதைக்கூடப் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக தலைவிரிகோலமாக முடி அலங்காரம் செய்து  தமது கதாநாயகியை அறிமுகம் செய்தமை,  குறுதிப்படிந்த ஈழத்து மரபை சம்பந்தப்பட்டவர்கள் பூரணமாகப்படிக்கவில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.

மேலும் தொழில்நுட்ப ரீதியாகக்கூட புலமைத்துவம் இல்லாத சொதப்பல். பின்னணித் திரை (Chroma Key) அமைப்பு மற்றும்  ஒளியமைப்பிலும் கூட நேர்த்தியில்லை. தரம் குறைந்த ஒளிப்பதிவுக் Camera. ஒலிவாங்கி அற்ற செயற்கையான Podium. ஆடையிற் பொருத்தும் ஒலிவாங்கியைக் கூடக் காணவில்லை. ஒளிப்பதிவில் தேர்ச்சியற்றவர்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஒரு காணொளி.

ஆக, ஒன்றை மட்டும் ஊகிக்க முடிகிறது. ...அன்னை இந்திராவின் பாணியில் ஆடை உடுத்தி, தங்கை துவா_ கா... என்று ஒருவரை  தமிழ் மக்களிடம் அரசியல் வாரிசாக அறிமுகம் செய்துவிடலாம் என்று எண்ணியுள்ளனர். இவ்வாறான வாரிசு அரசியல்

விளையாட்டு ஈழத்தமிழருக்குப் பரீட்சயம் இல்லாத ஒன்று என்பதைக்கூடக் கணிக்கமுடியாத புலனாய்வு. தமது தேசத்தின் வாரிசு அரசியல் சமன்பாட்டை (Formula) கண்ணைமூடிக்கொண்டு ஈழத்தமிழர்களிடம் பிரயோகித்துள்ளனர்.

மேலும், பல கணக்குகள் இதிலே பிழைக்கின்றன. முதலில் தந்தை வருகிறார்.. மக்கள் முன் தோன்றுவார்..  என்று அறிவித்துவிட்டு, இப்போது மகள் என்று ஒருவரை அறிமுகம் செய்யும் அளவுக்குக்  கதையில் மாற்றம் செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? உங்கள் கதையின் பிரகாரம் தந்தை உள்ள நிலையில், மகள் திரையில்  தோன்றக் காரணம் என்ன? நீங்கள் எதிர்பார்த்த தந்தைக்குப் பொருத்தமான கதாபாத்திரம் இன்னமும் கிடைக்கவில்லையோ? அப்படியாயின், தந்தை உள்ளார் என்று தம்மவர் மூலம் சொல்லவைத்தது பொய் என்றுதானே எடுத்துக்கொள்ளவேண்டும்.

கடைசியாக யாரோ ஒரு அப்பாவிப்பெண்ணை சம்பந்தம் இல்லாமல் சோடித்து, வேடிக்கை காட்டியுள்ளனர் சம்பந்தப்பட்ட தரப்பினர்.

இந்நிலையில், தமிழ் மக்கள்- ஏகோபித்த அளவில் ஏற்றுக்கொள்ளும் ஒரு தலைமையை தமது சுயலாப அரசியலுக்காக அந்த தேசம் ஈழத்தில் உருவாக்க முனைகிறது. என்னவிதப்பட்டேனும், வேலுப்பிள்ளை குடும்பத்தில் இருந்து ஒருவரை முடிசூடிவிடப் படாதபாடு படுகிறது என்றால், வேலுப்பிள்ளையின் மகன் விட்டுச்சென்ற வெற்றிடம், இட்டு நிரப்பமுடியாத ஒன்று என்ற கசப்பான உண்மையை அத்தேசக்  கொள்கை வகுப்பாளர்கள் உணரத்தலைபட்டுள்ளனரோ? என்று எண்ணத்  தோன்றுகிறது.

