Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவேந்தலுக்கு சிறுவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் பொலிஸ் விசாரணை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

மாவீரர் நினைவேந்தலுக்கு சிறுவர்களை ஈடுபடுத்தியமை தொடர்பில் பொலிஸ் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஆடை அணிந்து சயனைட் போன்றவற்றை கழுத்தில் வைத்து நினைவேந்தலில் ஈடுபட 3 சிறுவர்களை பாவித்தமை தொடர்பில் யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் வீசாந்தவின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

போரில் உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்களை நினைவு கூரும் வகையில் கோப்பாயில் உள்ள துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்காக இந்த மூன்று சிறுவர்களும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று சிறுவர்களின் பெற்றோர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

https://athavannews.com/2023/1361295

  • கருத்துக்கள உறவுகள்

புலி போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடை - கோப்பாய் பொலிஸார் 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Published By: VISHNU    29 NOV, 2023 | 07:19 PM

image

மாவீரர் தின நிகழ்வில் விடுதலைப்புலிகளின் போராளிகளின் ஆடைகளை ஒத்த ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து வந்தனர் எனும் குற்றச்சாட்டில், கோப்பாய் பொலிஸார் ஆறு பேரிடம் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். 

யாழ்ப்பாணம், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் போது, விடுதலைப்புலிகளின் போராளிகள் போன்ற ஆடைகளை சில சிறுவர்கள் அணிந்து இருந்தனர் என சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன. 

அவை தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், படங்களில் இனம் காணப்பட்ட சிறுவர்களின் பெற்றோரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அவர்களின் வாக்கு மூலங்களை பெற்றுள்ளனர். 

வாக்கு மூலங்களின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுக்க உள்ளதாகவும், எவரையும் இது வரையில் தாம் கைது செய்யவில்லை எனவும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/170587

  • கருத்துக்கள உறவுகள்

இதை பார்த்தபோதே இது ஒரு தேவையில்லாத வேலை என்றே எண்ணினேன் 
வழக்கு பதிவுசெய்தால் வாதாடி வெல்வது மிகவும் கடினமானது 
மாவீரர் நாள் செய்வதே இப்போதைக்கு பெரிது அதை நேர்த்தியாக செய்வதுதான் நன்று.

41 minutes ago, Maruthankerny said:

இதை பார்த்தபோதே இது ஒரு தேவையில்லாத வேலை என்றே எண்ணினேன் 
வழக்கு பதிவுசெய்தால் வாதாடி வெல்வது மிகவும் கடினமானது 
மாவீரர் நாள் செய்வதே இப்போதைக்கு பெரிது அதை நேர்த்தியாக செய்வதுதான் நன்று.

நானும் அந்த படங்களை பார்த்தேன், உண்மையிலேயே இது ஒரு தேவையில்லாத வேலை, அத்துடன் பின் விளைவுகள் பற்றி எதனையும் யோசிக்காமல் செய்த வேலை இது.

  • கருத்துக்கள உறவுகள்+

அந்தச் சின்னனுகளுக்கு தாம் எதை அணிந்துள்ளோம் என்பது கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதுவொரு தேவையில்லாத ஆணியே.

மேலும் இதை ஏதோ கெத்து என்று வெளிநாட்டில் இருந்து கொம்பு சீவிவிடும் எம்மவர்கள் தம் செயலை நிறுத்திவிட வேண்டும். அப்படி இல்லையெனில் தம் பிள்ளைகளுக்கு இவ்வாறு உடுத்தி நாட்டில் கொண்டுசென்று இறக்கி கெத்துக் காட்டுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது இருக்கும் சுதந்திரத்தை தந்திரமாக கையாள வேண்டும்.இவை வரலாறுகள் சொல்லித்தந்த பாடங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த பிள்ளைகளின் பெற்றோரின் விடுதலைபோராட்டத்தின் மீதான பற்றுக்கு அந்த நினைவுகளை கனவுகளை அடுத்த சந்ததிக்கும் கடத்த துடிக்கும் அவர்களின் சிந்தனைக்கு தலைவணங்க வேண்டும்.. அதுவும் ஊரில் இருந்து கொண்டு இதை செய்வதென்பது ஒரு போதும் படங்காட்டுதல் வகைக்குள் வராது.. அடுத்து என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொண்டும் இதை செய்வதென்பது விடுதலைக்கு வீழ்ந்தவர்கள் மீதான உணர்ச்சிகளின் சிந்தனைகளின் போராட்டத்தின் மீதான பற்றின் அந்த நினைவுகளோட அழுந்திக்கிடப்பதன் உச்ச வெளிப்பாடுதான் இது.. 

எந்த வித வன்முறையும் இல்லாமல் எம் உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்துவது தப்பில்லைத்தானே.. அடையாள நினைவு படுத்தல் அவர்கள் செய்தது.. அவர்கள் குழந்தைகளிடம் குண்டு கொடுக்கவில்லை.. இனவெறுப்பு பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை..

