Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

spacer.png

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

“அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், 88 சதவீத வாக்குகளுடன் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் அவர் ஜனாதிபதி அரியணையில் ஏறியிருக்கிறார்.

இதன்போது, கருத்து தெரிவித்த விளாடிமிர் புட்டின்,

வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும்.

ஆனால், அத்தகையச் சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை.

மூன்றாவது உலகப்போர் வெகு தொலைவில் இல்லை. ஒரே அடி தொலைவில் தான் இருக்கிறது.

அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிகழ்கிறது.

நிலவரம் அப்படியிருக்க அவர்கள் ரஷ்ய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைப்புக்குரியது என அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1373835

  • Replies 71
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

குமாரசாமி

நான் ஜேர்மனிக்கு வந்து சுகபோக வாழ்க்கை வாழவில்லை. 1982 ம் ஆண்டு வந்தேன். படிக்க அனுமதியில்லை வேலை செய்ய அனுமதியில்லை அடுத்த ஊர் செல்ல அனுமதியில்லை மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு கட்டா

குமாரசாமி

நல்லாயிருக்கு....கந்தையர்  😁 👍🏼 இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஜேர்மனியர்களுக்கு  இருந்த ஒரு சட்டம் தான் பக்கது ஊர்களுக்கு போகமுடியாது.இடம்பெயர முடியாது. காரணம் பாதிப்பில்லாத இடங்களை நோக்கி மக்கள

Kandiah57

இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தமிழ் சிறி said:

spacer.png

3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!

“அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும். ஆனால், அத்தகைய சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை” என ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற புட்டின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், 88 சதவீத வாக்குகளுடன் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார்.

தொடர்ந்து ஐந்தாவது முறையாகவும் அவர் ஜனாதிபதி அரியணையில் ஏறியிருக்கிறார்.

இதன்போது, கருத்து தெரிவித்த விளாடிமிர் புட்டின்,

வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளும் – ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதினால் மூன்றாம் உலகப் போர் ஏற்படும்.

ஆனால், அத்தகையச் சூழலை இங்கு யாரும் விரும்பவில்லை.

மூன்றாவது உலகப்போர் வெகு தொலைவில் இல்லை. ஒரே அடி தொலைவில் தான் இருக்கிறது.

அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லை. அங்கே இப்போது பெரிய குளறுபடியான சூழல் மட்டுமே நிகழ்கிறது.

நிலவரம் அப்படியிருக்க அவர்கள் ரஷ்ய தேர்தல் நியாயமாக நடத்தப்படவில்லை என்று போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பது நகைப்புக்குரியது என அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1373835

மிகுதி 12 வீத வாக்குகளுக்கு என்ன நடந்தது, செல்லாதவை ஆகியிருக்குமோ....😀

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

மிகுதி 12 வீத வாக்குகளுக்கு என்ன நடந்தது, செல்லாதவை ஆகியிருக்குமோ....😀

அதை அவர் கையிலை வைத்திருக்கிறார்...சொச்சக் கணக்கு கேட்டால் போட்டுக் காட்டுவார்..🙃

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, alvayan said:

அதை அவர் கையிலை வைத்திருக்கிறார்...சொச்சக் கணக்கு கேட்டால் போட்டுக் காட்டுவார்.🙃

100% என்று சொல்ல அவருக்கே அவமானமாக தெரியுது  image.png.1ed7aa6c490aee805079183de10e4ae8.png 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 hours ago, ரசோதரன் said:

மிகுதி 12 வீத வாக்குகளுக்கு என்ன நடந்தது, செல்லாதவை ஆகியிருக்குமோ....😀

இலங்கைத் தமிழர்  உட்பட... 
உலகம் எங்கும் வாக்குப் போடத் தெரியாத கூட்டம் ஒன்று இருக்குது தானே...  

அதுதான்... இந்த 12% animiertes-gefuehl-smilies-bild-0029.gif

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

புரின் பெறுமதி தெரிந்த ஒரே  அமைப்பு உலகில் நேட்டோ தான்!😎

70 ஆண்டுகளாக அயல் ஸ்கண்டினேவிய நாடுகளால் கூட இயலாமல் போன காரியத்தை செய்தவர் புரின் என்ற "ஸ்லீப்பர் ஏஜென்ற்": சுவீடனையும், பின்லாந்தையும் வெள்ளித் தட்டில் வைத்து நேட்டொவில் ஒப்படைத்தார்😂!