ஆனால், எல்லாம் காலம் கடந்த ஞானம். நிமிரவே முடியாவண்ணம் ஈழத்தமிழினத்தின் அரசியற்தளம் உங்களால் சிதைக்கப்பட்டுவிட்டது. இப்போதைக்கு ஒரு ஆளுமை மிக்க தலைமை உருவாக்கம் என்பது கண்ணுக்கெட்டிய தூரம்வரை தெரியவில்லை. அதுவரைக்கும், உங்களுக்கான தெரிவுகள் குறுக்குவழிகள் தான்.

எது எவ்வாறு இருப்பினும், சீனாவையும் சிங்களத்தையும் கையாள, வேலுப்பிள்ளையின் மகன்தான்  வேண்டும் என்று அடம்பிடிக்கும் அந்த தேசம், முடிந்தால் ஒருமுறையேனும் ஈழத்தமிழருக்குப் பரிகாரம் செய்யட்டும். ஒருவேளை, அண்டத்தில் இருந்து மண்ணுக்காக மாண்டவர்கள் உங்களை ஆசீர்வதிப்பார்கள்.

ஆக, அன்னை இந்திராவின் ஆடை அலங்காரத்துடன், 'Making Of துவா_கா' படுமோசம்.

Copied:

Thanks, Uthayan S Pillai

  • Like 4
  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசியது துவாரகா தானா! சர்ச்சையை ஏற்படுத்தும் ஆடை : ஐயம் கொள்ளும் மூத்த ஊடகவியலாளர்

காணொளியில் காட்டப்படும் பெண் நிச்சயமாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகளாக இருக்க முடியாது, அவருடைய உடை, மொழி என்பன வித்தியாசப்பட்டுள்ளதுடன், இதன் பின்னணியில் இந்தியா செயற்படுகின்றது என்று மூத்த ஊடகவியலாளர் நிக்சன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகள் என்று சொல்லி தற்போது காணொளி ஒன்று வெளியாகியிருக்கும் நிலையில், அதன் உண்மைத் தன்மை தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் வரவேண்டும், குறிப்பாக அதன் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது தளபதிகள் ஆகியோர் மீண்டும் வரவேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.

காரணம், தற்போது தமிழர் பகுதியில் அதிகரித்துள்ள பௌத்தமயமாக்கலும், காணி அபகரிப்பும், இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பும் தான்.

 

இவ்வாறான நிலையில்தான் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பினரை எதிர்பார்க்கின்றனர். ஆனால் இந்த மக்களினுடைய உணர்வுகளைப் பயன்படுத்திக் கொண்டு போலியான நடவடிக்கைகளிலே சில குழுக்கள் ஈடுபடுகின்றன.

அதன் பின்னணியில் தான் தற்போது துவாரகா உரையாற்றுவது போன்றதொரு காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.

அவர் தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய தலைவர் பிரபாகரனின் மகளாக இருந்தால் அவருடை உடையின் நிறம் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டிருக்கும்.

அத்துடன் வெளிவந்துள்ள காணொளியில் மொழி வேறுபட்டிருக்கின்றது. சொற்கள் வித்தியாசமாக இருக்கின்றது. ஆகவே இது இந்தியாவில் தயார் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

இதன் பின்னணியில் இந்தியா இருக்கின்றது என்பது உறுதி செய்யப்படுவதுடன் இதற்கான பொறுப்பை இந்தியா சொல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.  

https://tamilwin.com/article/maaveerar-thinam-2023-thuvaraka-speech-1701173165

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

களவுறவு எங்கண்ட சாந்தி அக்காவும் களத்திலை....

இதில என்ன விசயம் என்றால், இந்த விசயம் தமிழ்நாட்டினையும் குழப்பி விட்டுள்ளது. ஏர்போர்ட் மூர்த்தி ஒரு அரசியல் வாதியாக கருத்து சொல்கிறார் எண்டால், அட நம்ம நம்ம பயில்வான் ரங்கநாதனும் இறங்கி கருத்து சொல்கிறார். 