ஆயினும்

இந்த செயலால் அடுத்து வரும் மாவீரர் நினைவேந்தல்களுக்கு எந்த தடையோ சிக்கலோ ஏற்படாத வரைக்கும்.. அப்பாவி பொது மக்களுக்கு எந்த சிக்கலும் ஏற்படாத வரைக்கும்..

அந்த குழந்தைகளுக்கு எதுவும் சிக்கல்கள் ஏற்படாதவரைக்கும்..( பெரியவர்களுக்கு நிகழும் சிக்கல்களுக்கு அவர்கள்தான் பொறுப்பு.. ஏனெனில் அவர்கள் தாம் செய்வது என்ன என்று தெரிந்து செய்கிறார்கள்..சிறுவர்கள் தாம் செய்வது என்ன என்று தெரியாமல் செய்ய வைக்கப்படுபவர்கள்.. அதனால் அவர்களுக்கு சிக்கல் ஏற்படும் எந்த செயலும் சிறுவர் துஸ்பிரயோகமே..)

அவர்கள் செயல் ஓகேயாக இருக்கும்.. இல்லை என்றால் அவர்கள் இதை செய்யாமல் விடுவது பொது நோக்கில் நல்லது..

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகாலம் சிங்கள அரசு தமிழீழ விடுதலைபுலிகள் சிறுவர்களை தம் படையணியில் சேர்க்கிறார்கள் என்று ஓயாமல் பிரச்சாரம் செய்து ஐக்கியநாடுகள் சபைவரை அந்த விஷயத்தை கொண்டு சென்று புலிகள் த்டைவிசயத்தில் அதுவும் ஒரு காரணியாக அந்த முயற்சியில் சர்வதேச அளவில் வெற்றியும் பெற்றார்கள்.

அது ஒன்றும் தமிழ்மக்கள்மீதுகொண்ட அக்கறையல்ல, அதே சமகால பகுதியில் நாகர் கோவிலிலும் முல்லை தீவிலும் குண்டுகள் வீசி ஏராளமான பள்ளி சிறுவர்களை கொன்று குவித்த்து கொண்டிருந்தார்கள்.

இதேபோல்தான் இறுதி யுத்த காலபகுதியில் புலம்பெயர் நாடொன்றில் ஊர்வலம் சென்ற 7 வயசு சிறுமியிடம் 50 வயசினை கடந்தும் அனுபவம் இல்லாத எம்மவர் ஒருவர்  நீங்கள்  சிறிலங்கா போய் துவக்கு எடுத்து சிங்களவனை கொல்ல வேணூமா? என்று பேட்டி எடுத்து அது அந்நேர போராட்டங்களையே திசை திருப்பும் அளவிற்கு போக பார்த்தது.

ஐரோப்பாவிலும்மேடை நிகழ்ச்சியொன்றில் புலி சீருடை துப்பாக்கி ஏந்தி சிறுவன் ஒருவனை மேடைஏற்றி அதுவும் விவகாரமானது.

இலங்கையில் மாவீரர்நாளை எப்படி தடை செய்யலாம் என்று ஓரிரு சிங்கள அமைச்சர்களும் எதிர் கட்சிகளும் சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கிடக்கின்றன, இதுபோன்ற சம்பவங்களை வைத்தே நீதிமன்றம் ஏறி தடைவாங்க வாய்ப்புகள் தாராளமாக உண்டு.

இவர்கள் என்ன செய்கிறோம் என்று தெரிந்து செய்கிறார்களா, இல்ல மனம் விட்டு அழ கிடைத்த ஒரு நாளையும் மழுங்கடிக்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

அவசியமான உணர்வேந்தும் நாளில்  அநாவசியமான உணர்ச்சிவசம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

முதலில் இந்த பிள்ளைகளின் பெற்றோரின் விடுதலைபோராட்டத்தின் மீதான பற்றுக்கு அந்த நினைவுகளை கனவுகளை அடுத்த சந்ததிக்கும் கடத்த துடிக்கும் அவர்களின் சிந்தனைக்கு தலைவணங்க வேண்டும்

மன்னிக்கவும் பாலபத்திர ஓணாண்டிப் புலவரே 

இது தலை வணங்க வேண்டிய செயல் அல்ல. எதிர் காலத்தில் மாவீரர் தினத்துக்கு தடை வாங்கி கொடுக்கும் வகையிலான முட்டாள்தனமான முன்யோசனை அற்ற செயல் அல்லது வேண்டுமென்றே தடைவங்கி  கொடுக்க வழி சமைக்கும் வகையிலான செயல்.  இன்றைய நிலையில்,  புலிகளின  சீருடைகளையும்  சயனைட் குப்பிகளை அணிவதும் எமது அரசியல் தீர்வுக்கு என றுமே உதவி செய்யாது.  மாவீர்களுக்கு  கொடுக்கவேண்டிய மரியாதையை கொடுப்பதுடன் அதை நிரந்தரமாக தாயகத்தில் செய்யக்கூடியதை கெடுக்கும் எவையும் எமக்கு பாதகமாகவே அமையும். வன்மையாக கண்டிக்கவேண்டிய செயல். 

