Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

அதுஎப்படி இவ்வளவுநாளும் ஓரளவுக்காவது நன்றாக இருந்தவர் கடவுச்சீட்டு அனுப்பப்பட்டதும் இறந்திருக்கிறார். அதுவும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில். எங்கோ இடிக்கிறதே??

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாந்தன் இயற்கை மரணமல்ல! படுகொலை: சட்டத்தரணி அதிர்ச்சித் தகவல்

சாந்தன் உயிரிழந்த விவகாரமானது இயற்கை மரணமல்ல எனவும் அது இந்திய அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை எனவும் சட்டத்தரணி புகழேந்தி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பின், சிறையிலிருந்து விடுதலையான சாந்தன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று உயிரிழந்தார்.

இந்நிலையில் சாந்தனின் மரணம் தொடர்பில் ஐபிசி ஊடகத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே இந்த விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார் சட்டத்தரணி புகழேந்தி.

மேலும், ''ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியாவில் காணப்படும் திருச்சி சிறப்பு முகாம் என்பது இழுத்து மூடப்படவேண்டும்.

அண்ணன் சாந்தன் விட்டுச்சென்றுள்ள இந்த செய்தியானது உலகத்தில் கொடுமைகளை அனுபவிக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாக மாறியுள்ளது. இந்நிலையில், இலங்கை அரசு அனுமதி வழங்கியும் கூட இந்திய அரசினால் சாந்தன் தனது தாய்நாட்டுக்கு அனுப்பப்படாமல் மரணித்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது." என்றார்.

இவ்வாறான நிலையில் சாந்தனின் மரணத்தின் பின்னணி குறித்தும், சிறப்பு முகாம்களில் இலங்கை அகதிகள் அனுபவிக்கும் கொடுமைகள் குறித்தும், இந்திய அரசின் சட்டம் எவ்வாறான தாக்கங்களை உருவாக்கின்றது என்பது தொடர்பிலும் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்த கருத்துக்களை தொகுத்து வருகிறது சிறப்பு நேர்காணல்...

https://tamilwin.com/article/sandhan-s-lawyer-shocked-news-1709125946

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாய்மடி சாய முடியாத சாந்தன்

தமிழ் ஈழ மடி சாயுமா?

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Eppothum Thamizhan said:

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

அதுஎப்படி இவ்வளவுநாளும் ஓரளவுக்காவது நன்றாக இருந்தவர் கடவுச்சீட்டு அனுப்பப்பட்டதும் இறந்திருக்கிறார். அதுவும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில். எங்கோ இடிக்கிறதே??

 

இலங்கை வந்தாலோ அல்லது அவர்களை சிறப்பு முகாமிலிருந்து சுதந்திரமாக நடமாட வெளியே விட்டாலோ இந்தியாவின் வண்டாவாளங்கள் எல்லாம் வெளித்தெரிய ஆரம்பிக்கும். எனவே அவர்களை உள்ளே வைத்திருந்து அப்படியே கொல்லுவதுதான் இந்தியாவுக்குள்ள ஒரே தெரிவு. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். தாயகக் காற்றை மீளவும் சுவாசிக்க முன்னரே காலமானது கொடுமை.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் மரணத்தில் சந்தேகமா?

Oruvan

சாந்தனின் மரணம் கல்லீரல் பாதிப்பினால் ஏற்பட்ட இயற்கையான மரணம் என அவரது சட்டத்தரணி புகழேந்தி “ஒருவன்” செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார். 

சாந்தனின் மரணம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் சந்தேகம் வெளியிட்டுவரும் நிலையில் சட்டத்தரணி புகழேந்தி விளக்கமளித்துள்ளார். 

உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சாந்தன், சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

சாந்தனின் மரணம் படுகொலை என தாம் கூறியதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும், தாம் அத்தகைய ஒரு கருத்தினை தெரிவிக்கவில்லை எனவும் சட்டத்தரணி புகழேந்தி குறிப்பிட்டுள்ளார். 