 

""ஏர்போர்ட்மூர்த்தி ஒரு அரசியல் வாதியாக கருத்து சொல்கிறார் எண்டால், அட நம்ம நம்ம பயில்வான் ரங்கநாதனும் இறங்கி கருத்து சொல்கிறார்.""

தடி எடுதவணெல்லாம் தண்டல்காறன் என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, வல்வை சகாறா said:

தமிழச்சாதி இவ்வளவு தூரத்திற்கு மலினப்பட்டுவிட்டதா?

தமிழ்ச்சாதி நஹி ஹே 
ஹிந்துஸ்தான் கீ ராவ் மே ஹிந்தி மே போல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kapithan said:

""ஏர்போர்ட்மூர்த்தி ஒரு அரசியல் வாதியாக கருத்து சொல்கிறார் எண்டால், அட நம்ம நம்ம பயில்வான் ரங்கநாதனும் இறங்கி கருத்து சொல்கிறார்.""

தடி எடுதவணெல்லாம் தண்டல்காறன் என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை. 

அப்படி நான் பார்க்கவில்லை.

ஒரு ஆர்வம், அனுதாபத்தால் வந்ததாக இருக்கலாம்.

எல்லோருமே, இது போலி என்றுதானே சொல்கின்றார்கள்.

இல்லை இது உண்மைதான் என்று சொன்னால் தானே, நமக்கு சந்தேகம் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

களவுறவு எங்கண்ட சாந்தி அக்காவும் களத்திலை....

இதில என்ன விசயம் என்றால், இந்த விசயம் தமிழ்நாட்டினையும் குழப்பி விட்டுள்ளது. ஏர்போர்ட் மூர்த்தி ஒரு அரசியல் வாதியாக கருத்து சொல்கிறார் எண்டால், அட நம்ம நம்ம பயில்வான் ரங்கநாதனும் இறங்கி கருத்து சொல்கிறார். 

 

சாந்தி அக்காவுக்கு இருக்கும் புரித‌ல் துணிவு...........சில‌ முதிய‌வ‌ர்க‌ளிட‌ம் இல்லை............அருணா க‌ருணா இர‌ண்டும் ஒரே குப்பைக‌ள் தான்.............இருவ‌ரும் தேவை இல்லா ஆணிக‌ள்..............

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஈழப்பிரியன் said:

அவர் தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய தலைவர் பிரபாகரனின் மகளாக இருந்தால் அவருடை உடையின் நிறம் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டிருக்கும்.

அவசரத்தில கவனிக்க மறந்திட்டம். அடுத்த முறை மஞ்சள் சிவப்பு சாரியில அக்காவை செட்பண்ணுறம்!❤️

  • Haha 1
Link to comment
Share on other sites

துவாரகா வருவா என நம்பியவர்கள், நம்பி அதனை வெளியே காவித்திரிந்தவர்கள் அனைவரும் கபட நோக்கில்தான் செய்தனர் என்று கூற முடியாது. பலர், உண்மை என நம்பி இருந்தனர். விடுதலைப் புலிகள் மீதும், தலைவர் மீதும் கட்டமைக்கப்பட்டு இருக்கும் அதீத நம்பிக்கை அவர்கள் ஒரு போதும் இறந்து போக மாட்டார்கள் என்று நம்பும் அளவுக்கு சிலருக்கு இருந்ததை அவதானித்துள்ளேன். அந்த அதீத நம்பிக்கை, சரி பிழைகளை சீர் தூக்கிப் பார்க்கும் அறிவை மேவி இருந்தது.