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா...இது சட்டப் பிரச்சனை என்றால்....முன்பள்ளி ..மதல் ஆரம்ப பாடசாலை வரையான் விளையாட்டுப் போட்டிகளில்...ஆமி வேசம் பொலிசு வேடம்..பிச்சைக்கரன் வேடம் போடுவதே தப்புத்தானே...அது என்ன எம்முடைய நிகழ்வில் மாட்டும் சட்டப் பிரச்சினை...சட்டப் பிரச்சினை எடுக்கிற  பதில் பொலிசு மா அதிபரே...சகரான் பிரச்சினை மறைத்த...குற்றவாளீ...அப்படி அவர்கள்  சட்டநடவடிக்கை எடுத்தால் அதுவும் ஒரி இனத்துவேச நடவடிக்கைதான்...இதில் என்ன சிறுவர் போராளி  என்றல் ..சிறுவர்   ஆமி 
 பொலிசுதான்... என்ன வேறுபாடு இருக்க முடியும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

சிங்கள சிறுவர்கள்... சிங்கள இராணுவத்தைப் போல் உடையணிந்தால்,
பொலிஸ் விசாரணை செய்கின்றதா?
தமிழன் என்றால்… தொட்டது எல்லாத்துக்கும் விசாரணை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: 

அவர்கள் தான் பிடிப்பார்கள் என்று தெரியும் தானே, 

அதை செய்யாதீர்கள் இதைச் செய்யாதீர்கள், 

இவர்கள் உசுப்பேத்துவார்கள் , 

அவர்களுக்கு பிடிக்காததை செய்யாதீர்கள்..! 

அவர்களுக்கு 1950ம் ஆண்டளவில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருப்பது பிடிக்கவில்லை

அதே நேரம் அரச உயர் பதவிகளில் தமிழர்கள் இருப்பது பிடிக்கவில்லை

பல்கலைக்கழகத்துக்கு அதிக தமிழ் மாணவர்கள் செல்வது பிடிக்கவில்லை

தமிழர்களுக்கு ஒரு பெரிய நூலகம் இருப்பது பிடிக்கவில்லை

தமிழர்கள் தங்கள் உரிமை போராட்டத்தில் ஈடுபடுவது பிடிக்கவில்லை

தமிழர்கள் தனி நிலப்பரப்பில் வாழ்வது பிடிக்கவில்லை 

தமிழர்களுக்கு உரிமையும் சுதந்திரமும் இருப்பது பிடிக்கவில்லை

அவர்கள் கேட்கும் சுயநிர்ணயமும் அதிகாரப்பரவலாக்கலும் பிடிக்கவில்லை 

அவர்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்றால் நீங்கள் உங்களையே இழக்க வேண்டும் , அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நீங்கள் ஏதோ உங்கள் இனதுக்காக செய்கின்றீர்கள் என்று அர்த்தம்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0Azqn8G9ESgfEGXrci2cVBXHTrggo5g3UC2C5uAAySy3GVrRsVXiwMHoJ3BQnFtdJl&id=564189140

தாயகத்தில் இருந்து இன்னொரு முகநூல் பதிவு: 

ஆடைச் சுதந்திரத்துக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் அவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது...

ஆனால்...

ஆடைச் சுதந்திரம், அதுவும் சிறுவர்களின் ஆடைச் சுதந்திரத்துக்கு எதிரான இந்த அரச பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் கேள்வி கேட்பதற்க்கும் பதிலாக,

ஆடை அணிந்த குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர்களையும் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள் சில தற்குறிகள்.

கருத்துச் சுதந்திரம், பெண்களின் ஆடைச் சுதந்திரம், தனிநபர் சுதந்திரம், ஓரினச் சேர்க்கைச் சுதந்திரம்... என இன்னோரன்ன சுதந்திரம் பற்றியெல்லாம் வாய்கிழியப் பேசும், பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் சுதந்திரவாதிகள் வழமைபோல் கள்ள மௌனம் காக்கிறார்கள்.

ஆடை நாகரீகம் எப்படி மனித வரலாற்றில் பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பது பற்றிக் கூட அறியாதவர்களா இவர்கள்?

மாடு மேய்ப்பவர்கள், பண்ணைகளைப் பராமரிப்பவர்கள், நிலச்சுரங்கத் தொழிலாளர்கள் போன்ற கடும் உழைப்பாளிகளின் ஆடையாக இருந்த டெனிம்தான் இன்று உலகெங்கும் எல்லா இளைஞர்களினதும் நாகரீக ஆடையாக மாறியது.

சேகுவரா, பெடல் காஸ்டோ போன்றோர் அணிந்தது போன்ற ஆடைகள் நாகரீகமாக மாறின.

