Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய மக்கள் Caucasus, Dagestan முஸ்லிம் பயங்கரவாதிகள் செய்ததாகவே நம்புகின்றனர்.
இந்திய இலங்கை முஸ்லிம்கள் தான் உக்ரேனில் இருந்து வந்தவர்கள்  இந்த பயங்கரவாத செயலை செய்தார்கள், அமெரிக்கா தான் செய்தது என்று வாதிடுபவர்கள்.

  • Replies 97
  • Views 11.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ஓம் நீங்கள் சொல்லுறது சரி. ஆனால்  பிந்திய ஞானோதயத்துடன் இன்று எதிரிகளாலும் மதிக்கப்படும் மதிப்புக்குரிய அமைப்பை சில்லறைத்தனமாக எல்லா இடங்களிலும் இழுக்கக்கூடாது என்பது என் கருத்து. இயக்கத்தை இழுக்காமல்

  • US warned Russia about imminent terrorist attack in March — White House The US government had information about a planned terrorist attack in Moscow - potentially targeting large gatherings, to i

  • குமாரசாமி
    குமாரசாமி

    சும்மா போறவாற இடமெல்லாம் புலிகளை இழுக்கிறதுக்கு சிவப்பு மட்டையாலை ஒரு சாத்து....

Posted Images

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Kapithan said:

கொலைகளை குரூரமாக இரசிக்கும் ஆட்கள்தான் விபு களின் தூண்களாக ஐரோப்பாவில் வலம் வந்திருக்கின்றனர் என்பது கசப்பாக இருக்கிறது. 

சும்மா போறவாற இடமெல்லாம் புலிகளை இழுக்கிறதுக்கு சிவப்பு மட்டையாலை ஒரு சாத்து....

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

சும்மா போறவாற இடமெல்லாம் புலிகளை இழுக்கிறதுக்கு சிவப்பு மட்டையாலை ஒரு சாத்து....

பொறுப்பான இடத்தில் இருப்பவர்கள் பொறுப்புடன் கதைக்க வேணுமல்லோ 

😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Kapithan said:

பொறுப்பான இடத்தில் இருப்பவர்கள் பொறுப்புடன் கதைக்க வேணுமல்லோ 

😉

ஓம் நீங்கள் சொல்லுறது சரி. ஆனால்  பிந்திய ஞானோதயத்துடன் இன்று எதிரிகளாலும் மதிக்கப்படும் மதிப்புக்குரிய அமைப்பை சில்லறைத்தனமாக எல்லா இடங்களிலும் இழுக்கக்கூடாது என்பது என் கருத்து. இயக்கத்தை இழுக்காமல் அவருக்கு மட்டும் தனிக்கருத்து எழுதியிருக்கலாம்.

நீங்கள் புலிகளை இழுத்ததால் அது எல்லோரையும் தாக்கும். 😢

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ஓம் நீங்கள் சொல்லுறது சரி. ஆனால்  பிந்திய ஞானோதயத்துடன் இன்று எதிரிகளாலும் மதிக்கப்படும் மதிப்புக்குரிய அமைப்பை சில்லறைத்தனமாக எல்லா இடங்களிலும் இழுக்கக்கூடாது என்பது என் கருத்து. இயக்கத்தை இழுக்காமல் அவருக்கு மட்டும் தனிக்கருத்து எழுதியிருக்கலாம்.

நீங்கள் புலிகளை இழுத்ததால் அது எல்லோரையும் தாக்கும். 😢

2009 ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்ட‌தில் இருந்து இப்ப‌ வ‌ரை ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டே இருக்கு..............ஏன் அவ‌ர் அப்ப‌டி எழுதினார் என்று புரிய‌ வில்லை😞..............

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை இது இஸ்லாமிய தீவிரவாதிகள் போர்வையில் மேற்கு நாடுகளோ அல்லது ukraineனோ செய்து இருந்தால்( அப்படி இருக்க காரணங்கள்+ சாத்தியம் உண்டு ) அதற்க்கான ரஷ்யாவின் பதிலடி மேற்கு நாடுகளில் இஸ்லாமிய தீவிரவாதிகள் போர்வையில் இங்குள்ள சன நெருக்கம் உள்ள இடங்களில் நடத்தப்படலாம்.

 

 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, விசுகு said:

சர்வ வல்லமை பொருந்திய புட்டின்???

எப்படி இருந்த ரசியா......

உலக பொலிஸ் அண்ணையும்,உலக நீதிபதியும் எங்கை குண்டூசி விழுந்தாலும் பக்கெண்டு கண்டு புடிக்கிற அண்ணன் அமெரிக்க ராசன்ரை தலைக்கு மேலாலை சைனாக்காரன் பலூன் பறக்க விடேக்கையே  அண்ணன்ரை அண்டவாளம் தண்டவாளத்தை நினைச்சன்....சிரிச்சன்....:cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

இந்த‌ அமைப்பை அமெரிக்கா தான் உருவாக்கி விட்ட‌து என்று க‌தை வ‌ருது😮..............புட்டின் இதுக்கு த‌குந்த‌ ப‌தில‌டி கொடுப்பார்.......................

