Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

யாழ்ப்பாணத்தில் இப்ப யாரு சாதி பாக்கிறார்கள் என்பவர்களுக்கு..

 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

உந்த சாதி பாக்கிறவங்கள் இங்க வெளிநாட்டிலையும் இருக்கிறாங்கள். உவங்கள் எல்லாம் ஆயிரத்திலை ஒருவர். ஐஞ்சியத்திற்கும் பயனில்லாதவங்கள்... உவங்களாலை உது மட்டும்தான் ஏலும். 

நீங்கள் தொடர்ந்து உங்கட நல்ல வேலையைப் பாருங்கோ. 

உங்கள் மூலம் பல விடையங்களை நான் அறிந்துள்ளேன். மென்மேலும் பல உயரங்கள் தொட்டு சிகரமடைய மனமார வாழ்த்துகிறேன்.

நன்றி
 

  • Like 3
Posted

வேதனையான கருத்துக்கள். எம்மவர்கள் (சிலர்) திருந்தப்போவதில்லை. தொடர்ந்து உங்கள் காணொளிகளை பதியுங்கள், பவனீசன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தம்பி பவனீசன் வருத்தப்படத் தேவையில்லை. உங்கள் பணிகளைத் தொடருங்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னைத் திணற வைத்த மக்கள் 🔥 | சாதியே இல்லை, தமிழன்டா | Pavaneesan

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தம்பி பவனீசன், சாதீயம் என்பது கோழைகளினதும், துணிவில்லாத பலவீனமானவர்களினதும் கடைசி ஆயுதமாகும்...!

நீங்கள் இதனைப் பகிர்ந்து கொண்டதே....உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுகின்றது...!

நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்..!  நீங்கள் உங்கள் பயணத்தை நிறுத்தினால்...அதுவே சாதீயத்தின் வெற்ற்றியாகும்....!

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, நன்னிச் சோழன் said:

உந்த சாதி பாக்கிறவங்கள் இங்க வெளிநாட்டிலையும் இருக்கிறாங்கள். உவங்கள் எல்லாம் ஆயிரத்திலை ஒருவர். ஐஞ்சியத்திற்கும் பயனில்லாதவங்கள்... உவங்களாலை உது மட்டும்தான் ஏலும். 

உண்மை. ஆசாரவாதிகள் அவர்கள் நாட்டில் இருந்து புறப்பட்ட காலத்திலேயே உறைந்துவிட்டவர்கள். சமூக முன்னேற்றத்தை விரும்பாதவர்கள் மிகவும் குறுகிக்கொண்டுதான் போகின்றனர். காலம் அவர்களைக் காணாமல் போகச் செய்யும்.

இரண்டாவது காணொளியில் பவனீசனை உற்சாகமாகப் பேசவைக்கும் அளவிற்குத் தமிழர்களில் முற்போக்கு சிந்தனையுள்ளவர்கள் அதிகமாக உள்ளனர். 

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாதி வேரோடு அறுத்தெறியப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் வேள்ளாளர் மட்டும் தான் சாதி பாக்கினமோ எண்டு நான் கேட்டால் நீங்கள்  என்னை முழுசி பாக்கக்கூடாது.
இனவாதம்,மதவாதம்,மொழிவாதம்,பிரதேசவாதம்,ஊர்வாதம் என்பது போல் சாதிவாதமும் ஒரு வகையானது.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

குள்ளநரிக்கூட்டம் குறுக்கிடத்தான் செய்யும்.....அவற்றைப் புறந்தள்ளிவிட்டு உங்கள் பாதையில் முன்னேறுங்கள்.......!   

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது ஒரு சீப்பான விளம்பரத் தேடலாக மாற்றியமைக்கப்படாமல்.. சமூகத் தூசிகளை தட்டி உதறிவிட்டு உங்கள் பணியை கவனியுங்கள்.

சமூக வெளியில் உள்ள குப்பைகளை.. தூசிகளை தூக்கிப் பிடிக்கப் போனால்.. நம் கவனமும்.. சக்தியும் வீணாகுமே தவிர.. நாம் சாதிக்க வேண்டியதை அடைய முடியாது. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவனிக்க படாமல் விடுவதன் ஊடாக இது காணாமல் போகலாம். ஆனால் இவ்வாறு காணொளி படுத்தல் ஊடாக மேலும் மேலும் பகைமை உணர்வை தூண்ட வழி பிறக்கலாம். 