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனநாயக முறையில் நடைபெற்ற இந்த தேர்தலிலே மிகப்பெரிய வாக்கு சதவீதத்தினால் புட்டின் வெற்றிபெற்றிருக்கின்றார். இனி ஜனநாயகத்துக்கு எதிரான மேற்குலகில் வாழும் ஜனநாயகத்துக்கு ஆதரவான மக்கள் ரஸ்யாவுக்குச் சென்று குடியேறுவார்கள் என நினைக்கின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதவன்ஸ் ஐ நம்பி கருத்தெழுத ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசிக்க வேண்டி உள்ளது. 

ஆனாலும் மேற்குலகில் இந்தத் தேர்தலையொட்டி பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. யாழ் களத்தினரைத் தவிர,....

😁

Posted
3 minutes ago, Kapithan said:

ஆதவன்ஸ் ஐ நம்பி கருத்தெழுத ஒருமுறைக்கு இரண்டுமுறை யோசிக்க வேண்டி உள்ளது. 

ஆனாலும் மேற்குலகில் இந்தத் தேர்தலையொட்டி பெரிதாக யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. யாழ் களத்தினரைத் தவிர,....

😁

ஆம், வேறு திரியில் பதிந்திருக்க வேண்டிய கருத்தைத் தவறுதலாக இங்கே பதிந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

இங்குதான் யாழ் கள புடின் ஆதரவாளர்கள் வெற்றியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ரசோதரன் said:

மிகுதி 12 வீத வாக்குகளுக்கு என்ன நடந்தது, செல்லாதவை ஆகியிருக்குமோ....😀

https://apnews.com/article/russia-election-putin-2024-updates-ebdaae1bf12b44343b88ba471f9f0cb0?utm_source=copy&utm_medium=share

2 hours ago, alvayan said:

அதை அவர் கையிலை வைத்திருக்கிறார்...சொச்சக் கணக்கு கேட்டால் போட்டுக் காட்டுவார்..🙃

2 hours ago, விசுகு said:

100% என்று சொல்ல அவருக்கே அவமானமாக தெரியுது  image.png.1ed7aa6c490aee805079183de10e4ae8.png 🤣

Putin extends rule in preordained Russian election after harshest crackdown since Soviet era

Vladimir Putin has secured an unprecedented fifth term as president of Russia. The country’s election commission announced the results of an election in which he faced no serious challenges and which happened amid the strictest crackdown on opposition and free speech since Soviet times.

Rea
BY EMMA BURROWS, DASHA LITVINOVA AND JIM HEINTZ
Updated 1:34 PM EDT, March 18, 2024
Share

President Vladimir Putin extended his reign over Russia in a landslide election whose outcome was never in doubt, declaring Monday his determination to advance deeper into Ukraine and dangling new threats against the West.

After the harshest crackdown on dissent since Soviet times, it was clear from the earliest returns that Putin’s nearly quarter-century rule would continue with a fifth term that grants him six more years. Still, Russians heeded a call to protest Putin’s repression and his war in Ukraine by showing up at polling stations at noon on Sunday.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, Kapithan said:

https://apnews.com/article/russia-election-putin-2024-updates-ebdaae1bf12b44343b88ba471f9f0cb0?utm_source=copy&utm_medium=share

Putin extends rule in preordained Russian election after harshest crackdown since Soviet era

Vladimir Putin has secured an unprecedented fifth term as president of Russia. The country’s election commission announced the results of an election in which he faced no serious challenges and which happened amid the strictest crackdown on opposition and free speech since Soviet times.

Rea
BY EMMA BURROWS, DASHA LITVINOVA AND JIM HEINTZ
Updated 1:34 PM EDT, March 18, 2024
Share

President Vladimir Putin extended his reign over Russia in a landslide election whose outcome was never in doubt, declaring Monday his determination to advance deeper into Ukraine and dangling new threats against the West.

After the harshest crackdown on dissent since Soviet times, it was clear from the earliest returns that Putin’s nearly quarter-century rule would continue with a fifth term that grants him six more years. Still, Russians heeded a call to protest Putin’s repression and his war in Ukraine by showing up at polling stations at noon on Sunday.

முட்டாள்தனம் இருக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு???