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல் பாணியில் இதுவும் ஒரு தாக்குதல் தான்.பின்னணிகள் வேறு வெவ்வேறுகளாக இருக்கலாம் என வேலை இடத்தில் நிறைய பேசிக்கொண்டார்கள்.😂

தாக்குதல் நடக்கப்போகின்றது என தெரிந்த அமெரிக்காவுக்கு தாக்குதலை நிறுத்த தெரியவில்லையாம்....🤣

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ஓம் நீங்கள் சொல்லுறது சரி. ஆனால்  பிந்திய ஞானோதயத்துடன் இன்று எதிரிகளாலும் மதிக்கப்படும் மதிப்புக்குரிய அமைப்பை சில்லறைத்தனமாக எல்லா இடங்களிலும் இழுக்கக்கூடாது என்பது என் கருத்து. இயக்கத்தை இழுக்காமல் அவருக்கு மட்டும் தனிக்கருத்து எழுதியிருக்கலாம்.

நீங்கள் புலிகளை இழுத்ததால் அது எல்லோரையும் தாக்கும். 😢

 

36 minutes ago, பையன்26 said:

2009 ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்ட‌தில் இருந்து இப்ப‌ வ‌ரை ஆயுத‌ம் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்டே இருக்கு..............ஏன் அவ‌ர் அப்ப‌டி எழுதினார் என்று புரிய‌ வில்லை😞..............

வி பு க்களை நான் அவமதிக்கிறேன் என்று கருதத் தேவையில்லை. அவர்களது அர்ப்பணிப்பிற்கு நான்  எப்போதும் தலை வணங்குபவன். 

ஆனால், அவர்களது பெயர்களைத் தாங்கி நிற்பவர்களுக்கு ஒன்று புரிய வேண்டும். அதாவது நாங்கள், ஈழத் தமிழர்களா, எமக்கு எதிரி நாடுகள் என்று எவையுமே இல்லை என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.  

எந்தக் காரணமும் இன்றி, மேற்குலகுடன் போட்டி போடும் ஒரே காரணத்திற்காக உலக வல்லரசுகளையும் ஏனைய நாடுகளையும் பகைக்கும் எண்ணத்தை மூட்டை கட்ட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை யாழ் களத்தில்  ஆகக் கூடுதலாக -5 எடுத்து வரலாறு படைத்த  ஒரே ஆம்பிளைச் சிங்கம் கப்பித்தான் மட்டுமே  🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

 

வி பு க்களை நான் அவமதிக்கிறேன் என்று கருதத் தேவையில்லை. அவர்களது அர்ப்பணிப்பிற்கு நான்  எப்போதும் தலை வணங்குபவன். 

ஆனால், அவர்களது பெயர்களைத் தாங்கி நிற்பவர்களுக்கு ஒன்று புரிய வேண்டும். அதாவது நாங்கள், ஈழத் தமிழர்களா, எமக்கு எதிரி நாடுகள் என்று எவையுமே இல்லை என்பதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.  

எந்தக் காரணமும் இன்றி, மேற்குலகுடன் போட்டி போடும் ஒரே காரணத்திற்காக உலக வல்லரசுகளையும் ஏனைய நாடுகளையும் பகைக்கும் எண்ணத்தை மூட்டை கட்ட வேண்டும். 

எம்ம‌வ‌ர்க‌ள் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக‌ பேசின‌து கிடையாது...........த‌மிழ்செல்வ‌ன் அண்ணா தான் ஒரு முறை இந்தியாவை எச்ச‌ரித்தார்.............ராஜிவ் காந்தி செய்த‌ முட்டாள் செய‌லை மீண்டும் செய்ய‌ வேண்டாம் என்று..............ம‌ற்ற‌ம் படி வேறு நாடுக‌ளுக்கு எதிரா ஒரு போதும் செய‌ல் ப‌ட்ட‌து இல்லை பெரிய‌வ‌ரே.....................

13 minutes ago, Kapithan said:

இதுவரை யாழ் களத்தில்  ஆகக் கூடுதலாக -5 எடுத்து வரலாறு படைத்த  ஒரே ஆம்பிளைச் சிங்கம் கப்பித்தான் மட்டுமே  🤣

இதென்ன‌ பிர‌மாத‌ம் உங்க‌ளை விட‌ ஒரு திரியில் -12 எடுத்த‌வ‌ரும் இருக்கிறார்😁...............

ISIS அமைப்பு தனது தாக்குதலுக்கு ஆராதமான வீடியோவினை வெளியிட்டுள்ளது.

தாக்குதல் நடந்தவுடன் புட்டின் அறிக்கை விடவில்லை அடுத்த நாள் தான் அறிக்கை விட்டார். ISIS உடனடியாகவே இத் தாக்குதலுக்கு உரிமை கோரியபோதும் அவரது அறிக்கையில் ISIS என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. வேறு ஆதாரங்கள் வெளியாகாததை உறுதிப்படுத்தியபின் புட்டின் தனது புழுகு மூட்டையை அவிள்த்துள்ளார். 

உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டியது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாஸ்கோ தாக்குதல்: 133 பேரை பலிவாங்கிய சம்பவம் நடந்தது எப்படி? வீடியோ ஆதாரம் காட்டுவது என்ன?

மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், பால் கிர்பி
  • பதவி, பிபிசி செய்தி
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 23) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், ஒரு இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 133 பேர் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தத் தாக்குதலை ‘காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்’ என்று விவரித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணியாக சில நிமிடங்களே இருக்கும்போது இந்தத் தாக்குதல் நடைபெற்றது. பிக்னிக் எனப்படும் ரஷ்ய இசைக்குழுவின் ராக் இசை நிகழ்ச்சிக்காக குரோகஸ் சிட்டி ஹாலில் உள்ள வளாகம் நிரம்பியிருந்தது.