காந்தியவாதிகளின் ஆடைகள் நாகரீகமாகின.

ஏனெனில் அவ்வகை ஆடைகள் அணிபவர்களுக்கு அந்த ஆடையில் ஏதோ ஒரு வகையில் சௌகரியம் உள்ளது. அந்த ஆடை அவர்களை புத்தெழுச்சிக்கு உள்ளாக்குகிறது.

இப்படித்தான் ஆடைகளின் நாகரீகம் வளர்ந்தது. 

அதே போன்று பு லி போராளிகள் அணிந்த பருத்தித் துணியிலான எளிமையான இந்த வகை ஆடைகளும், கூடவே அவர்களின் எளிமையான சிகை அலங்கராமும் நாகரீகமாவதும் பண்பாடாக மாறுவதும் தவிர்க்க முடியாததாகும்.

கம்பீரத்தையும், தற்துணிவையும், தன்னம்பிக்கையையும் தரும் விலை குறைந்த ஆடைகளை சிறுவர்களும் இளைஞர்களும் அணிவது ஆரோக்கியமானதே.

ஆரோக்கியமானதும், அழகானதும், விருப்பமானதுமான ஆடைகளை அணிவது மனிதர்களின் சுதந்திரம்.

அந்த ஆடைக்களை அணிபவர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பிரயோகிப்பது எவ்வளவு பெரிய பாசிசம், அடக்குமுறை, கொடூரம்?

இதுவே பயங்கரவாதம் - அரச பயங்கரவாதம்!

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid028YRwUm4xRBHt8ADENDmvmsQYjHowHJ9hDAhm99HXycJ491tu59RVZ3oMpLu3ca6Dl&id=1119806244

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு தாயகத்தில் இருந்து  முகநூல் பதிவு: 

ஒருத்தனுக்கு தன் தேசத்தில் வாழும் உரிமை பேசும் உரிமை உண்ணும் உரிமை தேசத்துக்கு கொடுக்கும் வரிக்குரிய வசதிகளை அனுபவிக்கும் உரிமை மொழி உரிமை கல்வி உரிமை உடை உடுக்கும் உரிமை விவசாயம் செய்யும் உரிமை பயணிக்கும் உரிமை மரணித்த தன் உறவுகள் நண்பர்களை நினைவு கூரும் உரிமை என இன்னோரன்ன பல உரிமைகள் இருக்கின்றன. அவை மறுக்கப்படுகின்ற போது ஏதோ ஒரு வழியில் போராட தலைப்படுகின்றான் போராட்ட வடிவங்கள் மாறுபடுகின்றன.

இந்த நிலையில் போராட்டங்களின் அழுத்தங்களின் விளைவாக மறுக்கப்பட்டவைகள் மறுக்கப்படாமல் போகின்றன. தடைகள் நீக்கப்படுகின்றன. அல்லது பகுதியளவில் அந்த உரிமைகள் மீள அனுபவிக்க முடிகின்றது. இங்கே ”அனுமதி வழங்குதல் ” என்ற ஒன்றே இல்லை. யாருக்கு யார் அனுமதி வழங்குவது ? உரிமைகளை அனுபவிப்பதற்கு யாருடய அனுமதியும் தேவையில்லை.  

பொதுவாக அடக்குமுறை ஆட்சியாளர்களுடன் ஒட்டி திரிகின்றவர்கள் போராட்டங்கள் மற்றும் புற - அக அழுத்தங்களினால் எமக்கு இயல்பாகவே அனுபவிக்க ஏற்படுகின்ற சில உரிமைகளுக்கான வசதிகளை தாம் பெற்று தந்ததாகவும், அது சலுகை என்றும் கூவித்திரிவதும் அதற்கு உரிமை கோருவதும் அதற்காக தங்களை ஆதரிக்க கோருவதும் வழமை.  

இந்த அடிப்படை தத்துவத்தை கூட புரிந்து கொள்ளமுடியாத அறிவிலிகள் பலர் நினைவேந்துவதற்கு உரிமை வந்துவிட்டது குழப்பி விடாதீர்கள் படகை ஆட்டி விடாதீர்கள் என்று , எங்களுக்கு அடுத்த முறை இதை அனுபவிக்கமுடியாமல் செய்து விடுவார்கள் என்று , அடிமை மனநிலையில் கூவிக்கொண்டிருப்பது இன்னும் தங்களை கையேந்துபவர்களாக உருவகப்படுத்துவதாகவே அமையும் .எங்களது உச்ச கட்ட உரிமைகளை அனுபவிக்கும் வரை நாம் போராடிக்கொண்டிருக்கவேண்டும். அதே வேளை எமது கட்டமைப்புக்கைளையும் மேம்படுத்தி எமது தேசத்தை கட்டி எழுப்பவும் வேண்டும் இது இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெறவேண்டும் . கிடைத்தது காணும் வாழ்க்கையினை கைய கட்டி குனிந்த நின்று பயந்து பயந்து வாழவேண்டிய அவசியம் எமக்கு இல்லை. 