சாதி இல்லை என்றும் கடவுள் இல்லை என்றும் சொல்லும் பலரும் தமது பிள்ளைகளின் திருமணத்திற்கு விசாரித்தோம் நல்ல ஆட்கள் என்று சொல்லும் நிலையை இன்றும் பார்க்கும்போது???? கடந்து செல்வோம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, புங்கையூரன் said:

தம்பி பவனீசன், சாதீயம் என்பது கோழைகளினதும், துணிவில்லாத பலவீனமானவர்களினதும் கடைசி ஆயுதமாகும்...!

நீங்கள் இதனைப் பகிர்ந்து கொண்டதே....உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுகின்றது...!

நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்..!  நீங்கள் உங்கள் பயணத்தை நிறுத்தினால்...அதுவே சாதீயத்தின் வெற்ற்றியாகும்....!

எமது சமூகத்தில் நான் இன்ன சாதி என்று சொல்லமுடியாத நிலை எல்லோருக்கும் இன்று இருக்கிறது என்றால் அது பலவீனமானது என்று தானே அர்த்தம். எனவே அதை அப்படியே விட்டு விடுவோம். பலப்படுத்த வேண்டாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

 

பவனீசன் பற்றி கருத்து சொன்னவருக்கு:

சாதியில் உயர்ந்தவர் மறைந்து நின்று காணொலியில் கருத்திடுகிறார்.

சாதியில் குறைந்தவர் பொதுவெளியில் நிமிர்ந்து நின்று நான் இன்னவர்தான் என்று சொல்கிறார்.

ஆண்மையோடு பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்துபவனே மனிதனில் உயர்ந்த சாதி.

--------

மற்றும்படி சமூகங்களுக்கிடையிலான சாதிபிரிவினையை ஒருபோதும் ஒழிக்க முடியாது.

உயர்ந்த ஜாதி தாழ்ந்த சாதி எனப்படுகிறவர்களுக்கு இடையில் மட்டும் சாதி பிரிவினை இருப்பதில்லை.

முடிதிருத்துகிறவருக்கும் துணி துவைப்பருக்கும் இடையிலும், பனம்பொருள் தொழில் ஈடுபடுகிறவர்களுக்கும் சுமை தூக்கிற மக்கள் கூட்டத்துக்கு இடையிலும் சாதி பிரிவினை உண்ட

குடும்ப விழாக்களிலிருந்து கோயில்கள் வரை அவர்களுமே தனித்து இயங்குவதுண்டு, அப்படியான நிலையில் எந்த சபையேறி இதனை ஒழிக்க முடியும்? 

பவனீசன் போன்ற யூடியூப்பர்கள் பல்லாயிரம் மக்களை சந்தித்தவர்கள் சந்திக்க போகிறவர்கள், அன்றாட நிகழ்வுகளிலிருந்து அரசியல்வரை சமுதாயத்தின் அனைத்து வகையான விஷயங்களையும் பிரச்சனைகளையும் எதிர்வினைகளையும்  அனுபவத்தில் கண்டிருக்க கூடியவர்கள் , எதிர் கருத்துக்களை எதிர்பார்க்க வேண்டியவர்கள் அதை மிக இயற்கையானது என்று கடந்து போக வேண்டியவர்கள்,

சாதி சொல்லி சக மனிதனை திட்டினால் காயப்படத்தான் செய்யும் , சாதியம் எனும் பிரிவினை வலி தருவது அதில் மாற்று கருத்தே இல்லை, ஆனால் அதை அதை மன உறுதியோடு கடந்து போய் உங்கள் பாட்டுக்கு உங்கள் பணியை கவனிக்க முடியவில்லையென்றால்  நிச்சயமாக மக்களை சந்திக்கும் ஒரு துறையில் நீங்கள்  இயங்கவே முடியாது.

என்னமோ வடபகுதியில் எதிர்பாராதது நடந்தது மாதிரியும் இன்னும் 5 நிமிடத்தில் தற்கொலை செய்யபோவதுபோன்று இடிந்து போய் நின்று காணொளி போடுவது நிச்சயமாக வியூ அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கை என்றே பிறரால் பார்க்கப்படும்.

வேறெதுவும் சொல்வதற்கில்லை.