"பழுப்பு நிற ஆடை அணிந்த சிலர், பயங்கரவாதிகளோ அல்லது ராணுவமோ, அவர்கள் யார் என்று எனக்குத் சரியாகத் தெரியவில்லை. துப்பாக்கிகளுடன் வளாகத்திற்குள் நுழைந்து மக்களைச் சுடத் தொடங்கினர்," என்று புகைப்படக் கலைஞர் டேவ் ப்ரிமோவ் கூறினார்.

துப்பாக்கி ஏந்திய நபர்கள் வளாகத்தில் கூடியிருந்த கூட்டத்தின் நடுவே அமைதியாக நடந்து சென்று, பின்னர் கண்மண் தெரியாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

 

மோசமான பாதுகாப்பு ஏற்பாடுகள்

மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த இசைக் கச்சேரிக்கு சுமார் 6,200 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. ஆனால் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்தது வெறும் நான்கு காவலர்களே. அந்த நான்கு காவலர்களில் ஒருவர் பேசுகையில், “தாக்குதல் தொடங்கியவுடன் எனது சகாக்கள் ஒரு விளம்பரப் பலகைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார்கள்” என்று கூறினார்.

மேலும், "தாக்குதல் நடத்தியவர்கள் எங்களிடமிருந்து 10 மீட்டர் தொலைவில் கடந்து சென்றனர். அவர்கள் தரைத்தளத்தில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுடத் தொடங்கினர்" என்றார்.

தாக்குதல் நடத்தியவர்கள் எத்தனை பேர் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் மேல் தளத்தில் இருந்து படமாக்கப்பட்ட ஒரு காணொளியில் நான்கு ஆண்கள் தரைத்தளத்தில் தனித்தனியாக நடந்து செல்வதைக் காண முடிகிறது.

முதலில் துப்பாக்கியுடன் செல்பவர், ஜன்னல்களுக்கு அருகே பதுங்கியிருப்பவர்களைக் குறிவைத்துச் சுடுகிறார். அவ்வாறு சுடப்பட்டவர்களே ரஷ்யாவின் மீதான இந்தக் கொடிய தாக்குதலில் முதலில் பலியானவர்கள்.

கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பலர் மாஸ்கோவின் வடமேற்கு எல்லையில் உள்ள கிராஸ்னோகோர்ஸ்க், கிம்கி மற்றும் அதன் அருகிலுள்ள பிற நகரங்களில் இருந்து வந்தவர்கள்.

அந்தக் காணொளியில் இரண்டாவது நபரும் துப்பாக்கியுடன் மக்களை நோக்கிச் சுட்டவாறே முன்னேறுகிறார். அதே நேரத்தில் மூன்றாவது நபர் ஒரு பையுடன் அமைதியாகப் பின்தொடர்கிறார். நான்காவது நபர் தனது துப்பாக்கியை அவரிடம் ஒப்படைக்கிறார்.

தாக்குதலை நேரில் கண்ட பெண் ஒருவர், “நான் எனது 11 வயது மகளுடன், நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஒரு ஓட்டலில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது துப்பாக்கிச் சத்தமும் மக்களின் அலறலும் கேட்டது. அருகிலிருந்தவர்கள் தரையில் படுக்குமாறு கூச்சலிட்டனர்.

நாங்கள் குழந்தைகள் இருந்த பகுதிக்கு விரைந்தோம், கீழே படுத்து, மேசைகள் மற்றும் நாற்காலிகள் கொண்டு தடுப்புகளை அமைக்கத் தொடங்கினோம். காயமடைந்த பலர் எங்களை நோக்கி ஓடி வந்தனர்," என்று பிபிசியிடம் கூறினார்.

அரங்கிற்குள், சில நிமிடங்களில் கச்சேரி தொடங்க இருந்தது. சிலர் துப்பாக்கிச் சத்தம் கச்சேரியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்துள்ளார்கள்.

 

தாக்குதலை நேரில் கண்டவர்கள் கூறியது என்ன?

மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ஒருவித முடிவில்லாத பட்டாசு சத்தம் போலத்தான் முதலில் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது, ஹாலில் இருந்த அனைவரும் எல்லா திசைகளிலும் ஓடுவதை உணர்ந்தேன்,” என்று சோஃபிகோ க்விரிகாஷ்விலி கூறுகிறார்.

புகைப்படக் கலைஞர் டேவ் ப்ரிமோவ் கூறுகையில், “அந்த இடமே போர்க்களம் போல் இருந்தது. அரங்கின் இருக்கைகளுக்கு இடையில் படுத்துக்கொள்ள சிலர் முயன்றனர். ஆனால் துப்பாக்கி ஏந்தியவர்கள் ஸ்டால்களில் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், மக்களின் தப்பிக்கும் முயற்சி பயனளிக்கவில்லை,” என்றார்.

பார்வையாளர்களில் சிலர் தப்பிக்க மேடையை நோக்கிச் சென்றுள்ளனர். மற்றவர்கள் மேலே சென்று வெளியேறும் வழிகளைக் கண்டுபிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். தாக்குதலில் குழந்தைகள் உட்பட முதியவர்களும் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மேடையை நோக்கி ஓடிய ஒரு பெண் தான் கண்ட காட்சியை விவரித்தார், “ஒரு நபர் துப்பாக்கியால் சுடுவதைக் கண்டேன். நாங்கள் திரைக்குப் பின்னால் ஓடினோம், சீருடையில் இருந்த குரோகஸ் ஊழியர்களில் ஒருவர் எங்களை வேகமாக ஓடச் சொன்னார், நாங்கள் ஓடினோம். குளிர்கால ஆடைகள் ஏதுமின்றி கார் பார்க்கிங்கிற்குள் பதுங்கிக் கொண்டோம்," என்றார்.