எமக்கு வகுப்பு எடுப்பவர்களில் பலர் உரிமைகளை அனுபவிக்கும் நாடுகளில் இருந்து கொண்டு கதைப்பது தான் அவர்களது பின்புலங்களை பற்றிய கேள்விகளை உருவாக்குகின்றது. 

போராட்டங்கள் தடை உடைக்கும் முயற்சிகளில் ஒருதேசத்தின் அனைத்து மக்களும் ஈடுபடுவதில்லை. ஒவ்வொரு தரப்பும் தனக்கு முடிந்த வழிகளில் அதற்கான முயற்சிகளை எடுக்கும் முடிவு விளைவு ஒன்றாகவே இருக்கும். அந்த பொழுதில் ஆகக்குறைந்தது முயற்சிக்கும் தரப்பை விமர்சிக்காமல் அவர்களுடைய கஸ்டங்களுக்காக ”நீலிக்கண்ணீர் ” வடிக்காமல், ”முடிந்தால் உதவி இல்லாவிட்டால் அமைதி” என்று இருக்கவேண்டும். ஒரு இடத்துக்கு போக பல வழிகள் உண்டு நீங்கள் முயற்சிக்காத வழியை இன்னும் ஒருவர் முயற்சிக்கலாம். 

ஒரு விடயம் உங்களுக்கு ஆபத்தானதாக படும் ஆனால் இன்னும் ஒருவருக்கு சுலபமாக இருக்கும். இது அவரவர் மனநிலை, போராடும் திறன் சம்பந்தப்பட்டது. இந்தக்கருத்தியலை மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. உங்களால் முடியுமா என சிலர் கேட்பார்கள் அவர்களை பார்த்து சிரித்து விட்டு கடந்து விடவேண்டியதுதான். 

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் . எமக்கு இன்னும் உரிமைகள் பல மறுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெறுபவை அழுத்தங்களின் விளைவே தவிர அவர்கள் விரும்பி விட்டுக்கொடுப்பவையல்ல. அவர்கள் எதையும் விட விருப்பமில்லாதவர்கள் . எனவே அவர்களை நாம் ஒரு போதும் திருப்திப்படுத்த முடியாது. அனுமதி கிடைத்தது என்ற சொல்லை தயவு செய்து பயன்படுத்தி உங்களை நீங்களே தரம் தாழ்த்திக்கொள்ளாதீர்கள். மறுக்கப்படுகின்ற காலம் எல்லாம் அனைத்தும் உடைத்து நிகழ்வுகளும் நினைவேந்தல்களும் நடைபெற்றன. அதனை நாம் பகிர்ந்து மகிழ்ந்தோம். ஆக இது ஒன்றும் வரப்பிரசாதங்களல்ல அவர்கள் எம்மை அடக்கி ஒடுக்கியதற்காக வெட்கி தலைகுனியும் தருணங்கள் . 

நாம் இறைச்சிக்காக அடிபட்டுகொண்டிருக்கையில் தின்று மிஞ்சிய எலும்புகளை தந்ததற்காக மகிழ்வடையவேண்டியதில்லை. தயவு செய்து குழப்ப வேண்டாம் படகை ஆட்டவேண்டாம் என்று எங்கள் படலைகளை ஆட்டவேண்டாமே.

உங்களுக்கு அழிந்த அடையாளங்களை தடங்களை மீள பார்க்க விருப்பமில்லையா பேசாமல் உங்கள் உங்கள் கடமைகளை மட்டும் செய்து கொண்ட சுயநலமாக வாழுங்கள் யாரும் உங்களை தொந்தரவு செய்யமாட்டார்கள் .

ஒன்றை மட்டும் நினைவு கொள்ளுங்கள் நீங்கள் அனுபவிக்கும் உரிமைகளிலும் யாரோ ஒருவர் போராடியதன் பங்கு உள்ளது. அந்த நேரத்திலும் ஒருத்தன் படகை ஆட்டவேண்டாம் குழப்பிவிடவேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

#உரிமை vs #சலுகை #அனுமதி

https://www.facebook.com/564189140/posts/pfbid02VhqtFnB6CiSFLyeDvnnLa2bbLVUjhu8atsQCKKjkoc3CqQwUhFXNc64kkh9Eq4Dcl/

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

spacer.png

சிங்கள சிறுவர்கள்... சிங்கள இராணுவத்தைப் போல் உடையணிந்தால்,
பொலிஸ் விசாரணை செய்கின்றதா?
தமிழன் என்றால்… தொட்டது எல்லாத்துக்கும் விசாரணை.