பிள்ளைகளையாவது படிப்பை ஜனநாயகத்தை உண்மையை பார்க்கும்படி வளருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதை வைச்சு புட்டினுக்கும் ரஷ்யாவுக்கும்  அடிக்கிறம். உக்ரேனை எங்கட கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வாறம். அப்பிடியே ரஷ்யாவையும் கொஞ்சம் கொஞ்சமாய்  எங்கடை கைக்குள்ள கொண்டு வாறம்....😎

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, வாலி said:

ஜனநாயக முறையில் நடைபெற்ற இந்த தேர்தலிலே மிகப்பெரிய வாக்கு சதவீதத்தினால் புட்டின் வெற்றிபெற்றிருக்கின்றார். இனி ஜனநாயகத்துக்கு எதிரான மேற்குலகில் வாழும் ஜனநாயகத்துக்கு ஆதரவான மக்கள் ரஸ்யாவுக்குச் சென்று குடியேறுவார்கள் என நினைக்கின்றேன்!

புட்டினுக்கு உண்மையான ஆதரவாளர்கள் இருக்கிறார்களா??   இந்த யாழ் களத்தில்,  ஒருவர் கூட இல்லையே??   மேற்க்கையும்  அமெரிக்காவையும். எதிர்கிறார்கள். ....அதாவது மேற்கின் அமெரிக்காவின் எதிரி. புட்டினை  ஆதரித்து    .. வேறு சிறந்த காரணிகள் இல்லை  ....புட்டினிடமும்  இல்லை   அவர்கள் என்ன செய்ய முடியும்??? மேற்க்கையும் அமெரிக்காவையும். எதிர்க்க  வேறு மார்க்கம் இல்லை  .. ...அவர்களின் இருப்பிடம். ஒருபோதும் மாறாது   உறுதியானது 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த இரண்டு உலக யுத்தத்திலும் ஜேர்மனி - இத்தாலி - ஜப்பான்.. இவை எதிரிகளாகவும்.. அமெரிக்காவும் மிச்ச மேற்கும்.. நேச நாடுகளாகவும் இருந்தன. ரஷ்சியா அப்பவும் தனியாத்தான் சண்டை போட்டது.

ஆனால் 3ம் உலகப் போரின் பரிமானம் வேறுபட்டதாக இருக்கும். ரஷ்சியாவோடு.. நேரடியாக நேட்டோ மோதினால்.. ரஷ்சியா.. கிழக்கு ஜேர்மனியில் நிற்காது.. பிரிட்டனிலும்.. அலஸ்கா வழியாக நியுயோர்க்கிலும் நிற்கும். 

ஏனெனில்.. கடந்த இரண்டு உலகப் போரின் போதும் அமெரிக்கா ரஷ்சியாவை எதிர்த்து சண்டை செய்யவில்லை. ஜேர்மனி தான் செய்தது. 

புட்டின் ஒரு உலகப் போருக்கு தானாகப் போகும் அளவுக்கு புத்திசாலித்தனமற்றவரல்ல.. ஆனால் போர் திணிக்கப்பட்டால் எதிர்கொள்வார். 

தேர்தலில் வெற்றி பெற்ற அதிபர் புட்டினுக்கு வாழ்த்துக்கள். ரஷ்சியாவின் பொருண்மிய வளர்ச்சி.. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இவைகளே.. எதிரிகளுக்கு சரியான அடியாக இருக்கும். அதனை நோக்கி புட்டின் செயற்படுவார் என்று எதிர்பார்க்கலாம். 

சுவீடனும்.. பின்லாந்தும் ஏலவே அமெரிக்காவின் வால் தான். அது ஏலவே நேட்டோ ஆயுதங்களை தான் வைச்சிருக்கின்றன. இப்போ வெறும் பேப்பர்களில் கையெழுத்து போட்டிருக்கினம்..! அவ்வளவே. ஏலவே அவை நேட்டோ ஒத்துழைப்பு நாடுகள் தான். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, nedukkalapoovan said:

சோவியத் ரஷ்யா தனியாக நாசி ஜேர்மனியை எதிர்க்க முதல், ஹிற்லரோடு பங்கு பிரிப்பு ஒப்பந்தம் போட்டதை நாசூக்காக மறைத்து விட்டீர்கள் போல - நெடுக்கரின் ட்ரேட் மார்க் cherry-picking😎! பின்னர், நாசிகளே படையெடுத்த பின்னர் தான் சுதாரித்துக் கொண்டு திருப்பித் தாக்கினர்.