ஆனால், இந்த காணோளி வந்த பின்பும், அப்பட்டமாக அது துவாரகா இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்த பின்னும் கூட, தம் தவறை ஒத்துக்கொள்ள மறுத்தும், சாக்கு போக்கு சொல்லி தம் நம்பிக்கையை நியாயப்படுத்தியும், நேரடியாக மன்னிப்பு கேட்காமல் சமாளிக்கின்றவர்களையும், "இல்லை அது துவாரகா தான்" என்று இன்னும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களையும் இனி ஒரு போதும் தமிழ் இனம் நம்பக் கூடாது. இப்படியானவர்களுக்கு தலைவர் பெயர் சொல்வதற்கும், புலிகளின், மக்களின் தியாயங்களைப் பற்றி கதைப்பதற்கும் கூட அருகதை அற்றவர்கள். இவர்களுக்கு தமிழ் தேசியம் பற்றி இனி வாயைத் திறப்பதற்கு கூட தார்மீக உரிமை இல்லை.

இந்த போலி நாடகம், பலரை எமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எனவே இந்த நாடகத்தை நடாத்தியவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டு, எம்மைச் சுற்றி இருந்த போலித் தமிழ் தேசிய வியாதிகளுக்கு ஒரே அடியாக நன்றி வணக்கம் சொல்வோம்.

  • Like 5
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Nathamuni said:

அப்படி நான் பார்க்கவில்லை.

ஒரு ஆர்வம், அனுதாபத்தால் வந்ததாக இருக்கலாம்.

எல்லோருமே, இது போலி என்றுதானே சொல்கின்றார்கள்.

இல்லை இது உண்மைதான் என்று சொன்னால் தானே, நமக்கு சந்தேகம் வரவேண்டும்.

இவர்களுடைய பேட்டிகளை நோக்குவீர்களானால் இவர்கள் அமெரிக்க அதிபரிலிருந்து சைபீரியாவின் கடைக்கோடிவரை தங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற வகையில் கூறுவார்கள். 

தமிழரின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக இவர்கள் எங்களுக்கே பாடம் எடுக்கும் காலம் தொலைவில் இல்லை.

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

இவர்களுடைய பேட்டிகளை நோக்குவீர்களானால் இவர்கள் அமெரிக்க அதிபரிலிருந்து சைபீரியாவின் கடைக்கோடிவரை தங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற வகையில் கூறுவார்கள். 

நாலு காசு பார்க்கும், கடின உழைப்பையா, உழைப்பு. 🤣

நமக்கு ஒருநாளில் கிடைக்கும் பணம், அவர்களுக்கு ஒரு மாதத்தில் கிடைத்தாலே, வண்டி அமோகமாக ஓடும். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்டைக்கு யுரூப் முழுவதும் ஒரெ அலசல்தான்.. 
 

k1.jpg

துவராகா கட்சி தொடங்கினால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கதி என்ன.? 

டிஸ்கி :

கட்சி நிதி என்று உங்களிடம் உண்டியல் குலுக்கினால் பதில் என்ன..? ரெல் மீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

துவாரகா வருவா என நம்பியவர்கள், நம்பி அதனை வெளியே காவித்திரிந்தவர்கள் அனைவரும் கபட நோக்கில்தான் செய்தனர் என்று கூற முடியாது. பலர், உண்மை என நம்பி இருந்தனர். விடுதலைப் புலிகள் மீதும், தலைவர் மீதும் கட்டமைக்கப்பட்டு இருக்கும் அதீத நம்பிக்கை அவர்கள் ஒரு போதும் இறந்து போக மாட்டார்கள் என்று நம்பும் அளவுக்கு சிலருக்கு இருந்ததை அவதானித்துள்ளேன். அந்த அதீத நம்பிக்கை, சரி பிழைகளை சீர் தூக்கிப் பார்க்கும் அறிவை மேவி இருந்தது.