அங்கீகரிக்கப்பட்ட ஒருநாட்டு பாதுகாப்பு படைகளின் மாதிரி உடைகளை அணிவது சட்டப்படி குற்றம் என்று நீங்கள் நீதிமன்றம் சென்று வாதிட்டாலும் அது செல்லுபடியற்றதாகிவிடும். அப்படித்தான் இருக்கிறது உலக நியதி

27 minutes ago, விசுகு said:

ஆரோக்கியமானதும், அழகானதும், விருப்பமானதுமான ஆடைகளை அணிவது மனிதர்களின் சுதந்திரம்.

அந்த ஆடைக்களை அணிபவர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பிரயோகிப்பது எவ்வளவு பெரிய பாசிசம், அடக்குமுறை, கொடூரம்?

இதுவே பயங்கரவாதம் - அரச பயங்கரவாதம்!

.விசுகு அண்ணா என்றிலிருந்து இப்படி ஒரு குழப்ப நிலைக்கு ஆளானீர்களோ தெரியவில்லை, இவர்களின் யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளாத பதிவை எதற்குத்தான் பதிவேற்றுகிறீர்களோ என்றும் தெரியவில்லை.

இந்த கட்டுரை எழுதியவர் யாரை பார்த்து இந்த கேள்விகளை கேட்கிறார்?

இந்தளவிற்கெல்லாம் ஜனநாயக உரிமைகளை மதித்து நடக்கும் காது கொடுத்து கேட்கும் ஒரு நாடாக சிங்கள தேசம் இருந்திருந்தால் ஆயுதபோராட்டம் என்பதே தமிழர் தரப்பில் ஆரம்பித்திருக்காது இத்தனை ஆயிரம் போராளிகள் மக்களை நாங்கள் பல தசாப்தங்களாக இழந்திருக்கமாட்டோம் என்பதும் கட்டுரையாளருக்கு புரியவில்லை போலும்.

அவர் இன்னும் 2009க்கு முற்ற்பட்ட காலத்தில் இருந்ததுபோலவே வானொலி விவாதங்கள் கவிதை கட்டுரை,புரட்சி பாடல்கள் காலத்தில் வாழ்கிறார், நாமும் அந்த காலகட்டத்தை விரும்பியிருந்தோம் அனுபவித்தோம்,

ஆனால் காலமாற்றத்தில் எம்மை சுற்றி என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை உள்வாங்கிகொள்ள விரும்பாமல் கடந்தகால கொந்தளிப்பு நிலைக்கு ஆசைப்பட்டால் உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா என்ற நிலமைதான்.

எதையும் காலம் கடந்தே புரிந்து நொந்துகொள்ளும் எம்மினம், இன்று அனுஷ்டிக்க கிடைத்த மாவீரர் நாளையும் இழந்த பின்னர் இதுக்காக காலம் கடந்து வருந்தியே ஆகும்.

41 minutes ago, விசுகு said:

தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: 

அவர்கள் தான் பிடிப்பார்கள் என்று தெரியும் தானே, 

அதை செய்யாதீர்கள் இதைச் செய்யாதீர்கள், 

இவர்கள் உசுப்பேத்துவார்கள் , 

அவர்களுக்கு பிடிக்காததை செய்யாதீர்கள்..! 

அவர்களுக்கு 1950ம் ஆண்டளவில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக இருப்பது பிடிக்கவில்லை

அதே நேரம் அரச உயர் பதவிகளில் தமிழர்கள் இருப்பது பிடிக்கவில்லை

பல்கலைக்கழகத்துக்கு அதிக தமிழ் மாணவர்கள் செல்வது பிடிக்கவில்லை

தமிழர்களுக்கு ஒரு பெரிய நூலகம் இருப்பது பிடிக்கவில்லை

தமிழர்கள் தங்கள் உரிமை போராட்டத்தில் ஈடுபடுவது பிடிக்கவில்லை

தமிழர்கள் தனி நிலப்பரப்பில் வாழ்வது பிடிக்கவில்லை 

தமிழர்களுக்கு உரிமையும் சுதந்திரமும் இருப்பது பிடிக்கவில்லை

அவர்கள் கேட்கும் சுயநிர்ணயமும் அதிகாரப்பரவலாக்கலும் பிடிக்கவில்லை 

அவர்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்றால் நீங்கள் உங்களையே இழக்க வேண்டும் , அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நீங்கள் ஏதோ உங்கள் இனதுக்காக செய்கின்றீர்கள் என்று அர்த்தம்.

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0Azqn8G9ESgfEGXrci2cVBXHTrggo5g3UC2C5uAAySy3GVrRsVXiwMHoJ3BQnFtdJl&id=564189140

தாயகத்தில் இருந்து இன்னொரு முகநூல் பதிவு: 

ஆடைச் சுதந்திரத்துக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டம் அவிழ்த்துவிடப்பட்டிருக்கிறது...

ஆனால்...

ஆடைச் சுதந்திரம், அதுவும் சிறுவர்களின் ஆடைச் சுதந்திரத்துக்கு எதிரான இந்த அரச பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் கேள்வி கேட்பதற்க்கும் பதிலாக,

ஆடை அணிந்த குழந்தைகளையும் அவர்களின் பெற்றோர்களையும் குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள் சில தற்குறிகள்.