ஓபரா நிகழ்ச்சிக்காக அங்கு வந்த மார்கரிட்டா புனோவா, முதலில் துப்பாக்கிச் சத்தத்தை பட்டாசு என்று நினைத்துள்ளார், பின்னர் அவரும் அவரது கணவரும் அது துப்பாக்கிச் சூட்டின் சத்தம் என்று அடையாளம் கண்டுள்ளனர்.

"யாரோ கீழே ஓடுங்கள் என்று சொன்னார்கள், முழு இருட்டாக இருந்தது. நாங்கள் வெளியே வந்த நேரத்தில் எங்களுக்குப் பின்னால் துப்பாக்கிச் சூடு சத்தம் அதிகமாகக் கேட்டது," என்றார்.

மற்றொரு நபரான விட்டலி, ஒரு பால்கனியில் இருந்து இந்த தாக்குதலைக் கண்டார், "அவர்கள் சில பெட்ரோல் குண்டுகளை வீசினர், அதனால் எல்லாம் பற்றி எரியத் தொடங்கியது," என்றார்.

அது பெட்ரோல் வெடிகுண்டா என உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், தீ வேகமாகப் பரவியது. இதன் காரணமாக தீயணைப்பு வீரர்களால் கட்டடத்தின் அருகில் செல்ல முடியவில்லை. தீ விரைவில் கூரைக்கும் பரவியது. மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து தீ மளமளவென கட்டடத்தின் முன்பகுதிக்கும் பரவி, இரண்டு மேல் தளங்கள் எரிந்து நாசமானது.

ஆடிட்டோரியத்தில் இருந்தவர்களில் பலர் ஃபோயர் அறை வழியாக ஓடிவிட்டனர். ஒரு வீடியோவில், சோபாவில் கிடக்கும் இரண்டு உயிரற்ற உடல்களைக் கடந்து மக்கள் எஸ்கலேட்டர்களில் விரைவதைக் காட்டுகிறது.

 
மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மற்றொரு வீடியோவில், துப்பாக்கிச் சூட்டின் சத்தம் சுற்றி எதிரொலிக்கும்போது மக்கள் தப்பி ஓடுவதைக் காட்டுகிறது.

எங்கு செல்வதெனத் தெரியாமல் அவர்கள் கட்டடத்தின் பின்புறத்தை நோக்கி ஓடுகிறார்கள். அங்கு சிலர் பதுங்கி பயத்துடன் அமர்ந்திருக்கிறார்கள், மற்றவர்கள் தாழ்வாரங்கள் வழியாக ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு வெளியேறுகிறார்கள்.

இந்தத் தாக்குதல் நடக்கும்போது, கட்டடத்தில் எங்காவது ரஷ்ய காவல்துறையோ அல்லது சிறப்புப் படையோ இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

உயிர் பிழைத்தவர்கள் ஒரு படிக்கட்டில் ஏறி குரோகஸ் சிட்டி ஹாலின் நுழைவாயிலை அடைந்தனர். ஒருவர் மயக்கமடைவதைக் காண முடிகிறது. மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு தகவலைச் சொல்கிறார்கள்.

ஒரு நடனக் குழுவின் உதவியாளரான ஈவா, துப்பாக்கி ஏந்தியவர்கள் அரங்கத்திற்குள் நுழைந்தபோது மேடைக்குப் பின்னால் இருந்தார். "நாங்கள் டிரஸ்ஸிங் ரூமில் இருந்தோம், ஒரு கூட்டம் எங்களைக் கடந்து சென்றது. நடைபாதையில் மக்கள் ஓடுவதை நாங்கள் பார்த்தோம். நாங்களும் கோட்களை எடுத்துக்கொண்டு கூட்டத்துடன் ஓடினோம்," என்கிறார்.

தொடக்கத்தில் பிக்னிக் இசைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும், பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் வெளியான உறுதிப்படுத்தப்படாத செய்திகளில் இசைக் கலைஞர்களில் ஒருவர் காணவில்லை என்று சொல்லப்படுகிறது.

இறப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியதும், ஆடிட்டோரியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் தீவிரம் அனைவருக்கும் புரிந்தது.

கொல்லப்பட்டவர்கள் குறித்த முதல் அதிகாரப்பூர்வ பட்டியலில், மிகவும் வயதானவர்களும் (70 வயது) இருப்பதாகவும், இறந்தவர்களில் மற்றும் காயமடைந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐஎஸ் அமைப்பு

மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ரஷ்ய மக்கள்.

இஸ்லாமிய அரசு எனப்படும் ஐஎஸ் அமைப்பு ஓர் அறிக்கையின் மூலம் தாக்குதலுக்குத் தாங்கள் பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளது. ஆனால் அமைப்பின் எந்தக் கிளை இதைச் செய்தது எனக் குறிப்பிடவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், ரஷ்யாவை தாக்க ஐஎஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

மாஸ்கோவில் ‘பெரிய கூட்டங்களை’ குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்கா அப்போது கூறியிருந்தது. இருப்பினும் அமெரிக்க உளவுத்துறை அளித்த தகவலில் போதுமான, நம்பகமான விவரங்கள் இல்லை என்று ரஷ்ய அதிகாரிகள் புகார் கூறியுள்ளனர்.