ஸ்ராலின் - இன்றைய புரினின் பழைய வடிவம்- இப்படி உள்ளடி வேலைகள் எல்லாம் செய்ததால், பிரிட்டன் தான் தீவிரமாக சோவியத் ரஷ்யாவை எட்ட வைக்க நேச அணிகளைத் தூண்டியது - அப்படி எட்ட வைத்திருந்திருக்கா விட்டால், 1948 இலேயே ஸ்ராலின் ஐரோப்பா, பிரிட்டனை நோக்கி வந்திருப்பார். இப்போது நீங்கள் சுதந்திரமான ஒரு தீவில் வாழ்ந்திருப்பீர்கள். காலக் கொடுமை இப்படி உங்களை புரின் இல்லாத இங்கிலாந்தில் கஷ்டப் பட வைத்து விட்டது😂.

பின்லாந்து, சுவீடன் மட்டுமல்ல, ஆர்மேனியா கூட நேட்டோவின் சினேக பூர்வ நாடு தான், ஆனால் நேட்டோவில் உறுப்பினரல்ல. நேட்டோ உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் சலுகை ஐந்தாம் சரத்தின் பாதுகாப்பு - அது இருக்கும் நாடுகளை ரஷ்யாவும் தாக்காது, அந்த நாடுகளும் ரஷ்யாவைத் தாக்க மாட்டா. இதன் பெயர் பலச்சமநிலை பேணல்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

புடின் மூன்றாம் உலகப் போர் மூண்டு விடும் என்று எச்சரிக்கின்றார்.

அமெரிக்கா சீனா டிக்டாக்கின் மூலம் உளவு பார்க்கின்றதென்றும், வேறு பல காரணங்களுக்காகவும் சீனாவை எச்சரிக்கின்றது.

சீனா பதிலுக்கு அமெரிக்காவை எச்சரிக்கின்றது.

மோடி அடுத்த மாதம் வரும் தேர்தலை ஒட்டி தென் இந்தியாவில் செய்யும் சூறாவளிப் பிரசாரத்தில் தினமும் விரலைக் காட்டி எச்சரிக்கை விடுகின்றார்.

ஸ்டாலின், உதயநிதி, டி ஆர் பாலு பதிலுக்கு எச்சரிக்கின்றார்கள்.

மகிந்த எச்சரிக்கின்றார்.

ரணில் எச்சரிக்கின்றார்.

அநுர குமார திசாநாயக்க, தேரர்கள்,...... டயானா கமகே கூட மக்களை எச்சரிக்கின்றார்.

ஒரு தலைவர் என்றால், அப்பப்ப சில எச்சரிக்கைகள் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல.........😀

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

அவர்களின் இருப்பிடம். ஒருபோதும் மாறாது   உறுதியானது 

அவர்களுடைய என்றும் மாறாத உறுதியான சொகுசான இருப்பிடத்தில் இருந்து கொண்டு இடைகிடை கிளையை வெட்ட முயற்சிக்கலாமா?  கொலஸ்ட்ரரோல் கூடியதால் வந்த பிரச்சனை தானே

---------------------------------------------

புதினின் தேர்தல் மோசடி நாடகத்தை மேற்குலக நாடுகள் சட்டவிரோதமானது என்று  சுட்டிகாட்டியுள்ளன. யேர்மன் வெளிநாட்டு அமைச்சர் ரஷ்யாவின் தேர்தல் உண்மையான தேர்தல் இல்லை விரும்பியவரை தேர்வு செய்ய முடியாத தேர்தல் என்றார்.  சீனாவும் வடகொரியாவும் மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற யாழ்கள புதின் ஆதரவாளர்களும் புதினை வாழ்த்தியுள்ளனர் .

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, ரசோதரன் said:

தலைவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

புடின் மூன்றாம் உலகப் போர் மூண்டு விடும் என்று எச்சரிக்கின்றார்.

அமெரிக்கா சீனா டிக்டாக்கின் மூலம் உளவு பார்க்கின்றதென்றும், வேறு பல காரணங்களுக்காகவும் சீனாவை எச்சரிக்கின்றது.

சீனா பதிலுக்கு அமெரிக்காவை எச்சரிக்கின்றது.