Edited by valavan
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, விசுகு said:

எமது சமூகத்தில் நான் இன்ன சாதி என்று சொல்லமுடியாத நிலை எல்லோருக்கும் இன்று இருக்கிறது என்றால் அது பலவீனமானது என்று தானே அர்த்தம். எனவே அதை அப்படியே விட்டு விடுவோம். பலப்படுத்த வேண்டாம். 

விட்டு விடலாம் தான், விசுகர்..! ஆனால் மு. தளையசிங்கம் மாஸ்ரர் கிணத்தடியில் அடி வாங்கியதை நேரில் கண்டவன் என்ற முறையில், இப்படியானவைகளைக் கடந்து செல்ல மனம் விடுகுது இல்லை…!

  • Like 2
  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, விசுகு said:

கவனிக்க படாமல் விடுவதன் ஊடாக இது காணாமல் போகலாம். ஆனால் இவ்வாறு காணொளி படுத்தல் ஊடாக மேலும் மேலும் பகைமை உணர்வை தூண்ட வழி பிறக்கலாம். 

சாதி இல்லை என்றும் கடவுள் இல்லை என்றும் சொல்லும் பலரும் தமது பிள்ளைகளின் திருமணத்திற்கு விசாரித்தோம் நல்ல ஆட்கள் என்று சொல்லும் நிலையை இன்றும் பார்க்கும்போது???? கடந்து செல்வோம். 

இவ்ருக்கு மட்டுமல்ல ..பல யூத் டியூப்பர்களுக்கும் கொமன்சில்  இந்த சாதியைப் போட்டபடியே இருப்பார்கள்...அவர்கள்  அதனை அசடடை செய்தபடியே கடந்து செல்வார்கள்....ஆனால் இவரோ ஓவர் பீலிங் செய்கின்ற மாதிரிப் பேசுகின்றர்....இது அழிக்கமுடியாத அடையாளமாய் எமது சமூகத்தில் புரையோடியுள்ளது....இவ்ர் அதனை அசட்டையாய் விட்டு கடந்துபோவதே நல்லது...கஸ்டப்பட்டு பாடி அவ்வார்டு எடுத்த கில்மிசாவே இப்படியொரு தாக்குதலுக்கு  உள்ளான குழந்தை...சிலரை மாற்ற்வே  முடியாதே..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிலர் "கடந்து போ, பேசாமல் போ, மறையும்" என்கின்றனர் - இதெல்லாம் கடந்து போன காலங்கள் இருந்தன. இவர்களின் தியரி சரியானால் இப்போது சாதி ஒரு பொருட்டில்லாமல் போயிருக்க வேண்டும், அப்படியா போய் விட்டது? இல்லையல்லவா? ஜே.பி.சி மெசின் தேர் முதல் (2023 இல்) தீவகத்தின் அதிபர் பதவி வரை சாதி மீண்டும் மூர்க்கமாக எழும்பி நடமாடுகிறதல்லவா?

பிறகேன் இந்த இத்துப் போன "வைக்கோல் போருக்குள் மறைச்சு விட்டால், எல்லாம் கிளீனாகி விடும்" என்ற வாதம் இன்னும் தொடர்கிறதெனத் தெரியவில்லை.

எனவே, வெளிப்படையாகப் பேசும் துணிவில்லாதவர்கள், பேசத் துணிந்தவர்களையாவது நையாண்டி செய்யாமல் மௌனமாக இருங்கள் - உங்கள் மௌனம் சில நேரங்களில் சாதி வாதத்தை ஒழிக்க உதவலாம்!

  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாதி வெறிகளை ஒழிக்க அரசு ரீதியாக சட்டங்களை உருவாக்க வேண்டும். சாதி கதைப்போருக்கு தண்டனைகள் வழங்க வேண்டும். எல்லோரும் சமம் என்றொரு நிலையை சட்ட ரீதியாக கொண்டு வரவேண்டும்.  சாதியையும் மதத்தையும் கணக்கில் எடுக்காமல் தமிழர் பிரதேசங்களில் ஒரு ஆட்சி முறையே நடந்தது என்பதை யாரும் நம்பினால்........

சட்டங்கள் மூலமாக எதையுமே சாதிக்கலாம் என்பதையும் நம்பலாம். இல்லையேல் சிரட்டை கலாச்சாரம் தொடர்ந்து கொண்டே இருக்கும். 

மௌனத்தை விட பிரம்புகளே  சொன்னதை சாதித்தது என்பது உலக வரலாறு. :cool:

  • Thanks 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.