தங்களுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என யுக்ரேன் உடனடியாக மறுத்தது. போர்க்களத்தில் மட்டுமே நாங்கள் தாக்குவோம் என்று அது கூறியது.

ஆனால் ரஷ்யாவின் எஃப்.எஸ்.பி பாதுகாப்பு முகமை, தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் யுக்ரேனில் இருந்து ரஷ்யாவை கடக்க முயன்றதாகவும், யுக்ரேனில் அவர்களுக்கு ‘வலுவான தொடர்புகள்’ இருப்பதாகவும் கூறியது. தாக்குதலில் நேரடியாகத் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு பேர் உட்படப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் எப்.எஸ்.பி கூறுகிறது.

 
மாஸ்கோ இசை நிகழ்ச்சி தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சனிக்கிழமையன்று தாக்குதல் நடந்த இடத்திற்கு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த திரும்பிய மார்கரிட்டா புனோவாவும் அவரது கணவர் பாவேலும், "தாக்குதலில் இருந்து தப்பித்து வீடு சென்றதும் கண்ணீருடன் தங்கள் குழந்தைகளைக் கட்டிப்பிடித்ததுதான் நாங்கள் செய்த முதல் காரியம்" என்று கூறினார்கள்.

மாஸ்கோவில் சனிக்கிழமை பிற்பகல் வரை அதிபர் புதின் சோகத்தில் மூழ்கியுள்ள ரஷ்ய பொதுமக்களிடையே உரையாற்றினார்.

கொலையாளிகளை இரண்டாம் உலகப் போரின் நாஜிக்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், ரஷ்ய மக்களுடைய ஒற்றுமையின் பலத்தை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார். ஞாயிற்றுக்கிழமை, தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/articles/cyxz971ddwzo

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2024 at 06:53, ஏராளன் said:

ரஷ்யாவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் அரங்கிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஆழந்த இரங்கல். மனித உயிர்களை அழிப்பதற்கான கருவிகளின் தொழிற்றுறைக்கு நல்லவாய்ப்பு. அதில் ரஸ்யாவுக்கும் பங்குண்டு. ஆனால், உலகெங்கும் சிறிய இனங்களை,தேசங்களை அழித்துச் சுரண்டிப்பெருக்கும் சக்திகளுக்கு பெரும் சவாலாக இஸ்லாமிய மதத்தூய்மைவாதமானது மாறியுள்ளது. அது படிப்படியாக உலக அச்சுறுத்தலாக உருப்பெற்றுள்ளது. யேர்மனிய உள்த்துறை அமைச்சர் நான்ஸி ஃபேஸர் அவர்கள், யேர்மனியும் இஸ்லாமிய பயங்கரவாத ஆபத்துள் உள்ளதாக ரஸ்யாவில் நடைபெற்ற தாக்குதலின் பின் கூறியுள்ளார். இன்று உலகில் எங்குமே பாதுகாப்பென்பது கேள்விக்குறியே. உலகம் இனங்களையும் மதங்களையும் தம்பாட்டில் வாழவிடுவதே உலக அமைதிக்கான வழி. அவரவர் தமது தேசஎல்லைகளுள் சுதந்திரமாக வாழவிடும்போதுமட்டுமே உலக அமைதி தோன்றும். இல்லையேல் இவை தொடர்கதையே.
நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்

ISIS இதனைச் செய்யவில்லை. இந்தத் தாக்குதலின் பின்ணணியில் மேற்கின் உளவு அமைப்புக்கள் இருப்பதாக இரஸ்ய செய்திகள் கூறுகின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

ISIS இதனைச் செய்யவில்லை. இந்தத் தாக்குதலின் பின்ணணியில் மேற்கின் உளவு அமைப்புக்கள் இருப்பதாக இரஸ்ய செய்திகள் கூறுகின்றன. 

அப்படித்தானே சொல்லவேண்டும். பிடிபட்டவர்களில் ஒருவரின் காதை ஏற்கனவே அறுத்து சித்திரவதையை ஆரம்பித்துவிட்டார்கள். எப்படியும் அவர்களை ஊடகம் முன்நிறுத்தி ISIS இல்லை, உக்கிரேனும் மேற்குநாடுகளும் சேர்ந்தே படுகொலைகளைத் திட்டமிட்டன என்று சொல்லவைப்பார்கள்.

ரஷ்ய மக்களையும், ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பை ஆதரவளிப்போரையும் தொடர்ந்தும் புட்டின் பெருந்தலைவர் என்று நம்பவைக்க இப்படியான spins செய்யத்தானே வேண்டும். யாழ் களத்திலும் இதைச் செய்யத்தானே வேணும் பிலிப்பு!

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kapithan said:

பொறுப்பான இடத்தில் இருப்பவர்கள் பொறுப்புடன் கதைக்க வேணுமல்லோ 

😉

பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று புலிகளுக்கும் அவர்களுடன் நின்றவர்களுக்குமே நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அதை நாம் கண்டிக்கும் போது அதற்கு உங்களுக்கு யார் பொறுப்பு தந்தது என்றும் வந்து விடுகிறீர்கள். பொறுப்புடன் நடக்கவேண்டியவர்கள் பொறுப்புடன் நடக்காமல் கண்டிக்க பட்டபோதும் பொறுப்பற்றவர் பக்கமே நின்றீர்கள் நிற்கிறீர்கள். எம் கையை மட்டும் கட்டிவிட்டு மௌனமாக எல்லவற்றையும் அனுமதிப்பது எவ்வளவு பாரதூரமானது என்று என் இனம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றால்...????