மோடி அடுத்த மாதம் வரும் தேர்தலை ஒட்டி தென் இந்தியாவில் செய்யும் சூறாவளிப் பிரசாரத்தில் தினமும் விரலைக் காட்டி எச்சரிக்கை விடுகின்றார்.

ஸ்டாலின், உதயநிதி, டி ஆர் பாலு பதிலுக்கு எச்சரிக்கின்றார்கள்.

மகிந்த எச்சரிக்கின்றார்.

ரணில் எச்சரிக்கின்றார்.

அநுர குமார திசாநாயக்க, தேரர்கள்,...... டயானா கமகே கூட மக்களை எச்சரிக்கின்றார்.

ஒரு தலைவர் என்றால், அப்பப்ப சில எச்சரிக்கைகள் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல.........😀

எல்லோரும் எச்சரிக்கை மட்டும் தான் விடுவர், ஏனெனில் புத்தியுள்ள தலைவர்களுக்கு status quo மாறாமல் இருப்பதே முக்கியம். இடையிடையே முன் யோசனை குறைந்த தலைவர்களும் அமைப்புகளும் - புரின், ஹமாஸ், நெரன்யாகு- போன்றவை மட்டும் சும்மா சண்டையைத் துவங்கி விட்டு முடிக்கவோ, தப்பவோ முடியாமல் நெரிபடுவினம். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, விசுகு said:

முட்டாள்தனம் இருக்கலாம் ஆனால் இந்த அளவுக்கு???

பிள்ளைகளையாவது படிப்பை ஜனநாயகத்தை உண்மையை பார்க்கும்படி வளருங்கள். 

நன்றி பெரியவா,..😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் ஜேர்மனிக்கு வந்து சுகபோக வாழ்க்கை வாழவில்லை.
1982 ம் ஆண்டு வந்தேன்.
படிக்க அனுமதியில்லை
வேலை செய்ய அனுமதியில்லை
அடுத்த ஊர் செல்ல அனுமதியில்லை
மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு கட்டாய வேலை செய்ய வேண்டும்
வீதி பெருக்குதல்,குப்பை அள்ளுதல்.
வேறு நாட்டுக்கு போக அனுமதி கேட்டேன் அதுவுமில்லை.
வேறு நாட்டுக்கு செல்ல எத்தனித்தேன். சிறை வைத்தார்கள்.

 ஜேர்மனி சுக போக வாழ்க்கை???? மண்ணாங்கட்டி வாழ்க்கை.😡
 
  • Sad 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, குமாரசாமி said:

நான் ஜேர்மனிக்கு வந்து சுகபோக வாழ்க்கை வாழவில்லை.
1982 ம் ஆண்டு வந்தேன்.
படிக்க அனுமதியில்லை
வேலை செய்ய அனுமதியில்லை
அடுத்த ஊர் செல்ல அனுமதியில்லை
மணித்தியாலம் ஒரு ஜேர்மன் மார்க்குக்கு கட்டாய வேலை செய்ய வேண்டும்
வீதி பெருக்குதல்,குப்பை அள்ளுதல்.
வேறு நாட்டுக்கு போக அனுமதி கேட்டேன் அதுவுமில்லை.
வேறு நாட்டுக்கு செல்ல எத்தனித்தேன். சிறை வைத்தார்கள்.

 ஜேர்மனி சுக போக வாழ்க்கை???? மண்ணாங்கட்டி வாழ்க்கை.😡
 
இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣

  • Downvote 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Justin said:

எல்லோரும் எச்சரிக்கை மட்டும் தான் விடுவர், ஏனெனில் புத்தியுள்ள தலைவர்களுக்கு status quo மாறாமல் இருப்பதே முக்கியம். இடையிடையே முன் யோசனை குறைந்த தலைவர்களும் அமைப்புகளும் - புரின், ஹமாஸ், நெரன்யாகு- போன்றவை மட்டும் சும்மா சண்டையைத் துவங்கி விட்டு முடிக்கவோ, தப்பவோ முடியாமல் நெரிபடுவினம். 

America கெளதிகளிடம் அடிவாங்கி மொக்கவீனப்படுவது பற்றி செய்திகள் வாசிப்பதில்லையோ???

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ரசோதரன் said:

தலைவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

புடின் மூன்றாம் உலகப் போர் மூண்டு விடும் என்று எச்சரிக்கின்றார்.