மேலும் சாந்தனின் பூதவுடல் நாளை வியாழக்கிழமை அல்லது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் சட்டத்தரணி புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.
 

https://oruvan.com/sri-lanka/2024/02/28/is-there-any-doubt-about-santhans-death-attorney-at-law-pugazhendhi-explained

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்.

உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தும் இலங்கை அரசு அவர் நாடு திரும்புவதற்கு பச்சைக் கொடி காட்டியும் இந்திய அரசு விடுதலை செய்யவில்லை.விடுதலை செய்யப்பட்ட மற்றவர்கள் வீடுகளுக்க செல்ல அனுமதியளித்த தமிழக அரசு  இவரை மட்டும் சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருந்தது. இவரின் வீடதலையைப் பின் போட்டதில் தமிழக அரசுக்கும் பங்கு உண்டு. தேர்தல் நேரத்தில் விடுதலை செய்து காங்கிரஸ் கூட்டணியை முறிக்க விரும்பவில்லை.அது மட்டுமல்லாமல் விடுதலை செய்தாலும் நீண்ட காலத்துக்கு உயிர் வாழமுடியாதபடி ஏதாவது மருந்துகளை; கொஞ்சம் கொஞ்சமாக எற்றினார்களோ யார்கண்டது.பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்ற தாயின் கனவு பலிக்காமல் போய்விட்டது பெ.ருஞ் சோகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

18 hours ago, ஈழப்பிரியன் said:

பல போராட்டங்களின் பின் சாந்தன் இன்று இலங்கை திரும்ப இருந்த நிலையில் அவர் உயிரிழந்தமை

☹️

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையாகி 

சிறப்பு முகாமில் சிறை அனுபவித்து வருபவர்களை 

சாந்தன் மாதிரி சாக விடாமல்

விரைவில் விடுதலை செய்ய 

மத்திய மாநில அரசுகள் ஆவன செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தன் பற்றிய சிறு குறிப்பு:           (வரலாறுகள் அறியவேண்டும் என்பதற்காக)

சொந்தப்பெயர்: தில்லையம்பலம் சுதேந்திரராசா.
வேறு பெயர்:சாந்தன்
சொந்த ஊர்: உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்.
பிறந்த ஆண்டு:-1969
ராஜீவ் கொலை சம்பவம் நடக்கும்போது வயது:22
இறக்கும்போது வயது:55.

ஏன்கைது செய்யப்பட்டார்.?

1991 மே 21 ஸ்ரீபெரும்புதூரில் நிகழ்ந்த ராஜீவ் காந்தி கொலை சம்பவத்தில் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்ட நிலையில்,              

1991 ஜூலை 22 ஆம் தேதி சாந்தன் கைது செய்யப்பட்டார். இவருடன் கைது செய்யப்பட்ட 26 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,                             

1998 ஜனவரி 28 ஆம் தேதி, 26 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கியது பூந்தமல்லி தடா நீதிமன்றம்.

அதனைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு மே 11 தேதி 26 பேரில் 19 பேர் விடுவிக்கப்பட்டனர்.                               

ஆனால் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டது.                               

1999 அக்டோபர் 8 ஆம் தேதி தூக்கு தண்டனையை குறைக்கக் கோரிய சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.                   

1999 அக்டோபர் 10ஆம் தேதி நால்வரும் ஆளுநருக்கு கருணை மனு அனுப்பினர்.               

1999 அக்டோபர் 29ஆம் தேதி அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார்.

1999 நவம்பர் 25 ஆம் தேதி ஆளுநரின் உத்தரவை இரத்து செய்து அமைச்சரவை முடிவு மீது ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவு கொடுக்கப்பட்டது.                

2000ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.                    

ஆனால் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்படவில்லை.

2000 ஏப்ரல் 26ஆம் தேதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர்.                                                          

குடியரசுத் தலவர்களாக இருந்த கே.ஆர்.நாராயணன் அவருக்குப் பிறகு வந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோர் கருணை மனுக்களின் மீது முடிவு எடுக்காமல் கிடப்பில் போட்டனர்.

அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவராக இருந்த பிரதீபா பாட்டீல் 2011 ஆகஸ்ட் 12ஆம் தேதி கருணை மனுக்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டார். 

அதன் விளைவாக தமிழ்நாட்டில் அதனைக் கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடந்தது.

2014 பிப்ரவரி 18ஆம் தேதி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது.

2014 பிப்ரவரி 19ஆம் தேதி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய கைதிகள் விடுதலை என ஜெயலலிதா அறிவித்திருந்தார்.    

2015 டிசம்பர் 2 மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை விடுவிக்க முடியாது என நீதிபதி இப்ராஹீம் கலிபுல்லா அமர்வு தீர்ப்பளித்தது.

2016 மார்ச் 2 ஆம் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருந்தது. 

2018 மார்ச் 6, 7 பேரை விடுவிப்பு தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்கலாம் என ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பளித்தது.                             

2018 டிசம்பர் 6ஆம் தேதி 161 சட்ட விதிப்படி ஆளுநர் இறுதி முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அதிகாரம் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பேரறிவாளன் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.                                       

ஆனால் அவர்களில் பேரறிவாளனைத் தவிர மற்றவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அதனால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.                                    

 வரலாற்றில் இடம்பிடித்த துயர சம்பவமான ராஜீவ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 7 பேரில், சாந்தன் சொந்த நாடு திரும்பாமலேயே 55, வயதில் உயிரிழந்துள்ளார்.

22, வயது இளைஞரான சாந்தன் 1991, ல் சென்னை சென்றவர் 32, வருடங்கள் இந்திய சிறையில் வதைபட்டு 53, வயதில் விடுதலை பெற்று 55, வயதில் மரணித்தார் என்பதே துயரமான செய்தி…!

-பா.அரியநேத்திரன்-
29/02/2024

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

செய்தி கேட்ட கணம் முதலாய்
சேயைத் தேடிய தாய் தான்
சிந்தை எங்கும் வந்து போகின்றாள்
அக்காப் பிள்ளை அம்மா
ஆரோ பெத்த பிள்ளை என்னைக் கண்ட போதே
உச்சி மோந்து எஞ்சில் ததும்ப முத்தம் தந்து
உவகை கொண்டு உருகி நின்றவள்
பெத்த பிள்ளை தன்னை காண வருவானென்று
எத்தனை ஆண்டாய்க் காத்திருந்தவள்
கண்டிருந்தால் எப்படி எல்லாம் அணைத்து மகிழ்ந்திருப்பாள்.
எல்லாம் கானலாகிப் போனதுவே

Inuvaijur Mayuran

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

எனக்கு முகமறியாத சாந்தனின் மரணம் இத்தனை துயரை 
இந்த நாளில் தரும் என்று எண்ணியிருக்கவில்லை. 

“சட்டத்தில் சாமானியர்களுக்கு எல்லா உரிமையும் இருகிறது. நீதிதான் சாமானியருக்கு இல்லை”  சாந்தனுக்காக ஒரு கணம் வணங்கிக் கொள்வோம்.

Kuna Kaviyalahan
  • கருத்துக்கள உறவுகள்

வாழ் நாள் முழுவதும் வேதனையை அனுபவித்த மனிதர். இவர் ஒருபோதும் ராஜீவ் காந்தி கொலையில் தொடர்பு பட்டிருப்பார் என்று நம்பவில்லை. இன்றும் புலிகளின் சொத்துக்களை ஆட்டைய போட்டு வசதியாக வாழுபவர்கள் இருக்கின்ரார்கள். பழி ஒருபக்கம் பாவம் ஒருபக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

கொடிய யுத்தத்தின் தாக்கங்களால் தனது துடிப்பான இளமைக்காலத்தில் இருந்து  வாழ்நாள் முழுவதையும்  முழுவதையும் வேதனையில் கழித்தவர்.  அவரின் உறவுகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

சாந்தனின் சகோதரரின் முகநூல் பதிவு இவ்வாறு கூறுகிறது.