கருத்துச் சுதந்திரம், பெண்களின் ஆடைச் சுதந்திரம், தனிநபர் சுதந்திரம், ஓரினச் சேர்க்கைச் சுதந்திரம்... என இன்னோரன்ன சுதந்திரம் பற்றியெல்லாம் வாய்கிழியப் பேசும், பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் சுதந்திரவாதிகள் வழமைபோல் கள்ள மௌனம் காக்கிறார்கள்.

ஆடை நாகரீகம் எப்படி மனித வரலாற்றில் பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பது பற்றிக் கூட அறியாதவர்களா இவர்கள்?

மாடு மேய்ப்பவர்கள், பண்ணைகளைப் பராமரிப்பவர்கள், நிலச்சுரங்கத் தொழிலாளர்கள் போன்ற கடும் உழைப்பாளிகளின் ஆடையாக இருந்த டெனிம்தான் இன்று உலகெங்கும் எல்லா இளைஞர்களினதும் நாகரீக ஆடையாக மாறியது.

சேகுவரா, பெடல் காஸ்டோ போன்றோர் அணிந்தது போன்ற ஆடைகள் நாகரீகமாக மாறின.

காந்தியவாதிகளின் ஆடைகள் நாகரீகமாகின.

ஏனெனில் அவ்வகை ஆடைகள் அணிபவர்களுக்கு அந்த ஆடையில் ஏதோ ஒரு வகையில் சௌகரியம் உள்ளது. அந்த ஆடை அவர்களை புத்தெழுச்சிக்கு உள்ளாக்குகிறது.

இப்படித்தான் ஆடைகளின் நாகரீகம் வளர்ந்தது. 

அதே போன்று பு லி போராளிகள் அணிந்த பருத்தித் துணியிலான எளிமையான இந்த வகை ஆடைகளும், கூடவே அவர்களின் எளிமையான சிகை அலங்கராமும் நாகரீகமாவதும் பண்பாடாக மாறுவதும் தவிர்க்க முடியாததாகும்.

கம்பீரத்தையும், தற்துணிவையும், தன்னம்பிக்கையையும் தரும் விலை குறைந்த ஆடைகளை சிறுவர்களும் இளைஞர்களும் அணிவது ஆரோக்கியமானதே.

ஆரோக்கியமானதும், அழகானதும், விருப்பமானதுமான ஆடைகளை அணிவது மனிதர்களின் சுதந்திரம்.

அந்த ஆடைக்களை அணிபவர்கள் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பிரயோகிப்பது எவ்வளவு பெரிய பாசிசம், அடக்குமுறை, கொடூரம்?

இதுவே பயங்கரவாதம் - அரச பயங்கரவாதம்!

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid028YRwUm4xRBHt8ADENDmvmsQYjHowHJ9hDAhm99HXycJ491tu59RVZ3oMpLu3ca6Dl&id=1119806244

இந்த இரண்டை எழுதியவர் ஒருவர் தான். இவர் இவ்வாறு ஆடை அணிந்து மாவீரர் நாளுக்கு சென்றாரா? ஆகக் குறைந்தது மாவீரர் நாளுக்கு சென்ற தன் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளாரா?

மற்றவன் பிள்ளை மாட்டுப்பட்டால் குரல் கொடுப்பவர், தான் முன்னுக்கு நின்று அவ்வாறு செய்து இருக்க வேண்டும். இல்லை எனில், கைதான அந்த பிள்ளைகளின் பெற்றோருக்கு ஏற்படுகின்ற சட்ட சிக்கல்களை தீர்க்க உதவி செய்ய வேண்டும்.

கடந்த மூன்று நாட்களாக விசைப்பலகையில் குத்தி முறிவது மட்டும்தான் அவர் செய்கின்றார். ஆகக் குறைந்தது மைந்தன் சிவா வந்து முகனூலில் கேட்கும் கேள்விகளுக்காவது நேர்மையாக பதில் சொல்ல வேண்டும்.

இப்பவெல்லாம் நீங்கள், யார் என்ன சொல்கின்றார் என்பதை விட, அவர் எந்த ஊரில் பிறந்தவர் என்பதைப் பார்த்து தான் நம்புகின்றீர்களோ என எனக்கு சந்தேகம் வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

சிங்கள சிறுவர்கள்... சிங்கள இராணுவத்தைப் போல் உடையணிந்தால்,
பொலிஸ் விசாரணை செய்கின்றதா?
தமிழன் என்றால்… தொட்டது எல்லாத்துக்கும் விசாரணை.

இந்த ஒரு படத்தை வைத்தே வழக்கை உடைக்கலாம்.சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி விடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

405336203_10230256199845139_828112249227

இது ?

  • கருத்துக்கள உறவுகள்+

பணம் சம்பாதிக்க வழி கிடைச்சிட்டாசால் காணும், எப்படியேனும் உண்டியலை நிரப்பிட வேணும். 