  • கருத்துக்கள உறவுகள்

ISIS ஐ உருவாக்கியவர் ஒபாமா என கூறியவர் டொனால்ட் ட்ரம்ப்

 

https://www.theguardian.com/us-news/2016/aug/11/donald-trump-calls-barack-obama-the-founder-of-isis

ISIS  இவ்வளவு காலமும் ரஸ்யாவில் தாக்குதல் செய்யாமல் இப்போ செய்வதன் அவசியம் என்ன?
உக்ரேனில் ரஸ்யாவின் கை ஓங்கும் போது ரஸ்யாவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த ஏன் மேற்கு நாடுகளின் அடிபொடி ISISஐ ஏவி இருக்க கூடாது. ?இந்த கோணத்தில் ஆராய சிலருக்கு மனம் பிடிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

1) அப்படித்தானே சொல்லவேண்டும். பிடிபட்டவர்களில் ஒருவரின் காதை ஏற்கனவே அறுத்து சித்திரவதையை ஆரம்பித்துவிட்டார்கள். எப்படியும் அவர்களை ஊடகம் முன்நிறுத்தி ISIS இல்லை, உக்கிரேனும் மேற்குநாடுகளும் சேர்ந்தே படுகொலைகளைத் திட்டமிட்டன என்று சொல்லவைப்பார்கள்.

2) ரஷ்ய மக்களையும், ரஷ்யாவின் உக்கிரேன் மீதான ஆக்கிரமிப்பை ஆதரவளிப்போரையும் தொடர்ந்தும்

3) புட்டின் பெருந்தலைவர்

4) என்று நம்பவைக்க இப்படியான spins செய்யத்தானே வேண்டும். யாழ் களத்திலும் இதைச் செய்யத்தானே வேணும் பிலிப்பு!

1) உங்கள் விருப்பம். அதற்கு நான்  எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. 

 

2) உக்ரேனிய யுத்தம் என்பது மேற்கிற்கும் ரஸ்யாவிற்குமிடையிலான Proxy War யுத்தம் என ஏற்கனவே பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.  அது தங்களுக்கும் நன்றாகவே தெரியும்.  ஆனாலும் மீசையில் மண்படவில்லை என கூறுகிறீர்கள. நானும் நம்பீட்டோம்  🤣

3)  நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதுதானே உண்மை. அதை உங்களால் மறுக்க முடியாது. 

4) யாழ் களத்தில் உள்ள உறவுகள்  எல்லோரும் பிலிப்பு க்கள் என தாங்கள் நம்பினால் யாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை. 😩

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Moscow Attack: "ஒருத்தரையும் விட மாட்டோம்" கோபத்தில் பேசிய Putin; Ukraine-ஐ 'வம்புக்கிழுத்த' Russia

மாஸ்கோ தாக்குதலுக்கு பின்னால் இருக்கும் ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து கடுமையாக தண்டிப்போம் என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஆவேசமாக பேசியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் யுக்ரேனுக்குத் தப்பிச் செல்ல இருந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், பிரச்னையை திசை திருப்ப வேண்டாம் என யுக்ரேன் அதிபர் ஸெலெஸ்ன்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் பேசியது என்ன? மாஸ்கோ தாக்குதல் சம்பவத்தில் இதுவரை என்ன நடந்தது? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

4 hours ago, nunavilan said:

ISIS ஐ உருவாக்கியவர் ஒபாமா என கூறியவர் டொனால்ட் ட்ரம்ப்

 

https://www.theguardian.com/us-news/2016/aug/11/donald-trump-calls-barack-obama-the-founder-of-isis

ISIS  இவ்வளவு காலமும் ரஸ்யாவில் தாக்குதல் செய்யாமல் இப்போ செய்வதன் அவசியம் என்ன?
உக்ரேனில் ரஸ்யாவின் கை ஓங்கும் போது ரஸ்யாவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த ஏன் மேற்கு நாடுகளின் அடிபொடி ISISஐ ஏவி இருக்க கூடாது. ?இந்த கோணத்தில் ஆராய சிலருக்கு மனம் பிடிக்காது.

ரஸ்யாவின் கை ஓங்கியுள்ளது என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் ?

உக்ரைன் மீதும் மேற்கு நாடுகள் மீதும் பழி போட்டுப் போரை உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் நியாயப்படுத்த வேண்டிய தேவை ரஸ்யாவுக்கே உள்ளது. ஆறாயிரம் பேருக்குமேல் கூடும் இடத்தில் ஏன் அதற்குரிய பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டது ? தாக்குதல் நடத்தியவர்கள் சாவகாசமாகச் சுட்டுவிட்டு தப்பிப் போகும்வரை காவல்துறை என்ன செய்தது ?

பொதுமக்களைத் தாக்கினால் போரின் போக்கு மாறும் என்பதால்தான்  ஆரம்பத்திலிருந்தே ரஸ்யாவுக்குள் உக்ரெய்ன் தாக்குதல் நடத்துவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. ரஸ்யாவுக்குள் சென்று தாக்கும் நீண்டதூர ஏவுகளைகளையும் உக்ரெயினுக்கு வழங்கவில்லை.