அமெரிக்கா சீனா டிக்டாக்கின் மூலம் உளவு பார்க்கின்றதென்றும், வேறு பல காரணங்களுக்காகவும் சீனாவை எச்சரிக்கின்றது.

சீனா பதிலுக்கு அமெரிக்காவை எச்சரிக்கின்றது.

மோடி அடுத்த மாதம் வரும் தேர்தலை ஒட்டி தென் இந்தியாவில் செய்யும் சூறாவளிப் பிரசாரத்தில் தினமும் விரலைக் காட்டி எச்சரிக்கை விடுகின்றார்.

ஸ்டாலின், உதயநிதி, டி ஆர் பாலு பதிலுக்கு எச்சரிக்கின்றார்கள்.

மகிந்த எச்சரிக்கின்றார்.

ரணில் எச்சரிக்கின்றார்.

அநுர குமார திசாநாயக்க, தேரர்கள்,...... டயானா கமகே கூட மக்களை எச்சரிக்கின்றார்.

ஒரு தலைவர் என்றால், அப்பப்ப சில எச்சரிக்கைகள் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல.........😀

நாமளும் யாழ்களத்தில் ஒரு எச்சரிக்கையை விடுவோம் ...தலைவராகிடலாமில்ல 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kandiah57 said:

இப்போது இவை எல்லாம் கிடைக்கும் பெற்றுக் கொள்ளுங்கள்  சிறையும். இருந்தீர்கள்    ஜேர்மனியில் சிறையில் இருப்பது நல்லது  சுகமான அனுபவம் வாழ்க்கை என்று கேள்வி பட்டேன் உண்மைய??? 🤣

ஒருவரின் சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கும் விடயம் தங்களுக்கு கேலிக்கிரியதாகிவிட்டது வருத்தத்திற்குரியது. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, Kapithan said:

ஒருவரின் சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கும் விடயம் தங்களுக்கு கேலிக்கிரியதாகிவிட்டது வருத்தத்திற்குரியது. 

☹️

என்ன சொல்ல வருகிறீர்கள்....ஜேர்மனியில் சட்டம் தான் ஆட்சி செய்கிறது   குற்றம் செய்தால் சட்டப்படி சிறைத்தண்டனை உண்டு  எனக்கு தெரிந்த பலர் அனுபவித்து உள்ளார்கள்  வேறு கடவுச்சீட்டு பாவித்து  பயணம் செய்ய முற்பட்டபோது கையும் மெய்யுமாக. பிடிபட்டுள்ளார்கள்....இங்கே கூடாதா வாழ்க்கை என்ற பலரும் ஊரிலுள்ள உறவினர்கள் நண்பர்கள்.     ....அழைத்து விட்டுள்ளார்கள் .. .ஏன்?? எதற்காக?? இப்போது கூட  இங்கே வருவதற்கு நிறைய பேர் முயற்சிகள் செய்கிறார்கள்   கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து   

ஆரம்பத்தில் குமாரசாமி அண்ணை  சொன்ன விடயங்களை நானும் அனுபவித்து உள்ளேன்  .. உதாரணமாக பக்கத்து சிற்றிக்கு  போவதற்கு தடை  ....அந்த நேரத்தில் பல தமிழர்கள்  பல சிற்றிகளில். வெவ்வேறு பெயர்களில் பதிந்து பணம் எடுத்துள்ளார்கள். மட்டுமல்ல  பிரான்ஸ் பெல்சியம,. ... ....போன்ற பல நாடுகளில் கூட பதிந்து பணம் எடுத்து உள்ளார்கள்  இவையெல்லாம் உறுதியாக கண்டு பிடிக்கப்பட்டது  அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது  .. 

குறிப்பு,   ...இலங்கை கடவுச்சீட்டுகளில் ...எல்லா நாடுகளுக்குமான. இலங்கை பாஸ்போர்ட் இல்    ஜேர்மனியில் உள்ள இலங்கை தூதரகம்.  ......இலங்கைக்கு மட்டுமே திரும்பி போகலாம்” என்று அடித்து கொடுக்கிறது    கொழும்பு விமான நிலையத்தில் திரும்ப வரும் போது  பல மணிநேரம் மறித்து  பணம் பறிக்கிறார்கள்  .....முதலாவது உங்கள் நாட்டை திருத்த முயற்சிகள் செய்யுங்கள் 

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.