அதே பொன்னம்பலக் காலத்து நடைமுறை.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிழலி said:

இப்பவெல்லாம் நீங்கள், யார் என்ன சொல்கின்றார் என்பதை விட, அவர் எந்த ஊரில் பிறந்தவர் என்பதைப் பார்த்து தான் நம்புகின்றீர்களோ என எனக்கு சந்தேகம் வருகின்றது.

ஞானதாஸ் பருத்தித்துறையை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். 

பரவாயில்லை அந்தாள் மீதே தனது ஊர்காரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தது தானே??

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

இந்த ஒரு படத்தை வைத்தே வழக்கை உடைக்கலாம்.சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி விடுங்கள்.

செய்தது சரியா, பிழையா என்ற வாதங்களுக்கு நான் வரவில்லை.

ஆனால் இலங்கை சட்டப்படி (எனது கருத்தின்படி அல்ல), இலங்கை படைகளும், புலிகளும் ஒன்றல்ல.  ஒன்று அரச படை, மற்றையது தடை செய்யப்பட்ட அமைப்பு.

ஆகவே ஒன்றை அனுமதிப்பதால், மற்றையதை அனுமதிக்க வேண்டும் என்ற வாதம் இலங்கை கோர்ட்டில் வெல்லும் என நான் கருதவில்லை.

இங்கே கூட இதே நிலைதான். அண்மையில் நடந்த போராட்டங்களில் ஹமாஸ் சீருடையில் வந்தோரை தேடுவதாக இலண்டன் பொலிஸ் அறிவித்தது. ஆனால் நைட் கிளப்புக்கு பொலிஸ் சீருடையில் போவோர் மீது ஒரு தடையும் இல்லை.

@alvayan

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ம் நீங்கள் சொல்வதும் சரி தான்.

  • கருத்துக்கள உறவுகள்

புலி வேசம் போட்டு படம் காட்டிய பிள்ளைகளின் பெற்றோர்கள் துவாரகா இலங்கைக்கு சென்று போராட ஆள் சேர்த்தாலும் தங்கள் பிள்ளைகளை அனுப்பமாட்டார்கள். டொக்டர் என்ஜினியகவோ ஆக்கமுயற்சிப்பார்கள் முடியாவிடில் பொலிஸ் அல்லது இராணுவம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புலி வேசம் போட்டு படம் காட்டிய பிள்ளைகளின் பெற்றோர்கள் துவாரகா இலங்கைக்கு சென்று போராட ஆள் சேர்த்தாலும் தங்கள் பிள்ளைகளை அனுப்பமாட்டார்கள். டொக்டர் என்ஜினியகவோ ஆக்கமுயற்சிப்பார்கள் முடியாவிடில் பொலிஸ் அல்லது இராணுவம்.

இதுவே பெரிய விடயம் தான். ஊரில் இருந்தபடி அத்தனை பிரச்சினைகளையும் சந்தித்தபடி ஆபத்துக்களை உணர்ந்த போதும் சிலவற்றை செய்தாகணும் என்று செயல் வடிவம் கொடுப்பவர்களை பைத்தியக்காரத்தனம் என்று எதையும் செய்யாமல் விமர்சனம் செய்வது என்பது எம் இனத்தின் சாபக்கேடு. அதற்கு தாயகம் புலம் என்று வித்தியாசம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

இதுவே பெரிய விடயம் தான். ஊரில் இருந்தபடி அத்தனை பிரச்சினைகளையும் சந்தித்தபடி ஆபத்துக்களை உணர்ந்த போதும் சிலவற்றை செய்தாகணும் என்று செயல் வடிவம் கொடுப்பவர்களை பைத்தியக்காரத்தனம் என்று எதையும் செய்யாமல் விமர்சனம் செய்வது என்பது எம் இனத்தின் சாபக்கேடு. அதற்கு தாயகம் புலம் என்று வித்தியாசம் இல்லை.

செய்யும் செயல் தனது மக்களுக்கு எதிர்மறையான விளைவை கொண்டு வரும் என்ற பொது அறிவு கூட இல்லாமல்  பைத்தியக்கார செயல் செய்வதை விட ஒன்றும் செய்யாமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவன் எவ்வளவோ  மேலானவன். 

12 hours ago, விசுகு said:

ஞானதாஸ் பருத்தித்துறையை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். 

பரவாயில்லை அந்தாள் மீதே தனது ஊர்காரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார் என்று ஒரு குற்றச்சாட்டு இருந்தது தானே??

இந்த ஞானதாஸ் என்பவர் நிஜ உலகில் வாழாமல் மாயையில் வாழும் லூசுத்தனமான மனிதர். இவ்வாறனர்களின் முகநூல் கிறுக்கல்கள் கிறுக்குத்தனமான ஒதுக்கித் தள்ள வேண்டிய உதவாக்கரை எழுத்துக்களே.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.