நீதி என்பது நாதியற்றவர்க்கற்றது.
யாரை எதிர்த்தோமோ அவர்களாலும்
யாருக்காக எதிர்த்தோமோ அவர்களாலும்
என் குடும்பம் அநாதையாக்கப்பட்டது. 

வேதனையான பதிவு

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

யாரை எதிர்த்தோமோ அவர்களாலும்
யாருக்காக எதிர்த்தோமோ அவர்களாலும்

யாரை நோவது??  மேற்படி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் வெளியில் உலாவுகிறார்கள் என என் மனம் சொல்கிறது.

அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, kalyani said:

யாரை நோவது??  மேற்படி கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் வெளியில் உலாவுகிறார்கள் என என் மனம் சொல்கிறது.

அன்னாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

சட்டம் ஒருபோதும் சாமானியர்களுக்காக பிரயோகிக்கப்படவில்லை. சட்டம் எப்போதும் சாமானியர்கள் கிளர்ந்தெழுவதைத் தடுப்பதற்காகவும், முடியாத பட்சத்தில் அவர்களை அதே சட்டத்தைக் கொண்டே  ஒடுக்குவதற்காகவும்  அதிகார வர்க்கத்தால் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் வரலாறு. 

இந்தியா என்றால் துரோகம், துரோகம் என்றால் இந்தியா. 

இதுதான்  உண்மை. 

😡

  • கருத்துக்கள உறவுகள்

santhan-new-654x375.jpg

சாந்தனின் உடல் உறவினர்களிடம் கையளிப்பு!

உடல்நல பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தன் என அழைக்கப்படும் சுதேந்திர ராசாவின் சடலம் இன்று நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது சடலம், இன்று முற்பகல் 11.35க்கு ஸ்ரீPலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்ச்சாலையொன்றுக்கு கொண்டுவரப்பட்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னர்  யாழ்ப்பாணத்துக்கு எடுத்துச் செல்லப்படும்  அவரது   உறவினர்கள்  தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தன்  சென்னையில் நேற்று முன்தினம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1371829

  • கருத்துக்கள உறவுகள்

jh-699x375.jpg

சாந்தனின் உடல் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது!

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடல், இன்று அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக அவரது உடலம் இன்று முற்பகல் 11.35 மணிக்கு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அவரது உடலை உறவினர்கள் உள்ளிட்ட நெருக்கமானோர் சென்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.

விமான நிலையத்தின் விதிமுறைகள் பூர்த்தியான பின்னர், நீர்க்கொழும்பு வைத்தியசாலைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் நேரடியாக யாழ்ப்பாணம், வடமராட்சி, உடுப்பிட்டியில் அமைந்துள்ள அவரது தயாரின் இல்லத்திற்கு சாந்தனின் கொண்டு செல்லப்படவுள்ளது.

அங்கு பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் சாந்தனின் உடல், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நல பாதிப்பால் நேற்று முன்தினம் உயிரிழந்த சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ் நாட்டு அரசாங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இன்று சாந்தனின் உடல் அவரது தாய் நாடான இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1371847

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனின் மறைவுக்கு யாழ். பல்கலையில் கறுப்புக் கொடி

02 MAR, 2024 | 02:38 PM
image

மறைந்த சாந்தனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தாா்.

அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த ‍பெப்ரவரி 24ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 28ஆம் திகதி மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

அவரின் உடல் இலங்கைக்கு தற்போது அனுப்பி வைக்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/177744

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

உண்மைகள் வெளிவரக்கூடாது என்பதில்  சம்பந்தப்பட்டவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார்கள் என்பது இந்த மரணம் தெட்டத்தெளிவாக உறுதிப்படுத்தி விட்டு செல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் நடப்பு தி மு க அரசின் மாற்றான் தாய் மனப்பான்மையால் பலியிடப்பட்ட ஈழத்தமிழர் சாந்தனுக்கு கண்ணீரஞ்சலி. 

Edited by nedukkalapoovan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.