ISIS உடனடியாகவே உரிமை கோரியுள்ளது. ஆதாரமாக வீடியோ வெளியிட்டுள்ளது. மேற்கு நாடுகளிலும் பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS மேற்குலகுக்கு ஆதரவாக இத் தாக்குதலைச் செய்திருக்கும் என்பது நம்பத்தகுந்தது அல்ல. ரஸ்யா இதுவரை ஆதாரம் வழங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ISIS அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அமைப்பு.. சிரியாவின் ஆசாத் அரசுக்கு எதிராக என்பதை சாதாரண பள்ளிக் குழந்தைகள் கூட அறியும். யாழ் கள புட்டின் எதிர்ப்பாளர்கள் அறியாதது போல இருப்பது அவர்களின் பலவீனம்.

ஐ எஸ் ஐ எஸின் பிற்காலப் போக்கறிந்து.. அதற்குப் போட்டியாக அமெரிக்கா இதர குழுக்களை ஊக்குவிக்க முயன்றமையால் வெடித்தது ஐ எஸ் ஐ எஸ் - அமெரிக்க +  மேற்குலக அடிபாடு. 

இப்போ.. ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் கடும் இஸ்லாமிய மதவாதப் பயங்கரவாத நிலைப்பாட்டு தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில்..சிரிய அரசுக்கு ஆதரவான ரஷ்சியாவின் தாக்குதலாலும்.. ஈரானின் தாக்குதலாலும் கூட..  ஐ எஸ் ஐ எஸ் அமைப்பில் எஞ்சியுள்ள அமெரிக்க சி ஐ ஏ விசுவாசிகளை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் உக்ரைனும் ரஷ்சியாவுக்குள் ஊடுருவித் தாக்க பயன்படுத்தி இருக்கலாம். அதற்கான சாத்தியம் 100 க்கு 200% சதவீதம் உண்டு.

ஏலவே... ரஷ்சிய எல்லைகளில் பல ஊடுருவிகளை செய்து தோற்றுப் போனது அமெரிக்க உக்ரைன் கும்பல். ரஷ்சிய சகபாடி.. ஆயுதக் குழுவையும் புட்டினுக்கு எதிராக திசை திருப்ப முனைந்து அந்த அமைப்பின் தலைவரும் வலது கையும் விமான விபத்தில் போய் சேர்ந்துவிட்ட பின்னர்..

அமெரிக்காவுக்கு.. சி ஐ ஏ யின் நம்பகத்தன்மைக்கு.. இப்போ... ஐ எஸ் ஐ எஸ் பயன்பட்டிருக்கலாம். இதன் பின்னணியில்.. இஸ்ரேலும் கூட்டிணைந்து இயக்கி இருக்க வாய்ப்புள்ளது.

ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு ரஷ்சியாவுக்குள் ஊடுருவது அவ்வளவு கடினமல்ல. ஏலவே அவர்கள் ரஷ்சியாவின் பரந்த எல்லைகளின் ஊடாக ஊடுருவி மேற்கு நாடுகளில் இருந்து துருக்கி வழியாக.. சிரியா .. இஸ்ரேலை கடந்தவர்கள் தான்.

இப்போ.. சி ஐ ஏ... மொசாட்.. உக்ரைன் உளவு அமைப்பு கூட்டினைந்து மேற்குலக ஆதரவோடு இத்தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கவே சாத்தியமுள்ளது.

மேலும்.. இதனை திசை திருப்பும் நோக்கில் அமெரிக்கா சில எச்சரிக்கைகளை ரஷ்சியாவுக்கு வழங்கி இருந்தாலும்.. உக்ரைன்.. பெலருஸ் வழியாக தாக்குதலாளிகளை வழிநடத்தி மொஸ்கோ வரை நகர்த்துவது உக்ரைனுக்கோ.. அமெரிக்காவுக்கோ கடினமல்ல.

எதுஎப்படியோ.. பலமான எதிரிகள் பல மார்க்கங்களையும் கையாண்டு ரஷ்சியாவை தாக்குவார்கள் என்பதை ரஷ்சிய உளவு அமைப்புகளும் பாதுகாப்பு அமைப்புக்களும் புட்டினின் ஆலோசர்களும்.. அறியாமல் இருந்தது.. அல்லது அமெரிக்க மேற்கு நாட்டு சவால்களை எளிதாக எடுத்துக் கொண்டது.. இத்தாக்குதல் மூலம் ரஷ்சியாவுக்கு நல்ல பாடத்தைப் புகட்டி இருக்கும்.

ரஷ்சியாவின் பல இழப்புக்கள்.. அதன் உளவுத்துறை.. செயற்பாட்டுத் துறையின் வினைத்திறனற்ற தன்மையால் நிகழ்வதோடு.. அந்த அமைப்பு.. இலகுவில்.. விலைக்கு வாங்கக் கூடிய அமைப்பாக இருப்பது புட்டினுக்கு சவாலாகவே இருக்கும். புட்டின் இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கனும்.

உக்ரைனின் ரஷ்சியாவுக்குள் அமையும் எல்லாத் தாக்குதல்களுக்கும்.. ரஷ்சிய உளவு அமைப்புக்களும்.. பாதுகாப்பு அமைப்புக்களும்.. புட்டின் ஆலோசர்களும் பொறுப்புக் கூற வேண்டியவர்களே. ஏனெனில்.. அவர்களின் செயற்பாட்டுத் தோல்வி அல்லது பலவீனமே இப்படியான நிகழ்வுகள்.. ரஷ்சிய எல்லைக்குள் ஊடுருவித் தாக்குதல்.. மற்றும் ரோன் தாக்குதல்கள் தொடர முக்கிய காரணமாகும். புட்டின் இது விடயத்தில் மிகுந்த கவனம் செலுத்தாவிடில்.. ரஷ்சியா மேலும் பல இழப்புக்களை சந்திக்க நேரிடும். குறிப்பாக.. அமெரிக்க.. இஸ்ரேல்.. மேற்குலக பின்புலத்தில் இயங்கும் மத அடிப்படைவாதக் குழுக்கள் குறித்து ரஷ்சியா மிகுந்த அக்கறை கொள்வது அவசியம். உக்ரைன் இவர்களை தனது தேவைக்கு பயன்படுத்தும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே. அதை எதிர்பார்க்காதது ரஷ்சியாவின் தவறே ஆகும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, இணையவன் said:

ISIS உடனடியாகவே உரிமை கோரியுள்ளது. ஆதாரமாக வீடியோ வெளியிட்டுள்ளது. மேற்கு நாடுகளிலும் பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS மேற்குலகுக்கு ஆதரவாக இத் தாக்குதலைச் செய்திருக்கும் என்பது நம்பத்தகுந்தது அல்ல. ரஸ்யா இதுவரை ஆதாரம் வழங்கவில்லை.

 

37 minutes ago, இணையவன் said:

ரஸ்யாவின் கை ஓங்கியுள்ளது என்று எதை வைத்துக் கூறுகிறீர்கள் ?

உக்ரைன் கடைசியாக ஏன்  அட்விக்காவை விட்டு பின்வாங்கியது நேட்டோவின்  இவ்வளவு உதவி வழங்கப்பட்டும் என்பதை வைத்து சொல்கிறேன்.
பிரான்ஸ் படை ஏன் உக்ரேனுக்குள் செல்ல வேண்டும்( மக்ரோனின் குறளி வித்தையாக இருந்தாலும்)

52 minutes ago, இணையவன் said:

ISIS உடனடியாகவே உரிமை கோரியுள்ளது. ஆதாரமாக வீடியோ வெளியிட்டுள்ளது. மேற்கு நாடுகளிலும் பொதுமக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதலை மேற்கொள்ளும் ISIS மேற்குலகுக்கு ஆதரவாக இத் தாக்குதலைச் செய்திருக்கும் என்பது நம்பத்தகுந்தது அல்ல. ரஸ்யா இதுவரை ஆதாரம் வழங்கவில்லை.

      உரிமை கோரியதை வைத்து  எந்த முடிவுக்கும் வர முடியாது. அவர்களை இயக்குபவர்கள் அமெரிக்காவும் இஸ்ரேலும். 9/11 தாக்குதலை கண்டு பிடிக்க முடியாதவர்கள் ரஸ்யாவில் நடக்க போகும் தாக்குதலை முன்பே எதிர்வு கூறுகிறார்களாம்.

57 minutes ago, இணையவன் said:

பொதுமக்களைத் தாக்கினால் போரின் போக்கு மாறும் என்பதால்தான்  ஆரம்பத்திலிருந்தே ரஸ்யாவுக்குள் உக்ரெய்ன் தாக்குதல் நடத்துவதை மேற்கு நாடுகள் விரும்பவில்லை. ரஸ்யாவுக்குள் சென்று தாக்கும் நீண்டதூர ஏவுகளைகளையும் உக்ரெயினுக்கு வழங்கவில்லை.

நீண்ட தூரம் சென்று தாக்கும் ட்ரோன் களை கொடுக்கலாமோ?

பொருத்தமற்ற திரி என்பதால் உங்களுக்கான பதில் இங்கே.

அட்விகா மட்டுமல்ல Orlivka விலும் உக்ரெயின் தோல்வியுடன் வெளியேறிறியது. தேர்தலுக்கு முன்னரான இந்த வெற்றிக்கு ரஸ்ய படைகள் கொடுத்த விலை மிக அதிகம். 9 மாதங்கள் போராடி Bakhmout வெற்றி. 6 மாதங்கள் போராடி பாரிய இழப்புகளுடன் அட்விகா வெற்றி. இப்படியே போனால் உக்ரெயினை வீழ்த்த 10 - 15 வருடங்கள் ஆகும். 

உக்ரெய்னுக்கு வெளிநாட்டு உதவிகள் குறைந்துள்ளதால் அடுத்த உதவி கிடைக்கும்வரை பீரங்கிக் குண்டுகளைச் சிக்கனமாகப் பாவிக்க வேண்டிய தேவை உள்ளது. ஆட் பற்றாக்குறையும் உள்ளது. 

மக்ரோன் திடர்பான உங்கள் கருத்து தவறானது. தேவை ஏற்பட்டால் தனது படைகளை அனுப்புவது பற்றிய யோசனையைப் புறம்தள்ள முடியாது என்றுதான் கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

ISIS ஐ உருவாக்கியவர் ஒபாமா என கூறியவர் டொனால்ட் ட்ரம்ப்

 

https://www.theguardian.com/us-news/2016/aug/11/donald-trump-calls-barack-obama-the-founder-of-isis

ISIS  இவ்வளவு காலமும் ரஸ்யாவில் தாக்குதல் செய்யாமல் இப்போ செய்வதன் அவசியம் என்ன?
உக்ரேனில் ரஸ்யாவின் கை ஓங்கும் போது ரஸ்யாவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த ஏன் மேற்கு நாடுகளின் அடிபொடி ISISஐ ஏவி இருக்க கூடாது. ?இந்த கோணத்தில் ஆராய சிலருக்கு மனம் பிடிக்காது.

டிரம்ப்பை நம்பிறவைகளுக்கு என்னத்தைச் சொன்னாலும் விளங்காது. Mad MAGAs

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.