ஆனால், இந்த காணோளி வந்த பின்பும், அப்பட்டமாக அது துவாரகா இல்லை என்பது மிகத் தெளிவாக தெரிந்த பின்னும் கூட, தம் தவறை ஒத்துக்கொள்ள மறுத்தும், சாக்கு போக்கு சொல்லி தம் நம்பிக்கையை நியாயப்படுத்தியும், நேரடியாக மன்னிப்பு கேட்காமல் சமாளிக்கின்றவர்களையும், "இல்லை அது துவாரகா தான்" என்று இன்னும் சொல்லிக் கொண்டு இருப்பவர்களையும் இனி ஒரு போதும் தமிழ் இனம் நம்பக் கூடாது. இப்படியானவர்களுக்கு தலைவர் பெயர் சொல்வதற்கும், புலிகளின், மக்களின் தியாயங்களைப் பற்றி கதைப்பதற்கும் கூட அருகதை அற்றவர்கள். இவர்களுக்கு தமிழ் தேசியம் பற்றி இனி வாயைத் திறப்பதற்கு கூட தார்மீக உரிமை இல்லை.

இந்த போலி நாடகம், பலரை எமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. எனவே இந்த நாடகத்தை நடாத்தியவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டு, எம்மைச் சுற்றி இருந்த போலித் தமிழ் தேசிய வியாதிகளுக்கு ஒரே அடியாக நன்றி வணக்கம் சொல்வோம்.

எத்த‌னை ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ள் உயிர் தியாக‌ம் செய்து..........எங்க‌ட‌ மாபெரும் த‌லைவ‌ர் த‌ன் குடும்ப‌த்தையே போர்க‌ள‌த்தில் இழ‌ந்து தானும் வீர‌ச்சாவு அடைந்து விட்டார்...........ஆனால் இப்போது குண்டு பூச‌னிக்காய்க்கு மேக்க‌ப்ப‌ போட்டு எம் போராட்ட‌த்தையும் இழிவு ப‌டுத்தி...........எதிரிக‌ள் சிரிக்கும் அள‌வுக்கு கொண்டு வ‌ந்து விட்டாங்க‌ள்...............இந்த‌ உல‌கில் ந‌ல்ல‌வ‌ர்க‌ளுக்கு கால‌ம் இல்லை க‌ய‌வ‌ர்க‌ள் தான் உல்லாச‌ வாழ்க்கைய‌ குறுக்கு வ‌ழியில் வாழ்ந்து கொண்டு இருக்கின‌ம்...............துரோகிய‌ல் எப்ப‌வும் ஆவ‌த்தான‌வ‌ர்க‌ள்...............காசுக்காக‌ எந்த‌ ம‌ட்ட‌த்துக்கும் போவார்க‌ள் என்ப‌துக்கு நேற்றையான் காணொளி சாட்சி.............

Link to comment
Share on other sites

துவாரகா திரைப்படத்துக்கு blue சட்டை மாறனின் review வந்துவிட்டதா?! 😂

Edited by இசைக்கலைஞன்
  • Thanks 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இன்டைக்கு யுரூப் முழுவதும் ஒரெ அலசல்தான்.. 
 

k1.jpg

துவராகா கட்சி தொடங்கினால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் கதி என்ன.? 

டிஸ்கி :

கட்சி நிதி என்று உங்களிடம் உண்டியல் குலுக்கினால் பதில் என்ன..? ரெல் மீ

இதற்காகத்தான் ஹிந்தியா துவாரகா என்கிற பெயரில், இலங்கையில் தோற்றுவிட்ட தனது வெளியுறவுக் கொள்கைக்கு புதிய (போலித்)  தலைமையை உருவாக்க நினைக்கிறது. 

இலங்கைத் தமிழும் சிங்களமும் ஹிந்தியாவிக்கெதிராகத் திரும்பி வெகு நாளாச்சு கண்டியளோ,.....

இனி மலையகத் தமிழரும் திரும்புவார்கள்.

அப்போது மெல்ல  இந்தியா சாகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, இசைக்கலைஞன் said:

துவாரகா திரைப்படத்துக்கு blue சட்டை மாறனின் review வந்துவிட்டதா?! 😂

மீண்டும் க‌ண்டது ம‌கிழ்ச்சி🙏............

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.
    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
    • "தாய்மை"  "காதல் உணர்வில் இருவரும் இணைய  காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட   காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.